உண்மையை உங்களுக்கு என்னால் வழங்க முடியாது.ஆனால் நான் உங்களுக்கு நிலவை சுட்டி காட்டலாம்.தயவு செய்து நிலவை சுட்டி காட்டும் விரலை பற்றி கொள்ளாதீர்கள்.விரல் காணாமற் போய்விடும்.நிலவு அப்படியே இருக்கும்.
Friday, 25 August 2017
அன்பு சக்தியும் படைப்பும்
உணர்வு அலைவரிசை
Wednesday, 23 August 2017
ஆரோக்கியதிற்கான மேஜிக் .
.
உங்களின் எண்ணங்களும் , உணர்வுகளும் தான் உங்கள் உடலை இயக்குகிறது என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.
.
நீங்கள் மனது வைத்தால் உங்கள் உடலுக்குள் நீங்கள் நுழைந்து கட்டுபடுத்த முடியும்
.
நீங்கள் நோய் /உடல் பிரச்சனைகளை குறித்து மனஉளைச்சல்களில் தவித்து கொண்டு இருந்தாலோ அல்லது அதை பற்றி மற்றவர்களிடம் எடுத்து கூறி கொண்டு இருந்தாலோ
உங்கள் நோயின் அணுக்களை அதிகபடுத்துகிறேர்கள்
.
உங்கள் நோய் / உடல் பிரச்சனைகள் ஏற்கனவே குணமாகி விட்டதென முழுதாக நம்புங்கள், உங்களை குணமாக்கியதற்கு மனதார நன்றி என தினமும் கூறி கொண்டே இருங்கள்.
.
உங்களை நீங்களே குணப்படுத்தி கொள்ள முடியும்....
.
மன இறுக்கம் இல்லாமல் எப்போதும் உங்களுக்கு சந்தோசம் தரும் விசயங்களை எல்லாம் பட்டியலிட்டு அவற்றை மனதார நேசித்து செய்யுங்கள்.
.
நீங்கள் நல்ல ஆரோக்கியமான உடலுடன் வாழ்வதாக உணருங்கள். எப்போதும் சந்தோஷமாக உணருங்கள்...
.
நன்றி ஆரோக்கியமே
நன்றி உடலே
என் நோய் எதிர்ப்பு சக்திக்கு நன்றி
என்னை குணமாக்கியதற்கு நன்றி
என்று அடிக்கடி தினமும் மனதார நன்றி கூறி கொண்டே இருங்கள்.
.
இதன்மூலம் உங்களின் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளின் அலைவரிசை மாற்றபட்டு ..
உங்கள் நோய் / உடல் பிரச்சனைகள் குணமடைந்து ஆரோக்கியமான நிலையை அடைவீர்கள்.
.
1. காலை எழுந்த உடன் ஆழ்ந்த அமைதியுடன் " ஆரோக்கியம் என்னும் பரிசு என்னை ஜீவனோடு வைத்திருக்கிறது " என்பதை மனதிற்குள் சொல்லிகொண்டே ஐந்து நிமிடங்களாவது தியானம் செய்யுங்கள்...
.
2. காலையில் இரண்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்..
3. ஹெட்போன் மூலம் நல்ல இசையை மற்றும் பாடல்களை கேளுங்கள்
.
4. குழந்தைகளுடன் பேசுங்கள், விளையாடுங்கள் , மனம் விட்டு சிரியுங்கள்.....அல்லது சின்ன குழந்தைகளின் குறும்பான வீடியோகளை பார்த்து ரசியுங்கள்...எவ்வளவு மனம் விட்டு சிரிகிறேர்களோ..அவ்வளவு மனபாரம் குறையும்...
.
5. காலை வேலையில் நியூஸ்பேப்பரில் செய்திகளை படிக்காதீர்கள், பார்க்காதீர்கள்....
.
6. மொட்டை மாடி இருந்தால் அங்கு சென்று காலை குளிரில் மற்றும் இளம் வெயிலில் வாக்கிங் செல்லுங்கள்
.
7. கை கால்களை மடக்கி நீட்டுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள்..இதன்மூலம் ரத்தம் ஓட்டம் புத்துணர்ச்சி அடைந்து உறுப்புக்கள் சுறுசுறுப்பாக ஆகட்டும்
.
தினமும் இதை செய்து பாருங்கள்...தினமும் உங்களால் நம்ப முடியாத மாற்றத்தை உணர்வீர்கள்.
உணர்வுகளின் சக்தி
Sunday, 20 August 2017
கர்ம விதிகள்
உங்கள் வாழ்க்கையை மாற்ற வல்ல மகத்தான 12 கர்ம விதிகள்
1. மகத்தான விதி "காரணி மற்றும் விளைவு விதி " “Law of Cause and Effect.”
" எதை விதைக்கிறாயோ அதையே அறுக்கிறாய் "
நம்முடைய எண்ணங்களுக்கும் , செயல்களுக்கும் விளைவுகள் உள்ளன. அவை நல்லவையாக இருந்தாலும் சரி கெட்டவையாக இருந்தாலும் சரி. அமைதி, அன்பு , நல்லிணக்கம் ,வளமை ஆகியவற்றை விரும்பினால் அவையே நமக்கு கிடைக்கும்.. ,,இந்த உலகில் நாம் இடும் ஆற்றலுக்கு (எண்ணமும், செயலும்) உடனடியாகவோ அல்லது காலம் கழித்தோ கட்டாயம் விளைவு உண்டு .
2 படைத்தல் விதி ( Law of creation )
வாழ்க்கையில் எதுவுமே அதுவாக நடப்பதில்லை , நாம் அதை நடக்க வைக்க வேண்டும் ..நாம் எதை விரும்புகிறமோ அவை நம்முடைய பங்களிப்பு மூலமாக நமக்கு வருகிறது. நம்மை சுற்றியுள்ள அனைத்துமே யாரோ ஒருவரின் எண்ணத்தில் உதித்தது தான்.நாமும் இந்த பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து இருப்பதால் படைப்பின் பரிணாம வளர்ச்சியில் நம்முடைய நோக்கங்களும் இருக்கிறது .ஆகவே நமக்கும் நம்மைச்சுற்றியுள்ள சமூகத்தின் விருப்பத்திற்கும் உகந்ததாக நம்முடைய படைப்பு இருக்குமாறு பார்த்துக்கொள்வது நமது பொறுப்பாகும் ..
3 பணிவு விதி ( Law of Humility )
மிகப்பெரிய மாற்றங்கள் வருவதை நாம் மனமுவந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக்கொள்ளும் தன்மை என்பது பிரபஞ்ச கோட்பாடாகும் .இது எல்லா அமைப்புகளிலும் உள்ள விதி.பெரிய மாற்றங்களை வேண்டினாள் நிகழ்கால சூழ்நிலைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்..அதே சமயம் எதிர்மறையான விஷயங்களை மாற்ற எதிர்மறையான போக்குகளை கடைபிடித்தால் கடைசியில் அதன் விடை பூஜ்யமாகத்தான் இருக்கும்
4 வளர்ச்சிவிதி ( Law of Growth)
நமது சுயவளர்ச்சி எப்பொழுதும் எந்த சூழ்நிலையிலும் நம் கையில் தான் உள்ளது.. நாம் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஒரே நபர் நாம்தான்..நாம் மாறும்பொழுது நமதுவாழ்க்கையும் அதற்கேற்றாற்போல் நம்முடன் சேர்ந்து மாறுகிறது .உண்மையான வளர்ச்சி அல்லது மாற்றம் நாம் எப்பொழுது முழுமனதோடு அர்ப்பணித்து மாறுகிறோமோ அப்பொழுதான் நடக்கிறது..
5 பொறுப்பு விதி ( Law of Responsibility )
நம் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் நாம் பொறுப்பேற்கவேண்டும், நம்முடைய வாழ்க்கை நாம் செய்வதில்தான் உள்ளது வேறெதினாலும் கிடையாது.. வாழ்க்கையில் ஒருவருக்கு ஒரு தடுமாற்றம் வரும்பொழுது மனதில் நிறைய தடுமாற்றங்கள் வருகின்றன. அதை மாற்ற வேண்டுமென்றால் நமது எண்ணங்களை மாற்றி பிறகு நம்மைச்சுற்றியுள்ளவற்றை மாற்றவேண்டும் ..
6 தொடர்பு விதி ( Law of Connection )
இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை .பெரியதாக இருந்தாலும் சரி , சின்னதாக இருந்தாலும் சரி. நமது கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையபவை. இந்த தொடர்புகளை பயன்படுத்தி நாம் விரும்பும் மாற்றத்திற்கு வழி செய்ய வேண்டும்.
7 கவன விதி ( Law of Focus )
ஒருவனால் ஒரே நேரத்தில் பல பணிகளில் கவனத்தை செலுத்தமுடியாது ,, ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களை சிந்திக்க முடியாது , நமது ஆன்மீக வளர்ச்சியை எடுத்துக்கொண்டால் ஒரே நேரத்தில் எதிர்மறை சிந்தனை மற்றும் செயல்களை கொண்டு அதனை அடைய முடியாது ,நமது முழுக்கவனத்தையும் ஒரே பணியில் இருத்தி அதனை அடைய வேண்டும்..
8 விருந்தோம்பல் மற்றும் கொடுத்தல் விதி ( Law of hospitality and giving)
நம்முடைய பழக்கவழக்கங்கள் நமது எண்ணங்கள் மற்றும் செயல்களோடு ஒத்துப் போகவேண்டும் . நமது சுயநலமற்றதன்மையை செயல் விளக்கம் அளிப்பதே நமது உள்நோக்கமாக இருக்க வேண்டும்..சுயநலமின்மை என்ற கோட்பாடு ஏதாவது நமக்கில்லாமல் இந்த சமுதாயத்திற்கு பண்ணும்பொழுதுதான் தெரியும் அதுவே மிகப்பெரிய சந்தோசம்.. ஒரு சுயநலமிமையில்லாமல் ஆன்மீக வளர்ச்சி என்பது இல்லவே இல்லை..
9 மாற்றம் விதி (Law of Change )
மாற்றம் இல்லாவிட்டால் அதே வரலாறு திரும்ப திரும்ப வரும் . மாற்றத்திற்கான மனப்பூர்வமான அர்ப்பணிப்பு மட்டுமே கடந்த காலத்தை மாற்ற வல்ல ஒரே வழி. நேரமறையான அழுத்தங்களும் மாற்றங்களும் இல்லையென்றால் வரலாறு மாறாது..
10 இங்கே இப்பொழுதே விதி : Law of NOW and HERE
நாம் அனைவரிடமும் இருப்பது நிகழ்காலம் மட்டுமே
வருத்தத்துடன் கடந்த காலத்தை பார்ப்பதும் , பயத்துடன் எதிர்காலத்தை பார்ப்பதும் நிகழ்காலத்தை கொள்ளையடித்துவிடும், பழைய முறை சிந்தனைகளும் நடத்தை முறைகளும் நிகழ்காலத்தை அழித்து மாற்றங்களை வர விடாது..
11 பொறுமை மற்றும் வெகுமதி விதி ( Law of Patience and Rewards)
பொறுமையான மனநிலை இல்லாமல் எந்த ஒரு மகத்தானத்தையும் அடைய முடியாது.பொறுமையும் விடாமுயற்சியும் அனைத்து வெற்றிக்குமான வெகுமதியை பெற வழிகளாகும்,வேறெந்த வழியுமில்லை.
வெகுமதிகள் மட்டுமே விடையின் கடைசி அல்ல , சத்தியம் , நீடித்த சந்தோசம் மற்றும் உற்சாகம் அனைத்துமே எதை சரியாக இந்த உலக மற்றும் நமது சந்தோஷத்திற்காக செய்யவேண்டும் என்பதை அறிந்து செய்வதில்தான் இருக்கிறது..
12. முக்கியத்துவம் மற்றும் அகத்தூண்டுதல் விதி ( Law of Signifigance and Inspiration)
நாம் அளித்த ஆற்றல் மற்றும் முயற்சியின் இறுதி வடிவம் தான் நமக்கு கிடைக்கும் வெற்றி .. ஆகவே முழுமனது மற்றும் அகத்தூண்டலுடன் சுயநலமில்லாமல் நாம் செய்யும் அனைத்துமே மிக முக்கியத்தும் மிக்கவை,,காலத்தாலும் மறக்காத காரியமாக இருக்கும்..