Sunday 9 August 2020

தவறுகள்



*💗இன்றைய சிந்தனை...*

*தவறுகளை பூதக்கண்ணாடி வைத்து பார்க்காதீர்கள்..!!*

மன்னிப்பு வழங்குதல் ஓர் ஆன்மிகச் சுத்திகரிப்பு என்று தான் துறவிகள் நம்பினார்கள். தங்கள் மத நம்பிக்கைக்கு ஏற்ப, இதை அவர்கள் கையாண்டார்கள். பிறகு, அதன் சுகமளிக்கும் பலனைக் கண்டு உளவியல் சிகிச்சையில் இதைப் பெரிய அளவுக்குப் பயன் படுத்த தொடங்கினார்கள். தற்போது மருத்துவ சிகிச்சையில் மன்னிப்பு வழங்குதலின் பலன்கள் ஆராயப்படுகின்றன. மன்னிப்பு வழங்கும் போது, உடல் நோய் எதிர்ப்பாற்றலைப் பெறுகிறது. புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது; புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்களில் மன்னிக்கும் குணம் கொண்டவர்கள் விரைவில் குணமடைகிறார்கள்.

*மன்னிக்கும் டயரி..*

மன்னிப்பு வழங்கவே ஒரு டயரி வைத்துக் கொள்ளும் பழக்கத்தை உளவியல் சிகிச்சையாளர்கள் வலியுறுத்துவார்கள். தினசரி மன்னிப்பு கேட்டு, அதை முழுமையாக எழுதி வெளியேற்றுவது மிகச் சக்தி வாய்ந்த சிகிச்சை முறை. ஒரு நாளில் யார் யார் மீது கோபமும் பகையும் வெறுப்பும் அதிருப்தியும் கொண்டீர்களோ, அவர்கள் ஒவ்வொருவரையும் மனதார அழைத்து மன்னிப்புக் கோரி அவர்களை விடுவியுங்கள். நடந்தவற்றை தர்க்கரீதியாகப் பார்த்தால், உங்கள் பக்கம் நியாயம் இருக்கலாம். மன்னிப்பு கேட்பதே தவறு என்று கூடத் தோன்றலாம். ஆனால், மன்னிப்பு வழங்குதல் மட்டுமே உங்கள் மனதுக்கும் உடலுக்கும் நல்லது என்று உணரும் போது, அதை இயல்பாகச் செய்வீர்கள்.

*அன்பும் - கோபமும்..*

யாரிடமெல்லாம் உங்களுக்குத் தினசரி கோபம் வருகிறது என்று பட்டியல் இட்டுப் பார்த்தால், உங்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருக்கும். நீங்கள் அதிகம் அன்பு செலுத்துவோர் மீது தான் நிராசைகளும், ஏமாற்றங்களும், கோபங்களும் அதிகம் இருக்கும். குறிப்பாகச் சொன்னால், நீங்கள் யாரிடம் அதிக நன்மை பெறுகிறீர்களோ, அவர்கள் மேல் தான் அதிக ஏமாற்றங்கள் இருக்கும். பெற்றோர்கள், ஆசிரியர்கள், மேலதிகாரிகள், வாழ்க்கைத் துணை, பிள்ளைகள், நமக்கு உதவும் உறவுகள் என்று யாரெல்லாம் நமக்கு அதிகம் செய்கிறார்களோ, அவர்கள் மேல் தான் எல்லா வருத்தங்களும் இருக்கும். அதிகம் பெறாத உறவுகளில் எதிர்பார்ப்புகளும் குறைவு; ஏமாற்றங்களும் குறைவு.

உதாரணத்துக்கு ஒரு குடும்பத்தில் தந்தை சரியில்லை; எதுவும் செய்யவில்லை என்றால் அது பெரும் துயராக இருந்தாலும், அதை விரைவில் மனம் ஏற்றுக் கொள்ளும். நாளடைவில் பெரிதாக எதையும் எதிர்பார்க்காது. ஆனால் தந்தைக்கும் சேர்த்துப் பங்களிக்கும் தாயின் மேல் அன்பும் எதிர்பார்ப்புகளும் மிக அதிகமாக இருக்கும். அம்மா செய்யும் தவறுகள் பெரிதாகத் தெரியும். இது ஒவ்வோர் உறவுக்கும் பொருந்தும். உங்கள் மீது அன்பு செலுத்தும் காதலர் அல்லது வாழ்க்கைத் துணையின் சிறு குறைகள் பூதாகரமாகத் தெரியும். உங்களை மதிக்காத, அன்பு செலுத்தாத பலரை மிக இயல்பாக நடத்துவீர்கள். அடிப்படை இது தான், செய்யச் செய்ய எதிர்பார்ப்புகள் ஏறும். ஏமாற்றங்கள் எகிறும். செய்ததைப் பார்க்காத மனம், செய்யாததைப் பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும்.

ஒரு படத்தில் நடிகர் சூரி சொல்லும் வசனம் இதை அழகாக உணர்த்தும்: “செய்யாதவனை விட்டுருவீங்க. செஞ்சவனைத்தான் வச்சு செய்வீங்க!” மனதின் இயல்பு இது. இல்லாததைத் தேடி ஓடுவது. ஏமாற்றம் கொள்வது; அஞ்சுவது; சீறுவது. இதை சற்று உற்று நோக்கினால் நம் மனம் நம் வாழ்க்கைக்கு எதிராகச் செய்யும் உள்ளடி வேலைகள் புரியும்.

*பலிகடா உறவுகள்..*

இரு தோழிகள் பேசிக்கொள்கிறார்கள்.

“பிறந்த நாளுக்கு ஒண்ணும் தரலை. வெறுங்கையை வீசிட்டு வந்து நின்னார். அதுலேர்ந்து தான் பேசறதை நிறுத்திட்டேன். அவ்வளவு சாதாரணமாப் போயிட்டோமா என்ன?”

“அடியே... உம் புருஷன் பரவாயில்லை. எங்காளு நான் சம்பாதிச்ச காசு நூறு ரூபா இருந்தாலும் எடுத்துட்டு குடிக்க கிளம்பிடுவாரு. உனக்கு இன்சூரன்ஸ் இருக்கு. எனக்கு ஏதாவது வந்தா எந்த நாதியும் கிடையாது.”

“அவரு முதல்லேர்ந்து அப்படிடீ. இவருக்கென்ன கேடு? போன வருஷம் அவங்க அக்கா பொண்ணுக்கு மட்டும் போயி கரெக்டா சீர் பண்ண தெரியுதுல்ல? அப்ப நான்னா என்ன வேணா பண்ணலாம்... கேக்க மாட்டான்னுதானே எண்ணம்?”

இதற்கு முன்னும் பின்னும் என்ன நடந்திருக்கும் என நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள். வரங்களை மறக்கும்; சாபங்களைத் தினம் தேடித்தேடி கற்பனை செய்துகொள்ளும். இந்த மன விளையாட்டின் பலிகடாக்கள் நம் நெருங்கிய உறவுகள். ஏமாற்றமும் கோபமும் நெருங்கிய உறவுகளில் இருந்தால், அது ஒரு மனப்பழக்கமாகி வருவோர் போவோரிடமெல்லாம் வருத்தம் கொள்ள வைக்கும்.

முகம் தெரியாத ஆட்கள் முதல் குடும்பத்திலுள்ள நெருங்கிய உறவுகள் வரை யார் மீது வருத்தமும் கோபமும் கொண்டாலும், அவை தங்கிப் போகும் பாத்திரம் உங்கள் உடல் தான். அத்தனை உஷ்ணத்தையும் அழுக்கையும் காலகாலமாக சேர்த்து வைத்தால் அந்தப் பாத்திரம் என்னாகும்? அதைத் தினசரி துலக்குதல் நன்று. தவறு யார் மீது இருந்தாலும் வந்த கோபத்தை வெளியேற்றி, எதிராளியிடம் மானசீகமாக மன்னிப்புக் கோரி, அமைதி கொள்ளுவதே புத்திசாலித்தனம்.

*வெப்பத்தைத் தணியுங்கள்..*

இப்படி அழுக்கும் உஷ்ணமும் நாளும் சேராமல் இருந்தால், நாள் தோறும் மன்னிப்பு கேட்டு கழுவி வைக்க வேண்டிய அவசியமே இருக்காதே என்று தோன்றுகிறதா? அதுவும் சாத்தியம் தான். மனம் கோபம் கொள்ளும் போதே, அதை உணர்ந்து மன்னிப்பு கோரி வெளியேற்றிவிடுவது.

“நீ சொல்வதைக் கேட்டால் எனக்குக் கோபம் வருகிறது. ஆனால், கோபம் கொள்ளுதல் என் உடலுக்கும் நம் உறவுக்கும் நல்லதல்ல. எதை முடியுமோ அதை மட்டும் செய்யலாம். வீண் வார்த்தைகள் வேண்டாம். நான் கோபம் கொண்டதற்கும் மன்னிப்பு கேட்கிறேன். நீயும் இந்தக் கோபத்திலிருந்து வெளியேறி விடுதலை கொள்!” என்று அந்த நொடியிலேயே விழிப்புணர்வுடன் பிரார்த்திக்கலாம்.

எப்படி அந்த விழிப்புணர்வை அடைவது? தியானம் தான் அதற்குச் சிறந்த வழி. அந்த அளவு விழிப்புணர்வு வரும் வரை தினசரி மன்னிப்புக் கோருதல் அவசியமாகிறது..!!

*💗வாழ்க வளமுடன்💗*

*பகிர்வு*

Thursday 6 August 2020

பிரேக்

*“ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ?”* 
ஒருமுறை இயற்பியல் ஆசிரியர்  ஒருவர் தனது மாணவர்களிடம் 

 “ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ?” 

பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன. 

"நிறுத்துவதற்கு"

“வேகத்தைக் குறைப்பதற்கு"

“மோதலைத் தவிர்ப்பதற்கு "

"மெதுவாக செல்வதற்கு"

"சராசரி வேகத்தில் செல்வதற்கு"

என பல்வேறு பதில்கள் மாணவர்களிடம் வந்தது.

“வேகமாக ஓட்டுவதற்கு"  என்ற பதிலை சொன்ன மாணவனை பார்த்து மற்ற மாணவர்கள் சிரித்தனர். 

அந்த பதிலே சிறந்த பதிலாக ஆசிரியரால் தெரிவு செய்யப்பட்டது. 

ஆம் பிரேக்குகள் நாம் வேகமாக செல்வதற்காகத் தான் வைக்கப்பட்டுள்ளன. 

உங்கள் காரில் பிரேக்குகள் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் காரை எவ்வளவு வேகமாக ஓட்டுவீர்கள்? நிச்சயமாக உங்களால் வேகமாக ஓட்டமுடியாது. 

பிரேக்குகள் இருப்பதனால் மட்டுமே நாம் விரும்பும் இடத்திற்கு வேகமாக செல்வதற்கான தைரியத்தை கொடுக்கிறது.

இதுபோலத் தான்  தடைகள். தடைகள் வரும் போது அவைகள் நம் வாழ்க்கையின் வேகத்தை குறைக்க வந்ததாக நினைத்து நம் மனதை சுருக்கிக் கொள்கிறோம். தடைகள் எரிச்சலூட்டுவது போலவும் நமது நம்பிக்கைகளை சிதைப்பது போலவும் நினைத்துக் கொள்கிறோம். 

உங்கள் வாழ்க்கையில் வரும் “பிரேக்குகள்” உங்கள் வேகத்தை குறைப்பதற்கு அல்ல. வேகமாகச் செல்வதற்கு தான்.

இந்த கொரானா சூழ்நிலையும் ஒரு வேகத்தடைதான், இதை நிதானமாக பிரேக் பிடித்து தாண்டி விட்டால் , பிறகு நாம் விரும்பிய இலக்கை இனிதே அடையலாம்.

*வெற்றி நிச்சயம்*

Tuesday 4 August 2020

கற்பித்தல்

நீங்கள் யார்?

ஒரு முறை பயணிக்கும் போது புலவர் காளிதாசனுக்கு மிகவும் தாகமாக இருந்தது. 

அப்போது ஒரு பெண் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதைப் பார்த்தார்.

கிணற்றடிக்குச் சென்று அந்தப் பெண்ணிடம் தண்ணீர் கேட்டார்.

பெண்: "தருகிறேன். ஆனால் நீங்கள் யார்? உங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள்" என்றாள்.

காளிதாசர்: தான் யார் என்று இந்த கிராமப்புற பெண் அறிய அருகதை அற்றவள் என்று எண்ணினார். 

எனவே, "நான் ஒரு பயணி" என்றார்.

பெண்: "இந்த உலகில் இரண்டே பயணிகள் தானே உண்டு. 

அது சூரியனும் சந்திரனும் ஆகும். தினமும் உதித்து பிறகு அஸ்தமித்து சதா பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள்".

காளிதாசர்: "சரி. அப்படியானால் நான் ஒரு விருந்தினர்" என்றார்.

உடனே அந்த பெண்: இந்த உலகில் இரண்டே விருந்தினர்தானே உண்டு - இளமையும் செல்வமும்... 

இரண்டும் தற்காலிக மானவை. எனவே அவற்றைதான் விருந்தினர் என்று ஏற்க முடியும்" என்றாள்.

ஆச்சரியப்பட்ட காளிதாசர்: "சரி, நான் ஒரு பொறுமைசாலி என்று வைத்துக்கொள்" என்றார்.

அதற்கு அந்த பெண்: இந்த உலகில் இரண்டே பொறுமைசாலிகள்தான் உண்டு. 

அவை, பூமியும் மரமும் ஆகும். 

யார் பூமியை எத்தனை மிதித்தாலும், பழத்திற்காக மரத்தின் மேல் எத்தனை கல் எறிந்தாலும், அவை பொறுமையாக இருக்கின்றன" என்றாள்.

பொறுமை இழந்த காளிதாசர்: "மிகவும் சரி. நான் ஒரு பிடிவாதக்காரன்" என்றார். 

அதற்கு அந்த பெண்: புன்னகையோடு இந்த உலகில் பிடிவாத குணம் கொண்டவை இரண்டுதான் - நம் நகமும் தலைமுடியும் ஆகும். 

நாம் வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருக்கும்" என்றாள்.

பொறுமை இழந்த காளிதாசர், கோபமாக, "சரி, நான் ஒரு முட்டாள்" என்றார்.

அந்த பெண் சிரித்துக்கொண்டே,

"இந்த உலகில் அறிவும் ஆற்றலும் இன்றி ஆளும் அரசனும், அவனைப் புகழ்ந்து துதி பாடும் அமைச்சருமே இரு வகை முட்டாள்கள் ஆவர்" என்றாள்.

தான் தோல்வி அடைந்ததை உணர்ந்த காளிதாசர் அந்த பெண்ணின் கால்களில் விழுந்து அவள் பாதங்களைப் பற்றி பின் எழுந்த போது, தான் கண்ட காட்சியில் உறைந்து விட்டார். 

கற்பித்தல் மற்றும் அறிவுக்கும் கடவுள் ஆன அன்னை சரஸ்வதியை அங்கே காட்சி தந்து, "காளிதாசா, நீ புத்தி உள்ளவன். ஆனால் நீ உன்னையே உணர்ந்தால்தான் நீ மனுஷ்யா. எவன் ஒருவன் தன்னை அறிவதில்லையோ அவன் மனுஷ்ய உச்சத்தை அடைவதில்லை" என்று ஆசீர்வதித்தார்.

இந்த கதையை சொன்ன உபன்யாசகர், "குழந்தைகள் வளர்ந்து மனுஷ்ய உணர்வு பெற்று தங்களையே அறிய வேண்டும். 

குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர், அவர்களுக்கு பணம் மற்ற வசதிகள் சம்பாதிக்க கற்றுத் தருவதைத் தவிர்த்து, குழந்தைகள் தங்களையே உணர்ந்து சிறந்த மனிதர்களாக வாழ கற்றுத்தர வேண்டும் என்றார்.

Sunday 2 August 2020

சந்தோஷம்

*சந்தோஷமா இருக்க ஆசையா*
*இதோ மகிழ்ச்சியான*
*வாழ்க்கைக்கு 5 டிப்ஸ்..!!*

*1. உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள்.. அடுத்தவர் வாழ்க்கையை அல்ல..*
*༺🌷༻*
எதிலும் நிறைவின்றி வாழ்ந்து கொண்டிருக்க
வேண்டாம். கடந்த ஒன்றை மாற்ற இயலாது. எனவே இப்போதுள்ள வாழ்க்கையை புகார்கள் இன்றி ஏற்றுக் கொள்ளுங்கள் பழைய
வலிகளிலிருந்து கற்றுக் கொள்ள பாடங்கள்
உள்ளது. அதன் பின்னான உங்கள் வாழ்க்கை
பிரத்யேகமானது, மகிழ்ச்சியின் அலைகள்
உங்கள் மீது விழ முதலில் உங்களை
அனுமதியுங்கள். அதற்கு முதலில் உங்களை
நேசிக்கத் தொடங்குங்கள். வாழ்க்கையை
முழுமையாக வாழுங்கள். சந்தோஷம் நிம்மதி
எல்லாம் தானாகவே வரும், போகும் மீண்டும்
வரும், புரிந்ததா?

*2. வேலை, வாழ்க்கை இரண்டையும் சமமாகப் பாருங்கள்*
*༺🌷༻*
சிலர் எப்போதும் வேலை வேலை என்று
வாழ்நாள் முழுக்க தங்கள் அலுவலக
வேலைக்கு தங்களை அப்படியே ஒப்புக்
கொடுத்துவிடுவார்கள். வேலை முக்கியம் தான். ஆனால் அதைவிட எதற்காக
வேலை முக்கியம் என்னும் சிந்தனை
முக்கியம். #மகரயாழ் உங்களை நம்பி வந்தவர்களை
நீங்கள் உருவாக்கிய உங்கள் குடும்பத்தை
அரவணைக்க வேண்டும் நேசிப்பதும்
நேசிக்கப்படுவதும் தான் உங்களை மன
மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும் முக்கியமான விஷயம்.

*3. உண்மையாக இருங்கள்*
*༺🌷༻*
உங்கள் உணர்வுகளை நேரடியாக
வெளிப்படுத்துபவராக இருங்கள். மனத்தில் ஒன்று நினைத்தும் வெளியில் ஒன்றைச் சொல்லியும் முகமூடியுடன்
வாழாதீர்கள். எப்போதும் மூளைக்கு
மட்டும் இடம் கொடுக்காமல் மனத்தாலும்
வாழப் பழகுங்கள். உங்களுடைய உணர்வுகளை உண்மையாக இருங்கள். அதுவே மகிழ்ச்சியை விதைத்து நல்ல அறுவடையையும் தரும்.

*4. நல்ல நண்பர்களுடன் எப்போதும் தொடர்பில் இருங்கள்.*
*༺🌷༻*
ஆங்கிலத்தில் அழகான ஒரு பழமொழி
உள்ளது. உங்கள் தோட்டத்தின் அழகு அதில் எத்தனை பூக்கள் இருக்கிறது என்பதில்
தான் உள்ளது. உங்கள் நாட்கள் அருமையாக அமைய, மகரயாழ் அதில் எத்தனை
பொன்னான தருணங்கள் இருந்தன என்பது
அர்த்தமுள்ளதாக இருக்க அதில் எத்தனை
சந்தோஷமான புன்னகையுடன் இருந்தீர்கள்
என்பது தான் சிறப்பு. மேலும் உங்கள் வயது
நண்பர்கள் உங்களை சுற்றி இருக்கிறது
முக்கியம் உங்கள் வாழ்க்கை
ஏறாமல் அப்படியே இருக்க, எத்தனை
என்பது தான் விஷயம்.

*5. எப்போதும் சந்தோஷமாக இருப்பேன் என்று உறுதியாக முடிவெடுங்கள்.*
*༺🌷༻*
சந்தோஷம் என்பது உங்கள் தேர்வு. ஆம்.
அதைத் தேர்ந்தெடுத்து நமதாக்கிக் கொள்ள வேண்டும். இனிமேல் நான் சந்தோஷமாகவே
இருப்பேன் என்று ஒரு தீர்மானம் உறுதியாக எடுத்து, அதைக் கடைப்பிடித்து பாருங்கள்.  நம்மால் மாற்ற முடிந்த விஷயங்களை
துணிவுடன் போராடி மாற்றும் திறனும், மாற்ற முடியாத விஷயங்களை உள்ளவாறு
அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப்
பக்குவமும், எதை மாற்ற முடியும், எதை
அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் எனும் ஞானமும் இருந்தால் *வாழ்தல் இனிது.*

*வாழ்க வளமுடன்*