Saturday 28 April 2018

மன வளம்

மனதை கட்டுப்படுத்த நினைப்பது தவறு. மனதை கட்டுப்படுத்த யாராலும் முடியாது. நாம் வெற்றி பெற மனதை ஒரு புள்ளியில் குவிக்கலாம். சூரிய ஒளி பரவிக் கிடப்பதை விட ஒரு குழியாடியில் (லென்சு) குவிக்கும் பொழுது வெளிப்படும் சக்தியைப் போல. நாம் எதில் வெற்றிபெற நினைக்கிறோமோ அந்தப் புள்ளியில் மனதைக் குவித்தால் நம் சக்தியும் பல மடங்கு அதிகமாகும் நமக்கும் வெற்றி நிச்சயம்.

*"நல்ல எண்ணங்களை விதை"*

ஒரு மனிதனின் மனதில் பல்லாயிர எண்ணங்கள் உருவாகும்.

அதில் தாழ்வு எண்ணங்கள், எதிர்மறை எண்ணங்கள், பலவீனமான எண்ணங்கள், முரட்டு எண்ணங்கள், அன்பு, தெய்வீகம் என பல உயர்ந்தும், அதே வேலையில் தாழ்வான எண்ணங்களும் அதே மனதில்தான் உருவாகின்றன.

மனோதத்துவ ஆராய்ச்சியின்படி ஒரு மனிதன் எதை நினைக்கிறானோ,அதுவகவேதான் உருவாகிறான் என்பதை கண்டறியப்பட்டிருக்கிறது.

இதைத்தான் நம் முன்னோர்கள் "விதைப்பதே விளையும்" என்றார்கள்.

நாம் நம் வாழ்க்கையில் உயர்ந்து ஒளி வீச நம் மனம்தான் ஆணிவேர்.

உயர்ந்த எண்ணங்களை விதைத்து வாழ்வில் உயர வேண்டும் என்று தன்னம்பிக்கையுடன் உழைத்தல் நிச்சியம் வெற்றி கோட்டையை அடையலாம்.

தவறான எண்ணங்களை மனம் யோசித்தால் தவறான வழிகளைத்தான் அறிவு தரும்.

நம் எண்ணங்கள் எப்பொழுதும் சுத்திகரிக்கப்பட்டு புனிதமாக இருக்க வேண்டும்.

எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டிருந்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது.

எண்ணம் சுத்திகரிக்கப்பட்டிருந்தால் வாழ்விற்கு நல்லது.

நீங்கள் ஒவ்வொருவரும் இரவும் பகலும் ஓடி ஓடி வேலை செய்து சொத்து, மட மாளிகை, புது மாடலான வண்டி வாகனங்கள், பொன் பொருள் என வாழ்கையில்சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

நிலம் உள்ளவர்கள் நிலத்தை சுத்தம் செய்து உறமிட்டு நீர்பாய்ச்சி, பயிரிடுகிறார்கள்.

எத்தனை பேர் மனதை உழுது நல்லெண்ணங்களை விதைத்து, போட்டி, பொறாமை, புறம் பேசுதல், பிறருக்கு கேடு விலைவித்தல் என்ற எண்ணங்களை களையெடுத்து உள்ளன்போடு பழகுதல், உண்மையாக உழைத்தல், எதையும் எதிர்பாராமல் உதவி புரிதல் என்ற பண்புகளுடன் வாழ்கிறார்கள்.

இப்படி வாழக்கூடியவர்கள் வாழ்க்கையில் எப்போதும் சந்தோசமாகவும், உற்சாகத்துடனும் வாழ கற்றுக் கொள்கிறார்கள்.

எண்ணம் அணுகுண்டை விட ஆற்றலுள்ளது என்று கூறினால் எத்தனை பேர் நம்புவீர்கள்?

ஏனென்றால் அணுகுண்டை செய்யக்கூடிய ஆற்றல் உருவானதே எண்ணத்திலிருந்துதானே!

மனம் எண்ணியதினால்தான் அறிவு செயல்பட்டு அணுகுண்டு உருவானது.

ஒரு எண்ணத்தை நம்பிகயுடேன் பலமுறை மனதில் நினைத்தால், அது நல்லதோ, கேட்டதோ அது நடந்தே தீரும்.

ஆகையால் நல்லதும் கேட்டதும் நடப்பது நாம் எண்ணும் எண்ணங்களினால்தான்,

"நீ எதை நினைக்கிறயோ அதுவாகவே மாறி விடுகிறாய்" என்பதை நீங்கள் கேள்விப்பத்டிருப்பீர்கள்.

உங்கள் எண்ணம் உறுதியாக இருந்தால் இயற்கையே உங்களுக்கு உதவி கரம் நீட்டி உதவி புரியும் என்பது உறுதி.

மன வலிமை வளர்த்தால் மனம் வளம் பெறும்.

Friday 20 April 2018

நன்றி

உலக புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்கள் தனக்கு முன்னால் வாழ்ந்த அறிவியல் அறிஞர்களுக்கு ஒரு நாளில் நூறு முறை மேல் நன்றியுணர்வை வெளிபடுத்துவார்.
.
இயேசு கிறிஸ்து தான் செய்யும் ஒவ்வொரு அற்புதத்திற்கு முன்னரும் நன்றி சொல்லி தொடங்கினார்...
.
உலக புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் ஐசக் நியூட்டன் தன் அறிவியல் கண்டுபிடிப்புகளை பற்றி கூறும்போது பல அறிவியல் அறிஞர்களின் தோளில் ஏறி சாதித்தாக குறிப்பிட்டார். ஒரு நாளில் குறைந்தது நூறு முறையாவது நன்றியுணர்வை வெளிபடுத்தினார்.
.
எண்ணற்ற மகான்களும், அறிவியல் அறிஞர்களும், வாழ்வில் சாதித்தவர்களும் தங்கள் வாழ்வில் ஒரு நாளில் நூறு முறைக்கு மேல் நன்றியுணர்வை வெளிப்படுத்தியு
ள்ளார்கள்..
.
நீங்கள் ஒரு நாளில் குறைந்தது நூறு முறையாவது நன்றியுணர்வை மற்றும் அன்பை வெளிப்படுத்தி உணரும்போது உங்கள் நாள் ஆசிர்வதிக்கப்பட்ட நாளாக மாறுகிறது....
.
நீங்கள் செல்லுமிடமெல்லாம் மாயஜாலம் நிகழ்கிறது.... நீங்கள் சாலையில் பார்க்கும் வார்த்தைகள் அனைத்தும் உங்களை மகிழ்விக்கிறது.
.
உங்களை சுற்றி நடக்கும் ஒவ்வொரு செயலும் , சூழ்நிலையும் உங்களை எப்போதும் சந்தோஷமான சூழ்நிலையிலே வைத்திருக்கும்...

Tuesday 17 April 2018

மழுப்பல்

டாக்டர் வெயின் டயர் மிகச்சிறந்த ஆன்மீக மற்றும் ஊக்குவிப்பாளாராக இருந்தவர் . Father of Motivation என்று சொல்லுமளவுக்கு பிரசித்தி பெற்றவர் .. அவருடைய புத்தகங்கள் சில உலக பிரசித்தி பெற்றவை . அதில் முக்கியமான ஒரு புத்தகம் "STOP THE EXECUSES " அதாவது மழுப்பல்களை நிறுத்துங்கள்..
நம் உணர்வுகளுக்கு தெரியும் நாம் மழுப்புகிறோம் என்று , சில எதிர்மறை தூண்டுதல்கலாலும் தன்னம்பிக்கையின்மையாலும் நல்ல இலட்சிய பயணங்களை மழுப்பி சாக்குபோக்குகள் சொல்லி தவிர்க்கிறோம்..தேவையற்ற அந்த மழுப்பல்கள் இல்லாத அந்த பயணத்தை தொடர அவர் தரும் தீர்மானங்கள் உறுதி மொழி போன்று சக்தி வாய்ந்தவை ..
மழுப்பல்களும் சாக்குபோக்குகளும் நம் இலக்கை அடைய பெரிய தடைக்கற்கள் .நம்மை நாமே ஏமாற்றிகொள்ளும் அந்த சாக்குபோக்குகளையும் , மழுப்பல்களையும் கலைவது நமது வெற்றி பயணத்தை நோக்கிய பயணத்திற்கு மிக முக்கியமானது .
முக்கியமான சில மழுப்பல்களும் அவற்றை களைவதற்கான தீர்மானங்களும் இன்றே எடுங்கள் ..
1. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது : நான் மனம் வைத்தால் என்னால் எதையும் செய்து முடிக்க முடியும்
2. இதில் ஆபத்துக்கள் இருக்குமே : நான் நானே இருப்பதில் எந்த ஆபத்தும் இல்லை .அதனால் பயமில்லை
3. இதற்கு நெடுங்காலம் ஆகும்: என் இலட்சியத்தை அடையும் பொறுமை எனக்கு உண்டு.
4. குடும்பத்தில் குழப்பம் ஏற்படும் : நான் நானாய் இருப்பதால் பெரும் வெறுப்பு நான் நானி இல்லாததால் பெரும் அன்பைவிட உயர்ந்ததாகும்..
5. நான் அதற்கு தகுதியானவன் அல்ல ( நினைப்புதான் பிழைப்பை கெடுக்கும்): நான் ஒரு தெய்வப்பிறவி ஆகையால் எல்லாவற்றிற்கும் எனக்கு தகுதி உண்டு.
6. அது என் இயல்பல்ல : என் உண்மையான இயல்பு குற்றமற்றது .இதுவும் அதன் ஒரு அம்சம்தான்
7. என்னால் அவ்வளவு செலவழிக்க முடியாது : நான் எப்போதும் வளமையோடு தொடர்பு கொண்டிருக்கின்றேன் .
8. எனக்கு யாரும் உதவ மாட்டார்கள் : எனக்கு தேவையான சரியான சமயத்தில் எங்கிருந்தாவது உதவி தயாராக கிடைக்கும்
9. இதுவரை இது போல் நடந்தது இல்லை : இனிமேல் ஆசைப்படுபவைகளை நான் கவர்வேன்.
10. நான் பலமற்றவன் : எனக்கு தேவையான உதவி கிடைக்கும் ஏனென்றால் நான் இந்த பிரபஞ்ச சக்தியுடன் தொடர்புடையவன்..
11. எனக்கு அவ்வளவு சாமர்த்தியம் இல்லை : என்ன் வரையில் நான் முழுமையானவன் , தனித்துவம் நிறைந்தவன்.
12. எனக்கு வயதாகிவிட்டது. ( அல்லது வயசு பத்தாது) : உண்மையில் நான் முடிவற்றவன் . வயது உடலுக்கே , என் வயதுக்கும் நான் என்ன செய்கிறேன் என்பதற்கும் சம்பந்தம் இல்லை .
13. விதிகள் இதற்கு இடம் கொடுக்காது : நான் மனசாட்சிக்கு விரோதமாகச் செயல்படமாட்டேன் . என்னை வழிநடத்துவது இந்த பிரபஞ்சத்தை நடத்தும் சக்தியே
14. அது ரொம்ப பெரிய வேலை : என்னால் என்ன செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்வேன் .சிறுக கட்டி பெருக வாழ்வேன்.
15. எனக்கு சக்தியில்லை : என் வாழ்வைப்பற்றிய ஆர்வம் எனக்கு இருக்கிறது . அது என்னை உற்சாகபடுத்துகிறது.
16. இது என் குடும்ப சரித்திரம் :நான் நிகழ்காலத்தில் வாழ்கின்ற அதே சமயம் , எனக்கு குடும்பம் எனக்கு அளித்ததற்கு நன்றியுடையவனாக இருப்பேன்.
17. நான் ரொம்ப பிஸி : நான் என் சுபாவத்தை ஒட்டி , எனக்கு பிடித்தவற்றைத் தேர்ந்தெடுத்தால் அவற்றை முடிக்க நேரம் கிடைக்கும்
18. எனக்கு பயமாக இருக்கிறது : நான் நினைத்தபடி செய்து முடிக்க என்னால் முடியும் ஏனென்றால் நான் தனியானவன் அல்ல :
இது போன்ற சாக்குபோக்குகளை அந்த தீர்மானங்கள் கொண்டு தவிர்த்து இலக்கினை அடைந்து மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
உற்சாகம் எப்போதும் உங்களுடன் இருக்கட்டும்