Saturday 29 April 2017

சக்தி

*சக்தி. .THE POWER*
(_RHONDDA BYRNE)

நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மகாசக்தி இருக்கிறது.அது நம்முடைய பார்வைக்குத் தெரியாவிட்டாலும்கூட நம்மால் அதனைப் பயன்படுத்திக் கொண்டு பிரமாதமான பலன்களைப் பெறமுடியும் என்கிறார் ரோண்டா பைர்ன்.‘

இந்த உலகம் பார்த்திருக்கிற புதிய கண்டுபிடிப்புகள், கலைப் படைப்புகள், மருத்துவ சிகிச்சைகள், புத்தகங்கள், இசைத் தொகுப்புகள்,இன்னும் நம்மைச் சுற்றியிருக்கிற எல்லாமே இந்த ஒரு சக்தியின் துணையோடு உருவாக்கப்பட்டவைதான்.’

சராசரி மனித மனத்தில் நல்ல சிந்தனைகள்,கெட்ட சிந்தனைகள் இரண்டுமே உண்டு. அவற்றின் விகிதம் மாறலாமேதவிர, முழுக்க முழுக்க நல்லதைமட்டுமே நினைக்கிறவர் என்று யாரும் கிடையாது.

வெறுப்புச் சிந்தனைகளின் தாக்கத்தைக் குறைந்து அன்புச் சிந்தனைகளை ஊக்குவித்து வாழ்க்கையில் அமைதி, நிம்மதி, செயல்திறன், சாதனைகள் என்று படிப்படியாக மேலே அழைத்துச்செல்கிறது.

நமக்குள் இருக்கும் அந்தச் சக்தியை அடையாளம் காண்பது எப்படி? அதை வெளிக்கொண்டுவருவது எப்படி?

எதையும் சாதிக்கக்கூடிய இந்தப் ‘சக்தி’ பூட்டைத் திறப்பதற்கு ரோண்டா மூன்று சாவிகளைச் சொல்லித்தருகிறார். அவை:

1. அன்புச் சாவி
2. நன்றிச் சாவி
3. விளையாட்டுச் சாவி

1. அன்புச் சாவி :

உலகின் மிக உன்னதமான ஆற்றல், அன்புதான். அதைக் கொண்டு எந்தக் கதவையும் திறந்துவிடலாம்

ஒரு மனிதரை, ஒரு குடும்பத்தை, ஒரு வீட்டை, ஒரு நாட்டைமட்டும் நேசித்தால் போதாது. ஒட்டுமொத்த உலகத்தையும் மானுடகுலத்தையும் நேசிக்கப் பழகுங்கள். அதனால் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை அழகாகும்.

நீங்கள் எதையெல்லாம், யாரையெல்லாம் நேசிக்கிறீர்கள்? மனத்துக்குள் ஒரு லிஸ்ட் போட்டுக்கொள்ளுங்கள்.ஒவ்வொரு நாளும் அந்த அன்புப் பட்டியலில் உள்ளவர்கள் மத்தியிலேயே அதிக நேரம் செலவிடுங்கள்.

அதன்மூலம் ஏற்படுகிற மகிழ்ச்சியும் திருப்தியும் உங்களுடைய செயல்திறனை உயர்த்தும், உங்களை ஒரு புதிய மனிதராக மாற்றிவிடும்.

2. நன்றிச் சாவி

வாழ்க்கை இதுவரை உங்களுக்குத் தந்திருக்கிற, தந்துகொண்டிருக்கிற, இனி தரப்போகிற எல்லா விஷயங்களுக்காகவும் மனமார நன்றி சொல்லிப் பழகுங்கள். உரக்கச் சொல்லவேண்டாம், மனத்துக்குள் அதை உணர்ந்தாலே போதும்.

நீங்கள் சந்திக்கிற எல்லோரும் உங்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் உதவுகிறார்கள், ஏதாவது பாடம் சொல்லித்தருகிறார்கள். அந்த உதவி சிறியதோ, பெரியதோ, வாய் திறந்து நன்றி சொல்லுங்கள். உலகம் உங்களை இன்னும் நேசிக்கும்.உங்களுடைய வளர்ச்சிக்கு அவர்கள் உதவுவார்கள்

3. விளையாட்டுச் சாவி

வாழ்க்கை என்பது சீரியஸான மேட்டர் அல்ல. மனம் விட்டுச் சிரியுங்கள். ஒவ்வொரு கணத்தையும் அனுபவியுங்கள்.சுருக்கமாகச் சொல்வ தென்றால், ‘சும்மா பூந்து விளையாடுங்க!’

சிறுவயதில் நாமெல்லாம்சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தவர்கள் தான். வயது ஏற ஏற, விளையாட்டை அலட்சியப்படுத்துகிறோம்.

அதனால்தான் அநாவசியப் பதற்றம், பரபரப்பு, டென்ஷன் எல்லாமே.

சின்ன வயதில் விளையாட்டாய் நிறைய கற்பனைகள் செய்வோம். ஆனால் வயது ஏறும்போது கற்பனைகளைக் குறைத்துவிடுகிறோம்.

கற்பனை என்பது ஒரு மிகப் பெரிய வரம். அதை வைத்துக்கொண்டு நாம் எங்கேயும் பயணம் செய்யலாம்.நம்முடைய பாதையை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்.உங்கள் கற்பனைக் குதிரைக்கு ஓய்வே கொடுக்காதீர்கள். தொடர்ந்து ஓடவிடுங்கள். அது மேலும் மேலும் புதிய இலக்குகளை கற்பனை செய்யட்டும்.அதன்மீது உட்கார்ந்து சவாரி செய்யும் நீங்களும் புதுப்புது சிகரங்களைத் தொடுவீர்கள்

‘நம்பிக்கை உள்ள ஒருவருக்கு எதுவும் சாத்தியம்’ என்கிறது பைபிள். நம் ஊரிலும் ‘நம்பினோர் கெடுவதில்லை’என்று ஒரு வாசகம் உண்டு.

ரோண்டா பைர்ன் சொல்லும் மகாசக்தி எது என்று நமக்குப் புரியாவிட்டாலும்கூடப் பரவாயில்லை. அப்படி ஒன்று நமக்குள் எங்கேயோ இருக்கிறது என்று நம்பிக்கைமட்டும் வைத்து, அன்பு, நன்றி, விளையாட்டு என்கிற மூன்று சாவிகளைப் பயன்படுத்திப் பார்க்கலாமே!

நன்றி

Friday 28 April 2017

இரவு தியானத்துடன்

விழிப்புணர்வு இல்லாமல் தூங்க செல்லுகையில் நீங்கள் கடைசியாக எதை நினைத்து தூங்க ஆரம்பிக்கின்றீர்களோ, அந்த எண்ணம் தான் தூங்கி எழுந்ததும் முதலில் தோன்றும்.

ஆகவே தூங்குவயற்கு முன் விழிப்புணர்வில் இரவு தியானம் செய்யுங்கள்.
--------------------------------------------------
ஓஷோ கூறும் இரவுப் பொழுதுக்கான தியானம்....

படுக்கையில் படுத்துக் கொண்டு உங்கள் உடம்பை அசதி தீர தளர்த்திக் கொள்ளுங்கள்.

எலும்புகளனைத்தும் தளரட்டும்.

கண்களை மூடிக் கொண்டு உங்கள் உடம்பு இப்போது ஆசுவாசமாகின்றது என்று நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்.

படிப்படியாக உடம்பு சாந்தமாகும்.

பிறகு இரண்டு நிமிடங்களுக்கு, உங்களுடைய சுவாசம் அமைதியாகின்றது என்றும், அது சாந்தக்கட்டுக்குள் வருகிறது என்று சொல்லிக் கொள்ளுங்கள்.

இறுதியாக இரண்டு நிமிடங்களுக்கு உங்களுடைய சிந்தனைகள் நிறுத்ததுக்கு வந்து விட்டன என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இங்ஙனம் உங்களுக்கு நீங்களே ஒரு தீர்மானமாய் ஆலோசித்துக் கொள்வது, முழு ஆசுவாசத்தையும், ஆழ்நிலை அமைதியையும், வெற்றிட அனுபவத்தையும் கைகூட வைக்கும்.

புத்தி சுத்தமாய் சாந்தமானதும், உங்களுடைய 'சுயம்' நிறைந்துள்ள ஆழ்மன வெளியில் விழித்தெழுங்கள். அங்கு நிலவும் கருணைமயமான சாந்தத்துக்குச் சாட்சியாய் நில்லுங்கள்.

இந்த நிலைப்பாடு, உங்களை ஆன்மா நோக்கி கைப்பிடித்து அழைத்துச் செல்லும்.
------------------------------------------------
இரவு தியானத்துடன் ஆழ்ந்த தூங்கத்தில் நீங்கள் செல்லுகிறீர்கள்.

காலை விழித்தவுடன் நீங்கள் இயல்பான விழிப்புணர்வில் இருப்பதை உணருவீர்கள்.

தியானத்துடன் தூங்க செல்வோம்.

Wednesday 26 April 2017

மனம்

பொதுவாக நமக்குள் இருக்கும் முரண்பாட்டையே நாம் வெளியே காட்டுகிறோம். இது தான் நமக்குள் இருக்கும் திருடன். அந்த திருடனோடு தான் நாம் சண்டையிட வேண்டிருக்கிறது. திருட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம். அடுத்த வீட்டில் ஒரு திருடன் பிடிபட்டால் நாம் அவனைப் பிடித்து நன்றாக அடிக்கிறோம். ஏனெனில் நமக்குள் ஏற்கனவே ஒரு திருடன் இருக்கிறான். அவனைப் பிடித்து தண்டிக்க நினைக்கிறோம். ஆனால் முடியவில்லை. வெளியே ஒரு திருடன் கிடைத்ததும் உள்ளிருக்கும் திருடனை வெளிப்படுத்துகிறோம். நிச்சயமாக அவனை நாம் தண்டிப்போம். திருடனைத் தண்டிக்கத் திருடனின் இருப்பு அவசியம். புனித மனிதர் ஒரு திருடனை அடிக்கவே முடியாது. ஆகவே திருடர்களே எப்பொழுதும் திருடர்களை கண்டிப்பார்கள். குற்றவாளிகளே குற்றவாளிகளை குறை சொல்வர். காமவயப்பட்டவரே பாலுறவை மிகவும் கண்டிப்பர். நமக்குள் இருப்பது தான் வெளியே தோன்றும். ஒருவன் 'திருடன்.. திருடன்.. விடாதே பிடி! என்று கத்தினால் முதலில் அவ்வாறு கத்துபவனைப் பிடிக்கவேண்டும் என்கிறார் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல். ஏனெனில் அவ்வாறு கத்துபவன் எதிர்காலத்தில் திருடுவான்.
நம் நோய்களை நமது மனநோய்களையே பிறர் மீது சுமத்துகிறோம். எனவே ஒருவரைப் பற்றிக் குறை கூறும் போது நம்மை நாமே வெளிப்படுத்திக் கொள்கிறோம். பிறரைக் குறை சொல்ல அதிகம் இல்லாத போது நம்மியல்பே அங்கு வெளிப்படும். நமக்குள் நடக்கும்போராட்டமே இன்னொருத்தர் மேல் ஏற்றி உரைக்கப்படுகிறது. ஆகவே நமக்குள் முரண்பாடு தோன்றாத போது போராட்டம் எழாத போது இன்னொருத்தர் மேல் பழிபோடுதல் என்பது முற்றிலும் நின்று போகிறது.
மனித மனம் உடைப்பட்டு கிடக்கிறது. அவனது வன்முறை இங்கு தான் பிறக்கிறது. மனித மனம் அஹிம்ஸையாக மாறத் தொடங்கும்போது அது முழுமையாகி விடும். ஒன்றாக இருக்கும். பிளவுபடாது. மனம் ஒருமைப்பட்டு முழுமை அடையும் போது அதில் மாறுபட்ட போக்குகள் என்பதே இருக்காது. ஆனந்த நடனமே அமையும். மகிழ்ச்சியால் புல்லாங்குழல் ஒலிக்கத் தொடங்குகிறது. அப்பாதையில் சென்று இறையை அடையலாம். முழுமை அடைந்த மனத்தால் மட்டுமே இறையை அடைய முடியும்.வேறு வழியே இல்லை.-Osho.

Sunday 23 April 2017

தோல்விகளைத் துரத்துவோம்.

*துருக்கி நாட்டுக் கதை ஒன்றிருக்கிறது. . . .*

துருக்கியின் அரசன் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தான். பயண வழியில் ஓர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின் வீட்டில் தங்கினான்.

அவர்களுக்கு தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது. யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என நினைத்துக்கொண்டு தங்க வசதி செய்து கொடுத்தார்கள்.

அரசன் காலையில் எழுந்து கொண்டபோது நெசவாளி நூல் நூற்கத் தொடங்கியிருந்தான். அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. அரசன் அந்த நெசவாளியைப் பார்த்து, ‘‘இது என்ன உனது இடது கையில் கயிறு?’’ என்று கேட்டான். ‘

‘தொட்டிலில் உள்ள குழந்தையை ஆட்டுவதற்கானது. குழந்தை அழுதால் இதை இழுப்பேன்…’’ என்றான் நெசவாளி நூல் நூற்றுக்கொண்டே.

அவன் அருகில் ஒரு நீண்ட குச்சியிருந்தது. ‘‘இந்தக் குச்சி எதற்கு?’’ எனக் கேட்டான் அரசன். ‘‘வெளியே என் மனைவி தானியங்களை வெயிலில் காயப்போட்டிருக்கிறாள்.

இந்தக் குச்சியின் மறுமுனையில் கருப்பு கொடியைக் கட்டியிருக்கிறேன். இதை அசைத்தால் பறவைகள் அருகில் வராது’’ என்றான்.

அந்த நெசவாளி தனது இடுப்பில் மணிகளைக் கட்டியிருந்தான். ‘‘இந்த மணியை எதற்கு கட்டியிருக்கிறாய்?’’ எனக் கேட்டான் அரசன்.

‘‘வீட்டில் ஒரு எலி இருக்கிறது. அதன் தொல்லையை சமாளிக்க இந்த மணியை ஒலித்தால்போதும், ஒடிவிடும்!’’ என்று பதில் சொன்னான்.

அவனது வீட்டின் ஜன்னலுக்கு வெளியே நாலைந்து சிறார்களின் முகம் தெரிந்தது. நெசவாளியைப் பார்த்து ‘‘அவர்கள் என்ன செய்கிறார்கள்?’’ என்று கேட்டான் அரசன்.

‘‘நூற்பு வேலை செய்துகொண்டிருக் கும்போது வாய் சும்மாதானே இருக் கிறது. அதனால், அவர்களுக்கு எனக்குத் தெரிந்த பாடங்களை நடத்துகிறேன். அவர்கள் வெளியே இருந்து கேட்டுக் கொள்வார்கள்!’’ என்றான்.

‘‘அவர்கள் ஏன் வெளியே இருக்கிறார்கள்?

உள்ளே வரலாம்தானே எனக் கேட்டான் அரசன். அதற்கு நெசவாளி சொன்னான்: ‘‘அவர்கள் காதுதான் நான் நடத்தும் பாடங்களைக் கேட்கப் போகிறது. ஆகவே, அவர்களை என் வீட்டுக்கு முன்னால் உள்ள மண்ணை குழைத்துத் தரும்படி செய்திருக்கிறேன். என்னிடம் பாடம் கேட்கும்போது அவர்கள் காலால் சேற்றை குழைத்துக் கொண்டிருப்பார்கள்’’ என்றான்.

ஒரே நேரத்தில் இவ்வளவு விஷயங்களை ஒருவன் செய்யமுடியுமா என அரசனுக்கு வியப்பு தாங்கமுடியவில்லை.

*நெசவாளி சொன்னான்:*
‘‘இது மட்டுமில்லை. என் மனைவி கிரேக்கத்துப் பெண்.

ஒவ்வொரு நாளும் பத்து கிரேக்கச் சொற்களை சிலேட்டில் எழுதி வைத்துப் போகிறாள். வேலை செய்துகொண்டே அதையும் கற்று வருகிறேன்.’’

ஒருவன் விரும்பினால் ஒரே நேரத் தில் கற்றுக்கொள்ளவும், கற்றுத் தரவும், வேலை செய்யவும், வீட்டை கவனிக்க வும் முடியும் என்பதற்கு இந்த நெசவாளி தான் சாட்சி.

நமது சோம்பேறித் தனத்துக்கு காரணம் கற்பித்துக் கொண்டிராமல் தொடர்ச்சியான உழைப்பினைத் தந்து தோல்விகளைத் துரத்துவோம். வெற்றி நமதே.

ஊற்றுவதை நிறுத்துங்கள்

விளக்கின் சுடரை அனைத்துவிட ஆசைப்படுகிறீர்கள்.ஆனால் அதற்குப் பதில் விளக்குக்கு மேலும் எண்ணெய் வார்க்கிறீர்கள். அதுதான் பிரச்சினை.
ஒரு கையால் விளக்கின் சுடரை அனைக்க முயன்று கொண்டே மறுகையால் விளக்கிற்கு எண்ணெய் ஊற்றவும் செய்கிறீர்கள்.
முதலில் எண்ணெய் ஊற்றுவதை நிறுத்துங்கள். விளக்கில் மீதமிருக்கும் எண்ணெய் விரைவில் தீர்ந்து விடும். பிறகு விளக்கு தானே அணைந்து போய்விடும்.
விளக்கிற்கு எது எண்ணெயாக இருக்கிறது?
ஏதாவது ஒரு எண்ணம் உங்களை ஆக்கிரமிக்கும் போது நீங்கள் அதனுடன் கலந்து விடுகிறீர்கள்.
--ஓஷோ--

காலை தியானம

* காலை தியானம் *

காலை தியானத்துக்கு இரண்டு விசயங்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

ஒன்று...

உங்களது உடம்பைத் தளர்ச்சியாய் விட்டுவிட வேண்டும்.

இளைப்பாறலாய் விட்டு விட வேண்டும்.

ஓசையின்றி அமர வேண்டும்.

உடம்பை முழுவதும் தளர்த்திக் கொண்டு, முதுகெலும்பை நேராக வைத்து, ஓசையின்றி அமைதியாய் உட்காரவேண்டும்.

உடலின் அனைத்து விதமான அசைவுகளையும் நிறுத்திவிட வேண்டும்.

மெதுவாகவும், ஆழமாகவும், எந்தவித கிளர்ச்சியும் இல்லாமல் நீங்கள் சுவாசியுங்கள்.

உங்கள் சுவாசத்தை நீங்கள் பேசாமல் அமைதியாய் கவனியுங்கள்.

கண்களை அழகாய் மூடிக்கொண்டு கேளுங்கள்.

கண்ணிமைகள் மிருதுவாய் கண்களை மூடி விடட்டும்.

கண்களில் எந்தவித அழுத்தமும் இல்லாமல், இமைகளை இறக்கி கண்களை மூடுங்கள்.

பின்பு தலை மற்றும் முகம் ஆகியவற்றின் தசைகள் அனைத்தையும் தளர விடுங்கள். சிறு குழந்தையின் முகத்தைப் போன்று தளர்வாய் இருக்கட்டும்.

அனைத்தையும் நீங்கள் பூரணமாய் இளைப்பாறலுக்குள் விட்ட கணத்தில், உங்களுடைய சுவாசம் தானாய் இறுக்கம் தளரும்.

சுயமாய் அது அமைதியாகும்.

இரண்டாவது...

சுற்றிவர இருக்கும் பகுதிகளிலிருந்து வரும் அத்தனை ஓசைகளையும் அமைதியாக கேளுங்கள்.

ஆனால் கேட்கும் எந்த சத்தத்திற்கும் எதிர் வாதம்/எதிர் இயக்கம் ( Reaction ) அடைய வேண்டும்.

அந்த சப்தத்திற்கு எந்தவிதமான சிந்தனையும் தரவேண்டாம்.

வெறும் சாட்சியாளனாய் இருந்து சத்தங்களை கேளுங்கள்

பறவையின் குரலைக் கேளுங்கள், மரத்தை அடித்துச் செல்லும் காற்றோசையை கேளுங்கள், குழந்தையின் அழுகுரலைக் கேளுங்கள், மேல் கீழாக நகரும் சுவாச சலனத்தையும், இதயத்துடிப்பையும் கேளுங்கள்.

பத்து நிமிடம் கேளுங்கள். வேறொன்றுமே செய்து விடக் கூடாது.

கேளுங்கள்... படிப்படியாய், உங்களுக்குள் சாந்தத்தின், அமைதியின் ரீங்காரம் துவங்கும்.

புத்தி அமைதியாகிறது.

கேளுங்கள் புத்தி சாந்தமாகிக் கொண்டிருக்கிறது...

புத்தி சாந்தமாகிவிட்டது, புத்தி முற்றிலும் சாந்தமாகி விட்டது.

ஆழ்ந்த அமைதி உள்ளே உள்ளது. ஆழ்ந்த சாந்தம் உள்ளே உலவுகிறது, அதைக் கேளுங்கள்.

புத்தி சாந்தமாகிக் கொண்டிருக்கிறது.... கேட்டுக் கொண்டேயிருங்கள்... புத்தி ஓசையே அற்ற அமைதிக்குள் நுழைகிறது.

~~ ஓஷோ ~~

Courtesy - Osho's Zorba

நிறைவேற்றிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள்

💜 மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்
கொண்டிருப்பதை நிறுத்துங்கள்

மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள்.

ஏனென்றால் அது ஒன்றுதான் நீ தற்கொலை செய்து கொள்வதிலிருந்து உன்னை காக்கிறது.

நீ இங்கே யாருடைய எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதற்கு பிறக்கவில்லை.

யாருடைய எதிர்ப்பார்ப்புக்கும் நீ பலி ஆகாதே.

உன் எதிர்பார்ப்பிற்கு எவரையும் பலியாக்காதே.

இதைத்தான் நான் தனித்தன்மை என்கிறேன்.

உன் தனித்தன்மையை மதி.

பிறர் தனித்தன்மையையும் மதி.

எப்போதும் எவரையும் உன் தனிப்பட்ட வாழ்வில் குறுக்கிட அனுமதியாதே

அதே போல் எவருடைய தனிப்பட்ட வாழ்விலும் நீ குறுக்கிடாதே.

அப்போதே நீ ஒரு நாள் ஆன்மிகத்தில் மலரமுடியும்.

மாறாக 99 சதவீத மக்கள் வெறுமே தற்கொலை செய்து கொண்டே இருக்கிறார்கள்.

அவர்களுடைய மொத்த வாழ்வும் மிக மெதுவான தற்கொலையன்றி வேறில்லை.

மற்றவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொண்டே இருப்பது.....

சில நாட்கள் அப்பாவின் எதிர்பார்ப்பு,

சில நாட்கள் அம்மாவின் எதிர்பார்ப்பு,

ஒரு நாள் மனைவி மற்றொரு நாள் கணவன், குழந்தைகள்---அவர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

பின் சமூகத்தின் எதிர்பார்ப்பு, அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு,

மத குருமார்களின் எதிர்பார்ப்பு. சுற்றிலும் யாவரும் எதிர்பார்ப்புடனேயே உள்ளனர்.

நீயோ பாவம் எளிய மனிதன் மொத்த உலகமும் உன்னிடம் இதை செய் அதை செய் என்று எதிர்பார்க்கிறது.

உன்னால் அனைவரின் அனைத்து எதிர்பார்ப்பையும் நிறைவேற்றவே முடியாது.

அனைவரும் உன்னிடம் கோரும் எதிர்பார்ப்புகளை பார்த்து நீ பைத்தியம் அடைந்து விட்டாய்.

உன்னால் யாருடைய எதிர்ப்பார்ப்பையும் முழுதாக நிறைவேற்றவே முடிவதில்லை.

யாருமே திருப்தி அடைவதேயில்லை. யாருமே திருப்தி அடையாததால் நீ வீணானவன் தோற்றவன்.

தனக்குள் திருப்தியாக மகிழ்ச்சியாக இருக்க இயலாதவர்களால் மகிழ்ச்சியாக சந்தோசமாக இருக்க முடிவதேயில்லை.

எதை நீ செய்தாலும் மற்றவர்கள் உன்னுடன் திருப்தியடையாமல் இருப்பதற்கு வழி காண்பார்கள்.

ஏனென்றால் அவர்களால் திருப்தி அடைய முடியாது. சந்தோசமாக இருக்க முடியாது.

மகிழ்ச்சி திருப்தி என்பது ஒரு கலை. அதை ஒருவன் கற்றுக் கொள்ள வேண்டும்.

நீ எதை செய்கிறாய் எதை செய்யவில்லை என்பதை பொருத்தது அல்ல அது.

மற்றவர்களை மகிழ்விப்பதை விட நீ மகிழ்ச்சியாக இருக்கும் கலையை கற்றுக் கொள் 💜

💙 ஓஷோ 

உன்னுள் நுழைய தியானம்

♥ எந்த எண்ணத்தையும் உன்னுள் நுழைய விடாமல்

ஆச்சரியத்துடனேயே
இருப்பது தான் தியானம்

நீ ஆச்சரியமாக இருக்கும் போது

உன் மனதில் எண்ணம் புகுந்தால்

நீ யோசிக்க ஆரம்பித்து விடுகிறாய்

இந்த உலகம் முழுக்க ஆச்சரியம் நிறைந்து இருக்கிறது

நீ ஆச்சரியத்தில் சாதாரணமாக இருக்க முடியவில்லை

என்பதால் கேள்விகள் கேட்கிறாய்

கேள்விகளுக்கும் பதில்களுக்கும் முடிவே கிடையாது

ஒரு கேள்வி ஒரு பதிலுக்கு இட்டுச் செல்லும்

ஒரு பதில் ஆயிரம் கேள்விகளுக்கு இட்டுச் செல்லும்

ஆச்சரியம் அற்புதத்துக்கு இட்டுச் செல்கிறது

அதற்கு ஓர் ஆன்மீகப் பெயர்தான் கடவுள்

கடவுள் என்பது அறிந்து கொள்ள முடியாத ஓர் அற்புதம்

கேள்விகள் கேட்பதை விட்டு விட்டு

ஆச்சரியத்தின் மீது கவனம் செலுத்து

வெகு விரைவில் ஆச்சரியம் மறைந்து போய் அற்புதம் தோன்றி விடும்

ஆச்சரியம் என்பது ஒரு சிறு அலை

அற்புதம் என்பது பெருங் கடல்

நீ ஆச்சரியத்திலேயே இருக்கும் போது

அது உன்னை அற்புதத்திற்கு இட்டுச் செல்கிறது

அற்புதம் எல்லையற்றதற்கு இட்டுச் செல்கிறது

அது கடவுளுக்கு இட்டுச் செல்கிறது

ஆனால் உடனே சிந்திக்க மட்டும் ஆரம்பித்து விடாதே

உனக்கு ஏதாவது ஆச்சரியம் தோன்று மானால்

அதனுடனேயே தங்கி விடு

அப்போது ஆழ்ந்த மௌனம் உன்னைச் சூழ்ந்து கொள்ளும்

ஒரு நாள் அந்த ஆச்சரியம் அற்புதத்திற்குள் கரைந்து போகும்

அந்த ஆச்சரியத் தோடு நீயும் கரைந்து போவாய்

யோசிக்க ஆசை வரும்

உன்னுடைய மனது அந்த ஆச்சரியத்தை சிந்தனையாக்கி விடும்

அதனால் அந்த யோசிக்கும் ஆசையிலிருந்து விடுபட்டு நில்

நீயும் ஒரு அற்புதமாகி விடுவாய் ♥

💚 ஓஷோ
தாவோ
மூன்று நிதியங்கள் II 💚

கவனத்தைக் கவர விரும்பாதே.

கவனத்தைக் கவர விரும்பாதே.

உன்னைப் பற்றி யாருமே தெரிந்து கொள்ளாத வகையில் உன் வாழ்க்கையை அமைத்துக் கொள்.

நீ இந்த உலகத்தில் இல்லாதது போலவே உன் வாழ்க்கை இருக்கட்டும்.

உன்னுடைய நடவடிக்கைகள் ஒருவருக்கும் தெரியாமல் இருக்கட்டும்.

நீ இங்கு இருப்பதே ஒருவருக்கும் தெரிய வேண்டாம்.

ஆன்மிகத்தின் வெடிப்பை அப்போதுதான் உன்னால் அடைய முடியும்.

இல்லையென்றால், அகந்தை எப்போதும், ஒரு கடினமான பாறையாகச் செயல்பட்டு, அந்த வெடிப்பைத் தடுத்து நிறுத்தி விடும்.

நீ எதற்காக கவனிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறாய்?

ஏனென்றால், நீ யார் என்பதைப் பற்றி உனக்கு நீயே ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

அப்படியானால், நீ கவனிக்கப்படுவதன் மூலம், நீ யார் என்பது எப்படிப் புலனாகும்?

நீ உன்னைப் பற்றிக் கண்ணாடியில் பார்ப்பதால் தெரிந்து கொள்ள முடியாது.

அவர்கள் உன்னை பாராட்டுகிறார்களோ, விமர்சிக்கிறார்களோ, அந்தக் கண்கள் கண்ணாடியைவிட மேம்பட்டதாக இருக்க முடியாது, நண்பர்கள், எதிரிகள் அனைவருமே கண்ணாடிகள்தான்.

நீ உன்னைப் பற்றி, நேரடியாக, உடனடியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நீ உள்ளுக்குள் செல்ல வேண்டும்.

கவன ஈர்ப்பில்தான் அகந்தை வாழ்கிறது.
அது ஒரு தவறான விஷயம். அதைப் புரிந்து கொண்டு, அதிலிருந்து வெளியே வாருங்கள்.

நீ அதிலிருந்து மீண்டுவிட்டால், வித்தியாசமான ஒரு அமைதியும், நிம்மதியும், சாந்தமும் உனக்கு ஏற்படும்.

இயற்கையான, தங்குதடையற்ற ஒரு பரமசுகம் உனக்குள் பொங்கத் தொடங்கும்.

ஓர் உட்புற நடனம் சம்பவிக்கும். உட்புற நடனம் மட்டுமே, தன்னை மறந்த ஒரு நிலை அங்கே இருக்கும்.

அதை நீ அடையாத வரையில், நீ வாழ்வது போலியான வாழ்க்கை.

நீ யாரையும் ஏமாற்றவில்லை.ஆனால், உன்னை நீயே ஏமாற்றிக் கொள்கிறாய்.

--ஓஷோ--