Sunday 31 December 2017

உண்மையான தியானம்

ஷென் கல்வி முறை..

ஒரு நாள் ஹோஃபுக்குவின் சீடர்களில் ஒருவனை வரவேற்ற ஜிஸோ, "உன்னுடைய ஆசிரியர் என்னக் கற்றுக் கொடுத்தார்?" என வினவினார்.

"என்னுடைய ஆசிரியர் எந்த தீயவைகளைப் பார்க்காமல் கண்களை மூடிக் கொள்ளச் சொன்னார்;

தீயவைகளை கேட்காமல் காதை மூடிக் கொள்ளச் சொன்னார்;

தீய எண்ணங்களை மனதினில் உருவாக்கமல் பார்த்துக் கொள்ளச் சொன்னர்" என்று சீடன் பதிலுரைத்தான்.

"நான் உன்னுடைய கண்களை மூடிக் கொள்ளச் சொல்ல மாட்டேன்" என்ற ஜிஸோ, "ஆனால் நீ எதையும் பார்க்க மாட்டாய்.

உன்னுடைய காதுகளை கைகளால் மூடிக் கொள்ளச் சொல்ல மாட்டேன்,

ஆனால் நீ எதையும் கேட்க மாட்டாய். உன்னுடைய மனதின் எண்ண அலைகளை நிறுத்தச் சொல்ல மாட்டேன்;

ஆனால் நீ எந்த சிந்தனையையும் மனதில் ஏற்படுத்தாமல் இருப்பாய்" என்றார்.

கண் காது  மூக்குகளை மூடுவதால் ஒருவரது எண்ணம் தூய்மையாகாது. எண்ணங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே உண்மையான தியானம் என்றார்.

Thursday 21 December 2017

வாழ்க்கையின் சுவராஸ்யம்.

வாழ்க்கை.. புரியாத புதிர்......                            

ஒரு கிராமம்.
சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டு இருக்கிறான்.

அப்போது, “என்னை காப்பாற்று, காப்பாற்று“ என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாக கதறுகிறது.

’மாட்டேன். உன்னை விடுவித்தால் என்னை விழுங்கி விடுவாய். காப்பாற்ற மாட்டேன்’ என மறுக்கிறான் சிறுவன்.

ஆனால் முதலை, “நான் உன்னை சத்தியமாகச் சாப்பிட மாட்டேன். என்னை காப்பாற்று” என்று கண்ணீர் விடுகிறது.

முதலையின் பேச்சை நம்பி, சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான். அறுத்து முடிப்பதற்குள், சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது .

”பாவி முதலையே இது நியாயமா? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க,

“அதற்கென்ன செய்வது, பசி வந்தால் பத்தும் பறந்துவிடும். இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்று சொல்லிவிட்டு விழுங்க ஆரம்பித்தது முதலை.

சிறுவனுக்கு சாவது பற்றிக்கூட கவலை இல்லை. முதலை ஏமாற்றி விட்டதோடு மட்டும் அல்லாமல், நன்றிகெட்டதனத்தை, ’இதுதான் உலகம்’ என்று சொல்வதை அவனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான். இதுதான் உலகமா?. அதற்கு பறவைகள், ”எத்தனையோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் நாங்கள் முட்டையிடுகிறோம். ஆனாலும், பாம்புகள் முட்டைகளை குடித்து விடுகின்றன. அதனால், இதுதான் உலகம்” என்று சொல்கின்றன.

அங்கு மேய்ந்து கொண்டு இருக்கும் கழுதைகளைப் பார்த்து கேட்கின்றான். ”நாங்கள் இளமையாக இருந்த காலத்தில் அதிகபடியான சுமைகளை சுமக்க செய்து, அடித்து, சக்கையாக வேலை வாங்குகிறார்கள். எங்களுக்கு வயதாகி, நடை தளர்ந்தவுடன், தீனி போட முடியாது என்று விரட்டிவிடுவதால், முதலை சொல்வது சரிதான்” என்கின்றன.

ஆடுகளை கேட்கிறான். ”எங்களுக்கு இரை போட்டு வளர்ப்பவர்களே, எங்களை இரையாக்கி கொள்வதால், முதலை சொல்வது சரிதான்” என ஆமோதிக்கின்றன.

கடைசியாக ஒரு முயலைப் பார்த்துக் கேட்கின்றான். “இதுவல்ல உலகம். முதலை பிதற்றுகிறது” என முயல் சொல்ல, முதலைக்கு கோபம் வந்துவிடுகிறது.

‘சிறு முயல் உனக்கு என்ன தெரியும்?’ என்று முதலை சொல்லவும்,

’நீ பேசுவது சரியாக புரியவில்லை, தெளிவாக பேசு’ என்கிறது முயல்.

காலை விட்டால் சிறுவன் ஓடிவிடுவான் என்ற முதலையைப் பார்த்து, முயல் பெரிதாக சிரித்தது.

உன் வாலை வைத்து அவனை அடித்து விடமுடியாதா? ஒரே அடியில் அவனை வீழ்த்திவிடமுடியும் உன்னால் என்றவுடன், கர்வத்துடன் காலை விட்டுவிட்டு, இதுதான் உலகம் என பேச துவங்கியது முதலை.

முயல் சிறுவனைப் பார்த்து ‘நிற்காதே! ஓடிவிடு’ என்கிறது.

சிறுவன் ஓடிவிடுகிறான். வாலால் அடித்து விடலாம் என நினைத்த முதலைக்கு ஏமாற்றமாகப் போய்விடுகிறது, வலையில் சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை பிடித்தது நினைவுக்கு வருகிறது.

கோபத்துடன் முயலைப் பார்க்க, ”புரிந்ததா? இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்கிறது முயல்.

தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்துவர, அவர்கள் முதலையை கொன்றுவிடுகின்றனர்.

சிறுவனோடு வந்த வளர்ப்பு நாய், புத்திசாலி முயலை பாய்ந்து பிடிக்கிறது. சிறுவன் காப்பாற்றுவதற்குள் முயலை நாய் கொன்றுவிடுகிறது.

உயிராக வளர்த்த நாய்தான் என்றாலும், உயிரைக் காப்பாற்றிய முயலை கொன்றுவிட்டதை; அவனால் சகித்துக் கொள்ளமுடியவில்லை.
கல்லெடுத்து எறிந்து நாயை விரட்டிவிடுகிறான்.

உதவி செய்தவர்களுக்கு உபத்திரவம் ஏற்படுவதும், நேசித்தவர்களையே வெறுக்க நேரிடுவதும்  அவனை குழப்பிவிடுகிறது.

இதுதான் உலகமா?
இதுதான் வாழ்க்கையா? என்ற கேள்விக்கு பதில் சொல்வார் யாருமில்லை!.

முன்னுக்குப்பின் முரணனானதாகவும், எதிரும் புதிருமான நிகழ்வுகள்தான் வாழ்க்கை!.

அடுத்த நொடிகளில் நடக்க இருப்பது, அதிர்ச்சிகளா? ஆச்சரியங்களா? என அறியமுடியாமல் இருப்பதுதான் வாழ்க்கையின் சுவராஸ்யம்.

      "வாழ்க்கையை புரிந்துகொள்ளமுடியாது. புரிய வைக்கவும் முடியாது. (எதிர் வருவதை) எது நடந்தாலும் ஏற்றுக்கொண்டு, முன்னேறுவதுதான் வாழ்க்கை"....

Wednesday 20 December 2017

வார்த்தை

திருடுவதை விட மோசமானது வதந்தி! வார்த்தைகளின் சக்தியை உணர்த்தும் கதை 😥😥😥🙏🙏

`ஒருவரைப் பற்றிய வதந்தியையோ, எதிர்மறையான கருத்துகளையோ ஒருபோதும் பரப்பாதீர்கள்: அது அவர்களின் மரியாதையை மட்டுமல்ல, உங்களின் மரியாதையையும் குறைத்துவிடும்’ என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும் பேச்சாளருமான பிரையன் கோஸ்லாவ் (Brian Koslow). `பெருசா விளம்பரமெல்லாம் இல்லை... மௌத் டாக்லேயே அது நல்ல படம்னு சேதி பரவி, நல்லா ஓட ஆரம்பிச்சிருச்சு’ என்று ஏதோ ஒரு படத்தைப் பற்றி, யாரோ பேசுவதைக் கேட்டிருப்போம். நேர்மறையான விமர்சனங்களுக்கே நம் மக்களிடம் இப்படி ஓர் அபாரமான வரவேற்பென்றால், எதிர்மறையான விமர்சனம், கருத்துகள், வதந்தி ஒருவரை என்னவெல்லாம் செய்யும்? நினைத்தாலே மனதை என்னவோ செய்கிறது அல்லவா! மோசமான ஒரு வதந்தியால் ஒருவர் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டிருப்பார், என்னவிதமான அவஸ்தைகளையெல்லாம் எதிர்கொண்டிருப்பார்? பேசுவதற்கு முன் யாருமே இது குறித்து யோசிப்பதில்லை. உண்மையில், நாம் உதிர்க்கும் வார்த்தைகளைத் திரும்ப அள்ளவே முடியாது என்பதுதான் நிதர்சனம். அதனால்தான், `வார்த்தைகளை அளந்து, தெரிந்து பேச வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார்கள் பெரியவர்கள். இதை எளிமையாக விளக்குகிறது இந்தக் கதை...

அந்த முதியவர், பணி ஓய்வு பெற்றவர். வீட்டில் தனிமையில் இருந்தார். மனைவி இல்லை. பிள்ளைகளும் இல்லை. படித்தவர், ஒருகாலத்தில் பெரிய பதவியிலிருந்தவர்தான். ஆனால், கொஞ்சம் துடுக்குத்தனம் நிறைந்தவர். மற்றவர்களை எளிதாகக் குறைகூறுபவர். அவருடைய பக்கத்து வீட்டுக்கு ஒருவன் குடிவந்தான். அவனுக்கு `ஆக்டிங் டிரைவர்’ வேலை. யாராவது தங்கள் காரை ஓட்ட டிரைவர் வேண்டும் என்று அழைக்கும்போது போவான். மற்ற நேரங்களில் வீட்டிலிருப்பான். இவருக்கு அவன் மேல் சந்தேகம். திடீரென்று நள்ளிரவில் கிளம்பிப் போகிறான்... காலை 8 மணிக்கு வீடு திரும்புகிறான். சில நாள்களில் மாலையில் போகிறான்... இரவில் வீடு திரும்புகிறான். நேரம் கெட்ட நேரத்துக்குப் போகிறான். இவரிடம் முகம் கொடுத்துக்கூடப் பேசுவதில்லை. இது ஒன்றே அவருக்குப் போதுமானதாக இருந்தது. ஒருவேளை அவன் திருடனாக இருப்பானோ..! இந்த எண்ணம் நாளாக நாளாக வலுப்பெற்றது.

காலை, மாலை வேளைகளில் பூங்காவில் உலாவப் போனபோது, தன் நண்பர்களிடம் அவனைப் பற்றிச் சொன்னார். காய்கறி, பழம் விற்க வருபவர்களிடம் பக்கத்து வீட்டுக்காரனைப் பற்றிய சந்தேகத்தைச் சொன்னார். `அந்த ஆள் திருடன்’ என்கிற வதந்தி மெள்ளப் பரவியது. ஒருகட்டத்தில், போலீஸாரே அவனை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து கொண்டுபோனார்கள். ஆனால், அவன் அப்பாவி, உண்மையிலேயே அவன் ஒரு டிரைவர்தான் என்பது நீருபணம் ஆனதும், அவனை விடுவித்துவிட்டார்கள்.

ஆனால், அந்த டிரைவருக்கு மன உளைச்சல் அதிகமானது. `நான் என்ன திருடனா... என்னைப் போய் கைதுசெய்துவிட்டார்களே... எல்லாம் இந்தப் பக்கத்துவீட்டு பெரியவரால்தானே நடந்தது’ என்கிற கோபமும் ஆற்றாமையும் எழுந்தது. அவன், முதியவரின் மேல் மானநஷ்ட வழக்குத் தொடுத்தான். வழக்கு விசாரணைக்கு வந்தது.

நீதிபதி விசாரித்தபோது முதியவர் இப்படிச் சொன்னார்... ``நான் யாரையும் காயப்படுத்தவில்லை. வாய் வார்த்தையாக எதையோ சொன்னேன்... அதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.’’

டிரைவரோ, தன் தரப்பு நியாயத்தையும், தான் எப்படியெல்லாம் போலீஸால் அழைக்கப்பட்டான் என்பதையும், தனக்கு நேர்ந்த அவமானம் மனதை எப்படியெல்லாம் பாதித்தது என்பதையும், எல்லாம் பெரியவர் பரப்பிய வதந்தியாலும்தான் நடந்தது என்பதையும் எடுத்துச் சொன்னான்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி கொஞ்சம் விவரமானவர். டிரைவரின் நிலையும், பெரியவரின் வீம்பும் அவருக்குப் புரிந்தது. ``சரி... இந்த வழக்குக்கான தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைக்கிறேன்’’ என்றவர், முதியவரை அழைத்தார். ``நீங்கள் ஒரு காரியம் செய்யுங்கள். உங்கள் பக்கத்து வீட்டுக்காரனைப் பற்றி நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களையும் ஒரு காகிதத்தில் எழுதிவைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டுக்கு நீங்கள் காரில்போகும்போது, அந்த பேப்பரை கிழித்துத் துண்டு துண்டாக்குங்கள். போகிற வழியெல்லாம் ஒவ்வொரு துண்டாகப் போட்டுக்கொண்டே செல்லுங்கள். நாளை காலையில் வாருங்கள்’’ என்றார்.

அடுத்த நாள் அந்த முதியவர், டிரைவர் இருவரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். நீதிபதி, முதியவரை அழைத்தார். ``நான் சொன்னதுபோலச் செய்தீர்களா?’’

``ஆமாம் ஐயா.’’

``நேற்று நீங்கள் வீசியெறிந்த காகிதத் துண்டுகள் அனைத்தையும் சேகரித்துக்கொண்டு வாருங்கள். அதன் பிறகு தீர்ப்பு சொல்கிறேன்.’’

``அது எப்படி ஐயா முடியும்? அந்தக் காகிதத் துண்டுகளையெல்லாம் காற்று எங்காவது கொண்டுபோய் போட்டிருக்கும். அதைப் போய் எப்படிக் கண்டுபிடிப்பது?’’

``முடியாதில்லையா... அப்படித்தான் நீங்கள் சொன்ன வார்த்தைகளும். திரும்பப் பெற முடியாதவை. ஒருவரின் வாழ்க்கையையே பாதிக்கும் அளவுக்கு ஆற்றல் கொண்டவை. ஒருவரைப் பற்றி நல்லவிதமாக உங்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லையென்றால், அவரைப் பற்றி எதையுமே சொல்லாதீர்கள். நம் வாய்க்கு நாம்தான் எஜமானனாக இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் சொல்லும் வார்த்தைகளுக்கு நாம் அடிமைகளாக மாறாமல் இருப்போம். உண்மையில், வதந்தி என்பது ஒரு திருடனைவிட மோசமானது. ஏனென்றால், அது ஒரு மனிதனின் மதிப்பு, மரியாதை, கண்ணியம், நல்ல குணம் அனைத்தையும் களவாடிவிடுகிறது. அவற்றை அந்த மனிதருக்கு யாராலும் திரும்பத் தர முடியாது. ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்... உங்கள் நடை தடுமாறினால், எப்படியாவது பேலன்ஸ் செய்து சரிசெய்துவிடலாம்; உங்கள் நாக்குத் தடுமாறினால், உங்கள் வார்த்தைகளை திரும்ப மீட்கவே முடியாது.’’

இந்த வழக்கின் தீர்ப்பு எப்படியும் இருக்கட்டும்... நீதிபதி முதியவருக்குச் சொன்ன அறிவுரை மிக முக்கியமானது, இல்லையா?

Monday 18 December 2017

நம்பிக்கை

`ஒருவரை நம்பலாமா, வேண்டாமா என்பதைக் கண்டுபிடிப்பதற்குச் சிறந்த வழி அவரை நம்புவதுதான்’ என்று சொல்லியிருக்கிறார் எர்னெஸ்ட் ஹெம்ங்வே (Ernest Hemingway). மனிதர்களை நம்புவதில் மட்டுமல்ல... எதன் பொருட்டாக இருந்தாலும், அது ஆழமானதாக இருக்கவேண்டியது அவசியம். `நம்பினார் கெடுவதில்லை’ தொடங்கி `என்னை நம்பிக் கெட்டவர்கள் யாரும் இல்லை... நம்பாமல் கெட்டவர்கள் ஏராளம்’ என்கிற எம்.ஜி.ஆரின் பிரபல வசனம் வரை நம்பிக்கை உணர்த்தும் செய்திகள் ஏராளம். அழுத்தமாக, தீவிரமாகக்கூட வேண்டாம்... ஒரே ஒரு கணம் ஒன்றில் நம்பிக்கைவைத்தால்கூட அது நமக்கு அள்ளித்தரும் அற்புதம் அபாரமானது. அது எப்படி என்பதை விளக்குகிறது இந்தக் கதை

அது இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த காலகட்டம். அமெரிக்காவின் கப்பற்படையைச் சேர்ந்த வீரன் அவன். ஓர் அசந்தர்ப்பமான சூழ்நிலையில் தன் படைப் பிரிவிலிருந்து பிரிந்துவிட்டான். ஒரு சின்னஞ்சிறிய தீவில் மாட்டிக்கொண்டான். `படைப்பிரிவைத் தேடி, அவர்களோடு சேர்ந்துகொள்ள வேண்டுமே...’ என்கிற ஏக்கம் ஒருபுறம். `எதிரிகளிடம் மாட்டிக்கொண்டுவிடக் கூடாதே’ என்கிற பயம் ஒருபுறம்.

ராணுவ வீரன்

அந்த கப்பற்படை வீரன் கடற்கரையோரமாக நடந்தான். அவனிடம் துப்பாக்கி இருந்தது... உணவும் கொஞ்சம் நீரும்கூட இருந்தது. ஆனால், எதிரிகள் குறித்த பயம் மட்டும் அவனைப் படுத்தியெடுத்தது. கொஞ்சம் தூரம் நடந்திருப்பான். ஒரு சத்தம் அவனை உலுக்கியது. காதுகளைக் கூர்மையாக்கிகொண்டு சத்தத்தைக் கவனித்தான். செடிகளை விலக்கிக்கொண்டு, சருகுகளை மிதித்துக்கொண்டு சிலர் வேகமாக முன்னேறி வரும் சத்தம். அவனுக்கு பயம் உறுதியாகிவிட்டது. நிச்சயம் வருபவர்கள் எதிரிகளாகத்தான் இருக்க வேண்டும். தன்னந்தனியாக இருக்கிறான். கூட அவன் தோழர்கள் யாரும் இல்லை. என்ன செய்வது. ஒளிவதைத் தவிர வேறு வழியில்லை.

அவசர அவசரமாக ஒளிந்துகொள்ளத் தோதான இடம் ஒன்றைத் தேடினான். அருகில் ஒரு குன்று இருந்தது. அதன் மேல் வரிசையாகச் சில குகைகள் இருப்பது தெரிந்தது. விறுவிறுவென்று அந்தக் குன்றில் ஏறினான். நான்காவதாக இருந்த குகைக்குள் நுழைந்து உள்ளே போய் ஒடுங்கி, உட்கார்ந்துகொண்டான். கொஞ்சம் வசதியாக இருந்தது குகை; பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தான். கப்பற்படையில் இருந்ததால், ராணுவ நடைமுறைகளையும் செயல்பாடுகளையும் அவன் நன்கு அறிவான். வருபவர்கள் நடந்தவிதத்தை வைத்து அவர்கள் யாரையோ தேடி வருகிறார்கள் என்பதை அவன் உணர்வு சொன்னது. `அப்படித் தேடிவரும் பட்சத்தில் நிச்சயமாக இந்தக் குகைகளையும் விட்டுவைக்க மாட்டார்கள். அப்படியானால் என்னைக் கண்டுபிடித்துவிடுவார்கள். கண்டுபிடித்துவிட்டால்..? அவ்வளவுதான் உயிர் உடலில் தங்காது’ இப்படி நினைத்ததும் அவன் உடல் நடுங்கியது.

`இப்போது என்ன செய்வது? நாம் தப்பிப்போம் என்று நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. பிரார்த்தனை... அதை மட்டும்தான் இப்போது செய்ய முடியும்.’ அவன் கண்களை மூடி பிரார்த்தித்தான். `கடவுளே... என்னை என் எதிரிகளிடமிருந்து காப்பாற்று. உன்னை மனமார நம்புகிறேன்... மனமுருக வேண்டுகிறேன்...’ அவன் பிரார்த்தித்த அந்த ஒரு கணத்தில், தான் நிச்சயம் காப்பாற்றப்படுவோம் என்று முழுமனதோடு நம்பினான்.

`ஆனால்... அது என்ன..? கும்பலாகச் சிலர் அந்தக் குன்றின் மேல் ஏறிவருவதுபோலச் சத்தம் கேட்கிறதே..! நிச்சயம் அவர்கள்தான்... எதிரிகள்தான். அய்யோ... நான் என்ன செய்வேன்?’

இப்படி அவன் யோசித்துக்கொண்டிருந்தபோதே அதைப் பார்த்தான். அது ஒரு சிறிய சிலந்தி. உள்ளே ஒரு மனிதன் இருக்கிறானே என்கிற பயமில்லாமல், அது பாட்டுக்கு வேலையில் இறங்கியது. அந்த குகையின் வாசலில் ஒரு வலையைப் பின்ன ஆரம்பித்தது. அந்த வீரனுக்கு அது வேடிக்கையாக இருந்தது.

`நான் என்ன கேட்டேன்... கடவுள் என்ன செய்கிறார்? கல்லாலான ஒரு சுவரைக் கொண்டு இந்தக் குகை வாசலை கடவுள் மூடியிருக்க வேண்டாமா? ஒரு சிலந்தியை அனுப்பிவைத்திருக்கிறாரே...’ என்று நினைத்தான்.

இப்போது சில படை வீரர்கள் வரும் சத்தம் நன்றாகக் கேட்டது. அவர்கள் மேலே வந்துவிட்டார்கள். முதல் குகையருகே அவர்கள் நிற்பதும் அதற்குள்ளே ஓர் ஆள் நுழைந்து, `இங்கே யாரும் இல்லை’ என்று சொல்வதும் அவன் காதில் விழுந்தது. அவனுக்கு உடல் தூக்கிவாரிப்போட்டது. குகையின் கடைசி நுனிக்குப்போய் கற்பாறையை ஒட்டி உட்கார்ந்துகொண்டான்.

அந்தச் சிலந்தி வெளியே கேட்கும் ஆள் அரவம், உள்ளே அவன் இருப்பது எதையும் கண்டுகொள்ளவில்லை. அதுபாட்டுக்கு வலை பின்னுவதில் பிஸியாக இருந்தது.
அவர்கள் இரண்டாவது குகைக்குள் நுழைந்து தேடிப் பார்த்தார்கள். எதுவும் அகப்படாமல் அடுத்த குகைக்குள் நுழைந்தார்கள். அதற்கடுத்து அவர்கள் இவனிருக்கும் குகைக்குள்தான் வந்தாக வேண்டும். எப்படியும் ஒருவன் உள்ளே வந்து பார்க்கத்தான் போகிறான். `கடவுளே...’ அவன் கண்களை மூடிக்கொண்டான். அவன் இதயம் வேகமாகத் துடித்தது. அவனிருந்த குகை வாசலில் சிலர் நிற்பதும், `நிச்சயம் இதுக்குள்ள யாரும் இருக்க மாட்டாங்க’ என்று ஒருவன் சொல்வதும் கேட்டது. அவர்கள் குகைக்குள் தேடாமலேயே அங்கிருந்து நகர்ந்துபோனார்கள். அன்றைக்கு அந்த வீரன் உயிர்பிழைத்தேவிட்டான்.

இப்போது அவனுக்குக் காரணம் புரிந்துவிட்டது. குகை வாசலில் கூடுகட்டிக்கொண்டிருக்கிறது ஒரு சிலந்தி. அப்படியானால், சிறிது நேரத்துக்கு முன்னால் யாரும் அதற்குள் நுழைந்திருக்க வாய்ப்பில்லை. இப்படி நினைத்துத்தான் எதிரிகள் உள்ளே நுழையாமல் சென்றுவிட்டார்கள்.

அவன் கண்களை மூடிக்கொண்டு சொன்னான்... `கடவுளே... மிக்க நன்றி. என்னை மன்னித்துவிடு கடவுளே... ஒரு கல் சுவரைவிட நீ அனுப்பிய சிலந்தியின் வலை வலுவானது என்பதை நான் மறந்துவிட்டேன்.’

Saturday 16 December 2017

எதிர் வினை உண்டு.

ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு.
For Every action, there is an equal and opposite reaction
எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்வோம்.
பிரபஞ்சத்தில் ஒலி, அதிர்வு இல்லாத இடமே கிடையாது. ஒலியினால் அதிர்வும், அதிர்வினால் ஒலியும் ஏற்படும் அளவிற்கு இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கிறத
ு.
பழங்காலத்தில், விஞ்ஞானம் இல்லாத காலத்தில் நமது ரிஷிகள், ஞானிகள் இயற்கை நியதிகள் பற்றியும், கர்மா பற்றியும் சொல்லிவிட்டு போயிருக் கிறார்கள்.
தற்காலத்தில் விஞ்ஞானி நீயூட்டன் ஒரு கண்டுபிடிப்பை கூறியது அது கர்மா என்னும் நியதியை உறுதி செய்கிறது.( Every action, there is an equal and opposite reaction )
பிரபஞ்சத்தில் அனைத்தும் ஒரு வட்டப்பாதையில் ( Circle ) பயணிக்கின்றன. தான் புறப்பட்ட இடத்திற்கு திரும்பி வரும்போது "போனது திரும்பிவருகிறது"
( Reciprocation )
பிரபஞ்சத்தில் ஒவ்வொரு படைப்பும் அதிர்வுகளின் ஆரம்ப புள்ளி.
ஒவ்வொரு மனிதனின் எண்ணம், சொல், செயல்களும் அதன் தன்மைக்கேற்ப அதிர்வுகளை (Action) ஏற்படுத்தும் திறன் கொண்டவை. நமக்குத் தெரியாமலே தானியங்கியாக இது நடந்து கொண்டிருக்கிறது. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டால
ும் இது நடந்துகொண்டிருக்கும்.
இந்த அதிர்வுகள் தனது வட்டப் பாதையில் பல்வேறு இயற்கை நியதிகளுக்கு உட்பட்டு அதன் தன்மைக்கேற்ப நன்மையாகவோ, தீமையாகவோ, பலமாகவோ, பலவீனமாகவோ ஆரம்பமான இடத்துக்கு வருகின்றன. இதை எதிர் சக்தி (Reaction) என்று சொல்லலாம். நாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும் அது நடந்து கொண்டிருக்கும்.
பொதுவாக ஒருவருடைய எண்ணம், சொல், செயல் வேறு ஒருவரை அநியாயமாய் பாதிக்குமானால் அவரது வேதனைகள் கர்மாவை வலிமை யாக்கி தண்டிக்கிறது.
அதேபோல் ஒரு வருடைய எண்ணம், சொல், செயல் வேறு ஒருவருக்கு நன்மை செய்து அதனால் அவர் வாழ்த்தும் போது கர்மா வலிய வந்து உதவுகிறது.
நமது நினைப்பு, பேச்சு, செயல் எல்லாம் ஒரு சக்தி ( அதிர்வு ) உற்பத்தியாக காரணமாகிறது. இந்த சக்திக்கேற்ற எதிர் சக்தி புதிய வேகம், பெறும் தன்மை அடைகிறது. தனது எண்ணம், சொல், செயல் நன்மையை நோக்கும் போது நன்மை ஏற்படும்
பிரபஞ்சத்தில் எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையது. ஒவ்வொரு செயலும் அடுத்த செயலுக்கு காரணமாகிறது. அது அப்படியே தொடர்ந்து, முதல் செயல் கடைசி செயலுக்கு காரணமாகிறது. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாம் சங்கிலித் தொடரானது.
செயலுக்கேற்ற பலன் வராமல் போகாது. செயலின் நோக்கம், அதற்கு செலவிட்ட சக்தி அதற்கேற்ற பலனைத் தரும்.
எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்வோம்.
நமது சூழ்நிலையை நமது ஆழமான எண்ணங்கள் தான் தருகிறது. நமக்கு என்ன வேண்டுமோ அதே எண்ணமாய் இருக்க வேண்டும்.

வானம் கூட எல்லை இல்லை

எண்ண அலைகளின் சக்தியும் ஆழ்மன ஈடுபாடும்:
உலகில் நாம் காணும்அனைத்து பொருள்களும்
அதிர்வுகள் என்கிற அலை ரூபங்களாக தான்இருக்கின்றன
இந்த உண்மையைஅணு
விஞ்ஞானிகளும் கண்டறிந்து சொல்லி
இருக்கிறார்கள். அணுவின் இயக்க தத்துவமே அது தான்.
எதை சாதிக்க விரும்புகிறோமோ
அதை சாதிக்க முடியும் என ஆழ்மனதில் முதலில் அழுத்தமான இமேஜை (உருவத்தை)
ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் . அதற்காண தீர்வு வழி முறைகள் ஆழ்மனம் பெற்றுத் தரும்
ஏதாவது ஒன்றை அடைய
வேண்டும் என்று நாம் விரும்புகிறோம் அதுவெறும் ஆசையாய் இருப்பதானால் பயன்இல்லை.
அந்த விருப்பமானது நிறைவேற்ற
முயற்சிதேவை. சரிமுயற்சி செய்கிறோம்.எப்ப
ோது சாத்தியப்படும்." விரும்பியதை அடைய முடியும்என்கிற நம்பிக்கை இருந்தால் தான்
முயற் சியும் சாத்திய மாகிறது."
மின்அலைகள்பரவி சென்று பொருள்களைபாதிப்படைய செய்வது போல நமது எண்ண
அலைகளும் பரவி சென்று பொருள்களைபாதிக்கின்றன.
அணைத்து பொருள்களும் அலை
வடிவங் களாகத் தான் இயங்கி கொண்டிருக்கின்றன.
நமது எண்ணங்களும் அலை வடிவில்
நம்மை சுற்றிலும் வியாப்பித்திருக
்கின்றன.
வலிமையான எண்ணங்களின்மூலம் நம்மை
சுற்றி உள்ளவர்களிடம் நம்மால் பாதிப்பினை
ஏற்படுத்த முடியும்.
ஆழ்மனதைபயன்படுத்த
தெரிந்து கொண்டால் நமக்கு அரிய சேவைகள்
புரிய அது எப்போதும் தயாராக
இருக்கிறது.
ஆழ்மனதை பயன்
படுத்தியவர்களே உன்னதமான நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள்.
மனிதனின் எண்ண அலைகள்
தன்னைச் சுற்றியுள்ள பொருள்களை
பாதிக்கும் சக்தி 'சைகோகைனோஷிஸ்'
கற்பனையும் அழுத்தமான எண்ணங்களும் காந்த சக்தி
போன்ற ஒரு சக்தியைநம் ஆழ் மனதில்
ஏற்படுத்துகிற வலிமை படைத்தவைகளாக
இருக்கின்றன.
மனப்பாடம் அழுத்தமாக
இல்லாத போது காரியங்கள் நடப்பதில்லை.ஆழ்
மனசக்தி பெற உதவும் முதல் நண்பன்
தன்னம்பிக்கை என்றால், பெற்றதை இழக்க சதி
செய்யும் முதல்எதிரி அகம்பாவம்.
உண்மையான உயர் உணர்வு நிலை பெற்றவர் கர்வத்தின் வசம் சிக்கிக் கொள்வதில்லை.கர்வம் பிரபஞ்ச சக்தியுடம் நமக்குள்ள
தொடர்பைத் துண்டித்து விடுகிறது.
ஆழ் மனசக்திகள்எந்த ஒருவருக்கும் தனியே பிரத்தியேகமாக தரப்படும் பரிசு அல்ல. அவை முயன்றால் எல்லோரும்அடையக் கூடிய
எல்லையில்லாத பொக்கிஷம்.
அப்படி
இருக்கையில் கர்வம் அர்த்தமில்லாதது
ம்கூட.,
தனிமனிதனானாலும்
சமூகமானாலும்ஒரு விஷயத்தை அழுத்தமாக
எண்ணுகிற போது அந்த எண்ணங்களின்
அடிப்படையில் காரியங்களும்நனை பெறத்தொடங்குகின்றன.
மனதில் அன்பு இருந்தால், அன்பு
மிக்க சமுதாயம் உருவாகும்
.எண்ணுதல்முடிதல் வேண்டும் -
நல்ல சிந்தனை வளம்
பெற வேண்டும்.
வெற்றி பெற்றிட வேண்டும்–
உலகிற்குவேதத்தை உணர்த்திட வேண்டும்.
உடல்நலம் காத்திட வேண்டும் -
சிறந்தமருத்துவம் தேர்ந்திடவேண்டும்
அன்பும்கருணையும் வேண்டும் -
அதற்கு அறிவைஅறிந்திடல் வேண்டும்.
கலைகளைகற்றிடவேண்டும் -
நல்ல நட்பினை பெற்றிடவேண்டும்.
-.* ஒவ்வொரு மனிதனும் பூரண
உடல்நலம்,மனவளம் பெற வேண்டும்.*
ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றியும்,இயற்கையை பற்றியும் தெளிந்தஅறிவை பெறவேண்டும்.
* பேறாற்றலான இறைநிலைப்
பற்றியும், அதன் இயக்க இரகசியத்தையும்
எல்லாமனிதரும் உணர வேண்டும். *
ஒவ்வொரு மனிதனும் தன் கடமையை
உணர்ந்து சமுதாயத்தோடு இணங்கிஉதவி
செய்து வாழ வேண்டும்.*
பாரதம் வளமான
பூமியாக மாற வேண்டும்.
* தனிமனித
அமைதி, குடும்ப அமைதி மூலம் உலக
அமைதிபெற வேண்டும்.
* உலக மக்கள்
அனைவரும் சித்தர்கள் வாழ்ந்து வழிகாட்டிய
"இறவாமை"எனும் "மரணமிலாப் பெருவாழ்வு"
வாழ வேண்டும்.(வள்ளலார்)
பிரார்த்தனைக்குப் பலன் தரும்.யார்
பிரார்த்தனைக்குப் பதில் சொன்னார்கள் என்பதுவேறுபடும்.
எந்தசக்தி இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியதோ,
எந்த சக்தியால் இந்த பிரபஞ்சம்
முறையாகஇயங்கு கிறதோ அந்த சக்தியுடன்தொடர்பு கொள்ள முடிந்தவர்களுக்கு அறிய
முடியாதது இல்லை.செய்ய முடியா தது
இல்லை. அவர்களுக்கு வானம் கூட எல்லை இல்லை.