முதலில் பிரதான அடுக்கான உடல் பார்த்தோம். அடுக்கான பிராணன் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
உடலில் உயிர் நிலைக்க பிராண அவசியம். நல்லவன்,கெட்டவன், உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என வேறுபாடின்றி யாவரும் உயிர் வாழ்வது பிராணனின் உதவியால் தானே.
இறைவழிபாடு,தியானம் செய்வதன் மூலம் அதிக சக்தி பெறுகிறோம்.ஆனால் அந்த சக்தி நம்மிடம் பொருளாக வரவில்லை.சக்தி அலைகளாக வருகிறது.எனவே கண்ணால் காண முடியவில்லை.அந்த சக்தி உடலில் எங்கேனும்,அல்லது வேறு எங்காவது வைத்துக்கொள்ளலாம்.அது அப்படி வராமல் சக்தி அலைகளாக பிராண சரீரத்தில் சேர்கிறது.எனவே பிராண சரீரம் வலுவாக இருந்தால் மட்டுமே வரும் சக்தியைச் சேமிக்கவும், தேவைக்கு அங்கிருந்து உபயோகப்படுத்தவும் செய்யலாம்.
உதாரணமாக ஒரு டம்ளரில் பெரிய பாத்திரத்தில் உள்ள நீரை மேலிருந்து ஊற்றினால் அதில் மிக குறைவான நீர் மட்டுமே தங்கும்.வந்த தண்ணீர் அதிகம் ,நீர் ஊற்றப்பட்ட கிளாஸ் மிக சிறியது .அது போல் உணவு,உணர்வு இவற்றில் முறையின்றி வாழும் நம்முடைய பிராண சரீரம் போதிய வலுவின்றியே இருக்கும்.
புதிதாக ஒரு வீட்டிற்கு குடிபோகும் முன் எப்படி அந்த வீட்டை ,தூசி தட்டி வெள்ளை அடித்து வாழ தகுந்ததாக்கி அதன் பின் குடிஎருவோமோ அது போல் முதலில் நாடி ம்சுத்தி என்ற பயிற்சி செய்ய வேண்டும்.நமது உடலில் 72000 நாடி நரம்புகள் இருப்பதாக யோகசாஸ்திரம் கூறுகிறது.நாடி சுத்தி பயிற்சியின் மூலம் நாடிகள் தூய்மை அடைவதோடு ரத்தமும் சுத்தமாகும்.ஞாபக சக்தி கூடும்.முகத்தில் ஒளி உண்டாகும். நாடிகள் சுத்தமாகாமல் குண்டலினி யோகப் பயிற்சியில் இறங்கக்கூடாது என யோகநூல்கள் சொல்கின்றன.
நாம் அனேக தடவைகள் சில உறுதிமொழிகளை, குறிப்பாக ஒவ்வொரு புத்தாண்டின் போதும் அநேக முடிவுகளை எடுக்கிறோம் ஆனால் மறு நாள் தூங்கி எழுந்ததும் அவற்றை மறந்து விடுவோம்.அல்லது அவற்றை தொடர்ந்து செய்ய மாட்டோம்.இதற்க்கு காரணம் வைராக்கிய குறைவு நல்ல பிராணசக்தி உள்ளவர்கள் மிகுந்த வைராக்கியம் உள்ளவர்களாகவும் எந்த செயலையும் சிறப்பாக செய்யக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
இன்று அநேகர் பிராணசக்தியைக் கொண்டு பல அற்புதங்கள் செய்கிறார்கள்.பிராண சக்தியினால் வியாதிகளைக் குணமாக்குகிறார்கள்.
நாம் இயல்பாகவே உள்ளே இழுக்கும் மூச்சை விட அதிக மூச்சை வெளியே விடுகிறோம்.சுவாசம் எப்போதும் மூக்கின் இரண்டில் ஒரு துவாரத்தின் வழியாகவே நடைபெறும்.அது இரண்டு மணி நேரத்திற்கொருமுறை மாறும்.
வலதுபக்கம் சூரிய கலை ,இடது புறம் சந்திரகலை எனப்படும்.
இடம் வலமாக,வலம் இடமாக மாறும்போது சில நொடி,நிமிடம் இரண்டு மூக்கு துவாரத்தின் வழியாகவும் சுவாசம் நடக்கும் அதற்கு சுழுமுனை எனப் பெயர்.
திங்கள்,புதன்,வெள்ளி,வளர்பிறை வியாழன் நாட்களில் அதிகாலை 4 முதல் 6 மணிவரை இடது புறம் சுவாசம் நடக்கும்.
செவ்வாய்,சனிக்கிழமை,ஞாயிறு,தேய்பிறை வியாழன் நாட்களில் அதிகாலை 4 முதல் 6 மணிவரை வலது புறம் சுவாசம் நடக்கும்.
பின் இரண்டு மணி நேரத்திற்கொருமுறை மாறும்.
சூரியகலை (வலது) நடக்கும் போது செய்ய வேண்டிய காரியங்கள் :-
கடினமான வேலைகள் செய்யலாம்,உணவு உண்ண ,மலம் கழிக்க ,உடலுறவில் ஈடுபட,கடல் யாத்திரை போக,சண்டையிட,கஷ்டமான கலைகள் கற்க,குதிரை,மாடு முதலிய நாளுகள் விலங்குகள் வாங்க,மலை ஏற ,பளு தூக்க,நீந்த,பணம் கொடுக்கல் வாங்கல் செய்ய, அரசன், பெரியமனிதர்களைக் காண,மருந்து சாப்பிட,செரிக்க கடினமான ஆகாரம் உண்ண,வைத்தியம் பார்க்க நன்று.
சந்திர கலை (இடது) நடக்கும் போது செய்ய வேண்டிய காரியங்கள் :-
எல்லா சுப காரியமும் செய்ய நன்று.நீர் அருந்த,தீர்மானம் செய்ய,நகை செய்ய நகை அணிய,புத்தாடை அணிய,திருமணம் பேச,பெண்பார்க்க, வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள,வீடு கோயில் கட்ட,தர்மம் செய்ய,குளம்,கிணறு வெட்ட,வைத்திய சாஸ்திரம் கற்க, மருந்து செய்ய,சாமான்கள் வாங்க,புதுவீடு குடிபுக,விதை விதைக்க,பாஷைகள் கற்க,நடனம்,பாடல் கற்க,நண்பர்கள் உறவினரை காண நன்று.
மேற்சொன்னவாறு காரியங்களை அந்தந்தக் கலையில் சுவாசம் நக்கும் போது செய்ய வெற்றியுண்டாகும்.
சுழுமுனை நடக்கும் செய்யும் காரியம் தோல்வியடையும்.ஆனால் இறைவழிபாடு,தியானம் செய்ய மிகச்சிறப்பு.
சூரியகலையில் தம்பதியர் இணைந்தால் ஆண் குழந்தையும்,சந்திர கலையில்
இணைந்தால் பெண் குழந்தையும் பிறக்கும்.சுழிமுனையில் இணைந்தால் அலியாய்ப் பிறக்கும்.
ஏதேனும் வியாதி (உதாரணமாக :தலைவலி) ஏற்பட்டால் அது ஆரம்பித்த நிமிடம் எந்த பக்கமாக சுவாசம் ஓடுகிறது என பார்க்கவும் அதற்கு அடுத்த பக்கத்தில் சுவாசத்தை மாற்றினால் அந்த குறிப்பிட்ட வியாதி நீங்கிவிடும்.
மேலே சூரிய கலை,சந்திர கலையில் செய்ய காரியங்களை பற்றி கூறினேன்.உதாரணமாக நமக்கு சூரிய கலை நடந்து கொண்டிருக்கிறது ஆ னால் நாம் செய்ய வேண்டிய காரியம் சந்திர கலையில் செய்ய வேண்டியது .இதுபோன்ற தருணங்களில் என்ன செய்யலாம். அடுத்த பக்கம் மாறும் வரை எல்லா நேரங்களிலும் காத்திருக்க முடியாது
சுவாசத்தை மாற்றும் முறைகள்:-
1.மூச்சு ஓடும் பக்க அக்குளில்(வலது பக்கம் எனில் வலது கை அக்குள்) ஒரு துண்டை சுருட்டி மடித்து வைத்துக்கொண்டு கையை பின்புறம் மடக்க கொள்ள சில நொடிகளில் அடுத்த பக்கத்திற்கு மாறும்.
2.காலை மடக்காமல் மூச்சு ஓடும் பக்கம் சாய்ந்து படுத்து அந்த பக்கத்து கையை தலைக்கு வைத்து படுத்திருந்தால் சில நொடிகளில் அடுத்த பக்கத்திற்கு மாறும்.
3.ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி,ஸ்ரீ புவனேஸ்வரி,ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மந்திரத்தில் சித்தி பெற்றிருந்தால் அந்த சக்தியிடம் வேண்டினால் மூச்சு உடனே மாறும்.நான் இந்த முறையில் மூச்சை மாற்றுகிறேன்.
மேலே சொன்னவாறு ஒவ்வொரு பக்கம் மூச்சு ஓடும் போதும் இழுக்கும் மூச்சை விட வெளிவிடும் மூச்சின் அளவு நமக்கு அதிகம்.அதுவும் சூரியகலையை விட சந்திர கலையில் அதிகமாக பிராணன் வீணாகிறது.எனவே யோகியர் சுழுமுனை அல்லது சூரிய கலையில் சுவாசம் வருமாறு வைத்துக்கொள்கிறார்கள்.இயல்பாக நஷ்டமாகும் பிராணன் போக பேசும் போது,கடின உழைப்பின் போது ,உடல் உறவு கொள்ளும் போது, தூங்கும் போதும் அதிக பிராணன் வீணானாலும் உறங்கும் நேரம் அதிகம் ஆகையால் உறக்கத்தின் போது பெருமளவில் பிராணன் நஷ்டமடைகிறது. எனவே சூரியகலையில் உறங்கினால் பிராண நஷ்டத்தை குறைத்துக் கொள்ளலாம். அதற்கு இடது கையைத் தலைக்கு வைத்து இடது புறமாகச் சாய்ந்து படுக்க வேண்டும்.மதிய உணவிற்குப்பின் பெரும்பாலோர் உறங்குவதை வழக்கமாக வைத்திருப்பார்கள் அவர்களும் இவ்வாறு உறங்கினால் சீக்கிரம் உண்ட உணவு ஜீரணமாகும்.
மேலும் சூரிய,சந்திர ,சுழுமுனை இவற்றை பயன்படித்தி ஆரூடம் சொல்லலாம்,பிறக்கப் போகும் குழந்தை ஆனா பெண்ணா என்று அறியலாம்,காணாமல் போன பொருள்,நபர் வருமா வராதா மற்றும் அநேக காரியங்கள் செய்யலாம். விவரித்தால் அதிகம் போகும் எனவே இத்துடன் முடிக்கிறேன்.
நாம் இயல்பாகவே உள்ளே இழுக்கும் மூச்சை விட அதிக மூச்சை வெளியே விடுகிறோம்.புது இரண்டு சக்கர வாகனம் எடுத்தவுடன் குறிப்பிட்ட கிலோமீட்டர் வரை 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் அப்போதுதான் அதற்கு அதிக மைலேஜ் கிடைக்கும்.அதுபோல் நாடிசுத்தி மற்றும் பிராணாயாமம் செய்து வர வர அதிக சுவாசம் உள்ளே சென்று குறைந்த சுவாசம் வெளிச் செல்லும்.நமக்கு நிறைய பிராண சக்தி கிடைக்கும்.
பிராண சரீரத்தை வலுப்படுத்தும் பயிற்சிகள் :-
நாடிசுத்தி :-
உபயோகப்படுத்த வேண்டியது வலது கையின் ஆட்காட்டி மற்றும் பெருவிரல்கள்.மூச்சை மென்மையாக,ஆழமாக இழுக்கவேண்டும் வலிந்து செய்யக்கூடாது.விடும் போதும் அப்படியே செய்க.
1.வலதுகையின் பெருவிரல் கொண்டு வலது மூக்கு துவாரத்தை அடைத்து இடது மூக்கு துவாரம் வழியாக உள்ளிருக்கும் பிராணனை வெளியிடவேண்டும்.பின் அதே (இடது) மூக்கு துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்.
2.பின் ஆட்காட்டிவிரல் கொண்டு இடது மூக்கு துவாரத்தை அடைத்து வலது மூக்கு வழியே மூச்சை வெளியிட வேண்டும்.பின் அதே (வலது) மூக்கு துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்.
இப்படி செய்தால் ஒரு தடவை(சுற்று).இவ்வாறு குறைந்தது 5 முதல் அதிகபட்சம் 15 வரை செய்யலாம்.இதை காலை,மதியம் உணவுக்கு முன்,மாலை ,நள்ளிரவு என 4 வேளையும் செய்து வர பிராண சரீரம் மிக வலிமையுடன் திகழும்.
நாடி சுத்தியை குறைந்தது ஒரு மாதமாவது செய்து பின் மற்ற பிராணயாம பயிற்சிகளை செய்தல் நலம்.
பிராணயாமம்:-
இரண்டு மூக்குத் துவாரத்தின் வழியாகவும் மெதுவாக,ஆழமாக மூச்சை உள்ளிழுத்து பின்னர் இரண்டு மூக்கு துவாரத்தின் வழியாகவும் மெதுவாக மூச்சை வெளியிடவும். இதைக் குறைந்தது 10 முறைகள் செய்யலாம்.
இதுவும் இரத்த சுத்தி செய்வதுடன்,சுவாசப்பைகளை பெரிதாக்கி சுவாசம் நன்றாக நடைபெற உதவுகிறது.மூளைக்கு நிறைவான ஆக்சிஜன் செல்வதால் ஞாபக சக்தி கூடும்.ஏதேனும் பாடங்கள் படிக்கும் முன் இதை சில தடவைகள் செய்து பின் படிக்க நன்கு மனதில் பதியும்.நேர்முகத்தேர்வுக்குக் காத்திருக்கும் போது சில தடவைகள் செய்ய பதற்றம் தணியும்.ஏதாவது ஒரு விஷயம் குறித்து முடிவெடுக்கும் முன் சில தடவைகள் செய்ய மனம் நிதானத்தில் இருக்கும் நல்ல முடிவாக எடுக்க உதவும்.
கபாலபாதி:-
இரு மூக்கு துவாரத்தின் வழியாகவும் எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக மூச்சை இழுத்தும்,வெளியிடவும் செய்யவேண்டும்.இதன் மூலம் கபாலம் எனும் தலையில் தங்கிய சளி வெளியேறும்.
ஒவ்வொரு வியாதி வரும் போதும் அது நமக்கு முன்கூட்டியே
எச்சரிக்கை செய்துவிட்டுதான் வருகிறது.உதாரணமாக சளி பிடிக்கும் முன் தும்மல் வரும்,தொண்டையில் ஒரு மாதிரியான அரிப்பு வரும் அதை உணர்ந்து இந்த கபாலபதி பயிற்சியை 20 தடவை முதல் 30 தடவை வரை செய்ய சளி பிடிக்காது.இதை தொடர்ந்து செய்து வர சைனஸ் நீங்கும்.
சீத்காரி :-
சீதளம் என்றால் குளிர்ச்சி எனப்பொருள்.
பற்களைச் சேர்த்து நாக்கை மேலே சிறிது மடித்து பல்லிடுக்கு வழியாக மூச்சை உள்ளிழுக்கவும்.பின் வாயை மூடி மூக்கு வழியாக காற்றை வெளியிடவும்.இதை 10,15 தடவைகள் செய்யலாம்.
சீத்தளி:-
நாக்கை குழல் போல் மடித்து மூச்சை உள்ளிழுக்கவும்.பின் வாயை மூடி மூக்கு வழியாக காற்றை வெளியிடவும்.இதை 10,15 தடவைகள் செய்யலாம்.
வெயிலில் எங்காவது அலைந்து நன்கு வேர்த்து விட்டால் வீடு அல்லது அலுவலகம் வந்து சேர்ந்ததும் இதைச் செய்ய உடனே வியர்வை நிற்கும்.
உஷ்ணமான உடல் அமைப்பு கொண்டவர்கள் இந்த ப்ராணாயாமங்களை தினமும் செய்து வர உடலில் அதிக உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.உஷ்ண தேகமானால் அதிக காமம் உண்டாகும்,சிறுநீரோடு விந்து,நாதம் வெளியேறும்,பெண்களுக்கு வெள்ளைப்படுதல் உண்டாகும் அவை யாவும் இந்த ப்ரானாயாமத்தினால் தீரும்.ரொம்ப சோர்வாக உணரும் வேளைகளில் இதனை செய்ய உடனே சக்தி கிடைக்கும்.இரவில் விளித்து படிக்கும் மாணவர்கள் இதை சில தடவைகள் செய்ய உறக்கம் உடனே வராமல் சக்தியும் கிடைக்கும்.
சீத்தளி,சீத்காரி இரண்டு ப்ராணாயாமங்களையும் மழை மற்றும் பனிக்காலங்களில் செய்ய வேண்டாம்.
பிரபஞ்ச ஆற்றல் ,பிராண சக்தி அதிகம் பெற பயிற்சி:-
நாக்கை ''ழ'' சொல்வது போல் மடித்து மேல் அன்னத்தில் படுமாறு வைத்துக்கொண்டு உச்சந்தலையில் உள்ள துரியத்தில் மனம் வைத்து தியானிக்க வேண்டும்.இதை அதிகபட்சமாக 20 நிமிடங்கள் செய்யலாம் அதற்கு மேல் செய்யவேண்டாம்.
இந்த பயிற்சி அநேக யோகிகளால் பயிலப்பட்டது.இதனை செய்ய உடனடியாக பிரபஞ்ச சக்தி நம் தலை வழியே நமக்குள் இறங்குவதை உணரலாம்.இது கர்ம வினை சார்ந்த நம் சிந்தனையில் ஏற்படும் குழப்பங்களை நேக்கும்.நம் செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும்.சித்தர் தரிசனம் உண்டாகும்.அநேக ஆன்மீக அனுபவங்கள் உண்டாகும்.
உண்மையை உங்களுக்கு என்னால் வழங்க முடியாது.ஆனால் நான் உங்களுக்கு நிலவை சுட்டி காட்டலாம்.தயவு செய்து நிலவை சுட்டி காட்டும் விரலை பற்றி கொள்ளாதீர்கள்.விரல் காணாமற் போய்விடும்.நிலவு அப்படியே இருக்கும்.
Wednesday, 20 January 2016
மூச்சு
Wednesday, 5 August 2015
எட்டு இடங்களில் ஜீவசமாதி கொண்ட கோரக்கர்
எட்டு இடங்களில் ஜீவசமாதி கொண்ட கோரக்கர் !!!
ஒரு கிராமத்தில் ஆலமரத்தடியில் தனிமையில் நின்று அழுதுகொண்டிருந்தாள் இளம்பெண்ணொருத்தி. அந்த வழியே வந்த சித்தர் மச்சேந்திரர் தனியே நின்றழும் பெண்ணைக் கண்டதும், ""ஏனம்மா அழுகிறாய்?'' என்று பரிவுடன் வினவினார். அதற்கு அவள், ""அய்யா, எனக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகி விட்டன. குழந்தைப் பேறு வாய்க்கவில்லை. ஊரில் உள்ளவர்கள் என்னை மலடி என்று கேலியும் கிண்டலும் செய்கிறார்கள். என்னால் அதைத் தாளமுடியவில்லை. அதனால்தான் இப்படி தனியாக அழுதுகொண்டிருக்கிறேன்'' என்றாள்.
""அம்மா, அழாதே. இதோ, நான் தரும் திருநீறைச் சாப்பிடு. நீ கர்ப்பம் தரிப்பாய். மலடி எனும் அவச் சொல் உன்னைவிட்டு நீங்கும்'' என்று சொல்லி திருநீறைக் கொடுத்துவிட்டு தன் வழி போனார் மச்சேந்திரர்.
திருநீறைப் பெற்றுக்கொண்ட பெண், தன் தோழியொருத்தியிடம் அதைக் காட்டி, சித்தர் சொன்னதையும் கூறினாள். அதற்கு அந்தத் தோழி, ""அடி பைத்தியமே, யார் எது சொன்னாலும் நம்பிவிடுவதா? யாரிடம் வேண்டுமானாலும் திருநீறு வாங்கிச் சாப்பிட்டுவிடுவாயா? அந்தப் பெரியவர் சக்தியுடைய வரா, வேஷதாரியா என்று யாருக்குத் தெரியும். இந்தத் திருநீறை எங்காவது வீசியெறி'' எனச் சொல்லிச் சென்றாள். தன் தோழி கூறியதை நம்பி அவள் திருநீறை யாருக்கும் தெரியாமல் எரியும் அடுப்பில் போட்டுவிட்டாள்.
ஆண்டுகள் சில கடந்தன. மச்சேந்திரர் அந்த வழியே திரும்பி வந்தார். அப்பொழு தும் அந்தப் பெண், குழந்தை பாக்கியம் இல்லாமல் அழுது புலம்பிக் கொண்டி ருந்தாள். இதைக் கண்ட மச்சேந்திரர் அவளிடம், ""ஏனம்மா இன்னும் அழுகிறாய்? குழந்தை என்னஆயிற்று?'' என்று கேட்டார். தன் தோழியின் பேச்சைக் கேட்டு திருநீறை அடுப்பில் போட்டுவிட்டதாகவும்; இதுவரை தனக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை என்றும் கூறி கண்ணீர் சிந்தினாள்.
சித்தர் அவளிடம் கோபம் கொள்ளவில்லை.
மாறாக, ""உன் வீட்டு அடுப்புச் சாம்பலை எங்கே கொட்டினாய்?'' என்று கேட்டார். அந்தப் பெண்மணி சாம்பலைக் கொட்டிய எருக்குழியைக் காட்டினாள். அந்த எருக்குழி அருகே சென்ற மச்சேந்திரர், ""கோரக்கா'' என்று குரல் கொடுத்தார். எருக்குழிக்குள் இருந்து ""என்ன சித்தரே'' என்ற பதில் குரல் கேட்டது. ""எழுந்து வா வெளியே'' என்றார் மச்சேந்திரர்.
அந்த எருக் குழிக்குள்ளிருந்து தெய்வ அம்சம் பொருந் திய முகத்துடன் பத்து வயது பாலகன் எழுந்து வந்தான். மச்சேந்திரர் திருநீறு கொடுத்து பத்தாண்டுகள் ஆகியிருந்ததால் அவன் பத்து வயது பாலகனாக ஆகி யிருந்தான். இதையெல்லாம் பார்த்த அந்தப் பெண்மணி அதிசயித்துப் போனாள்.
""தங்கள் மகிமையை அறியாமல், நீங்கள் தந்த திருநீறை வீசியெறிந்த தால் இந்தக் குழந்தையை என் வயிற்றில் சுமக்கும் பாக்கியத்தை இழந்தேன்'' என்று அழுதபடி அந்தச் சிறுவனைக் கட்டி
அணைத்துக்கொண் டாள். ஆனால் அந்தச் சிறுவனோ, ""என்னைத் தூக்கியெறிந்த உங்க ளுடன் இருப்பதைவிட இந்த சித்தருடன் சென்று தவ வாழ்வில் ஈடுபடப் போகிறேன். ஆனாலும் நான் பூமிக்கு வரக் காரணமாயிருந்த அன் னையே, உங்களை நான் வணங்குகிறேன். என்னை வழியனுப்பி வையுங்கள்'' என்று வேண்டினான்.
அந்தச் சிறுவனின் உறுதியான பேச்சால் மகிழ்ந்த தாய், கோரக்கருக்கு விடை கொடுத்து அனுப்பினாள்.
கானகத்தில் தவ வாழ்வு மேற் கொண்ட கோரக்கர் பல சித்திகளைப் பெற்றார். ஒரு சமயம் அவருக்கு பிரம்ம னின் படைப்புத் தொழிலை தானும் செய்ய வேண்டு மென்ற ஆவல் உண்டானது. தனது நண்பர் பிரம்மமுனியுடன் இணைந்து மிகப் பெரிய யாகத்தை மேற் கொள்ளத் தொடங்கினார். படைக்கும் தொழிலில் தனக்குப் போட்டியாக சித்தர்கள் முயற்சிப்பதைக் கண்டு, தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பிரம்மன் அஞ் சினான். உடனே வருணனையும் அக்னியையும் அனுப்பி யாகத்தை அழிக்கச் சொன்னான்.
அவர்கள் பலவிதமாக தொல்லை தந்தும் பலனில்லாமல் போனது.
அடுத்ததாக யாக குண்டத்தில் சித்தர்கள் போட்ட பொருட்கள் இரண்டு பெண்களாக உருவெடுத்தனர். அவர்கள் சித்தர்களின் மனதைக் கலைக்க முயற்சிக்க, ஆத்திரமுற்ற சித்தர்கள் அவர்களை இரு செடிகளாக மாற்றிவிட்டனர். அப்போது சிவன்
அவர்கள்முன் தோன்றி, ""சித்தர்களே, நீங்கள் தவ வலிமை மிக்கவர்களாக இருந்தாலும் யாகத்திற்கு இடையூறு ஏற்பட்டால் அதனை என்னிடம்தான் முறையிட வேண்டும். நீங்களே சாபம் கொடுத்தது தவறு. சித்தர்கள் கோபம் கொள்ளக்கூடாது. நீங்கள் கோபம் கொண்டதால் உங்கள் தவ வலிமையை இழந்துவிட்டீர்கள்'' என்று கூறினார். எனினும் அவர்கள் தவத்திற்கு மகிழ்ந்து, காயகல்பத்தை அவர்களுக்கு அருளி, அதனைக் கொண்டு உலக உயிர்கள் நலமுடன் வாழ அரிய மருந்துகளை உருவாக்கும்படி அருளினார்.
சித்தர்கள் இருவரும் இறைவன் சொன்னபடியே மகத்தான பல மருந்து களை உருவாக்கி மக்களின் பிணி போக்கினர்.
சித்தன் என்பதன் பொருள் சிந்தை தெளிந்தவர் என்பதாகும். சித் என்றால் பேரொளி, ஞான ஒளி, பர ஒளி, சிவ ஒளி என்பதாகும். இத்தகைய ஒளியைப் பெற்றவர்களுக்கு சித்தர்கள் என்று பெயர்.
அப்படிப்பட்ட சித்தர்கள் ஆயிரக்கணக்கில் தோன்றியிருக்கின்றனர். அவர்களில் மக்களின் நடுவே நன்கு அறியப்பட்டவர்கள் பதினெட்டு சித்தர்கள். இப்பதினெட்டு சித்தர்களுள் கோரக்கருக்கு முக்கிய இடம் உண்டு. இவர் இறவா வரம் பெற்றவர். காயகல்பம் செய்வதில் வல்லவர். செம்பைப் பொன்னாக்கும் ரசவாத வித்தை அறிந்தவர்.
சித்தர் கோரக்கர் தனித்துவம் மிக்கவர், பணிவுமிக்கவர், அச்சமற்ற தன்மையுடை யவர், வெளிப்படையானவர், மக்களின் உயிர்காக்க வேண்டுமென்ற உயரிய நோக்குடன் செயல்பட்டவர்.
கோரக்கரைப் பற்றி பல்வேறு கதைகள் நிலவுகின்றன. கோரக்கரும் போகரும் உயிர்த் தோழர்கள். போகரைப்போலவே கோரக்கரும் சீனம் சென்று அங்கு 500 ஆண்டுகள் செலவிட்டதாக செவிவழிச் செய்திகள் உண்டு. கொல்லிமலையில் 200 ஆண்டுகள் கோரக்கர் தவத்தில் மூழ்கியிருந் தார் என்று சொல்வோரும் உண்டு. பழனி மலைக் கோவிலிலுள்ள நவபாஷாணத் தாலான முருகன் சிலையை போகருடன் இணைந்து கோரக்கர் வடிவமைத்தார்.
அதை நிறுவிவிட்டு வட பொய்கைநல்லூர் வந்து,
அங்கே நந்தாதேஸ்வர், சௌந்தர நாயகி ஆகியோ ருக்கு ஆலயம் எழுப்பி வழி பாடு செய்தார். அங்கே ஆகாயப் பிரவேசம் தந்த போகர், கோரக்கரை ஜீவசமாதியில் அடக்கம் செய்தார் என்று சொல்லப்படுகிறது.
""சித்தர்களின் ஜீவசமாதி என்பது மனிதன் இறந்ததும்
அடக்கம் செய்வது போன்ற தில்லை. ஜீவசமாதியாகிய சித்தர்கள் என்றும் அழியாமல் இருந்து பிற தேசத்துக்கோ, ஊர்களுக்கோ சென்று தம் பணியைத் தொடர்வர். இப்படியாக கோரக்கர் பொதிகைமலை, ஆனைமலை, கோரக்கநாத் திடல், வடக்குப் பொய்கைநல்லூர், பத்மாசுரன் மலை, கொல்லிமலை, கோரக்பூர், பரூர்பட்டி என்ற எட்டு இடங்களில் ஜீவசமாதி அடைந்தார்'' என்கிறார் விருத்தாசலத்தைச் சேர்ந்த ஜோதிடர் இராமமூர்த்தி.
பல்வேறு யோக முறைகளையும் ஞான முறைகளையும் வருங்காலத்திற்கு விட்டுச் சென்ற கோரக்கர், சித்தர் பிரம்ம கர்ப்பம் மற்றும் 8,450 பாடல் கள் அடங்கிய நூல்களை இயற்றியுள்ளதாகக் கூறுவர்.
""சதுரகிரி மலைக்குச் சென்று கோரக்கரின் சீடர்களும் அவரது உண்மையான பக்தர்களும் கோரக்கரின் மந்திரமொன்றைக் கூறினால் கற்பாறை நகர்ந்து வழிவிடும். அங்கே காவல் காத்துக்கொண்டிருக்கும் சித்தர் தோன்று வார். அவரிடம் ஒரு முகூர்த்தம் அதாவது ஒன்றரை மணி நேரம் பூரண பொக்கி ஷத்தைப் பார்த்து விட்டுத் தருவதாக விண்ணப்பம் செய்தால் காணக் கிடைக்கும். நாம் அதனைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது பிளந்த பாறை மூடிக் கொள்ளும்'' என்று கூறுகின்றனர் செல்வராசு, பொன் பாலதண்டாயுதம் உள்ளிட்ட பக்தர்கள்.
கோரக்கர் ஜீவசமாதி அடைந்த இடங்களில் எம். பரூரும் ஒன்று. இங்கு கோரக்க சித்தர் தோன்றி பல காலம் வாழ்ந்துள்ளார். அவர் உருவாக்கியதுதான் அவ்வூரில் உள்ள அன்னபூரணி உடனுறை விஸ்வநாதர் ஆலயம். இவ்வாலயத்தையும் கோரக்க சித்தரின் ஜீவசமாதி யையும் புதுப்பித்து 8-2-2012-ல் ஊர் மக்கள் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர்.
விருத்தாசலத்திலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் எம். பரூர் அமைந்துள்ளது. விருத்தாசலத்திலிருந்து எம். பரூர் செல்ல பஸ், கார் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் உள்ளன.
அங்கு வருபவர்களுக்கு அருள்புரிய கோரக்க சித்தரும், அவர் எழுப்பிய கோவிலில் அருள்மிகு அன்னபூரணியும், அவருடன் உடனுறைந்த விஸ்வநாதரும் காத்திருக்கின்றனர். ஒருமுறை தரிசிக்கலாமே!
Thursday, 11 June 2015
எண்ணங்கள்
ஒரு
மனிதனின் மனதில் பல்லாயிர எண்ணங்கள் உருவாகும்.அதில் தாழ்வு
எண்ணங்கள்,எதிர்மறை எண்ணங்கள்,பலவீனமான எண்ணங்கள்,முரட்டு
எண்ணங்கள்,அன்பு,தெய்வீகம் என பல உயர்ந்தும்,அதே வேலையில் தாழ்வான
எண்ணங்களும் அதே மனதில்தான் உருவாகின்றன.
மனோதத்துவ ஆராய்ச்சியின்படி ஒரு மனிதன் எதை நினைக்கிறானோ,அதுவகவேதான் உருவாகிறான் என்பதை கண்டறியப்பட்டிருக்கிறது. இதைத்தான் நம் முன்னோர்கள் "விதைப்பதே விளையும்" என்றார்கள்.நாம் நம் வாழ்க்கையில் உயர்ந்து ஒளி வீச நம் மனம்தான் ஆணிவேர்.உயர்ந்த எண்ணங்களை விதைத்து வாழ்வில் உயர வேண்டும் என்று தன்னம்பிக்கையுடன் உழைத்தல் நிச்சியம் வெற்றி கோட்டையை அடையலாம்.தவறான எண்ணங்களை மனம் யோசித்தால் தவறான வழிகளைத்தான் அறிவு தரும்.
நம் எண்ணங்கள் எப்பொழுதும் சுத்திகரிக்கப்பட்டு புனிதமாக இருக்க வேண்டும்.எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டிருந்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது.எண்ணம் சுத்திகரிக்கப்பட்டிருந்தால் வாழ்விற்கு நல்லது.நீங்கள் ஒவ்வொருவரும் இரவும் பகலும் ஓடி ஓடி வேலை செய்து சொத்து,மட மாளிகை,புது மாடலான வண்டி வாகனங்கள்,பொன் பொருள் என வாழ்கையில்சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.நிலம் உள்ளவர்கள் நிலத்தை சுத்தம் செய்து உறமிட்டு நீர்பாய்ச்சி,பயிரிடுகிறார்கள்.எத்தனை பேர் மனதை உழுது நல்லெண்ணங்களை விதைத்து ,போட்டி,பொறாமை,புறம் பேசுதல்,பிறருக்கு கேடு விலைவித்தல் என்ற எண்ணங்களை களையெடுத்து உள்ளன்போடு பழகுதல்,உண்மையாக உழைத்தல்,எதையும் எதிர்பாராமல் உதவி புரிதல் என்ற பண்புகளுடன் வாழ்கிறார்கள். இப்படி வாழக்கூடியவர்கள் வாழ்க்கையில் எப்போதும் சந்தோசமாகவும்,உற்சாகத்துடனும் வாழ கற்றுக் கொள்கிறார்கள்.
எண்ணம் அணுகுண்டை விட ஆற்றலுள்ளது என்று கூறினால் எத்தனை பேர் நம்புவீர்கள்?ஏனென்றால் அணுகுண்டை செய்யக்கூடிய ஆற்றல் உருவானதே எண்ணத்திலிருந்துதானே!மனம் எண்ணியதினால்தான் அறிவு செயல்பட்டு அணுகுண்டு உருவானது.
ஒரு எண்ணத்தை நம்பிகயுடேன் பலமுறை மனதில் நினைத்தால்,அது நல்லதோ,கேட்டதோ அது நடந்தே தீரும். ஆகையால் நல்லதும் கேட்டதும் நடப்பது நாம் எண்ணும் எண்ணங்களினால்தான்,"நீ எதை நினைக்கிறயோ அதுவாகவே மாறி விடுகிறாய்"என்பதை நீங்கள் கேள்விப்பத்டிருப்பீர்கள். உங்கள் எண்ணம் உறுதியாக இருந்தால் இயற்கையே உங்களுக்கு உதவி கரம் நீட்டி உதவி புரியும் என்பது உறுதி.
மனோதத்துவ ஆராய்ச்சியின்படி ஒரு மனிதன் எதை நினைக்கிறானோ,அதுவகவேதான் உருவாகிறான் என்பதை கண்டறியப்பட்டிருக்கிறது. இதைத்தான் நம் முன்னோர்கள் "விதைப்பதே விளையும்" என்றார்கள்.நாம் நம் வாழ்க்கையில் உயர்ந்து ஒளி வீச நம் மனம்தான் ஆணிவேர்.உயர்ந்த எண்ணங்களை விதைத்து வாழ்வில் உயர வேண்டும் என்று தன்னம்பிக்கையுடன் உழைத்தல் நிச்சியம் வெற்றி கோட்டையை அடையலாம்.தவறான எண்ணங்களை மனம் யோசித்தால் தவறான வழிகளைத்தான் அறிவு தரும்.
நம் எண்ணங்கள் எப்பொழுதும் சுத்திகரிக்கப்பட்டு புனிதமாக இருக்க வேண்டும்.எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டிருந்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது.எண்ணம் சுத்திகரிக்கப்பட்டிருந்தால் வாழ்விற்கு நல்லது.நீங்கள் ஒவ்வொருவரும் இரவும் பகலும் ஓடி ஓடி வேலை செய்து சொத்து,மட மாளிகை,புது மாடலான வண்டி வாகனங்கள்,பொன் பொருள் என வாழ்கையில்சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.நிலம் உள்ளவர்கள் நிலத்தை சுத்தம் செய்து உறமிட்டு நீர்பாய்ச்சி,பயிரிடுகிறார்கள்.எத்தனை பேர் மனதை உழுது நல்லெண்ணங்களை விதைத்து ,போட்டி,பொறாமை,புறம் பேசுதல்,பிறருக்கு கேடு விலைவித்தல் என்ற எண்ணங்களை களையெடுத்து உள்ளன்போடு பழகுதல்,உண்மையாக உழைத்தல்,எதையும் எதிர்பாராமல் உதவி புரிதல் என்ற பண்புகளுடன் வாழ்கிறார்கள். இப்படி வாழக்கூடியவர்கள் வாழ்க்கையில் எப்போதும் சந்தோசமாகவும்,உற்சாகத்துடனும் வாழ கற்றுக் கொள்கிறார்கள்.
எண்ணம் அணுகுண்டை விட ஆற்றலுள்ளது என்று கூறினால் எத்தனை பேர் நம்புவீர்கள்?ஏனென்றால் அணுகுண்டை செய்யக்கூடிய ஆற்றல் உருவானதே எண்ணத்திலிருந்துதானே!மனம் எண்ணியதினால்தான் அறிவு செயல்பட்டு அணுகுண்டு உருவானது.
ஒரு எண்ணத்தை நம்பிகயுடேன் பலமுறை மனதில் நினைத்தால்,அது நல்லதோ,கேட்டதோ அது நடந்தே தீரும். ஆகையால் நல்லதும் கேட்டதும் நடப்பது நாம் எண்ணும் எண்ணங்களினால்தான்,"நீ எதை நினைக்கிறயோ அதுவாகவே மாறி விடுகிறாய்"என்பதை நீங்கள் கேள்விப்பத்டிருப்பீர்கள். உங்கள் எண்ணம் உறுதியாக இருந்தால் இயற்கையே உங்களுக்கு உதவி கரம் நீட்டி உதவி புரியும் என்பது உறுதி.
Wednesday, 10 June 2015
“எல்லாம் செய்துவிட்டேன்
“எல்லாம்
செய்துவிட்டேன், ஆனாலும் வெற்றி கழுவும் மீனில் நழுவும் மீனாக இருக்கிறது”
என்பவர்கள் இங்கே வாருங்கள். இந்த 5 வழிமுறைகளில் ஒன்றைப் பற்றிக்கொண்டால்
உங்கள் வாழ்க்கையில் இனி வெற்றி வெற்றி வெற்றி மட்டும்தான். வெற்றியைத்
தேடுபவர்களுக்குப் புதிய பொன்மொழிகள் இதோ.
1 கைகளை நம்புவோம்! கைரேகையை அல்ல…
சில சமயங்களில் எதேச்சையாக, அதிர்ஷ்டவசமாக, சில விஷயங்கள் உங்களுக்குச்
சாதகமாக நிகழ்ந்துவிடலாம். அப்படிக் காற்று உங்கள் பக்கம் வீசும்
சமயத்திற்காக நீங்கள் காத்திருந்தால், நல்ல விஷயங்கள் உங்கள்
கல்லறையில்தான் நடக்கும், ஏனென்றால் அச்சமயம் வராமல் கூட போய்விடலாம்.
உங்களுக்கு தெரியுமா? கோடான கோடி தடவை ஒரு திடமான சுவரின் ஊடே நடந்து அதைக்
கடக்க முயன்றால், அதில் ஒரு முறை நீங்கள் கடந்துவிட முடியுமென்று
குவான்டம் கோட்பாடு (Quantum Theory) கூட சொல்கிறது. அதில் சிறிய சிக்கல்
அந்த கோடான கோடி தடவையைத் தொடும்முன் உங்கள் மண்டையோடு உடைந்திருக்கும்.
நீங்கள் அதிர்ஷ்டத்தை நம்பி வாழும்போது, நீங்கள் பயத்திலும் பதற்றத்திலும்
வாழ்கிறீர்கள். நீங்கள் தெளிவான நோக்கத்துடனும் திறமையுடனும் வாழும்போது
உங்களுக்கு எது நடந்தாலும் நடக்காவிட்டாலும், உங்களுக்கு நடப்பவை மேல்
உங்களுக்கு ஆளுமை இருக்கும். அதுதான் ஸ்திரமான வாழ்க்கை.
2 தோல்வியில் தொலைவதை நிறுத்துங்கள்
உறுதியோடு இருக்கும் ஒரு மனிதனுக்குத் தோல்வி என்பதே கிடையாது. ஒரு
நாளுக்கு 100 முறை நீங்கள் கீழே விழுந்தால், அவை நீங்கள் கற்கும் 100
பாடங்களாகிவிடும். நீங்கள் விரும்புவதை உருவாக்குவதில் உறுதியுடன்
இருந்தால், உங்கள் மனம் ஒரே திசையில் நிலைத்துவிடும். உங்கள் மனம்
இருக்கும் திசையில் உங்கள் உணர்ச்சிகளும் ஒன்றிவிடும். ஏனென்றால் நீங்கள்
சிந்திக்கும் விதமாகத்தான் நீங்கள் வாழ்க்கையை உணரும் விதமும் இருக்கும்.
உங்கள் எண்ணமும் உணர்வுகளும் ஒன்று சேர்ந்தால், உங்கள் சக்திகளும் உங்கள்
உடலும்கூட அத்திசையில் ஒருங்கிணைந்துவிடும். இவை அனைத்தும் ஒருமுகமாகின்ற
போது, நீங்கள் விரும்புவதை உருவாக்கி உங்கள் கனவை நிஜமாக்கும் திறமை
அபாரமாகிவிடும். பல விதங்களில் நீங்கள் படைப்பாளராகி விடுவீர்கள்.
3 தேவை தெளிவு – குருட்டு நம்பிக்கை அல்ல
ஒரு மனிதனுக்குத் தேவை தெளிவு, குருட்டு நம்பிக்கை அல்ல. ஒரு கூட்டத்தின்
நடுவே நீங்கள் நடக்கும்போது, உங்கள் பார்வை தெளிவாக இருந்தால்,
ஒவ்வொருவரும் எங்கு இருக்கிறார் என்று உங்களால் பார்க்க முடிந்தால்,
கூட்டத்தில் ஒருவரைக் கூடத் தொடாமல் நீங்கள் மிகச் சுலபமாக நடந்து
சென்றுவிடுவீர்கள்.
உங்கள் பார்வைத் தெளிவாக இல்லை, ஆனால் நீங்கள் அதீத நம்பிக்கை உடையவர்
என்கிறபோது, எல்லோர் மீதும் நடந்து செல்வீர்கள். தெளிவில்லாத காரணத்தால்,
தன்னம்பிக்கை நல்ல மாற்றுப்பொருள் என்று கருதுகிறீர்கள். அது ஒருக்காலமும்
அப்படி ஆக முடியாது.
உதாரணமாக, நீங்கள் உங்கள் வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளையெல்லாம்
இப்படி எடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு நாணயத்தைச்
சுண்டிவிடுங்கள். “சரி, தலை விழுந்தால் முதல் திட்டப்படி செயல்படுவோம்,
ஒருவேளை பூ விழுந்துவிட்டால் இரண்டாம் திட்டப்படி செயல்படுவோம்,” என்று
நீங்கள் முடிவெடுத்து செயல்பட்டால், உங்கள் திட்டம் வேலை செய்ய 50
சதவிகிதம் வாய்ப்பிருக்கிறதா இல்லையா?
வாழ்க்கையில் 50 சதவிகிதம்தான் நீங்கள் சரியாக இருக்கிறீர்கள் என்கிறபோது,
நீங்கள் இரண்டு தொழில்கள்தான் செய்ய முடியும். ஒன்று நீங்கள் வானிலை
அறிக்கையாளராகவோ அல்லது ஜோசியக்காரராகவோ இருக்க முடியும். இந்த பூமியில்
நீங்கள் வேறெந்த வேலையும் செய்ய முடியாது.
4 கொஞ்சம் வளைந்து கொடுங்கள்
நம் வாழ்க்கையில் பலவிதமான சூழ்நிலைகளைக் கையாள்வதற்கு, நமக்கு வெவ்வேறு
விதமான ஆளுமை குணங்கள் தேவை. அதில் நீங்கள் நீரோடைபோல் வளைந்துகொடுக்கும்
தன்மையுடன் இருந்தால், நீங்கள் எடுத்திருக்கும் பாத்திரத்தில் உங்களால்
முழு திறனுடன் செயல்பட முடியும். அதில் சிறிதும் சிக்கலிருக்காது. ஆனால்
பலருக்கோ சூழ்நிலைக்கேற்றவாறு வளைந்து கொடுக்க முடியாமல் கட்டுண்டு
கிடக்கிறார்கள். அவர்களுக்கு பிடிக்காதவற்றையும் புரியாதவற்றையும்
எதிர்கொள்ளும்போது, அவர்கள் சொல்ல முடியாத பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.
நீங்கள் அதை உடைக்க வேண்டுமென்றால், நீங்கள் அதை முற்றிலும் வேறுவிதமாக
அணுக வேண்டும். நீங்கள் செய்யக்கூடிய மிக எளிமையான செயல் இது: உங்களுக்குப்
பிடிக்காத ஒருவருடன் சேருங்கள். அவர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள்,
மிக அன்பாக, ஆனந்தமாக! உங்களுக்குப் பிடிக்காதவற்றைச் செய்யுங்கள்,
உங்களுக்குப் பிடிக்காதவர்களுடன் இருங்கள். அந்த சூழ்நிலையிலும் நீங்கள்
புத்தியுடன், அன்புடன், ஆனந்தத்துடன் வாழக் கற்றுக் கொண்டால் அதுவே
உங்களுக்கு வெற்றி.
5 எனக்கு என்ன கிடைக்கும்?
உயர்ந்த மனிதனாக ஆக வேண்டும் என்கிற பேராவல் உங்களுக்கு இருக்கத்
தேவையில்லை. நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பதன்மேல் உள்ள கவனத்தைத்
தாண்டி உங்கள் குறிக்கோளையும், நீங்கள் இயங்கும் வளையத்தையும்
விரிவுபடுத்திவிட்டால், எப்படியும் நீங்கள் உயர்ந்த மனிதராகத்தான்
இருப்பீர்கள்.
உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று சில மனிதர்கள் ஏங்கியதில்லை. அவர்கள்
பார்வை “எனக்கு என்ன கிடைக்கும்?” என்பதைத் தாண்டி இருந்தது. “எனக்கு என்ன
கிடைக்கும்?” என்ற இந்த ஒரு கணக்கை மட்டும் நீங்கள் கைவிட்டுவிட்டு, உங்கள்
திறமையின் உச்சத்தில் செயல்பட்டால், ஏதோ ஒருவிதத்தில் நீங்கள்
உயர்ந்தவராகத்தான் இருப்பீர்கள்.
அப்போது இயல்பாகவே “என்னைச் சுற்றியிருக்கும் உயிர்களுக்கு நான் என்ன செய்ய முடியும்?” என்று பார்க்கத் துவங்கிவிடுவீர்கள். உங்கள் திறமைகளையும் இயல்பாகவே அதிகரித்துக் கொள்வீர்கள், ஏனென்றால் செய்வதற்கு அவ்வளவு செயல்கள் இருக்கும்!
முன்னேற்றத்தின் மூலமந்திரம்
”நான்
முன்னேற வேண்டும் என்று நினைக்கிறேன். ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் யாரும்
எனக்கு எதையும் கற்றுத் தருவதில்லை” என்று சிலர் புலம்புகிறார்கள்.
அவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்.
உங்களுக்கு யாரும் எதையும் கற்றுத் தரமாட்டார்கள். நீங்களாக எவ்வளவு வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.
யாரும் உங்களுக்கு எதையும் ஊட்டமாட்டார்கள். ஆனால், நீங்களாக எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துச் சாப்பிடலாம். யாரும் தடுக்க முடியாது.
தலைவராவது எப்படி என்று காந்திஜிக்கு யாராவது வகுப்பு நடத்தினார்களா?
இராணுவம் அமைப்பது எப்படி என்று நேதாஜிக்கு யாராவது சொல்லிக்
கொடுத்தார்களா?
கற்றுத் தரமாட்டார்கள்… நீங்களாகக் கற்றுக் கொள்ளுங்கள். இதுதான் முன்னேற்றத்தின் மூலமந்திரம்
வெற்றிக்கு நேரம்
வெற்றிக்கு நேரம் காலம் எல்லாம் கிடையாது. எப்போது கிடைக்கும்
அல்லதுஎப்போது தவறவிடுகிறோம் என்பதும் தெரியாது. ஆனால் குறித்த நேரத்தில்
வெற்றிகிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அப்படி நேரம் குறித்து
வெற்றிபெறுகிற ஒரு நிறுவனத்திற்கு சமீபத்தில் சென்றிருந்தேன்.
பத்தே நிமிடத்தில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கிடைக்கும் என்கிற
போர்டைபார்க்கும் போதெல்லாம், ‘வெற்றிகூட பத்தே நிமிடத்தில் கிடைத்தால்
எவ்வளவுநன்றாக இருக்கும்’ என்று தோன்றும்.
பல நேரங்களில் மிகப்பெரிய வெற்றிகூட ஒரு நொடியில் தோன்றிய மிகச்சிறந்த சிந்தனையால் நிகழ்ந்திருக்கிறது.
சமீபத்தில் ஈரோட்டில் எம்.ஆர் கலர் லேப் என்ற
நிறுவனத்திற்கு சென்றிருந்தேன். அங்கு சென்றபோது நான் பார்த்த விஷயம்
எனக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது.
பத்தே நிமிடத்தில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ என்பதிலில்லை ஆச்சரியம். ஒரு நிமிடம் தாமதம் ஆனால்கூட பணம் வாபஸ் என்பதுதான் ஆச்சரியம்.
பத்தே நிமிடத்தில் பாஸ்போர்ட் போட்டோ பிரிண்ட் செய்து தரப்படும்
என்றஅறிவிப்பை பார்த்ததும், எல்லோரும் அப்படித் தான் சொல்வார்கள். ஆனால்
அரைமணி நேரமாவது ஆகும் என்று தோன்றும்.
நிறுவனங்களின் வாக்குறுதிகளையும் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளைப் போல,இப்பொழுதெல்லாம் யாரும் நம்புவதில்லை.
அதனால் அந்த நிறுவனம் அறிவிப்பில் ஒரு வரியை கூடுதலாக
சேர்த்திருந்தது. பத்து நிமிடத்திற்கு ஒரு நொடி தாமதமானாலும் பிரிண்ட்
இலவசம் . பணம்கட்டத்தேவையில்லை.
தொழிலில் ‘வெற்றி பெறச் செய்வோம்’ என்ற வாக்குறுதியைப் போலவே நிச்சயம் அதை நிறைவேற்றிக் காட்டுவோம் என்ற உறுதியும் இருக்க வேண்டும்.
அப்படிப்பட்டவர்கள் பத்தே நிமிடத்தில் வாடிக்கையாளர்கள் மனங்களை வென்று விடுகிறார்கள்.
ஆரம்பம் மட்டுமே
நமது அன்றாட வாழ்க்கையில் பல துறைகளில் பல திறமையாளர்களைப்
பார்க்கிறோம். நாளடைவில் அவர்களில் மிகச் சிலரே அந்தந்த துறைகளில் வெற்றி
அடைகிறார்கள் என்பதையும் பெரும்பாலோனோர் நாம் எதிர்பார்த்த அளவு சாதனைகள்
புரியாமல், இருந்த சுவடே தெரியாதபடி காணாமல் போவதையும் பார்க்கிறோம்.
அப்போதெல்லாம் நம்மால் வியப்படையாமல் இருக்க முடிவதில்லை. அதுவும்
வெற்றியடைந்தவர்களை விட அதிகத் திறமை கொண்டவர்கள் என்று நாம் கணித்தவர்கள்
சாதிக்காமல் போய் விடும் போது அது ஏன் என்ற ஒரு மிகப் பெரிய கேள்வி
நமக்குள் எழாமல் இருப்பதில்லை. அதற்கு ‘விதி’ என்ற மிக வசதியான பதிலை
நமக்கு நாமே சொல்லிக் கொள்கிறோம். ஆனால் அபூர்வமாய் ஒருசில விதிவிலக்குகள்
தவிர அந்த விதி அவரவர்களால் எழுதப்படுவது அல்லது ஏற்படுத்திக் கொள்வது
என்பதே நிதர்சனமான உண்மை.ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் தோல்வி அடையும்
அனைவருக்கும் பொதுவாக மூன்று குணாதிசயங்கள் இருப்பதை நம்மால் காண
முடியும். அதில் முதலாவது,அவர்களுக்குள்ளே சாதனை புரிந்தே ஆக வேண்டும் என்ற
அக்னி இருப்பதில்லை. இது இல்லாத வரை எத்தனை திறமை இருந்தாலும் அது
பிரகாசிப்பதில்லை.
இரண்டாவது, அவர்கள் ஈடுபாடுகள் சீராகவும், தொடர்ச்சியாகவும் ஒரே
விஷயத்தில்இருப்பதில்லை. இன்று ஒன்றில் ஈடுபாடு, நாளை வேறு ஒன்றில் தீவிர
ஈடுபாடு, சில நாட்களில் புதிதாக ஒன்றில் பேராவல் என்று மாறிக் கொண்டே
போகிறார்கள்.அவர்கள் வாழ்க்கையில் பல நல்ல ஆரம்பங்கள்
இருக்கின்றன, திறமைக்கும்குறைவில்லை என்றாலும் எதிலும் முழுமை
இருப்பதில்லை.
மூன்றாவது, அவர்கள் வெற்றி வரும் வரை பொறுமையாக தாக்குப் பிடித்து
நிற்பதில்லை. தற்காலிகத் தோல்விகளிலேயே பின்வாங்கி விடுகிறார்கள். தற்காலிக
தடங்கல்களும், நிராகரிப்புகளும், தோல்விகளும் முயற்சிகளைக் கைவிடப்
போதுமானவையாக இருக்கின்றன. இந்த மூன்று தவறுகளையும் வெற்றியாளர்கள்
செய்வதில்லை. இதை தங்கள் துறையில் சிகரத்தை எட்டிய இருவர் வாழ்க்கை
அனுபவங்களைப் படித்தால் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.பாஸ்கல்
(Pascal) என்கிற கணித மேதையை அறியாதவர் இருக்க முடியாது. அவர்பிற்காலத்தில்
தத்துவஞானியாகவும் விளங்கினார். அவர் வாழ்ந்த காலகட்டத்தில்சட்டம் மட்டுமே
மேல்நிலை மக்களின் கௌரவமான தொழிலாகக் கருதப்பட்டது.எனவே அவர் தந்தை மகன்
சட்டப் பேரறிஞனாக வர வேண்டும் என்று ஆசைப்பட்டார். பாஸ்கலோ கணிதத்தில் தான்
மிகுந்த ஈடுபாடுடன் இருந்தார்.எத்தனை அறிவுரை கூறியும் மகன் மாறாததைக்
கண்ட தந்தை கடைசியில் மகனை சட்ட புத்தகங்கள் மட்டுமே நிறைந்த அறையில்
வைத்துப் பூட்டி வைக்கத் துவங்கினார். உள்ளே கணிதக் கோட்பாடுகளை மகன்
எழுதிக் கொண்டு இருப்பதை பின்னர் கண்டு பிடித்து அங்கிருந்து எழுத்துக்
கருவிகள், தாள்கள் அனைத்தையும் அப்புறப்படுத்திப் பார்த்தார்.
ஆனால் பாஸ்கலோ கரித்துண்டில் தரையில் எழுதிப் பார்க்கத்
துவங்கினார்.கடைசியில் தந்தை விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று. அவர்
ஆவலுடன் தன் கணித ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் பிற கணித மேதைகள்
இவருடையவித்தியாசமான, புதிய கோட்பாடுகளை அங்கீகரிக்கவில்லை. ஆனால்
அவர்பொருட்படுத்தாமல் தொடர்ந்தார். தடங்கல்களைக் கண்டு தளராமல்
தொடர்ந்தஇத்தகைய ஈடுபாட்டிற்குப் பின் வராத வெற்றியும்
உண்டா? வெற்றியும், புகழும்கடைசியில் அவருக்கு உலக அளவில்
கிடைத்தன.பெர்னார்டு ஷா (Bernard Shaw) எழுதுவதில் காட்டிய ஈடுபாடு
மகத்தானது. இளம் வயதில் வயிற்றுப் பிழைப்புக்காக ஒரு வேலை செய்து
கொண்டிருந்தாலும், தினமும்குறைந்தது ஐந்து பக்கங்களாவது எழுதுவது என்று
உறுதியுடன் ஓய்வு நேரங்களில்தொடர்ந்து எழுதி வந்தார். அதைத் தொடர்ந்து
பத்திரிக்கைகளுக்கும், பிரசுரங்களுக்கும் அனுப்பியும் வந்தார். எழுதி
அனுப்பிய முதல் ஒன்பதாண்டுகளில் அவருக்குத் தாள்,பேனா மை, தபால்
செலவுகளுக்கான பணம் கூடக் கிடைக்கவில்லை என்பது தான் கசப்பான உண்மை. ஓரிரு
தோல்விகளைக் குறுகிய காலத்தில் சந்தித்தாலே மனம் ஒடிந்து போகும் மனிதர்கள்
மத்தியில் ஒன்பதாண்டு காலம் தொடர்ந்து சந்தித்த தோல்விகளையும்
பொருட்படுத்தாமல், தொடர்ந்து எழுதி பிற்காலத்தில் பிரபலமாகி மிகப்பெரிய
செல்வந்தரானார். அவர் எழுத்து இன்றளவும் பேசப்பட்டும், மேற்கோள்
காட்டப்பட்டும் வருகிறது என்பது வரலாறு.
இவர்கள் எல்லாம் துவக்கத்தில் சந்தித்த எதிர்ப்புகளும் தோல்விகளும்
கொஞ்சநஞ்சமல்ல. வெற்றி சுலபமாக வந்து விடவில்லை. இடைக்காலத்தில் விதி
என்றுதீர்மானித்துக் கொண்டு தங்கள் பாதைகளில் இவர்கள் திரும்பிப்
போய் விடவில்லை. தங்கள் பார்வைகளையும், ஈடுபாடுகளையும்
வேறிடத்திற்குத் திருப்பிக் கொள்ளவில்லை. உலகம் தோல்வி என்ற சான்றிதழைத்
திருப்பித் திருப்பித் தந்தாலும் அவர்கள் அதை ஏற்கத் தயாராக இருக்கவில்லை.
அவர்களுக்கு உள்ளே இருந்த அக்னி வெளியே இருந்த இருண்ட சூழ்நிலைகளிலும் ஒளி
கொடுத்து வழி காட்டியது. வெற்றி வரும் வரை காத்திருந்தார்கள். தங்கள்
விதியைத் தீர்மானிக்க மற்றவர்களுக்கு அவர்கள் அனுமதி தரவில்லை.
எனவே திறமை இருப்பவர்களே, ஒன்றை மட்டும் உணர்ந்து கொள்ளுங்கள்.
திறமைமட்டுமே போதுமானதல்ல, அது வெறும் ஆரம்பம் மட்டுமே என்பதை மனதில்
வையுங்கள். உடனடி லாட்டரி போல வெற்றி வந்து மடியில் விழும் என்று
எண்ணாதீர்கள்.
Subscribe to:
Posts (Atom)