Saturday, 16 July 2016

எண்ணங்கள்

அடிப்படையில் ஒருவனை உணர்ந்த கொள்ள எண்ணங்கள் தான் மூலம் அதை  கவனித்தால் போதுமானது

எப்படி கவனிப்பது ஒவ்வொரு எண்ணங்களையும் சாதாரணமாக  கவனித்து கொண்டு அதன் இயல்பு நமக்கு உள்ளே  பொருந்துகின்றதா- இல்லையா,( உடல் ரசாயன மாற்றம் இல்லாத நிலை உள்ளதா) என்பதை பார்த்ததால் போதுமானது

எண்ணத்தை நல்ல எண்ணம் தீய எண்ணம் என்று பார்க்கும் வரை குற்ற உணர்வும் - அடக்கு முறைகளும் தான் வளரும் அங்கு தெளிவு பிறக்காது

அந்த தெளிவில் எண்ணத்தின் மூலம் இருக்கும் பற்றுகள் கொண்ட அடர்த்தி குறைந்து எண்ணங்கள் லேசாக மாறுவதும் அதன் பின் எண்ணங்கள் கரைந்த நிலைக்கு செல்ல முடியும்

இந்த எண்ணங்கள் கரைந்த நிலையில் வெற்றிடம் இயல்பாக உணர முடியும்

இந்த தன்மை வரும் பொழுது அங்கு எண்ணம் எழும் அலைத்தன்மை வெகு அழகாக கவனிக்க முடியும் அது இயல்பாக மலரும் பூவை போல நமக்கு உள்ளே இருந்து உணர்வின் வெளிப்பாட்டில் நடைமுறை வாழ்க்கையில் வளம் வருகிறது

இந்த அடிப்படை தான் தியானத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆழ்ந்த கவனிப்பில் நிகழும் ஒன்று

கவனித்தல் என்பது உணராதவர்
உணர்ந்து கொண்டிருப்பவர் .
உணர்ந்தவர் என  எல்லோருக்கும் பொதுவான நிகழ்வு- ஏன் ஞானியே ஆயினும் இதே நிலை தான் என்ற அடிப்படை தெளிவுக்கு வரும் வரை எண்ணம் என்பதில் குழப்பமே தீராது

தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி கொண்டே இருக்க வேண்டியது தான்

ஒவ்வொரு குணத்திற்கு மூலம் எண்ணமே - அதற்கு மேலே உள்ளவாறு கவனித்தால் இயல்பாக எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியும் உணர்வின் அடிப்படையில்

ஆன்மீகம் ஆன்மீக விவாதங்கள் இயல்பாக மலர வைக்கும் தன்மையாக இருக்க வேண்டும் - மாறாக குற்ற உணர்வையும் - நல்லவன்- கெட்டவன் - நல்லது - கெட்டது - அவனை அடிமை படுத்தி மேலே எழுந்து கொள்ள முடியாத சுமைகளை திணிக்க கூடாது

உணர்வின் ஆழத்தில் பயணிக்கும் போதே இந்த தன்மை கூட புரிந்து கொள்ள முடியும்

விழிப்புணர்வுக்கும் ஆரம்ப நிலைக்கும் பெரிய இடைவெளி உருவாக்கும் நிலை மனம் தான் - எண்ணத்தை சீரமைப்பது விழிப்புநிலையில் தான் நிகழ்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்

மனதின் அடிப்படையில் இயங்கும் எண்ணத்தை கரைத்து மனம் என்ற அடிப்படையை கடந்து வெற்றிடத்தை பார்ப்பதே ஆன்மீகம்

பெரிய மழையை தூக்கும் வேலை இல்லை serious இல்லாத  இயல்பான கொண்டாட்டத்தில் தன்னை  உணர்ந்து கொள்வது அவ்வளவே

தியானம் அதற்கு மூலம்

நன்றி

ஈர்ப்புவிதியை பயன்படுத்துவது எப்படி?

பணவளக்கலை.  ஈர்ப்புவிதியை பயன்படுத்துவது எப்படி?

• அலாவுதீனின் பூதத்தை போல ஈர்ப்பு விதியும் உங்களுடைய ஒவ்வோர் ஆணையையும் நிறைவேற்றும்..
• நீங்கள் விரும்பியவற்றை பெற மூன்று எளிய படிகள் உருவாக்க , படைப்பியக்கச்  செயல்முறை உங்களுக்கு உதவும், அவை கேளுங்கள், நம்புங்கள், மற்றும் பெறுங்கள்  ஆகியவை.
• உங்களுக்கு வேண்டியதைப் பிரபஞ்சத்திடம் கேட்கும்போது ,உங்கள் விருப்பம்  குறித்த தெளிவை நீங்கள் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது. அத்தெளிவு நீங்கள் கேட்டதற்குச் சமானம்.
• நீங்கள் கேட்டது ஏற்கனவே கிடைத்துவிட்டது போல நடந்து கொள்வது, பேசுவது மற்றும் சிந்திப்பது ஆகியவை நம்பிக்கை கொள்வதாகும் .கிடைத்துவிட்டது என்ற அலைவரிசையில் நீங்கள் ஒளிபரப்பும்பொது அதை நீங்கள் பெற்றிட ஈர்ப்பு விதி மக்களை ,நிகழ்வுகளை ,மற்றும் சந்தர்ப்பங்களை ஒருங்கிணைக்கும்.
• உங்களது விருப்பம் நிறைவேறிவிட்ட பிறகு நீங்கள் எப்படி உணர்வீர்களோ அத்தகைய மனவுனர்வை உண்டாக்கிக்கொள்வது பெற்றுக் கொள்ளுதலின் முக்கியமான அம்சம். மகிழ்ச்சியான மன நிலையுடன் இருப்பது, உங்களுக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்ளும் அலைவரிசையில் உங்களை வைத்துவிடும்.
• உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால் ,கவனத்தை எடைக் குறைப்பில் காட்டாதீர்கள். மாறாக, கச்சிதமான எடையில் உங்களது கவனத்தைக் குவியுங்கள். உங்களுடைய கச்சிதமான எடையை உணர்வுப்பூர்வமாக உணருங்கள், அது உங்களை நோக்கித் தானாகவே ஓடி வரும்.
• நீங்கள் விரும்புபவற்றை உங்களுக்கு அளித்திடப் பிரபஞ்சத்திற்குச் சொடுக்குப் போடும் நேரம் கூட ஆகாது.ஒரு டாலரைத் தருவிப்பது எவ்வளவு எளிதோ அதே அளவு எளிதானதுதான் ஒரு மில்லியன் டாலரைத் தருவிப்பதாகும்.

• ஒரு டம்ளர் காபி அல்லது கார் நிறுத்தும் இடம் போன்ற சிறிய விசயங்களில் துவங்குவது ,ஈர்ப்பு விதி மீது நம்பிக்கை ஏற்படச் சிறந்த வழி ,ஏதாவது சிறிய விஷயம் ஒன்று தேவை என்று சக்தியுடன் கேளுங்கள். ஈர்க்கக் கூடிய உங்கள் சக்தியை நீங்கள் உணர உணர பெரிய விசயங்களை ஈர்ப்பது பெரிய காரியமாக இருக்காது.
• நாளைய தினம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ ,அதை முன்கூட்டியே சிந்தனை மூலம் உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்களது வாழ்க்கையையும் உங்களது நோக்கப்படி உங்களால் அமைத்துக் கொள்ள முடியும்.

ASK   💰 BELIEVE  💰RECEIVE 💰

கடவுளைக் கண்டுபிடித்தது யார்?

<3 கடவுளைக் கண்டுபிடித்தது யார்?  <3

கடவுளைக் கண்டுபிடித்தது யார்?

தன்னுடைய வாழ்வுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள மனிதனின் மறுப்பே கடவுளா?

தனக்குள்ளே இருப்பதைப் பார்க்க மற்றவர் அஞ்சுவது போலவே பூசாரிகளும்தானே அஞ்சிக்கொண்டு இருக்கிறார்கள்.?

"பயம்தான் கடவுளைக் கற்பித்தது."

பூசாரிகளும் அந்தப் பயத்திற்கு எல்லோரையும் போல இரையாகிப் போனவர்தான்.

ஆனால் பூசாரிகள் மற்றவர்களை விடத் தந்திரசாலிகள்.

மனிதன் இருட்டைக்கண்டு பயந்த போது,நோயைக் கண்டு பயந்த போது,முதுமையைக் கண்டு பயந்த போது,இறப்பைக் கண்டு பயந்த போது

அவனைப் பாதுகாக்க ஒருவர் தேவை என்றாகி விட்டது.

எங்கும் எந்தப் பாதுகாப்பும் இல்லை.

அப்படி ஆகிவிடும் போது ஏதாவது ஒரு பாதுகாப்பை ஓர் ஆறுதலுக்காவது கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.

எனவே நமது பயம்,கிலி,சாவு

இவைதான் கடவுளைக் கற்பித்து விட்டன.

எல்லோரும் பயந்திருப்பதையும் ஏதாவது பாதுகாப்பையும் எதிர் நோக்கியிருப்பதையும் பூசாரி பார்த்தான்.

மக்களை ஏய்க்க பூசாரிகளுக்கு வழிகிடைத்து விட்டது.

அவர்கள் தரகர்களாகி விட்டார்கள்.

உன்னாலோ கடவுளைப் பார்க்க முடியாது.

அதனால் கடவுள் இருக்கிறார்தான் என்று சொல்லி தத்துவங்களையும் சாத்திரங்களையும்

கோவில்களையும் விக்கிரகங்களையும் சடங்குகளையும் பிரார்த்தனைகளையும் உருவாக்கி

நாடகமாட பூசாரி வந்து சேர்ந்தான்.

கடவுளுக்கும் உனக்கும் இடையே நின்றுகொண்டு

"நான் கடவுளோடு நேராகப் பேசுவேன் என்னிடம் என்னவென்று சொல் உன்னுடைய பாவங்களெல்லாம் சொல்லிவிடு

கடவுளிடம் சொல்லி உன்னை மன்னித்து விடச் சொல்கிறேன்."என்கிறான்.

கடவுளை உன்னால் பார்க்க முடியாது.

யாரோ ஒருவருக்குத் தெரியும் என்பதும்

கடவுளோடு நேரடித் தொடர்பு கொண்டுள்ள யாரோ ஒருவர் இருக்கிறார் என்பதும்

உனக்கு ஒரு பெரிய ஆறுதலாகிப் போகிறது.

"உன்னைவிட நன்றாகவே இந்தப் பூசாரிகளுக்குக் கடவுள் இல்லையென்பது தெரியும்."

ஆனால் பூசாரிகளின் தொழில்தான் உலகத்தின் மிக மோசமான தொழிலாயிற்றே.

விபச்சாரத்தைவிட அசிங்கமான தொழில்.

"விபச்சாரமே பூசாரிகள் ஆரம்பித்து வைத்த தொழில்தான்."

அது இரண்டாவது தொழில்.முதல் தொழில் பூசாரியுடையது.

பூசாரிக்கு அப்புறம் விபச்சாரியும் அதற்கு அப்புறம்தான் பிற நோய்களும் இருக்கின்றன.

பல மதங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பூசாரிகள் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு நாட்டிலும் பலதரப்பட்ட பூசாரிகள் இருக்கிறார்கள்.

ஆனால் எல்லோருமே ஆறுதல் வார்த்தை சொல்லி மக்களை ஏய்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கடவுள் இல்லையென்பது பூசாரிக்கு நன்றாகவே தெரியும்.அவருக்குத்தான் மிக நன்றாகத் தெரியும்.

கடவுள் அவருடைய வியாபரம்.

வியாபாரம் என்கிற போதே பிழைப்புஎன்றாகிப் போகிறது.

--ஓஷோ--

*10 செகண்ட் கதைகள்*

*10 செகண்ட் கதைகள்*

*அறியாமை*

''அம்மா, இதுகூடவா தெரியலை''  மிதுன், தன் அம்மாவுக்குப் புத்தம்புது ஆப் பற்றி விளக்கிக்கொண்டிருந்தபோது காலிங் பெல் சத்தம். வாசலில், கிராமத்தில் இருந்து அவனது அத்தையும் மாமாவும். கதவைத் திறந்தவன் கத்தினான், ''அம்மா... யாரோ வந்திருக்காங்க பாரு. எனக்குத் தெரியலை!''

- விக்னேஷ்வரி.

*நீதி*

நீதிபதி: குனிஞ்ச தலை நிமிராம நிக்கிறாங்க... இவங்களையா டிவோர்ஸ் பண்றீங்க?

அவன்: ஐயா... அவ இப்பக்கூட 'ஜட்ஜ்மென்ட் டே’னு ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணியிருக்கா!

- நித்யா துரைசாமி.

*உபதேசம்*

''தண்ணியை வேஸ்ட் பண்ணாமப் பிடிங்கப்பா!'' எனக் கத்திக்கொண்டிருந்தான், வழி முழுக்க தண்ணீரைக் கொட்டிக்கொண்டே வந்த லாரி டிரைவர்!

- எஸ்.சீனிவாசன்.

*பரிதவிப்பு*

''கையில இன்னும் பட்டாசு மருந்து ஒட்டிட்டு இருக்கு பாரு... கையை நல்லாக் கழுவிட்டு வந்து சாப்பாட்டுல கை வை''   தன் பத்து வயது மகனைக் கடிந்தாள் அந்த விதவைத் தாய், இருவரும் வேலைபார்க்கும் பட்டாசு கம்பெனியின் மதிய உணவு இடைவேளையில்!

- வி.சகிதாமுருகன்

*வரம்*

''பக்தா... உன் பக்தியை மெச்சினேன்.

என்ன வரம் வேண்டும்?''

''கடவுளே... நீங்க எனக்கு வரம் தந்தீங்கன்னு சொன்னா, ஒரு பய நம்ப மாட்டான். அதனால

ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா?''  

- வி.சகிதாமுருகன்

*பெற்ற உள்ளம்*

''என்னை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டுப் போகும் மகனுக்குத் தெரியவே கூடாது, அவனை நான் பக்கத்துத் தெருவில் உள்ள அநாதை ஆசிரமத்தில் இருந்துதான் தத்தெடுத்தேன் என!''

- எஸ்.மோகன்ராஜ்

*தலைமை*

தன் தலைமையில் வகுப்புத் தோழிகளுடன் அந்தச் சிறிய கிராமத்தை பக்காவாகச் சுத்தம்செய்து, 'க்ளீன் வில்லேஜ்’ புராஜெக்டை வெற்றிகரமாக முடித்து வீடு திரும்பினாள் தனிஷா. அம்மா கத்திக்கொண்டிருந்தாள், ''ஏழு கழுதை வயசு ஆகுது... இன்னும் உன் ரூமை சுத்தமாவெச்சுக்கத் தெரியலை. எல்லாம் போட்டது போட்டபடி கிடக்குது!''

- கே.லக்ஷ்மணன்

*வருத்தம்*

தனக்கு மூன்றாவதும் பெண்ணாகப் பிறந்துவிட்டதற்காக மிகவும் வருத்தப்பட்ட முருகன், பின் தன் வாழ்நாள் முழுக்க வருத்தப்படவே இல்லை!

- செ.ஜெயதுரை

*சைலன்ஸ்*

'பின் டிராப் சைலன்ஸ்...’ வகுப்பில் ஆசிரியர் சொன்னதும், அனைத்து மாணவர்களும் தத்தமது மொபைலை சைலன்ட் ஆக்கினர்!

- சாய்ராம்

*சம்சாரி*

அறுத்த நெல் அனைத்தையும் பண்ணையாருக்கு வட்டியாகக் கட்டிவிட்டு, ரேஷன் கார்டைத் தேடி எடுத்தார் சம்சாரி ராமசாமி, இலவச அரிசி வாங்க!

- வி.சகிதாமுருகன்

Friday, 8 July 2016

வாழ்வின் இலட்சியம்

நாம் ஒவ்வொருவரும் வாழ்வின் இலட்சியம் என்ன என்று அறிந்தால் தான் அது சார்ந்த அர்த்தமுள்ள விஷயங்களைச் செய்ய முடியும். பயணம் எங்கே என்று முடிவானால் தான் ரயிலிலா, பேருந்திலா, நடந்தா என்று முடிவு செய்ய முடியும். அதனால் முதலில் உங்களுடைய இலட்சியத்தை முடிவு செய்யுங்கள். அதன் பின் உங்களுடைய ஒட்டு மொத்தக் கவனத்தையும், ஒட்டு மொத்த நேரத்தையும், ஒட்டு மொத்த பயணத்தையும் அதை அடைவதில் செலவிடுங்கள். இதுவே மிக மிக முக்கியமான அடிப்படையான மந்திரச் சொல். இந்தச் சொல்லைத் தெரிந்திருந்திருந்தால் தான் பிற மந்திரச் சொற்கள் உங்களுக்கு அர்த்தம் கொடுப்பவையாக இருக்கும்.

Saturday, 2 July 2016

நெற்றிக்கண்

நமது இரண்டு கண்களுக்கும், மூக்கின் மேல் சுழி முனைக்கும், புருவங்களின் இடைநடுவே, சிறு ஊசித்துவாரத்தில் பத்தில் ஒரு பாக அளவில் மிக நுட்பமாக இருக்கும் துவாரத்திற்கு "நெற்றிக்கண்" என்று பெயர். இதை மிக இலேசாக சவ்வு மூடிக்கொண்டிருக்கிறது.
இடுப்புக்குக் கீழ்ச் சிறுநீர் துவாரத்திற்கும், மலத்துவாரத்திற்
கும் இடையேயுள்ள மூலாதாரத்தில் ஊரும் விந்தாகிய குண்டலினி சக்தியை முதுகுத்தண்டு எலும்புக்குள் மிகச் சிறிய துவாரத்தின் உள்ளே கூடிப் பிடரிப் பின்புறத்திலிருந்து "நெருப்பாறு மயிர்ப்பாலம்" என்றும் ரம்பப் பற்களைப் போல் சேர்ந்துள்ள சிரசின் நடு உச்சி மண்டை ஓட்டுக்குள் உள் வழியாகக் குருவின் பரிச உணர்ச்சியிலும், நுட்ப விவேகத் திறமையாலும், குண்டலினியை எழுப்பிக் கொண்டு வந்தால் நெற்றிக்கண் திறக்கப்படுகிறத
ு.
நெற்றிக்கண்ணைத் திறப்பதற்கு, அறிந்த ஞானாசிரியரோடு இருபது வயதிற்குமேல் அறிவோடு, விந்தும், தன் ஞாபகமும் கலந்தால்தான் முடிகிறது.இந்தக்கண் திறந்திருந்தால் அறிவிற்கு உணர்ச்சி நன்றாய்த் தெரியும். இதை வாசி [பிராணயாமம்] என்ற மூச்சுப் பயிற்சியாலும், மற்ற யோகங்களாலும் திறக்க முடியாது.
நெற்றிக்கண் திறந்தபின் பிடரிக்கண்ணிலும் உச்சிக்கண்ணிலுமுள்ள வலம்புரிச் சுற்றும் ஆறாதாரத்தின் அறிவுப் பெருக்கமும் சோம வட்டமும் நன்றாய் தெரியும். நெற்றிக் கண்ணால் பல விஷயங்களை உணர முடியும், பின் அதை அணுபோகத்தாலேயே அறிய முடியும்.
நெற்றிக்கண்ணை வணங்காதவர்கள் யாருமே இல்லை. இந்த இடத்தை வணங்குகிறோமென்று அவர்களுக்கு தெரியாமலேயே 'சலாம்' என்றும், 'வந்தனம்' என்றும், 'நமஸ்காரம்' என்றும், 'கும்பிடுகின்றேன்' என்றும் சொல்லியும் தங்கள், தங்கள் மத ஆசாரங்களுக்குத்தக்கபடி பொட்டிட்டும், விபூதி அணிந்தும், நாமம் இட்டும், தங்கள் தங்கள் கையையும், சைகைகளையும், நோக்கங்களையும் காட்டுகின்றனர். அரசாங்கத் தன்மை பிறப்பதும், தடுக்க முடியாத வீரமும், கோபமும், ஏற்படும் போது தத்தம் மூக்கு முனையைப் பார்த்தால் சாந்தம் ஏற்பட்டுவிடும்.
ஒரு மனிதனிற்கு உடம்பில் சூடு இல்லாமற் போனால் முன் சொன்னபடி நெற்றிக்கண்ணை ஞாபகத்தில் நினைத்தால் சூட்டை உற்பத்தி செய்து கொள்ளலாம். இந்த இடத்தில் பிறக்கும் சொற்கள் சமீப காலத்தில் பலித்தே தீரும். மிகப் பொல்லாதவனையும் அவன் நல்லவனாக வேண்டும் என்று அந்த இடத்திலிருந்து நினைத்தால் அவன் அப்பொழுதோ, அண்மைக் காலத்திலோ நல்லவனாகித் தீருவான் என்பது திண்ணம். ஆகையால் தான் இந்த இடத்திற்கு ஆக்கினை ஸ்தானம் என்று பெயர். ஆணவமழிவதற்கும், ஆணவம் உண்டாவதற்கும் உரிய இந்த இடத்தை நல்ல நினைவுகளுக்கு உபயோகித்துக் கொள்ளுங்கள்.
நெற்றிக்கண் பயன்கள்:
பாலகனாயிருக்கும் போது பக்தியைத் தேடவும், வாலிப காலத்தில் யோகத்தில் ஈடுபடவும், வாலிபங்கடந்து முதியவராகும் போது நாஸ்திக ஞான அறிவு விளக்கம் பெறவும், மனிதன் ம்யற்சிக்க வேண்டும். எட்டாதே என்று ஒரு ஏமாளி சொல்வானானால் எட்டும் என்று வைராக்கிய தீரன் சொல்லுவான். நெற்றிக்கண் திறப்பது என்பது தற்கலத்தில் உள்ள வெல்டிங் வேலையைப் போன்று அறுக்கவோ, ஒட்ட வைக்கவோ முடியாததைப் போல் ஒப்பிடப்படுகிறது.
ஒரு அரசனுக்கு ஞானமானது கிடைத்துவிட்டால் அது உலகத்துக்கே பயன்படுகிறது. ஒரு யுத்தத் தலைவனுக்குக் கிடைத்தாலோ அது வேகத்தோடு பரவுகிறது. ஒரு குடும்பத்தலைவன் பெற்றகாலத்து ஒழுக்கத்தையும் குடும்பவாழ்க்கை
யில் ஒரு நிம்மதியையும் கொடுக்கிறது.
மனிதன் ஆண்டவனை அறியவோ, ஆண்டவனாகப் போவதோ நெற்றிக்கண் உணர்வால் பெறப்படும். உடம்பில் பல வியாதியின் காரணமாக ஏற்படும் வலியை நெற்றிக்கண்ணில் நாட்டம் வைத்து அந்த உணர்ச்சியோடு உறங்கிவிட வியாதியனைத்தும் தீரும்.
"கடத்திலோர் இடத்தில் கறந்த ஞானப்பாலை
கனலான மூலக்கனலால் மூட்டி மூட்டிக்
கம்ப நுனிவழியாய்க் கண்மூக்கு மத்தியில் ஊட்டி ஊட்டிக்
கருத்திற்கிசைந்த சுவையைக் கபாலம் ஏற்றி ஏற்றித்
தன்மணிபோல ரசமணி திரள திரளக்
கண்ணுக்கு தெரியாத திரை ஆறும் தன்
திறமையால் திறக்கத் திறக்கத்
தன் காரணத்தைத் தானே தெரியலாமே."
"என் சொல்லை நெஞ்சால் கேளுங்கள், மிக தைரியசாலிகள் ஆவீர்கள்
நெற்றியால் கேளுங்கள், மரணபயத்தை நீக்கிக் கொள்வீர்கள்
தலையால் கேளுங்கள், அறிவாய் பிரகாசிப்பீர்கள்
துரித நிதானத்தோடு நிதானியுங்கள், உங்களில் நீங்கள் எல்லாம் அறிவீர்கள்."

மனசுக்கு மட்டும் மருந்த

மனசுக்கு மட்டும் மருந்து கொடுத்து பல நோய்களை குணப்படுத்துகிற
ார்கள். இந்த மாந்த்ரீகம் எல்லாம் அந்த வகையில் வருவது தான். அதற்கு பூத சிகிச்சை என்று பெயர். சரி இந்த பூத சிகிச்சை அனைவருக்கும் பொருந்துமா ?சென்ற பதிவின் தொடர்ச்சி என்றாலும் முதல் பாகம் படிக்காமல் புதியதாக படிப்பவருக்கும் புரியும்.
ஒருவரை தாக்கவேண்டுமேன்றால் இரண்டு விதங்களில் தாக்கலாம்.
1. உடலை தாக்குவது. ( நேரடியாக அவரது உடலை தாக்கி காயப்படுத்துவது )
2. மற்றொன்று மனதை தாக்குவது. (அவருடைய மனதை மட்டும் தாக்கினால் போதும்) கதை முடிந்தது. அது தானாக மனம் பாதித்து பிறகு உடலும் பாதித்து விடும்.
இந்த மனதிற்கும் இந்த உடலுக்கும் நிறைய தொடர்பு உண்டு.
உடல் பாதித்தால் மனம் பாதிக்கும்.
மனம் பாதித்தால் உடலும் பாதிக்கும்.
மாந்த்ரீகத்தில் நோய் குணப்படுத்த முடியுமா ?
முடியும்.
நோய் உடலில் ஏற்படுவது மனதில் ஏற்படுவது என இரண்டு விதம் உண்டு. மாந்த்ரீகத்தில் இரண்டையும் சரி செய்ய முடியுமா ?
மாந்த்ரீகத்தில் இரண்டையும் சரி செய்ய முடியும்.
அனைவருக்கும் மாந்த்ரீகத்தில் நோயை குணப்படுத்த முடியுமா ?
முடியாது.
என்ன குழப்பமாக உள்ளதா ?
சற்று விரிவாக பார்ப்போம்.
மந்திரம் என்றால் என்னவென்று முதலில் பார்ப்போம் பிறகு மாந்த்ரீகத்தை பற்றி பார்ப்போம்.
நமது முன்னோர்கள் பலர் மெய்ஞானம் மட்டும் அல்லாமல் விஞ்ஞானத்திலும் சிறந்து விளங்கினார்கள் என்பதை சற்று ஆழ்ந்து நோக்கும்போது புலப்படும். ஒலி (SOUND) யின் ஆற்றல், சிறப்பு அதன் பெருமைகளை இன்றைய விஞ்ஞானம் ஸ்ட்ரிங் தியரி தெளிவாகவும் தர்க்க ரீதியாகவும் சொல்கிறது. இந்த ஒலியின் சிறப்பை நம் முன்னோர்கள் எப்படி அறிந்தார்கள் என்பது தான் நம்மை இன்றும் வியப்படைய வைக்கிறது. ஒலி (SOUND) அலைகளாக பரவும். ஒவ்வொரு எழுத்து உச்சரிக்கும் போதும் ஒருவிதமான அதிர்வு (FREQUENCY) உண்டாகும். இந்த அதிர்வுகளை அடிப்படையாக கொண்டு எழும் ஒலிகளை HERTZ என்ற அளவில் அளப்போம்.
சரி இந்த ஒலியின் சிறப்பை அறிந்த நம் முன்னோர்கள் ஒலியை கேட்கும் ஒலி, கேளா ஒலி என பிரித்தனர். கேட்கும் ஒலியும், கேளா ஒலியும் அதிர்வுகளின் அடிப்படியில் தோன்றுபவைதான்.விஞ்ஞானம் மற்றும் மெய்ஞானம் அறிந்த நம் முன்னோர்கள் இந்த இரண்டிற்கும் அப்பாற்ப்பட்ட ஒரு ஒலியை அறிந்து அதற்கு ஆதிநாதம் ( Pri - Mordial Sound) என அழைத்தனர். ஒலி இல்லாத இடம் இந்த உலகில் இல்லை. இந்த உலகத்திற்கு வெளியிலும் ஒலி உள்ளது. அதே போல் ஒலி உண்டாக்காத எந்த ஒரு பொருளும் இங்கு இல்லை. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து அசைவுகளும் அதற்கேற்றவாறு ஒலி உண்டு செய்யும். அணு முதல் அண்டம் வரை சதா ஒலித்துக் கொண்டு இருந்துக் கொண்டிருக்கிறது. இதற்கு நல்ல சான்று ஸ்ட்ரிங் தியரி.
எழுத்துகளில் உள்ள ஒலி ஆற்றலை கண்டறிந்த முன்னோர்கள் அதை ஒழுங்குபடுத்தி பல அதிர்வுகளை உண்டாக்கும் எழுத்துகளை ஒன்று சேர்த்து பல புதிய அதிர்வெண்களை உண்டாக்கும் சொற்களை தோற்று வித்தனர். இத்தகைய ஒன்று சேர்த்த அதிர்வெண்கள் மிகுந்த ஆற்றல் உடையது என கண்டறிந்தனர். இவ்வாறு ஒன்று சேர்ந்த ஒலிக் கூட்டங்களுக்கு மந்திரங்கள் என அழைக்க பட்டது.
சாதாரண ஒலிக் கூட்டங்களால் ஏற்படும் அதிர்வெண் (மந்திர) களுக்கு எப்படி இவ்வளவு ஆற்றல் வரும் ? என சந்தேகம் தோன்றுவது இயல்பு தான