Monday 30 January 2017

நல்ல எண்ணங்களும் கெட்ட எண்ணங்களும்

எல்லோருக்கும் நல்ல எண்ணங்களும் கெட்ட எண்ணங்களும் கலந்தே வருகிறது!
இதில் கெட்ட எண்ணங்களை எடுத்து செயல்படுத்துபவர்களுக்கே பிரச்சனை ஏற்படுகிறது!
உதாரணமாக உங்கள் உயிர் நண்பர் நீங்கள் செய்த தவறுக்காக உங்களை அடித்து விடுகிறார். தவறு உங்கள் மீது இருந்தாலும் உங்களுக்கு கோபம் என்ற உணர்வு மூலம் அவரை திருப்பி கடுமையாக தாக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்! அந்த தீயெண்ணத்தை எடுத்து செயல்படுத்திவிட்டிர்கள் எனில், ஓர் நல்ல நட்பை நீங்கள் இழக்க வேண்டி வரும்!
அதே சமயத்தில் வந்த தீயெண்ணத்தை கண்டுகாமல் விட்டுவிட்டு அமைதியாக இருந்து விட்டால் அந்த பிரச்சனை பாதிப்பு இல்லாமல் முடிந்து விடும் அல்லவா!
அதனால் முடிந்தவரை தீயெண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்காதீர்!
பெரும்பாலும் நல்லெண்ணங்களை எடுத்தி செயல்படுத்தி சாமர்த்தியத்துடன் வாழ்பவனே! நிம்மதியை அடைகிறான்!
மற்றவர்கள் துன்பத்தில் திலைக்கிறார்கள்!
எண்ணங்கள் கடலில் உண்டாகும் அலைகளை போன்றது!அதை தடுக்கவோ கட்டுபடுத்தவோ முடியாது! ஆனால் எண்ணத்தை எடுக்கும் உரிமை நம்முடையது தான்! எனவே பார்த்து எடுங்கள்! மகிழ்சியாக வாழங்கள்!