Friday, 3 July 2020

ரெயின் கோட்டும் நானும்

படிக்கவும். படித்த உடன் மறந்து விடவும்.     -அப்பா இந்தா உன்னோட ரெயின்கோட் இதை இப்ப போட்டுக்கப்பா - நான் ஏன்டா ரெயின்கோட் போட்டுகோனும் வீட்டு குள்ளதானே இருக்கோம் அப்புறம் எதுக்கு நான்ரெயின் கோட் போடணும் - இப்ப போட்டுக நாளைக்கு மழை வரும் - நாளைக்கு தானே மழை வரும் நாளைக்கு வெளியில போகும்போது போட்டுகிறேன் - இப்ப வீட்ல இருக்கில இப்பவே போட்டுக்க - நாளைக்கு மழை வராட்டி உன்ன என்ன பண்றது - நாளைக்கு வராட்டி நாளை கழித்து வரும்பா - டேய் என்னை கடுப்பேத்தாதே - அப்ப நீ என்னை கடுப்பேத்தும் போது எனக்கு எப்படி இருக்கும் - என்னப்பா சொல்லுறே - சரி விடு - அப்படி எல்லாம் விட முடியாது என்னனு சொல்லு – நான் சொல்லுறேன் மழை வரும்  ரெயின் கோட் போட்டுகனு நீ முடியாது வீட்ல தானே இருக்கிறேன் நீ வெளியில  மழையில் போகும் போது போட்டுகிறனு சொல்லுற - அதுக்கு - நான் வெளிய போய் விளையாடுறேனு சொன்னா புக்கை படி ஹோம் வொர்க் செய்னு சொல்லுற - அப்படி இல்லடா நீ செல்லுறது வேற நான் சொல்லுறது வேற -நான் சொல்லுறது உன்னோட அறிவை வளர்க்க ,நீ சொல்றது முட்டாள்தனமானது - அது எப்படி? நம்ம வீட்டு வந்து சாப்புடுற புறாக்கு அறிவு இருக்கா இல்லையாப்பா? - அதுக்கு அறிவு இருக்குறதுனாலதான்டா பசிச்சா இங்க போனா சாப்பாடு கிடைக்கும்னு வருது-அப்ப எனக்கு அறிவு இல்லைனு சொல்லுறியாப்பா - அப்படி சொல்லல அதை விட நீ புத்திசாலி அதனால தான் உன்னை படினு சொல்லுறேன் - சரிப்பா நான் படிச்சு டாக்டார் ஆகிறேன் - குட் போய் படி- அப்ப இந்த ரெயின் கோட்ட போட்டுக் கப்பா - வீட்ல இருக்கும் போது ரெயின் கோட் போட்டா வேர்க்கும் டா - வேர்க்கம இருக்குறதுக்கு ஏசி போட்டு கலாம் பா - சரி நீ சொல்லுற மாதிரி ஏசி போட்டு நான் ரெயின் போட்டுகிறேன் எனக்கு வேர்க்காது  கரண்ட் பில் யார் கட்டுவா -அதுக்கு தான் நீ பிசினஸ் பன்னுறில அதுல கட்டு சரியா-இல்லடா யாராவது நம்ம வீட்டுக்கு வந்தா என்னை கேவலமா பார்பாங்கடா ஏசி போட்டு ரெயின் கோட்டு போட்டு உட்கார்ந்து இருக்கிறதை பார்த்தா - ஏசி எதுக்குப் பா வேர்க்காம இருக்குறதுக்கு தானே வரவங்ககிட்ட சொல்லு - இல்லடா உனக்கு நான்  புரியுற மாதிரி சொல்லுறேன் வீட்ல இருந்து கிட்டு ரெயின் கோட் போட்டா அப்பாக்கு வேர்த்து சளி புடிக்கும் அப்புறம் டாக்டர் கிட்ட போகனும் ஊசி மருந்து மாத்திரை வாங்கி சாப்பிடனும்.இது நமக்கு தேவையடா அதுக்கு பதிலா மழை வரும் போது நான் மழையில் வெளியே செல்லும் போது போட்டுகிறேன் -அதெல்லாம் முடியாது இப்பவே ரெயின் கோட் போடு சளி புடிக்காதுப்பா அதுதான் ஏசி போட்டு இருக்கோம்ல -டேய் நீ லுசா டா - நீ தான்பா லுசு -ஏண்டா இப்படி படுத்துறே, சரி உன்கிட்ட ஒரு கேள்வி புறா எல்லாம் ரெயின் கோட் போட்டுட்டா இப்ப இங்கு இருக்கு. -புறாவை விட நான் அறிவாளி நீதானே சொன்னே | -இன்னைக்கு எனக்கு சத்ய சோதனை டா -சரிடா புறாவின் குழந்தை அப்பா புறாவை எப்பவாது ரெயின் கோட் போட சொல்லி இருக்கா - அப்பா புறா குழந்தைக்கு தெரியும் மழை பெய்யும் போது நம்ம அப்பா வெளியே போகதுனு - ஆனா நீ போவில - நானும் புறாவும் ஒன்னடா ,அது பறக்கும் ,எங்க வேணா போகும் என்ன வேணா அதுக்கு பிடிச்சத சாப்பிடும் அப்புறம் செத்து போய்டும் - அப்ப நீ சாக மாட்டியப்பா - எனக்கும் வயசு முடிஞ்சு போச்சுன்னா செத்து போய்டுவேன் - புறாக்கு வயசு. முடிஞ்சு போச்சுனாலும் செத்துரும்டா - உனக்கும் வயசு முடிஞ்சு போச்னா நீ செத்த்துருவ அப்படி தானேப்பா - ஆமண்டா சாமி உனக்கு புரிய வைக்குறதுக்குள்ள எனக்கு உசுரு போய் உசுரு வந்துருச்சு - உசுரு போனா வருமாப்பா - வரும்டா - உசுருன்னா என்னப்பா - பயம் டா - பயம்னா என்னப்பா - நீ நான் சொன்னா அடங்கமட்டே இரு நீ ஹோம் ஒர்க் பண்ணலைனு உங்க ஸ்கூல் மிஸ் அப்புறம் பிரின்சுபாலுக்கு போன் பண்ணி இப்பசொல்ல போறேன்  - வேண்டாப்பா பிளிஸ் சொல்லிடாதே பிளில் பிளஸ்பா- இதுக்கு பேர் தான் பயம் புரிந்ததா என் மகனே. உன்னை என்னிடம் சரணடைய உன்னிடம் உள்ள *பலவீனத்தை* நான் பயன்படுத்தினே் உனக்குள் ஓர் மாற்றம் ஏற்பட்டதா இதுக்கு பேர் தான் *பயம்*- சரிப்பா இந்தா உன்னோட ரெயின்கோட் இப்ப போட்டுக்க - கதையின் தொடர்ச்சி முதலில் இருந்து படிக்கவும்.