Monday, 13 March 2017

உங்களுக்கு 50 வயதாகிவிட்டதா?

உங்களுக்கு 50 வயதாகிவிட்டதா? அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!!!!

ஒஷோவின் அறிவுரைகள்: (50 வயதைக் கடந்தவர்களுக்கு)

நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை. சனீஷ்வரன் போர்டிங் பாஸ் கொடுத்தால், போக வேண்டியதுதான்.

அதுபோல போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை. ஆகவே கஞ்சத்தனமாக - உங்கள் மொழியில் சொன்னால் சிக்கனமாக
இருக்காதீர்கள். செலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.
உங்களால் முடிந்த தான தர்மங்களை யோசிக்காமல் செய்யுங்கள்!

எதற்கும் கவலைப் படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும்
நிறுத்த முடியுமா? வருவது வந்தே தீரும்! நாம் இறந்த பிறகு, நமது
உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப் படாதீர்கள். அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுக்களோ அல்லது விமர்சனங்களோ
உங்களுக்குத் தெரியப் போவதில்லை. சிம்ப்பிள்-நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும், உங்கள் வாழ்க்கையோடு சேர்த்து முடிவிற்கு
வந்துவிடும். உங்களைக் கேட்காமலேயே அவைகள் முடிக்கப்பட்டுவிடும்.  உங்களின் குழந்தைகளைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அவர்களின்
வாழ்க்கை அவர்களுக்கு விதித்த விதிப்படிதான் அமையும். அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை! children will have their own
destiny and should find their own way.Life should have more to it than working from the cradle to the grave!!*

ஐம்பதைத் தாண்டிவிட்டீர்களா? சம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். பங்குச் சந்தைகள் பக்கம் தலை வைத்துப் படுக்காதீர்கள்.
பணத்தைவிட உங்களின் ஆரோக்கியம் முக்கியம். பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது! ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும், நாளொன்றிற்கு
அரை கிலோ அரிசிக்கு மேல் உங்களால் உண்ண முடியாது. அரண்மனையே என்றாலும் கண்ணை மூடி நிம்மதியாகத் தூங்க எட்டுக்கு எட்டு இடமே
போதும். ஆகவே ஓரளவு இருந்தால், இருப்பது போதுமென்று நிம்மதியாக இருங்கள்!

ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினைகள் இருக்கும். பிரச்சினை இல்லாத மனிதனைக் காட்டுங்கள் பார்க்கலாம்?
ஆகவே உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். பணம், புகழ்,
சமூக அந்தஸ்து என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும்
இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள்!

யாரும் மாற மாட்டார்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள்.
அதனால் உங்களின் நேரமும் ஆரொக்கியமும்தான் கெடும். அதை
மனதில் வையுங்கள். நீங்கள் உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி,
அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். நீங்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் ஒவ்வொரு நாளும்
உங்கள் வாழ்க்கையை வளமாக்கிவிட்டுப் போகும். மாறாக மகிழ்ச்சியில்லாமல் கழியும் ஒவ்வொரு நாளும் உங்கள் அரோக்கியத்தைப் பதம் பார்த்துவிட்டுப் போகும். அதை மனதில் வையுங்கள். மன மகிழ்ச்சிதான் ஆரோக்கியத்திற்கு அடிப்படை !

உற்சாகத்தோடு இருக்கும்போது நோய் நொடிகள் குணமாகும். அனுதினமும் உற்சாகத்தோடு இருப்பவர்களை நோய் நொடிகள் அண்டாது!!!

நல்ல மனநிலை, உடற்பயிற்சி, சூரிய ஒளி, நல்ல உணவு, தேவையான விட்டமின்கள் ஆகியவை இன்னும் 20 அல்லது 30 ஆண்டுகள் உங்களை
வாழவைக்கும்!! அதற்கு மேல் என்ன வேண்டும் சொல்லுங்கள்?

எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களைச் சுற்றி நடப்பவை  நல்லவைகளாகவே இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் மனைவி, மக்கள்,
நண்பர்கள் என்ற பெரிய வட்டம் உங்களுக்கு அதைக் கொடுக்கும். அவைகள்தான் (அவர்கள்தான்) உங்களை இளைமையாகவும்,
அனைவரும் விரும்புபடியாகவும் வைத்துக்கொள்வார்கள்!!!!

வரும் நாட்கள் நலமாக இருக்க வாழ்த்துக்கள்!!!!!

Friday, 10 March 2017

சுவருடன் உரையாடு

🙏தியான யுக்தி....👇�

சுவருடன் உரையாடு👇�

உனது அறையில் உட்கார்ந்து கொண்டு தனிமையில் பேசு. நீ பேசுவதை கவனிக்க யாரும் அங்கிருக்க தேவையில்லை. உண்மையில் யார் கவனிக்கிறார்கள் ? நீ சுவருடன் பேசலாம், அது இன்னும் அதிக மனித்தன்மையுடையதாக இருக்கும். ஏனெனில் நீ யாருக்கும் எந்த பிரச்னையையும் உருவாக்கப் போவதில்லை. நீ யாரையும் கொடுமைப்படுத்துவதில்லை, நீ யாருக்கும் சலிப்பை ஏற்படுத்துவதில்லை.

ஆனால் அமுக்கி வைக்காதே. அடக்கி வைத்தல் உன்னுள் ஒரு சுமையை ஏற்படுத்தும். சுவரின் எதிரே உட்கார்ந்து நல்லதொரு உரையாடலை செய். ஆரம்பத்தில் அது சிறிதளவு பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும், ஆனால் அதை அதிக அளவு செய்ய செய்ய அதில் உள்ள அழகை உன்னால் பார்க்க இயலும். அதில் குறைந்த அளவு வன்முறையே உள்ளது. அது யாருடைய நேரத்தையும் வீணடிப்பதில்லை, ஆனால் அது அதே வழியில் அதே வேலையை செய்கிறது. நீ சுமை குறைந்ததை உணர்கிறாய்.

சுவருடன் நடக்கும் ஒரு நீண்ட பேச்சுக்குப் பின் நீ மிகமிக தளர்வாக உணர்கிறாய். உண்மையில் ஒவ்வொருவரும் அப்படி நடக்க விரும்புகின்றனர். மக்கள் சுவருடன் உரையாட ஆரம்பித்துவிட்டால் இந்த உலகமே இன்னும் சிறப்பானதாகவும் அதிக அமைதியானதாகவும் இருக்கும்.

முயற்சி செய்து பார். இது ஒரு ஆழமான தியானமாகும். சுவர் கவனிப்பதில்லை என்று மிகவும் நன்றாக தெரியும், ஆனால் அது ஒரு பொருட்டல்ல என்பதால் இது ஒரு நல்ல தியானமாகும்.

ஓஷோ...

Wednesday, 8 March 2017

வாழத்தெரிந்து கொள்வது.

எனக்குப் பணம் வேண்டும். அதைச் சம்பாதிக்க வழி சொல்லுங்கள். இப்படிக் கேட்பவர்கள் கோடிக் கணக்கில் இருக்கிறார்கள்.
கையில் ஆயிரம் ரூபாய் நோட்டுக் கற்றைகளாக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த நிலையிலாவது உங்களுக்குத் திருப்தி ஏற்படுகிறதா? இவை இந்திய ரூபாயாக இருப்பதற்குப் பதில் ஈரோவாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றுதான் உங்கள் எண்ண ஓட்டம் அமையும்.
எத்தனை எத்தனை கோடிகளை உங்களிடம் கொடுத்தாலும் உங்கள் உள்ளம் அந்தக் கோடிக்கு மேலும் பல கோடிகளைச் சேர்க்க வேண்டும் என்றுதான் அலையும்.
உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும்? ஆயிரம்? லட்சம்? கோடி? அதை முதலில் முடிவு செய்யுங்கள்.
நீங்கள் கேட்ட தொகை இதோ என்று எடுத்துக் கொடுக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள்?
வீடு வாங்குவீர்கள், கார் வாங்குவீர்கள், நகை எடுப்பீர்கள், உலகத்தைச் சுற்றிப் பார்ப்பீர்கள், சொகுசாக வாழ்வீர்கள்.
நீங்கள் இதையே தலைகீழாகச் சாதிக்கலாம்...
எப்படி?
முதலில் வாழ்க்கையை இனிமையாக வாழத்தெரிந்து கொள்வது... அப்புறம் பணமே உங்களைத் தேடி வரும்படி வழி செய்து கொள்வது...
என்ன இது? இப்படிக்கூட நடக்குமா?
நடக்கும் என்பதைக் காட்டத்தான் இந்தப் பக்காமே.
கட்டளைகளைப் பின்பற்றுங்கள். காசு தானே வரும்.

Sunday, 5 March 2017

உங்கள் வாழ்க்கையை மாற்ற

🌹நல்லதே நடக்கிறது🌹 அறிவியலோடு சேர்ந்த ஒரு சில ..........   கவனத்திற்காக *உங்கள் வாழ்க்கையை மாற்ற வல்ல மகத்தான 12  கர்ம விதிகள்*

1. *மகத்தான விதி  "காரணி மற்றும் விளைவு விதி* " “Law of Cause and Effect.”

" எதை விதைக்கிறாயோ அதையே அறுக்கிறாய் "
நம்முடைய எண்ணங்களுக்கும் , செயல்களுக்கும் விளைவுகள் உள்ளன. அவை நல்லவையாக இருந்தாலும் சரி  கெட்டவையாக   இருந்தாலும் சரி. அமைதி, அன்பு , நல்லிணக்கம் ,வளமை ஆகியவற்றை விரும்பினால் அவையே நமக்கு கிடைக்கும்.. ,,இந்த உலகில் நாம் இடும் ஆற்றலுக்கு (எண்ணமும், செயலும்) உடனடியாகவோ அல்லது காலம் கழித்தோ கட்டாயம்  விளைவு உண்டு.

2. *படைத்தல் விதி* ( Law of creation )

வாழ்க்கையில் எதுவுமே அதுவாக நடப்பதில்லை , நாம் அதை நடக்க வைக்க வேண்டும் ..நாம் எதை விரும்புகிறமோ அவை நம்முடைய பங்களிப்பு மூலமாக நமக்கு வருகிறது.  நம்மை சுற்றியுள்ள அனைத்துமே யாரோ ஒருவரின் எண்ணத்தில் உதித்தது தான்.நாமும் இந்த  பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து இருப்பதால் படைப்பின் பரிணாம வளர்ச்சியில்  நம்முடைய நோக்கங்களும் இருக்கிறது .ஆகவே  நமக்கும் நம்மைச்சுற்றியுள்ள சமூகத்தின் விருப்பத்திற்கும்  உகந்ததாக நம்முடைய படைப்பு இருக்குமாறு பார்த்துக்கொள்வது நமது பொறுப்பாகும் ..

3. *பணிவு விதி* ( Law of Humility )

மிகப்பெரிய மாற்றங்கள் வருவதை நாம் மனமுவந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக்கொள்ளும் தன்மை என்பது பிரபஞ்ச கோட்பாடாகும் .இது எல்லா அமைப்புகளிலும் உள்ள விதி.பெரிய மாற்றங்களை வேண்டினாள் நிகழ்கால சூழ்நிலைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்..அதே சமயம் எதிர்மறையான விஷயங்களை மாற்ற எதிர்மறையான போக்குகளை கடைபிடித்தால் கடைசியில் அதன் விடை பூஜ்யமாகத்தான் இருக்கும்

4. *வளர்ச்சிவிதி* ( Law of Growth)

நமது சுயவளர்ச்சி எப்பொழுதும் எந்த சூழ்நிலையிலும் நம் கையில் தான் உள்ளது.. நாம் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஒரே நபர் நாம்தான்..நாம் மாறும்பொழுது நமதுவாழ்க்கையும் அதற்கேற்றாற்போல் நம்முடன் சேர்ந்து மாறுகிறது .உண்மையான வளர்ச்சி அல்லது மாற்றம் நாம் எப்பொழுது முழுமனதோடு அர்ப்பணித்து மாறுகிறோமோ அப்பொழுதான் நடக்கிறது.

5. *பொறுப்பு விதி* ( Law of Responsibility )

நம் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் நாம் பொறுப்பேற்கவேண்டும், நம்முடைய வாழ்க்கை நாம் செய்வதில்தான் உள்ளது வேறெதினாலும் கிடையாது.. வாழ்க்கையில் ஒருவருக்கு ஒரு தடுமாற்றம் வரும்பொழுது மனதில் நிறைய தடுமாற்றங்கள் வருகின்றன. அதை மாற்ற வேண்டுமென்றால் நமது எண்ணங்களை மாற்றி பிறகு நம்மைச்சுற்றியுள்ளவற்றை மாற்றவேண்டும் ..

6. *தொடர்பு விதி* ( Law of Connection )
இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை .பெரியதாக இருந்தாலும் சரி , சின்னதாக இருந்தாலும் சரி. நமது கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையபவை.  இந்த தொடர்புகளை பயன்படுத்தி நாம் விரும்பும் மாற்றத்திற்கு வழி செய்ய வேண்டும்.

7. *கவன விதி* ( Law of Focus )

ஒருவனால் ஒரே நேரத்தில் பல பணிகளில் கவனத்தை செலுத்தமுடியாது ,, ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களை சிந்திக்க முடியாது , நமது ஆன்மீக வளர்ச்சியை எடுத்துக்கொண்டால் ஒரே நேரத்தில் எதிர்மறை சிந்தனை மற்றும் செயல்களை கொண்டு அதனை அடைய முடியாது ,நமது முழுக்கவனத்தையும் ஒரே பணியில் இருத்தி அதனை அடைய வேண்டும்..

8. *விருந்தோம்பல் மற்றும் கொடுத்தல் விதி* ( Law of hospitality and giving)

நம்முடைய பழக்கவழக்கங்கள் நமது எண்ணங்கள் மற்றும் செயல்களோடு ஒத்துப் போகவேண்டும் . நமது சுயநலமற்றதன்மையை செயல் விளக்கம் அளிப்பதே நமது உள்நோக்கமாக இருக்க வேண்டும்..சுயநலமின்மை என்ற கோட்பாடு ஏதாவது நமக்கில்லாமல் இந்த சமுதாயத்திற்கு பண்ணும்பொழுதுதான் தெரியும் அதுவே மிகப்பெரிய சந்தோசம்.. ஒரு சுயநலமிமையில்லாமல் ஆன்மீக வளர்ச்சி என்பது இல்லவே இல்லை..

9. *மாற்றம் விதி* (Law of Change )

மாற்றம் இல்லாவிட்டால் அதே வரலாறு திரும்ப திரும்ப வரும் . மாற்றத்திற்கான மனப்பூர்வமான அர்ப்பணிப்பு மட்டுமே கடந்த காலத்தை மாற்ற வல்ல ஒரே வழி.  நேரமறையான அழுத்தங்களும் மாற்றங்களும் இல்லையென்றால் வரலாறு மாறாது..

10. *இங்கே இப்பொழுதே விதி* : Law of NOW and HERE

நாம் அனைவரிடமும் இருப்பது நிகழ்காலம் மட்டுமே
வருத்தத்துடன் கடந்த காலத்தை பார்ப்பதும் , பயத்துடன் எதிர்காலத்தை பார்ப்பதும் நிகழ்காலத்தை கொள்ளையடித்துவிடும், பழைய முறை சிந்தனைகளும் நடத்தை முறைகளும் நிகழ்காலத்தை அழித்து மாற்றங்களை வர விடாது..

11. *பொறுமை மற்றும் வெகுமதி  விதி* ( Law of Patience and Rewards)

பொறுமையான மனநிலை இல்லாமல் எந்த ஒரு மகத்தானத்தையும் அடைய முடியாது.பொறுமையும் விடாமுயற்சியும் அனைத்து வெற்றிக்குமான வெகுமதியை பெற வழிகளாகும்,வேறெந்த வழியுமில்லை. 
வெகுமதிகள் மட்டுமே  விடையின் கடைசி அல்ல , சத்தியம் , நீடித்த சந்தோசம் மற்றும் உற்சாகம் அனைத்துமே எதை சரியாக இந்த உலக மற்றும் நமது சந்தோஷத்திற்காக  செய்யவேண்டும் என்பதை அறிந்து செய்வதில்தான் இருக்கிறது..

12. *முக்கியத்துவம் மற்றும் அகத்தூண்டுதல் விதி* (Law of Signifigance and Inspiration)

நாம் அளித்த ஆற்றல் மற்றும் முயற்சியின் இறுதி வடிவம் தான் நமக்கு கிடைக்கும் வெற்றி .. ஆகவே முழுமனது மற்றும் அகத்தூண்டலுடன் சுயநலமில்லாமல் நாம் செய்யும் அனைத்துமே மிக முக்கியத்தும் மிக்கவை,,காலத்தாலும் மறக்காத காரியமாக இருக்கும்..!

Wednesday, 1 March 2017

உங்களுடையவை

உங்கள் மனதில் நிறைந்துள்ளவை எல்லாம் உங்களுடையவை அல்ல.

நீங்கள் அவற்றையெல்லாம் தாண்டியவர்கள்.

நீங்கள் அவற்றுடன் உங்களை அடையாளப் படுத்தி  கொள்கிறீர்கள்.

அதுமட்டும்தான் பாவம்,

குற்றம்.

உதாரணமாக,

யாராவது உங்களை அவமதித்து விடுகிறார்கள்

நீங்கள் கோபமடைகிறீர்கள்

.நீங்கள் கோபம் அடைவதாக எண்ணுகிறீர்கள்.

ஆனால் அறிவியல் ரீதியாகப் பார்க்கும்போது

அவரது அவமதிப்பு ஒரு ரிமோட் கண்ட்ரோல்.

உங்களை அவமதித்த மனிதன் உங்களுடைய நடவடிக்கையைக் கட்டுப் படுத்துகிறான்.

உங்களது சுதந்திரத்தை பறிக்கிறான் .

உங்களது கோபம் அவன் கையில் உள்ளது.

நீங்கள் ஒரு கைப்பாவையாகச் செயல் படுகிறீர்கள்.

இதில் இருந்து நீங்கள் விடுபட வேண்டும் .

நீங்கள் எதிர் செயல் செய்யாமல்

உங்கள் செயல்கள் உங்கள் விருப்பத்தில் இருந்து பிறக்க

வேண்டும் .

--- ஓஷோ ---

Sunday, 26 February 2017

பிரச்சினையா?அசௌகரியமா? 

*வாழ்க்கை பாடம்:*

 பிரச்சினையா?அசௌகரியமா? 

*Life lessons *

-Problems? Inconveniences

அமெரிக்க கப்பற்படையில் மிகப் பெரிய பதவி வகித்து ஓய்வு பெற்ற ஒருவர், ’நான் கற்ற பாடம்’ என்ற தலைப்பில் அவர் வாழ்க்கையில் கற்ற பாடத்தைப் பற்றி எழுதியுள்ளார்.

அவர் கப்பற்படையில் சிறிய பதவியில் இருந்த காலம் அது. நடுக்கடலில் இருந்த கப்பலில் ஏதோ சிரமமான வேலை அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. வேலைப்பளு அதிகம் இருந்த ஒரு நாள், வேறு சில கூடுதல் பணியும் அவர் தலையில் விழ... அவருக்கு கோபம் தாளவில்லை. நேராக தன் உயரதிகாரியான கப்பலின் கேப்டனிடம் சென்று கோபத்தில் கத்தியிருக்கிறார்.

 ‘முதலிலேயே என் பணிக்கு உதவியாளரை தரவில்லை. இப்போது கூடுதல் வேலை வேறு தருகிறீர்கள். எனக்கு பிரச்சினைக்கு மேல் பிரச்சினை (problem) தருகிறீர்களே? எப்படி என்னால் வேலை பார்க்க முடியும்?’ என்கிற ரீதியில் சுமார் கால் மணி நேரம் விடாமல் பொரிந்து தள்ளியிருக்கிறார். அவர் பேசியதில் 'பிரச்சினை’ என்ற சொல் பல முறை உபயோகப்படுத்தப் பட்டிருக்கிறது.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட கப்பலின் வயதான கேப்டன் அமைதியாகச் சொன்னாராம்:

‘நீ பேசும்போது பிரச்சினை’ என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தினாய். பிரச்சினை என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா? உனக்கு முதுகுத்தண்டு முறிந்து போய் படுத்த படுக்கையாய் இருக்கிறாய். அது குணமாக வருடக்கணக்காகும் என்றால் அது பிரச்சினை. உன் வீடு எரிந்துபோய், இருக்கின்ற எல்லாவற்றையும் இழந்து நீ நடுத்தெருவில் நின்றால் அது பிரச்சினை... ஆண்டாண்டு காலம் முயன்றால் மட்டுமே சரி செய்ய முடியும் அல்லது சரி செய்யவே முடியாது என்கிற வகையில் வருவது மட்டுமே பிரச்சினை. இதுபோன்ற பிரச்சினைகள் மனிதனின் வாழ்க்கையில் ஓரிரண்டு வரலாம். வராமலும் இருக்கலாம்.

மற்றபடி நீ பிரச்சினை என்ற பெயரில் சொல்கின்ற எல்லாமே அசௌகரியங்கள் (inconveniences). இதுபோன்ற அசௌகரியங்கள் வாழ்க்கையில் நிறைய வரும். அந்தந்தச் சமயத்தில் இவை பெரிதாகத் தோன்றும். ஆனால் மணிக்கணக்கிலோ, நாட்கணக்கிலோ இவை சமாளிக்கப்பட்டு மறக்கப்படக் கூடியவை. பின்னாளில் யோசித்துப் பார்த்தால் அவை, அற்ப விஷயங்களாகத் தோன்றும். இப்போது ஆத்திரப்படும் உனக்கே ஆறு மாதம் கழித்து நினைத்துப் பார்க்கையில் இது அவ்வளவு பெரிய விஷயமாய் தோன்றாது. நான் சொல்வதை நன்றாக நினைவு வைத்துக்கொள். நமது வாழ்க்கை முழுவதும் எல்லாக் கட்டங்களிலும் இதுபோன்ற அசௌகரியங்கள் நிறையவே இருக்கும். இதற்கெல்லாம் பிரச்சினை என்ற பெயரிட்டு வாழ்க்கையைப் பார்த்தால் நீ என்றுமே மகிழ்ச்சியாய் இருக்க முடியாது‘ என்று மிகவும் அமைதியாக அறிவுரை கூறியிருக்கிறார்.

அவர் சொன்னது மிகப் பெரிய பாடமாக எனக்கு இருந்தது. அன்றிலிருந்து நான் எனக்கு சிக்கலை ஏற்படுத்தும் சூழ்நிலைகள் வரும்போதெல்லாம் அது உண்மையான பிரச்சினையா, இல்லை அப்போதைய அசௌகரியமா என்று என்னையே கேட்டுக்கொள்ள ஆரம்பித்தேன். நம் வாழ்க்கையில் அசௌகரியங்களைத் தான் அதிகம் சந்திக்கிறோம் என்றும் உண்மையில் அவை அவ்வளவு பெரிய விஷயங்கள் அல்ல என்றும் புரிய ஆரம்பித்தது.

 கோபம், வருத்தம் எல்லாம் குறைய ஆரம்பித்து பொறுமையும், அமைதியும் என்னில் பெருக ஆரம்பித்தது" என்று அனுபவப் பூர்வமாகச் சொல்லியிருந்தார்.

*நீங்களும் நிதானமாக யோசியுங்கள்*:

*உங்கள் பிரச்சினை உண்மையில் பிரச்சினைதானா*, 

*இல்லை தற்போதைய அசௌகரியமா என்று!*

Friday, 17 February 2017

துன்பம் நிரந்தரமாய் நீங்க...

துன்பம் நிரந்தரமாய் நீங்க...

துன்பம் வரும்போது அதை அப்படியே அனுபவியுங்கள்.அதைக் கண்டு ஓட வேண்டாம்.அப்படி ஓடினால் அது உங்களைத் துரத்திக் கொண்டுதான் வரும்.

அதை மறக்க நினைத்தால் அது உங்கள் மனதில் ஆழத்தில் பதுங்கி விடும்.மன வியாதிகளுக்கு மருந்து கொடுத்தால் அது உள்ள துன்பத்திலிருந்து உங்களை விலகி ஓடச்செய்யும்.

அதனால் துன்பத்திலிருந்து உங்களுக்கு நிரந்தர விடுதலை கிடைக்காது.நீங்கள் துன்பத்தினால் வரும் வடுவை தைரியமாக முழுமையாகப் பார்க்க வேண்டும்.

உங்கள் அறையில் அமைதியான சூழ்நிலையில் தனிமையில் அமர்ந்து வேறெதிலும் மனம் ஈடுபடாது உங்கள் உள்போராட்டங்களைக் கவனியுங்கள்.

உங்கள் உள்ளே உண்டான வடுவின் வலியை முழுமையாக மேலே கொண்டு வந்து உணர்ந்தால் அது உங்கள் இதயத்தைப் பிழியும்.அது மரண வலியாகத்தான் இருக்கும்.

அதை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். அப்போது நீங்கள் ஒரு குழந்தை போலக் கதறலாம்.தரையில் புரண்டு அழலாம்.

அப்போது அந்த வலி உங்கள் உடல் முழுவதும் பரவி இருப்பதை உணர்வீர்கள்.

துன்பம்,கவலை என்று ஏற்படும்போது அதை மறக்க அல்லது வெளியே தள்ள இதுவரை பழக்கப் பட்டிருக்கிறீர்கள்.

அதற்கு மாறாக அதை எவ்வளவு அதிகப் படுத்த முடியுமோ,அப்படி அதிகப் படுத்தி,அதை நீங்களே ஜீரணம் செய்வது என்பது ஒரு புதுமையான மாறுபட்ட செயல்.

அது உங்கள் இயல்பாக மாற கொஞ்சம் நாட்கள் ஆகும்.

அப்படி அந்த சக்தியை முழுமையாக ஜீரணம் செய்து விட்டால்,அது உங்கள் உடலோடும் உள்ளத்தோடும் கலந்து விட்டால் உங்களிடம் புதுமையான ஒரு கதவு திறக்கும்.

அதன் வழியாக நீங்கள் ஒரு புதிய பயணத்தை தொடங்குவீர்கள்.

நீங்கள் எப்போது அந்த வலியை பரிபூரணமாக ஏற்றுக் கொண்டு விட்டீர்களோ,அதனுடன் கலந்து விட்டீர்களோ,அதன்பிறகு அது உங்களுக்கு ஒரு வலியாகவோ, துன்பமாகவோ தெரியாது.

ஒரு பெரிய ரசாயன மாறுதல் உங்களுக்குள் இப்போது நடந்திருக்கிறது.

இப்போது உங்கள் வலி,துயரம்,கவலை,இறுக்கம் அனைத்தும் மகிழ்ச்சி, ஆனந்தம், புத்துணர்ச்சி,பூரிப்பாக மாறி இருக்கும்.

இதை நீங்கள் அனுபவத்தில்தான் உணர முடியும்.

ஓஷோ -----🌹🌹