Tuesday, 4 July 2017

கைவிட வேண்டிய பத்து விஷயங்கள் ..

கைவிட வேண்டிய பத்து விஷயங்கள் ..
1 வெறுப்பை கைவிடுங்கள். நீங்கள் விரும்பவதில் கவனம் செலுத்துங்கள்.
2 கடந்த காலத்தை கைவிடுங்கள் , அதில் கற்ற பாடங்களை வைத்துக்கொள்ளுங்கள்.
3 கனகச்சிதமாகத்தான் இருப்பேன் என்ற கருத்தை கைவிடுங்கள்.
4 மக்களை எப்பொழுதும் மகிழ்விப்பராக இருப்பதை கைவிடுங்கள்.
5 எதிர்மறையான சுய பேச்சை கைவிடுங்கள் ..
6 வீண்பேச்சுகளையும், எடைபோடுவதையும் கைவிடுங்கள்
7 உங்களை தாழ்த்தி நடத்த்த்துபவர்களை கைவிடுங்கள்.
8 கோபத்தால் வெகுண்டெழுவதை கைவிடுங்கள்.அமைதிதான் ஆற்றல்.
9 மற்றவர்களுடன் உங்களை ஒ ப்பிடுவதை தவிருங்கள்
10 வருத்தப்படுவதை கைவிடுங்கள் .எல்லாமே ஒரு காரணத்துக்காகத்தான் நடக்கிறது.
நன்றி .நன்றி..நன்றி...

Monday, 12 June 2017

நம்பிக்கை

ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,
*
தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்......
*
வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.
*
தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.
*
ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது.
*
ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.
*
எது அந்த தவளையை கொன்றது...?
*
பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள்.
*
ஆனால், உண்மை என்னவென்றால், "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது"......
*
நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.
*
ஆனால்..... நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
*
மன ரீதியாக, உடல் ரீதியாக, பண ரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள்.
*
உடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று.
*
"நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது"...
👉🏿விழுந்தால் அழாதே . . .
எழுந்திரு 👈🏿
🗣
👉🏿தோற்றால் புலம்பாதே . . .
போராடு 👈🏿
🗣
👉🏿 கிண்டலடித்தால் கலங்காதே . . .
மன்னித்துவிடு 👈🏿
🗣
👉🏿தள்ளினால் தளராதே . . .
துள்ளியெழு 👈🏿
🗣
👉🏿நஷ்டப்பட்டால் நடுங்காதே . . .
நிதானமாய் யோசி👈🏿
🗣
👉🏿ஏமாந்துவிட்டால் ஏங்காதே . . .
எதிர்த்து நில் 👈🏿
🗣
👉🏿நோய் வந்தால் நொந்துபோகாதே . .
நம்பிக்கை வை 👈🏿
🗣
👉🏿கஷ்டப்படுத்தினால் கதறாதே . . .
கலங்காமலிரு 👈🏿
🗣
👉🏿 உதாசீனப்படுத்தினால் உளறாதே . .
உயர்ந்து காட்டு 👈🏿
🗣
👉🏿 கிடைக்காவிட்டால் குதிக்காதே . . .
அடைந்து காட்டு 👈🏿
🗣
👉🏿மொத்தத்தில் நீ பலமாவாய் 👈🏿
🗣
👉🏿சித்தத்தில் நீ பக்குவமாவாய் 👈🏿

💐💐💐💐💐💐💐💐
💐உன்னால் முடியும் .💐
💐உயர முடியும் . . .
💐

💐உதவ முடியும் . . .
💐
💐💐💐💐💐💐💐💐
⚜உனக்கு உதவ நீ தான் உண்டு ⚜
❇❇❇❇❇❇❇
👉🏿உன்னை உயர்த்த நீ தான் 👈🏿. . . ⚜நம்பு⚜ . .
✳✳✳✳✳✳✳✳
👉🏿 உன்னை மாற்ற நீ தான் 👈🏿. . .👉🏿 முடிவெடு👈🏿 . . .
👤
👉🏿நீயே பாறை👈🏿👉🏿.நீயே உளி . 👈🏿. .
👤
👉🏿நீயே சிற்பி . . .நீயே செதுக்கு 👈🏿. . .
👤
👉🏿நீயே விதை . . .நீயே விதைப்பாய் 👈🏿. . .
👤
👉🏿நீயே வளர்வாய் 👈🏿. 👉🏿நீயே அனுபவிப்பாய் 👈🏿. . .
👤
👉🏿நீயே நதி👈🏿 . . .👉🏿 நீயே ஓடு👈🏿 . . .
👤
👉🏿நீயே வழி👈🏿 . . .👉🏿 நீயே பயணி👈🏿 . . .
👤
👉🏿நீயே பலம் 👈🏿. . . 👉🏿நீயே சக்தி 👈🏿. . .
👤
🌸நீயே ஜெயிப்பாய் 🌸
💯எப்பொழுதும் நம்பிக்கை இழக்காதே

ஜென் கதை………

ஒரு ஜென் கதை………

அவர் ஒரு கவிஞர். பெரிய விருதுகள், பாராட்டுகளைப் பெற்றவர்.

அவரது கவிதைகளுக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் இப்போதும் உண்டு.

ஒருநாள், கவிஞர் ஒருவர் நண்பரைப் பார்க்க வந்திருந்தார். ‘எழுத்து வேலையெல்லாம் எப்படிப் போகிறது?’

என்று விசாரித்தார்.
’பிரமாதம்!’ என்றார் கவிஞர்.

‘நேற்றுமுழுவதும் கஷ்டப்பட்டு உழைத்து ஒரு கவிதை எழுதினேன், ஏழு வரிகள், அருமையாக அமைந்துவிட்டன!’

‘அப்படியா? ரொம்ப மகிழ்ச்சி’ என்றார் நண்பர்.

‘இன்றைக்கு என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?’

’இன்றைக்கு இன்னும் பிரமாதமான வேலை ஒன்று செய்தேன்’

பெருமிதத்தோடு சொன்னார் கவிஞர். ‘நேற்று எழுதிய கவிதையை மீண்டும் படித்துப் பார்த்தேன், அதில் ஆறு வரிகள் அவசியமற்றவை என்று தோன்றியது.

நீக்கிவிட்டேன்!’
எது அவசியம், எது அநாவசியம் என்று யோசிக்கும்போது, ஜென் சொல்லும் ஒரே வரி விதி, *‘நத்திங் எக்ஸ்ட்ரா’* – தேவையில்லாத ஆடம்பரங்களை ஏற்றுக்கொள்ளாதீர்கள், தேவையில்லாத பாரங்களைச் சுமக்காதீர்கள், உன்னதம் என்பது செதுக்குவதால் வருவது அல்ல, அநாவசியமானவற்றை நீக்குவதால் வரும்!

Friday, 2 June 2017

எல்லாம் அவனே

எல்லாம்
அவனே
சூஃபி மகான்,,,

சூஃபி மகான் காட்டு வழியே சென்று கொண்டிருந்தார்.

வாலிப வயதை எட்டாத ஒரு பையனும் வெறுங் காலோடு அங்கே நடந்து சென்று கொண்டிருப்பதை கண்ட மகான் "நீங்கள் எங்கே போகிறீர்கள்?" என்று கேட்டார்.

மக்காவுக்கு " என்றார் அவர்.

ஏதோ முணு முணுத்துக் கொண்டிருந்தீரே, என்ன அது?

இறைவனின் வேதம்."

இந்த வயதிலேயே மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறீரே " என்றார் மகான்.

சிறுவர், பெரியவர் என்றெல்லாம் மரணம் பார்ப்பதில்லை."

இந்த சிறுவயதிலேயே இவ்வளவு பெரிய பயணத்தை மேற்கொண்டிருப்பது ஆச்சரியத்தை தருகிறது. பாதங்கள் சிறியதாயினும் பயணம் மிகப் பெரியது. "

என்னுடைய பணி பாதத்தை தூக்கி வைப்பது மட்டுமே. இலக்கை அடைய வைக்க வேண்டியது இறைவனின் பணி " என்றார் இளைஞர்.

பயணத்திற்கான ஒரு பொருளுமின்றி, ஒரு வாகனமுமின்றி வந்திருக்கின்றீரே?"

நம்பிக்கையே என் பயணப் பொருட்கள். என் கால்களே என் வாகனம்."

உண்பதற்காக ஏதாவது பொருள் வாங்கி வந்திருக்கலாமே?"

பெரியவரே,,, உங்களுடைய நண்பர் தம் வீட்டிற்கு விருந்தளிக்க அழைக்கிறார் என்றால் நீங்கள் உங்களுடன் ரொட்டியும் தண்ணீரும் சுமந்து கொண்டா செல்வீர்கள்?

அதே போல என் இறைவன் என்னைத் தம் இல்லத்திற்கு அழைத்திருக்கிறான் எல்லாவற்றையும் தரிசிக்கச் செய்திருக்கிறான் என்றால் பயணத்திற்கான பொருட்களை எடுத்து வருவது அவன் மீது நமக்குள்ள நம்பிக்கையின்மையை அல்லவா காட்டுகிறது?"

எனக்கு அது பிடிக்கவில்லை. பணிவை மட்டுமே நான் விரும்புகிறேன். என்னை அவன் கைவிட்டு விடுவானா?"

இவ்வாறு கூறிவிட்டு அந்த இளைஞன் மளமளவென்று அவரைக் கடந்து வேகமாக சென்று விட்டான்.

சூஃபி மகான் மெய்மறந்து நின்றார்.

Thursday, 1 June 2017

சலிப்பு

💢 *சலிப்பு* 💢

♥ உங்களது காம ஆசைக்கு ஆதரவு கொடுப்பதற்காகவே ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நிர்வாணமான பெண் நீங்கள் கற்பனை செய்வதற்கு எந்த இடமும் கொடுப்பதில்லை.

அதனால்தான் நிர்வாணமான பெண்கள்அந்த அளவுக்கு கவர்ச்சியாக இருப்பதில்லை.

அதே போன்று நிர்வாணமான ஆண்களும் கவர்ச்சியாக இருப்பதில்லை.

ஆனால்,ஒரு ஆணோ,பெண்ணோ ஆடைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் போது

அவர்கள் உங்களது கற்பனைக்கு
அதிகம் விட்டுவிடுகிறார்கள்.

இந்த ஆடைகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்று நீங்கள் கற்பனை செய்ய முடியும்.

நீங்கள் மீண்டும் கற்பனை செய்யலாம்.

ஆனால், உங்களது மனைவியை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாது.

அதுதான் சிக்கல்.

உங்களால் உங்களது பக்கத்து வீட்டுக்காரரின் மனைவியை கற்பனை செய்து பார்க்க முடியும்.

அவள் கவர்ச்சியாக தெரிவாள்

உங்களது மனைவியிடம் உங்களுக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டதென்றால்

உங்களுக்கு அவளது ஆன்மாவிற்குள் நுழைவது எப்படி என்று தெரியவில்லை.

நீங்கள் அவளது உடலில் நுழைய முடியும்.

ஆனால் அது விரைவில் சலிப்பாக ஆகிவிடும்.

ஏனெனில் அது ஒரே விஷயத்தை
மீண்டும் மீண்டும் செய்வதாக இருக்கும்.

உடல் என்பது மேம்போக்கான விஷயம்.

நீங்கள் உடலோடு
ஒருமுறை, இருமுறை, மூன்றுமுறை
உறவுகொள்ளலாம்.

அதன்பிறகு அந்த உடலோடும்,

அதன் வளைவு நெளிவுகளோடும்
உங்களுக்கு பரிச்சயம் ஏற்பட்டுவிடுகிறது.

அதன் பின்னர் அங்கே எதுவும் புதிதாக இருக்காது.

நீங்கள் அடுத்த பெண்ணின் மீது ஆர்வம்
கொள்ள ஆரம்பித்து விடுகிறீர்கள்.

உங்களது மனைவியைவிட அவர்களிடம்
ஏதோ ஒன்று வித்தியாசமாக இருப்பதாக
நீங்கள் நினைக்கிறீர்கள்.

அவர்களது ஆடைகளுக்குப் பின்னால்
அவர்கள் ஏதோ ஒன்றினை வித்தியாசமாக பெற்றிருப்பார்கள் என்று
குறைந்தபட்சம் உங்களால் கற்பனையாவது செய்து பார்க்க முடியும்.

"மக்கள் தங்களது மனைவி மற்றும் கணவன்களோடு
சலிப்படைந்து விட்டனர்."

அதற்கான காரணம் ஒருவர் மற்றொருவரின் ஆன்மாவோடு தொடர்பு கொள்ளமுடியாமல்
போகின்றனர்.

நீங்கள் ஆன்ம நண்பர்கள் ஆகிவிடும்போது அங்கே சலிப்பு என்பது இருக்கவே இருக்காது.

"அதனால்தான் தந்த்ரா மார்க்கமானது

எல்லா மனிதர்களுக்கும் கல்வியில் தேவையான ஒரு பகுதியாக ஆகவேண்டும் என்று நான் கூறுகிறேன்.

"தந்த்ரா என்பது ஆன்மாக்களோடு தொடர்பு கொள்கின்றன,

அடுத்தவரின் ஆழ்ந்த மையத்திற்கு செல்கின்ற ஒரு விஞ்ஞானம்."

"இந்த கலையை அறிந்துகொண்ட ஒரு உலகில் மட்டுமே இந்த சலிப்பு மறைந்துபோகும்." ♥

🌹 *ஓஷோ* 🌹

Sunday, 28 May 2017

நிம்மதி

❤பண்டைய சீன நாட்டில் ஒரு சிறிய நகரத்தில் ஒரு கொல்லன் வாழ்ந்து வந்தான். அவன் வீட்டின் முன் பகுதியிலேயே அவன் தொழில் செய்யும் கடை வைத்திருந்தான்.
தன் வாழ்க்கையை நடத்த காலை முதல் இரவு வரை அவன் வியர்வை சிந்தி உழைக்க வேண்டி இருந்தது. கடையின் முன்னால் ஒரு மேசையில் ஒரு அழகான பழைய தேனீர் தயாரிக்கும் சட்டியில் நீரை நிரப்பி வைத்திருப்பான். அதன் அருகே ஒரு நாற்காலியும் வைத்திருப்பான். தாகம் எடுக்கும் போதெல்லாம் எழுந்து முன்னால் வந்து அந்த நாற்காலியில் அமர்ந்து அந்த தேநீர் சட்டியில் இருந்து குளிர்ச்சியான நீரைக் குடித்து கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் இளைப்பாறுவான். அவன் மிக அமைதியாக உணரும் தருணங்கள் அவை.
அவன் தொடர்ந்து வேலை செய்யத் தேவையான புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் தருணங்கள் அவை.
அவன் வாழ்க்கை இப்படி அமைதியாக சென்று கொண்டிருந்தது.
ஒரு நாள் அவன் அப்படி அந்த தேனீர் சட்டியில் இருந்து தண்ணீரைக் குடித்துக் கொண்டிருக்கையில் ஒரு வழிப்போக்கன் அவனையே உற்றுப் பார்த்தான். கொல்லன் அவனிடம் கேட்டான். “ஐயா என்ன பார்க்கிறீர்கள்? உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா?”
”உங்களின் தேனீர் சட்டியைப் பார்த்தேன். மிக வித்தியாசமாக இருக்கிறது”
கொல்லன் சொன்னான். “இந்த தேனீர் சட்டி மிகப் பழையது. என் தந்தை இருக்கும் வரை இதில் தான் தண்ணீர் ஊற்றி வைத்திருந்து குடிப்பார். அவருக்குப் பின் நான் இதை உபயோகித்து வருகிறேன். களைப்பும் தாகமும் ஏற்பட்டால் நான் இதிலிருக்கும் தண்ணீரைக் குடித்து சற்று இளைப்பாறுவேன்”
“அதை நான் சற்று ஆராய்ந்து பார்க்கலாமா?” என்று கேட்டான் அந்த வழிப்போக்கன்.
இந்த பழைய சட்டியை ஆராய என்ன இருக்கிறது என்று நினைத்தவனாக கொல்லன் அந்த தேனீர் சட்டியை அந்த வழிப்போக்கனிடம் தந்தான். வழிப்போக்கன் அந்த தேனீர் சட்டியைக் கையில் பிடித்து அதனை கூர்மையாக ஆராய்ந்து பார்த்தான். பின் சொன்னான். “ஐயா, இந்த தேனீர் சட்டி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு புராதனப் பொருள்”
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லாம் அங்கு கூடி விட்டார்கள். அவர்களில் ஒருவன் ஏளனமாகச் சொன்னான். “இந்தப் பழைய சட்டியைப் போய் இப்படிச் சொல்கிறீர்களே. பார்த்தால் சாதாரணமானதாகத் தானே இருக்கிறது”
வழிப்போக்கன் சொன்னான். “இதற்கு முந்தைய மன்னர் பரம்பரையினர் காலத்தில் இது போன்ற ஒரே மாதிரியான மூன்று தேனீர் சட்டிகள் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டன. இரண்டு தேனீர் சட்டிகள் இன்றும் நம் அரசவையில் இருக்கிறது.
மூன்றாவது தொலைந்து போய் விட்டதாகக் கருதப்பட்டு வந்தது. இதைப் பார்த்த பின்பு தான் இது இன்னமும் இருப்பது புரிந்தது. இந்த சட்டியை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து பார்த்தால் இதன் அடியில் முந்தைய அரசகுல முத்திரை இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.”
இதைக் கேட்ட அனைவருக்கும் ஒரு பரபரப்பு ஏற்பட்டு விட்டது என்றே சொல்ல வேண்டும். உடனடியாக கொல்லன் அந்த சட்டியை நன்றாகக் கழுவி சுத்தம் செய்தான். பின் பார்த்த போது வழிப்போக்கன் சொன்னது போல அந்த சட்டியின் அடியில் முந்தைய அரசகுல முத்திரை இருந்தது. இது வரை யாரும் அப்படிப் பட்ட முத்திரை உள்ள பாண்டங்களைப் பார்த்ததில்லை.
வழிப்போக்கன் கேட்டான். “ஐயா இந்த அபூர்வ சட்டியை நீங்கள் விற்க விரும்பினால் நானே வாங்கிக் கொள்கிறேன். நூறு பொற்காசுகள் வரை தர நான் தயாராக இருக்கிறேன்”
கொல்லனுக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. அக்காலத்தில் நூறு பொற்காசுகள் என்பது மிகப் பெரிய செல்வம். கொல்லன் தன் வாழ்நால் எல்லாம் கடுமையாக உழைத்தாலும் அந்த அளவு செல்வத்தை சம்பாதிக்க முடியாது. கொல்லன் சம்மதித்தான்.
வழிப்போக்கன் இன்னும் சில நாட்களில் பொற்காசுகளுடன் வந்து அந்த தேனீர் சட்டியை வாங்கிக் கொள்வதாகச் சொல்லி விட்டு சென்றான்.
கூடியிருந்தவர்களுக்கும் நடந்ததெல்லாம் மிக ஆச்சரியமாக இருந்தது. ஒவ்வொருவரும் அந்த தேனீர் சட்டியைக் கையில் எடுத்துப் பார்க்க விரும்பினார்கள். அந்த அரச முத்திரையைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டினார்கள். ஆனால் அந்த சட்டியின் மதிப்பை இப்போது உணர்ந்திருந்த கொல்லன் எல்லோரையும் எட்ட நின்றே பார்க்கச் சொன்னான்.
அன்றிலிருந்து அவன் வாழ்க்கையில் எல்லாமே மாறி விட்டது. அந்த தேனீர் சட்டியை முன்பு போல வெளியே வைக்க முடியவில்லை. மேசை, நாற்காலி, தேனீர் சட்டி மூன்றையும் வீட்டுக்குள்ளே வைத்தான். வேலை முடிந்த பின் முன்பு போல நிம்மதியாக வெளியில் காற்றாட அமர்ந்து குளிர்ந்த நீரை அந்த சட்டியில் குடிக்க முடியவில்லை. உள்ளே அமர்ந்து குடித்தால் புழுக்கமாக இருந்தது. அந்த சட்டியைத் தூக்கி அப்படியே அதிலிருந்து தண்ணீரைக் குடிக்க முடியவில்லை. சட்டியை உயரத் தூக்கும் போது கை தவறி விழுந்து உடைந்து விடுமோ என்ற பயம் வந்தது.
அவனிடம் அந்த அபூர்வ சட்டி இருக்கும் செய்தி பரவி தினமும் நிறைய பேர் அதைப் பார்க்க வந்தார்கள்.அவனிடம் அந்த அபூர்வ சட்டி இருக்கும் செய்தி பரவி தினமும் நிறைய பேர் அதைப் பார்க்க வந்தார்கள். அதற்கு அந்த வழிப்போக்கன் என்ன விலை கேட்டான் என்பதை கொல்லன் வாய் வழியாகவே அறிந்து கொள்ள பலரும் ஆசைப்பட்டார்கள். ‘இந்தக் கொல்லன் எப்படிப்பட்ட அதிர்ஷ்டக்காரன்’ என்று அவர்கள் அவன் முன்னாலேயே வியந்தார்கள்.
இப்படி அவனுடைய தேனீர்சட்டி பிரபலமடைந்த பின் இன்னொரு பயமும் கொல்லனை ஆட்கொண்டது. யாராவது இதைத் திருடிக் கொண்டு சென்று விட்டால் என்ன செய்வது என்ற பயம் அவனுக்கு ஏற்பட்டது. பகல் முழுவதும் எப்போதும் அதன் மேல் ஒரு கண் வைத்திருந்தான். அவனுடைய வழக்கமான வேலைகள் எதுவும் சரியாக நடக்கவில்லை. இரவும் திருட்டு பயம் காரணமாக அவனால் நிம்மதியாக உறங்க முடியவில்லை.
இப்படியே நாட்கள் சென்றன. சில நாட்களில் வருவதாகச் சொன்ன வழிப்போக்கன் மூன்று மாத காலமாகியும் வரவில்லை
. ஆனால் ஆட்களோ அந்த தேனீர் சட்டியைப் பார்க்க வந்த வண்ணம் இருந்தார்கள். அவனிடம் அது பற்றி கேட்ட வண்ணம் இருந்தார்கள். ஒரு நாள் வெளியூர்களில் இருந்தும் ஆட்கள் அதனைப் பார்க்க வந்து விட்டார்கள். அவனிடம் “நீ உண்மையிலேயே பெரிய அதிர்ஷ்டசாலி தான்” என்றார்கள்.
அவனோ பொறுக்க முடியாமல் சொன்னான். “உண்மையில் நான் துரதிர்ஷ்டசாலி தான். ஒரு காலத்தில் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தபடி நிம்மதியாக நான் இருந்தேன். இந்த மூன்று மாதங்களாக இந்த தேனீர் சட்டி என் நிம்மதியைக் குலைத்து விட்டது.
பகலில் நிம்மதியாக வெளியே உட்கார்ந்து இதில் தண்ணீரைக் குடிக்க முடியவில்லை. ஒரு கணம் கூட என்னால் நிம்மதியாக வேலை பார்க்க முடியவில்லை. இதை யாராவது திருடிச் சென்று விடுவார்களா என்ற பயத்தில் இரவிலும் என்னால் தூங்க முடியவில்லை.”
அவர்கள் சொன்னார்கள். “அப்படிச் சொல்ல வேண்டாம். அந்த வழிப்போக்கன் கண்டிப்பாக வருவான். அதை விற்று நூறு பொற்காசுகளோடு நீ நிம்மதியாக இருக்கலாம்”
அவன் சொன்னான். “இத்தனை நாட்கள் வராதவன் இனி வருவானா என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு இப்போது நூறு பொற்காசுகள் தேவையில்லை. என் பழைய நிம்மதியான வாழ்க்கை திரும்பக் கிடைத்தால் போதும். அதற்கு என்ன செய்வது என்று எனக்குத் தெரியும்”
மற்றவர்கள் அவனைத் தடுப்பதற்குள் அந்த சட்டியை சுத்தியலால் ஒரே போடாகக் கொல்லன் போட்டுடைத்தான். அந்த தேனீர் சட்டி பல துண்டுகளாக சிதறியது. மற்றவர்கள் திகைத்துப் போய் நிற்க கொல்லனோ மாபெரும் நிம்மதியை உணர்ந்தான்.
இந்தக் கதையில் கொல்லன் முன்பு வாழ்ந்த வாழ்க்கை எளிமையானதாக இருந்தது. அவனுக்குக் கிடைத்த வருமானம் அவன் வாழ்க்கை நடத்தப் போதுமானதாக இருந்தது.
அவனுக்குப் பெரிய கவலைகளோ, பயமோ இருக்கவில்லை. ஆனால் அந்த தேனீர் சட்டி மிக அதிக விலை மதிப்புடையது என்று ஊரார் அறிந்தவுடன் எல்லாமே அவனுக்கு தலைகீழாக மாறிவிட்டது. அவன் அது திருட்டுப் போய் விடுமோ என்ற பயத்தை உணர்ந்தான். பழைய வாழ்க்கையின் கவலையற்ற தன்மையை இழந்தான்.
அவனுக்காக அவனை மதிப்பது போய் அந்த தேனீர்சட்டிக்காக அவனை மனிதர்கள் மதித்தார்கள். மற்றவர்களுக்கு அவனை விட தேனீர் சட்டி மிகவும் மதிக்கத் தக்க விஷயமாக மாறி விட்டது. எல்லோரும் அவனை அதிர்ஷ்டசாலி என்று எண்ணிக் கொண்டிருக்கையில் அவன் மட்டுமே உள்ளுக்குள்ளே ஒரு துரதிர்ஷ்டசாலியாக இருந்தான்.
இந்த தாவோ கதை செல்வமும், புகழும் அதிகரிக்கும் போது அதனுடன் கூடவே வரும் பிரச்னைகளைச் சொல்கிறது. அவனுடைய கடைசி முடிவு மிகப் பெரிய முட்டாள்தனமாகப் பலருக்கும் தோன்றலாம்.
இக்கதை செல்வம், புகழ் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில் இது ஆழமாகத் தெரிவிக்கும் செய்தி வேறு.
என்றுமே மனிதனை விட அதிகமாக அவனுடைய செல்வமும், புகழும் முக்கியத்துவம் பெற்று விடுமானால் அவனால் உண்மையான நிம்மதியைக் காண முடியாது.
பிரச்னை செல்வத்திலும், புகழிலும் இல்லை. உண்மையான பிரச்னை அவனால் அவற்றை விட்டு இருக்க முடியாத அடிமைத்தனத்தில் தான் இருக்கிறது. இந்த அடிமைத்தனம் அவனை சின்ன சின்ன எளிமையான சந்தோஷங்களை அனுபவிக்க அனுமதிக்காது.
அடுத்தவர்களை எல்லாம் சந்தேகக் கண்ணோடே பார்க்க வைக்கும். அவற்றை இழந்து விடுவோமோ, மற்றவர்கள் அபகரித்து விடுவார்களோ என்கிற பயம் சதா உடன் இருக்க ஆரம்பித்து விடும்.
எப்படிப் பாதுகாப்பது என்ற கவலையும் சேர்ந்தே இருக்கும். அவை அவனை ஆட்டிப் படைக்க ஆரம்பித்து விடும்.
அவன் எண்ணம், சொல், செயல் எல்லாவற்றையும் தீர்மானிக்க ஆரம்பித்து விடும். இந்த அடிமைத்தனத்தை உடைத்து எறிந்தால் ஒழிய ஒருவன் நிம்மதியடைய முடியாது என்பதைத் தான் கொல்லன் தேனீர் சட்டியை உடைத்த பின் பெற்ற நிம்மதி மூலமாக இந்தக் கதை சொல்கிறது.

Tuesday, 23 May 2017

என்னுடைய தியான முறைகள் ஆபத்தானவைதான்.

என்னுடைய தியான முறைகள் ஆபத்தானவைதான்.

பார்க்கப்போனால் ஆபத்தில்லாத தியான முறைகளே இல்லை.

"ஆபத்தில்லை என்றால் அவை தியான முறைகளே அல்ல."

அவை வெறும் வித்தைகள்தான்.

ஆமாம் ஆபத்தானவைதான்.எனவே நுழையும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசனை செய்துவிடு.

"மாணவர்களாக என்னுடைய தியான முறைக்குள் நுழைந்து விடாதே.! ஆபத்தாகிப் போகும்."

"சீடனாக நுழைந்து பார்."

"தெரிந்துகொள்ள வேண்டும் என்ற வறட்டு ஆர்வத்தோடு நுழைந்து விடாதே.அந்த ஆர்வம் எப்போதும் உன்னை ஆபத்திற்குத்தான் இட்டுப் போகும்."

உண்மையாகவே நீ தயார் என்றால் பேதலிப்பை எதிர்கொள்ள தயார் என்றால் நீ வரலாம்.

இல்லையேல் அப்படியே இருந்துவிடு.!

ஆனால் நான் சொல்வதைச் சரியாகக் கவனிக்காவிட்டால்தான் தோற்றுப் போவாய்.என்னை கவனித்து கேட்டால் "தோற்றுப் போவது என்ற கேள்விக்கே இடமில்லை."

"நான் சொல்வது எதுவும் பேச்சளவிலானது அல்ல.நான் சொல்வதெல்லாம் நான் செய்து பார்த்து விட்டவை."

அவற்றைக் கடந்து வந்திருக்கிறேன்."எது சாத்தியம் எது சாத்தியமில்லை என்பது எனக்குத் தெரியும்."

எது நடக்கும் எதில் தவறுகள் நடந்துபோய்விடும் என்பதெல்லாம் எனக்குத் தெரியும்.

"இந்தப் பிரதேசத்தின் ஒவ்வோர் அங்குலமும் எனக்குத் தெரிந்ததுதான்.எனவே ஏதாவது தவறு நேர்ந்து விட்டால் நீ சரியாகக் கவனிக்கவில்லை என்றுதான் பொருள்."

நான் சொல்வதைக் கவனித்தால்,என்னை நம்பினால் எதுவும் தவறாகிப் போகாது.அப்படித்தான் நம்பிக்கை,ஆழ்ந்த நம்பிக்கையும் சரணாகதியும் தேவை என்பது.

--ஓஷோ--