Thursday, 14 September 2017

காரியங்கள் சித்தியாகும்.

“நல்லது நடக்கவில்லையே… நல்லது கிடைக்கவில்லையே…” என்று சோர்வடையாதீர்கள் – அருள் சக்தியால் “காரிய சித்தி” அடையுங்கள்

நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நிலைகளிலும் எத்தனையோ நிலைகளை இன்று நாம் பதிவு செய்து கொள்கின்றோம். உதாரணமாக
1.புத்திர பாக்கியம் வேண்டுமென்றால்
2.“புத்திர பாக்கியம் வேண்டும்…” என்று பதிவு செய்து கொண்டால்
3.அந்தப் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

ஆனால், அதற்கு மாறாக “புத்திர பாக்கியம் இல்லையே… இல்லையே… இல்லையே…” என்று இப்படிப் பதிவு செய்து கொண்ட பின்
1.அந்த உணர்வுகளே அதிகரித்து
2.அவர்களுக்குப் புத்திர பாக்கியம் கிடைப்பது காலதாமதமாகி விடுகின்றது.

காரணம் சோர்வும் சஞ்சலமும் அதிகமாகச் சுவாசிக்கும் போது இந்த அணுக்கள் வீரியத் தன்மை அடைந்து கரு வளர்ச்சி பெறும் நிலைகளும் தடைப்படுகின்றது.

அது பலவீனம் அடைந்து விடுகின்றது.

இதைப் போன்றுதான் நாம் “பதிவு செய்து கொண்ட நிலைகள்” எல்லாம் நாம் மீண்டும் நினைக்கும் போது இயக்கத்திற்கு வருகின்றது.

இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்பது.

அதே மாதிரி ஒரு குழந்தைக்குத் திருமணம் ஆகவேண்டும் என்று எண்ணலாம். ஆனால் “திருமணம் ஆகவில்லையே…” வருபவர்கள் எல்லாம் வந்து வந்து செல்கின்றனரே…” என்றுதான் நாம் பதிவு செய்து கொள்கின்றோம்.

அந்தப் பதிவு மீண்டும் நினைவுக்கு வரும் போது நம் ஆன்மாவில் கலந்து
1.பெண் பார்க்க வருபவர்கள் நம் சோர்வின் நிலைகளை உற்றுப் பார்த்து
2.நம் சொல்லைக் கேட்கும் போது
3.அவர்களும் சோர்வின் நிலையை அடைகின்றார்கள்.

அப்பொழுது “நம் எண்ணமே…” பார்க்க வருபவர்களின் நிலைகளைச் சீராக பேச்சுத் தொடராதபடி அதன் வழியே அந்தத் திருமணங்கள் நடைபெறாது போய்விடுகின்றது.

நாம் எண்ண வேண்டியதை விட்டு விடுகின்றோம். ஆகவே நாம் எப்படி எண்ன வேண்டும்?

நமது பெண் “எங்கே” திருமணமாகிச் சென்றாலும்
1.அந்தக் குடும்பங்கள் நலமாக இருக்க வேண்டும்
2.அந்தக் குடும்பத்தில் தொழில் வளம் பெருக வேண்டும்.
3.அந்தச் சக்தி நம் பெண்ணுக்குக் கிடைக்க வேண்டும் என்று
4.அடிக்கடி நாம் எண்ணுதல் வேண்டும்.

பெண்ணும் இதே போல் எண்ணினால் துரிதமாக அதற்கு நல்ல வரனும் கிடைக்கும். அது தன் எதிர்காலத்திலும் நல் வாழ்வு வாழும். அதனுடைய பேச்சும் மூச்சும் அந்தக் குடும்பத்தை வாழ வைக்கும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பதிவு செய்து கொண்டபின் “எப்பொழுதுமே…” வாழ்க்கையில் ஒவ்வொரு நல்ல காரியங்களுக்குச் செல்லும் போதும் ஆத்ம சுத்தி செய்துவிட்டுச் செல்ல வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா பெறவேண்டும் என்று எண்ணி உங்கள் உடலுக்குள் ஒரு ஐந்து நிமிடம் செலுத்துதல் வேண்டும்.

செலுத்திவிட்டு எந்தக் காரியத்திற்குச் செல்கின்றோமோ அவை அனைத்தும் காரிய சித்தியாக வேண்டும்.

எங்கள் சொல் மற்றவர்களை நல்லவராக்க வேண்டும். எங்களைப் பார்க்கும்போது மற்றவர்களுக்கு நல்ல எண்ணம் வர வேண்டும் என்று எண்ணிப் பழகுதல் வேண்டும்.

உங்கள் குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்க வேண்டும் என்றால் பெண்கள் அடிக்கடி இந்த ஆத்ம சுத்தி செய்து உங்கள் எண்ணத்திற்கு வலுவைக் கூட்டி
1.குழந்தைகளுக்குத் திருமணம் ஆக வேண்டும்
2.அவர்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலை அடைய வேண்டும்
3.குழந்தைகளுக்குச் சீக்கிரம் தொழில்கள் கிடைக்க வேண்டும்
4.வியாபாரம் பெருக வேண்டும்
5.வர வேண்டிய பாக்கிகள் வந்து சேர வேண்டும்
6.வாடிக்கையாளர்கள் அனைவரும் நலம் பெறவேண்டும் என்று இப்படித்தான் எண்ணிப் பழக வேண்டும்.

நீங்கள் இவ்வாறு எண்ணும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதியைப் பெறுகின்றீர்கள்.

இவ்வாறு எண்ணி வந்தால் உங்களுடைய காரியங்கள் சித்தியாகும்.

வாழ்க்கை

மனிதனுடைய வாழ்க்கை
எப்போதும் ...

வெளி வட்டத்தின் மேல் மட்டுமே
உள்ளது ...

அவனால் ஒருபோதும் உள்ளே
வாழ முடிவதில்லை ...

அவனால் அவனது உள் மையத்தைக்
கண்டு கொள்ள முடிவதில்லை ...

நீ தனியாக இருக்கும் போது கூட
உன்னுடை மனதில் ...

ஒரு பெரிய கூட்டத்தோடு தான்
இருக்கிறாய் ...

நீ எப்பொழுதும் மற்றவர்களைப்
பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறாய் ...

நீ உறங்கும்போது கூட மற்றவர்களைப்
பற்றியே கனவு கொண்டிருக்கிறாய் ...

நீ உன்னுடைய உள் உணர்வோடு
ஒருபோதும் இருந்ததில்லை ...

உன்னுடைய மனம் இடைவிடாமல்
வெளியே ஓடிக் கொண்டிருக்கிறது ...

வாழ்க்கையை ஒருபோதும் வெளி வட்டத்தில்
இருந்து அறிந்து கொள்ள முடியாது ...

வாழ்க்கையை உன்னுடைய மையத்தில்
மட்டுமே அறிந்து கொள்ள முடியும் ....

உண்மையாக வாழ்ந்து முடிக்காத
ஒருவனால் ...

உண்மையாக இறக்கவும்
முடியாது ...

நீ வெறும் நம்பிக்கையில் என்றாவது
ஒருநாள் எங்கேயாவது ....

ஏதாவது அற்புதம் நடக்குமா என்று
காத்துக் கிடக்கிறாய் ...

ஒவ்வொரு கணத்தையும் வீணாக்கிக்
கொண்டிருக்கிறாய் ....

எது நடந்தாலும் அது இந்தக் கணத்தில்
மட்டுமே நடக்க முடியும் ....

நீ உன்னுடைய கண நேரத்தைக் கண்டு
கொள்ள வேண்டும் ...

அதற்கு நீ நிகழ் காலத்தில் வாழ
வேண்டும் ...

ஓசோ ...
தந்த்ரா ரகசியங்கள் 1 ....

Tuesday, 12 September 2017

காரியங்கள் சித்தியாகும்.

“நல்லது நடக்கவில்லையே… நல்லது கிடைக்கவில்லையே…” என்று சோர்வடையாதீர்கள் – அருள் சக்தியால் “காரிய சித்தி” அடையுங்கள்

நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நிலைகளிலும் எத்தனையோ நிலைகளை இன்று நாம் பதிவு செய்து கொள்கின்றோம். உதாரணமாக
1.புத்திர பாக்கியம் வேண்டுமென்றால்
2.“புத்திர பாக்கியம் வேண்டும்…” என்று பதிவு செய்து கொண்டால்
3.அந்தப் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

ஆனால், அதற்கு மாறாக “புத்திர பாக்கியம் இல்லையே… இல்லையே… இல்லையே…” என்று இப்படிப் பதிவு செய்து கொண்ட பின்
1.அந்த உணர்வுகளே அதிகரித்து
2.அவர்களுக்குப் புத்திர பாக்கியம் கிடைப்பது காலதாமதமாகி விடுகின்றது.

காரணம் சோர்வும் சஞ்சலமும் அதிகமாகச் சுவாசிக்கும் போது இந்த அணுக்கள் வீரியத் தன்மை அடைந்து கரு வளர்ச்சி பெறும் நிலைகளும் தடைப்படுகின்றது.

அது பலவீனம் அடைந்து விடுகின்றது.

இதைப் போன்றுதான் நாம் “பதிவு செய்து கொண்ட நிலைகள்” எல்லாம் நாம் மீண்டும் நினைக்கும் போது இயக்கத்திற்கு வருகின்றது.

இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்பது.

அதே மாதிரி ஒரு குழந்தைக்குத் திருமணம் ஆகவேண்டும் என்று எண்ணலாம். ஆனால் “திருமணம் ஆகவில்லையே…” வருபவர்கள் எல்லாம் வந்து வந்து செல்கின்றனரே…” என்றுதான் நாம் பதிவு செய்து கொள்கின்றோம்.

அந்தப் பதிவு மீண்டும் நினைவுக்கு வரும் போது நம் ஆன்மாவில் கலந்து
1.பெண் பார்க்க வருபவர்கள் நம் சோர்வின் நிலைகளை உற்றுப் பார்த்து
2.நம் சொல்லைக் கேட்கும் போது
3.அவர்களும் சோர்வின் நிலையை அடைகின்றார்கள்.

அப்பொழுது “நம் எண்ணமே…” பார்க்க வருபவர்களின் நிலைகளைச் சீராக பேச்சுத் தொடராதபடி அதன் வழியே அந்தத் திருமணங்கள் நடைபெறாது போய்விடுகின்றது.

நாம் எண்ண வேண்டியதை விட்டு விடுகின்றோம். ஆகவே நாம் எப்படி எண்ன வேண்டும்?

நமது பெண் “எங்கே” திருமணமாகிச் சென்றாலும்
1.அந்தக் குடும்பங்கள் நலமாக இருக்க வேண்டும்
2.அந்தக் குடும்பத்தில் தொழில் வளம் பெருக வேண்டும்.
3.அந்தச் சக்தி நம் பெண்ணுக்குக் கிடைக்க வேண்டும் என்று
4.அடிக்கடி நாம் எண்ணுதல் வேண்டும்.

பெண்ணும் இதே போல் எண்ணினால் துரிதமாக அதற்கு நல்ல வரனும் கிடைக்கும். அது தன் எதிர்காலத்திலும் நல் வாழ்வு வாழும். அதனுடைய பேச்சும் மூச்சும் அந்தக் குடும்பத்தை வாழ வைக்கும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பதிவு செய்து கொண்டபின் “எப்பொழுதுமே…” வாழ்க்கையில் ஒவ்வொரு நல்ல காரியங்களுக்குச் செல்லும் போதும் ஆத்ம சுத்தி செய்துவிட்டுச் செல்ல வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா பெறவேண்டும் என்று எண்ணி உங்கள் உடலுக்குள் ஒரு ஐந்து நிமிடம் செலுத்துதல் வேண்டும்.

செலுத்திவிட்டு எந்தக் காரியத்திற்குச் செல்கின்றோமோ அவை அனைத்தும் காரிய சித்தியாக வேண்டும்.

எங்கள் சொல் மற்றவர்களை நல்லவராக்க வேண்டும். எங்களைப் பார்க்கும்போது மற்றவர்களுக்கு நல்ல எண்ணம் வர வேண்டும் என்று எண்ணிப் பழகுதல் வேண்டும்.

உங்கள் குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்க வேண்டும் என்றால் பெண்கள் அடிக்கடி இந்த ஆத்ம சுத்தி செய்து உங்கள் எண்ணத்திற்கு வலுவைக் கூட்டி
1.குழந்தைகளுக்குத் திருமணம் ஆக வேண்டும்
2.அவர்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலை அடைய வேண்டும்
3.குழந்தைகளுக்குச் சீக்கிரம் தொழில்கள் கிடைக்க வேண்டும்
4.வியாபாரம் பெருக வேண்டும்
5.வர வேண்டிய பாக்கிகள் வந்து சேர வேண்டும்
6.வாடிக்கையாளர்கள் அனைவரும் நலம் பெறவேண்டும் என்று இப்படித்தான் எண்ணிப் பழக வேண்டும்.

நீங்கள் இவ்வாறு எண்ணும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதியைப் பெறுகின்றீர்கள்.

இவ்வாறு எண்ணி வந்தால் உங்களுடைய காரியங்கள் சித்தியாகும்.

Friday, 8 September 2017

அழகாக நிறைவேறிவிடும்

யானையின் எடையை எப்படி அறிவது ? என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர் - ஒரு குட்டி கதை !

அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது.
யானையின் எடையை எப்படி அறிவது.? என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், 'நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்' என்றான். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர்.

அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும் வரை, கற்கள் ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, ''அவற்றின் எடைதான் அந்த யானையின் எடை'' என்றான். அனைவரும் வியந்தனர். அவனது புத்திசாலித்தனத்தைப் போற்றிப் புகழ்ந்தனர்.

எல்லோரும் யானையை ஒட்டுமொத்த உருவமாகத்தான் பார்த்தார்கள். ஆகவே, அவர்களால் அதன் எடையைக் கணிக்கமுடியும் எனும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்தச் சிறுவனோ, பல எடைகளின் கூட்டுத்தொகையே யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டான்; எளிதில் விடை கண்டான்.
எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும், அதைச் சின்னச் சின்ன செயல்களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். பிறகு, அந்த ஒவ்வொரு செயலையும், செவ்வனே செய்து முடிக்கவேண்டும். அப்போது, ஒட்டுமொத்தத் திட்டமும் அழகாக நிறைவேறிவிடும்.

Tuesday, 5 September 2017

உங்கள் இயக்கம்

ஒரு சிலரிடம் பேசிவிட்டு வந்தாலே நம் உடலில் “பல விதமான வலியும் வேதனையும் ஏற்படுவது ஏன்...!” மாற்றுவது எப்படி?
சாதாரணமாக மற்றவர்களுடன் பேசும் பொழுது வாழ்க்கையின் முறைகளில் விருப்பு வெறுப்பு நமக்குள் தோன்றி அதனாலே அந்த மாதிரியான எண்ணங்கள் உமிழ்நீராக மாறி நம் உடலுக்குள் வித்தாக மாறி நோயாக மாறுகிறது.
ஒரு தடவை சஞ்சலப்படுகின்றோம் என்று சொன்னால் அந்தச் சஞ்சலப்படும் எண்ணங்கள் நமக்குள் பதிவாகி இப்படிப் பலவும் சேர்ந்து விடுகின்றது.
உதாரணமாக சில இடங்களில் பார்த்தோம் என்றால் பக்கத்து வீட்டுக்காரருக்கும் அவர்களுக்கும் ஆகாது.
பக்கத்து வீட்டுக்காரர் எனக்குப் பல வகைகளிலும் இடைஞ்சல் செய்கிறார். அதைப் பற்றிக் கேட்டால் தகராறு செய்கிறார் என்பார்கள்.
ஆக அவர்கள் செய்யும் தகராறுகளைப் பற்றி எண்ணும்பொழுது அந்த உணர்வுகள் இவருக்குள் வந்துவிடுகின்றது. அவர்களைப் பற்றி எண்ணினாலே அல்லது அவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் இனம் புரியாத வெறுப்பு வரும்.
வெறுப்பான உணர்வுடன் அவர்களிடம் பேசும் பொழுது அவர்களுக்கு இவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் இவர் மீது வெறுப்பு வரும்.
இதைத் தீர்க்கவே முடிவதில்லை.
ஆனால் இரண்டு பேரும் சண்டையிடுவதனால் என்ன இலாபம் அடைகிறார்கள்...!
இவர்கள் சங்கடமாகவும் ஆத்திரமாகவும் பேசி அந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது அந்த உணர்ச்சிகள் இங்கே உமிழ்நீராகி இவர்கள் உடலில் வியாதியாக மாற்றிக் கொள்கிறார்கள்.
எதிர்நிலைகளில் பேசுகின்றவர்களும் அதே போல் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி உமிழ்நீராக மாறும் போது அவர்கள் உடலிலும் நோயாக மாற்றிக் கொள்கிறார்கள்.
இரண்டு பேருமே நல்லதைக் காக்க வேண்டும் என்று எண்ணுகின்றார்கள். ஆனால் இரண்டு பேரும் அவர்கள் உடலில் "வியாதியைத்தான்" சேர்த்துக் கொள்கின்றார்கள்.
நிலத்தில் ஒரு விஷச் செடியைப் பதியச் செய்தால் காற்றிலிருந்து அது தன் இனமான விஷத்தின் சத்தைக் கவர்ந்து வளர்கின்றது.
இதைப் போன்று தான் வெறுப்பான எண்ணங்களைப் பதிவு செய்யும் பொழுது அதே எண்ணங்களை எடுத்து இரண்டு பேரும் வளர்த்துக் கொண்டேயிருப்பார்கள்.
இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
ஒருவருடைய சொல் நம்மைக் கடுமையாகப் பாதிக்கின்றது என்றால் “ஓ...ம் ஈஸ்வரா...” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து
1.அதைத் தடுத்துக் கொள்ள வேண்டும்.
2.பின் நம் சொல் அவர்களுக்கு நல்லதாகப் படவேண்டும்.
3.எல்லோருக்கும் நல்லது செய்யக் கூடிய மனது
அவர்களுக்கு வரவேண்டும் என்று எண்ணி
4.இந்த உணர்வலைகளைப் பாய்ச்ச வேண்டும்.
அவர்கள் நம் மேலே கோபமாகத் திட்டிக் கொண்டேயிருந்தாலும் கூட இந்த உணர்வுகள் அவர்களிடம் போய்ச் சேர்ந்து நாம் பாய்ச்சிய நல் உணர்வுகள் அதை நல்லதாக்கச் செய்யும்.
நமக்குள் அந்தச் சங்கடமான எண்ணங்கள் வந்து நம் உடலில் நோயாக மாற்றாது.
ஏனென்றால் நாம் சங்கடமாகப் பேசிக் கொண்டிருந்தால் நம் வியாபாரமோ தொழிலிலோ மந்தமாகிவிடுகின
்றது. நம் குழந்தைகளிடமும் பக்குவமாக இருக்க முடியாது.
சமையல் செய்யும் பொழுது சங்கடமான எண்ணத்தைக் கொண்டிருந்தால் சுவையாகச் செய்யும் நிலைகளை மாற்றிவிடும்.
அதே சமயத்தில் ருசியாகச் சமைத்து வைத்திருந்தாலும் சங்கடமான எண்ணத்துடன் இருக்கும் பொழுது சாப்பிட்டால் ருசி இருக்காது.
ஆகாரத்திலுள்ள சத்தைப் பிரிக்காது. அப்பொழுது அது நம் உடலில் வியாதியாகவும் மாறிவிடுகின்றது.
அதை மாற்றுவதற்காகத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.
மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் “ஈஸ்வரா...” என்று ஏங்கித் தியானியுங்கள்.
மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று உடலுக்குள் செலுத்துங்கள். எங்கள் உடலில் அறியாது சேர்ந்த நோய்கள் நீங்க வேண்டும் “ஈஸ்வரா...” என்று எண்ணுதல் வேண்டும்.
மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் சொல்லும் செயலும் பிறருக்கு நல்லதாக இருக்க வேண்டும். பிறர் என்னைப் பார்க்கும் பொழுது நல்லதாக இருக்க வேண்டும்.
வியாபாரம் செய்யும் பொழுது என்னிடம் சரக்கு வாங்கிச் செல்பவர்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் அவர்கள் வளமாக இருக்க வேண்டும் “ஈஸ்வரா...” என்று எண்ண வேண்டும்.
இவ்வாறு எண்ணித் தியானம் செய்தீர்கள் என்றால் உங்கள் வாயில் சுரக்கும் உமிழ் நீர் சுவையுள்ளதாகச் சுரக்கும். நீங்கள் சாப்பிட்ட ஆகாரத்திலுள்ள சத்தினைச் சீராகப் பிரிக்கும். உடல் நலம் பெறுவீர்கள்.
இப்படி உங்கள் உயிரான ஈசனிடம் நல்ல உணர்வுகளைப் பதிவு செய்யும் பொழுது அந்த குணத்தின் அடிப்படையிலேயே உங்கள் இயக்கம் அமைகின்றது.
இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்

Sunday, 3 September 2017

அன்பு சக்தியும் நீங்களும்

அன்பு சக்தியும் நீங்களும்
1. அனைத்திற்கும் ஓர் அதிர்வு அலைவரிசை உள்ளது. நீங்கள் எந்த உணர்வைக் கொண்டிருக்கிறீர்களோ , அந்த உணர்வு தான் இருக்கும் இதே அதிர்வு அலைவரிசையில் உள்ள அனைத்தையும் உங்கள் வாழ்விற்குள் கொண்டு வருகிறது.
2. வாழ்க்கை உங்களுக்குத் செயல்விடை அளித்துக் கொண்டிருக்கிறது. வாழ்க்கை உங்களுடன் தகவல் பரிமாறிக் கொண்டிருக்கிறது. அடையாளங்கள் , எண்ணங்கள் , நபர்கள், பொருட்கள் என்று நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு சூழலும் , ஒவ்வொரு நிகழ்வும் உங்களுடைய அலைவரிசையில் உள்ளன.
3. நீங்கள் தொடர்ந்து மகிழ்ச்சியாக இருக்கும்பொது, மகிழ்ச்சியான மக்கள், மகிழ்ச்சியான நிகழ்வுகளால் மட்டுமே உங்கள் வாழ்விற்குள் நுழைய முடியும்.
4. வாழ்வைப் பொறுத்தவரை எந்தவொரு விபத்தும் தற்செயலாக நிகழ்வும் ஏற்படுவது கிடையாது. அனைத்தும் இணக்கமானவை உள்ளது. இது வாழ்வின் எளிமையான இயற்பியல் மற்றும் பிரபஞ்சத்தின் செயல்பாடு ஆகும்.
5. நீங்கள் நேசிக்கும் ஏதோ ஒரு பொருளை நினைத்துக் கொள்ளுங்கள். ஆடை உங்கள் அன்பின் ஆற்றலின் அடையாளாச் சின்னமாக வைத்துக் கொள்ளுங்கள் .நீங்கள் உங்கள் அடையாளாச் சின்னத்தைப் பார்க்கும்போது அல்லது கேட்கும்போதோ, அன்பின் ஆற்றல் உங்களுடன் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
6. ஒரு விஷயத்தில் ஈடுபடுவதற்கு முன் , அன்பின் ஆற்றலை உங்களுக்கு முன்னதாக அங்கு அனுப்புங்கள். உங்களுடைய நாளில் ஒவ்வொரு விஷயமும் சிறப்பாக நடப்பதாகக் கற்பனை செய்யுங்கள். எந்தவொரு காரியத்தைச் செய்வதற்கு முன்னும் உங்களால் முடிந்த அளவுக்கு உங்களுக்குள் அன்பை உணருங்கள் .
7. ஒவ்வொரு நாளும் கேள்விகள் கேளுங்கள் .நீங்கள் ஒரு கேள்வி கேட்கும்போது , ஒரு கேள்வியைக் கொடுக்கிறீர்கள். அதற்கான விடையை நீங்கள் பெற்றுத்தான் ஆக வேண்டும்.
8. உங்கள் வாழ்வில் எந்தவொரு விஷயத்திலும் உங்களுக்கு உதவுவதற்கு அன்பின் ஆற்றலை உங்கள் தனிப்பட்ட உதவியாளராகவும் , பணத்தை நிர்வாகிக்கும் மேலாளராகவும் , தனிப்பட்ட முறையில் உங்கள் உடலுக்குப் பயிற்சியளிப்பவராகவும் , உறவுகள் குறித்து ஆலோசனை வழங்கும் ஆலோசனையாளாராகவும் இருக்கும்.
9. உங்கள் மனம் ஏகப்பட்ட விபரங்களால் ஆட்கொள்ளப்பட்டிருந்தால், அந்தச் சிறிய விபரங்கள் உங்கள் வாழ்வை எளிமையாக்கிக் கொள்ளுங்கள் . சிறு விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் . அது என்ன பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்திவிடப் போகிறது.
10. அன்பின் ஆற்றலுக்கு நேரெதிரானது என்று எதுவும் கிடையாது .அன்பைத் தவிர வாழ்வில் வேறு எந்த சக்தியும் இல்லை. உலகில் நீங்கள் காணும் எதிர்மறையான விஷயங்கள் அனைத்தும் அன்பின் பற்றாக்குறையினால் உருவானவையே.
உற்சாகம் உங்களுடன் எப்போதும் இருக்கட்டும்.
நன்றி.நன்றி..நன்றி...

Saturday, 2 September 2017

கடந்த காலமும் மறைந்தொழியும் ❤

❤ முற்பிறவி கர்மா  விழிப்புணர்வு ஞானம்

" மக்கள் என்னிடம் வந்து,

நீங்கள் திடுமென வந்துவிடக்கூடிய ஞானவிழிப்பூட்டம் பற்றி போதிக்கிறீர்கள்

அப்படியானால் எங்கள்  முன்னாளைய கர்மாக்கள் என்ன ஆவது.....???

பழைய ஜென்மங்களில் நடந்ததெல்லாம் என்ன ஆவது....???" என்று கேட்கிறார்கள்.

ஒன்றும் ஆகாது - அவை இருளின் இயல்புடையவை.

நீங்கள் முற்பிறவியில் கொலை செய்திருக்கலாம்,

திருடனாக இருந்திருக்கலாம்,

ஹிட்லராக இருந்திருக்கலாம்.

அதனால் ஒன்றும் வித்தியாசம் ஏற்ப்பட்டுவிடாது.

உங்களையே நீங்கள் நினைவுபடுத்திக் கொண்டதும்

அங்கு ஒளி வந்துவிடுகிறது.

கடந்த காலம் முழுதுமாக மறைந்துவிடுகிறது.

ஒரு வீடு நூறு ஆண்டுகளாக மூடி வைக்கப்பட்டிருந்தாலும்

இன்று அதில் ஓர் விளக்கை ஏற்றியவுடன் அத்தனை காலமாய் அங்கு குடியிருந்த இருள் மறைந்துவிடுகிறது.

இருள் எவ்வளவுதான் முதியதானாலும்

ஒளி எவ்வளவுதான் இளமையாதானாலும்

இருள் ஒளி வந்ததும் மறைந்துவிடுகிறது.

அது ஒளி வருவதற்காக காத்திருக்கிறது.

இருளுக்கு இருப்பு இல்லை.

அது ஒளியை எதிர்பார்க்க முடியாது.

கர்மாக்கள் தீரும்வரை காத்திருந்தால் முடிவிலாக் காலம்வரை காத்திருக்க நேரிடும்.

காத்திருக்கும் நேரத்தில் இன்னும் புதிய கர்மாக்கள் ஏற்ப்பட்டுக்கொண்டே இருக்கும்.

இதற்கு முடிவிருக்காது.

இது சரியில்லை.

உடனடியாக விழிப்புணர்வு பெறுங்கள்.

கர்மங்கள் அப்போதே மறைந்துவிடும்

ஒரே கணப்பொழுதில் கடந்த காலமும் மறைந்தொழியும் ❤

❣ *_ஓஷோ_* ❣