Friday, 6 October 2017

எதிர்மறை எண்ணங்களை களைவது

எதிர்மறை எண்ணங்களை களைவது எப்படி?

எவ்வளவு உத்வேகமான ஆளாக இருந்தாலும், எதிர்மறை எண்ணங்கள் அவர்களை புரட்டிப்போட்டுவிடும். எதிர்மறை எண்ணங்கள் நம் மனதிற்குள் ஒரு பயத்தைக்கூட்டும் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருக்கும். அதை நிறுத்துவது மிகவும் கடினம் போல நமக்கு தோன்றும். அவை நமக்கு விரைவில் கொடுப்பது வலியும் வேதனையும்தான். இதை நான் பலமுறை அனுபவித்திருக்கிறேன்.

எதிர்மறை எண்ணங்கள் நம்மை இந்த நொடியில் ஒட்டாமல் செய்துவிடும். அவற்றை நாம் நிறுத்தாவிடில் அவை மிகவும் வலிமை கொண்டதாக மாறிவிடும். அதன் சக்தியை இப்படியும் சொல்லலாம்.. ஒரு மேடான பகுதியிலிருந்து உருண்டோடி வருகின்ற பந்து உருள உருள பெரிதாகிக்கொண்டே வருவதைப்போன்றது.

நேர்மறை எண்ணங்களுக்கும் அதேபோன்ற சக்தி உண்டு.

எதிர்மறை எண்ணங்கள் பொங்கி வழியும்போது அதைப்போக்க சில வழிகள்.

1. தியானம்

தியானமோ யோகாவோ எதுவாக இருந்தாலும் சரி அது இறைநம்பிக்கை கொண்டதாகவோ அல்லது சாதரணமானதாகவோ இருக்கலாம். ஆனால் என்ன நடக்கும் என்ற பயத்தை போக்கி உங்கள் வாழ்வின் இந்த நிமிடத்தில் உங்களை வாழவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

2. புன்னகை

கடினமான நொடிகளில் சிரிப்பது மிகவும் கடினமாக தோன்றும். ஒரு கண்ணாடியின் முன்பு உங்களை நிறுத்திக்கொள்ளுங்கள். உங்கள் முகத்தை பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக புன்னகையை வரவழையுங்கள். முடிந்தால் ஏதாவது காமெடி சேனல் போட்டு பாருங்கள். சிறிது நேரத்தில் உங்கள் இறுக்கம் குறைந்து தசைநார்கள் இலகுவாகிவிடும். சிரிப்பைவிட சிறந்த மருந்து உலகில் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.

3. நண்பர்கள்

முடிந்தவரை நேர்மறையாக பேசும் நண்பர்கள் சூழ இருங்கள். உங்களை அறியாமலே அவர்கள் உங்கள் கவனத்தை மாற்றுவார்கள்.

4. எண்ணங்களை நேர்மறைக்கு மாற்றுதல்

சிரமங்களை பற்றியும் கஷ்டங்களை பற்றியும் நினைப்பதை கொஞ்சம் மாற்றி, சவால் இருந்தாலும் சமாளிக்கலாம் என்று நினைத்துப்பாருங்கள்.

5. குறைகூறாதீர்கள்

உங்களைப் பற்றியோ மற்றவர்களை பற்றியோ குறைகூறுவதை முதலில் நிறுத்துங்கள். அது எந்தவிதத்திலும் உங்களுக்கு உதவப்போவதில்லை. அப்படியே ஏதேனும் தவறு நடந்திருந்தால் அதை சரிசெய்ய உங்கள் பங்கு என்ன என்பதை நினைத்துப்பாருங்கள். நல்லதே நடக்கும்.

6. உதவுங்கள்

எதிர்மறை எண்ணங்களின் கவனத்தை திசைதிருப்ப இதைவிட சரியான வழி இருப்பதாய் தோன்றவில்லை அடுத்தவருக்கு ஏதாவது ஒரு உதவி (அது சிறியதோ அல்லது பெரியதோ) செய்யும்போது உங்கள் மனதில் தானாகவே நேர்மறை எண்ணங்கள் முளைவிட துவங்கும்.

7. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

தவறுகள் அற்ற மிகவும் சரியான மனிதன் யாரும் கிடையாது. நடந்தது நல்லதற்கே என்று நினைத்து சம்பவங்களை நேர்மறையாக எதிர்கொள்ளும்போது, அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

8. பாடுங்கள்

உங்களுக்கு தெரிந்த ஏதாவது பாடலை முனுமுனுக்க துவங்குங்கள் அது உங்கள் மனதின் சுமையை குறைத்து லேசாக்கும்.

9. நன்றி கூறுங்கள்

நன்றி கூறுவதைவிட சிறந்த நேர்மறை உணர்வு இருக்கமுடியாது. ஏற்கெனவே நீங்கள் பெற்றிருக்கும் அனைத்திற்கும் நன்றி கூறுங்கள். அது மேலும் நல்ல சம்பவங்களையும் இன்னும் அதிக நேர்மறை எண்ணங்களையும் உங்களிடம் இழுத்து வரும்.

10. நல்லதை படியுங்கள்

தினமும் காலையில் செய்தித்தாள் படிப்பவரா நீங்கள்? முடிந்தவரை அதில் உள்ள எதிர்மறை செய்திகளை படிக்காதீர்கள். அது மேலும் எதிர்மறை எண்ணங்களை உங்களிடம் தூண்டிவிடும். தூண்டப்பட்ட எதிர்மறை எண்ணங்கள் உங்களிடம் அதேபோன்ற கெட்ட சம்பவங்களை உங்களிடம் இழுத்துவரும். ஏனென்றால் நீங்கள் அதில் உங்கள் கவனத்தை செலுத்தினீர்கள் அல்லவா..? முடிந்தவரை நல்ல செய்திகளையும் நல்ல வாசகங்களையும் படியுங்கள். அது எப்போதுமே உங்களுக்கு நல்லது.

உங்கள் எண்ணங்களை கவனியுங்கள், அது சொல்லாக மாறக்கூடும்.
உங்கள் சொற்களை கவனியுங்கள், அது செயலாக மாறக்கூடும்.
உங்கள் செயல்களை கவனியுங்கள், அது பழக்கமாக மாறக்கூடும்.
உங்கள் பழக்கங்களை கவனியுங்கள், அது குணமாக மாறக்கூடும்.
உங்கள் குணத்தை கவனியுங்கள், அது தலைவிதியை மாற்றக்கூடும்.

Sunday, 1 October 2017

மனம்

மனம்...
ஆசை...
கற்பனை...
ஓஷோ...

🌸அந்த ஏழை விவசாயி தன் வீட்டில் கயிற்று கட்டிலில் படுத்துக் கொண்டு...

மேலே தொங்கி கொண்டிருக்கும்...

தன் கஞ்சி கலையத்தை பார்த்துக் கொண்டே....

🌸ஒரு நாள்...
இந்த ஊரில் கடுமையான பஞ்சம் வரும்...

அப்போது, இந்த கஞ்சியை நல்ல விலைக்கு விற்பேன்...

🌸கஞ்சி விற்ற காசில்...
கோழிகள் வாங்கி வளர்ப்பேன்...

சில மாதங்களில்...
கோழிகள் நிறைய பெருகியவுடன்...

🌸கோழிகளை விற்று ஆடுகள் வாங்குவேன்...

ஆடுகள் பெருகியவுடன்...

ஆடுகளை விற்று மாடுகள் வாங்குவேன்...

🌸மாடுகளை பெருகியவுடன்...
மாடுகளை விற்று குதிரைகள் வாங்குவேன்...

🌸பிறகு, பெரிய அழகிய வீடு ஒன்றை கட்டி...

அதிலுள்ள குதிரை லாயத்தில்...

குதிரைகளை கட்டி வைப்பேன்...

🌸ஊரில் உள்ள...
மிகபெரிய செல்வந்தர்...

தன் மகளை எனக்கு மணமுடித்து வைப்பார்...

🌸எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும்...

அவனுக்கு ராஜா என்று பெயர் வைப்பேன்...

🌸மாடியிலிருந்து...
என் மனைவியும்...
என் குழந்தையும்...

விளையாடுவதை பார்த்து ரசிப்பேன்...

அப்போது அவன் சேட்டை செய்வான்...

🌸பிறகு கீழே சென்று...
அவளை பார்த்து...

"ஏய்! ராஜாவை கூட்டிட்டு வீட்டுகுள்ள போ...
என்று...
கம்பால் ஓங்கி அடிப்பேன்...
என்று அடித்தான்...

அடித்தவுடன்...
கஞ்சிகலயம் உடைந்து...
அவன் முகத்தில் கொட்டியது...

🌿ஓஷோ🌿
🌸வாழ்க்கையை உள்ளது உள்ளபடி பாருங்கள்...

🌸மனதின் மாறுபாடுகளில் "கற்பனை" யும் ஒன்று.

🌸முழுமையான விரக்தி...
நிராசை...
யோகத்தின் ஆரம்பம்.

🍀பதஞ்சலியோக சூத்திரம்.

கேள்வி பதில்

சீடரின் கேள்விக்கு மௌலானா ரூமி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அற்புத பதில்கள் ... !!! 

விசம் என்பது என்ன ... ???

நமது தேவைக்கு அதிகமான அனைத்தும் விசமே ... அது நமது அதிகாரமாக, செல்வமாக, பசியாக, அகங்காரமாக, பேராசையாக, சோம்பேரித்தனமாக, காதலாக, லட்சியமாக, வெறுப்பாகவும் எதுவாகவும் இருக்கலாம் ...

அச்சம் என்பது என்ன ... ???

எதிர்பாராதவற்றை ஏற்றுக் கொள்ள மறுப்பதே அச்சமாகும் ... அதை நாம் ஏற்றுக் கொண்டால் அது சாகசமாகிவிடும் ...

பொறாமை என்பது என்ன ... ???

பிறரிடம் உள்ள நல்லவற்றை ஏற்றுக் கொள்ள மறுப்பதே பொறாமையாகும் ... அதை நாம் ஏற்றுக் கொண்டால் ... அதுவே நமக்கு உத்வேகமாகிவிடும் ...

கோபம் என்பது என்ன ... ???

நமது சக்திக்கு அப்பாற்பட்ட காரியங்களை ஏற்றுக் கொள்ள மறுப்பதே கோபமாகும் ... ஏற்றுக் கொண்டால் அது சகிப்புத்தன்மையாகிவிடும் ...

வெறுப்பு என்பது என்ன ... ???

ஒருவர் எப்படி இருக்கிறாரோ அவரை அப்படியே ஏற்றுக் கொள்ள மறுப்பது ...

ஒருவரை நிபந்தனைகளின்றி ஏற்றுக் கொண்டால் அது அன்பாகிவிடும் ... !!!

Saturday, 30 September 2017

நம் வெற்றி

காதில் ஒரு பூச்சி
அவன் ஒரு பெரிய நாட்டின் மன்னன். நாட்டின் எல்லைகளை விஸ்தரிக்கத் தொடர்ந்து போர் புரிந்து கொண்டிருந்தான்.
ஒரு நாள் இரவு... தொலைதேசத்தில் ஒரு ராணுவப்பாசறையில் தங்கியிருந்த மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது. திடுக்கிட்டு எழுந்தான். காதில் இருந்த பூச்சியை எடுக்கமன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள்.
அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை.சில வீரர்களை அழைத்துக்கொண்டு தலைநகரத்திற்குத் திரும்பினான் மன்னன்.ராஜவைத்தியரிடம் பிரச்னையைச் சொன்னான். அவரும் எவ்வளவோ பாடுபட்டார். தொலைதூரத்தில் இருந்து மூலிகைகள் வரவழைக்கப் பட்டன.
மூலிகையைப் பிழிந்து சாறு எடுத்து மன்னனின் காதிற்குள் விட்டார்கள். எதற்கும் பலன் இல்லை.மன்னனின் பிரச்னையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரமாண்டமான பரிசுகள் அறிவிக்கப்பட்டன.
எங்கிருந்தெல்லாமோ வைத்தியர்கள் வந்தார்கள். யாராலும் அந்தப் பூச்சியை வெளியே எடுக்க முடியவில்லை.மன்னனின் காதிற்குள் அந்தப் பூச்சி அங்கும் இங்கும் பறந்துகொண்டிருந்ததால் அவனால் தூங்க முடியவில்லை. உணவும் குறைந்து விட்டது. மன்னன் பொலிவு இழந்தான்.
ராஜ கம்பீரமாக உலா வந்து கொண்டிருந்தவன் இப்போது பஞ்சத்தில் அடிபட்டவனைப்போல் காணப்பட்டான். எந்த நேரமும் படுக்கையிலேயே இருந்தான். தன்னுடைய முடிவு நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்தான்.
பதினான்கே வயதான அவனுடைய மூத்த மகனுக்கு அவசர கதியில் வாள்பயிற்சி, குதிரையேற்றம் எல்லாம் கற்பிக்கப்பட்டது.
இந்த நேரத்தில் இமயமலையிலிருந்த
ு ஒரு துறவி சீடர்கள் புடை சூழ நாட்டிற்கு வந்திருப்பதாக செய்திகள் வந்தன. பட்டத்து ராணி அந்தத் துறவியைப் பார்க்கப் போனாள்.அவருடைய காலில் விழுந்து கதறினாள்.
தன் கணவனைக் காப்பாற்ற வேண்டும் என்று மன்றாடினாள்.ஒரு சுபயோக சுபதினத்தில் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார் துறவி. மன்னனின் காதை நன்றாகப் பரிசோதித்தார். ராஜ வைத்தியருடன் கலந்தாலோசித்தார்.
பின் சிறிதுநேரம் தியானத்தில் ஆழ்ந்தார். அன்று மாலை அரசனையும் அரசியையும் தனியாகச் சந்தித்துப் பேசினார்.""இது மிகவும் அபூர்வ வகை பூச்சி அரசே. நம் பக்கத்து மூலிகைகளுக்கு இது கட்டுப்படாது.
இங்கிருந்து நூறு யோஜனை தூரத்தில் உள்ள ஒரு காட்டில் விளையும் அபூர்வமான ஒரு மூலிகைக்குத்தான் இந்தப் பூச்சி கட்டுப்படும்.
இன்றே என் சீடர்களை அனுப்புகிறேன். எப்படியும் ஒரு மாத காலத்திற்குள் அவர்கள் திரும்பி வந்துவிடுவார்கள். அதன்பின் உங்கள் பிரச்னை முற்றிலுமாகத் தீர்ந்துவிடும்.''அந்த மூலிகையை எப்படி இனம் கண்டுகொள்ள வேண்டும் என்று விளக்கிச் சொல்லித் தன் சீடர்களில் சிறந்தவர்கள் இருவரை அனுப்பி வைத்தார் துறவி.
அவர்களுக்குக் குதிரையேற்றம் தெரியுமாதலால் அவர்கள் பயணத்திற்குச் சிறந்த அரபிக் குதிரைகளைக் கொடுத்து அனுப்பினான் மன்னன். கூடவே, அவர்கள் பாதுகாப்பிற்காகச் சில வாளேந்திய வீரர்களையும் அனுப்பி வைத்தான்.
மூன்றே வாரங்களில் சீடர்கள் மூலிகையுடன் வந்தார்கள். அது"ராஜ மூலிகை' என்பதால் அதை வைத்து ஒரு நாள் முழுவதும் பூஜை செய்யவேண்டும் என்று துறவி சொல்லி விட்டார்.
மறுநாள் காலை விடிவதற்கு முன்னால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மன்னனின் காதில் அந்த மூலிகைச் சாறு அரைத்து ஊற்றப்பட்டது.
அடுத்த சில நொடிகளில் செத்த பூச்சி வெளியில் வந்து விழுந்தது. மன்னனிடம் அந்தப் பூச்சியைக் காட்டினார் துறவி.துறவியின் கால்களில் விழுந்து வணங்கினான் மன்னன். சில நாட்கள் அரண்மனையில் தங்கியிருந்தார் துறவி.
மன்னன்இப்போது நிம்மதியாகத் தூங்கினான். நன்றாக உண்டான். பழைய பொலிவு திரும்பி விட்டது.துறவி விடைபெற்றுக்கொண்டார்.
அவருக்கும் அவரது சீடர்களுக்கும் உரிய மரியாதை செய்து அனுப்பி வைத்தான் மன்னன்.அவர்கள் நாட்டு எல்லையைத் தாண்டியதும் துறவியின் சீடர்களில் ஒருவன் கேட்டான்.
""குருதேவா! அந்த அற்புதமான மூலிகை பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்!''மற்றொரு சீடனின் கேள்வி வேறு விதமாக இருந்தது.""மூலிகையைவிட அந்தப் பூச்சி இன்னும் அற்புதமாகத் தோன்றுகிறது. ஒரு மனிதனின் காதிற்குள் புகுந்து அத்தனை நாள் உயிருடன் இருந்து அவனைப் பாடாய்ப் படுத்தி வைத்தது என்றால் அது மிகவும் விசேஷமான பூச்சியாக இருக்க வேண்டும்.. அதைப் பற்றிச் சொல்லுங்களேன்.
''துறவி புன்னகை பூத்தார்.""பூச்சி அத்தனை நாள் எங்கே இருந்தது என்று நினைக்கிறீர்கள்?''""மன்னனின் செவிக்குள்.''""அதுதான் இல்லை. மன்னனின் காதிற்குள் பூச்சி போனது உண்மையாக இருந்திருக்கலாம். சிறிது நேரத்திலேயே அது செத்திருக்கும். இல்லை வெளியே வந்திருக்கும்.
அந்தச் சிறிது நேரத்தில் அது மன்னனின் செவிகளுக்குள் ஒரு குறுகுறுப்பு உணர்வை ஏற்படுத்திவிட்டது. அது மன்னனின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அந்தப் பூச்சிகாதுக்குள் உயிருடன் இருப்பதாகவே மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான்.
.''""குருதேவா அதை விளக்கிச் சொல்லி மன்னனை குணப்படுத்தியிர
ுக்கலாமே?''""மனோவியாதியை அப்படி எளிதாகக்குணப்படுத்திவிட முடியாது அப்பனே!
பிரச்னை தீவிரமானது என்று மன்னன் நினைத்துக்கொண்டிருந்தான். அதனால் தான் நானும் சிகிச்சை தீவிரமானது என்று பாசாங்கு செய்தேன்.. தொலைதூரத்தில் இருந்து மூலிகை வர வேண்டும் என்று பொய் சொன்னேன்.
''""அந்த மூலிகை?''""நம் ஊரில் சாதாரணமாக விளையும் தூதுவளைதான். அதை யாரும் கவனிக்காமல் பார்த்துக் கொண்டேன். பின் ஒருநாள் பூஜை செய்து காலை இருட்டு நேரத்தில் மூலிகைச் சாற்றை மன்னனின் காதில் விட்டுஏற்கனவே பிடித்து வைத்திருந்த ஒரு செத்த பூச்சியைக்காட்டினேன்,. மன்னன் நம்பி விட்டான் அவன் நோயும் தீர்ந்தது.
.''சீடர்கள் வியப்புத் தாளாமல் தங்கள் குருவைப் பார்த்தார்கள்.""இன்று மனித இனத்தைப் பீடித்திருக்கும் நோய்களில் பெரும்பான்மையானவை நம் மனங்களில் தான் இருக்கின்றன.
காதில் நுழைந்த பூச்சி செத்துவிட்டது. மனதில் நுழைந்தபூச்சிதான் நம்மைச் சாகடித்துக் கொண்டிருக்கிறது.
''இன்று நம்மில் பலர் சூழ்நிலையைக் காரணம் காட்டி தமது வாழ்க்கையை தாமே கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.""எங்கப்பாகிட்ட மட்டும் பணம் இருந்தா நான் பெரிய ஆளாகியிருப்பேன்'' என்று எத்தனை பேர் ஜல்லியடிக்கிறார்கள் பாருங்கள்.
இன்று பெரிய ஆட்களாக இருக்கும் பலரும் காசில்லாத தகப்பனுக்குப் பிறந்தவர்கள் தான். பிரச்னை நம் பெற்றோரிடமோ, நம் ஆசிரியரிடமோ, நம் பள்ளி-கல்லூரியிடமோ, நம் சூழ்நிலையிலோ இல்லை. அது நம் மனதில் இருக்கிறது. பூச்சி காதில் இல்லை.
மனதில் இருக்கிறது.ஒரு பிரபலமான தனியார் நிறுவனத்தில் மதிய உணவு இடைவேளையில் அதிகாரிகள் சிரித்துப் பேசி விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
ஒருநாள், அவர்களுக்குள் ஒரு போட்டி. கனமான ஒரு பொருளை (மேஜையில் காகிதங்கள் பறக்காமல் இருக்க வைக்கப்படும் பேப்பர் வெயிட்) தலையில் வைத்தபடி சிறிது தூரம்நடக்க வேண்டும். ஒரு முறை ஒரு அதிகாரியின் தலையில் பேப்பர் வெயிட்டை வைத்தார்கள்.
அந்த அதிகாரி பாவம்.. தலையில் இருக்கும் பொருள் கீழே விழுந்துவிடப் போகிறதே என்ற பயத்தில் வளைந்து நெளிந்து நடந்து கொண்டிருந்தார். பாதி தூரம் கடந்தவுடன் ""என்னால டென்ஷன் தாங்க முடியலப்பா'' என்று போட்டியிலிருந்த
ு விலகிக்கொண்டார்.""உன் தலையில வச்ச பேப்பர் வெயிட்ட நீ நடக்க ஆரம்பிக்கும்முன்பே எடுத்துவிட்டோம்.
இல்லாத ஒரு பொருளுக்காக நீங்க உடம்பை வளைத்து வளைத்து நடந்த காட்சி இருக்கிறதே! ஹ ஹ ஹ ஹ ஹா..
.''இது நகைச்சுவை அல்ல;
இது நச்சென்று இருக்கும் வாழ்வியல் விளக்கம். காதில் இல்லாத பூச்சிக்காகத் தன் உடல்நலத்தைக் கெடுத்துக் கொண்டான் மன்னன்.
இல்லாத பிரச்னையை, இருப்பதாக நினைத்துக்கொண்டு நம் வெற்றி வாய்ப்புக்களைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம் நாம்!

Wednesday, 20 September 2017

அதை பற்றி பேசாதீர்கள்..

நீங்கள் சிறிது நலமற்று இருந்தாலும் அதை பற்றி பேசாதீர்கள்..
.
அது உங்களுக்கு இன்னும் அதிகமாக வரவேண்டுமென்றால் மட்டுமே பேசுங்கள்....
.
" நான் பிரமாதமாக இருக்கிறேன், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் " என்று எத்தனை தடவை முடியுமோ அத்தனை தடவை வாய்விட்டு கூறுங்கள்....
.
உங்களால் ஜலதோசத்தையோ அல்லது வேறு நோய்களையோ பிடித்து கொள்ள முடியாது...நீங்கள் அப்படி நினைக்காதவரை.
.
அப்படி நினைத்தால், உங்கள் எண்ணங்களால் அவற்றிற்கு வரவேற்பு விழா நடத்துகிறேர்கள்...
.
அப்படி ஏற்பட்டு இருந்தாலும் உங்கள் சிரிப்பு மற்றும் எண்ணங்கள் மூலம் உங்களை நீங்களே குணபடுத்தலாம்..
.
நோய்களால், கிருமிகளால் மகிழ்ச்சியான அல்லது உணர்வு பூர்வமான ஒரு உடலில் வாழ முடியாது..
.
எல்லா நோய்களும் ஒரே அடிப்படை காரணத்தில் தான் தோன்றுகின்றன...அதுதான் மன இறுக்கம்..
.
முதலில் மன இறுக்கத்தை மட்டும் உங்களுக்குள் இருந்து வெளியேற்றுங்கள்..பிறகு உங்கள் உடல் தன்னுடைய இயற்கையாக கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தி மூலம் தன்னை தானே குணபடுத்தி கொள்ளும்...
.
உங்கள் உடல் இயற்கையாகவே அவ்வாறு வடிவமைக்கப்பட்டு உள்ளது என்பது அற்புதமான ஒன்று....

வாழ்க நலமுடன்

Monday, 18 September 2017

தக்கவைத்து கொள்ளுங்கள்

ஆஸ்பத்திரி ICU வில் அரை நாள் இருந்து பாருங்கள்,

அஷ்டமி கூட அதிஷ்டநாளாக தோன்றும்!

நடு இரவில் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி பாருங்கள்,

நவமி கூட நல்ல நாளாக தெரியும்!

ராத்திரி முழுக்க காய்ச்சல் வந்த குழந்தையோடு இருந்து பாருங்கள்,

ராகுகாலம் ராசியான காலமாக தோன்றும்!

எமர்ஜன்சியாக ரத்தம் தேடி அலைந்து பாருங்கள்,

எமகண்டம் கூட ஏற்ற நேரமாக தோன்றும்!

ஆம்புலன்சில்  நோயாளியோடு சென்று பாருங்கள்,

ஆயுள் முழுக்க ஆனந்தம் மட்டுமே சொத்தாக தோன்றும்!

வாழ்வில் ஆரோக்கியத்தையும், தைரியத்தையும் தக்கவைத்து கொள்ளுங்கள், வேறு எதை இழந்தாலும் அதை பல மடங்காகக திரும்ப பெறலாம்!

Saturday, 16 September 2017

உயர்வது எப்போது ..

"வாழ்க்கை" உயர்வது எப்போது ... ???

         ஒருவரைப் பற்றி கடுஞ் சொற்கள் பேசுவதற்கு முன் பேசவே முடியாத ஒரு மனிதரை நினைத்து பாருங்கள்.

  உணவின் தரம் பற்றி புகார் தெரிவிப்பதற்கு முன் உணவே கிடைகாதவர்களை பற்றி நினைத்துப் பாருங்கள்.

        நமது வாழ்க்கைத் துணை பற்றி புகார் அல்லது கோபம் கொள்ளும் முன் துணையே இல்லாத மனிதர்கள் பற்றி நினைத்துப் பாருங்கள்.

      நம் வாழ்க்கை இப்படி ஆனதே என்று புலம்பும் முன் வாழ்க்கையே மறுக்கப்பட்டவர்கள் பற்றி நினைத்துப் பாருங்கள்.

       எப்பொழுதும் குழந்தைகள் பற்றிக் கடிந்து பேசும் போது குழந்தைப்பேறு இல்லாதவர்கள் பற்றி நினைத்துப் பாருங்கள்.

   சுத்தமாக வீடு இல்லையே என்று அலுத்துக் கொள்ளும் முன் சாலையோரத்தில் வாழும் மனிதர்களை நினைத்துப் பாருங்கள்.

    சீராக வாகனத்தை ஓட்ட முடியவில்லையே எனப் புலம்பும் முன் பெரும்பாலும் நாள் தோறும நடந்தே செல்பவர்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.

      நமது பணி பற்றி பிறர குறையோ குற்றமோ சொல்லிப் புலம்புவதற்க்கு முன் பணி கிடைக்காமல் அவதிப்படுபவர்களை நினைத்துப் பாருங்கள்.

       இப்படி ஒவ்வொருவரும் தன்னைத் தானே ஒரு தராசில் நிறுத்திப் பார்த்து எது நல்லது என பகுத்துப் பார்த்தால் நாம் வாழ்வில் உயரலாம்.

இதையே வள்ளுவர் சொல்கிறார்,
"ஏதிலார் குற்றம்போல் தன் குற்றம் கான்கிற்பின் தீதுண்டோ மண்ணும் உயிர்க்கு"... !!!