ஒரு ஊரில், ஒருவன் தேவை இல்லாமல் வீண் கற்பனை செய்துக்கொண்டு, ஏதாவது உளரிக்கொண்டும், தன் நிம்மதியை தானே கெடுத்துக்கொண்டும் இருந்தான். அவன் அப்படி இருப்பதால் அவனின் குடும்பத்தினருக்கும் கவலையாக இருந்தது. மருத்துவரிடம் அழைத்து சென்றார்கள்.
அவனை சோதித்து பார்த்த மருத்துவர், “எப்போதிலிருந்து தேவை இல்லாமல் இப்படி கவலையில் இருக்கிறீர்கள்” எனக் கேட்டார்.
”டாக்டர், நான் ஒரு பெரிய குதிரையை விழுங்கியதில் இருந்து இப்படி எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் உண்டானது” என்றான்.
“என்ன….? குதிரையை விழுங்கினிர்களா? என்ன சொல்கிறீர்கள்? அதெல்லாம் சாத்தியம் இல்லை.” என்று மருத்துவர் எவ்வளவோ சொல்லியும் அந்த நபர் கேட்பதாக இல்லை.
சரி. இவன் போக்கிலேயே போக வேண்டியதுதான் என்று முடிவு செய்த மருத்துவர், அவனுக்கு மயக்க ஊசியை போட்டு, ஒரு மணிநேரம் படுக்க வைத்தார்.
அவனுக்கு மயக்கம் தெளிவதற்குள் ஒரு நிஜ குதிரையை பிடித்து வந்து மருத்துவமனை வாசலில் கட்டி வைத்தார்.
அவனுக்கு மயக்கம் தெளிந்தது. உடனே மருத்துவர் அவனிடம், “உங்கள் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து, நீங்கள் விழுங்கிய குதிரையை வெளியே எடுத்துவிட்டேன். வாசலுக்கு சென்று பாருங்கள் நீங்கள் விழுங்கிய குதிரை இருக்கிறது.” என்றார்.
அவனும் வாசலுக்கு வந்து பார்த்தான். உடனே பதறி அடித்துக்கொண்டு மருத்துவரின் அறைக்கு ஓடி வந்தான்.
“அய்யோ டாக்டர், அது நான் விழுங்கிய குதிரை இல்லை. நான் விழுங்கிய குதிரை கருப்பு நிறம். நீங்கள் காட்டும் குதிரையோ வெள்ளை. அப்படி என்றால்…..? அய்யய்யோ… என் வயிற்றில் இரண்டு குதிரைகள் இருந்திருக்கிறது. ஏன் நீங்கள் கருப்பு குதிரையை எடுக்கவில்லை? ஏதாவது பிரச்சனையா?“ என கேட்க,
அதற்கு டாக்டர்,“என்னால முடியல… இன்னிக்கு ஆஸ்பத்திரி லீவு.” என்று சொல்லி, வீட்டுக்கு கிளம்பினார்.
திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதுபோல, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களே தங்களின் மனதை கட்டுப்படுத்திட யோகா, தியானம், வழிபாடு என சிந்தனையை நல்வழிப்படுத்த பழகி கொள்ள வேண்டும்.
என்னதான் மற்றவர்கள் முயன்றாலும் அவர்கள் இணங்காவிட்டால் அவர்களை மாற்றுவதென்பது கடினம்.
உண்மையை உங்களுக்கு என்னால் வழங்க முடியாது.ஆனால் நான் உங்களுக்கு நிலவை சுட்டி காட்டலாம்.தயவு செய்து நிலவை சுட்டி காட்டும் விரலை பற்றி கொள்ளாதீர்கள்.விரல் காணாமற் போய்விடும்.நிலவு அப்படியே இருக்கும்.
Friday, 15 December 2017
பழகி கொள்ள வேண்டும்.
சங்கல்பம்
***சங்கல்பம் ***
சங்கல்பம் என்பது நாம ஒரு வேலையை செஞ்சு முடிக்கணும்னு மனசார நினைப்பது.
நம்ம எண்ணங்களின் வெளிப்பாடே நம்ம வாழ்க்கை
நாம் சொல்லும் சொல்லுக்கும் மதிப்பு இருக்கு.
ததாஸ்து தேவதைகள் நம்மை சுத்தி இருப்பாங்க. அதனால இல்லைன்னு சொல்லக்கூடாது நிறைய்ய இருக்குன்னு தான் சொல்லணும். அந்த நிறைய்யல கொடுக்கற அர்த்தத்தை வெச்சு ஓகே இது கம்மியா இருக்கு/
No availability அப்படின்னு புரிஞ்சுக்கணும். அதாவது இப்ப உப்பு தீர்ந்து போச்சுன்னு வெச்சுக்குவோம். உடனே உப்பு இல்லை வாங்கிட்டு வரணும்னு சொல்வோம். ஆனா அதுக்கு பதிலா “உப்பு நிறைய்ய இருக்கு” வாங்கணும்னு மாத்தி சொல்லணும்.
ப்ரபஞ்ச சக்திக்கு இல்லைங்கற வார்த்தை என்பதே தெரியாது
நாம எனக்கு இது வேணாம்னு சொன்னா நமக்கு வேணும்னு சொல்வதாத்தான் எடுத்துக்குமாம். இல்லைன்னு சொன்னா இல்லாம போகும். சொல்லப்படும் வார்த்தைகளுக்கு சக்தி அதிகம்.
அதனால நாம என்ன சொல்றோம் அப்படிங்கறதுல அதிக கவனம் செலுத்தனும். நேர்மறைகூற்றாத்
தான் அது இருக்கணும்.
POSITIVE AFFIRMATION - நேர்மறை உறுதிக்கூறப்படுவது:
மருத்துவரோட முக்கிய வேலை மருந்து கொடுப்பது மட்டுமில்லை. நோயாளிகள்ட்ட அன்பா பேசி அவங்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுப்பதும்தான். “ எல்லாம் சரியாகிடும். இந்த மருந்தை எடுத்துக்கோங்க. சீக்கிரம் நிவாரணம் ஆகிடும்” அப்படின்னு சொல்லி அனுப்பும்போதுஅந்த நோயாளி அந்த எண்ணங்களோடயே அந்த மருத்துவத்தை தொடரும்போது அந்த மருந்து சீக்கிரம் வேலை செய்யும். எல்லாம் சரியாகிடும்னு டாக்டர் சொல்லியிருக்கார்னு அவங்க திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருப்பாங்க. அப்ப எல்லாம் சரியாகும்.
அந்த மருத்துவர் சொன்ன வார்த்தைகள் தான் positive affirmation. ஹீலிங்கில் இந்த positive affirmation ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கப்படுது. நான் நல்லா இருக்கேன். எல்லாம் நல்லபடியா நடக்கும், இப்படி உறுதிக்கூறப்படு
ம்போது நம்ம மனசுல அது ஆழமா பதியுது. இந்த உறுதிகூறப்படும் நேர்மறை வார்த்தைகள் தான் நமக்கு மந்திரம். அதாவது அதுல எந்த எதிர்மறை சொல்லும் இல்லாம இருக்கணும். இது ரொம்ப முக்கியம். நேர்மறை வார்த்தைகளால் அந்த உறுதிக்கூறும் வாக்கியங்கள் அமைக்கப்படணும்.
1.****அபிராமி பட்டர் அவர்கள் அருளிச்செய்த அபிராமி அந்தாதி பாட்டு***
. இது மொத்தமும் positive affirmations தான். நம் முன்னோர்களுக்கு ப்ரபஞ்ச சக்தி எனும் ரகசியம் தெரிஞ்சிருக்கு. கேளுங்கள் கொடுக்கப்படும் அப்படின்னு சொல்லிக்கொடுத்த
ு அதை எப்படி கேக்கணும்னும் அழகா சொல்லியிருக்காங்க. ஒரு எதிர்மறை சொல் இல்லாம எவ்வளவு அழகா வார்த்தைகளை அமைச்சு நமக்கு கொடுத்திருக்காங்க
""தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
தனம் தரும் – எல்லாவிதமான செல்வங்களும் தரும்
கல்வி தரும் – எல்லாவிதமான கல்வியையும் தரும்
ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும் – என்றும் சோர்ந்து போகாத மனமும் தரும்
தெய்வ வடிவும் தரும் – தெய்வீகமான உருவத்தையும் தரும்
நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் – உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத நண்பர்களைத் தரும்
நல்லன எல்லாம் தரும் –
இன்னும் என்ன என்ன நன்மைகள் எல்லாம் உண்டோ அவை அனைத்தையும் தரும்
அன்பர் என்பவர்க்கே கனம் தரும் – எல்லோரிடமும் அம்மையிடமும் அன்புடன் இருக்கும் அன்பர்களுக்கு எல்லா பெருமையையும் தரும்
பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே –
கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர் கபடு வாராத நட்பும்,
கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்,
சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும், தவறாத சந்தானமும்,
தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்,
தொலையாத நிதியமும், கோணாத கோலும், ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்,
அலை ஆழி அறிதுயிலும் மாயனது தங்கையே, ஆதி கடவூரின் வாழ்வே,
அமுத ஈசர் ஒரு பாகம் அகலாத சுக பாணி அருள்வாய் அபிராமியே!
கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர் கபடு வாராத நட்பும்,
கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்,
சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும், தவறாத சந்தானமும்,
தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்,
தொலையாத நிதியமும், கோணாத கோலும்,
கோலும், ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்,
1.கலையாத கல்வி
2.நீண்ட ஆயுள்
3.வஞ்சகம் இல்லாத நட்பு, நண்பர்கள்
4.நிறைந்த செல்வம்
5.என்றும் இளமை
6.நோயற்ற உடல்
7.சலிப்பற்ற மனம்
8.அன்பு நீங்காத மனைவி / கணவன
9.குழந்தைப் பேறு
10.குறையாத புகழ்
11.சொன்ன சொல்லைக் காப்பாற்றும் தன்மை
12.பிறருக்குக் கொடுக்கும் எண்ணம், அப்படிக் கொடுப்பதற்குத் தடைகள் இல்லாத சூழ்நிலை
13.நிலைத்த செல்வம்
14.நேர்மையாக ஆட்சி செய்யும் அரசன் (தான் நேர்மையாக வாழ விரும்பும் உள்ளம் என்றும் எடுத்துக்கொள்ளலாம்)
15.துன்பம் இல்லாத வாழ்க்கை
16.உன்மேல் எப்போதும் அன்பு இந்தப் பதினாறு செல்வங்களையும் எனக்குத் தருவாய், அதோடு, உன்னுடைய பக்தர்களுடன் என்றென்றும் கலந்து பழகி மகிழும் வரத்தையும் அருள்வாய்!
ஒரு எதிர்மறை சொல் இல்லாம அழகா வார்த்தைகளை அமைச்சு நமக்கு கொடுத்திருக்காங்க
2.**ஸ்கந்த சஷ்டி கவசம்**
ஒவ்வொரு வார்தைகளும் நேர்மறை உறுதிகூறப்படுவதுதான்.
3.**ஸ்கந்த குரு கவசம்** . “கற்றர்வகளோடு என்னை களிப்புறு இருத்திடச்செய், உள்ளும் புறமும் ஒரு முருகனையே காண்கிறேன், எந்த நினைப்பயும் எரித்து நீ காத்திடு, அன்பே சிவம், அன்பே நித்தியம், அன்பே பிரம்மமும்” இப்படி நிறைய்ய. இவைகளை திரும்ப சொல்ல சொல்ல நமக்குள் அன்பு பெருகும், கற்றவர்களுடன் நாம கலந்து மேலும் அறிவை பெருக்கிக்கலாம். ஏதோ மந்திரம் அப்படின்னு நினைக்காம நேர்மறை உறுதிக்கூறப்படுவதாக நினைத்து ஒரு முறை ஆழமா கேட்டுப்பாருங்க.
நமக்கு தெரிஞ்சதை நாலு பேருக்கு எடுத்து சொல்வோம். நேர்மறை உறுதிக்கூறுவதைப்பத்தி சொல்வோம். இந்த positive affirmations எல்லாம் நமக்கு நாமே சொல்லிப்பது. நமக்கு எது தேவையோ அதுக்கு தக்க நம்ம உறுதிக்கூற்றை அமைச்சுக்கணும்.
முடியும் என்று நம்பி செயல்களை துவக்குவோம்.
சுயபிரகடனம்
1. எனக்குள் ஒர் அரும்பெரும் சக்தி புதைந்துள்ளது. வெற்றி எண்ணத்தை என்றென்றும் வளர்த்து, என் சக்தியாலேயே, நான் வெற்றி அடைந்தே தீருவேன்.
2. முறையான படிப்பின் மூலம் என் உள்ளத்தின் ஆழ் மனதில் ஒவியம் போல் பதிந்துவிடும் படி நான் கற்று உணர்ந்து, தெளிவேன்.
3. என் வாழ்வை செம்மைப்படுத்து
வேன்.
4. பெற்றோர்களிடம் இருந்து நல்லொழுக்கத்தை கற்பேன், ஆசிரியர்களிடம் இருந்து அறிவார்ந்த லட்சியத்தை அடைவேன்.
5. என்னால் எதைக் கொடுக்க முடியும் என்ற லட்சியத்தை என் உள்ளத்தில் உருவாக்குவேன். நான் பெற்ற அறிவை அனைவருக்கும் கொடுப்பேன், அன்பை கொடுப்பேன், பண்பை வளர்ப்பேன், மற்றவர்களை மதிப்பேன் எல்லாவற்றிற்கும்மேல் அனைவரிடமும் நட்பை வளர்பேன்.
6. நான் வெற்றி பெறுவேன், மற்றவர்கள் வெற்றியையும் கொண்டாடி மகிழ்வேன்.
7. பெற்றோர்கள் உதவியுடன், நான் என் வீட்டில் ஒரு சிறு நூலகம் அமைத்து, தினமும் ஒரு 30 நிமிடமாவது புத்தகங்களைப் படிப்பேன்.
8. இன்றையில் இருந்து என் மனதில் ஒர் உன்னத லட்சியம் உதயமாகிவிட்டது; அறிவை தேடி, தேடி, சென்றைடைவேன்; கடினமாக உழைப்பேன்; பிரச்சனைகளை கண்டு பயப்படமாட்டேன்; தோல்வி மனப்பான்மைக்கு தோல்வியை கொடுத்து, விடாமுயற்சி செய்து எனது உன்னத லட்சியத்தைவென்ற
டைவேன்.
9.நான் பறந்து கொண்டேயிருப்பேன
்நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்நான் பிறந்தேன் கனவுடன், வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்தநான் பிறந்தேன் ஆராயச்சி உள்ளத்துடன்நான் பிறந்தேன் என்னால் முடியும் என்ற உள்ள உறுதியுடன்நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்கநான் பூமியில் ஒரு போதும் தவழமாட்டேன்,தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம்,பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன
10.நான் விளக்காக இருப்பேன்,நான் படகாக இருப்பேன்,நான் ஏணியாக இருப்பேன்,அடுத்தவரின் துன்பத்தை துடைப்பேன்,மனநிறைவோடு வாழ்வேன்.
நன்றி
வெற்றி நிச்சயம்
உன்னால் முடியும்
Thursday, 14 December 2017
அதிசயம் நடக்கும்
உங்கள் மனதை போட்டு குழப்பும் பிரச்சனை விரைவில் சரியாகி ஆகிவிடும் என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லிவிட்டு வேலையை பாருங்கள்
.
விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்படபோகும் அதிசயங்களுக்கு நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி கொண்டே இருந்தால் போதும்
.
அது எப்படி சரி ஆகும், சரி ஆகும் வழிகளை பற்றியெல்லாம் நீங்கள் ஆராய வேண்டாம்,
.
நமக்கு ஒரு சில வழிகள் தான் தெரியும்,
ஆனால் பிரபஞ்சத்திற்கு ஆயிரம் வழிகள் இருக்கும். அது எப்படியும் சரி செய்து விடும்.
.
உங்கள் வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள் பிரபஞ்சத்திற்கு கட்டளைகளாக அனுப்பப்பட்டு எல்லாவற்றையும் விரைவில் சரி செய்துவிடும்...
.
உங்களை சுற்றி எதிராக நடப்பதை பற்றி கவலை படவேண்டாம்.
.
உங்களுக்கு எதிராக எத்தனை பேர் செயல்படுகிறார்கள் என்பதையும் பற்றி பொருட்படுத்த வேண்டாம்.
.
பயம் மற்றும் குழப்பங்கள் வரும் போது பதட்டமில்லாமல் ஆழ்ந்த அமைதியாக இருக்க கற்று கொள்ளுங்கள்
.
நான் மிகுந்த நம்பிக்கையாக இருக்கிறேன், விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்படபோகும் எல்லா அதிசயங்களுக்கு நன்றி, பிரபஞ்சத்திற்கு நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி கொண்டே இருங்கள். நிறுத்தாமல் சொல்லி கொண்டே இருங்கள். [ சக்திவாய்ந்த செயல்முறை ]
.
உங்கள் வார்த்தைகள், சந்தோஷமான மற்றும் நம்பிக்கையான உணர்வுகள் மற்றும் எண்ணங்கள்
போதும் எல்லாவற்றையும் சரி செய்துவிடும்...
உங்கள் நேர்மறையான சக்தி இந்த பிரபஞ்சத்தை காட்டிலும் சக்தி வாய்ந்தது என்பதை மட்டும் உணருங்கள்.
நன்றி
அனைவருக்கும் வணக்கம்.நமக்கு தேவையான அனைத்தையும் இப் ப்ரபஞ்சத்திடம் இருந்து
நாமே பெறலாம்.இப் பிரபஞ்சம் அனைவருக்கும் சொந்தம்.
இப் பிரபஞ்ச பேராற்றல் நமக்கு தேவையான
அனைத்தையும் கொடுப்பதற்கு தயாராக உள்ளது நாம்தான் பெறுவதற்கு தயராக இல்லை. தவறு நம் மீது தான் அனைவருக்கும் சூரியன்.சந்திரன் காற்று என இயற்கைக்கு உட்பட்ட அனைத்தும் சமமாகவே கொடுக்கிறது.நாம் விரும்பியதை
அடைய நமக்கு முழு அதிகாரம் இருக்கிறது.இதற்காக நாம் யாரும் நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை
நமக்கு நாமே குரு
நாம் தான் பில்கேட்ஸ்க்கு ஒரு சூரியன் நமக்கு ஒரு சூரியன் என்று தவறாக புரிந்து கொண்டு இருக்கிறோம்.
நமக்கு ஒரு பிரச்சனை என்றால் நாம் இப் ப்ரபஞ்சத்திடம் கேட்கும் விதம் தான் தவறு நடக்கிறது.ஆக மொத்தத்தில் நம்முடைய புரிதல் கோணம் தான் தவறானது.
சரி இப்பொழுது இப் பிரபஞ்ச பேராற்றலை நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி எப்படி வெற்றி காண்பது என்பதை பார்ப்போம்.மிக மிக சுலபமான வழி முறையாக உள்ளதே!!! பலன் அளிக்கு்மா என நினைக்க வேண்டாம். பயன்படுத்தி பாருங்கள் பலன் நிச்சயம்.
மந்திரம் சொல்ல வேண்டாம.தியானம் செய்ய வேண்டாம். பணம் செலவு செய்ய வேண்டாம் நேரம் ஒதுக்க வேண்டாம். நாம் சாதாரணமாக செயல்களில் ஈடு பட்டுக்கொண்டே இப் பிரபஞ்ச சக்தியிடம் அனைத்தையும் பெறலாம்.
இதற்கு எல்லாம் என்ன செய்ய வேண்டும் மிக சுலபம் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபருக்கும் மனதார நன்றி மூன்று முறை கூற வேண்டும்.
அவ்வளவுதான் மற்றதை இப்பிரபஞ்சம் நமக்கு தேவையானதை
நடத்தி காட்ட தயாராகி விடும்.இதை நாம் செய்வதற்கு மறந்து விடுவோம் இதையும் விட சுலபமான ஒரு வழி உள்ளது அது என்ன வென்றால் தற்காலத்தில் தொலைபேசி இல்லாமல் யாரும் இல்லை ஆகவே ஒவ்வொரு தொலைபேசி அழைப்பு மணி ஒலிக்கும் போதும் நன்றி என்ற ஒரு மாயாஜால வார்த்தயை கூறிவிட்டு பச்சை நிற வண்ணத்தை தொட்டு பேச தொடங்குங்கள் பிறகு உங்கள் வாழ்க்கை முறையை மாற்றி நல்ல ஒரு உயர்ந்த நிலையை அடையவதற்க உண்டான தொடக்க பாதைக்கு இப்பிரபஞ்சம் பச்சை நிற கொடி அசைத்து காட்டிவிடும்..
சரி இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் கேட்கலாம்.நமக்கு ஒருவர் பரிசு பொருட்கள் அல்லது உதவி செய்யும் பொழுது நாம் என்ன கூறுகிறோம் நன்றி என்கின்ற வார்த்தையை கூறுகிறோம் அல்லவா அதே போல் தான் இதுவும்.ஐஸ்டீன் சூத்திர படி எந்த ஒரு நேர் வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு அது போலவே இப்பொழுத இங்கே நமக்கு கொடுப்தற்கு முன்பே நன்றி கூறிவிடுகிறோம். இப்பொழுது பிரபஞ்சம் நமக்கு கடமை பட்டு விடுகிறது நமக்கு தேவையை நிறைவு செய்யகிறது.
Wednesday, 13 December 2017
இறைவன் நம்மை தேடி வருவார்.
"இறைவன் நம்மை தேடி வருவார்..."
புதிதாக தன்னிடம் வந்து சேர்ந்த சீடனிடம் குரு கேட்டார்,
“ஆன்மிகத்தின் நோக்கம் என்ன என்று சொல்ல முடியுமா?”
புதிய சீடன், “இறைவனை அறிவது தான், அடைவது தான் ஆன்மிகத்தின் நோக்கம்...”
“அப்படியா?”
“என்ன அப்படியா என்று கேட்கிறீர்கள்... அப்படித்தானே இருக்க முடியும்?”
“சரி. இத்தனை நாள் ஆன்மிகத்தில் சாதகம் செய்து வருகிறாயே இறைவனை அறிந்தாயோ?”
“இல்லை. ஆனால் முயன்று கொண்டிருக்கிறேன்.”
“நல்லது... உண்மையிலேயே இறைவனை அறிந்து கொண்டுவிட முடியும் என்று நம்புகிறாயா?”
சீடன் சற்றே யோசித்துவிட்டுச் சொன்னான்.
“நம்புகிறேன்... இருப்பினும், கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கிறது.”
“எதனால் இந்த சந்தேகம் வருகிறது?”
“பலர் பலவிதமாக இறைவனைப் பற்றிச் சொல்கிறார்கள். மிகவும் ஆராய்ந்து பார்த்தால் தெளிவை விடக் குழப்பமே மிஞ்சுகிறது.”
“நல்லது... எப்போது நீ உள்ளது உள்ளபடி சொன்னாயோ அதுவே நல்லது. சீடனே, இப்போது நான் வேறு விதமாகக் கேட்கிறேன். நீ ஆண்டவனைத் தெரிந்துகொள்ள, அடைய விரும்புகிறாயா...?”
“ஆமாம் குருவே.”
“உன் விருப்பத்தின் காரணமாகத்தான் நீ ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாய். அப்படித்தானே?”
“ஆமாம் குருவே.”
“அன்புள்ள சீடனே! நீ இறைவனைத் அடைய, ஓர் எளிமையான மாற்று வழியைச் சொல்லித் தருகிறேன்...”
“மிகவும் சந்தோஷம் குருவே. இந்த வழிக்காகத்தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.”
“ஆனால் இந்த வழியில் நீ இறைவனை அடைய முடியாது. ஆனால் இறைவன் உன்னை வந்து அடைவான்.”
“இது குழப்பமாக இருக்கிறதே.”
“ஒரு குழப்பமும் இல்லை...
ஒரு அரசன் இருக்கிறான். பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு அவன் ராஜா. அவன் அருகே நெருங்குவதோ பேசுவதோ அறிவதோ எளிமையான விஷயம் அல்ல. முடியவும் முடியாது.”
“ஆம்.”
“ஆனால் ராஜாவை சந்திக்க வேண்டும் என்கிற பிரஜை, ஓர் அருமையான காரியத்தைச் செய்கிறான்...
அவன் தேசத்தில் உள்ள மக்கள் எல்லோருக்கும் பயன்படும்படியாக உழைக்கிறான். பல அறச் செயல்களைச் செய்கிறான். இந்தச் செய்தி ராஜாவுக்குப் போகிறது.
உடனே ராஜா பிரதிநிதிகளை அனுப்பி தன் அரசவைக்கு அவனை வரவழைக்கிறார். அல்லது அவரே நேரில் அவனைப் பார்க்க வருகிறார். அவனோடு உரையாடுகிறார். பாராட்டுகிறார். பரிசுகள் தருகிறார். இது நடக்கும் இல்லையா?”
“நடக்கும் குருவே.”
“இப்போது ராஜாதான் இறைவன்.
நீதான் அவன். நீ என்ன முயற்சி செய்தாலும் ராஜாவைப் நெருங்குவது கஷ்டம். ஆனால் உன் செயல்கள் பலருக்கும் பயனுடையதாக இருந்தால் அந்த ராஜாவே உன்னைப் பார்க்க வருவார்.
எனவே, இறைவனைப் பார்க்கும் முயற்சியைக் கைவிடு. இறைவன் உன்னைத் தேடி வரும் தகுதியான செயல்களில் ஈடுபடு... இறைவனே உன்னை வந்து அடைவான்... சரிதானே...?”
“மிகவும் சரிதான் குருவே...”
“நல்லது சீடனே, இனி ஆன்மிகம் உனக்குப் கை கூடும். போய் வா...”
சீடன் தெளிவடைந்து குருவிற்கு நன்றி தெரிவித்தான்...
நம்
எண்ணங்களும்..
உணர்வுகளும்...
சிந்தனைகளும்...
சொல்களும்...
செயல்களும்...
நம்மை சுற்றி உள்ள மனிதர்களுக்கு...
நல்லது செய்யுமெனில்...
இறைவனை
நாம் தேட வேண்டியதில்லை...
*இறைவனே நம்மை தேடி வருவார்...*
Friday, 8 December 2017
புத்துணர்ச்சி
🌻புத்துணர்ச்சி பெற. ...கவலைகள் நீங்க 🌻
💥1.உங்களுக்கு நீங்களே இவ்வாறு கூறிக் கொள்ளுங்கள்.💥
🌿, ‘கவலை என்பது வெறும் மனப்பழக்கம்தான்.
🌿பிரபஞ்சத்தின் உதவியுடன் எந்தப் பழக்கத்தையும் என்னால் மாற்ற முடியும்’.
💥2.கவலையைக் கடைப்பிடிப்பதன் மூலம் நீங்கள் கவலையாளர் ஆகிவிடுகிறீர்கள்💥
. 🌿கவலைக்கு நேரெதிரான, வலிமையான, நம்பிக்கை என்னும் பழக்கத்தைக் கடைப் பிடிப்பதன் மூலம் உங்களால் கவலையில் இருந்து விடுபட முடியும்.
💥3.உங்களால் திரட்டக் கூடிய விசுவாசத்தைக் கடைப்பிடிக்கத் துவங்குங்கள்.💥
🌿விசுவாசம் என்னும் பழக்கத்தை எவ்வாறு உருவாக்குவது?
🌿தினமும் படுக்கையைவிட்டு எழுவதற்கு முன் முதல் வேலையாக
🌿‘நான் நம்புகிறேன்’ என்று உரக்க மூன்று முறை கூறுங்கள்.
💥4. இந்தச் சூத்திரத்தைக் கொண்டு பிரார்த்தனை செய்யுங்கள். 💥
🌿நான் இன்றைய தினத்தையும், என் வாழ்க்கையையும், என் அன்பிற்கு உரியவர்களையும், என் வேலையையும் பிரபஞ்சத்தின் கைகளில் ஒப்படைக்கிறேன்.
🌿பிரபஞ்சத்தின் கைகளில் எந்தத் தீங்கும் இல்லை.
🌿நல்லது மட்டுமே உள்ளது.
🌿எது நிகழ்ந்தாலும் சரி,
🌿எந்த கைகளில் இருந்தால்,
🌿அது இயற்கையின் விருப்பம்.
🌿அது நல்லதாகவே இருக்கும்.
💥5.நேர் மறையாகப் பேசுவதற்குப் பயிற்சி செய்யுங்கள்.💥
🌿 ’இன்று மிக மோசமான நாளாக இருக்கப் போகிறது’ என்று கூறாதீர்கள்
. 🌿மாறாக ‘இன்று ஓர் அற்புதமான நாளாக அமையப் போகிறது’ என்று சுய பிரகடனம் செய்யுங்கள்,’
🌿என்னால் ஒருபோதும் அதைச் செய்ய முடியாது’ என்று கூறாதீர்கள்.
🌿மாறாக’இயற்கை சக்தியின் உதவியுடன் நான் அதைச் செய்வேன்’என்று சுயபிரகடனம் செய்யுங்கள்.
💥6.’கவலை பற்றிய உரையாடலில் ஒருபோதும் கலந்து கொள்ளாதீர்கள்💥.
🌿 அனைத்து உரையாடல்களிலும் நம்பிக்கையைப் புகுத்துங்கள்.
🌿மோசமான விஷயங்களுக்கு மாறாக உற்சாகமூட்டும் விஷயங்களைப் பற்றி பேசுவதன் மூலம் மனச்சோர்வூட்டும் சூழலை விரட்டி விட்டு, அனைவரும் நம்பிக்கை யையும் மகிழ்ச்சியையும் உணர உங்களால் உதவ முடியும்.
💥7. கவலையாளராக இருப்பதற்கு ஒரு காரணம்,
மனம் பய எண்ணங்களாலும், தோல்வி எண்ணங் களாலும், சோர்வூட்டும் எண்ணங்களாலும் நிரம்பி வழிவதுதான். 💥
🌿அதை முறிப்பதற்கு, நம்பிக்கை, மகிழ்ச்சி, புகழ், பொலிவு ஆகியவற்றைப் பற்றிய பகுதிகளைக் குறித்துக் கொள்ளுங்கள்.
🌿 ஒவ்வொன்றையும் மனப்பாடம் செய்து மனத்தில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
🌿அவற்றை மீண்டும் மீண்டும் கூறி வாருங்கள். அப்போது, நீங்கள் உங்கள் ஆழ் மனத்திற்குக் கொடுத்துள்ள தன்னம்பிக்கையை உங்கள் ஆழ்மனம் உங்களுக்குத் திருப்பிக் கொடுக்கும்.
💥8.நம்பிக்கையான மக்களிடம் நட்புறவை வளர்த்துக் கொள்ளுங்கள்💥.
🌿நேர்மறையான, விசுவாசத்தை உருவாக்கும் எண்ணங்களைச் சிந்திக்கும் படைப்புச் சூழல் உருவாவதற்குப் பங்களிக்கும் நண்பர்களை உங்களைச் சுற்றி வைத்துக் கொள்ளுங்கள்
🌿இது நம்பிக்கை மனப்போக்கை மீண்டும் தூண்டும்.
💥9. தங்கள் சொந்தக் கவலைப் பழக்கத்தை விட்டொழிக்க 💥
🌿உங்களால் எத்தனை பேருக்கு உதவ முடியும் என்று பாருங்கள்.
🌿மற்றவர்கள் தங்கள் கவலைகளில் இருந்து மீள்வதற்கு நீங்கள் அதிக சக்தியைப் பெறுவீர்கள்.
💥10.உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளும் கடவுளின் கூட்டாளியாகவும், நண்பனாகவும் வாழ்வதாகக் கற்பனை செய்யுங்கள். 💥
🌿கடவுள் உண்மையிலேயே உங்களோடு நடந்து வந்தால், நீங்கள் கவலைப்படுவீர்களா? பயப்படுவீர்களா?
🌿‘கடவுள் என்னோடு இருக்கிறார்’ என்று கூறுங்கள்.
🌿‘நான் எப்போதும் உன்னோடு இருக்கிறேன்’ என்று சத்தமாக சுயபிரகடனம் செய்யுங்கள்.
🌿பிறகு அதை மாற்றி ‘நீ இப்போது என்னோடு இருக்கிறாய்’ என்று கூறுங்கள். தினமும் அந்த சுய பிரகடனத்தை மூன்று முறை கூறுங்கள்.
உடலும் மனமும்
புத்துணர்ச்சி பெறும்