Sunday, 7 January 2018

ஜீவசரணாலய மந்திரங்கள் 

ஜீவசரணாலய மந்திரங்கள்  💥
ஆன்மிகத்துக்கு முதல் படி 60
உடல்நலத்திற்கு நல்ல படி
அனைவருக்கும் புரியும் படி
வாழ்க்கையில் சகல நன்மைகள் பெற!
தடுங்கள்களை தடுக்க!
வில்லங்கம் விலக!
காலை,மாலை மானசீகமாக அமைதியாக ஒரே இடத்தில்அமர்ந்து கொண்டு பின்வரும்;
; 💥ஜீவசரணாலய மந்திரங்கள்  💥
மகான்களை வணங்குகிறேன்,உங்கள் ஆசி எமக்கு தினமும் பூரணமாக கிடைக்குமாக என்று தொடங்கி,!
1."நான் தெரிந்தும்,தெரியாமல் செய்த தவறுகளால் பாதிக்கபட்ட மனிதர்களிடம் மன்னிப்பு கேட்கின்றேன்.
2.எனக்கு தெரிந்தும்,தெரியாமல் துன்பம் கொடுத்தோரை மன்னிக்கின்றேன்
.3.என்னுடைய தேவைக்காகவும்,ஆசைக்காகவும்,அறியாமையாலும் பாதிக்கபட்ட ஜீவன்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்
.4.எம்முடைய முன்னோர்கள் ஆத்மாக்கள் ஆனந்த அமைதியடையட்டும். இவற்றை சொல்லிய பின்பு,
5. "என்னுடைய புண்ணியத்தை எல்லா உயிர்களிடமும் பகிர்ந்து கொள்கின்றேன்
" 6.என்னுடைய அன்பை எல்லா உயிர்களிடமும் பகிர்ந்து கொள்கின்றேன்.
7.என்னுடைய அமைதியை எல்லா உயிர்களிடமும் பகிர்ந்து கொள்கின்றேன்
.8.என்னுடைய இணக்கத்தை எல்லா உயிர்களிடமும் பகிர்ந்து கொள்கின்றேன்.
9.என்னுடைய சந்தோஷத்தையும் எல்லா உயிர்களிடமும் பகிர்ந்து கொள்கின்றேன்.
10.என்னுடைய நண்றியுனர்வையும் எல்லா உயிர்களிடமும் பகிர்ந்து கொள்கின்றேன்
.11.மனிதர்களிடம் உள்ள மனமாசுகள் நீங்கடும்.
12.எல்லா உயிர்களும் அமைதியை உணரடும்
.13.எல்லா உயிர்களும் ஆனந்தத்தை உணரடும்
.14.எல்லா உயிர்களும் விடுதலை பெறட்டும்
.15.எல்லா உயிர்களிடமும் அன்பு ஊற்றாக பெருகடும்.
16.சித்தர்கள்,மகான்கள்,ஞானிகளின் கருனை மழை எல்லா ஜீவன்கள் மீதும் பொழியுமாக!
மேற்படி ஜீவசரணாலய மந்திரம் சகல நன்மைகளை தர கூடியது.