Thursday, 25 January 2018

செல்வம் வளம் நிரந்தரமாக

செல்வம் வளம் நிரந்தரமாக தெய்வீக ரகசியங்கள் (எல்லோரும் பயன் பெற ஷேர் செய்யுங்கள்) வீட்டின் உள்புறம் வாசல் படி அருகே ஒரு ஒரு பெரிய கண்ணாடி கிண்ணத்தை திறந்தபடி வைத்து, ஒவ்வொரு நாளும் வீட்டின் தலைவர்/தலைவி (சம்பாத்தியம் செய்வோர்) யாரேனும் ஒருவர், வெளியே கிளம்பும் சமயம் ஒரு ருபாய் நாணயம் ஒன்றை அதில் போட்டு விட்டு வெளியே செல்லவும். திரும்ப வீடு சேரும் சமயம் அதை பார்த்து விட்டு உள்ளே செல்லவும். இப்படி ஒரு வருடம் முடிந்ததும் சேர்த்த நாணயங்களை கொண்டு அன்னதானம் செய்து விடலாம். பண வரவை அதிகபடுத்தும் அதீத சக்தி கொண்ட பரிகாரம் இது. கண்ணாடி குப்பி நிறைந்து விட்டால், அதன் அருகே மற்றொன்று என அடுத்தடுத்து வைத்து வரவும். எந்த காரணத்தை கொண்டும் அதில் இருக்கும் நாணயங்களை ஒரு வருடம் முடியும் முன் எடுக்காமல் பார்த்து கொள்ளவும். குறிப்பு : வாசல்படி அருகில் ஏதேனும் ஸ்டாண்ட் அல்லது அலமாரி இருபினும் வைக்கலாம். கீழே தான் வைக்க வேண்டும் என அவசியமில்லை. இதை எந்த நாளும் தொடங்கி செய்து வரலாம். இஞ்சியை (காய்ந்தது) நன்கு பொடி செய்து அதை சிறு சிகப்பு காகிதத்தில் வைத்து மடித்து பாக்கெட் / பர்சில் வைத்து செல்ல தடைப்பட்ட பண வரவு பிரச்சனைதீரும். வீட்டில் / வியாபார இடத்தில் பணம் வைக்கும் இடத்தில் சிறு துண்டுகளை போட்டு வைத்து அவ்வப்போது மாற்றி வரலாம். இதை ஆரம்பிக்க உகந்த நாள் : செவ்வாய் ஆகும். மதியம் 1:15 மணி முதல் 2 மணிக்குள் செய்யலாம். தெற்கு திசையில் நின்றவாறு செய்ய பலன் கூடும். பணம் திரும்பி வர கொடுத்த நியாயமான பணம் திரும்பி வர, வாங்கிய கடன் விரைவில் அடைபட , அபகரிக்கப்பட்ட பணம் திரும்ப கிடைக்க, இரண்டு பசுக்களுடனும், மயிலுடனும் ஆனந்தமாக குழல் இசைத்து கொண்டிருக்கும் கிருஷ்ணரின் படத்தை வீட்டில் வடக்கு நோக்கி வைத்து வழிபட மேற்கண்ட அசுபங்கள் சுபமாகும். ஆடை ஆபரணங்கள் மற்றும் பொன் பொருள் சேர சிகப்பு துணியில் 11 உலர்ந்த பேரீட்ச்சைகளை முடிந்து, வீட்டில் விலையுயர்ந்த பொருட்களை வைத்திருக்கும் இடத்தில் அல்லது பொன், பொருள், ஆடைகள் வைத்துள்ள இடத்தில் வைக்க, வாழ்வில் சுக போகங்கள் மேம்படும். மாதம் ஒரு முறை பழையதை அகற்றி விட்டு, புதிதாக செய்யவும். இதை எந்த நாளிலும்-நேரத்திலும் செய்யலாம்.