Sunday, 11 February 2018

நன்றி சொல்லி மகிழ்வோம

ஈர்ப்பு என்ற விதி இல்லாமல் இந்த பிரபஞ்சமே இயங்காது.அதே போல உயிருள்ள, உயிரற்ற, எந்த நிலையாயினும் அங்கே ஈர்ப்பு என்ற தன்மை இருந்து கொண்டே இருக்கின்றது. ஈர்ப்பு என்பது ஒருவித விசை அந்த ஈர்ப்பு இல்லையேல் இயக்கம் இல்லை,ஜனனம் இல்லை, செயல் இல்லை,அசைவற்ற தன்மை ஆகி போய்விடும்.
படைத்தலுக்கு காரணமான சூட்சமத்தில் இந்த ஈர்ப்பு விசை ஒரு முக்கிய செயலாற்றி வருகிறது.ஈர்ப்ப
ு என்றால் புவிஈர்ப்பு மட்டுமே நமக்கு தோன்றும், சற்று தீவிரமாக சிந்தித்தால் ஈர்ப்பு பல பரிணாமங்களில் செயலாற்றி வருகிறது.
நகர்வற்ற ஒரு மரம் அதன் மலர்,காய்,பழம், இலை , இது போன்ற வடிவத்தால், அழகால் நம்மை பிரபஞ்சம் ஈர்க்க வைக்கின்றது.
ஒரு ஆண் ஒரு பெண் மேல் அவளது உடை, அழகு, குணம்,போன்றவற்றால் ஈர்க்க படுகிறான்.
இந்த ஈர்ப்பு என்பது இடம், பொருள், இவற்றிற்கு தகுந்தால் போல் நம் உணர்வுகளை ஈர்க்கின்றன.அவை காமம், காதல்,ரசித்தல்,
ருசித்தல்,அடைதல், போன்ற பல்வேறு ஈர்ப்பு தன்மையை நமக்கு ஏற்படுத்த செய்கிறது.
இத்தகைய தானாகவே உருவாகும் ஈர்ப்பை ஏன் உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் அதை உருவாக்கி பயன்படுத்த முயலகூடாது என்பதே எனது கேள்வி.
அதற்கு சாத்தியமா என்றால் ஆம். உதாரணத்திற்கு நீங்கள் தினமும் காலையில் எழுந்த உடன் முகம் கழுவிய பின்னர் இளம் சூரியனை உங்கள் கண்ணால் அதன் வட்டத்தை சுமார் 5 நிமிடங்கள் உற்று நோக்கி வாருங்கள் 30 நாட்கள் இதை செய்து வரவும். அதே சூரியனை பகல் 12 மணிக்கு உங்கள் கண்கள் கொண்டு நேரிடையாக பாருங்கள் அப்போது அந்த சூரியனின் வட்டம் உங்களுக்கு எந்த கண் கூச்சமும் இன்றி தெரிய ஆரம்பிக்கும்.
இந்த பயிற்சிக்கு பின் உங்கள் கண்களில் ஒரு வித சக்தி பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பின் தன்மை அங்கே ஒன்று கூடி இருக்கும்.
இந்த ஆற்றல் ஒரு வித ஈர்ப்பு சக்தியே, இந்த ஈர்ப்பின் தன்மை சோதித்து தெரிந்து கொள்ள ஒரு சிறிய செடியை மூன்று தினங்கள் தினம் 10 நிமிடம் உற்று நோக்கி வாருங்கள் மூன்றாவது நாள் அந்த செடி கரிந்து போய்விடும்.
இந்த ஆற்றல் மற்ற செயல்களுக்கான் ஒரு அடிபடையான விஷயம்.இந்த ஆற்றல் கூட கூட பல அற்புதங்களை நாம் வெளி கொண்டு வர முடியும். அத்தனையும் இந்த பிரபஞ்சமே நமக்கு வாரி வழங்கி வருகிறது.
அதற்கு நன்றி நன்றி சொல்லி மகிழ்வோம்.