Friday, 7 December 2018

உற்சாகம்


.............................................

*''உற்சாகம் என்னும் ஊக்கி.''.*
.............................................

வெற்றிகரமான மனிதர்களின் செயல்களைக் கவனித்துப் பார்த்தால் ஒரு முக்கிய கருத்து புலப்படும்.

அவர்களது திடமான குறிக்கோளை செயல்களாக மாற்றுவது ஒரு ''ஊக்கியாக'' இருக்கும்.

அந்த ஊக்கிதான் ''உற்சாகம்''. உற்சாகமே அவர்களது உயிர்.

சாதனையாளர்கள் அனைவரையும் இந்த உற்சாகம் 'கள்வெறி' போன்ற போதையைத் தந்து அவர்களைக் குறிக்கோளை நோக்கி இட்டுச் செல்கிறது.

வாழ்வில் ஒரு புதிய மலர்ச்சி, அழுத்தமான ஈடுபாடு, மகத்தான அர்த்தம் தென்படும்.

நீங்கள் விரும்பினால் சோம்பலை நினைத்து,பேசி, சோம்பேறியாகி துயரத்துடன் ஆழ் இருளில் இருக்கவும் இருக்கலாம்.

இல்லை, அதே முறையில் ஊக்கம் உற்சாகம் பெற்று மகிழ்ச்சி ஊற்று ததும்பி வழியும் புது வாழ்வையும்அமைத்துக் கொள்ளலாம்

உலகில் சரித்திர முக்கியத்துவம் பெறும் பெரிய தருணங்கள் உற்சாகத்தின் வெற்றியையே அறிவிக்கிறது என்கிறார் எமர்ஸன்.

ஒரு வருடத்தில் முடிக்கும் போரை நெப்போலியன் இரண்டே வாரத்தில் முடித்துவிட்டான் என்றால் அதன் மூல காரணம் அவனது உற்சாகம்தான்!

மனிதர்களுக்கு எல்லா வயதிலும் அங்கீகாரமும் பாராட்டுக்களும்தான் உற்சாகத்தை தரக்கூடியதாகவே இருக்கிறது.

அந்த உற்சாகம்தான் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை யில் சாதித்து வெற்றி அடைய வேண்டும் என்கிற
உத் வேகத்தைத் தருகிறது.

மொசார்ட்டிடம் கேட்ட கேள்வி..,

இசை அமைக்க விரும்பிய ஒரு 12 வயதுச் சிறுவன், மேதை மொசார்ட்டை அணுகி,

"ஐயா! இசை அமைக்க விரும்புகிறேன். எப்படி ஆரம்பிப்பது?" என்று கேட்டான்.

"இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்" என்றார் மொசார்ட்.

"ஆனால் நீங்கள் என்னைவிட இளம் வயதில் ஆரம்பித்து விட்டீர்களே?" என்றான் அந்தச் சிறுவன்.

"ஆம், உண்மைதான்! ஆனால் உன்னைப் போல் யாரையும் அணுகி எப்படி ஆரம்பிப்பது என்று நான் கேட்க வில்லையே. இசை அமைக்க ஊக்கமும், உற்சாகமும் வந்தவுடன் அமைக்க வேண்டியதுதான்" என்றார் மொசார்ட்.

ஆம்.,நண்பர்களே..,

'உற்சாகத்தை நினையுங்கள்,

உற்சாகம் பற்றிப் பேசுங்கள்,

*உற்சாகமாகச் செயல்படுங்கள்'.*

*நீங்கள் உற்சாக மனிதராகவே ஆகிவிடுவீர்கள்.