Sunday, 3 February 2019

ஆற்றல்

*Energy - ஆற்றல் (சக்தி)*
ஆற்றல், யாராலும் காணமுடியாத ஆனால் அனைவராலும் உணரக்கூடிய ஒன்று. அனைத்து படைப்புகளும் ஆற்றலில் இருந்து உருவானவை தான். நம் கண்களால் காணக்கூடிய அனைத்து உயிரினங்களும், அத்தனை படைப்புகளும், அத்தனை பொருட்களும், இயற்கையில் விளைந்திருக்கும் கடல், ஆறு, மலை, நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு, மற்றும் நம் கண்களால் காண முடியாத, உணர்வுகளாலும் உணர முடியாத, பல கோடி படைப்புகளும் அந்த ஆற்றலில் இருந்து உருவானவை தான்.

*"அனைத்துமே ஆற்றல்தான், அதுவே அனைத்துமாக இருக்கிறது. அது நீங்கள் தேடுகின்றவற்றின் அலைகளை இணைக்கிறது. உங்களால் மாற்ற முடியாது ஆனால் உண்மைகளை அடைய முடியும். வேறு வழிகள் கிடையாது. இது ஒரு தத்துவமில்லை, இது இயற்பியல் ஆகும்".* -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

இந்த ஆற்றல் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. பிராணன், ரெய்கி, கீ, சீ, பிரபஞ்ச சக்தி, வைட்டல் எனெர்ஜி, இறை ஆற்றல், குட்ரத், என ஒவ்வொரு மொழியிலும், சமுதாயத்திலும், நம்பிக்கையிலும், வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றலை பெயர்களைக் கொண்டு வெவ்வேறான ஆற்றல் என்று நாம் கருதி கொண்டிருந்தாலும் அடிப்படையில் அவை அனைத்துமே ஒன்றுதான்.

இந்த ஆற்றலுக்கு அடிப்படையில் பல தன்மைகள் உள்ளன. உலகுக்கு வெளியே வெளியில் இயங்கிக் கொண்டிருப்பது ஒரு வகையான ஆற்றல். இந்த உலகத்தை இயக்கிக் கொண்டிருப்பதும் பராமரித்துக் கொண்டு இருப்பதும் ஒரு வகையான ஆற்றல். உயிரினங்களை இயக்கி கொண்டிருப்பது ஒரு வகையான ஆற்றல். இயற்கையை பராமரிப்பதும் பாதுகாப்பதும் ஒரு வகையான ஆற்றல். உயிரில்லாத ஜடப் பொருட்களில் இயங்கிக் கொண்டிருந்தது ஒரு வகையான ஆற்றல்.

வாகனங்களை இயக்குவது, மின்சார சாதனங்களை இயக்குவது என இந்த ஆற்றல். இந்த பிரபஞ்சத்தின் எல்லா நிலைகளிலும் செயல் புரிகிறது. இந்த பிரபஞ்சத்தின் தோற்றம் முதல், ஒரு சிறு புல்லின் வளர்ச்சி வரையில். மழை பெய்வது முதல் சுனாமியை உருவாக்குவது வரையில் இந்த ஆற்றல் பல பரிமாணங்களை எடுக்கிறது.

*"இந்த பிரபஞ்சத்தின் இரகசியங்களை அறிய வேண்டுமென்றால், ஆற்றல், அலைகள், மற்றும் அதிர்வுகளை ஆராயுங்கள்" - நிகோலா டெஸ்லா*

ஒரே தண்ணீர், டீ, காபி, குளிர்பானம், மழை நீர், சாக்கடை நீர், கடல், ஆறு, குட்டை, என அதன் உபயோகத்துக்கும், தன்மைக்கும், ஏற்ப பல்வேறு பெயர்களில் அழைக்கபடுவதைப் போல். இந்த ஆற்றலும் அதன் தன்மைக்கும் உபயோகத்துக்கும், ஆற்றலுக்கும் ஏற்ப பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஆனால் அடிப்படையில் அனைத்துமே ஒன்றுதான்.

*ஆற்றலின் வித்தியாசங்கள்*
இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவி இருப்பது ஒரே ஆற்றல்தான். ஆனால் அதன் முழு ஆற்றலையும் உபயோகத்தையும் சாதாரண மனிதனின் அறிவைக் கொண்டு புரிந்துக் கொள்ள முடியாது. இந்த ஆற்றல் நன்மையானதாகவும் தீமையானதாகவும் இரு வெவ்வேறு பிரிவுகளாக பிரிக்கலாம். இந்த பிரிவினை அதன் தன்மைகளை கொண்டு மட்டுமே பிரிக்கப் பட்டுள்ளது. அதன் குணத்தினால் அல்ல.

இந்த பிரிவினையானது மனிதனின் வலது கையையும் இடது கையையும் போன்றது. வேற்றுமைகள் இருந்தாலும் ஒரே உடலின் அங்கம்தான் அவை. ஒரே நெருப்பை சமைப்பதற்கும் வீட்டை கொழுத்துவதற்கும் பயன்படுத்துவதை போல. அது நெருப்பின் தவறல்ல, அதை தவறாக பயன்படுத்தும் மனிதர்களின் தவறு. இந்த ஆற்றல் இடத்துக்கும், சூழ்நிலைக்கும், தேவைக்கும், நோக்கத்துக்கும், ஏற்ப தனது தன்மையை மாற்றிக் கொள்ள கூடியது.

*இந்த ஆற்றல் நன்மையான நோக்கத்துடன் பயன் படுத்தும் போது நல்ல விளைவுகளையும், தீய நோக்கத்துடன் பயன்படுத்தும் போது தீய விளைவுகளையும் உண்டாக்குகிறது. மனிதர்களுக்கு வறுமை, நோய், துன்பம் போன்றவை உருவாக காரணமாக இருப்பதும். அவை நீங்கி செல்வ செழிப்பு, ஆரோக்கியம், மகிழ்ச்சி போன்றவை உருவாக காரணமாக இருப்பதும் இதே ஆற்றல்தான். மனிதர்களை பேயாக ஆட்டிப்படைப்பதும், அந்த பேயை விரட்டுவதும் ஒரே ஆற்றல் தான். அதனால்தான் பெரியவர்கள் நடப்பது நல்லதோ கெட்டதோ  எல்லாம் அவன் செயல் என்று கூறுகிறார்கள்.*

*நல்ல ஆற்றலின் விளைவுகள்*
ஆரோக்கியம்
மன அமைதி
சுறுசுறுப்பு
மகிழ்ச்சி
புத்தி கூர்மை
நல்ல உறவுகள்

*தீய ஆற்றலின் விளைவுகள்*
நோய் நொடிகள்
பதட்டம்
கவலை
வறுமை
முட்டால் தனம்
தீய உறவுகள்

👑