"பெரிய கம்பனிகளின் சி.ஈ..ஓக்களுடன் பேசவேண்டும் என்றால் காலை ஏழரை முதல் எட்டு மணிக்குள் அவர்கள் ஆபிசுக்கு போனை போடுவேன். கம்பனிகளுக்கு வரும் முதல் ஆள் சி.ஈ.ஓ தான். அவர்களின் செக்ரட்டரியே கூட லேட்டாக தான் வருவார். அதனால் போனை போட்டால் நேராக அவரிடமே பேசிவிடலாம்.
ஒரு முறை எனக்கு வேலை போய்விட்டது. ஒரு கம்பனி துவக்கலாம் என நினைத்தேன். பணம் இல்லை. காலையில் ஆறரை மணிக்கு ஒரு காபிகடைக்கு போனேன். பிளாஸ்க் நிறைய காபி, இன்னொரு பிளாஸ்கில் டீ வாங்கினேன். அதன்பின் வால் ஸ்ட்ரீட் போய் ஒவ்வொரு கம்பனியாக நுழைந்தேன்.
அதிகாலையில் முக்கியமான ஆட்கள் மட்டும் தான் கம்பனியில் இருப்பார்கள் என நினைத்தேன். போய் கம்பனியில் அந்நேரத்துக்கு யார் உட்கார்ந்து இருந்தாலும் "காப்பி வாங்கிட்டு வந்திருக்கேன். வாங்க சாப்பிட்டுட்டே பேசலாம். ஒரு நல்ல பிசினஸ் ஐடியா இருக்கு" என்றேன். ஆறரை மணிக்கு ஒருவன் காபியுடன் வந்து அழைத்தால் யார் மறுப்பார்கள்?
ஒரு பெரிய டிரேடிங் கம்பனியின் பார்டன்ருடன் பேசியதில் ஐடியா பிடித்துபோய் பணம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டார். அதன்பின் தான் தெரிந்தது..அவரிடம் அப்பாயிண்மெண்ட் வாங்கிக்கொன்டு போய் சந்தித்திருந்தால் ஆறு மாதத்துக்கு அபாயிண்மெண்ட் கிடைத்திருக்காது என. முதலில் அவரது செக்ரட்டரியின் அபாயிண்மெண்டே எனக்கு கிடைத்திருக்காது. ஆறரை மணிக்கு காபியுடன் போனதால் அவரை வளைத்து பிடித்தேன். முதலில் அவர் "எனக்கு காபி பிடிக்காது, டீ தான் பிடிக்கும்" என்றார். "இந்த பிளாஸ்கில் டீ இருக்கு" என்றேன். "பால் சேர்த்த டீ தான் வேண்டும்" என்றார். க்ரீமரை பாக்கட்டில் இருந்து எடுத்து காட்டினேன்.."தயாராக தான் வந்திருக்கிறாய்" என சிரித்தபடி என்னுடன் உட்கார்ந்து பேசினார். பணம் கிடைத்தது.கம்பனி துவக்கினேன்..$20 பில்லியன் சம்பாதித்தேன்..இன்று நான் உலக கோடீஸ்வரர்களில் ஒருவன். காரணம் அதிகாலையில் காபி பிளாஸ்குடன் கம்பனி, கம்பனியாக ஏறி முன், பின் தெரியாதவர்களுடன் பேச நான் கூச்சபடாமல் இருந்ததுதான்"
-> தொழிலதிபர் ப்ளூம்பெர்க்