Thursday, 4 February 2021

கொண்றங்கி மலை - திண்டுக்கல் மாவட்டம்:

மகத்துவம் பொருந்திய கொண்றங்கி மலை - #திண்டுக்கல் மாவட்டம்: 

அழகிய தோற்றம் கொண்ட  மலையின்  உச்சியில்  மேகங்கள் (கொண்டல்) இறங்கி தவழ்ந்து செல்வதால்  கொண்டல்+இறங்கி = கொண்டலிறங்கி என்பது நாளடைவில் கொண்றங்கி ஆகியது.  இம்மலைக்கு காரணப் பெயராகக்  கொண்றங்கி என்பது பொருத்தமாய் உள்ளது ... இதனால் கிராமத்தின் பெயரான கீரனூர் என்பது கொண்றங்கி கீரனூர் என்று அழைக்கப்படுகிறது. இந்த மலையின் உச்சியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 748 மீட்டர் உயரமாகும் ..

மலையின் உச்சியில் ஒரு  அற்புதமான குடைவரை கோவிலில்  (குகையில்)  அருள்மிகு மல்லீஸ்வரர்  என்ற  நாமத்தில் இறைவன் சுயம்பு   லிங்கமாக அருள் புரிகிறார் . இங்கு  அமர்ந்து ஜெபம், தியானம் செய்ய அற்புதமான  அனுபங்களை பெறலாம் ..இம்மலையே லிங்கம் போல இருப்பது  அற்புத  திருக்காட்சியாகும்.

  இம்மலையானது  வேறு எந்த மலையிலும் காண இயலாத  ஒரு தோற்றத்தை உணரலாம் .மலையின் சுற்றளவு மேலே செல்லச் செல்ல குறுகி கூர்மையான கோபுரம் போல காட்சி தருகிறது . மலையில் பாறைகளையே செதுக்கி படிகளாக்கி உள்ளனர் . 

 இம்மலையில் தவசிகள் தவம் புரிந்த அற்புதமான குகை ஒன்றுள்ளது. சித்தர்களும், முனிவர்களும் தவம் செய்து பேறு பெற்ற மலையாகும்.  பாண்டவர்கள் தவம் செய்த மலையாக சொல்லப் படுகிறது. குறிப்பாக அர்ச்சுனன் தவம் செய்து இறையருள் பெற்றதாய் சொல்லப்படுகிறது .சித்தர்களின் இருப்பினைக் கொண்ட இடம் என்பதை இங்கு  அமர்ந்து   தவம்  செய்வதன்  மூலம் உணரலாம்.
  
பழனி மலையேறும் போது இம்மலை நன்றாக  தெரியும் . இமலையில் இருந்து பழனி முருகப்   பெருமானையும் தரிசிக்கலாம். இறைவன் இங்கிருந்து முருகரை கடைகண்ணில் பார்த்து கவனித்து கொண்டு தான் உள்ளார்.. போகருக்கும் கொண்ட்றங்கி மலைக்கும் தொடர்பு உண்டு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன .அமாவாசை - பௌர்ணமி தினங்களில் இம்மலையுச்சியில் அமர்ந்து தவம் செய்ய  மூதாதையர் தொடர்பு கிடைப்பதாக ஓர் செய்தி..

 அடிவாரத்தில் கெட்டி மல்லிஸ்வரர் உடனமர் பிரம்மராம்பா ஆலயம் உள்ளது . மலை ஏற இரண்டு மணிநேரம் ஆகும் .வெயில் மற்றும் காற்று அதிகமாய் இருக்கும் போது சற்று  சிரமமாய் இருக்கும். இரவில் ஏற-இறங்க  இயலாது..ஒருமுறை சென்று  வாருங்கள். ..அற்புதமான அனுபவங்களை பெறுவீர்கள் .. 

 அமைவிடம் : திண்டுக்கல்  மாவட்டம், #ஒட்டன்சத்திரம் வட்டம், ஒட்டன்சத்திரம்  to  தாராபுரம் - வழித்தடம்  மூலனூர் செல்லும் வழியில்  சுமார் 20  கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 461 மீட்டர் உயரத்தில் உள்ளது.