Wednesday, 7 September 2016

இடைக்காலம்


உங்களிடமிருந்து ஆரம்பியுங்கள்-

நான் ஒரு மது அருந்துபவரின் வாழ்க்கையைப் பற்றி படித்துக்கொண்டிருந்தேன். அவனுக்கு பல முறைகள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது...  பத்தாவது முறையாக அதே நீதிபதி அவனை சிறைக்கு அனுப்பினார். அதனால் நீதிபதி தன்னுடைய தீர்ப்பில், “மதுதான், மது மட்டும்தான் உன்னுடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம்” என்றார். அந்த நபர் நீதிபதியைப் பார்த்து “நன்றி ஐயா, நீங்கள் ஒருவர்தான் என்னை பொறுப்பாளி ஆக்கவில்லை, மற்ற எல்லோரும் நான்தான் தவறு செய் கிறேன், என்று சொல்கிறார்கள், நீங்கள் மட்டும்தான் மதுதான் காரணம் என்பதை புரிந்துக்கொண்டுள்ளீர்கள், நான் இதற்குக் காரணம் இல்லவே இல்லை” என்றான்.

உடலில் ஏதாவது கோளாறு இருந்தால், நீங்கள்தான் அதற்குப் பொறுப்பு என்று நினைப்பதில்லை. ஆனால் மனதில் ஏதாவது கோளாறு இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அதற்கு நீங்கள்தான் காரணம் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் மனதுடன் ஐக்கியமாகியுள்ளது தெளிவாக, ஆழமாகத் தெரியும்.  இது இப்படித்தான் இருக்கும், ஏனெனில் உங்கள் மெய்யிருப்பின்(Being) வெளிப்பாகம்தான் உடல், உள்பாகம் மனம். மனம் உங்களுடைய உள்ளார்ந்த நீங்கள், அதனால் நீங்கள் அத்துடன் அதிகமாக ஐக்கியப்படுத்திக்கொள்ளலாம். பல பிறவிகளில், பல வாழ்க்கையில், அது உங்களுடன் இருக்கிறது. மனம் பழையது, எப்பொழுதும் பழையது, தொடர்ந்து வருவது. ஆனால் நீங்கள் மனமல்ல. இதைத் தெரிந்துக்கொள்ளலாம், இதை தெரிந்துக்கொள்வதில் எந்த கஷ்டமும் இல்லை.

வெறும் சாட்சியாக இருங்கள். எப்போதெல்லாம் மனம் வேலை செய்கிறதோ, அப்போதெல்லாம் ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டு, அது எப்படி வேலை செய்கிறது என்று பாருங்கள். அதில் தலையிடாதீர்கள், அதனுள்ளே செல்லாதீர்கள், உள்ளே வருவது, அதற்கு பலத்தை உருவாக்கும், ஐக்கியப்படுத்திக் கொள்ளும். உள்ளே வராதீர்கள், எதுவும் சொல்லாதீர்கள், நீதிபதியாக இருக்காதீர்கள், சாலையில் போக்குவரத்து கடந்து செல்கிறது, நீங்கள் சாலை ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். எந்த தீர்ப்பும் வழங்காதீர்கள். உங்களால் ஒரு வினாடிக்கு, ஓரத்தில் உட்கார்ந்துக்கொண்டு, மனதில் ஓடிக்கொண்டிருக்கும் போக்குவரத்தை, தொடர்ச்சியான போக்குவரத்துகளை பார்க்க முடிந்தால்கூட, உங்களால் ஒரு இடைவெளியை பார்க்க முடியும் – உங்களுக்கும் மனதிற்கும் நடுவே  உள்ள இடைவெளி. பின்பு இந்த இடைவெளியைப் பெரிதாக, அகலமாக, பாலம் அமைக்க முடியாத அளவிற்கு செய்துகொள்ளலாம்.

இவ்வாறான இடைக்காலம் இருக்கும்போது, பின்பு பாலம் இருக்காது. மனதின் வட்டம் நீங்கள் இருக்கும் இடத்தைத் தவிர்த்து வேறு இடத்தில்தான் இருக்கும் என்பதை, உங்களால் முடிந்தவரை, எல்லா முனைகளிலிருந்தும் பார்த்துவிட்டீர்கள். நீங்கள் எங்கோ உள்ளே வேறு ஒரு இடத்தில் இருக்கிறீர்கள். இது ஒரு கூற்றாக இல்லாமல், அறிந்த உண்மையாக இருந்தால், பின்பு நீங்கள் திறந்திருக்கிறீர்கள். பின்னர் நீங்கள் உள் விண்வெளியில், உள் வானத்தில், இதயத்துள் இருக்கும் விண்வெளியில் குதித்து விட்டீர்கள். நீங்கள் உள்ளே குதித்துவிட்டீர்கள். இப்போது நீங்கள் அங்கிருக்கிறீர்கள், மேலும் திறந்தும் இருக்கிறீர்கள்.

பின்பு உங்களுக்கு நீங்கள் எப்பொழுதுமே திறந்துதான் இருந்திருக்கிறீர்கள் என்பது தெரியவரும்.

Tuesday, 6 September 2016

துன்பம்

கேள்வி - கோவில்களுக்குப் போகிறேன் தியானம் செய்கிறேன் ஆனால் துன்பங்கள் தொடர்கதையாகவே இருக்கிறது. விடுபட வழியே இல்லையா ?

துன்பம் என்பது இயற்கை அல்ல. அது செயற்கை. நாம் வருவோம் என்று நமக்கு முன்பே வந்து துன்பங்கள் காத்திருப்பதில்லை. நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வதுதான் துன்பம். துன்பங்கள் வலிய வந்து நம்மை பற்றிப் பிடித்துக் கொண்டு இருக்கவில்லை. நாம்தான் விடாப்பிடியாக துனபங்களை தூக்கிக் கொண்டு அலைகிறோம். இன்பத்தின் மீது நாம் கொள்ளும் அளவு கடந்த நாட்டமும், நுகர்ச்சியும்தான் துன்பங்களாக வடிவெடுத்து நிற்கின்றது. முன்பு ஒரு காலத்தில் ப்ரம்மனின் பிள்ளைகளான தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் மூன்று பிரிவினரும் ப்ரம்ம தேவனிடம் வந்து, எங்களது துன்பங்களைப் போக்கியருள வேண்டும் என்று வணங்கி நின்றனர். அசுரர்களின் ஆசைக்கு எல்லையே இல்லாமல் இருந்தது. தேவர்களின் சம்பத்துகள் அனைத்தையும் வசப்படுத்த முனைந்தனர். இதனால் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே தீராத பகை மூண்டு விட்டது. தேவர்களோ தங்களை இறைவனுக்கு சமமானவர்களாக எண்ணி மற்ற இரு பிரிவினரையும் அடக்கி ஆள ஆசைப்பட்டனர். மனிதர்களும் அசுரர்களுக்கு பயந்துதான் வாழ்ந்து வந்தனர் என்றாலும், சுயநலமும், உலோபமும் மிக்கவர்களாக இருந்தனர். எனவே மூன்று பிரிவினரும் துன்பங்களை அடைந்தனர்.

இதை உணர்ந்த ப்ரம்ம தேவன் உங்கள் மூவருக்கும் துன்பங்களைப் போக்கும் ப்ரும்ம வித்தையை உபதேசிக்கிறேன், அதற்கு முன்பாக குறிப்பிட்ட சில காலம் ப்ரம்மச்சரியம் அனுசரித்து விட்டு பிறகு என்னிடம் வாருங்கள் என்று சொல்லி அவர்கள் யாவரையும் அனுப்பி வைத்தார். குறிப்பிட்ட சில காலம் ஆன பிறகு முதலில் தேவர்கள் வந்து ப்ரம்மனை வணங்கி நின்றனர். அவரும் அவர்களுக்கு ''த'' என்று உபதேசம் செய்தார். உபதேசித்த கையோடு என்ன புரிகிறதா ? என்றும் கேட்டார். தெரியாததை தெரியாது என்று ஒத்துக் கொள்வதுதான் அறிவிற்கு முதற் படி. ஆனால், யாருமே தங்களது அறியாமையை ஒத்துக் கொள்வதில்லை. தேவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன ? எனவே அவர்கள் புரிந்தது என்று தலையாட்டி வைத்தனர். உடனே ப்ரம்ம தேவன் எங்கே நீங்கள் புரிந்து கொண்டதைச் சொல்லுங்கள் பார்ப்போம் என்றார். நீங்காத அழகையும், இளமையையும், செல்வங்களையும் உடைய தேவர்கள் அவற்றைக் கொண்டு இன்பங்களையெல்லாம் அடைய வேண்டும் என்ற தீராத வேட்கை உடையவர்கள். எனவே ப்ரம்ம தேவன் தங்களை புலன்களை அடக்கி வாழ வேண்டும் என்று உபதேசிக்கிறார் என்று எண்ணி ''த'' என்றால் ''தமம்'' என்றனர்.

ப்ரம்மனும் சரிதான்.. அதையே கடைபிடியுங்கள் என்று தேவர்களை அனுப்பி வைத்தார். அடுத்தபடியாக மனிதர்கள் வந்து நின்றனர். அவர்களிடமும் ''த'' என்றுதான் உபதேசித்தார். அவர்களிடமும் அதே கேள்வியைக் கேட்டார். அவர்களும் நாம் உலோபியாகவும், சுயநலம் உடையவர்களாகவும் இருக்கிறோம். எனவே ப்ரம்ம தேவன் நம்மை தானம் செய் என்று சொல்கிறார் என்று எண்ணி ''த'' என்றால் தத்தம் என்று சொல்லி வைத்தனர். ப்ரம்மனும் நீங்கள் சொல்வது சரிதான் அதையே கடைபிடியுங்கள் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார். கடைசியாக அசுரர்கள் வந்து வணங்கி நின்றனர். அவர்களிடமும் ''த'' என்றாதான் உபதேசம் செய்தார். செய்து விட்டு புரிகிறதா என்று கேட்டவுடன், அவர்களும் நாம் பிறரை இம்சிக்கிறோம் எனவே பிறரை இம்சிக்காமல் வாழ வேண்டும் என்று ப்ரம்ம தேவன் சொல்கிறார் என்று எண்ணி ''த'' என்றால் தயை என்றனர். ப்ரம்ம தேவனும் அப்படியே வாழுங்கள் என்று சொல்லி அவர்களையும் அனுப்பி வைத்து விடுகிறார். இவ்வளவுதான் கதை.

கதை சொல்லும் நீதி என்னவென்றால் தமம், தானம், தயை மூன்றையும் கடைபிடித்து வாழ்வதே ப்ரம்ம வித்தை வேறொன்றுமில்லை என்பதேயாகும். மூன்று பிரிவினரும் தங்கள் குறைகளைத் தாங்கள் உணர்ந்துதான் இருந்தார்கள் என்றாலும், தீராத ஆசையும், புலனிச்சையும், இன்ப நாட்டமும் அவர்களது துன்பங்களுக்குக் காரணமாக அமைகின்றது என்பது தெளிவு. இந்த மூன்றையும் கடைபிடித்தால் மட்டுமே ஒருவன் துன்பமின்றி வாழ முடியும்.



இதுதான் உண்மை. மண்ணாண்டவர் கோடி, மலையாண்டவர் கோடி. யாரும் இங்கே நிலைத்த தில்லை. எதையும் கொண்டு வந்ததுமில்லை, கொண்டு போவதுமில்லை. பிறகு ஏன் இவ்வளவு ஆசை ? இவ்வளவு மோகம் ? இவ்வளவு இன்ப தாகம் ? நிலையாமையை உள்ளது உள்ளபடி உணர்ந்து நடப்பவனுக்கு ஒரு போதும் துன்பமில்லை என்பதே உண்மையாகும். இதையே எதிர்மறையாக சிந்தித்து, வாழ்வது சில காலம், எவ்வளவு முடியுமோ அவ்வளவு அனுபவித்து விட வேண்டும் என்ற போக்கில் வாழும் பொழுது துன்பங்கள் தொடர்கதைதான். அதிகமாக ஒன்றுமில்லை, மூன்றே விஷயம்தான். புலன் நுகர்ச்சியில் விருப்பம், கஞ்சத்தனம், இம்சிக்கும் புத்தி இந்த மூன்றையும் ஒருவன் களைந்து விட்டாலே போதும் உலகம் முழுவதும் இன்பமாகத் தோன்றும். எனவே இந்த மூன்று தீய குணங்களை நீ இறைவனிடத்தில் தத்தம் செய்து விட்டால் உலக இன்பம் முழுவதிற்கும் நீதான் சொந்தக்காரன்.

நச்சுப் பொய்கை

நச்சுப் பொய்கை யட்சனின் கேள்விகளும் யுதிஷ்டிரர் அளித்த மறுமொழிகளும்
12 ஆண்டுகால வனவாசம் கிட்டத்தட்ட முடிந்து பாண்டவர்கள் ஓராண்டு மறைந்த வாசம் செய்ய வேண்டிய காலம் நெருங்கி விட்டது. ஒரு நாள் காட்டில் அலைந்து கொண்டிருந்த சமயம் எல்லோருக்கும் தாகம் ஏற்பட, தருமர் நகுலனை அருகில் ஏதேனும் நீர்நிலை தென்படுகிறதா என்பதைப் பார்த்து வரும்படி ஏவுகிறார். நகுலனும் அவ்வாறே செல்ல ஒரு பொய்கையைப் பார்க்கிறான். முதலில் தன் தாகம் தணித்து சகோதரர்களுக்கும் தண்ணீர் எடுக்கும் நோக்கத்துடன் பொய்கைக்குள் இறங்குகிறான். அப்போது "சாகசம் செய்யாதே நகுலா, எனது கேள்விகளுக்கு பதிலளிக்கவும்" என்று ஒரு அசரீரி கேட்கிறது. அதை அலட்சியம் செய்து தண்ணீரை அருந்த, அவன் நினைவிழந்து கரையில் வீழ்கிறான்.
நகுலனைக் காணாததால் சகாதேவனை தருமர் அனுப்ப அவனுக்கும் அப்பொய்கையருகில் அதே கதிதான். அதே போல அருச்சுனன் மற்றும் பீமனும் மயக்கமடைகின்றனர். இப்போது தருமரே செல்கிறார். அவரிடமும் அந்த அசரீரி எச்சரிக்கை செய்ய, அவரும் கேள்விகளுக்கு பதிலளிக்க சம்மதிக்கிறார்.
மகாபாரதத்தில் இந்தப் பகுதி மிக பிரசித்தம். யட்சனின் கேள்விகளுக்கு தருமர் அளித்த விடைகளில் வெளிப்படையாக ஒரு அர்த்தம் தெரியும். ஆனால் தத்துவார்த்த முறையில் ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு அப்பதில்களில் புதைந்து கிடக்கும் பொருளும் தெரியும். ஆனால் அதை அறிய மிகுந்த பாண்டித்யம் தேவைப்படும். தன் போன்றவர்களுக்கு அது கிடையாது என சோ அவர்கள் தான் எழுதியுள்ள "மகாபாரதம் பேசுகிறது" என்னும் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். அதை படித்து இப்பதிவைப் போடும் நான் மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்? ஆகவே நேரடி விளக்கங்கள் மட்டுமே இங்கே.
யட்சன்: எந்த மனிதன் துணை உள்ளவனாகிறான்?
தருமர்: தைரியமுள்ள மனிதன் துணை உள்ளவனாகிறான்.
யட்சன்: மனிதன் எவ்வாறு புத்திமானாகிறான்?
தருமர்: பெரியோர்களை அண்டுவதால் மனிதன் புத்திமானாகிறான்.
யட்சன்: பயிரிடுபவர்களுக்கு எது சிறந்தது?
பதில்: பயிரிடுபவர்களுக்கு மழை சிறந்தது.
யட்சன்: செல்வமுள்ளவனாக இருந்தாலும், அறிவாளியாக இருந்தாலும் எந்த மனிதன் வாழும்போதே உயிரற்றவனாக இருக்கிறான்?
தருமர்: தேவதைகள், விருந்தாளிகள், வேலைக்காரர்கள், முன்னோர்கள் - இவர்களுக்கு மரியாதையுடன் உணவு தராதவன்.
யட்சன்: தாங்கும் சக்தியில் பூமியை விட அதிக சக்தி வாய்ந்தது எது?
தருமர்: ஒரு தாயின் மனம்.
யட்சன்: ஒரு மனிதனுக்கு ஆகாயத்தை விட உயர்ந்தது எது?
தருமர்: அவனுடைய தந்தை.
யட்சன்: காற்றைக் காட்டிலும் வேகமானது எது?
தருமர்: மனிதனின் மனம்.
யட்சன்: புல்லைவிட அலட்சியமாக கருதிவிடத் தக்கது எது?
தருமர்: கவலை.
யட்சன்: தூங்கும்போது கண்களை மூடாமல் இருப்பது எது?
தெருமர்: மீன்.
யட்சன்: பிறந்தும் அசைவற்று இருப்பது எது?
தருமர்: முட்டை.
யட்சன்: தன்னுடைய வேகத்தினாலேயே வளர்வது எது?
தருமர்: நதி.
யட்சன்: தன் ஊரை விட்டுப் போகிறவனுக்கு நண்பன் யார்?
தருமர்: அவன் பெற்ற கல்வி.
யட்சன்: வீட்டில் இருப்பவனுக்கு தோழமை தருவது யார்?
தருமர்: அவன் மனைவி.
யட்சன்: நோயாளிக்கு நண்பன் யார்?
தருமர்: நல்ல வைத்தியன்.
யட்சன்: சாகப்போகிற நிலையில் இருப்பவனுக்கு யார் உற்ற தோழன்?
தருமர்: அவன் செய்கிற தருமம்.
யட்சன்:புகழ் எதில் நிலை பெற்றிருக்கிறது?
தருமர்: ஒரு மனிதன் செய்யும் தானத்தில் புகழ் நிலை பெறுகிறது.
யட்சன்: மனிதனின் சுகம் எதனால் நிலைபெறுகிறது?
பதில்: நல்லொழுக்கத்தின் மூலமாக.
யட்சன்: சொர்க்கத்தன்மை எதன் மூலம் நிலைபெறுகிறது?
தருமர்: சத்தியத்தைக் காப்பாற்றுவதன் மூலமாக.
யட்சன்: ஒரு மனிதன் பெறக்கூடிய லாபங்களுள் எது சிறந்தது?
தருமர்: நோயின்மை.
யட்சன்: ஒரு மனிதன் பெறக்கூடிய சுகங்களில் உயர்ந்தது எது?
தருமர்: மனத்திருப்தி.
யட்சன்: சிறந்த தருமம் எது?
தருமர்: அஹிம்சை
யட்சன்: எதை விடுவதன் மூலம் மனிதன் மற்றவர்களுடைய அன்புக்கு பாத்திரமாகிறான்?
தருமர்: கர்வத்தை விட்ட மனிதன் மற்றவற்களது அன்பைப் பெறுகிறான்.
யட்சன்: எதை விடுவதன் மூலம் மனிதன் துன்பத்தைத் தவிர்க்கிறான்?
தருமர்: கோபத்தை விட்ட மனிதனுக்குத் துன்பம் நேராது.
யட்சன்: எதை விடுகிற மனிதன் பொருள் உள்ளவன் எனப்படுகிறான்?
தருமர்: தர்ம விரோதமான ஆசைகளை விடுகிற மனிதனே, உண்மையில் பொருள் உள்ளவனாகிறான்.
யட்சன்: பிராமணர்களுக்குப் பொருள் கொடுப்பது எதற்காக?
தருமர்: தர்மத்திற்காக.
யட்சன்: நடன மற்றும் நாடகக்காரர்களுக்குப் பொருள் கொடுப்பதால் என்ன பயன்?
தருமர்: அவர்களுக்குச் செல்வம் கொடுப்பதால் பொருள் கிட்டும் என்பதே பலன்.
யட்சன்: வேலைக்காரர்களுக்கு எதற்காகப் பொருள் கொடுக்க வேண்டும்?
தருமர்: அவர்களை வசப்படுத்துவதற்
காக.
யட்சன்: அரசர்களுக்குக் கொடுப்பது எதற்காக?
தருமர்: அவர்களிடமிருந்த
ு பயமின்றி வாழ்வதற்காக.
யட்சன்: மனிதனால் வெல்ல முடியாத பகைவன் யார்?
தருமர்: கோபம்.
யட்சன்: முடிவே இல்லாத வியாதி எது?
தருமர்: பேராசை.
யட்சன்: எவன் சாது?
தருமர்: எல்லாப் பிராணிகளிடத்திலும் அன்புடன் இருப்பவன்.
யட்சன்: எது தைரியம்?
தருமர்: இந்திரியங்களை அடக்குவதே தைரியம்
யட்சன்: எந்த மனிதன் பண்டிதனாகிறான்?
தருமர்: தர்மங்களை அறிந்து கடைபிடிப்பவனே பண்டிதன்.
யட்சன்: எவன் நாஸ்திகன், எவன் மூர்க்கன்?
தருமர்: நாஸ்திகனே மூர்க்கன்.
யட்சன்: எது டம்பம்?
தருமர்: தான் செய்யும் தர்மத்தை ஊரறியச் செய்வது டம்பம்.
யட்சன்: ஒன்றுக்கொன்று எதிரிடையான வழி முறைகள் கொண்ட அறம், பொருள், இன்பம் - ஆகியவை ஓரிடத்தில் சேர்வது என்பது எப்படி நடக்கும்?
தருமர்: அறமும், மனைவியும் இணைந்து செயல்படும்போது, அந்த இல்லத்தில் அறம், பொருள், இன்பம் மூன்றும் சேர்ந்து விடுகின்றன.
யட்சன்: எந்த மனிதன் அழிவற்ற நரகத்தை அடைவான்?
தருமர்: தானம் கொடுப்பதாகக் கூறிவிட்டு பிறகு இல்லை என்று சொல்பவன்; வேதம், தர்ம வழிச் செயல்கள், முன்னோர்களுக்கான சடங்குகள் இவற்றில் பொய் கூறுபவன்; செல்வம் இருந்தும் பிறர்க்குக் கொடாதவன் - ஆகியோர் அழிவற்ற நரகத்தை அடைவார்கள்.
யட்சன்: பிறப்பு, வேதம் ஓதுதல், தர்ம சாஸ்திரங்களைப் பற்றிய அறிவு, ஒழுக்கம் - இவற்றில் எதன் மூலம் பிராமணத்துவம் உண்டாகிறது?
தருமர்: பிராமணத்துவம் உண்டாவதற்குக் காரணம் பிறப்போ, தர்ம சாஸ்திர அறிவோ, வேதம் ஓதுதலோ அல்ல. ஒழுக்கம்தான் பிராமணத்துவத்திற்குக் காரணம். ஒழுக்கமற்றவன் எவனாக இருந்தாலும் அவன் பாழானவனே! கல்வியும், சாஸ்திர அறிவும் மட்டுமே பயனளிப்பவை என்று நினைத்து, அதை மட்டும் பற்றி நிற்பவர்கள் மூடர்களே! தான் கற்ற சாத்திரப்படி நடப்பவனே பண்டிதன். ஒழுக்கத்துடன் நடந்து கொண்டு, யாகத்தில் பற்றுள்ளனவனாக, இந்திரியங்களை அடக்கியவன் எவனோ அவனே பிராமணன்.
யட்சன்: இனிமையாகப் பேசுகிறவன் எதைப் பெறுகிறான்?
தருமர்: மற்றவர்களின் அன்பைப் பெறுகிறான்.
யட்சன்: ஆலோசித்த பிறகே காரியத்தைச் செய்பவன் எதை அடைகிறான்?
தருமர்: வெற்றியை ஆடைகிறான்.
யட்சன்: தர்மத்தில் பற்றுள்ளனவனுக்க
ு என்ன கிட்டுகிறது?
தருமர்: அவனுக்கு நல்ல கதி கிடைக்கிறது.
யட்சன்: எவன் சந்தோஷத்தை அடைகிறான்?
தருமர்: கடனில்லாதனாகவும், பிழைப்பதற்காக ஊரை விட்டு ஊர் செல்ல வேண்டிய நிலையில் இல்லாதவனாகவும், தனக்கு வேண்டிய சிறிதளவு உணவாகிலும் வீட்டிலேயே கிடைக்கப் பெறுகிறவனாகவும் எவன் இருக்கிறானோ அவன் சந்தோஷமடைகிறான்.
யட்சன்: எது தினந்தோறும் நடக்கும் நிகழ்ச்சி?
தருமர்: உயிரினங்கள் எமலோகம் சென்று கொண்டே இருப்பது.
யட்சன்: எது ஆச்சரியம்?
தருமர்: உயிரினங்கள் தினந்தோறும் எமலோகம் சென்று கொண்டேயிருப்பதைப் பார்த்தும்கூட, மனிதர்கள் தங்களுக்கு மரணமில்லாதது போல் நினைத்ட்துக் கொண்டு நல்ல கதியை அடைய முயற்சிக்காமலேய
ே வாழ்நாளைக் கழித்து விடுகிறார்களே - அதுதான் ஆச்சரியம்.
யட்சன்: எவன் புருஷன்?
தருமர்: விருப்பு - வெறுப்பு; சுகம் - துக்கம்; நடந்தது - நடக்க இருப்பது; ஆகிய இரட்டை நிலைகள் எவனுக்கு சரி சமமாக இருக்கின்றனவோ, அவனே புருஷன் எனக் கூறப்படுகிறான்.
யட்சன்: எவன் செல்வம் மிகுந்தவன்?
தருமர்: ஆசையற்று, அமைதியான மனமும் பெற்று, தெளிவான அறிவும் கொண்டு, எல்லாப் பொருள்களையும் சமமாகப் பார்க்கும் மனிதன் எவனோ, அவனே செல்வம் நிறைந்தவன்.
இப்படி கூறிய பதில்களால் திருப்தியுற்ற யட்சன் "யுதிஷ்டிரா! உன் பதில்கள் தெளிவாக உள்ளன. அதற்குப் பரிசாக உன் தம்பிமார்களில் ஒருவரை மட்டும் உயிர்ப்பிக்கிறே
ன். அவன் யார் என்பது உனது விருப்பத்தைப் பொறுத்தது" என்றான்.
தருமர், "நெடிய ஆச்சாமரம் போல வீழ்ந்து கிடக்கும் அழகன் நகுலன் உயிர்பெறட்டும்" எனக் கூறினார். யட்சன் ஆச்சரியமடைந்து, பீமன் அருச்சுனன் ஆகியோரை விட்டு விட்டாயே, உனது அரசைப் பெற அவர்கள் முயற்சி இன்றியமையாததல்லவா"? எனக் கேட்டான்.
தருமர், "யட்சனே, தருமம்தான் முக்கியம். அதற்குத்தான் இறுதி வெற்றி பீமனோ அருச்சுனனனோ அதற்கு முன்னால் ஒன்றுமில்லை. எனது தாயார் குந்தியின் புதல்வனாகிய நான் உயிருடன் உள்ளேன். எனது சிறிய அன்னை மாத்ரியின் பிள்ளை ஒருவனும் பிழைப்பதே தருமம் என" உறுதியாக மறுமொழி கூறினார்.
தருமரது இந்த சொற்களினால் மகிழ்ந்த யட்சன் எல்லோரையுமே உயிர்ப்பித்தான். பிறகு தந்தான் தரும தேவதை என்றும், தனது அம்சமாகிய யுதிஷ்டிரனை பார்த்து சோதிக்கவே வந்ததாகவும் கூறி ஆசியளித்து மறைந்தான்.

Sunday, 4 September 2016

எண்ணமும் பிணியும்:

எண்ணமும் பிணியும்:
நல்ல ஆரோக்கியமான உணவு, முறையான வாழ்வியல்முறை மற்றும் உடற்பயிற்சி மட்டும் நோயை தீர்த்துவிடாது.
ஒருவரின் எதிர்மறை எண்ணமும், மனஉளைச்சலும் தான் அவருடைய உடல் நலனை 70% வரை பாதிக்கிறது.
மனதை சரி செய்யாமல் என்ன வகை மருந்து எடுத்தாலும் அது உங்களுக்கு வேலை செய்யாது.
எதிர்மறை எண்ணங்களும், மனஉளைச்சலும் ஏற்படுத்தும் உடல் நலக்குறைவின் பட்டியல்...
#1 பொறாமை குணம்:
* அணைத்து வகையான கேன்சர் நோய்களை வரச்செய்யும்.
* உடலின் நோய் எதிர்பாற்றலை குறைத்து விடும்.
#2 சினம், எரிச்சல், கோபம் கொள்பவர்கள்:
* மூச்சுக்குழாய் மற்றும் சுவாச பிரச்சனைகள் ஏற்படுத்தும்.
#3 பழிவாங்கும் குணம்:
* தொண்டை பகுதியை பாதிக்கப்படுத்தும்.
* தூக்கமின்மை கோளாறு ஓங்கும்.
#4 பிடிவாத குணம்:
* ஒற்றை தலைவலி, அடிக்கடி கடுமையான தலைவலி ஏற்படுத்தும்.
* கை கால் வீக்கம் ஏற்படுத்தும்.
* உடலில் அடிக்கடி கட்டியை தோன்றுவிக்கும்.
* நீரிழிவு நோயை உண்டாக்கும்.
#5 ஒழுக்கமின்மை:
* தொற்றுநோய்க்கு ஆளாகி, தோல் நோயால் பாதிக்கபடக்கூடும்.
* நீண்டநாள் சரி செய்யமுடியாத நோய்க்கு ஆட்படுவார்கள்.
#6 விரோத குணம்:
* உணவு செரிமானமின்மை, நெஞ்செரிச்சல், குடல் புண், குடல் ரணம் ஏற்படுத்தும்.
#7 ஏமாற்றும் குணம்:
* போதைக்கு அடிமையாதல், ஒட்டுண்ணி தொற்று, அழற்சி ஏற்படுத்தும்.
* உடலின் நோய் எதிர்பாற்றலை குறைத்து விடும்.
#8 முரட்டுகுணம், மனிதாபிமானமற்ற, இரக்கமற்றத்தனம்:
* இரத்தசோகையை ஏற்படுத்தும்.
* காசநோய் ஏற்படுத்தும்.
* கால்-கை வலிப்பு (epilepsy) தோன்றும்.
#9 கூச்சசுபாவம், அதிகம் பேசாத குணம்:
* சிறுநீரகம் பாதிப்படைகிறது.
* மனநலம் பாதிப்படைகிறது.
#10 சர்ச்சை ஏற்படுத்தி சண்டையிடும் குணம்:
* THYROID சுரபி பிரச்சனையை அதிகமாக்கும்.
#11 அலட்சியகுணம், உற்சாகமின்மை:
* நீரிழிவு நோயை உண்டாக்கும்.
#12 உணர்ச்சிவசப்படக்கூடிய குணம், நிலையான சிந்தனை இல்லாமை:
* ஆணோ/பெண்ணோ இருவருக்கும் மலட்டுதன்மையை ஏற்படுத்தும்.
#13 துஷ்பிரயோகம், பண்பற்ற பலவந்தப்படுத்தும் குணம்:
* அணைத்து வகையான இருதய கோளாறுகளையும் ஏற்படுத்தும்.
* நீரிழிவு நோயை உண்டாக்கும்.
#14 பொருளாசை, பேராசை அடையும் குணம்:
* உடலில் ரத்தகட்டிகள், கருப்பையில் நீர்க்கட்டிகள் உண்டாக்கும்.
* உடல் பருமனை ஏற்படுத்தும்.
* அணைத்து வகையான இருதய கோளாறுகளையும் ஏற்படுத்தும்.
#15 கவலை, பயந்தசுபாவம், பதற்றகுணம்:
* சரும நோய்களை ஏற்படுத்தும்.
* அணைத்து வகையான இருதய கோளாறுகளையும் ஏற்படுத்தும்.
* குடல் செரிமானம் சமந்தப்பட்ட அணைத்து கோளாறுகளையும் வரச்செய்யும்.
நல்லெண்ணத்தை வளர்த்தால், நலம் தானே தேடிவரும்.