Wednesday, 7 September 2016

இடைக்காலம்


உங்களிடமிருந்து ஆரம்பியுங்கள்-

நான் ஒரு மது அருந்துபவரின் வாழ்க்கையைப் பற்றி படித்துக்கொண்டிருந்தேன். அவனுக்கு பல முறைகள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது...  பத்தாவது முறையாக அதே நீதிபதி அவனை சிறைக்கு அனுப்பினார். அதனால் நீதிபதி தன்னுடைய தீர்ப்பில், “மதுதான், மது மட்டும்தான் உன்னுடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம்” என்றார். அந்த நபர் நீதிபதியைப் பார்த்து “நன்றி ஐயா, நீங்கள் ஒருவர்தான் என்னை பொறுப்பாளி ஆக்கவில்லை, மற்ற எல்லோரும் நான்தான் தவறு செய் கிறேன், என்று சொல்கிறார்கள், நீங்கள் மட்டும்தான் மதுதான் காரணம் என்பதை புரிந்துக்கொண்டுள்ளீர்கள், நான் இதற்குக் காரணம் இல்லவே இல்லை” என்றான்.

உடலில் ஏதாவது கோளாறு இருந்தால், நீங்கள்தான் அதற்குப் பொறுப்பு என்று நினைப்பதில்லை. ஆனால் மனதில் ஏதாவது கோளாறு இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அதற்கு நீங்கள்தான் காரணம் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் மனதுடன் ஐக்கியமாகியுள்ளது தெளிவாக, ஆழமாகத் தெரியும்.  இது இப்படித்தான் இருக்கும், ஏனெனில் உங்கள் மெய்யிருப்பின்(Being) வெளிப்பாகம்தான் உடல், உள்பாகம் மனம். மனம் உங்களுடைய உள்ளார்ந்த நீங்கள், அதனால் நீங்கள் அத்துடன் அதிகமாக ஐக்கியப்படுத்திக்கொள்ளலாம். பல பிறவிகளில், பல வாழ்க்கையில், அது உங்களுடன் இருக்கிறது. மனம் பழையது, எப்பொழுதும் பழையது, தொடர்ந்து வருவது. ஆனால் நீங்கள் மனமல்ல. இதைத் தெரிந்துக்கொள்ளலாம், இதை தெரிந்துக்கொள்வதில் எந்த கஷ்டமும் இல்லை.

வெறும் சாட்சியாக இருங்கள். எப்போதெல்லாம் மனம் வேலை செய்கிறதோ, அப்போதெல்லாம் ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டு, அது எப்படி வேலை செய்கிறது என்று பாருங்கள். அதில் தலையிடாதீர்கள், அதனுள்ளே செல்லாதீர்கள், உள்ளே வருவது, அதற்கு பலத்தை உருவாக்கும், ஐக்கியப்படுத்திக் கொள்ளும். உள்ளே வராதீர்கள், எதுவும் சொல்லாதீர்கள், நீதிபதியாக இருக்காதீர்கள், சாலையில் போக்குவரத்து கடந்து செல்கிறது, நீங்கள் சாலை ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். எந்த தீர்ப்பும் வழங்காதீர்கள். உங்களால் ஒரு வினாடிக்கு, ஓரத்தில் உட்கார்ந்துக்கொண்டு, மனதில் ஓடிக்கொண்டிருக்கும் போக்குவரத்தை, தொடர்ச்சியான போக்குவரத்துகளை பார்க்க முடிந்தால்கூட, உங்களால் ஒரு இடைவெளியை பார்க்க முடியும் – உங்களுக்கும் மனதிற்கும் நடுவே  உள்ள இடைவெளி. பின்பு இந்த இடைவெளியைப் பெரிதாக, அகலமாக, பாலம் அமைக்க முடியாத அளவிற்கு செய்துகொள்ளலாம்.

இவ்வாறான இடைக்காலம் இருக்கும்போது, பின்பு பாலம் இருக்காது. மனதின் வட்டம் நீங்கள் இருக்கும் இடத்தைத் தவிர்த்து வேறு இடத்தில்தான் இருக்கும் என்பதை, உங்களால் முடிந்தவரை, எல்லா முனைகளிலிருந்தும் பார்த்துவிட்டீர்கள். நீங்கள் எங்கோ உள்ளே வேறு ஒரு இடத்தில் இருக்கிறீர்கள். இது ஒரு கூற்றாக இல்லாமல், அறிந்த உண்மையாக இருந்தால், பின்பு நீங்கள் திறந்திருக்கிறீர்கள். பின்னர் நீங்கள் உள் விண்வெளியில், உள் வானத்தில், இதயத்துள் இருக்கும் விண்வெளியில் குதித்து விட்டீர்கள். நீங்கள் உள்ளே குதித்துவிட்டீர்கள். இப்போது நீங்கள் அங்கிருக்கிறீர்கள், மேலும் திறந்தும் இருக்கிறீர்கள்.

பின்பு உங்களுக்கு நீங்கள் எப்பொழுதுமே திறந்துதான் இருந்திருக்கிறீர்கள் என்பது தெரியவரும்.