Monday, 18 January 2021

பாடல் மூலம் உளவியல்



*ஒரு "பாடலில்" உளவியல்..!!*

தினமும் நீங்கள் இதை கடந்திருப்பீர்கள். (கற்பனை செய்தபடியே படியுங்கள்) எங்காவது ஒரு மூலையில் மெல்லிய சப்தத்தில் ஒரு பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும் அதைக் கேட்டவுடன் நீங்களும் அந்தப் பாடலைப் பாடத் தொடங்குகிறீர்கள். 

சிறிது நேரத்தில் எங்கோ ஒலித்துக்கொண்டிருந்த பாடல் நின்றுவிடும் அது உங்களுக்குக் கேட்காது ஆனாலும் நீங்கள் தொடர்ந்து பாடிக் கொண்டே தான் இருப்பீர்கள். சிலநேரம் அந்த நாள் முழுவதும் அந்தப் பாடலை மீண்டும் மீண்டும் பாடுவீர்கள். 

ஏன் பாடல் நின்ற பின்னும் நீங்கள் பாடுகிறீர்கள்? இதுவரை அதை ஏன் என்று சிந்தித்து உள்ளீர்களா? இன்று
சிந்திக்கலாம் வாருங்கள்...! 

உங்கள் மூளையில் நீங்கள் கேட்ட பாடல் ஏற்கனவே பதிந்திருக்கும் அந்தப் பாடலை பலமுறை இரசித்துப் பாடியிருப்பீர்கள். (நீங்கள் அதற்கு முன் கேட்காத பாடலை அப்படி பாட மாட்டீர்கள் சரிதானே) இந்த முறை அதைக் கேட்டதும் உங்கள் மூளையில் பதிந்துள்ள அந்தப் பாடல் மீண்டும் உங்கள் நினைவுக்கு வருகிறது. நீங்கள் ரசித்து கேட்டதை நினைவுபடுத்தி உங்களை அறியாமலேயே பாட வைக்கிறது. 

இது சரியாகப் புரிந்து விட்டால் போதும் உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்றப்போகும் இரகசியம் புரிந்துவிடும். ஏன் என்றால் இதுபோல தான் உங்களுடைய ஒவ்வொரு எண்ணங்களும் செயல்படுகிறது.

நீங்கள் ஒவ்வொரு செயலையும் இப்படித்தான் செய்கிறீர்கள் முதல் முறை ஒன்றைக் கேட்கிறீர்கள் மீண்டும் மீண்டும் அதைக் கேட்கும் பொழுது அது உங்களுக்கு பிடிக்க ஆரம்பிக்கிறது பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் மனதில் பதிந்து பின்னர் தொடர்ந்து கேட்பதால் ஆழ் மனதில் பதிகிறது. 

அந்த எண்ணம் அங்கேயே தான் இருக்கும் அதற்கு சம்பந்தமான வார்த்தைகளை கேட்கும் பொழுது அது உங்கள் நினைவில் வந்து அதை பேசுவதற்கும் அல்லது செயல்படுத்துவதற்கும் தூண்டுகிறது. 

நீங்கள் ஒரு மொழியைப் பேசுவதும் இந்த முறையில் தான் ஒரு குழந்தைக்கு இது அம்மா இது அப்பா இது தாத்தா இது பாட்டி என ஒவ்வொன்றாக பதிய வைக்கிறோம் அதைத் திரும்பத் திரும்பக் கூறி ஆழ்மனப் பதிவாக மாறுகிறது பின்னர் அவர்களைப் பார்க்கும் பொழுது தானாகவே மூளை நினைவு படுத்திக் கொள்கிறது சரியாக அவர்களை அழைக்கிறது.

இதே முறையை உங்கள் அனைத்து வளர்ச்சிக்கும் பயன்படுத்துங்கள் உங்களுக்கு தேவையானதை மட்டும் கேளுங்கள் மற்றும் பாருங்கள் திரும்பத் திரும்ப கேளுங்கள் அதைப் விரும்புங்கள் அது உங்கள் ஆழ்மனப் பதிவாகும். பின்னர் அதை மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவு படுத்தும் வகையில் தொடர்ந்து ஏதாவது வகையில் செயல்படுத்துங்கள் மூளை உங்களுக்கு நினைவு படுத்தும்  (அதுவே உங்கள் மூளையின் வேலை) பின்னர் அதை செயல்படுத்துங்கள். 

இதை சரியாகப் புரிந்துகொண்டால் வெற்றி பெறுவது மிகவும் எளிமைதான். அதற்கு இதை மீண்டும் மீண்டும் படித்து உங்கள் ஆழ்மனதில் பதியவையுங்கள்.


வாழ்க🙌வளமுடன்

*அன்பே🔥சிவம்*

Friday, 15 January 2021

வெகுமதி

உங்களை தேடி பல வெகுமதிகள் வர போகிறது 
.
உங்கள் மனதை ரணப்படுத்திய அவமானங்களும், துயரங்களும் நீங்கள் வடித்த கண்ணீரும் என்றும் அர்த்தமில்லாமல் போகாது.
.
இது உங்கள் ஆழ்மனதின் சத்தியமான உண்மை!
.
தற்போது உங்கள் வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள் எல்லாமே உங்களுக்கு எதிராக தான் இருக்கிறது, 
.
அதற்காக கவலைப்படாதீர்கள்...
.
ஆழ்மனதின் ஆற்றலை நம்பியவர்கள் என்றும் தோற்றது இல்லை.
.
உங்கள் ஆழ்மனதில் இருந்து வரும் உள்ளுணர்வுகள், வார்த்தைகள் மீது நம்பிக்கை வையுங்கள்
.
நீங்கள் அசைக்கமுடியாத நம்பிக்கையோடும், பொறுமையோடும் இருங்கள். 
.
உங்களை ஏமாற்றியவர்களை நினைத்து மனம் தளராதீர்கள்...!
.
இவை எல்லாம் இன்னும் சில நாட்களில் முடிவுறும். .
.
உங்கள் நிலை மாறும். மாறும்...! 
.
அதை ஆழ்மனம் நிச்சயம் செய்யும்
.
நீங்கள் அனைவரும் வியக்கும் வண்ணம் அனைத்திலும் வெற்றியடைவீர்கள். 
.
உங்களை தேடி நிச்சயம் பல வெகுமதிகள் வரப் போகிறது.
.
உங்களை சுற்றி உள்ளவர்களுக்கு முன் நீங்கள் பட்ட அவமானங்களுக்கும், நீங்கள் வடித்த கண்ணீர்க்கும் அவர்கள் முன்னால் நீங்கள் தலைநிமிர்ந்து வாழ்வீர்கள்.
.
அவர்கள் உங்களுக்கு செய்த தவறையும் துரோகத்தையும் உணர்ந்து உங்களிடம் மன்னிப்பு கேட்பார்கள்.

Wednesday, 13 January 2021

முன்னோர்கள் சொன்னது

*ஒரு விமானத்தில்,,, தன்னருகே அமர்ந்திருந்த ஒரு சிறுமியிடம்.......,*

 *" தன் அறிவுக்கூர்மையை காட்ட விரும்பிய ஒரு தத்துவமேதை"....,*

*அந்த சிறுமியிடம் கேட்டார்,,..!!*

*"உன்னிடம் சில கேள்விகள் கேட்கலாமா".....?*  என்றார்.

*படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு,*

 *"என்ன மாதிரி கேள்விகள்".....?*
*என்று சிறுமி கேட்டாள்.....!!*

     *"கடவுள் பற்றியது".....!!*

ஆனால்...,
    கடவுள், 
         நரகம்,
         சொர்க்கம்,
        புண்ணியம்,
     பாவம் என
            *எதுவும் கிடையாது....!!*

*"உடலோடு இருக்கும் வரை உயிர் "......!!*
*"இறந்த பிறகு என்ன"......?*

 *தெரியுமா என்றார்....!!*

*அந்த சிறுமி யோசித்து விட்டு........ ,*

  *"நானும் சில கேள்விகள் கேட்கட்டுமா"......?*  என்றாள்.

       ஓ எஸ்..!
        *"தாராளமாக கேட்கலாம்"..* என்றார்....!!

*ஒரே மாதிரி புல்லை தான்.....,*
    பசு, 
         மான், 
              குதிரை 
                     *உணவாக                   *எடுத்துக்                     *கொள்கிறது.....!!*

 ஆனால்,
    *வெளிவரும்  'கழிவு"...( shit ) ஏன் வெவ்வேறாக இருக்கிறது......!!!* 

*"பசுவிற்கு சாணியாகவும்",,,,,*

 *"மானுக்கு சிறு உருண்டையாகவும்"......,*

 *"குதிரைக்கு கட்டி கட்டியாகவும் வெளி வருகிறது".....!!*

 *'ஏன் அப்படி'....?*
  என்று கேட்டாள்.

*'தத்துவவாதி'.*
  *" இது போன்ற கேள்வியை எதிர்பார்க்கவில்லை".......!!*

*திகைத்துவிட்டார்'......!!!*

*"தெரியவில்லையே".....,*
என்று கூறினார்....!!

*கடவுளின் படைப்பில் நிகழும் மிக சாதரண விசயமான....,*

 *"உணவு கழிவு பற்றிய ஞானமே".....  நம்மிடம்  இல்லாத போது*

 பின் ஏன் நீங்கள்
     கடவுள்,
         சொர்க்கம், 
              நரகம் பற்றியும், 

*"இறப்புக்கு பின் என்ன என்பது பற்றியும் பேசுகிறீர்கள்".....?*

*"சிறுமியின் புத்திசாலித்தனமான இந்த கேள்வியால்."......,*

 *"தத்துவமேதைக்கு தலை தொங்கிப்போய்".....,*
*"வாயடைத்து போய்விட்டார்"......!!*

நம்மில் பலரும் இது போலத் தான்.....

 தனக்கு எல்லாம் தெரியும் என அகங்காரத்தோடு.....

மற்றவர்களை மட்டம் தட்டுவார்கள்.....!!
நிறைகுடம் ததும்பாது....!!
குறைவிடம் கூத்தாடும் என.....

முன்னோர்கள் சொல்லியது இதையே......!!

எவரையும் குறைவாகவும் எடை போடக்கூடாது.....!!
தலைக்கனமும் கூடாது.....!!
கற்றது கைமண் அளவு",.....!!
 கல்லாத்து உலகளவு......!!

சிவ ஓம் நமசிவாய.

Thursday, 31 December 2020

கவலைப்படாதே

இதை படிக்கும் முன் உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்திய பின்னர் படியுங்கள். அப்போது தான் ஒரு தெளிவு உங்களுக்குள் பிறக்கலாம்...
(இது  ஆத்மார்ந்த மூத்தோரின் அறிவுரை)

.     பயனுள்ள பதிவு தவறாமல் படிக்கவும்...
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே.

நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதே.

உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.

ஒன்றை மட்டும் தெரிந்து கொள்....

*ஒவ்வொரு மனிதனும்*
*தனித்தனி ஜென்மங்கள்.*
தனித்தனி பிறவிகள்
தனித்தனி ஆன்மாக்கள்

அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும்.அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும். அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள் .

அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது.

இதுதான் வாழ்க்கையின் தத்துவ உண்மை.

அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்.

அது உடன் பிறந்தவர்களாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், கணவன், மனைவியாக இருந்தாலும், பெற்ற குழந்தைகளாக இருந்தாலும், பேரன் பேத்திகளாக இருந்தாலும், எந்தஉறவுகளாக இருந்தாலும், அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது. 

எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி.  இதை நீ மாற்றி அமைக்க முடியுமா...?

ஒதுங்கி நின்று வேடிக்கை பார்!....பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே.

*அவர்களுக்கு அனுபவம் தான் குரு.*

அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக் கொள்வார்கள். அதுவரை நீ பொறுமையாக இரு.

செயற்கையாக ஒரு குணத்தை  உருவாக்கி உன்னிடம் அன்பை காட்டினாலும் தான் யார்?, தன் குணம் என்ன?, என்பதை ஒரு நாள் வெளிப்படுத்தி விடுவார்கள். எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்.

நாம் வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம். அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தவிர நாம் வேறு எதையும் செய்து காட்ட முடியாது. 

எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே. கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் கடவுள்.
அதையும் மீறி சிலவேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. அது போல் இயற்கையின் சுபாவங்களைப் போல் மனித இயற்க்கை சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.

நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப்பழகிக் கொள். அதில் நன்மை வந்தாலும், தீமை வந்தாலும் , உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும் . அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்.

இன்பமானாலும் துன்பமானாலும் அதை நீயே சந்திக்க கற்றுக்கொள்.அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே.

*உன் இன்ப துன்பத்தில் பங்கு பெறுவதற்கு இந்த பிரபஞ்சத்தில் ஒருவர் பிறந்திருந்தால் நிச்சயம் அவர் உன்னை கைவிடாமல் உன்னோடு சேர்ந்தே பயணிப்பார். அது உன் பிறவி பிராப்தத்தை பொறுத்து இருக்கிறது. அப்படி அது நடந்து விட்டால், எந்த சூழ்நிலையிலும் உன்னோடு இணைந்தே இருப்பார்*

நீ பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், வரும் துன்பத்தை எதிர்கொள் ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.

*மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.*

உன் கண்ணீரும். உன் கவலையும் உன்னை பலவீனமாக காட்டிவிடும்...அழுவதாலும் சோர்ந்து போவதாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும். அழுது சுமப்பதை காட்டிலும். ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்.

தைரியமும் தன்னம்பிக்கையும் தான் 
ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்துகொள். இந்த பக்குவத்தை அடைந்து விட்டால் எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்துகொள்.

உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பொறுமையாக மீண்டும் ஒருமுறை படிக்கவும்... நன்றி.

Monday, 28 December 2020

நீயா நானா



ஒருவர் தன் வீட்டு சுவரில் மாட்டுவதற்காக ஒரு சுவர் கடிகாரம் வாங்கினார். சுவரில் மாட்ட ஆணி அடிக்க சுத்தியலைத் தேடினார் கிடைக்கவில்லை. பக்கத்து வீட்டுக்காரரிடம் இரவல் வாங்கலாம்னு நினைத்தார். ஆனால் ராத்திரி நேரமாச்சே சரி காலையில் வாங்கிக்கலாம்னு விட்டுட்டார்..

காலைல பக்கத்து வீட்டுக்கு கிளம்பும் போது "ச்சே காலங்கார்த்தால இரவல் கேக்க வந்துட்டானே" னு நெனச்சுட்டா என்ன செய்வது. சரி அப்புறம் வாங்கிக்கலாம்னு விட்டுட்டார்..

இப்படியே ஒவ்வொரு நாளும் "விளக்கு வைக்குற நேரத்துல சுத்தியல் கேட்டு வந்துட்டான் பார்"

"வெள்ளிக் கிழமை அதுவுமா இரவல் கேக்கறானே"

பக்கத்து வீட்டுக்காரன் இப்படி எதையாவது சொல்லி விட்டால் அவமானமாகி விடுமே என்ற தயக்கத்திலேயே பல நாட்கள் சுத்தியலைக் கேக்காமல் விட்டு விட்டார் அந்த நபர்.

மாட்டப்படாத கடிகாரம் அவர் கண்ணில் பட்டுக்கொண்டே அவரை வெறுப்பேத்தியது..

ஒரு நாள் விருட்டுனு பக்கத்து வீட்டுக்கு போய் "யோவ் போய்யா உன் சுத்தியும் வேணாம் ஒண்ணும் வேணாம் நீயே வெச்சுக்கோ"னு சத்தம் போட ஆரம்பித்து விட்டார்... பக்கத்து வீட்டுக்காரருக்கோ ஒண்ணுமே புரியல..

இந்த கதை மாதிரி தான் அடுத்தவரிடம் தங்கள் மனதில் என்ன இருக்கிறது என்று பேசாமல் நாமாகவே அவர் இப்படி சொல்லுவாரோ அப்படி சொல்லுவாரோ என்று மாட்டப்படாத கடிகாரத்தை போல் நாமும் நன்கு பழகியவர்களிடம் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் பகைமையை வளர்த்துக் கொண்டு அந்நியமாக்கி கொள்கிறோம்.

நெருக்கமான இருவருக்குள் பிரச்சனைகள் வருவதற்கு மூன்றே காரணங்கள் தான் இருக்கின்றன.

ஒன்று ஒருவர் சொல்லும் காரணம்

இன்னொன்று இன்னொருவர் சொல்லும் காரணம்

மூன்று உண்மையான காரணம்

இந்த உண்மையான காரணம் என்ன என்று இருவரும் உட்கார்ந்து பேசினால் தான் தீர்வு கிடைக்கும். தங்களுக்குள் சண்டையும் சச்சரவும் வர என்ன காரணம் என்று தெரிந்து கொண்டால் அதற்கு என்ன தீர்வு என்று எளிதில் கண்டு பிடிக்க முடியும்.. இல்லையென்றால் நமக்குள் இருக்கும் Ego வை போகச் சொன்னாலே போதும்... 

உண்மையாக உள்ள நிலையினை அறியாமல்... தடுமாறும் கற்பனைகளில் மூழ்காமல்... வெளிப்படையான மன பரிமாற்றங்களால் நமது வாழ்வை மேலும் மேலும் இனிமையாக முடியும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். 

எந்த சூழலிலும் 
நீயா-நானா என்பது "விஷம்" 
நாம் என்பதே "நலம்" 
என்பதை முழுமையாக உணருங்கள். 

வாழ்க🙌வளமுடன்

*அன்பே🔥சிவம்*

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

Sunday, 29 November 2020

நேரம் நமக்கு



*அழகான நேரங்கள்..!!*

உங்கள் வாழ்க்கை வளமாக உங்களுக்காக சில நிமிடங்களை நீங்கள் செலவிட்டே ஆகவேண்டும்.

எனக்கு நேரமில்லை. என்னால் நேரத்தை ஒதுக்க முடியாது என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை.

ஒரு நாளின் இருபத்தி நான்கு மணிநேரங்களில் நமக்கான நேரம் இல்லை என்றால் வெட்கப்பட வேண்டும். 

நம்மை நாம் செதுக்கி கொள்ளவும் நம்மை நாம் யாரென்று உணரவும் நமது எண்ணங்களை செயல்பாடுகளாக மாற்றவும்.

அந்த செயல்பாடுகளில் வெற்றி பெறவும் நமக்கான கால நேரம் மிகமிக அவசியம்.

ஒரு நாளின் துவக்கத்தை மிக  அழகாக மாற்றும் சக்தி உங்கள் ஒருவருக்கே உண்டு என்பதனை மறந்து விடாதீர்கள்.

அதிகாலையில் எழுந்து கொள்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

இந்த வழக்கம் உங்களை மிக  உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். இது வெற்றியாளர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை.

அதிகாலை துயில்  எழுந்து விட்டால் மட்டும் போதாது.

உங்களையும் உங்கள் சிந்தனைகளையும் லட்சியங்களையும் உங்களுக்காக  உங்கள் வாழ்க்கை வளமானதாக மாற மாற்றிக்கொள்ளுங்கள்.

யாருக்காகவும் நீங்கள் மாறவேண்டாம்.

அது உங்கள் சுயத்தினை தொலைத்து விடும். உங்கள் கொள்கைகளை மாற்றுங்கள். உங்கள் நடவடிக்கைகளை மாற்றுங்கள். உங்கள் சூழ்நிலையை மாற்ற முயற்சி செய்யுங்கள்.

உங்கள் பழக்கவழக்கங்களை மாற்றுங்கள். உங்கள் பேச்சை குறைத்து செயலில் வேகத்தையும் உறுதியையும் கூட்டுங்கள்.

உங்களுக்காக நீங்கள்  ஒதுக்கிய நேரத்தில் உங்கள் வாழ்கையை மாற்றி அமைக்கும் காரணிகளை பற்றி ஒரு புத்தகத்தில் எழுதுங்கள். 

இன்னும் சில  வருடங்களில் நீங்கள்  என்னவாக வேண்டும் என்பதனை எழுதுங்கள். 

நீங்கள் அடைய வேண்டிய குறிக்கோள்களையும் சந்திக்க வேண்டிய நபர்கள் பார்க்க வேண்டிய இடங்கள் அடைய வேண்டிய  இலக்குகளையும் தினம்தோறும் எழுதுங்கள்.

இப்படி செய்து கொண்டு வாருங்கள் மிகமிக விரைவில் நீங்கள் அடைய வேண்டிய அனைத்தையும் அடைவீர்கள்.

*இது முற்றிலும் உண்மை...!*

*ஆனந்தமான வாழ்வுக்கு ஆழ்மனதின் அற்புத சக்தி பற்றிய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் புரியவைத்து அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்....*

வாழ்க🙌வளமுடன்

*அன்பே🔥சிவம்*

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

Monday, 2 November 2020

பாடம்

● ஒரு குட்டி நீதிக்கதை.....

ஒரு ஊர்ல ஒரு அறிவாளி ஆள் இருந்தார். அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம் .

அடிக்கடி கோவிலுக்கு போவார்.

கடவுளை வேண்டிக்குவார் .அதுக்கப்புறம் காட்டுக்கு போவார. விறகு வெட்டுவார். அதை கொண்டு போய் விற்பனை செய்வார். ஓரளவுக்கு வருமானம் வந்தது.

அதை வச்சிக்கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தார்.

ஒரு நாள் அது மாதிரி அவர் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தார். அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை. எதோ விபத்துல இழந்துட்டது போல இருக்கு.. 

அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு.. அதை இவர் பார்த்தார் ..

அப்போ இவர் மனசுல ஒரு சந்தேகம்...

"இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை ... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ..?" அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சார்....

இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது..

அதை பார்த்த உடனே ஓடி போய் ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிகிட்டார், ஒளிஞ்சிகிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பிச்சார். அந்த புலி என்ன பண்ணிச்சுன்னா ... ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துகிட்டு வந்தது ...

அதை சாப்பிட்டது ...

சாப்பிட்டது போக மீதியை அப்படியே அங்கேயே போட்டுட்டு போய்ட்டது...

புலி போனப்பின் கால் இல்லாத அந்த நரி மெதுவா நகர்ந்து கிட்ட வந்தது ...
மிச்சமிருந்ததை சாப்பிட்டது ..
திருப்தியா போய்ட்டது...

இவ்வளவையும் மரத்துக்கு பின்னாடி நின்னு நம்ம ஆள் கவனிச்சி பார்த்து கிட்டு இருக்கார்.

இப்ப அவர் யோசிக்க ஆரம்பிச்சார்...

ரெண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடறான் . அப்படி இருக்கறப்போ...
தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம விட்ருவானா?, நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம்..

நாம எதுக்கு அனாவசியமா வெயில்லயும், மழைலயும் கஷ்டபடனும் ..?...
எதுக்காக வேர்வை சிந்தி விறகு வெட்டனும் ...?

இப்படி யோசிச்சார்..... அதுக்கப்பறம் அவர் காட்டுக்கே போறதில்லை...

கோடலியை தூக்கி எறிஞ்சிட்டாரு........
பேசாம ஒரு மூலையிலே உக்கர்ந்துட்டார்.

அப்பபோ கோவிலுக்கு மட்டும் போயிட்டு வருவார்..

" கடவுள் நம்மை காப்பாத்துவார் ... அவர் நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார் "- அப்படின்னு நம்பினார்..,
கண்ணை முடிகிட்டு. கோயில் மண்டபத்துலேயே ஒரு தூண்ல சாஞ்சி உக்காந்துகிட்டார்.

ஒவ்வொரு நாளும் போய்கிட்டே இருக்கு..

சாப்பாடு வந்த பாடில்லே.. !
இவர் பசியால வாடி போனார் . உடம்பு துரும்பா இளைச்சு போய்டுச்சு எலும்பும், தோலுமா ஆயிட்டார் .

ஒரு நாள் ராத்திரி நேரம், கோயில்ல யாருமே இல்லை. இவர் மெதுவா கண்ணை திறந்து கடவுளை பார்த்தார் ...

"ஆண்டவா ... என்னுடைய பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா .....?" நான் இப்படியே பட்டினி கிடந்தது சாக வேண்டியது தானா ? காட்டுல அந்த நரிக்கு புலி மூலமா சாப்பாடு போட்டியே..! அதை பார்த்துட்டு தானே இங்கே வந்தேன் ... என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே ... இது நியாயமா ?" ன்னாரு

🙏இப்போ கடவுள் மெதுவா கண்ணை திறந்து சொன்னாராம்.....

முட்டாளே!... நீ பாடம் கற்று கொள்ள வேண்டியது நரி கிட்ட இருந்து இல்லே.. ! புலி கிட்ட இருந்து ....அப்படின்னாராம்..... . புலி போல் உழைத்து சாப்பிட்டு மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுன்னாராம்....

🙏நாம் யாரிடம் இருந்து நல்ல பாடம் கற்றுக் கொள்ள போகிறோம் என்று நாம் தான் முடிவு செய்ய வேண்டும்..

🙏விடா முயற்சியுடன் கூடிய உழைப்பின் பலனிலும், உயர்விலும் கடவுளின் வழிகாட்டுதல் உள்ளது.