Monday, 18 January 2021

பாடல் மூலம் உளவியல்



*ஒரு "பாடலில்" உளவியல்..!!*

தினமும் நீங்கள் இதை கடந்திருப்பீர்கள். (கற்பனை செய்தபடியே படியுங்கள்) எங்காவது ஒரு மூலையில் மெல்லிய சப்தத்தில் ஒரு பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும் அதைக் கேட்டவுடன் நீங்களும் அந்தப் பாடலைப் பாடத் தொடங்குகிறீர்கள். 

சிறிது நேரத்தில் எங்கோ ஒலித்துக்கொண்டிருந்த பாடல் நின்றுவிடும் அது உங்களுக்குக் கேட்காது ஆனாலும் நீங்கள் தொடர்ந்து பாடிக் கொண்டே தான் இருப்பீர்கள். சிலநேரம் அந்த நாள் முழுவதும் அந்தப் பாடலை மீண்டும் மீண்டும் பாடுவீர்கள். 

ஏன் பாடல் நின்ற பின்னும் நீங்கள் பாடுகிறீர்கள்? இதுவரை அதை ஏன் என்று சிந்தித்து உள்ளீர்களா? இன்று
சிந்திக்கலாம் வாருங்கள்...! 

உங்கள் மூளையில் நீங்கள் கேட்ட பாடல் ஏற்கனவே பதிந்திருக்கும் அந்தப் பாடலை பலமுறை இரசித்துப் பாடியிருப்பீர்கள். (நீங்கள் அதற்கு முன் கேட்காத பாடலை அப்படி பாட மாட்டீர்கள் சரிதானே) இந்த முறை அதைக் கேட்டதும் உங்கள் மூளையில் பதிந்துள்ள அந்தப் பாடல் மீண்டும் உங்கள் நினைவுக்கு வருகிறது. நீங்கள் ரசித்து கேட்டதை நினைவுபடுத்தி உங்களை அறியாமலேயே பாட வைக்கிறது. 

இது சரியாகப் புரிந்து விட்டால் போதும் உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்றப்போகும் இரகசியம் புரிந்துவிடும். ஏன் என்றால் இதுபோல தான் உங்களுடைய ஒவ்வொரு எண்ணங்களும் செயல்படுகிறது.

நீங்கள் ஒவ்வொரு செயலையும் இப்படித்தான் செய்கிறீர்கள் முதல் முறை ஒன்றைக் கேட்கிறீர்கள் மீண்டும் மீண்டும் அதைக் கேட்கும் பொழுது அது உங்களுக்கு பிடிக்க ஆரம்பிக்கிறது பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் மனதில் பதிந்து பின்னர் தொடர்ந்து கேட்பதால் ஆழ் மனதில் பதிகிறது. 

அந்த எண்ணம் அங்கேயே தான் இருக்கும் அதற்கு சம்பந்தமான வார்த்தைகளை கேட்கும் பொழுது அது உங்கள் நினைவில் வந்து அதை பேசுவதற்கும் அல்லது செயல்படுத்துவதற்கும் தூண்டுகிறது. 

நீங்கள் ஒரு மொழியைப் பேசுவதும் இந்த முறையில் தான் ஒரு குழந்தைக்கு இது அம்மா இது அப்பா இது தாத்தா இது பாட்டி என ஒவ்வொன்றாக பதிய வைக்கிறோம் அதைத் திரும்பத் திரும்பக் கூறி ஆழ்மனப் பதிவாக மாறுகிறது பின்னர் அவர்களைப் பார்க்கும் பொழுது தானாகவே மூளை நினைவு படுத்திக் கொள்கிறது சரியாக அவர்களை அழைக்கிறது.

இதே முறையை உங்கள் அனைத்து வளர்ச்சிக்கும் பயன்படுத்துங்கள் உங்களுக்கு தேவையானதை மட்டும் கேளுங்கள் மற்றும் பாருங்கள் திரும்பத் திரும்ப கேளுங்கள் அதைப் விரும்புங்கள் அது உங்கள் ஆழ்மனப் பதிவாகும். பின்னர் அதை மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவு படுத்தும் வகையில் தொடர்ந்து ஏதாவது வகையில் செயல்படுத்துங்கள் மூளை உங்களுக்கு நினைவு படுத்தும்  (அதுவே உங்கள் மூளையின் வேலை) பின்னர் அதை செயல்படுத்துங்கள். 

இதை சரியாகப் புரிந்துகொண்டால் வெற்றி பெறுவது மிகவும் எளிமைதான். அதற்கு இதை மீண்டும் மீண்டும் படித்து உங்கள் ஆழ்மனதில் பதியவையுங்கள்.


வாழ்க🙌வளமுடன்

*அன்பே🔥சிவம்*