Thursday, 16 June 2016

கஷ்டம்,

கஷ்டம், #கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே…
எதுக்குத் தான்பா இந்த கஷ்டம்…
என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை.
இந்தப் பதிவு அதற்கு விடையளிக்கக் கூடும்..

#பாலுக்கு_ஏற்பட்ட_வருத்தம்.!

பாலுக்கு ஒரு பெரிய வருத்தம்..
பசுவின் வயிற்றில் நான் இருந்தேன்..
என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள்..
அடுப்பைப் பற்றவைத்து, அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள்..
எனக்கு சூடு தாங்கவில்லை, துடித்துப் போனேன்..
பசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனை?” என்று என்னை நானே நொந்து கொண்டேன்..
பொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்து இறக்கிவைத்தாள்..
நேரமாக, நேரமாக நான் ஆறியதும், புளித்த மோரைக் கொண்டு வந்து என்னோடு சேர்த்தாள்..
இது என்னடா புது தண்டனை?” என்று வருத்தப்பட்டேன்..
அதன் பிறகு யாரும் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை..
திரவமாக இருந்த நான் திடமாக மாறிப்போனேன்..
எனக்குத் தயிர் என்று புதிதாக ஒரு பெயரை வைத்தார்கள்..
அத்துடன் நிறுத்தினார்களா?
என்னை ஒரு பானையில் ஊற்றி, மத்து கொண்டு கடைய ஆரம்பித்தார்கள்..
நான் மறுபடி மோர் என்ற திரவமானேன்..

என்னுள்ளிருந்தே ஒரு திடப்பொருளை வரவழைத்து, அதற்கு வெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள்..
‘பட்டர்’ என்ற பெயரைக் கேட்டதும், அப்பாடா! இனியாவது என் வாழ்க்கை ‘பெட்டர்’ ஆகுமா?” என்று ஏங்கினேன்..

அத்துடன் தீர்ந்ததா என் கஷ்டம்? அந்த வெண்ணெயை, மறுபடி அடுப்பில் வைத்து உருக்கினார்கள்..
எனக்கு நெய் என்று இன்னொரு புதுப் பெயரை வைத்தார்கள்..
உருக்கிய நெயை ஒரு ஜாடியில் ஊற்றி, அந்த வீட்டில் ஜன்னலுக்குப் பக்கத்தில் வைத்தார்கள்..

பாலாக இருந்த நான், பட்ட கஷ்டங்களையும், இப்போதுள்ள நிலைமையையும் நினைத்தபடியே இருந்த நேரத்தில்,
ஜன்ன லுக்கு வெளியில் இரண்டு பெண்கள் ஏதோ பேசிக்கொண்டே செல்வதை நான் கவனித் தேன்..
ஒருத்தி உங்க ஊர்ல பால் என்ன விலை?” என்று கேட்டாள்..
அதற்கு அடுத்தவள், அரை லிட்டர் இருபது ரூபா” என்றாள்..
உடனே முதல் பெண்மணி, ஆனா இந்த நெய் விற்கிற விலையைப் பார்த்தியா? அரை லிட்டர் கேட்டால் கடைக்காரன் நூத்தி இருபது ரூபா விலை சொல்றான்” என்றாள்..

ஜன்னல் பக்கத்திலே, ஜாடிக்குள்ளே இருந்த நான் அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டேன்..
பாலாக இருந்தபோது என் மதிப்பு வெறும் இருபது ரூபாதான், ஆனால், பல கஷ்டங்களை அனுபவித்து, நெய்யான பிறகு, என் மதிப்பு நூத்தி இருபது  ரூபாயாகக் கூடிவிட்டதே!
இதை நினைக்கிறபோது, நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை!” என்றது அந்த நெய்.

இந்தக் கதை மூலம் நமக்குக் கிடைக்கிற பாடம் என்ன?

நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும்தான் நம்முடைய வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை உயர்த்துகிற அம்சங்கள்...

மந்திரம்

☄☄☄☄☄☄☄☄
மந்திரம்
என்பதற்கு

நினைப்பவரைக் காப்பது

என்பது பொருள்.

நினைப்பவரைக் காப்பது
இறைவனது திருவருளேயன்றி வேறொன்று அன்று.

ஆதலால் உண்மையில் மந்திரமாய் இருப்பது திருவருளே.

ஆயினும்

அது சொற்களையும் சொற்றொடர்களையும் தனக்கு
இடமாகக் கொண்டு
அவற்றின் வாயிலாகவே
புத்தி,
முத்தி -  ஆகிய பயன்களைத் தருகின்ற காரணத்தால்,

அச்சொற்களும் சொற்றொடர்களும் உபசார முறையில் மந்திரங்கள் எனப்படுகின்றன.

மந்திரங்களுள் தலையாயது திருவைந்தெழுத்து ஆகும்.

அது ஞானத்தைத் தரும் மறைமொழியாகும்.

வடமொழியில்
அது
பஞ்சாக்கரம் எனப்படும்.
🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊

எண்ணங்கள்

☘🎄☘🎄☘🎄☘🎄☘

மனதை
கவனித்து
அது எங்கிருக்கிறது,

என்ன அது
என்பதைப் பாருங்கள்.

எண்ணங்கள்
மிதந்து
செல்வதையும் ..

இடையில்

இடைவெளிகள்

இருப்பதையும் உணர்வீர்கள்.🍡

நீண்டநேரம் கவனித்தால் எண்ணங்களைவிட இடைவெளிகளே அதிகம் என்பதை காண்பீர்கள்.🔔

ஏனெனில்
ஒவ்வொரு
எண்ணமும்
இன்னொரு எண்ணத்தில் இருந்து தனித்திருக்க வேண்டி உள்ளது.🍡

உண்மையில் ஒவ்வொரு
சொல்லுமே
இன்னொரு
சொல்லில்
இருந்து தனித்திருக்க வேண்டி உள்ளது.🍡

இன்னும் ஆழ்ந்து நீங்கள் போனால் மென்மேலும்
அதிக

இடைவெளிகளை

பெரிய

இடைவெளிகளை
காண்பீர்கள்.🍡

நீங்கள்
முற்றிலும் விழிப்புடன் இருந்தால் மைல்கணக்கில் இடைவெளி நிலவுவது உங்களுக்குத் தெரியவரும்.🍡🍡

அந்த
இடைவெளிகளில்
தான்

"சட்டோரிகள் "

எனப்படும்

தியான

அனுபவங்கள் நிகழ்கின்றன.

அந்த
இடைவெளிகளில்
தான் சத்தியம்
உங்கள் கதவைத் தட்டுகிறது.🎄🌴

அந்த
இடைவெளிகளில்
தான் விருந்தாளி வருகிறார்.🌴

அந்த
இடைவெளிகளில்
தான்
கடவுள் காட்சி🔔☘🎄🍁 அளிக்கிறார்-

அல்லது

நீங்கள்
விரும்பும்
வேறு எவ்விதத்திலும்
அதை🍁🔔 வெளிப்படுத்தலாம்.

விழிப்புணர்வு
முழுமை
பெறுகையில்

ஒன்று
மின்மையின்
ஒரு மிகப்பரந்த இடைவெளி மட்டுமே இருக்கிரது 🍁🍁🍁🍁🍁
🌴🐿🌴🐿🌴🐿🌴🐿🌴

மெளனம்

சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார்.
அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார்.
''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது'' என்றார். சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான்.
அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார். பிறகு, தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது.
அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு, தூரத்தில் ஆந்தை கத்துவதும் நரி ஊளையிடுவதும் நடுக்கத்தைக் கொடுத்தது.
காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது.
மரங்கள் பேயாட்டம் ஆடின. மழைவேறு தூறத் தொடங்கியது. கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது. ‘’அய்யோ! இப்படி நிர்க்கதியாய்த் தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே! யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்’’ என்று பலமுறை கத்திப் பார்த்தான். பயனில்லை.
சிறிது நேரத்தில், இனி கத்திப் பயனில்லை என்பது அவனுக்குப் புரிந்தது. திடீரென்று அவனுக்குள் ஒரு துணிச்சல். என்னதான் நடக்கும், பார்ப்போமே என்று சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினான். இப்படியே இரவு கழிந்தது. விடியற்காலையில் லேசாகக் கண்ணயர்ந்தான். சூரியன் உடம்பைச் சுட்டபோதுதான், கண்கட்டைத் திறந்துப் பார்த்தான். கண்ணைக் கசக்கிக்கொண்டு எதிரே பார்த்தபோது, அவனுக்கு ஆச்சரியம்! ஆனந்தம்! அழுகையே வந்துவிட்டது. ‘’அப்பா’’ என்று கூவி அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையைப் பாய்ந்து தழுவிக் கொண்டான்.
‘’அப்பா நீங்க எப்போ வந்தீங்க?’’ என்று ஆவலாகக் கேட்டான். சோர்வும் மகிழ்ச்சியும் கொண்டிருந்த அந்தத் தந்தை, ''நான் எப்போது மகனே உன்னை விட்டுப் போனேன்’’ என்றார்.
இரவு இங்குதான் இருந்தீங்களா? பிறகு ஏன் நான் பயந்து அலறியப் போதெல்லாம் என்னைக் காப்பாற்றவில்லை? ஏன் என்னிடம் எதுவும் பேசவில்லை?’’ என்று கேட்டான்.
‘’உன் மனோதிடம் வளர வேண்டும். நீ எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும் என்பதற்காக மெளனம் காத்தேன். ஏனென்றால் அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானே வரும்’’ என்றார் தந்தை. மகனுக்கு தந்தையின் நோக்கம் புரிந்தது.
நாம் வணங்கும் கடவுளும் அந்தத் தந்தையைப் போலத்தான்,
நம்மோடு இருக்கிறார். துன்பத்திலும் சோகத்திலும் தவிக்கும்போது துவண்டுவிடாமல், நாம் தீரர்களாக வேண்டும் என்பதற்காகவே பல நேரங்களில் மெளனம் காத்து வெறும் பார்வையாளரைப் போல் இருக்கிறார்.
ஒரு காலும் நமக்கு எந்த ஒரு சேதமும் ஏற்பட விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.

தியானம்

🎄🌴🎄🔔🎄🔔🌴🐡🎄

தியானம்!! ------------------------------
🌹🍡🌹🍡🌹🍡🍡🌹🌹

தியானத்திற்கு என்று அமரும் ஒவ்வொருவருக்கும் தெரியும் அவர்கள் தியானம் செய்யவில்லை,

தங்கள் மனதுடனும், சிந்தனைகளுடனும் சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்று.

உங்களை நீங்கள் உத்தமர் என்று நினைக்கிறீரா??

தியானத்திற்கு

என்று நேரமும் இடமும் ஒதுக்கி அமருங்கள்.

கண்களை மூடுங்கள்!! 
பிறகு தெரியும் ......

உங்கள் மனதில் காமமும், வெறியும், காழ்ப்புணர்ச்சியும், மோகமும், குரோதமும், விரோதமும்................

எவ்வளவு உங்களை பீடித்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியும்.

சாதாரணமாக, அமைதியாக இருக்கும் மனம் கூட, தியானம் என்றவுடன் ஆழிப்பேரலை போல் பொங்கி எழுந்துவிடும்.

உண்மையில் தியானம் செய்யும் ஒவ்வொருவரும் தியானம் செய்யவில்லை..

தத்தம் மனதுடன் போரில் ஈடுபட்டுள்ளார்கள்.
🍡
முதலில்
தியானம் என்றால் என்னவென்று புரியவேண்டும்.

பிறகு தியானம் பழகவேண்டும்.

மனதில் எதோ ஒரு மந்திரத்தை பல ஆயிரம் முறை ஜபிப்பது,

ஒரு புள்ளியிலோ, விளக்கிலோ, ஜோதியிலோ, கட்டைவிரல்
ரேகையிலோ மனதை குவிப்பதுதான் தியானம் என்று
மிகவும் தவறாக🌻 புரிந்துள்ளனர்.

அவ்வாறு மனதை ஓரிடத்தில் குவிப்பது

"மன ஒருமைப்பாடு"

(concentration) ஆகும்.

அது தியானம் அல்ல.
நீங்கள் எத்தனை மணிநேரம் அமர்ந்திருந்தாலும்

உங்கள் மனதில் சிறு அசைவும் தோன்றாமல், மனம் அமைதியாக,

சூனியமாக, எந்த எண்ணமும் இல்லாமல் இருக்குமேயானால், அதுவே தியானநிலை (meditation) ஆகும்.

இந்த உன்னத நிலையை அடைய ஒரே ஒரு பயிற்சிதான் உள்ளது.

அது,
நீங்கள் எந்த செயல் செய்யும்போதும்
அந்த செயலிலேயே முழு கவனத்தையும் வைத்து, என்னத்தை சிதறவிடாமல் பழகுவதே ஆகும். 

உதாரணமாக நீங்கள் உங்கள் மகிழூந்தை இயக்கிக்கொண்டு இருக்கிறீர்கள்.

அப்பொழுது முழுகவனத்தையும் வாகனத்தை இயக்குவதிலேயே செலுத்தி,
தேவையற்ற சிந்தனையை தவிர்த்து பழக வேண்டும்.

நீங்கள்
மதிய உணவை உண்ணும்போது,
தொலைகாட்சியையோ, முகப்புத்தகத்தையோ நோண்டாமல்,

தேவையில்லாமல் சிந்திப்பதை நிறுத்திவிட்டு,

உங்களுக்கு அளிக்கப்பட
உணவை ரசித்து, ருசித்து
முழுமையாக
உண்டால் நீங்கள் தியானத்தை பழகினவர் ஆவீர்.

எனக்கு
மூச்சிவிடவும்,
பசித்தால் உணவு உண்ணவும் கற்றுக்கொடுங்கள் என்று யாரிடமாவது நீங்கள் கேட்டதுண்டா!!

தியானமும்
நீங்கள் முச்சு விடுவதைப்போன்றதே!

யாரும்
உங்களுக்கு தியானம் கற்றுத்தர முடியாது. நீங்களாகத்தான்
அதை அடையவேண்டும்.

அதாவது
உங்கள்
"தீவிர முயற்சியால்" 
தியானம் என்பது "விழிப்பாக இருப்பது" அவ்வளவே.

வீண் சிந்தனைகளும், கற்பனைகளும் உங்களை அடிமைப்படுத்தாமல் விழிப்பாக இருங்கள். அந்த விழிப்பு நிலையே தியானம்.

வீண் சிந்தனையை, சிந்தனையுடன் சண்டையிடாமல் தவிற்பதே தியானம்.

வேலை
செய்யும்
போது அந்த வேலையிலேயே கவனமாக
இருப்பதால்
வீண் சிந்தனையை தவிற்கலாம்.

சும்மா இருக்கும்போது மனதையும் கற்பனை ஏதும் இன்றி சும்மா இருக்க பழகுங்கள்.

ஆனால் மனதுடன் சண்டை பிடிக்காதீர்கள்.

சிந்தனைகளை கவனியுங்கள்.

இயல்பாகவே
வீண் சிந்தனைகள் நின்றுவிடும்.

தியானம் உங்கள் வாழ்வின் ஒரு அங்கம் ஆகிவிடும்.

நீங்களும் " மகரிஷிகள்" ஆகிவிடுவீர்கள்!!!!
🎄💧🎄🍋🌹🎄💧🎄💧

ஆண்டவனை அடைய

எவளவு சிந்திக்க வைக்கும் ஆழமான எடுத்துக்காட்டு!

சுவாமி விவேகானந்தர் ஆன்மீக சொற்ப்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார்.
ஒருவன் குறுக்கிட்டுக் கேட்டான்...
"ஆண்டவனை அடைய நாம் ஏன் ஆலயம் செல்ல வேண்டும் ?
ஆலயமின்றி ஆண்டவனை அடைய முடியாதா? என்று....
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் முன், அவனிடம்
கொஞ்சம் தண்ணீர்
கிடைக்குமா ? என்று....
அவன் ஓடிப் போய்
ஒரு சோம்பு நிறையத் தண்ணீர் கொண்டுவந்தான்.
சுவாமி கேட்டார்
நான் தண்ணீர்தானே கேட்டேன்..எதற்கு இந்த செம்பு.?
செம்பு இல்லாமல் தண்ணீர் கொண்டு வரமுடியாதா?
குழம்பிப் போனான்
அது எப்படி முடியும்? என்று கேட்டான்.
இப்போது பதில் சொன்னார் சுவாமி ...
ஆம் சகோதரனே..
தண்ணீரைக் கொண்டுவர செம்பு தேவைப் படுவது போல,
ஆண்டவனை உணர்ந்து மகிழ, ஓர் இடம் வேண்டாமா?
அதுதான் ஆலயம்..!
ஆனாலும்
செம்பே தண்ணீர் ஆகாது..!
ஆலயமே ஆண்டவனாகாது..!

மகிழ்வாய் வாழ

இராமன் என்பவர் இறந்து விட்டார். அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை.
அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.
.
இந்தக் குடுமபத்துக்கே குருஜியாக விளங்கும் அறிஞர் ஒருவர், அப்போது அங்கு வந்தார்.
அவரைக் கண்டதும் அவர்கள் மேலும் பெரிதாக அழ ஆரம்பித்தனர்..!
.
இராமனின் மனைவி சொன்னாள்..
”குருஜி.! இவ்வளவு இளம் வயதில் என்னையும் என் மகனையும் நிர்க்கதியாக விட்டுப் போய் விட்டாரே..?
நான் என்ன செய்வேன்..? அவர் உயிருடன் வருவாரறென்றால் அதற்காக நான் எதுவும் செய்வேன்..!” என்றார்..!
.
குருஜி அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்த முயன்றார்.. ஆனால் அவர்கள் சோகம் குறையவில்லை...
.
கடைசியில் அவர் கேட்டார்
”ஒரு கோப்பை தண்ணீர் கொண்டு வாருங்கள்”
தண்ணீர் வந்தது. அவர் கோப்பையை உடலின் அருகில் வைத்துத் தானும் அமர்ந்தார்.
பின் சொன்னார்..
”இராமன் உயிருடன் திரும்பி வர வேண்டும் என நினைப்பவர், இந்தத் தண்ணீரை அருந்தலாம்.
இராமன் திரும்பி வருவார். ஆனால் அதற்குப் பதில் நீரை அருந்தியவர் மரணமடைவார்..!” என்றார்..!
.
அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் யாரும் முன் வரவில்லை.
அவர் இராமனின் தந்தையைக் கேட்டார்”
ஐயா.! நீங்கள் உங்கள் மகனுக்காக உங்கள் உயிரைக் கொடுக்க மாட்டீர்களா.?”
.
தந்தை சொன்னார்
”நான் இறந்து விட்டால் என் மனைவிக்கு யார் ஆதரவு.?அவளுக்காக நான் வாழ வேண்டும்”
.
தாயைக் கேட்க அவள் சொன்னாள்
”அடுத்த மாதம் என் மகளுக்குப் பேறுகாலம். நான் இறந்து விட்டால் அவளுக்கு யார் உதவுவது.?”
.
மனைவி சொன்னாள்
”நான் இறந்தால் என் பையனை யார் கவனித்து வளர்ப்பது.? அவனுக்காக நான் வாழ வேண்டும்”
.
குருஜி பையனைப் பார்த்துக்கேட்டார்
”குழந்தாய், உன் தந்தைக்காக நீ உயிர் விடுவாயா.?”
.
அவன் தாய் உடனே அவனை இழுத்து அணைத்துக் கொண்டு சொன்னாள்
”குருஜி, உங்களுக்கென்ன பைத்தியமா.?அவன் ஒரு குழந்தை. இனிமேல் தான் அவன் வாழ்க்கையே இருக்கிறது. அவனைப் போய் நீங்கள் கேட்கலாமா.?”
.
குருஜி சொன்னார்
”உங்கள் அனைவருக்கும் ஏதாவது கடமை, பொறுப்பு இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
அப்படியானால் இராமனுக்கு இங்கு வேலையில்லை என்றாகிறது. எனவே தான் கடவுள் அவனை எடுத்துக் கொண்டார் . இப்போது இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்” சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்..!
.
ஆம்..! பிறப்பையும் இறப்பையும் தீர்மானிப்பவன் அவன்.
எந்தப் பூவை எப்போது பறிக்க வேண்டும் என்பது அவன் எடுக்கும் முடிவு..!
.
நாம் யார் அதைக் குறை சொல்ல..? கேள்வி கேட்க..?
.
”உயிர் இருக்கும் வரையே அன்பு, பாசம் எல்லாம்”
“பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே..!!”.
எனவே வாழும் வரை புன்னகைக்கும் முகத்தோடு மகிழ்வாய் வாழ முயற்சிப்போம்.