Tuesday, 5 March 2019

மந்திர ரகசியம்

உச்சிஷ்ட கணபதி மந்திர ரகசியம்.

(சிறுவயதிலேயே நாராயண நம்பூதரிகளிடம் அதர்வண வேதம் பயிலும் போது , என் குருநாதர் எனக்கு சொன்ன உத்திஷ்ட கணபதி பற்றிய அபூர்வ  ரகசிய வழிபாட்டு முறைகள் , மந்திர ரகசியங்கள் என்பவற்றை பற்றி  இன்று முழுமையாக  பதிவிடுகிறேன்.)

உச்சிஷ்ட கணபதியை பற்றி கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது. ஜோதிட  மற்றும் யோக , மந்திர சாதனைகளில்  உலகில் இருப்பவர்கள் இவருடைய அருமை பெருமைகளை அறிந்து இருப்பார்கள் பல பேர் பூஜை செய்தும் வருகிறார்கள் .

உச்சிஷ்டம் என்றால் என்ன ?

உச்சிஷ்டம் மிச்சம் அல்லது எச்சம்  . இந்த உலகில் படைக்க பட்ட அனைத்தும் அழிகின்றன ஆனால் முழுமையாக அழிகின்றனவா என்றால் உண்மையில் இல்லை என்பது தான் உண்மை. அனைத்திலும் ஒன்று மிச்சம் இருக்கும் .

இந்த உலகம் அழியும் பொழுதும்  மூன்று வஸ்துகளாகிய  நிலம் நீர் நெருப்பு இந்த மூன்றில் ஒன்று மிச்சம் இருக்கும். இந்த மூன்றில் ஒன்றாலேயே உலகமும் அழியும் .  இப்படி ஆக்கலும் அழித்தலும் ஒன்றாய் நிற்கும் சக்தியே உச்சிஷ்டம்  அவரே உச்சிஷ்ட கணபதி என அதர்வ வேதம் கூறுகிறது. .

சிலர் இவரை உக்கிரமான  கணபதி என்பர் ஒரு சிலர்.  உச்சிஷ்டம் என்பதை உக்கிரம் என்று தவறாக புரிந்து கொண்டு அப்படி சொல்வர் . படைத்தல் காத்தல் அழித்தல் என்ற மூன்று வஸ்துக்களும் இணைந்த ஒரு சக்தியே உச்சிஷ்டம் .  மூன்றும் முடிவில் நிலை பெறுவது உச்சிஷ்டத்திலேயே .

சிவன் பிரம்மா விஷ்ணு என்ற மூன்று சக்தியின் முத்தொழிலையும் உடையவர் . மாந்த்ரீகம் மற்றும் ஜோதிடர்களுக்கு முக்காலத்தையும் உணர வைப்பவர்.
சரியாக ஜோதிடம் கற்காதவர்  கூட  உச்சிஷ்ட உபாசனை மூலம் நல்ல சரியான பலனை கூற முடியும் . மாந்த்ரீகத்தில்  இவரை கொண்டு செய்ய முடியாத காரியங்களே இல்லை .

உச்சிஷ்ட கணபதி மந்திரம்
******

இதில் 9 அக்ஷரம் 12 அக்ஷரம் 31 , 41 என பல அக்ஷர மந்திரங்கள் உண்டு.

எந்த மந்திரம் நமக்கு ஏற்றது என்பதை  நமது பூர்வ  புண்ணியமும் குருவின் ஆசியுமே முடிவு செய்யும். எல்லாரும் எல்லா அக்ஷரங்களையும் பயன்படுத்த முடியாது. உச்சிஷ்ட கணபதி உபாசனை  எல்லாராலும் செய்ய முடியாது அதற்கு என தனியாக   ஜாதக  அமைப்பு உண்டு ,  புதன் கேது தொடர்பு , கேது நிற்கும் இடம் பொறுத்து தான் உச்சிஷ்ட கணபதி உபாசனை சித்தி அளிக்கும். அதே போல சித்த உடல் அமைப்பு கொண்டவர்கள் அதாவது முழங்காலில் மச்சம் அமைப்பு கொண்டவர்கள்  உபாசனை செய்ய மிக விரைவில் சித்தி ஆகும் .

வேறு எவருக்கும் தலை கீழ் நின்றாலும் உச்சிஷ்ட கணபதி சித்தி ஆகாது. இந்த ஒரு பூஜை மட்டும் முழுக்க முழுக்க பூர்வ புண்ணிய பாக்கியத்தை பொறுத்தே அமையும். ஏன் என்றால் இது மிக விசேஷமானது. அஷ்ட கர்மங்களும் ஆடலாம் இதனால். மிக பெரிய வசியத்தை கொடுக்கும் .

உச்சிஷ்ட கணபதி உபாசகரை சுற்றி எந்நேரமும் மக்கள் சுற்றி கொண்டே இருப்பார்கள். இவர்கள் செய்யும் அனைத்து அஷ்டகர்மங்களை சித்தி ஆகும். முக்காலம் உணரும் தன்மை உண்டாகும்.

அதர்வ வேதத்தில் பின் வருமாறு கூற படுகிறது. உதாரணமாக சூதாட்டத்தில் ஈடுபடுவோர் இந்த உபாசனை செய்து மந்திரம் ஜெபித்து விளையாட வெற்றி கிடைக்கும்.  ஆற்று நீரை எடுத்து வந்து 37 முறை ஜெபித்து பின்பு அந்த நீரால் முகம் கழுவி செல்ல காண்போர் அனைவரும் வசியமாவார்.ஏதாவது தீராத கஷ்டம் வந்தால் வெள்ளெருக்கு  வேப்பம் குச்சி இதில் கணபதி பதுமை செய்து சிவப்பு சந்தனம் அல்லது செம்மலர் கொண்டு பூஜித்து அதை கள் பாத்திரத்தில் வைத்து பூமியில் ஒரு கையளவு கீழே புதைத்து அதன் மீது பகலும் இரவும் மந்திரம் ஜெபித்து வந்தால் ஒரு வாரத்தில் சகல பீடையும் ஒழியும் சத்ருக்கள் வசியமாவார். தன தான்யம் வந்து குவியும்.இவரை கொண்டு ஆகாத காரியமில்லை  மாந்த்ரீகருக்கு இவர் ஒன்றே போதும் இவரை வைத்தே சகல காரியங்களும் செய்யலாம். ஆனால் முன்பிறவியில் மாந்த்ரீக சித்த முறையில் அல்லது அந்த வம்சா வழியில் வந்தவருக்கு மட்டுமே இது சித்திக்கும்.

மேலும் உச்சிஷ்ட கணபதி மந்திரங்களை தகுந்த  பரீட்சை செய்த சீடர்களுக்கும் தனது வாரிசுகளுக்கும்  மட்டுமே கொடுக்க வேண்டும்  பிறருக்கு கொடுக்கலாகா என்ன கணேச கல்ப நூல் சொல்கிறது.
-----------------
திபெத்திய லாமாஸ் ( தாரா) தேவதை உச்சிஷ்ட கணபதியின் மடியில் இருப்பவர்

லாமாஸ் என்று திபெத்திய மொழியில் அழைக்கப்படும் தாரா தேவதை மிக அழகிய உருவத்தில் காணப்படுவார்  .

" தாரே துத்தாரே துரே ஸ்வாஹா "  என்பது இவருடைய மந்திரம் ஆகும் . இந்த ஒரு மந்திரம் அஷ்டகர்மங்களையும் செய்யும் ஆற்றல் உடையது ஆகும்.  மந்திரம் ஒன்று தான்  ஆனால் பல காரியங்களை செய்யும். மந்திர ஜெபம் செய்யும் பொழுது தாராவை எந்த நிறத்தில் தியானிக்கிறோமா அந்த காரியம் நடக்கும் .

வெள்ளை - வசியம்
பச்சை - ஆகர்ஷணம் பண வரவு
சிவப்பு - ஸ்தம்பனம்
மஞ்சள் - தனாகர்ஷணம் சொர்ணாகர்ஷணம்
சாம்பல் - உச்சாடனம்  பேய் பூத உச்சாடனம் எதிரி உச்சாடனம்
கருமை - பேய் , நோய்,பூத , மனித மாரணம் மற்றும் தீய காரியங்கள் செய்ய .

மேற்கண்ட படி நமக்கு எந்த காரியம் தேவையோ அந்த நிறத்தில் தாராவை தியானிக்க வேண்டும் . 

மறைக்கபட்ட உச்சிஷ்டகணபதி மந்திரம்:
************

ஒரு சொல் உச்சிஷ்ட கணபதி மந்திரம் ஓன்று உள்ளது. இதுமறைக்கபட்டது , வாமாச்சரம் மந்திரத்தின் ஒரு வகை. இதற்கு இயமம் நியமம் தேவை இல்லை. இந்த மந்திரத்தை எந்த நிலையிலும் எல்லா நேரத்திலும் உச்சரிக்கலாம்.

இதனுடைய பெருமை பயன்படுத்தி பார்த்தால்தான் தெரியும்.

காரிய தடை விலக,காரிய சித்தி,இஷ்டசித்தி கொடுக்க வல்ல அற்புதமான மந்திரம்.
பிரிந்த தம்பதிகள் ஓன்று சேர,மூலாதாரம் சரிவர இயங்க,அனைத்து ஐஸ்வரியமும், சுபிட்சமும் உண்டாக மனதிற்குள் ஜெபித்து வர குடும்ப வாழ்வில் அமைதி கிடக்கும். அனைத்து வல்லமைகளும் கிடைக்கும்.

ஓம் ஹஸ்தி பிசாச்சி லிகே சுவாகா - (om hasthi pesaCHee leekyey swaha) -
(உரு 16000)

அனைவருக்கும் அறிந்த உச்சிஷ்ட கணபதி மந்திரம்.
****************
ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய,ஹஸ்திமுகாய,லம்போதராய,உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரோம் ஹ்ரீம் கம் கே கே ஸ்வாஹா.

பூஜை பிரயோக முறை
*****

வெள்ளெருக்கு வேரில் செய்த விநாயகர் சிலையை அருகம்புல்லால்  மந்திரம் உச்சரிப்பு செய்ய செய்ய மந்திரம் உரு ஏறும்.  இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்து வர சகல சௌபாக்கியங்களும் ஏற்படும். நல்ல மணம் உள்ள மலர்களை கையில் வைத்து கொண்டு  உத்திஷ்ட கணபதி   மந்திரம் ஜெபித்து உச்சிஷ்ட கணபதியை வணங்க  அனைத்து வல்லமைகளும் உடனேயே  கிடைக்கும்.  உச்சிஷ்ட கணபதி சித்தி செய்தவர்கள் மட்டுமே இந்த பூஜை செய்ய வேண்டும் . சக்தி பூஜை நிச்சயம் செய்ய வேண்டும் .  ஏற்கனவே உச்சிஷ்ட கணபதி சித்தி செய்தவர்களிடம் மந்திரம் உபதேசம் பெற்று செய்து கொள்ளலாம்.  மாந்த்ரீக மற்றும் ஜோதிடர்களுக்கு மிக அருமையான பூஜை முறை இது. அஷ்ட கர்மங்கள் செய்யவும் ஜன வசியம் தொழில் வசியம் செய்யவும் உகந்தது. வேண்டிய காரியம் சீட்டில் எழுதி உச்சிஷ்ட கணபதி மற்றும் சக்தி தேவியை பூஜித்து வேண்டி கொள்ள எந்த காரியமானானாலும் நடக்கும். நியாய தர்மம் அறிந்து செயல்படவும் .
நன்றி   - சித்தர்களின் குரல் shiva shangar

இவரது வழிபாடு முழுக்க தாந்த்ரீகம் சார்ந்தது இவரை தந்த்ர கணபதி என்றும் சொல்வார்கள்.

புத்தகங்களில் படித்தும்,இணைய தளத்தில் தேடியும் கிடைத்த தகவல்களை மட்டுமே வைத்து இந்த கணபதியை வழிபடுவது சிறப்பல்ல.

வெளிப்படையாய் சொல்லக் கூடாத பல ரகசியப் பிரயோக முறைகளும்,ஜெப முறைகளும் இவரது வழிபாட்டில் உள்ளது.

முழுமையான பலன் பெற இந்த மந்த்ரத்தை ஜெபித்து புரஸ்சரணை செய்த   வழிபாட்டு ரகசியங்களை முழுமையாக அறிந்த ஒரு குருவிடம் தீட்சை பெற்ற பிறகே ஜெபித்து வருவது நன்மை தரும்.

வாழ்க வையகம் !! வாழ்கவளமுடன் !!

Friday, 1 March 2019

தன்மை

ஏற்றுக் கொள்ளும் தன்மையோடு இருத்தல்

ஏற்றுக் கொள்ளும் தன்மையோடு இருத்தல் என்பது மனமின்றி இருப்பது. எந்த எண்ணங்களும் இல்லாமல் வெற்றிடமாக இருக்கும்போது உன்னுடைய தன்னுணர்வு எதையும் பிடித்துக் கொள்ளாமல் இருக்கும்போது உனது கண்ணாடி பிரதிபலிக்க எதுவுமின்றி இருக்கும்போது இருப்பதுதான் ஏற்றுக் கொள்ளும் தன்மை. ஏற்றுக் கொள்ளும் தன்மை தெய்வீகத்திற்கான வாசல். மனதை விட்டு விட்டு இருத்தலாக இரு.

ஏற்றுக் கொள்ளும் தன்மை என்பது நீ சுமந்து கொண்டிருக்கும் குப்பைகளை வீசியெறிவது.

நான் ஏற்றுக் கொள்ளும் தன்மையோடு இரு என்று கூறும்போது திரும்பவும் ஒரு குழந்தை போல மாறி விடு என்றுதான் கூறுகிறேன்.

எங்கே மௌனமும் விழிப்புணர்வும் சந்திக்கிறதோ அங்கே ஏற்றுக் கொள்ளும் தன்மை இருக்கிறது.

ஏற்றுக் கொள்ளும் தன்மை என்பது மிக முக்கியமான ஆன்மீக குணமாகும்.

சத்யத்தை வாங்க முடியாது, அதை ஒருவர் ஏற்றுக் கொள்ள மட்டுமே முடியும்.

அமைதியின் இருப்பு நிலையே ஏற்றுக் கொள்ளும் தன்மையாகும்.

ஓஷோ

Monday, 11 February 2019

குழப்பம்

ஒருவன் என்னிடம் வந்து "நான் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன். நிம்மதியடைய எனக்கு வழி காட்டுங்கள்" என்று எனது கால்களில் விழுந்தான்.

நான், "எனது காலை விடு. உன்னுடைய நிம்மதிக்கும் என்னுடைய காலுக்கும் என்ன சம்மந்தம்? யாரும் கேள்விப்பட்டதே இல்லை. எவ்வளவு நேரம் என் கால்களில் விழுந்து கிடந்தாலும் அங்கே நீ நிம்மதியைக் காணப் போவதில்லை. என்னுடைய கால்கள் உனக்கு என்ன தீங்கு செய்தன? உன்னுடைய இந்த நிலைக்கு என்னுடைய கால்களைக் குற்றம் சொல்லக்கூடாது. நீ குழப்பத்தில் இருப்பதற்கு என்னுடைய கால்கள் காரணமா?" என்றேன்.

அவன் அதிர்ச்சியைடைந்தான். "இப்படித்தான் நீங்கள் பேசுவீர்களா? நான் ரிஷிகேஷ் சென்றேன், அங்கும் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை, அரவிந்தர் ஆசிரமத்திற்குச் சென்றேன், அங்கும் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை, அங்கிருந்து திருவண்ணாமலை சென்று ரமணர் ஆசிரமம் சென்றேன், அங்கும் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை, எங்கும் எனக்கு நிம்மதியில்லை. எல்லா இடத்திலும் ஆன்மீகம் என்ற பெயரில் போலியாக நடிக்கிறார்கள். ஒருவர் எனக்கு உங்களிடம் செல்லுமாறு கூறினார். எனவே நான் இங்கு வந்தேன்." என்றான்.

நான், "உடனே இங்கிருந்து சென்று விடு. இல்லாவிட்டால் நீ வெளியே சென்று இங்கும் உனக்கு நிம்மதி கிடைக்கவில்லை என்று புரளி பரப்பிக் கொண்டிருப்பாய்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், முதலில் நீ குழப்பமடைந்தபோது யாருடைய ஆசிரமத்திற்குச் சென்றாய்? குழப்பமடைவதற்கு எந்த குருவின் உதவியை நாடினாய்? நீ குழப்பமடைவதற்கு யார் உனக்கு பயிற்சி கொடுத்தார்கள்? என்னிடம் வந்தாயா? யாரிடம் சென்று "குருவே நான் குழப்பமடைய விரும்புகிறேன். எனக்கு வழி காட்டுங்கள்" என்று கேட்டாய்?

நீயே குழப்பமடைந்து கொண்டாய், அப்போது உனக்கு நீயே போதுமானதாய் இருந்தாய்! இப்போது நீ நிம்மதியடைய விரும்புகிறாய். இங்கே வந்து மற்றவர்களை குற்றம் சொல்கிறாய்.

நீ நிம்மதியடைய வில்லையென்றால் நான் தான் பொறுப்பா? நான் உன்னை குழப்பமடையச் செய்திருந்தால் அப்போது நான் பொறுப்பு. இதற்கு முன் வந்து என்னைக் கேட்டாயா?" என்றேன்.

அவன், "இல்லை, நான் உங்களைக் கேட்கவில்லை" என்றான்.

"பின் யாரிடம் சென்று கேட்டாய்?" என்றேன்.

"இல்லை, நான் யாரிடமும் செல்லவில்லை" என்று பதில் கூறினான்.

"அப்படியென்றால் நீ குழப்பமாக இருப்பதற்கு நீயே காரணம் என்பதை புரிந்துகொள்ள முயற்சி செய். நீ குழப்பமடைய எது காரணம், எப்படி குழப்பமடைந்தாய் என கண்டுபிடிக்க முயற்சி செய். அதைச் செய்வதை நிறுத்து, நீ அமைதியடைவாய்" என்றேன்.

நிம்மதியடைய வழி ஏதுமில்லை. ஆனால் குழப்பமடைய வழிகள் உண்டு.

குழப்பம் தரக்கூடியதை செய்யாமல் இருந்தால் அவன் நிம்மதியாக இருப்பான்.

விடுதலையடைய வழி கிடையாது. ஆனால் சிக்கிக் கொள்ள ஆயிரம் வழிகள் உண்டு. அடிமையாக வழிமுறைகள் உண்டு. அதில் விழாமல் இருந்தால் அவன் சுதந்திரமாக இருப்பான்.

--ஓஷோ--

Saturday, 9 February 2019

பிராத்தனை

*காலை எழுந்தவுடன் மனதில் இந்த வரிகளை சொல்லுங்கள். நீங்கள் விரும்பியது கிடைக்கும்....!*

*எனது தேவைகளை நிறைவேற்ற கூடிய பணம் என்னிடம் நிறைய இருக்கிறது.*

*நான் தினமும் தியானம் செய்கிறேன்.*

*எனது எண்ணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை.*

*என் நோய் எதிர்ப்பு சக்தி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.*

*நான் எப்பொழுதும் சரியான இடத்தில் சரியான நேரத்தில் சரியான காரியத்தில் ஈடுபட்டிருக்கிறேன்.*

*பிரபஞ்சம் என் மீது அளவற்ற வளங்களை பொழிகிறது.*

*என் வாழ்க்கை மிக அழகானது*.

*எனது சக்தியின் அளவு எப்பொழுதும் மிக சிறப்பாக இருக்கிறது.*

*எனது எண்ணம்,வாக்கு & செயல் எப்பொழுதும் ஒருங்கிணைந்து இருக்கின்றன.*

*நான் எப்பொழுதும் புன்னகையுடன் இருக்கிறேன்.*

*என்னால் வாழ்வில் எதையும் சுலபமாக எதிர்கொள்ள முடியும்.*

*நான் எப்பொழுதும் நல்ல விஷயங்களையே நாடுகிறேன்.*

*என் இலட்சியங்கள் நிறைவேறியதற்கு பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்கிறேன்.*

*நல்லவர்களை மட்டுமே என் வாழ்வில் ஈர்க்கிறேன்.*

*நான் வளமையான உணர்வுடன் வாழ்கிறேன்.*

*என்னைப் பற்றி சிறப்பாக உணர்கிறேன்.*

*என்னை நான் மதிக்கிறேன்.*

*எனக்குள் அமைதியை உணர்கிறேன்.*

*என் சமயோஜிதம் பிரமாதமாக உள்ளது*.

*பணம் ஒரு சக்தி நான் அதை ஈர்க்கிறேன்.*

*வாழ்வில் எனது பங்கை புரிந்து செயல்படுகிறேன்*.

*நான் மிகவும் சக்தி வாய்ந்த மனிதன்.*

*என் எண்ணங்கள் எப்பொழுதும் நான் விரும்பிய பாதையிலேயே செல்கின்றன.*

*அழகிய நிறங்களும் நல்ல சக்தியும் என் ஆராவை நிறைக்கின்றன.*

*என் வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் ரசித்து அனுபவிக்கிறேன்.*

*என் இலட்சியங்கள் சுலபமாக நிறைவேறுகின்றன.*

*நான் நிகழ்காலத்தில் வாழ்கிறேன்.*

*வாழ்வில் எனக்கு கிடைத்த விஷயங்களுக்காக நான் நன்றி சொல்கிறேன்.*

*என் மனதில் தன்னம்பிக்கை நிறைந்திருக்கிறது.*

*நான் முழுமையான ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்.*

*நான் பணத்தை ஒரு காந்தம் போல வசீகரிக்கிறேன்.*

*நான் நேரத்தை மிகவும் திறமையாக பயன்படுத்துகிறேன்.*

*நான் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறேன்.*

*எனது எண்ணங்களில் சுதந்திரத்தை உணர்கிறேன்.*

*என்னை நான் நேசிக்கிறேன்.*

*எல்லோருக்கும் என்னை பிடிக்கிறது.*

*எனக்குள் ஆனந்தமும் நிம்மதியும் உணர்கிறேன்.*

*நான் சாதிக்கப் பிறந்தவன்.*

*என் மனம் தெளிவாக இருக்கிறது.*

*என் வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் ரசித்து அனுபவிக்கிறேன்.*

*வாழ்வில் நான் தாண்டி வரும் இடர்பாடுகள் எனக்கு மேலும் சக்தி அளிக்கின்றன.*

*அன்பை பெறவும் தரவும் நான் தயாராக இருக்கிறேன்.*

*எனது வாழ்வை சிறப்பாக்க இந்த பிரபஞ்சமே செயல்படுகிறது.*

*என் உடலும் மனமும் ஒன்றை ஒன்று வலுப்படுத்துகின்றன.*

*என் மனம் அமைதியாக இருக்கும் பொழுது இலட்சியங்களை நிறைவேற்றுவது சுலபமாக இருக்கிறது.*

*தெய்வீக சக்தி எப்பொழுதும் என்னை சூழ்ந்து பாதுகாப்பு அளிக்கிறது.*

*என் ஆராவில் உள்ள நல்ல சக்தி அனைவரையும் சாந்தப்படுத்தி நிம்மதி அளிக்கிறது.*

*இந்த நொடி என்னுடையது. அதை நான் மதிப்புள்ளதாக மாற்றுகிறேன்*.

*என் உடல் கச்சிதமாகவும் மனம் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கின்றன.*

*என் ஆழ்மனதின் சக்தியால் வாழ்வில் அற்புதங்களை உருவாக்குகிறேன்.*

*நான் எங்கு சென்றாலும் நல்ல சக்தியை பரவச்செய்கிறேன்.*

*எனக்கு எது நல்லதோ அதையே பிரபஞ்சம் தருகிறது.*

*என்னைச் சுற்றியுள்ள ஒவ்வொரு உயிருக்காகவும் பிரபஞ்சத்திற்கு நன்றி செலுத்துகிறேன்.*

*என் உடலில் பஞ்ச பூதங்களும் சம நிலையில் இருக்கின்றன.*

*என் வாழ்வில் சௌபாக்கியங்கள் நிறைந்திருக்கின்றன.*

Sunday, 3 February 2019

ஆற்றல்

*Energy - ஆற்றல் (சக்தி)*
ஆற்றல், யாராலும் காணமுடியாத ஆனால் அனைவராலும் உணரக்கூடிய ஒன்று. அனைத்து படைப்புகளும் ஆற்றலில் இருந்து உருவானவை தான். நம் கண்களால் காணக்கூடிய அனைத்து உயிரினங்களும், அத்தனை படைப்புகளும், அத்தனை பொருட்களும், இயற்கையில் விளைந்திருக்கும் கடல், ஆறு, மலை, நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு, மற்றும் நம் கண்களால் காண முடியாத, உணர்வுகளாலும் உணர முடியாத, பல கோடி படைப்புகளும் அந்த ஆற்றலில் இருந்து உருவானவை தான்.

*"அனைத்துமே ஆற்றல்தான், அதுவே அனைத்துமாக இருக்கிறது. அது நீங்கள் தேடுகின்றவற்றின் அலைகளை இணைக்கிறது. உங்களால் மாற்ற முடியாது ஆனால் உண்மைகளை அடைய முடியும். வேறு வழிகள் கிடையாது. இது ஒரு தத்துவமில்லை, இது இயற்பியல் ஆகும்".* -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

இந்த ஆற்றல் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. பிராணன், ரெய்கி, கீ, சீ, பிரபஞ்ச சக்தி, வைட்டல் எனெர்ஜி, இறை ஆற்றல், குட்ரத், என ஒவ்வொரு மொழியிலும், சமுதாயத்திலும், நம்பிக்கையிலும், வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றலை பெயர்களைக் கொண்டு வெவ்வேறான ஆற்றல் என்று நாம் கருதி கொண்டிருந்தாலும் அடிப்படையில் அவை அனைத்துமே ஒன்றுதான்.

இந்த ஆற்றலுக்கு அடிப்படையில் பல தன்மைகள் உள்ளன. உலகுக்கு வெளியே வெளியில் இயங்கிக் கொண்டிருப்பது ஒரு வகையான ஆற்றல். இந்த உலகத்தை இயக்கிக் கொண்டிருப்பதும் பராமரித்துக் கொண்டு இருப்பதும் ஒரு வகையான ஆற்றல். உயிரினங்களை இயக்கி கொண்டிருப்பது ஒரு வகையான ஆற்றல். இயற்கையை பராமரிப்பதும் பாதுகாப்பதும் ஒரு வகையான ஆற்றல். உயிரில்லாத ஜடப் பொருட்களில் இயங்கிக் கொண்டிருந்தது ஒரு வகையான ஆற்றல்.

வாகனங்களை இயக்குவது, மின்சார சாதனங்களை இயக்குவது என இந்த ஆற்றல். இந்த பிரபஞ்சத்தின் எல்லா நிலைகளிலும் செயல் புரிகிறது. இந்த பிரபஞ்சத்தின் தோற்றம் முதல், ஒரு சிறு புல்லின் வளர்ச்சி வரையில். மழை பெய்வது முதல் சுனாமியை உருவாக்குவது வரையில் இந்த ஆற்றல் பல பரிமாணங்களை எடுக்கிறது.

*"இந்த பிரபஞ்சத்தின் இரகசியங்களை அறிய வேண்டுமென்றால், ஆற்றல், அலைகள், மற்றும் அதிர்வுகளை ஆராயுங்கள்" - நிகோலா டெஸ்லா*

ஒரே தண்ணீர், டீ, காபி, குளிர்பானம், மழை நீர், சாக்கடை நீர், கடல், ஆறு, குட்டை, என அதன் உபயோகத்துக்கும், தன்மைக்கும், ஏற்ப பல்வேறு பெயர்களில் அழைக்கபடுவதைப் போல். இந்த ஆற்றலும் அதன் தன்மைக்கும் உபயோகத்துக்கும், ஆற்றலுக்கும் ஏற்ப பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஆனால் அடிப்படையில் அனைத்துமே ஒன்றுதான்.

*ஆற்றலின் வித்தியாசங்கள்*
இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவி இருப்பது ஒரே ஆற்றல்தான். ஆனால் அதன் முழு ஆற்றலையும் உபயோகத்தையும் சாதாரண மனிதனின் அறிவைக் கொண்டு புரிந்துக் கொள்ள முடியாது. இந்த ஆற்றல் நன்மையானதாகவும் தீமையானதாகவும் இரு வெவ்வேறு பிரிவுகளாக பிரிக்கலாம். இந்த பிரிவினை அதன் தன்மைகளை கொண்டு மட்டுமே பிரிக்கப் பட்டுள்ளது. அதன் குணத்தினால் அல்ல.

இந்த பிரிவினையானது மனிதனின் வலது கையையும் இடது கையையும் போன்றது. வேற்றுமைகள் இருந்தாலும் ஒரே உடலின் அங்கம்தான் அவை. ஒரே நெருப்பை சமைப்பதற்கும் வீட்டை கொழுத்துவதற்கும் பயன்படுத்துவதை போல. அது நெருப்பின் தவறல்ல, அதை தவறாக பயன்படுத்தும் மனிதர்களின் தவறு. இந்த ஆற்றல் இடத்துக்கும், சூழ்நிலைக்கும், தேவைக்கும், நோக்கத்துக்கும், ஏற்ப தனது தன்மையை மாற்றிக் கொள்ள கூடியது.

*இந்த ஆற்றல் நன்மையான நோக்கத்துடன் பயன் படுத்தும் போது நல்ல விளைவுகளையும், தீய நோக்கத்துடன் பயன்படுத்தும் போது தீய விளைவுகளையும் உண்டாக்குகிறது. மனிதர்களுக்கு வறுமை, நோய், துன்பம் போன்றவை உருவாக காரணமாக இருப்பதும். அவை நீங்கி செல்வ செழிப்பு, ஆரோக்கியம், மகிழ்ச்சி போன்றவை உருவாக காரணமாக இருப்பதும் இதே ஆற்றல்தான். மனிதர்களை பேயாக ஆட்டிப்படைப்பதும், அந்த பேயை விரட்டுவதும் ஒரே ஆற்றல் தான். அதனால்தான் பெரியவர்கள் நடப்பது நல்லதோ கெட்டதோ  எல்லாம் அவன் செயல் என்று கூறுகிறார்கள்.*

*நல்ல ஆற்றலின் விளைவுகள்*
ஆரோக்கியம்
மன அமைதி
சுறுசுறுப்பு
மகிழ்ச்சி
புத்தி கூர்மை
நல்ல உறவுகள்

*தீய ஆற்றலின் விளைவுகள்*
நோய் நொடிகள்
பதட்டம்
கவலை
வறுமை
முட்டால் தனம்
தீய உறவுகள்

👑

கதை

*குட்டி கதை - கனவு*

ஒரு அரசனுக்கு அவனுடைய எல்லா பற்களும் விழுந்து பொக்கை வாயுடன் இருப்பதாக ஒரு கனவு வந்தது.

இதனால் காலையில் பீதியுடன் எழுந்த அவன், அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று பயந்துபோய் முதல் வேலையாக ஒரு நாடி ஜோதிடரை வரவழைத்தான்.

அந்த நாடி ஜோதிடர் தனது ஓலைச்சுவடியை எடுத்து, அதில் பொக்கை வாய் கனவு பற்றி விளக்கியிருந்த ஒரு ஓலையை வாசித்துவிட்டு, அரசே! உங்கள் மனைவி, குழந்தைகள், சொந்த பந்தங்கள் எல்லாம் உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள் என்று பலன் சொன்னார். உடனே அந்த அரசன் மிகவும் கோபமுற்று, இவனைப் பிடித்து சிறையில் தள்ளுங்கள்! என்று உத்தரவிட்டான்.

அதன் பிறகும் மன்னனின் மனம் சமாதானமடையவில்லை. இன்னொரு நாடி ஜோதிடரை வரவழைத்து, அவரிடம் தன் பொக்கை வாய் கனவின் அர்த்தம் என்ன என்று வினவினான். அந்த ஜோதிடரும் அதே மாதிரியான ஓலைச்சுவடியைத்தான் வைத்திருந்தார். அவரும் அதைப் பார்த்துவிட்டு, மன்னா! உங்கள் சொந்த, பந்தங்களையெல்லாம்விட நீங்கள் நீண்ட காலம் நீடூடி வாழ்வீர்கள் என்று பலன் கூறினார்.

இதனால் மனம் குளிர்ந்த அரசன், அந்த ஜோதிடருக்கு தகுந்த பரிசுகள் வழங்கி அனுப்பி வைத்தான். இருவரும் அதே ஓலையைத்தான் படித்தார்கள், அதே விஷயத்தைத்தான் சொன்னார்கள்.

ஒருவர் எல்லோரும் இறந்துவிடுவார்கள் என்றார், இன்னொருவர் எல்லோரையும் கடந்து வாழ்வீர்கள் என்றார், அவ்வளவுதான் வித்தியாசம்.

பேசும் வார்த்தைகளை கவனமுடன் உபயோகித்தால் வாழ்வில் ஜெயிக்கலாம்.! நாம் பேசும் வார்த்தைகள் மற்றவரை சந்தோஷப்படுத்த வேண்டுமே தவிர எந்த வித மனகசப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

*வாழ்க வளமுடன்.......*