Tuesday 6 May 2014

ஆழ்மன சக்தியின் வெளிப்பாடுகள்

நம்மில் ஒவ்வொருவரும் ஒரு சில சந்தர்ப்பங்களில் ஆழ்மனதில் அற்புத சக்தியை நம் வாழ்க்கையில் கண்டிருப்போம். நாம் ஒருவரைப் பற்றி எண்ணி அவர் நேரில் வருவதைக் கண்டிருக்கலாம் அல்லது அவரிடமிருந்து phone call வந்திருக்கலாம். ஒருவரிடம் ஒன்று சொல்லவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் அதேவேளையில் அவரே அந்தப் பேச்சை நம்மிடம் எடுத்திருக்கலாம். Phone call வந்தவுடன் இவராகத்தான் இருக்கும் என எண்ணி receiver ஐ எடுத்தால் பேசுவது நினைத்த அதே நபராக இருந்திருக்கலாம். ஆனால் அந்த விடயங்கள் மிகச் சாதாரணமானவையாக இருப்பதாலும், நம்மை ஆழ்மன சக்தியாளராக நினைக்காததாலும் அவற்றைப் பெரிதாக நினைப்பதில்லை.
ஆழ்மன சக்தியின் வெளிப்பாடுகள் பல தரப்பட்டவை. அவையாவன;
  •   Psycho kinesis
                       இது வெளிப்பொருட்கள் மீது இருக்கும் கட்டுப்பாடு, பொருட்களை பார்வையிலேயே நகர்த்துவது, அசைப்பது போன்றவை.
                        நினாகுலாகினா என்ற ரஷ்யப் பெண்மணிக்கு இந்த சக்தி இருந்தது.
.

  •   Extra sensory Perception (ESP)
                        இது நம் ஐம்புலன்களின் துணையில்லாமல் தகவல்கள் அறியமுடிவது ஆகும்.
                        உதாரணமாக; Cards ஐ வைத்து Josep pernks  செய்த ஆராய்ச்சிகள் அவர்  எடுத்த  cards  எது  என்பதை  பார்க்காமலேயே  சொல்ல  முடிந்தது.

  •  Telepathy
              இது ஒரு மனதிலிருந்து இன்னொரு மனதிற்கு செய்திகளை அனுப்புவது ஆகும். இது ஆழ்மன ஆராய்ச்சி  வகையில் சேர்க்கப்படுகிறது. மிகவும் நெருக்கமான மனிதர்களுக்கு இடையில் இந்த சக்தியை இயல்பாகவே காணலாம். தாய்-குழந்தை, கணவன்-மனைவி, நெருங்கிய நண்பர்களிடையே சொல்லாமலேயே உணரும் சக்தி இருப்பதை நம்மில் காணமுடியும். வளர்க்கும் செல்லப் பிராணிகளுடன் கூட சில மனிதர்களுக்கு இந்த சக்தி இருக்கும்.


  •   Claivoyance or Remote viewing
          இது வெகுதொலைவில் உள்ளதை காணக்கூடிய சக்தி ஆகும். ஆபிரிக்கக்  காடுகளில் அமெரிக்க விமானம் விழுந்து கிடந்த இடத்தை அட்ச ரேகை, தீர்க்கரேகையோடு ஒரு பெண்மணி சொன்னதை உதாரணமாகக் கொள்ளலாம்.
           ஆவிகளுடன் பேசமுடிவதையும் ஆராய்ச்சியாளர்கள் சிலர் இந்தவகையிலேயே சேர்க்கிறார்கள்.


  •  Psychometry
                         இது ஒரு பொருளை வைத்து அதன் சம்பந்தப்பட்ட விடயங்களையும் மனிதர்களையும் அறியமுடிவதாகும். இதற்கு உதாரணமாக Petter heerkoes என்ற டச்சுக்காரரை சொல்லலாம்.   இவர் 1943ல் கீழே விழுந்து மண்டை உடைந்ததில் இந்தச் சக்தியை எதேச்சையாகப் பெற்றார். இவர் கொலை, கொள்ளை நடந்த இடங்களில் கிடைக்கும்  தடயப் பொருட்களினைக் கொண்டு குற்றவாளிகளை விபரிப்பதில் வல்லவராகயிருந்தார்.   

  •   Precognition
                         இது நடப்பதை முன்கூட்டியே அறியும் சக்தியாகும். உதாரணமாக Chrittus என்ற ஞானி பல விபத்துக்களை நடப்பதற்கு முன்கூட்டியேசொன்னார்.

  •   Post cognition
                  இது என்ன நடந்தது என்பதை நடந்த பின்னர் அறிய முடிந்த சக்தியாகும். சில வெளிநாடுகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஆழ்மன சக்தியாளர்களின் இந்த சக்தியைக் காவல்துறை அதிகாரிகள் இரகசியமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.


  •   Astrol projection or out of Body experience (OBE)
                  உடலை விட்டு வெளியேறி பலவற்றையும் காணும் சக்தியாகும். இந்தசக்தியை செத்துப் பிழைத்தவர்கள் என்று சொல்லப்படும் மரணம் வரை சென்று சில வினாடிகள் கழித்து உயிர்பெற்ற சிலர் உணர்ந்திருக்கிறார்கள். இது குறித்து Dr. Charls dard ஆராய்ச்சி செய்திருக்கிறார். 1967ல் அவர் செய்த ஒரு ஆராய்ச்சியில் படுத்த நிலையில் உள்ள ஒரு ஆழ்மன சக்தியாளர் அடுத்த அறையில் தரையில் எழுதிவைக்கப்பட்டிருந்த 5 இலக்க எண் என்ன என்பதை சரியாகச் சொன்னதாகத் தெரிவித்துள்ளார்.

  •   Psychic Healing or Spiritual Healing
                  இது மருந்துகளின் உதவியின்றி நோய்களைக் குணப்படுத்தும் சக்தி ஆகும். இந்த குணப்படுத்தும் சக்தியைப் பலர் ஆழ்மன சக்திவகையில் சேர்ப்பதில்லை. இது தெய்வீக சக்தி அல்லது மாற்று சிகிச்சை சக்தி வகைகளிலே சேர்க்கின்றனர். ஆனாலும் இது ஆழ்மன சக்திகளில் சேர்ப்பது மிகப் பொருத்தமானது.
ஆழ்மன சக்திகள் முழுவதையும் இந்த 9 வகைகளில் அடக்கிவிட முடியாது என்ற போதிலும் இவையே மிக முக்கியமானவை எனலாம்.