Saturday 3 May 2014

ஆல்பா நிலை


இந்த ஆல்பா நிலை தியானத்தின்போது நாம் எது குறித்து சிந்திக்கின்றோமோ அது தொடர்பான மனப்படங்களை, காட்சிகளாக காண வேண்டும்.
மனித உடல் அழியக்கூடியது, ஆன்மா அழிவில்லாத்து என்பது போல மனித மனதில் உருவாகும் எண்ணங்கள் அழிவதில்லை. எப்படி ஒரு காந்த ஒலி, ஒளி (Audio & Video) நாடாக்களில் சப்தங்களும் காட்சிகளும் பதியவைத்து வைத்து வேண்டும் பொழுது அவற்றை இயக்கிப் பார்க்க முடிகிறதோ அதுபோல இதுவரை வாழ்ந்த இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிற எல்லாவித மனிதர்களின் எண்ணங்களும் வான் காந்தத்தில் (Universal Magnetism) பதிய வைத்து பாதுகாக்கப்படுகிறது. வான்காந்தம் ஆற்றல் மற்றும் அறிவின் நிலைக்களன்.
பிரபஞ்ச அறிவிலிருந்து தேவையான செய்திகளை பெறமுடியும் என்று பெஞ்சமின் ஃபிராங்கிளின் போன்ற அறிஞர்கள் நம்பியிருக்கிறார்கள். எடிசன் போன்ற அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் பிரபஞ்ச அறிவிலிருந்து செய்திகளை பெற்றுமிருக்கிறார்கள்.
ஆழ்மனம் நம்மை இந்தப் பிரபஞ்ச மனத்தோடு இணைக்கும் நடுநிலை மனம் நாம் விரும்பும் எதுவாக இருந்தாலும் நாம் எந்த நிலையிலிருந்தாலும் பெற்றுத்தரும் ஆற்றல் வாய்ந்த பொக்கிஷம். இதற்காக பெஞ்சமின் ஃபிராங்கிளின் ஒரு உத்தியை பின்பற்றியிருக்கிறார்.
பெஞ்சமின் ஃபிராங்கிளின் கையில் ஒரு கூழாங்கலை வைத்துக் கொண்டு ஒரு சாய்வு நாற்காலியின் கைப்பிடியின் வெளியே கை இருக்குமாறு வைத்துக் தளர்வாக, ஓய்வாக்க் கண்களை மூடி அமர்ந்து கொண்டு உறங்குவதுபோல் இருப்பாராம். உறக்கம் வருகிறபோது கைப்பிடி தளரந்து கூழாங்கல் தரையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு உலோகத் தகட்டின் மீது விழுந்து ஒலி உண்டாக்கும். அந்த நிலை தூங்காமல் தூங்கும் அறிதுயில் என்கிற ஆல்பா தியான நிலை.
இந்த நிலையில் தன்னுடைய பிரச்சனைகள் குறித்து சிந்திக்கும்போது மின்னல் கீற்றென சில சிந்தனைகள், விடைகள், தீர்வுகள் உண்டாகும். அவை பிரபஞ்ச பதிவிலிரந்து கிடைக்கும் செய்திகள். இந்த வகையான செயல்பாட்டிற்கு பின்னர் நாம் இதை மறந்து இருக்கும்பொழுது சில நேரங்களில் திடீரென்று சில சிந்தனைகளை மனம் உருவாக்கித் தரும். மனதை கசக்கிப் பிழிவதை விட (Brain Storminng) வலிந்து சிந்திப்பதை விட ஓய்வாக மகிழ்ச்சியாக இருக்கும்பொழுதே கற்பனை ஊற்றெடுக்கும்.

கற்பனை, படைப்பாற்றல், புதியன உருவாக்கல் என்பது மாற்றி யோசிக்கற ஒருமுறை. நேரடி சிந்தனை (Straight Thinking) கணக்குப்போடுவது போல் பக்கவாட்டுச் சிந்தை (Lateral Thinking) என்பதுதான் புதிய சிந்தனை, மாறுபட்ட சிந்தனை, கற்பனை.
இப்படி மாற்றி யோசிக்கிற Lateral Thinking இல்லையென்றாலும் Permutation Combination என்கிற முறையில் புதியன உருவாக்க எளிய வழிமுறையில் முயலலாம். பூச்சியம் முதல் ஒன்பது வரை பத்து இலக்கங்களை வைத்துக் கொண்டு எல்லையற்ற (Infinit Numbers) புதிய எண்களை உருவாக்குவது போல எல்லா வகையிலும் மாற்றி மாற்றி இணைத்து புதியன படைப்பது எளிது. மனமும் முயற்சியுமே தேவை.