Friday 13 March 2015

மனதிற்கு இடம் கொடுபவர்களே

ஓஷோ கூறிய கதை:
அந்த ஊரில் கடுமையான உழைப்பாளி ஒருவன் வசித்துவந்தான் அவன் அந்த ஆண்டு முழுவதும் தான் சம்பாரித்த பணத்தை குதிரை பந்தயத்தில் கட்டுவான் ஆனால் ஏமாந்து போவான். இப்படி 10 ஆண்டுகளாக ஒரு தடவை கூட அவன் ஜெயக்கவில்லை. இந்த ஆண்டும் அவன் ஏதோ ஒரு நம்பிக்கையில் பணம் கட்டினான் இந்த முறையும் பட்டை நாம்மம் தான், இதுவரை அவன் சேர்த்த எல்லா பொருளும் போய்விட்டது அவன் பிச்சைகாரன் ஆகிவிட்டான் இதை நினைத்து அழுது புரண்டான். தற்கொலை செய்து கொள்ள புறபட்டான். மலை உச்சியில் நின்று கொண்டு கிழே பயத்துடன் பார்த்தான் "ஆபத்து நேரத்தில் மனம் அவனுக்கு நின்றுவிட்டது". "ஆம் மனதை தண்டி ஒரு விஷயம் நடக்கும் போது மனதிற்கு என்ன வேலை" மனம் நின்ற போது அவன் உள் இருக்கும் ஒரு மெல்லிய குரல் அவனை தடுத்தது, அந்த குரல் எப்போதும் ஒலித்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் கேட்க மனம் விடுவதில்லை. அந்த மெல்லிய குரல் அவனிடம் இன்னும் ஒரு முறை பந்தயத்தில் விளையாடுவோம் இந்த முறை கண்டிப்பாக ஜெயிப்போம் என்றது. அவனும் அதை ஏற்று கடன் வாங்கி குதிரை பந்தயத்திற்கு சென்றான். மறுபடியும் அந்த மெல்லிய குரல் "No.12" ஆம் எண் குதிரை மீது கட்டசொன்னது அவனும் கட்டினான் அது ஜெயித்தது அவன் பலமடங்கு லாபம் பார்த்தான் கோடீஸ்வரன் ஆகிவிட்டான். இப்பொழுது ஆசை உள்ளே புகுந்து விட்டது அந்த மெல்லிய குரல் நாம் வென்றுவிட்டோம் வா செல்வோம் என்றது. மறுபடியும் மனம் உள்ளே புகுந்து அவனிடம் நமக்கு நல்ல நேரம் வந்துவிட்டது உலகத்திலே பெரிய கோடீஸ்வரன் ஆகபோறோம் என்று மற்ற குதிரைகள் மீது கட்டசொன்னது. இந்த நேரத்தில் மெல்லிய குரல் எப்படி கேட்கும்? அவன் மனம் சொன்னார் போல் கட்டினான். கட்டியதெல்லாம் தோற்க ஆரம்பித்தது. அவன் மறுபடியும் பிச்சைக்காரன் ஆகிவிட்டான். இப்பொழுது என்ன செய்வது என்று கேட்டான் "மனம், வேறு என்ன மலை உச்சியை நோக்கி கிளம்பு தற்கொலைக்கு நேரமாகி விட்டது".
மனதிற்கு இடம் கொடுபவர்களே சற்று நேரம் இதை பார்த்து இளைபாருங்கள்