Friday 1 September 2017

நீங்கள் விரும்பக்கூடிய பொருள்கள்

💜 நம் வாழ்க்கை முழுவதும் நாம் நேசித்துக் கொண்டிருப்பதை யாரை...???

ஒரு பெண்ணிடம் நீங்கள் காதால் வசப்படும்போது,

அந்தப் பெண்ணை நீங்கள் உண்மையிலேயே காதலிக்கிறீர்களா....???

அல்லது மிகச் சிறந்த ஒன்றை,

மிகப் பெரிய ஒன்றை அடைவதற்காக

அந்தப் பெண்ணை ஒரு ஜன்னலாக பயன்படுத்துகிறீர்களா.

ஒரு நண்பனை நீங்கள் நேசிக்கிறீர்கள்.

அப்பாற்பட்ட ஏதோ ஒன்றின் தரிசனத்தை நீங்கள் பார்த்திருக்கவேண்டும்.

எப்போதெல்லாம் நீங்கள் காதலிக்கிறீர்களோ....


அப்போதெல்லாம் கடவுளை காதலிக்கிறீர்கள் .

ஒரு ஆணையோ அல்லது ஒரு பெண்ணையோ காதலிக்கிறீர்கள்.

ஆனால் அவையெல்லாம் ஜன்னல்கள் தான்.

அதனால்தான் காதால் விரக்தியை உண்டாக்குகிறது.

இது எப்படி என்றால்......

உங்கள் ஜன்னல் வழியாக சூரியோதயத்தைப் பார்க்கும்போது

அந்த ஜன்னல் சட்டத்தின் மீது காதால் கொள்வதைப் போன்றது.

உடனடியாகவோ அல்லாதது பிறகோ நீங்கள் ஏமாற்றத்திற்கு ஆளாகி சோகத்தில் மூழ்குகிறீர்கள்.

ஏனென்றால் அந்த ஜன்னலின் சட்டம் ஒரு சூரியோதயம் அல்ல என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.

அந்த அழகு ஜன்னலுக்கு சொந்தமானது அல்ல,

அழகினை ரசிப்பதற்கு அந்த ஜன்னல் வெறுமனே அனுமதிக்கிறது.

அவ்வளவுதான்.

நீங்கள் அந்த ஜன்னல் சட்டத்தைப் பற்றிக் கொண்டு விடுகிறீர்கள்.

ஒரு குறிப்பட்ட காலத்தில் உங்களுக்கு அந்த உண்மை தெரிந்த பிறகு

நீங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதாக, வஞ்சிக்கப்பட்டுவிட்டதாக நினைப்பீர்கள்.

எல்லா காதலர்களும் இறுதிக் கட்டத்தில் இந்த வேதனையை அனுபவிப்பார்கள்.

அப்போது ஒருவரை ஒருவர் ஏமாற்றிவிட்டதாக மற்றவர் நினைப்பார்.

எல்லா காதலர்களுக்கும் இந்த அனுபவம் ஏற்படும்.

மனைவி தன்னை ஏமாற்றிவிட்டதாக கணவன் நினைப்பான்.

கணவன் தன்னை ஏமாற்றிவிட்டதாக மனைவி நினைப்பாள்.

இருவருமே ஏமாற்றவில்லை.

ஒருவரை ஒருவர் தவறாக புரிந்து கொள்வது தான் இதற்கு மூலகாரணம்.

ஓர் அப்பாற்பட்ட சக்தியின் ஷண தரிசனத்தை அந்த ஜன்னல் கொடுத்திருக்கிறது.

அவ்வளவுதான்.

வானமும்,
சிறகடிக்கும் பறவையும்,
சூரியனும்,
சந்திரனும்,
நட்சத்திரங்களும்,
ஜன்னல் வழியாக வரக்கூடிய தென்றல் காற்று --

ஒரு பரிமாணத்தை அது வெளிப்படுத்தி இருக்கிறது.

ஆனால் ஜன்னல் என்பது பரிமாணமல்ல.

ஆனால் நீங்கள் அந்த ஜன்னலை அலங்கரிக்க தொடங்கி விடுகிறீர்கள்.

அந்த ஜன்னலை திருமணம் செய்து கொள்கிறீர்கள்.

இப்போது நீங்கள் விரக்தியில் இருக்கிறீர்கள்.

உடனடியாகவோ அல்லாதது பிறகோ நீங்கள் போகும் இடங்களுக்கெல்லாம்

உங்கள் ஜன்னலையும் ஒரு சிலுவையைப் போல சுமந்து செல்கிறீர்கள்,

உங்களுடைய பாரம் அதிகரித்து விடுகிறது.

அதன் பிறகு சிந்திக்கிறீர்கள்.

"ஏன் இப்படி...???

நான் எப்படி ஏமாற்றப்பட்டேன்....???"

நீங்கள் எப்போதும் விரும்புவது கடவுளைத் தான் என்று நினைவில் கொள்ளும் போது.....

அப்போதும் கடவுள் இருப்பார்;

உங்கள் காதலின் அசலான அம்சம் கடவுள் தான்.

ஆமாம், சில சமயங்களில் அது ஒரு பெண்ணின் கண்ணில் வெளிப்படுகிறது.

ஒரு ஆணின் முகத்தில் வெளிப்படுகிறது.

அது ஒரு பிரதிபலிப்பு அவ்வளவு தான்.

அது ஒரு எதிரொலி அவ்வளவு தான்.

ஜன்னலுக்கு நன்றி செலுத்துங்கள்,

எதிரொலிக்கு நன்றி செலுத்துங்கள்.

அப்பாற்பட்ட ஏதோ ஒரு சக்தியை பிரதிபலிக்கக் கூடிய கண்ணாடிக்கு உங்கள் நன்றி உணர்வை வெளிப்படுத்துங்கள்.

அதே சமயத்தில் அந்த அப்பாற்பட்ட சக்தியை தேடி கொண்டே இருங்கள்.

காதல் என்பது சரியான முறையில் வளர்ச்சி அடையுமேயானால்.....

அது பிரார்த்தனையாக மாறுகிறது.

பெண் உங்கள் கோயிலாக மாறுகிறாள்;

ஆண் உங்கள் கோயிலாக மாறுகிறான்.

பெண்ணிடம் உங்கள் நன்றியுணர்வை வெளிப்படுத்துவீர்கள்,

ஆனால் அந்தப் பெண்ணின் கண்கள் வழியாக கடவுள் உங்களைப் பார்த்ததை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

அதன் பிறகு அந்த கடவுளுக்கான தேடலில் ஈடுபடுவீர்கள்.

என்னுடைய கண்ணோட்டம் இதுதான்.

நீங்கள் நேசிப்பது எதுவாக இருந்தாலும்,

அற்ப விஷயங்களான பணம் போன்றவையாக இருந்தாலும் கூட

இன்னமும் நீங்கள் கடவுளை தேடிக்கொண்டு தான் இருப்பீர்கள்.

ஏனென்றால் போதும் என்கிற உணர்வை பணம் எப்போதுமே வெளிப்படுத்தாது.

உங்களிடம் பணம் இல்லாதபோது உங்களுடைய உணர்வு எல்லைக்குட் பட்டதாக இருக்கும்

ஒரு பொருளை நீங்கள் வாங்க விரும்பினாலும் உங்களால் முடியாது.

உங்கள் பணம் ஒரு குறிப்பட்ட சுதந்திரத்தை கொடுக்கிறது

ஒரு குறிப்பட்ட அளவு சுதந்திரம் தான்,

அந்த சுதந்திரம் எல்லா இடங்களிலும் ஒரு தடங்கலாக இருக்கிறது.

இதனால் தான் மக்கள் பணத்தை நேசிக்கிறார்கள்.

அவர்கள் உண்மையிலேயே சுதந்திரத்தை தேடுகிறார்கள்

அந்த சுதந்திரத்தை தருபவர் கடவுள் மட்டுமே

பணத்தின் வழியாக ஒரு விரிவாக்க அனுபவத்தை அவர்கள் தேடுகிறார்கள்

ஆனால் பணத்தின் மூலமாக அதை செய்வதற்கு சாத்தியமில்லை

அவர்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்

ஒரு குறிப்பட்ட சுதந்திரத்தை பணம் தருவது உண்மைதான்

நீங்கள் அதிகளவு பொருள்கள் வாங்கலாம்.

நீங்கள் விரும்பக்கூடிய பொருள்கள் எல்லாம் வாங்கலாம். அவ்வளவே 💜

💙 *_ஓஷோ_* 💙