Friday 27 October 2017

நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை."

எதிர்மறையானவற்றை மிக எளிதில் நிருபித்து விடலாம்.ஆனால் நேர்மறையானவற்றை நிரூபித்தல் சாத்தியமில்லை.புரியாத தலைப்பாக இருக்கின்றதல்லவா?

தலைப்பினை புரிந்து கொள்ள வேண்டுமென்றால்  தொடர்ந்து படியுங்கள்.

யார் என்னதான் சொன்னாலும், மனசுக்கு திருப்தியே அடையாத இரண்டு கேள்விகள் இருக்கின்றன.

1.கடவுள் இருக்கிறாரா,
இல்லையா?

2.இன்னொரு கேள்வி, இறந்த பிறகு – உயிர் என்ன ஆகிறது?

இந்த கேள்விகளுக்கு யார், என்னதான் சமாதானம் கொடுத்தாலும், நம்ப முடிவதே இல்லை.

முதல் கேள்வி சம்பந்தமாக, ஓஷோ ஒரு கதையை நமக்கு சொல்லி இருக்கிறார் படித்துப் பாருங்கள்..!

குருடன் ஒருவன் ஒரு கிராமத்தில் இருந்தான்.அவன் ஒரு தத்துவவாதியாக மிகவும் வாதாடுபவனாக இருந்தான்.

அவன் கிராமத்தாரிடம் வெளிச்சம் என்பதே கிடையாது.நான் குருடனாக இருப்பதை போலவே நீங்கள் எல்லோரும் குருடர்கள்.

நான் அதை அறிந்து கொண்டேன்,நீங்கள் அதை அறியவில்லை,அதுதான் வித்தியாசம் என்று கூறி வாதிட்டான்.

இதை அவன் கண்கள் உள்ள கிராம மக்களிடம் கூறி கொண்டிருந்தான்.

அந்த கிராமத்து மக்களே ஒன்றும் பேச முடியாத அளவிற்கு அவன் வாதிடுவதில் வல்லவனாக இருந்தான்.

அவனை என்ன செய்வது என்று தெரியாமல் கிராமத்தார் தவித்தனர்.

அவன் அவர்களிடம் நீங்கள் கூறும் வெளிச்சத்தை கொண்டு வாருங்கள்.நான் அதை ருசித்து பார்க்கிறேன்.இல்லை நுகர்ந்து பார்க்கிறேன்.இல்லை,தொட்டு பார்க்கிறேன். அதன் பின்தான் நான் நம்ப முடியும்.என்று கூறினான்.

வெளிச்சத்தை தொடமுடியாது,
ருசிக்க முடியாது.
நுகரவும் முடியாது.
கேட்கவும் முடியாது.

ஆனால் இந்த குருட்டு மனிதனுக்கு உள்ளவையோ இந்த நான்கு புலன்களும்தான்.

ஆகவே அவன் தன்வாதத்தில்
வெற்றியடைந்து விட்டதாக சிரிப்பான்.பாருங்கள் ஒளி என்று கிடையாது.உண்டு எனில் எனக்கு நிருபித்து காட்டுங்கள் என்று கூறுவான்.

புத்தர் அந்த கிராமத்துக்கு வந்த போது அங்குள்ளவர்கள் அவனை அவரிடம் அழைத்து வந்தார்கள்.

அவனது வரலாறு முழுவதையும் புத்தர் கேட்டார்.அதன் பின் அவர் இவனுக்கு நான் தேவை இல்லை.

வெளிச்சத்தை பற்றி இவனிடம் பேசுவது முட்டாள்தனம்.இவனோடு நீங்கள் வாதிட்டால் அவன்தான் வெற்றி பெறுவான்.

அவனால் வெளிச்சம் இல்லை என்பதை நிருபிக்க முடியும்.

எனவே இவனை முதலில் எனது கண் மருத்துவரிடம் அழைத்து சென்று கண் அறுவை சிகிச்சை செய்து கண் பார்வையை கிடக்க செய்து அதன் பிறகு என்னிடம் அழைத்து வாருங்கள் என்று கூறினார்.

புத்தருடைய கண் மருத்துவர் அந்த குருடனுக்கு கண அறுவை சிகிச்சை செய்து ஆறு மாத காலத்தில் அவனுக்கு கண் பார்வை கிடைக்கசெய்தார்.

அவணுக்கு கண் பார்வை கிடைத்த பிறகு வெளிச்சத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்து அவன் புத்தர் கால்களில் வந்து விழுந்தான்.

நீங்கள் மட்டும் இல்லையெனில் நான் என் வாழ்நாள் முழுவதும் வெளிச்சத்தை பற்றி விவாதம் செய்தே கழித்திருப்பேன்.

ஆனால் வெளிச்சம்உள்ளது,
இப்போது நான் அதை அறிகிறேன் என்று புத்தரிடம் கூறினான்.

இப்போது புத்தர் அவனிடம் நீ அதை நிருபிக்க முடியுமா?வெளிச்சம் எங்கே உள்ளது?நான் அதை ருசிக்க வேண்டும்,அதை நான் தொட வேண்டும்,அதை நான் நுகர வேண்டும் என்று கேட்டார்.

உடனே அந்த முன்னாள் குருடன் அது முடியாத காரியம் ,வெளிச்சத்தை பார்க்க மட்டும்தான் முடியும் என்பதை இப்போதுதான் நான் அறிகிறேன்.வெளிச்சத்தை தொடவோ,ருசிக்கவோ,நுகரவோ,
கேட்கவோ முடியாது.வேறு வழிகள் இல்லை என்பதை புரிந்த கொண்டேன்,என்னை மன்னித்து விடுங்கள் என்றான்.

ஓஷோ சொல்கிறார்: ஞாபகத்தில் கொள்ளுங்கள் எதிர்மறையானவற்றை மிக எளிதில் நிருபித்து விடலாம்.ஆனால் நேர்மறையானவற்றை நிரூபித்தல் சாத்தியமில்லை.

எனவே தான் நாத்திகன் மிகவும் விவாதிப்பவனாகவும் ஆத்திகன் எப்போதும் தோல்வியுறுபவனாகவும்
இருக்கிறான்.அவன் கடவுள் அல்லது ஆன்மா இருப்பதை நிரூபிக்க முடியாத நிலையில் இருக்கின்றான்.

"இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம்‏ இருக்கிறது, மூட‎ நம்பிக்கைகள் இருக்கி‎ன்றன. ‏ ‏

இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தன?"

"அறிவியல் சொல்கிறது, விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஐம்புல‎ன்கள் இருக்கி‎‎ன்றனவென.

கடவுளைக் கண்ணால் கண்டிருக்கிறோமா? அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறோமா? அல்லது வேறு எப்படித்தா‎ன் அவரது இருப்பை உணர்ந்திருக்கின்றோம்?"

"ஆனாலும் நம்மில் அநேகம்பேர் கடவுளை நம்புகிறோம்?

"நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது 'கடவுள் ‏ இல்லை' என்று.

இதற்கு நம்மிடம் எ‎ன்ன பதில் உள்ளது என்றால் ஒ‎ன்றுமேயில்லை,
நம்பிக்கை மட்டுமே உள்ளது.

வெப்பம் அல்லது சூடு எ‎ன்ற ஒ‎ன்று உள்ளதா? என்றால் நிச்சயமாக உள்ளது."

அதேபோல் குளிர்‎ என்ற ஒ‎ன்றும் உள்ளதா?" என்றால்
நிச்சயமாக இல்லை .

நிச்சயமாக குளிர் எ‎ன்ற ஒ‎ன்று இல்லை.வெப்பத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நிலை வெப்பத்திற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது.

மனித உடல் தாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையும், தண்ணீர் ஆவியாவதற்கு ஒரு வெப்பநிலையும், இரும்பு குழம்பாவதற்கு ஒரு வெப்பநிலையும் ‏ இருக்கின்றன.

ஆனால் இதுபோல் குளிரை அளக்க முடியுமா? வெப்பம் எ‎ன்பது ஓர் ஆற்றல். குளிர் எ‎ன்பது வெப்பத்தி‎ற்கு எதிர்பதம் அல்ல.

வெப்பம் ‏எனும் ஆற்றலி‎ன் இல்லாமையே குளிர் எ‎ன்பது. (Absence of heat is the cold).

"வெப்பம் ‏இல்லை" என்பதைத்தான்‎ குளிர் எ‎ன்று சொல்கிறோம். பூஜ்யம் டிகிரியும் குளிர்தா‎‎‎ன். பூஜ்யத்திற்குக் கீழே -240 டிகிரியும் குளிர்தா‎ன். இரண்டிற்கும் வித்தியாசம் கிடையாது.".. ‏

இருட்டென்ற ஒ‎ன்று உண்மையிலேயே ‏இருக்கிறதா?"என்ற கேள்விக்கு நம்மில் அநேகம்பேர் கூறும் பதில் இரவு.இரவில் இருட்டாகத்தானே இருக்கிறது.ஆனால் வெளிச்சம் ‏எனும் ஆற்றலி‎ன் இல்லாமையே இருட்டு என்பது. இருட்டு என்பதே வெளிச்சம் என்ற ஒரு இல்லாமைதான்.(Absence of light is the dark).

நம்மால் வெளிச்சத்தை அளக்க முடியும்குறைந்த ஒளி, நிறைந்த ஒளி, கண்ணைக் கூசச் செய்யும் ஒளி எனப் பற்பல வகைகளில் வெளிச்சத்தைப் பிரிக்கமுடியும்; அளக்கவும் முடியும்.

ஆனால் ஒளி எ‎ன்பதே இல்லாவிட்டால் அதற்குப் பெயர்தா‎ன் இருட்டு. அதை அளக்க முடியாது. ‏

'கடவுள் ‏ இல்லை' என்று கடவுளைப் பற்றிய அறிவியல் சொல்லும் கருத்து பிழையானது.

""பிழை?? இதற்கான விளக்கம்

நம்மில் அநேகம்பேர் எதிலுமே இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கின்றோம்.

ஒ‎ன்று ‏இருந்தால் அதற்கு எதிரிடையான ஒ‎ன்றும் ‏இருக்கிறது எ‎ன்பது பொதுவான வாதம்.

உதாரணத்திற்கு நல்ல கடவுள், கெட்ட கடவுள். இருட்டு, வெளிச்சம். வெப்பம், குளிர்.

கடவுள் என்பவருக்கு ஒரு முடிவு, அல்லது எல்லை எ‎‎ன்ற ஒ‎ன்று உண்டு எ‎ன்பதாகக் கருதுகின்றோம்.
அதை நம்மால் அளக்க முடியவேண்டும் எனவும் வாதிடுகின்றோம்.

அறிவியல் மூலம் எண்ணங்கள் எ‎ப்படி உருவாகின்றன என்பதை  யாராலும் விளக்கமுடியாது.

எ‎ண்ணங்கள் உருவாவதே உடலினுள் கலக்கும் மி‎ன் மற்றும் காந்தத்தூண்டல்களினால்தா‎‎‎ன்.

மின்சாரத்தை அளக்கமுடிந்த நம்மால், காந்தத்த‎ன்மையை விவரிக்க முடிந்த  நம்மால் எண்ணங்களி‎ன் தோற்றத்தை அளக்க முடியவில்லை.

இறப்பு எ‎ன்பதை வாழ்வதி‎ன் எதிர்ப்பதமாகக் கருதுகின்றோம்.

உண்மையில் "வாழ்வு இனி இல்லை" என்ற த‎ன்மையே இறப்பு எ‎ன்பதின்  ‏ ‏ அறிவு பூர்வமான பதில்.

"குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்கிற இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமானால்.. ஆம்.. அது உண்மை. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான்.

" நமது கண்களால் மனிதப் பரிமாண வளர்ச்சியைக் கண்டிருக்கிறோமா?" என்றால் நிறைய பேரின் பதில்
'இல்லை' .

அப்படியெ‎ன்றால், யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை.

எல்லாமே 'ஒருவகையா‎ன' அனுமானம்தான். ‏ இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அது அநேகம்பேரால் ஏற்று கொள்ளபட்ட கருத்து, குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்பது.

அதை நிரூபிப்பதற்கு அறிவியல் கொடுக்கும் ஆதாரங்கள் எவையுமே, எவரும் கண்டதில்லை, அனுபவம் செய்ததில்லை எ‎ன்பதே உண்மை.

அறிவியலில்  சரியெனப்படும் கருத்து ஒ‎‎ன்றை ஒருவர் நமக்கு போதிப்பதால்  அவர் ஒரு விஞ்ஞானியா? அல்லது போதகரா?

இவ்வாறு அறிவியல் கருத்தை போதிப்பவரின் மூளையை யாராவது தொட்டுப் பார்த்து அவருக்கு மூளை  ‏இருக்கிறதென உணர்ந்திருக்கின்றோமா‏?
அத‎ன் வாசனையை நுகர்ந்திருக்கின்றோமா?

அறிவியல் சொல்லும் கருத்துக்களின்படி நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, ஐம்புலன்களான பார்த்தல்,
தொடுதல்,ருசித்தல்,கேட்டல், நுகர்தல்,மூலம் உணர முடியாத ஒன்றை இல்லை என்ற கருத்தின்படி  போதிப்பவருக்கு மூளை இல்லை எ‎ன்று."

"மூளையே இல்லாத ‎போதிப்பவர் நடத்தும் பாடங்களை  நாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ?

ஆனால் நாம் அனைவரும் போதிப்பவருக்கு மூளை இருக்கிறதெ‎ன நம்பி கொண்டுதான் இருக்கின்றோம் .

ஏனென்றால் மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தி‎ன் பெயர்தான் நம்பிக்கை என்பது. ‏

இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது.

நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை."

பல இணைய தளங்களில் படித்தேன்,படித்தவற்றை பகிர்ந்தேன்!