Sunday 29 October 2017

மனதுக்கு ஏது மருந்து ?

மனதுக்கு ஏது மருந்து ?

ஒரு துயரத்தை தாங்க முடியாமல் சமாளிக்க தவித்துக் கொண்டிருக்கும் போது இன்னொரு துயரம் இடி போல் விழும்போது என்ன செய்ய முடியும்.....?

மனப்பாரத்தை துலாபாரத்தில் நிறுத்தி  இரண்டையும் எடை போடுவோம் பாருங்கள் .....

அப்போது தெரியும் நம் இதயத்தின் பலம் என்ன என்று...?

ஒரு துயரத்தில் இருக்கும் போது துடிக்கும் நாம்..... ,
இரு துயரத்தை  கையாளும் போது நீதிபதி ஆகிறோம்....

அப்போது ஒரு உண்மை .... புத்தனாக ஞானம் பிறக்கும்.

இதுவும் கடந்து போகும்....

உயிரும் ஒரு நாள் உடலை கடந்து போகும் என்ற உண்மை உணர்வோம்...

பிரச்சினைகளை உருவாக்குவதும் நாமே....

பிரச்சினைகளை களை  எடுப்பதும் நாமே....

ஆகவே தேவையற்றதை நீக்குவோம்.

கொஞ்சம் ஆழ்ந்து யோசித்து பார்த்தால் ,
எல்லாமே தேவையற்றது என்ற உண்மை புரியும்.

நாம் யோசிக்க மறுப்பதால்தான், எல்லாமே தேவையானதாகிறது...

மாற்றங்களை நோக்கிய நமது பயணம், தோல் சுருங்கும் வரை தொடர்கிறது....

இதயம் சுருங்கி விரியும் வரை நிகழ்கிறது....

இடையே வரும் இடியும் ,மின்னலும் நமது வாழ்வில் தவிர்க்க முடியாதது...

எதையும் தாங்கும் இதயம் நம்முடன் இருப்பதை உணர்வோம்...