Monday, 12 November 2018

இழிவு

*இன்றைய சிந்தனை..( 12.11.2018)*.
.............................................

'' *தவறான எண்ணங்கள்*....''..
.........................................

ஒரு துறவி ஒருநாள் நல்ல வெயிலில் நடந்து சென்றார்.அப்போது அவரது செருப்பு பிஞ்சு விட்டது.
தொடர்ந்து நடக்க  முடியாதவராக அருகே இருந்த செருப்பு தைப்பவரிடம் சென்று கொடுத்தார்.

அவரோ அந்தச் செருப்பைப் பார்த்துவிட்டு,'' ஐயா நிறைய தைக்க வேண்டியிருக்கிறது.

நீங்கள் உங்கள் செருப்பைத் தந்து விட்டு.மாலை வாருங்கள் தைத்து வைக்கிறேன் என்றார்.

துறவியோ அந்த செருப்புத் தைப்பவரிடம்..,ஐயா இந்த வெயிலில் நான் எவ்வாறு நடந்து போவேன்..? என்றார்.

அதற்கு அந்த செருப்பு தைக்கும் தொழிலாளி...
''ஐயா உங்களுக்கு வேண்டுமானால் நான் வேறு ஒரு செருப்புத் தருகிறேன். ''இதை அணிந்து கொண்டு செல்லுங்கள்.

மாலை வரும்போது இந்தச் செருப்பைத் தந்துவிட்டு. உங்கள் செருப்பைப் பெற்றுச் செல்லுங்கள் என்றார்.

ஒரு நொடி சிந்தித்த அந்தத் துறவி...

என்னது இன்னொருவர் அணிந்த செருப்பை நான் அணிவதா.?. என்று சிந்தித்தார்..

அவர் மனசாட்சி பேசியது..

“இன்னொருவர் செருப்பை அணிவதற்கே இவ்வளவு சிந்திக்கிறோமே..

இன்னொருவர் பற்றிய தவறான எண்ணங்களையும், அவர் மீதான கோபத்தையும், பொறாமையையும் இறக்கிவைக்காமல் தூக்கி சுமக்கிறோமே.. என்று..,

ஆம்.,நண்பர்களே..,

*இன்னொருவர் பற்றிய தவறான எண்ணங்களை நம் மனதில் சுமப்பது*, இன்னொருவர் செருப்பை அணிவதுபோல இழிவானது.🌸🙏🏻💐