எல்லாம்_சரியே...!!!
எல்லாம் சரியாகவே உள்ளது என்கிற மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுங்கள்.
எனக்கே ஏகப்பட்ட பிரச்சனை எப்படி எல்லாம் சரியாக உள்ளதாக நினைக்க முடியும்? இது உங்கள் கேள்வியாக இருந்தால் நிச்சயமாக உங்களால் அது முடியும் என்பது தான் என் பதில்.
எப்படி முடியும்???
உங்கள் பிரச்சனைகள் தான் உங்களை அழகாய் செதுக்கும் உளி.
உங்கள் பிரச்சனைகளால் மட்டுமே உங்கள் மனதை பக்குவப்படுத்த முடியும்.
பிரச்சனைகளே இல்லாமல் வெற்றி பெற்றவர்கள் யாருமே இல்லை.
நீங்கள் அபரிமிதமான வாழ்க்கையை வாழ விரும்பினால் பிரச்சனைகளை இடையூராக நினைக்காமல் அதை நீங்கள் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பாக மாற்றிக்கொள்ளுங்கள்.
வெற்றிபெற துளியும் விருப்பம் இல்லாதவர்களுக்கு பிரச்சனைகளே வராது.
எல்லாம் சரியாவே தான் நடக்கிறது அதை சரியாக மாற்றுவதும் தவறாக மாற்றுவதும் உங்கள் முடிவில் தான் உள்ளது.
சரியாக மாற்றிக்கொண்டு சாதனைகள் படைக்க தயாராகுங்கள்.