முதன் முதலாக வியன்னா நகருக்கு மின்சாரம் அறிமுகமான புதிதில்
சிக்மன் பிராய்டு கிராமிய நண்பர் ஒருவர் அவரைக்காண வந்து இருந்தார் .
பிராய்டு இரவு அவரை ஒரு அறையில் தங்க வைத்தார்
மின்சார விளக்கு கிராமத்தவருக்கு புதிது .
அவருக்கு அது பற்றி பயம் .
ஆகவே அவர் அறையில் உள்ள மின் விளக்கை உடனடியாக அணைக்க விரும்பினார்.
படுக்கையில் ஏறி நின்று வாயால் ஊதி பார்த்தார் .
விளக்கு அணையவில்லை .
விளக்கை அணைப்பதற்கு பிராய்டை எழுப்பி கேட்கலாம்.
ஆனால் அவர் இது கூட தெரியலயே என மிகவும் மட்டமாக கருதிவிடலாம். 😏😏😏
ஆகவே மின்விளக்கு பளிச்சென்று எரிய பயந்துக்கொண்டே தூங்கினார்.
காலையில் பிராய்டு வந்ததும்
“என்ன இரவு நல்ல உறக்கமா? ” என்று கேட்டார் .
“எல்லாம் சரிதான் ஆனால் எவ்வாறு இந்த விளக்கை அணைப்பது ?” என்று கேட்டார் .
பிராய்டுக்கு அப்போதுதான் புரிந்தது இவருக்கு மின்சார பயன்பாடு பற்றி ஏதும் தெரியாது என்பது
”இங்கே வா சுவரில் உள்ளது சுவிட்ச், இதை இப்படி அழுத்தினால் போதும் விளக்கு அணைந்துவிடும் என்றார்.
“பட்டனை தட்டினால் போதுமா, இப்போது புரியுது கரண்ட் என்றால் என்னவென்று ” என்றாராம் .
மின்சாரம் என்பதைப்பற்றி உண்மையில் உங்களுக்கு என்ன தெரியும் ?
பட்டனை தட்டுவது தான் தெரியும் .
அன்பை, காதலை பற்றி என்ன தெரியும் ?
உள்நோக்கிசென்று அதன் உணர்வுத்தளத்தில் இவற்றை எல்லாம் சந்தித்து. அதன் இயக்கப்போக்கை அறிந்து கொண்டீர்களா?
யோசித்து பாருங்கள்
.எதுவும் தெரியாது.
உங்களுக்கு உங்களைப் பற்றி எதுவும் தெரியாது
.உங்களின் மனதைப் பற்றி எதுவும் தெரியாது .
வாழ்வின் உள்ளடக்கம் பற்றி எதுவும் தெரியாது
.அனாதிகாலமாக இந்த பிரபஞ்சத்திலு தான் நீங்கள் வாழ்ந்து கொண்டு உள்ளீர்கள் ..
தொடர்ந்து பல ஜென்மங்களாக நீங்கள் வாழ்ந்தபோதும்
உங்களை நீங்களே உணர்ந்து கொள்ளாத நிலையில் ,
மிக சொற்ப காலத்தில் உங்கள் மனைவியாகட்டும் ,மக்களாகட்டும் அவர்களை எவ்வாறு உங்களால் புரிந்துக்கொள்ள முடியும் .
மகிழ்ச்சி எங்கிருந்து வருகிறது ?
கோபம் எங்கிருந்துவருகிறது ?
அதன் உற்பத்தி களம் எங்கே ?
எதுவும் தெரியாது .
ஒரு முறை மகிழ்ச்சியாக இருக்கின்றவர் அடுத்த கணத்தில் சோகமாக மாறிவிடுகின்றார் .
ஏன்?
என்னதான் நடைபெறுகிறது ?
அதன் ஆரம்ப புள்ளி எங்கே ?
அதன் ஆதாரசுருதி எங்கே ?
உங்களுக்கு தெரியாது .
உங்களிடம் எழும் இது போன்ற உணர்வுகளின்
இயக்கபோக்கை உணர்த்து கொள்ளாத நிலையில்
நீங்கள் எவ்வாறு மற்றவர்களின் கோபதாபங்களை
அறிந்துகொள்ள முடியும் ?
உங்களின் மனதை உங்களின் இருப்புணர்வை சரியாக அறிந்துகொண்டுவிட்டால்
அப்போது இந்த வாழ்வின் அத்தனை இரகசியத்தையும் நீங்கள் உணர முடியும் .
*ஓஷோ*