Friday, 13 March 2015

மனதிற்கு இடம் கொடுபவர்களே

ஓஷோ கூறிய கதை:
அந்த ஊரில் கடுமையான உழைப்பாளி ஒருவன் வசித்துவந்தான் அவன் அந்த ஆண்டு முழுவதும் தான் சம்பாரித்த பணத்தை குதிரை பந்தயத்தில் கட்டுவான் ஆனால் ஏமாந்து போவான். இப்படி 10 ஆண்டுகளாக ஒரு தடவை கூட அவன் ஜெயக்கவில்லை. இந்த ஆண்டும் அவன் ஏதோ ஒரு நம்பிக்கையில் பணம் கட்டினான் இந்த முறையும் பட்டை நாம்மம் தான், இதுவரை அவன் சேர்த்த எல்லா பொருளும் போய்விட்டது அவன் பிச்சைகாரன் ஆகிவிட்டான் இதை நினைத்து அழுது புரண்டான். தற்கொலை செய்து கொள்ள புறபட்டான். மலை உச்சியில் நின்று கொண்டு கிழே பயத்துடன் பார்த்தான் "ஆபத்து நேரத்தில் மனம் அவனுக்கு நின்றுவிட்டது". "ஆம் மனதை தண்டி ஒரு விஷயம் நடக்கும் போது மனதிற்கு என்ன வேலை" மனம் நின்ற போது அவன் உள் இருக்கும் ஒரு மெல்லிய குரல் அவனை தடுத்தது, அந்த குரல் எப்போதும் ஒலித்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் கேட்க மனம் விடுவதில்லை. அந்த மெல்லிய குரல் அவனிடம் இன்னும் ஒரு முறை பந்தயத்தில் விளையாடுவோம் இந்த முறை கண்டிப்பாக ஜெயிப்போம் என்றது. அவனும் அதை ஏற்று கடன் வாங்கி குதிரை பந்தயத்திற்கு சென்றான். மறுபடியும் அந்த மெல்லிய குரல் "No.12" ஆம் எண் குதிரை மீது கட்டசொன்னது அவனும் கட்டினான் அது ஜெயித்தது அவன் பலமடங்கு லாபம் பார்த்தான் கோடீஸ்வரன் ஆகிவிட்டான். இப்பொழுது ஆசை உள்ளே புகுந்து விட்டது அந்த மெல்லிய குரல் நாம் வென்றுவிட்டோம் வா செல்வோம் என்றது. மறுபடியும் மனம் உள்ளே புகுந்து அவனிடம் நமக்கு நல்ல நேரம் வந்துவிட்டது உலகத்திலே பெரிய கோடீஸ்வரன் ஆகபோறோம் என்று மற்ற குதிரைகள் மீது கட்டசொன்னது. இந்த நேரத்தில் மெல்லிய குரல் எப்படி கேட்கும்? அவன் மனம் சொன்னார் போல் கட்டினான். கட்டியதெல்லாம் தோற்க ஆரம்பித்தது. அவன் மறுபடியும் பிச்சைக்காரன் ஆகிவிட்டான். இப்பொழுது என்ன செய்வது என்று கேட்டான் "மனம், வேறு என்ன மலை உச்சியை நோக்கி கிளம்பு தற்கொலைக்கு நேரமாகி விட்டது".
மனதிற்கு இடம் கொடுபவர்களே சற்று நேரம் இதை பார்த்து இளைபாருங்கள்

பிரார்த்தனை

பிரார்த்தனை என்பது கடவுளிடம் ஏதோ சொல்வது அல்ல,
மாறாக அது கடவுள் சொல்வதை கேட்பது.
கருணைக்குப் பின் நன்றியுணர்வு பொங்கி வந்தால்
அப்போது இந்த பிரபஞ்சம் முழுமையுமே ஒரு கோவிலாகி விடும்.
இணைப்புணர்வு என்பது உன்னுள் வளர்வது. அது உன்மேல்
திணிக்கப்படுவது அல்ல. அது ஒரு பிளாஸ்டிக் பூவல்ல. இணைப்புணர்வு என்பது
வாழ்வின் மிகவும் அரிதான கலையுணர்வு அனுபவம்.
உனக்கு வழி காட்டும் புனிதநூல் உன்னால் மட்டுமே
எழுதப்பட முடியும், அது உன்னுடைய அனுபவங்களைக் கொண்டுதான் எழுதப்பட வேண்டும்.
சுயஉணர்வின்றி இருக்கும்போது நீ ஒரு மிருகம். சுயஉணர்வுடன் இருக்கும்போது நீ மிருகமாக இருப்பதில்லை. தன்னுணர்வு கொள்ளும்போதுதான் நீ மனிதன்.
தியானம் உன்னை தயார் படுத்தும், கருணை உன்னை
சீர்படுத்தும். ஆகவே இந்த இரண்டு மந்திரங்களையும் உன்னுடன் எப்போதும் எடுத்து செல்.
தியானம் மற்றும் கருணை.
நன்றி- ஓஷோ தமிழ்-

மரணம்;

மரணம்;
இறப்பு ஏற்கனவே நடந்து கொண்டு இருகிறது ,
நீங்கள் அதை எதிர் கொள்கிறீர்களோ இல்லையோ,
நீங்கள் அதை பார்க்கிறீர்களோ இல்லையோ.
இது ஏற்கனவே இருக்கிறது.
இது சுவாசிப்பது போன்றதுதான்;
ஒவ்வொரு உட்கொள்ளுதலிலும் நீங்கள் பிறப்பு எடுக்கிறீர்கள்,
ஒவ்வொரு வெளி ஏற்றுதலிலும் நீங்கள் இறக்கிறீர்கள்.
யாரொருவன் உண்மயில் வாழ்கிறானோ....
அவன் ......
எந்த விததிலும் இறப்பை கண்டு அஞ்சுவதில்லை.
வாழ்க்கையை வாழுங்கள்.
வாழ்க்கையை வாழுவதில் ....
மரணம் தவிர்க்கப்படுகிறது.
வாழ்க்கையை வாழுவதில் ....
நீங்கள் மிகவும் நிறைவடைந்து இருகிறீர்கள்,
இந்த கணத்தில் மரணம் வந்தால் கூட ....
எதிர்காலம் நின்று விட்டால்,
நீங்கள் தயாராக இருப்பீர்கள்.
ஆனந்தமாய் தயாராக இருப்பீர்கள்.

யாராலும்,உங்களுக்கு வழங்க முடியாது.

உலகை துறக்க வேண்டிய அவசியமே இல்லை.கோழைகளே அதை துறப்பார்கள்.உலகில் வாழ வேண்டும்.அனுபவம் பெற வேண்டும்.இது ஒரு பள்ளி.நீங்கள் இமயமலையில் வளர முடியாது.உலகில்தான் வளர முடியும்.
ஒவ்வொரு காலடி வைப்பும் ஒரு தேர்வு.நீங்கள் கடந்து செல்லும் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு சோதனை.வாழ்வு ஒரு வாய்ப்பு.
உண்மை,உயிருள்ள உண்மை,ஒவ்வொரு தனி மனிதராலும் கண்டுபிடிக்கப்பட வேண்டிய ஒன்று.யாராலும்,அதை உங்களுக்கு வழங்க முடியாது.

விழிப்புணர்வு பற்றி பல கேள்விகள்.

விழிப்புணர்வு பற்றி பல கேள்விகள்.
ஓஷோ பதில்கள்……………….
விழிப்புணர்வும் மையமும் ............ தொடர்ச்சி……………
எனவே நிறைமனதுடன் செயலாற்றுங்கள். இது ஒரு நீண்ட கடினமான பயணம். மேலும், ஒரு சிறு நொடிப் பொழுதுகூட விழிப்புணர்வுடன் இருப்பது கடினம். இந்த மனம் இடைவிடாது கண் சிமிட்டிக் கொண்டே இருக்கும். ஆனால் இது சாத்தியமில்லாத ஒன்று அல்ல. இது கடினமானது, இது சிரமமானது. ஆனால் இது சாத்தியமில்லாதது அல்ல. இது சாத்தியமானது. நம் ஒவ்வொருவருக்கும் இது சாத்தியப்படும். முயற்சி மட்டுமே தேவை; உள்ளம் நிறைந்த முயற்சி மட்டுமே தேவை. எதையும் விட்டு வைக்கக் கூடாது; உங்களுக்குள் எதுவும் தொடப்படாமல் விட்டு வைக்கப்படக் கூடாது. விழிப்புணர்வுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டும். அதன்பிறகு மட்டுமே, அந்த உள் ஒளிச் சுடர் கண்டுபிடிக்கப் படும். அது அங்கேதான் உள்ளது.
இப்போது இருக்கின்ற மதங்களிலோ அல்லது இனிமேல் இருக்கப் போகின்ற மதங்களிலோ உள்ள முக்கியமான ஒற்றுமையை ஒருவன் தேடிச் சென்றால், அங்கே இந்த விழிப்புணர்வு என்கிற ஒரு சிறு வார்த்தைதான் கண்டு கொள்ளப் படும்.
இயேசு ஒரு கதை சொல்கிறார். ஒரு பெரிய வீட்டின் எஜமான் வெளியில் சென்றார். அப்போது அவர் தனது வேலைக்காரர்களிடம், தான் எந்த நேரத்திலும் திரும்பி வந்துவிடுவதாகவும், அவர்கள் இடைவிடாது எப்போதும் உஷாராக விழித்திருக்கும்படியும் கூறி விட்டுச் சென்றார். ஆகவே, ஒரு நாளின் இருபத்தி நான்கு மணிநேரமும் அவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதாயிற்று. எஜமான் எந்த வேளையிலும் வரலாம்! ஒரு குறிப்பிட்ட நேரமோ, குறிப்பிட்ட தேதியோ, குறிப்பிட்ட வேளையோ கிடையாது. ஒரு குறிப்பிட்ட தேதி இருந்தால் அப்போது நீங்கள் அதுவரை தூங்கலாம். நீங்கள் என்னவெல்லாம் செய்ய விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் செய்துவிட்டு, எஜமான் வருகின்ற அந்த குறிப்பிட்ட நாளில் மட்டும் உஷாராக இருந்தால் போதும். ஆனால் எஜமானனோ, “நான் எந்த நேரத்திலும் வருவேன். இரவும் பகலும் என்னை வரவேற்பதற்கு நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்”. என்று கூறிவிட்டு போய் விட்டார்.
வாழ்க்கையின் கதையும் இதுதான். நீங்கள் எதையும் ஒத்திப் போட முடியாது, எந்த நேரத்திலும் எஜமான் வரலாம். ஒருவர், இடைவிடாது விழிப்புடன் இருக்கவேண்டும். எந்த குறிப்பிட்ட தேதியும் இல்லை. அந்த திடீர் நிகழ்வு எப்போது நடக்கும் என்றும் ஒன்றுமே தெரியாது. எனவே, ஒருவர் ஒரே ஒரு காரியம் மட்டுமே செய்ய முடியும். அதுதான் விழித்துக் கொண்டு காத்திருப்பது.
 

இது, நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியது. மேலும், விழிப்புணர்வு என்பதற்கு இப்படி உங்களுக்குள் உள்ள அந்த நடுப்பகுதியை கண்டுபிடிப்பதற்கான வழிமுறை என்று அர்த்தம். நீங்கள் எந்த அளவுக்கு தன்னுணர்வு இல்லாமல் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் உங்களிடமிருந்து மிகவும் அதிக தூரம் விலகி இருக்கிறீர்கள். அதே போன்று, நீங்கள் எந்த அளவுக்கு அதிக தன்னுணர்வுடன் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் உங்களுக்கு மிகவும் நெருக்கமாக வருவீர்கள். உங்களது தன்னுணர்வு முழுமையாக ஆகிவிடும்போது, நீங்கள் உங்களது மையத்தில் இருப்பீர்கள். உங்களது தன்னுணர்வு குறைவாக இருந்தால், நீங்கள் வெளிவட்டப் பரப்பில் இருப்பீர்கள். நீங்கள் தன்னுணர்வு இல்லாமல் இருந்தால், நீங்கள் வெளிவட்டப் பரப்பில் இருப்பதால், அங்கே உங்களது மையம் முற்றிலுமாக மறக்கப் பட்டு விடுகிறது. எனவே இந்த இரண்டு வழிகளில் தான் நீங்கள் நகர்ந்து செல்வது சாத்தியமாகும்..
நீங்கள் வட்டத்துக்குள் வெளிப்பரப்பிற்கு நகர்ந்து செல்லலாம். – அதன்பிறகு, நீங்கள் தன்னுணர்வற்ற நிலைக்கு நகர்ந்து செல்வதாகிவிடும். உட்கார்ந்துகொண்டு ஒரு திரைப்படத்தைப் பார்க்கும்போதும், எங்கோ உட்கார்ந்துகொண்டு இசையை கேட்டுக் கொண்டிருக்கும்போதும், நீங்கள் உங்களை மறந்து போக முடியும், – அப்போது நீங்கள் வட்டத்தின் வெளிப்பரப்பில் இருக்கிறீர்கள். அதே போன்று, பகவத்கீதையை படிக்கும்போதும் அல்லது பைபிள் அல்லது குரானை படிக்கும்போதும் நீங்கள் உங்களை மறந்து போக முடியும் – இப்போது நீங்கள் வட்டத்தின் வெளிப்பரப்பில் இருக்கிறீர்கள்.
நீங்கள் என்ன செய்தாலும், உங்களால் உங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியுமெனில், அதன்பிறகு நீங்கள் மையத்தை நெருங்கி வருவீர்கள். அதன்பின்னர், ஒருநாள் திடீரென்று நீங்கள் அந்த மையத்தில் இருப்பீர்கள். அதன்பிறகு உங்களுக்கு சக்தி வந்துவிடும். அந்த சக்திதான் நெருப்பு. இந்த பிரபஞ்சம் முழுவதும், இந்த உயிர்கள் அனைத்தும் அந்த சக்தியுடன்தான், அந்த நெருப்புடன்தான் உள்ளது. நெருப்பு என்பது பழைய பெயர். இப்போது அவர்கள் அதை மின்சாரம் என்று அழைக்கின்றனர். மனிதன் அதை அநேக அநேக பெயர்களால் அடையாளமிட்டு வந்திருக்கிறான். ஆனால் நெருப்பு என்பது சிறந்தது. மின்சாரம் என்றால் கொஞ்சம் உயிரற்றது போலத் தெரிகிறது. ஆனால் நெருப்பு என்னும்போது, அது உயிர்த்துடிப்புள்ளதாகத் தெரிகிறது.


கண்ணடிக்கலாம் வாங்க!

கண்ணடிக்கலாம் வாங்க!
தலைப்பை படித்தவுடன் உங்கள் அனைவருக்கும் சின்னதாக ""ஷாக்'' அடித்தது போன்ற உணர்வு ஏற்படலாம். இது ஏதோ இளைஞர்களைக் குறிப்பிட்டு அவர்களுக்காக இந்தக் கட்டுரையில் எதுவோ சொல்லப் போகிறோம் என யாரும் எண்ணிக் கொள்ளவேண்டாம்.
இது எல்லா தரப்பினருக்கும், எல்லா வயதினருக்கும் உரிய ஒரு பொதுவானது. அந்த விசயத்தைப் பற்றிதான் பார்க்கப் போகிறோம்.
கண்ணடிப்பது என்பது மிகச்சிறந்த ஒரு தியானம். கண்ணடிப்பதால் நமது உடலுக்கு, மனதிற்கு, புத்திக்கு, கண்களுக்கு என அனைத்திற்கும் பலவிதத்தில் நன்மைகள் உண்டாகிறது.
ஒரு நிமிடம் தொடர்ந்து கண்ணடிப்பது என்பது ஒரு மணிநேரம் தொடர்ந்து தூங்குவதற்கு சமமாகிறது. கண்ணடிப்பது என்பது கம்ப்யூட்டரில் ரீஃப்ரஷ் என்ற ஒன்றைப் பயன்படுத்துவது போலாகும்.
அதாவது (Refresh) என்ற பட்டனை அழுத்தி கம்ப்யூட்டரை ரீஃப்ரஷ் செய்து கொள்வது போல நமக்கு இந்த கண்ணடித்தல் பயன்படுகிறது.
தினசரி யாரெல்லாம் இந்தக் கண்ணடித்தலை அதிக நேரம் செய்கிறார்களோ அவர்கள் மனதிற்குப் பிடித்தது போல வாழ்பவர்கள் என்று கொள்ளலாம்.
தினசரி யாரெல்லாம் குறைவான நேரம் கண்களை இமைத்து வாழ்கிறார்களோ அவர்களெல்லாம் புத்திக்குப் பிடித்தது மாதிரி வாழ்பவர்கள் எனக் கொள்ளலாம்.
பெண்களின் கண்களை வேடிக்கைப் பார்த்திருந்தால் உங்களுக்கு ஒரு விசயம் புரிந்திருக்கும். அதிகமுறைகள் ஒரு நாளில் கண்சிமிட்டுபவர்களாக அவர்கள் இருப்பதைப் பார்க்கமுடியும்.
ஆண்கள் எப்பொழுதுமே குறைவாகத்தான் கண்களை சிமிட்டுவார்கள். சில நுட்பமான வேலைகளில் ஈடுபடும்பொழுது இயல்பாகவே கண்களை சிமிட்டுவது குறைந்து போய்விடும் அது என்னென்ன வேலைகள் தெரியுமா ?
கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள். சாப்ஃட்வேர் இன்ஜினியர்கள். பெரிய நிறுவனங்களின் முதலாளிகள் புத்திக்கு அதிக வேலை கொடுக்கக்கூடிய துறையில் வேலை செய்பவர்கள் தொழில் நுட்பக்கலைஞர்கள், கம்ப்யூட்டர் முன் அமர்ந்து நீண்டநேரம் வேலை செய்பவர்கள் போன்றோரை உதாரணமாக சொல்லலாம்.
சுருக்கமாக புத்திக்கு அதிகம் வேலைதரக்கூடியவற்றைச் செய்பவர்களுக்கு கண் சிமிட்டுதல் என்பது குறைவாக இருக்கும்.
இவ்வாறு கண்சிமிட்டுதல் குறையும் பொழுது டென்சன், கோபம், பயம், தூக்கமின்மை குழப்பம் ஆகியவை வருவதற்கு வாய்ப்புள்ளது.
எனவே நாம் இப்பொழுது கண்சிமிட்டும் பயிற்சியை அறிமுகப்படுத்த போகிறோம்.
ஒரு நிமிடம் தொடர்ந்து கண்சிமிட்டுவது ஒரு மணிநேரம் தூங்குவதற்கு சமமாக இருக்கிறது.
தூக்கம் தான் நமது உடல், மனம், புத்தி ஆகிய மூன்றிற்கும் புத்துணர்வு ஊட்டக் கூடியதாக இருக்கிறது. அதனால் நமது கண்களைப் பாதுகாப்பதற்கு தூங்காமல் தூங்குவதற்கு ஒரு பயிற்சியைச் செய்ய இருக்கிறோம்.
ஒரு நிமிடம் கண்களைச் சிமிட்டும் பயிற்சி தான் இது.
ஒரு நிமிடம் தொடர்ந்து கண்களைச் சிமிட்ட வேண்டும். கண்களைச் சிமிட்டும் பொழுது வேகமாக சிமிட்டக் கூடாது. அதே சமயத்தில் மிக மெதுவாகவும் சிமிட்டக் கூடாது.
ஒரே சீரான அளவில் கண்களைச் சிமிட்ட வேண்டும். குறைந்தது ஒரு நிமிடம் கண்களைச் சிமிட்டும் பயிற்சியைச் செய்யலாம். அதிகபட்சமாக மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை செய்யலாம். ஆனால் ஒரு நிமிடம் கண்களைச் சிமிட்டினால் போதுமானது.
கண்களைச் சிமிட்டும் பொழுது முழுக் கவனத்தையும் கண்களின் மீது வைக்கவேண்டும். கண்களுக்கு முன்னால் தெரியும் காட்சி மறைந்து மறைந்து தெரிவதை பார்க்கவேண்டும்.
ஒரு கண் சிமிட்டலுக்கும், அடுத்த கண்சிமிட்டலுக்கும் இடையே போதுமான கால அவகாசம் இருக்கவேண்டும். அவசர அவசரமாக செய்வதால் எந்த பலனும் கிடைக்காது.
இவ்வாறு ஒருநாளில் ஒரு முறை முதல் ஐந்து அல்லது பத்து முறை வரை கண்களை சிமிட்டலாம்.
இதனால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் என்ன?
தூக்கமின்மை என்ற வியாதி குணமாகிறது. தூங்கும் நேரம் மிகவும் குறைவாக இருக்கிறது என எண்ணுபவர்களுக்கு இந்தப்பயிற்சி உதவி செய்கிறது. தூக்க மாத்திரை பயன்படுத்தி தூங்குவோர் இனிமேல் இந்த கண்சிமிட்டலைச் செய்து வருவதால் ஒவ்வொரு மாதமும் தூக்க மாத்திரைகளின் அளவைக் குறைத்துக் கொண்டே வந்து பின்னர் ஆறுமாதங்களில் முற்றிலும் நிறுத்திவிடலாம்.
டென்சன், பயம், கோபம், கவலை போன்றவைகள் குறைகிறது. கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள், சாப்ஃட்வேர் இன்ஜினியர்கள் மூளைக்கு அதிகமாக வேலை கொடுப்பவர்கள் என அனைவரும் இதன் மூலம் தங்கள் வேலைகளை சிறப்பாக இப்பயிற்சி மூலம் செய்யமுடியும்.
இதனால் கண்களுக்கு கீழள்ள கருவளையங்கள் மறைகிறது. நாம் மனதிற்கு பிடித்தது போல வாழ்வதற்கு ஆரம்பித்து விடுவோம்.
எனவே கண்சிமிட்டுதல் என்பது ஒரு நல்லபயிற்சி என்பதைப் புரிந்து கொண்டு ஒருநாளில் இரண்டு மூன்று முறைகளாவது ஒரு நிமிட அளவிற்கு கண்களைச் சிமிட்டுவதை இனிமேல் வழக்கமாகச் செய்வோம்.
நாம் ஆரோக்கியமாக நிம்மதியாக வாழ்வோம்.
குறிப்பு : கண்களைச் சிமிட்டும் பொழுது தயவுசெய்து மற்றவர்களைப் பார்த்து சிமிட்டிவிடாதீர்கள். இதனால் வரும் பின்விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல.
எனவே யாரும் இல்லாத இடத்தைத் தேர்ந்தெடுத்து கண்களைச் சிமிட்டுங்கள்.

கண்களைச் சிமிட்டுவோம். !
ஆரோக்கியமாக வாழ்வோம்.!
கண்ணடிக்கலாம் வாங்க!
ஆரோக்கியமாக வாழலாம் வாங்க!
வாழ்க வையகம்!

Sunday, 22 February 2015

எண்ணங்கள் ஏற்படுத்தும் ஏற்றங்கள்

ம் எதிர்பார்ப்புகளே மனதில் எண்ணங்களாக தோன்றுகின்றன. அவற்றின் தாக்கம் வாழ்விலும் எதிரொலிக்கும். வாழ்க்கையில் எண்ணங்கள் ஏற்படுத்தும் ஏற்றங்கள்மாற்றங்களை காண்போம்.

வாழ்வில் வெறும் எண்ணங்கள் மட்டும் வெற்றியை தந்துவிடாது. ஆனால் அடிப்படை ஏணிப்படிகளாக இருப்பது எண்ணங்கள்தான். முன்னேற்றத்துக்கு எண்ணங்கள் எப்படி கைகொடுக்கிறதுஇதுபற்றிய ஆய்வுகள் எப்போதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
இங்கே நாம் காணப்போகும் சில ஆய்வு முடிவுகள் உங்களை உற்சாகப்படுத்தும். ஒவ்வொன்றும் வித்தியாசமான ஆய்வு. அதன் முடிவுகளும் ஆச்சரியமானவை. இனி உங்கள் எண்ணங்களையும்,பலன்களையும் வலம் வரலாம் வாங்க...

இது சாதாரண மாணவர்களை சாதனை சிகரங்களாக உயர்த்திய ஆய்வு. அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக வல்லுனர் ராபர்ட் ரோசன்தல் இந்த ஆய்வை மேற்கொண்டார். ஒரு மாணவன் எப்படி இருந்தாலும் "நீ ஜெயித்துவிடுவாய்உன்னால் முடியாதா?'' என்று உற்சாகப்படுத்தினால் பலன் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றியதுதான் இந்த ஆய்வு.

திட்டப்படி ஆசிரியர்சில மாணவர்களை தேர்வு செய்து இவர்கள் திறமைசாலிகள் என்று மற்றவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். இதேபோல் பல நேரங்களிலும்பலர் முன்னிலையிலும் ஊக்கப்படுத்தப்பட்டனர். இந்தப் பாராட்டை அடிக்கடி கேட்ட மாணவமாணவிகள் இடையே புத்துணர்வு பொங்கியது. அவர்கள் ஆசிரியரின் நம்பிக்கையையும்பாராட்டையும் உண்மையாக்கும் வகையில் பலவழிகளிலும் சிறப்பாக செயல்படத் தொடங்கினார்கள். அதிக மதிப்பெண்கள் பெறுவது மட்டுமின்றி சாதனையாளர்களாக உயரும் அளவிற்கு தங்களை மேம்படுத்திக் கொண்டனர்.

இந்த ஆய்வு முடிவு ஆசிரியர்களுக்கும் சரிஉளவியல் வல்லுனர்களுக்கும் சரி ஆச்சரியத்தையே உண்டாக்கியது. ஒருவரைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களை கொண்டிருந்தால் அவர்களும் எதிர்மறையாகவே செயல்பட ஆரம்பிப்பார்கள். நாம் அவரிடம் கொண்டுள்ள எதிர்மறை எண்ணம்தான் இதற்கு காரணம் என்பதை உணரத் தவறி விடுகின்றோம்.

ஆய்வுகள் வெளிப்படுத்தும் உண்மை என்னவென்றால் நாம் பிறரிடம் எதை எதிர்பார்க்கின்றோமோ அதையே அவர்களது மனதில் விதைப்பதால் அதையே அறுவடை செய்கின்றோம். நல்லதையே நினைத்து எதிர்பார்த்தால் நம்மைச் சுற்றி உள்ளவர்களும் நல்லதையே வெளிப்படுத்துவார்கள்.

இதுவும் ஒரு சுவையான ஆய்வு. ஆசிரியரைப் பற்றிய மாணவர்களின் எண்ணங்கள் எவ்வாறு அவர்களில் மாற்றங்களைத் தருகிறது என்பது குறித்த ஆய்வாகும்.

இதற்காக ஒரு வகுப்பு மாணவமாணவிகளில் ஒரு பிரிவினரிடம் உங்கள் ஆசிரியர் திறமைமிக்கவர் என்று கூறப்பட்டது. மற்றொரு பிரிவினரிடம் உங்கள் ஆசிரியர் சற்று திறமைக் குறைவுடையவர் என்று கூறப்பட்டது.

ஆசிரியரிடம் எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் பாடங்களை புரியும்படி நடத்தமாட்டார் என்று கருதியதால் மதிப்பெண் சதவீதம் குறைந்தது. ஆசிரியர் திறமையானவர் என்று கருதியவர்கள் ஆர்வத்துடன் கற்றதை காண முடிந்தது. இது அவரவர்களின் எதிர்பார்ப்பின் விளைவே என்பது வெளிப்படையானது.

எதிர்மறை எதிர்பார்ப்பும் இல்லாமல்ஆக்கப்பூர்வமான எதிர்பார்ப்பும் அதிகளவில் இல்லாமல் அவரவர் எந்த அளவிற்கு அவர்களது ஆற்றலை வெளிப்படுத்த முடியுமோ அதற்கு உறுதுணையாக இருத்தலே சிறப்பாகும். இயல்பு நிலையில் செயல்படுவதே தங்களின் முழுமையான ஆற்றலை வெளிப்படுத்த உதவும்.

1940-ம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்களில் மிகவும் திறமையானவர்களாக விளங்கிய 95 பேர் உளவியல் ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களது வளர்ச்சியை 30 ஆண்டுகள் கண்காணித்து குறிப்பெடுக்க ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். அவர்களும் இதற்கு அனுமதித்து பலதகவல்களை அவ்வப்போது கூறிவந்தனர்.

1970-ம் ஆண்டு ஆய்வு முடிவுக்கு வந்தது. இறுதி நேர்முகத் தேர்வை 30 வயதைக் கடந்த ஜார்ஜ் வேலியண்ட் என்பவர் நடத்தினார். அப்போது நேர்முகத் தேர்வில் பங்கெடுத்தவர்கள் நடுத்தர வயதை தாண்டி இருந்தனர். செனட் உறுப்பினராகவும்பத்திரிக்கை ஆசிரியராகவும்தொழில் முனைவோராகவும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கினர்.

ஆய்வின் அடிப்படையில் பலவிவாதங்களும் நடந்தன. அதன் பின்னர் ஜார்ஜ் வேலியண்ட் தனது நேர்முகத் தேர்வு அனுபவத்தின் கண்டுபிடிப்புகளை வெளியிட்டார். அதில் சிலரை பேட்டி காணும்போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்ததாகவும்இன்னும் சிலரை பேட்டி காணும்போது தனக்குள் தன் திறமையின் மேலேயே சந்தேகம் ஏற்படும் உணர்வு மேலோங்கியதாகவும் குறிப்பிட்டார்.

ஏன் தனக்கு இருவிதமான அனுபவம் ஏற்பட்டது என்று ஆராய்ந்தபோது ஒரு உண்மையை உணர்ந்தார். அதாவது பேட்டி எடுக்கும்போது யாரிடம் எல்லாம் அவர் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தாரோ அவர்களின் சுபாவமே அப்படித்தான். அவர்களை யார் பேட்டி எடுத்தாலும் அவ்வாறுதான் தோன்றும் என்று அறிந்தார். அவர்கள் சமூகத்துடன் சுமுகமாக ஒத்துப்போகத் தெரியாதவர்கள் என்றும் உணர்ந்தார்.

யாரிடம் பேட்டி எடுத்த அனுபவம் இனிமையாக அமைந்ததோ அவர்கள் சமூக ரீதியாகவும் ஆரோக்கியமான உறவுகளை வளர்த்துக் கொண்டவர்களாகவே இருந்ததை கண்டார். அவர்கள் யதார்த்தத்துடன் செயல்பட தெரிந்தவர்கள் என்பதையும் அவரால் அறிய முடிந்தது.

மேற்கண்ட ஆய்வு முடிவுகள் ஒவ்வொன்றும் உணர்த்தும்பாடங்கள் உன்னதமானவை. இவற்றில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் இவைதான்.

உங்களை யாராவது அலட்சியமாக நினைத்தாலும்இழிவுபடுத்தினாலும் உங்களை நீங்களே குறைத்து மதிப்பீடு செய்யாதீர்கள்.

மற்றவரின் குறைக்கு நீங்கள் பொறுப்பேற்க முடியாது. ஆனால் நீங்களும் யார் மனதையும் காயப்படுத்தாமல் செயல்பட பழகிக் கொள்ள வேண்டும்.

நமது செயல்களையும் ஆராய்ந்து வரவேண்டும். எண்ணங்கள் அடிப்படை என்றாலும் செயல்களே முன்னேற்றம் தரும். எனவே எந்த செயலும் வாழ்க்கையில் பின்னடைவை ஏற்படுத்தாமல் உள்ளதாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

இக்கட்டுரையில் கூறியுள்ள ஆய்வுகளின் அடிப்படையில் நீங்கள் அறிந்து கொண்ட உண்மைகளை மனதில் அசைபோட்டு அன்னப் பறவை போல சரியானவற்றை சரியான வகையில் உள்வாங்கிக் கொண்டு வாழ்வில் உயர வாழ்த்துக்கள். வாழ்க்கையின் உண்மைகள் அப்படியே பறித்து சாப்பிடும் பழங்கள் போன்று இருக்கும். சில நேரங்களில் பலாப்பழத்திலிருந்து எடுத்து சாப்பிடக்கூடிய பலாச்சுளை போல இருக்கும். வாழ்க்கை என்பது விபத்தல்லவிஞ்ஞானம். ஆராய்ந்து அறிந்தால் உயர்ந்துவிடலாம்.

எனவே ஆரோக்கியமான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் ஆரோக்கியமான சூழ்நிலையை ஏற்படுத்தி பலவித அனுபவங்களால் நேர்மறை எண்ணங்களை கொண்டு வாருங்கள். உங்கள் குழந்தையும் சாதனையாளராக வளரும் என்பதில் சந்தேகம் இல்லை