Friday, 27 March 2020

ஹைக்கூ

🌸 இந்த கட்டுரை சற்று நீளமானது. அவசியமில்லை என கருதுவோர் கடந்து செல்க 

ஜென் ஊடாக ஹைக்கூ

இந்த உலகில் உள்ள மூன்று பிரதான மதங்களினுடாக மூன்று தத்துவங்கள் மக்களை  நல்வழிபடுத்தும் நோக்கில் தத்தமது பிரயாணத்தை ஆரம்பித்தன

அந்தவகையில் இந்து மதத்திலிருந்து மாயா தத்துவமும்

இஸ்லாம் மதத்திலிருந்து சூபியிசத் தத்துவமும்

பௌத்த மதத்திலிருந்து ஸென் தத்துவமும் வெளிப்படுத்தப்பட்டன

ஸென் மேற்கூறிய மூன்று மதங்களின் தத்துவங்களையோ, செயற்பாடுகளையோ 

அல்லது அவற்றின் போசகத்தன்மைகளையோ பரப்புரைகளையோ குறிப்பதாக இல்லை

இன்னும் சொல்லப்போனால் இவை தத்துவங்கள் அவ்வளவுதான்

அந்தவகையில் ஸென் தத்துவம் புத்த மத துறவிகளினால் உருவான ஒரு தத்துவம் என பொதுவாகவும் மேலோட்டமாகவும் சொல்லிக்கொள்ளலாம்

ஸென் பற்றி அறியும் முன் 

ஸென் என்பதன் சொல்லுக்கான பத விளக்கம் பெறுவது அவசியமானது

அந்தவகையில் 'ஸென்' என்னும் சொற்பதம் "தியானம்" என்னும் சமஸ்கிருத மொழியின் திரிபாகக் கருதப்படுகிறது 

சமஸ்கிருதத்தில் உள்ள ஒரு சொல் தியானா என்பதாகும்

இச்சொல் பாளியில் ஸானா என வழங்கப்படுகிறது

'ஸானா' என்னும் இச்சொல் சீனாவில் ஸான் என்றும், ஜான்-னா என்றும் மருவி 

பின் ஜப்பானுக்குள் நுழையும் போது 

இச்சொல் ஸென்னோ எனவும் திரிவுற்று 

இறுதியில் ஸென் என வழங்கப்படும் நிலைக்கு வந்துவிட்டது

தியானத்தின் கருத்தையே மேற் குறிப்பிட்ட சொற்கள் யாவும் உணர்த்துகின்றன

தற்காலத்தில் தமிழில் ஸென் என்னும் சொற் பதத்தை ஜென், சென், யென் என்றெல்லாம் எழுதும் உச்சரிக்குக்கும் போக்கு உள்ளது 

ஜென்னின் தோற்றம்

ஜென் என்பது தனியாக கிளர்த்தெழுந்த ஒரு மதமோ தத்துவமோ கிடையாது

உண்மையில் இது இந்தியாவில் தோன்றிய பௌத்த மதத்தின் ஆணி வேரே

கி.மு 6ம் நூற்றாண்டில் தோன்றிய மதமாக கருதப்படும்  பௌத்தம் 

அதற்கு முன்பு கூறப்பட்டு வந்த மதங்களின் போலித்தன்மைகளை நிராகரிப்புச் செய்யும் மதமாக தோன்றி 

அவற்றின் கட்டுக்களில் இருந்து மக்களை விடுவிக்க முற்பட்ட மதமாக பௌத்தம் கருதப்படுகிறது

இம்மதம் இந்தியாவிலிருந்து சீனாவுக்கு பிரயாணம் செய்தது

சீனாவில் உள்ள சவோலியன் கோயிலில் சொற்களில் ஏந்திய மதநூல்களின் போசகத்தன்னைக்கு புறம்பான அறிவினை கற்பிப்பதற்காக 

புத்தமதத் துறவியாக மாறிய தென்னிந்தியாவைச் சேர்ந்த பல்லவ இளவரசனான போதிதர்மனால் கி.பி 516 ல்  தொடங்கப்பட்டு 

அவரது துறவியான 'சட்டோரி' என்பவரால் 

ஜென் (தியான மார்க்கம்) சீனாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது 

ஜென் பௌத்தத்தின் இரு பிரிவில் ஒரு பிரிவான மகாயானத்தின் பிரிவாக இருந்து பின் தனியான பௌத்த மத பிரிவாக மாறியதாக 

கி.பி 7ம் நூற்றாண்டின் பதிவுகளில் காணப்படுகின்றன

மகாயானத்திலிருந்த பல்வேறு சிந்தனை போக்குளின் கலவையாக ஜென் பௌத்த மதம் உருவானதாக சொல்லப்படுகிறது

ஜென் சீனாவிலிருந்து வியட்நாமிற்கும், கிழக்கு கொரியாவுக்கும், ஜப்பானிற்கும் பரவியது

ஜப்பானிற்கு இய்சாய் (1141-1215), டோகன் (1200-1253) போன்றோரின் முயற்சியால் ஜென் புத்த மதமாக கொண்டு வரப்பட்டது

இங்கு ஜென்னின் விளக்கத்தை அறியும் முன் பௌத்தின் மைய உண்மையை அறிவது தேவைப்பாடானது

பௌத்தம் என்பது ஒரு மனிதன் சக மனிதர்களோடு சேர்ந்து வாழ்வதற்காக வகுப்பட்ட நன்னெறியே பௌத்தமாகும்

இந்நெறி ஐந்து வகை ஒழுக்கத்தையும்

எட்டு வழி மார்க்கத்தையும்

நான்கு உண்மைகளையும் 

பத்து நெறிகளையும் அடிப்படையாகக் கொண்டது

ஐந்து வகை ஒழுக்கம்

1. பொய் சொல்லாமை
2. திருடாமை
3. வீண் கொல்லாமை
4. கள்ளுண்ணாமை
5. கூடா ஒழுக்கம் மேற்கொள்ளுாமை

எட்டு வழி மார்க்கம்

1. நன் நோக்கு       -     (சரியாகப் புரிந்து கொள்ளுதல் )

2. நற் கருத்து       -     (சரியான சிந்தனை)

3. நல் வாய்மை     -     (சரியான பேச்சு)

4. நற் செயல்        -     (சரியான செயல்)

5. நல் வாழ்க்கை    -     (சரியான வாழ்க்கை)

6. நன் முயற்சி      -     (சரியான முயற்சி)

7. நற் கடைபிடி     -     (சரியான மனது)

8. நல் அமைதி     -     (சரியான கவனம்)

நான்கு உண்மைகள்

1. வாழ்க்கை துக்கமானது
2. துக்கத்திற்கான காரணமிருக்கிறது
3. துக்கத்திற்கான நிவாரணம் இருக்கிறது.
4. துக்கம் நீக்கம் பெறுகிறது.

பத்து நெறிகள்

1.  ஒழுக்கம்
2.  பிறர்  தேவைக்கான தானம்
3.  விருப்பு வெறுப்பற்ற தன்மை
4.  துன்பத்திலும் இன்பத்திலும் சுயக்கட்டுப்பாடு
5.  விடா முயற்சி
6.  சகிப்புத் தன்மை
7.  வாய்மை
8.  உள்ள உறுதி
9.  அன்பு
10. மைத்திரி ( உயிர் வாழ்வன அனைத்தின் மீதும் அன்பு கொள்ளல்)

மேற் சொன்ன பௌத்தத்தின் சாரங்களுக்கும் ஜென்னுக்கும் நெருக்காமான தொடர்பு உண்டு

இன்னும் சொல்லப் போனால் இவை நகமும் சதையும் போல்  பிணைக்கப்பட்டவை

இதனை இந்து தத்துவ மரபில் ஒப்பீடு செய்து பார்க்கையில் 

இந்து தத்துவ மரபின் கர்மயோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்ற மூன்றில் 

நாம் ஜென்னை ஞான யோகத்தில் அடையாளப்படுத்தி பார்க்கலாம்

ஆன்மீகம் என்பது ஒரு தனிமனிதன் தன்னை அண்ட வெளியுடன் (பிரபஞ்சத்துடன்) இணைக்கும் புள்ளியை உணர முற்படும் முடிவில்லா தேடலாகும்

இத் தேடல் பொறிமுறையை ஜென் எத்துணை வரம்புமின்றி அடையவே முற்படுகிறது

இந்த இடத்தில் ஜப்பானிய சிந்தனையாளர் சுயிகியின் ஜென் தொடர்பான கருத்துக்கள் முக்கியமானவை

ஜென் எல்லா சடங்குகள், சொர்க்கம், நரகம் என்னும் உருவாக்கங்கள் எல்லாவற்றையும்  நிராகரிப்பதாக தன் கருத்தை முன் வைக்கிறார்

ஜென்னில் வழிபாட்டிங்களில் உள்ள கடவுள்களின் சிலைகள் வெறும் காட்சிப் பொருள்களே 

மதங்கள் உருவாக்கிய எந்த கோட்பாட்டிற்கும் சம்பிரதாயங்களுக்கும், அவை சார்ந்த பிரயோகங்களுக்கும் ஜென்னில் இடமில்லை

கடவுளை நோக்கி நீ செல்ல வேண்டுமென்றால் 

உன்னையே நீ ஆழ்ந்து அகழ்ந்து உன்னையே நோக்கி நகர்ந்து கொண்டிரு என்று ஜென் சொல்கிறது

இதை சுயம் தேடும் பார்வைக் கோணத்தில் பார்த்தால் அது தவறான பார்வையே

ஓஷோவின் கூற்றுப்பிரகாரம்
காணமல் போன மூக்குக்கண்ணாடி தன் மூக்கின் மேல் இருந்து அதை கண்டுகொள்வது போன்ற உணர்வே ஜென் என்கிறார் 

இதன் மெய்யான பொருள் நீ உன்னை தியானத்தின் வாயிலாக தேடி அடை என்பதுதான்

தன்னிலிருந்து புறவயமான அனைத்தினையும் ஜென் ஆன்மீகத்துக்கு அன்னியமானதாக பார்க்கிறது 

'மனதைக் கொன்றொழி' என்னும் ஜென்னின் மேலோட்டமான கருத்தினை துருவிப் பார்க்கையில் 

ஜென் தொடர்பான புரிதல் சிக்கல்களின் இருன்மைத் தன்மை துலங்கும்

இந்த உலகின் அலங்கார ஆசைகளுக்களுக்கும், 

அவை ஏற்படுத்தும் மாய நிகழ்வுகளுக்கும் எம் மனம் அலைக்கழிக்கும் போது 

நம்முள் பொதிந்துள்ள மெய்யான உருவில்லா அகப்பொருளை உணராமலே தொலைத்து விடுகிறோம் 

ஜென் புறவயத்தின் திழைப்பால் தொலைத்த உண்மையான உன்னை தேடிக்கொடுக்கிறது 

அனைத்தும் அறிந்த நிரம்பல் நிலையை உடையவரையே நாம் சிறப்புடையவர் என்கிறோம் 

ஆனால் இதற்கு ஜென்னோ அடிதலை மாற்றிச் சொல்கிறது

காலியான பாத்திரத்தில் தான் எதையாவது ஊற்றவியலும் 

அதுபோலத்தான் வெறுமையான இடைவெளிகளால் நிரம்பிய மனதினை உடையவரிடமே உண்மையை உணர்த்தவும் அதனை உள் தரிப்பு செய்யவும் இயலுமென்கிறது ஜென்

வெறுமை என்பது இங்கு முற்றிலும் வெறுமை என்ற பொருளில் கையாளப்படவில்லை

நம்மைச் சுற்றி அகவுலகு, புறவுலகு என்னும் இருவிதமான தன்மைகள் உள்ளன

புற உலகம் என்பது போலித்தன்மைகளை உடைய நாம் அறிந்தே உலகை குறிக்கிறது 

அக உலகம் என்பது அனுபவம் 

இந்த அனுபவத்தளத்தை ஜென் என்னும் ஆழ் தியானத்தின் மூலம் தொடுகை செய்யலாம்

ஜென் கூறும் தியானம் 

ஜென் சொல்லும் தியானம் என்பது கால்களை மடக்கி இருத்தி மனத்தை ஒரு நிலைப்படுத்தி இருப்பதல்ல

மாறாக 

அது ஜென் வாழும் போது   அனுபவிக்கும் செயல் முறையின் உள்ளார்ந்த ஈடுபாட்டையே அது தியானம் எனச் சொல்கிறது

இன்னும் சொல்லப் போனால்  

நம் செயல் வடிவிலான அனுபவத்தளத்தினூடாக 

நம்மை நமக்கும் உலகிற்கும் அறிமுகம் செய்து வைக்கிறது

ஜென்னை பொறுத்தவரை தியானம் என்ற ஒன்று பிரத்தியேகமா இல்லை 

ஏனெனில் ஜென்னே தியானமாகும்

நாளும் நாம் ஆற்றும் கருமங்களின் வாயிலாக தியானம் மேற்கொண்டு ஜென்னினை அனுபவவிக்கலாம் 

நடப்பது, பேசுவது, கேட்பது, உண்பது, உறங்குவது, புன்னகைப்பது, நீராடுவது, தொழிலாற்றுவது, பூஞ்செடியை கத்தரிப்பது, பராமரிப்பது, பிரயாணம் செல்வது 

என நிகழும் நமது அனைத்து செயல்களையும் விருப்போடும் நிதானமானதாகவும் பக்குவமாகவும் அர்ப்பணிப்போடும் அதை ரசித்து ஆன்ம திருப்தியோடும், கண்ணியத்தோடும் 

நீ நீயாக இருந்து அந்த கனப்பொழுதை ரசித்து சுவைத்து வாழும் நிலையே ஜென் தியானம் ஆகும்

இந்த தியான நிலையில் எது எப்படி கிடைக்கிறதோ அதை விருப்போடு ஏற்று உன்னுள் உள்வாங்கு. 

அது எந்த நிலையாயினும் அதனை ரசிக்கத் தவறாதே என ஜென் உணர்த்துகிறது. 

இதனை ஒஷோ பின்வருமாறு சொல்கிறார்.

       *"தத்துவம் என்பது பார்ப்பது,
       ஜென் என்பது பங்கு கொள்வது"*

ஜென் நம்முள் உறங்கு நிலையில் உள்ள ஞானத்தை உசுப்பி எழுப்புகிறதே தவிர 

மாறாக அது யாரையும் ஞானியாக மாற்றுவது இல்லை

ஜென்னை பொறுத்தமட்டில் இவ்வுலகில் எவரும் புத்தனாக வேண்டுமென்றில்லை. 

ஏனென்றால் 

புத்தன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று சொல்கிறது ஜென் 

எப்படியென்றால் நாமே ஒரு புத்தர் தான். 

நமக்குள் புத்தன் இருக்கிறான் அதை நாம் வெளிப்படுத்துவதில்லை 

ஜென் அதை வெளிப்படுத்த முனைகிறது. 

      ''விலகியிரு 
       உலகம் உன்னுடையதே
       ஊனுக்குள் ஒரு புத்தன்''
                (புனான்-ஜென் ஹைக்கூ)

மேலே குறிப்பிட்ட ஜென் ஹைக்கூ செல்வது என்னவென்றால்  

முதலில் உன் உடலுக்குள் இருக்கும் புத்தனை கண்டுபிடி 

அப்படி நீ கண்டுபிடித்தால் இந்த உலகம் உனதானதே. 

கண்டு பிடிக்க போலியும், பொய்மையும், பொறாமையும் சூழ்ந்த இந்த புறவுலகை விலக்கும்படியாக மேற்குறிப்பிட்ட ஹைக்கூ வலியுறுத்துகிறது.

ஜென்னின் உன்னதமான பண்புகள்

பக்குவப்பட்ட மனத்தின் அனுபவத்திரளால் எழும் உணர்வின் படிநிலை ஜென் ஆகிறது. 

ஜென் மனிதனது ஆன்ம உணர்வாகும் (Zen is the spirit of a man) 

ஜென் உட் தூய்மையையும் நற் தன்மையையும் நம்புகிறது

ஜென் தன்னை எவரிடமும் எந்த எழுத்துரு கொள்கையோ, அல்லது வாய்வழிக் கொள்கையோ மனிதனிடத்து திணிப்பதில்லை

தவிர இதை செய், அதை செய் அப்படி நட, இப்படி நட, குறித்த ஒன்றையே பின்பற்று என்றெல்லாம் ஜென் எப்போதும் திணிப்பதில்லை 

'நீ நீயாக இரு' இதைத் தவிர வேற எந்த போசகமும் ஜென்னிடம் இல்லை

ஜென் என்பது மதங்களுக்கு அப்பாற்பட்ட உன்னதமான உணர்வு

மத நோய் பிடித்தவர்கள் ஜென்னினை உணர்ந்தால் அது அவர்களுக்கு நல் மருந்தாகும்

ஜென் தன்னை பௌத்தத்தின் உயிராக இருப்பினும் 

அது அனைத்து மத, தத்துவங்களின் ஆன்ம வடிவாகும்

ஜென் அழகியல், ஆனந்தத்துடான ஒரு அற்புதமான உணர்வு நிலை

இந்த உணர்வில் எந்த சுமையுமில்லை 

இன்னும் சொல்லப்போனால் இது சுமைகளை இறக்கும் அனுபவ தியானமாகும்

ஜென் பட்டாம்பூச்சிக்கு ஒப்பானது அதற்கு பறப்பது மாத்திரமே நோக்கல்ல

இயற்கையின் நிரல்படுத்தலில் உள்ள சீரான அனுபவிப்பை ஏற்க, பிரயோகிக்க ஜென் நமக்கு கற்றுத்தருகிறது

ஜென் மனிதனது ஜனனத்தையும் மரணத்தையும் நிகராக காண்கிறது

இரண்டுமே அழகானவை

இந்த முழு அண்டமே அழகானது 

அதில் நாம் ஜனிப்பதும் அழகு 

அதுபோல் மரணிப்பதும் அழகு 

உயிரின் தற்காலியத் தன்மை காலியாகும் முன் 

அழகை ரசித்துவிடு என்கிறது ஜென்.

           ''விடை பெறும் இலை
           ரகசியம் சொல்லிச் சென்றது
           மரணத்துக்குரியதான''
                  (லிப்னானி-சுபிபோதகர்)

இந்த ஹைக்கூ ஒவ்வொரு மனிதனின் பிறப்பு நிச்சயமோ, இல்லையோ 

ஆனால் இறப்பு நிதர்சனமானது எனச் சொல்கிறது. 

மற்றும் ஜென் நிலை என்பது அளவிட முடியாத ஒன்று 

அது வற்றுவதுமில்லை நிரம்பி வழிவதுமில்லை 

ஜென் என்றும் ஒரே நிலையில் தான் இருக்கிறது

இதுதான் ஜென்னிற்கான திட்டவட்டமான  வரைபிலக்கணம் என யாராலும் கூறவியலாது

ஏனெனில் அது சட்டகத்துக்குள் உட்பாட வாழ்வின் அனுபவ தியானம். 

இங்கு ஒவ்வொருவரின் வாழ்வும் அனுபவமும் ஒரே மதிரியாக அமைவதில்லை. 

ஜென் ஒன்றின் இழப்பால் வரும் இடை வெளியை இன்னொர் தரிசனத்தின் வாயிலாய் நிரப்பும் தன்மையை உடையது

இதனை ஜப்பானிய கவிஞர் மோரிடாகேவின் பின்வரும் சென் ஹைக்கூ தெளிவு படுத்தும் 

       உதிர்ந்த பூ
       கிளைக்கு திரும்புகிறதோ?
       வண்ணத்துப்பூச்சி
                        (மோரிடாகே)

இங்கு உதிரும் பூவின் வெற்றிடத்தை மோரிடாகே வண்ணத்துப்பூச்சியினால் நிரப்பி 

அதன் பின்வரும் எதிர்கால வசந்த அழகையும் முன்னறிவிப்பு செய்துள்ளார். 

ஹைக்கூவுக்குள் ஜென்னின் பரவல்

ஜென் தத்துவம் விளக்க தனியான நூல்களோ , ஜென் குறித்த வியாக்கியானங்களோ எதுவுமில்லாதபோதும் 

இது எவ்வாறு மக்களிடத்து சென்றடைந்தது என்பது சிந்திக்க வேண்டிய விடயமே

ஜென் தத்துவத்தை உணர்ந்து அதனுள் உறைந்த தத்துவ ஞானிகளின் வாழ்க்கை அனுபவத்தில் இடம் பெற்ற சம்பாஷணைகளினதும், 

நிகழ்வுகளினதும் கதைகள் மூலமாகவும் 

அத் தத்துவ ஞானிகளின் ஜென் கவிதைப் படைப்புக்களாலும் 

ஜென் பழமொழிகளாலும் ஜென் தத்துவம் உலக மக்களிடத்து போதிக்கப்படுகிறது 

ஜென் கவிதைகள் என்னும் போது ஹைக்கூ கவிதைகளும் இதில் பெருமளவு பங்கினை செய்து வருகிறது 

ஜென் தத்துவம் என்பது வாழ்வின் குறிக்கோளற்ற தன்மையாகும் 

எதனையும் அப்படியே சொல்லிவிடு என்பதாக அமைகிறது

       காட்டுவாத்துக்குத் தன் நிழலை
       நீரில் பதுக்கும் நோக்கில்லை
       அதன் உருவத்தைப் பிரதிபலிக்கும் 
       எண்ணம் நீருக்கு இல்லை

இந்த ஜென் தத்துவத்தின் மூலத்திலிருந்தே ஹைக்கூவிற்கான அடிப்படை வியாக்கியானம் எழுகிறது

ஜென் சீனாவிலிருந்து தோற்றம் பெற்றாலும் 

ஹைக்கூ ஜப்பானிலிருந்தே தோற்றும் பெற்றது

எடோ காலத்திலே பூரணமான ஹைக்கூ வடிவம் தோற்றம் பெற்றாலும் 

முரோ மொச்சி (1333-1603) காலத்திலும் ஹைக்கூ சாரங்களை காணலாம் 

எடுத்துக்காட்டாக 

       உலகம் நகரும்
       தூறலின் கூரையாக
       பார்த்துக்கொண்டிரு

கி.பி 1471ல் எழுதப்பட்ட இக் கவிதையில் ஹைக்கூ தன்மைகளை காணலாம்

இந்த கவிதை எதிலும் சாட்சியாய் இரு என்னும் ஜென் நிலையை சொல்வதாக உள்ளது

எடோ காலம் (கி.பி 1603-1863 வரை)

இக்காலத்தில் தான் சீன ஜப்பான் மொழிக் கலவையாக ஹைக்கூ கவிதை தோன்றியது

மூன்றே மூன்று அடிகள் 5,7,5 என்ற அசை அமைப்பில் அமைந்தது

எடோ காலமே உண்மையில் ஹைக்கூவுக்கு முதன்மை அளித்த காலமாகும்

இக்காலமே பெரும்பான்மையான ஹைக்கூ கவிஞர்களை அளித்த காலமும் ஆகும்

ஜென் தத்துவ ஞானிகளும் கவிஞர்களும் தங்களின் வாழ்க்கையோடு ஒன்றித்து தங்களின் கவிதைகளை படைத்தார்கள்

அவர்கள் இயற்கையின் ஆச்சரிய, சாதாரண தரிசனங்களோடு தம்மை கலந்தார்கள்

எல்லாம் அதனதன் இடத்தில் மிகச் சரியாகவே உள்ளது என்பதே ஜென்னின் தத்துவமான தரிசனமாகும்

ஆனால் அந்த இயற்கைக்குள் நுழையும் ஒரே வழி ஆழ்ந்த ரசிப்பு மாத்திரமே

ஜென் ஹைக்கூவில் பௌத்த மதத் துறவிகள் மனத்தின் மீதான அகவிசாரிப்புக்களையும், இயற்கை தரிசனங்களில் உறைந்துள்ள ஞானத்தின் துலங்கல்களை பதிவு செய்தார்கள்

மனிதனின் மனமும், மௌனமும் இடைவிடாது இந்த சமூகத்தோடு பேசும் இத்தகு சிந்தனையாக்கத்தின் மீதான ஜென் முகிழ்வே ஹைக்கூ.

ஜப்பானிய ஜென்னில் மூங்கிலைப் பற்றி அறிவதானால் மூங்கிலாக மாறு

தேவதாருவைப்பற்றி அறிவதானால் தேவதாருவாக மாறு என்னும் கருத்துள்ளது

ஜப்பானிய மொழியில் உள்ள ''நரநள'' என்னும் சொல்லுக்கு 

ஒன்றினுள்ளே நுழைந்து 

அதற்குள் இருப்பதை வெளிக்கொணர்ந்து 

அதற்கு இலக்கிய வடிவம் கொடு என்னும் பொருளுண்டு 

அவ்வாறே ஜென் துறவிகள் தாங்கள் காணுற்ற இயற்கையின் தரிசனங்களை தமது ஹைக்கூ படைப்பின் வாயிலாக வெளிப்படுத்தினர்

அவர்கள் தத்தமது தரிசனப்பதிவுகளை ஹைக்கூவாக ஆக்குவதற்கு 

அவர்கள் பல காலங்கள் பல நெடுதூரபயணங்களை மேற்கொண்டார்கள்

அதன் மூலமாக தாம் ரசித்து அனுபவித்தவற்றை ஹைக்கூவாக படைத்தார்கள்
      
         அழகிய பொருட்கள், சம்பவங்கள் நிலையற்றவை
         கனத்தில் மின்னி மறையக்கூடியவை 
         ஆனால் அழகு என்னும் தத்துவம் நிரந்தரமானது
                                 (ஜென் தத்துவம்)

மேற்குறித்த தத்துவத்திற்கு இயைபாக அவர்கள் இயற்கையின் அழகில் இருண்மைப் பட்டிருக்கும் ஜென் ஞானத்தை  மறைமுகமாக இயற்கையின் படிம நிலையினூடாக வெளிப்படுத்தினர்

இவ்வாறு அவர்கள் தமது ஹைக்கூ பதிவுகளை மேற்கொள்ளும்போது வாசகர் பரப்பிலிருந்து வரும் எத்தகைய சிந்தனை எதிர்பார்ப்பையும் எதிர்பார்த்து அவர்கள் ஹைக்கூவை ஆக்குவதில்லை 

அவர்களின் நோக்கம் தம் அனுவப தரிசனத்தை மாத்திரம் வெளிப்படுத்துவதே 

அதற்கு பின் அதனுள் உறைந்திருக்கும் ஜென் மெய்நிலையை தேடும் பொறுப்பை வாசகரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்

ஹைக்கூ பற்றி பேச வந்த பாரதி

       ''கவிதை எழுதுபவன் கவியன்று
       கவிதையே, வாழ்க்கையாக உடையவன்
        வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன் அவனே கவி''

என்கிறார் 

இவரது கருத்தின்படி கவிஞனின் வாழ்வியலின் அனுபவ மனநிலைகளே கவிதையாகச் சொல்லப்படுகிறது

இதனையே ஜப்பானிய ஹைக்கூவாளர்கள் செய்தார்கள்

அவர்களின் சொந்த அனுபவ தளத்திலே ஹைக்கூ எழுந்தது

இதனை ஜட்டோ ஜின் சாய் (1627-1705) அவர்கள்

''ஜப்பானிய கவிதையானாலும் வேறு எம் மொழிக் கவிதையானாலும் 

கவிதையை புரிந்து கொள்ளல் என்பது கவிஞனை புரிந்துகொள்ளல் என்பதாகும்.''எனக் கூறியுள்ளார் 

ஆகவே ஜென் ஹைக்கூவை புரிய அதைப்படைத்தவனின் வாழ்க்கை பின்புலம் புரிவது அவசியமானது  

ஜென்னை அவன் வாழ்க்கையினூடாகவே உணர்த்துகிறான் 

அதற்கு ஹைக்கூ என்னும் உன்னதமான கவிதைக் கருவியை பயன்படுத்துகிறான்

ஆனால் ஜப்பானியர்கள் ஹைக்கூவை கவிதையாக கொள்ளாது

மாறாக அவற்றை ஜென் நிலைகுறிக்கும் கலைப் பொக்கிஷமாவே அவர்களால் உணரப்படுகிறது. 

       ஹைக்கூவில் பொருளை தேடாதீர்கள்.
       உங்களைத் தேடுங்கள் நிச்சயம் கிடைப்பீர்கள்
                          (தமிழன்பன்)

இங்கு தமிழன்பன் அவர்கள் ஹைக்கூ எழுதுவோனையும் வாசிப்போனையும் தன்னை தேடும் முறைமையாகவும் பொருளை புனைந்து ஹைக்கூ படைக்க வேண்டாமெனவும் சொல்லியுள்ளார் 

இவ்வாறான இந்த கருத்தாக்கம் ஜென்னின் மூல தத்துவமே.

அன்பு, காருண்ணியம், தான அளிக்கை, மனசுத்தி, இயற்கையை நேசித்தல் போன்றவற்றை 

உன்னுள் உள்வாங்கி வரவேற்கும் ஆழ்நிலை தியானம் ஹைக்கூவின் ஜென் நிலையாகும் 

ஹைக்கூ இயற்கையை பாடுவதுபோல் வெளித் தோற்றமளித்தாலும் 

அது மனிதனை பகுத்தறிவிலிருந்து அப்புறப்படுத்தி ஆறாம் அறிவையும் தாண்டி பிறிதொரு அறிவை மனிதனுக்கு வழங்கக்கூடிய மகத்துவமிக்க ஜென்னின் தொடர்ச்சியாகும்
                       -முற்றும்-

ஹைக்கூ தொடர்பான பிறிதெரு கட்டுரையோடு மீண்டும் வருவேன்.
பா.தா  (ராஜன்,மகிழூர்,மட்டக்களப்பு)

கட்டுரை எழுத உதவிய உசாத்துணை நூல்கள் 
1. ஓஷோ தமிழ் ஹைக்கூவில் புரிதல்
2. தமிழ் ஹைக்கூவில் மொழி வீச்சு
3. ஜென் கதைகள்
4. புத்தரும் அவரது போதனைகளும்
5. ஹைக்கூ கவிதை வரலாறும் மித்திராவின் கவிதைகளும்
6. பௌத்த ஜாதகக் கதைகள்  🌸

💮 பகிர்வு 💮

Thursday, 5 March 2020

நல்லது

🍂🌵🌾🌸அழகான காலைப்பொழுது வணக்கம் இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்🌾🌵🍂🌸

*குட்டி கதை*

*"தேடி வரும் தெய்வம்..."*

தன்னிடம் சீடனாக புதிதாக வந்து சேர்ந்தவரிடம் குரு கேட்டார், 
“ஆன்மிகத்தின் நோக்கம் என்ன என்று சொல்ல முடியுமா?”

புதிய சீடன், “இறைவனை அறிவதும், அடைவது தான் ஆன்மிகத்தின் நோக்கம்...”

“அப்படியா?”

“என்ன அப்படியா என்று கேட்கிறீர்கள்... அப்படித்தானே இருக்க முடியும்?”

“சரி... இத்தனை நாள் ஆன்மிகத்தில் சாதகம் செய்து வருகிறாயே இறைவனை அறிந்தாயோ?”

“இல்லை... ஆனால் முயன்று கொண்டிருக்கிறேன்.”

“நல்லது... உண்மையிலேயே இறைவனை அறிந்து கொண்டுவிட முடியும் என்று நம்புகிறாயா?”

சீடன் சற்றே யோசித்துவிட்டுச் சொன்னான்.

“நம்புகிறேன்... இருப்பினும், கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கிறது.”

“எதனால் இந்த சந்தேகம் வருகிறது?”

“பலர் பலவிதமாக இறைவனைப் பற்றிச் சொல்கிறார்கள். மிகவும் ஆராய்ந்து பார்த்தால் தெளிவை விடக் குழப்பமே மிஞ்சுகிறது.”

“நல்லது... எப்போது நீ உள்ளது உள்ளபடி சொன்னாயோ அதுவே நல்லது சீடனே... 

இப்போது நான் வேறு விதமாகக் கேட்கிறேன்... 

நீ ஆண்டவனைத் தெரிந்து கொள்ள, அடைய உண்மையிலேயே விரும்புகிறாயா...?”

“ஆமாம் குருவே.”

“உன் விருப்பத்தின் காரணமாகத்தான் நீ ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாய். அப்படித்தானே?”

“ஆமாம் குருவே.”

“அன்புள்ள சீடனே! நீ இறைவனை அடைய, ஓர் எளிமையான மாற்று வழியைச் சொல்லித் தருகிறேன்...”

“மிகவும் சந்தோஷம் குருவே... இந்த வழிக்காகத்தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.”

“ஆனால் இந்த வழியில் நீ இறைவனை அடைய முடியாது... ஆனால் இறைவன் தான் உன்னை வந்து  அடைவான்.”

“இது குழப்பமாக இருக்கிறதே.”

“ஒரு குழப்பமும் இல்லை... 
ஒரு அரசன் இருக்கிறான்... 

பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு அவன் ராஜா. 

அவன் அருகே நெருங்குவதோ பேசுவதோ அறிவதோ எளிமையான விஷயம் அல்ல. 
முடியவும் முடியாது.”

“ஆம்.”

“ஆனால், ராஜாவை சந்திக்க வேண்டும் என்கிற பிரஜை, ஓர் அருமையான காரியத்தைச் செய்கிறான்...

அவன் தேசத்தில் உள்ள மக்கள் எல்லோருக்கும் பயன்படும்படியாக உழைக்கிறான். 

பல அறச் செயல்களைச் செய்கிறான். 

இந்தச் செய்தி ராஜாவுக்குப் போகிறது.

உடனே ராஜா பிரதிநிதிகளை அனுப்பி தன் அரசவைக்கு அவனை வரவழைக்கிறார். 

அல்லது 

அவரே நேரில் அவனைப் பார்க்க வருகிறார். 

அவனோடு உரையாடுகிறார்... 
பாராட்டுகிறார்.... 
பரிசுகள் தருகிறார். 

இது நடக்கும் இல்லையா?”

“நிச்சயமாக நடக்கும் குருவே.”

“இப்போது ராஜாதான் இறைவன். 

நீதான் அவன். 

நீ என்ன முயற்சி செய்தாலும் ராஜாவைப் நெருங்குவது கஷ்டம். 
ஆனால், உன் செயல்கள் பலருக்கும் பயனுடையதாக இருந்தால்... 

அந்த ராஜாவே (இறைவனே) உன்னைப் பார்க்க வருவார். 

எனவே, இறைவனைப் பார்க்கும் முயற்சியைக் கைவிடு. 

*இறைவன் உன்னைத் தேடி வரும் தகுதியான செயல்களில் மட்டுமே ஈடுபடு...*

இறைவனே உன்னை வந்து அடைவான்... சரிதானே...?”

“மிகவும் சரிதான் குருவே...”

“நல்லது சீடனே, இனி ஆன்மிகம் உனக்கு கை கூடும். போய் வா...”

சீடன் தெளிவடைந்து குருவிற்கு நன்றி தெரிவித்தான்...

*நம்*
*எண்ணங்களும்...*
*உணர்வுகளும்...*
*சிந்தனைகளும்...*
*சொல்களும்...*
*செயல்களும்...*

*நம்மை சுற்றி உள்ள மனிதர்களுக்கு...*

*நல்லது செய்யுமெனில்...*

*இறைவனை*
*நாம் தேட* *வேண்டியதில்லை...*

*இறைவனே நம்மை தேடி வருவார்...*

          🌺ஓம் நம சிவாய 🌺

Sunday, 1 March 2020

துன்பம் நீக்குவது எப்படி

துன்பம் எதிர்கொள்வது எப்படி? - ஓஷோ

துன்பம் நிரந்தரமாய் நீங்க துன்பம் வரும்போது அதை அப்படியே அனுபவியுங்கள்.அதைக் கண்டு ஓட வேண்டாம்.அப்படி ஓடினால் அது உங்களைத் துரத்திக் கொண்டுதான் வரும்.அதை மறக்க நினைத்தால் அது உங்கள் மனதில் ஆழத்தில் பதுங்கி விடும்.
மன வியாதிகளுக்கு மருந்து கொடுத்தால் அது உள்ள துன்பத்திலிருந்து உங்களை விலகி ஓடச்செய்யும்.அதனால் துன்பத்திலிருந்து உங்களுக்கு நிரந்தர விடுதலை கிடைக்காது.
நீங்கள் துன்பத்தினால் வரும் வடுவை தைரியமாக முழுமையாகப் பார்க்க வேண்டும்.உங்கள் அறையில் அமைதியான சூழ்நிலையில் தனிமையில் அமர்ந்து வேறெதிலும் மனம் ஈடுபடாது.
உங்கள் உள்போராட்டங்களைக் கவனியுங்கள்.உங்கள் உள்ளே உண்டான வடுவின் வலியை முழுமையாக மேலே கொண்டு வந்து உணர்ந்தால் அது உங்கள் இதயத்தைப் பிழியும்.அது மரண வலியாகத்தான் இருக்கும்.அதை அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.அப்போது நீங்கள் ஒரு குழந்தை போலக் கதறலாம்.தரையில் புரண்டு அழலாம்.அப்போது அந்த வலி உங்கள் உடல் முழுவதும் பரவி இருப்பதை உணர்வீர்கள்.

துன்பம், கவலை என்று ஏற்படும்போது அதை மறக்க அல்லது வெளியே தள்ள இதுவரை பழக்கப் பட்டிருக்கிறீர்கள்.அதற்கு மாறாக அதை எவ்வளவு அதிகப் படுத்த முடியுமோ,அப்படி அதிகப் படுத்தி, அதை நீங்களே ஜீரணம் செய்வது என்பது ஒரு புதுமையான மாறுபட்ட செயல்.அது உங்கள் இயல்பாக மாற கொஞ்சம் நாட்கள் ஆகும்.அப்படி அந்த சக்தியை முழுமையாக ஜீரணம் செய்து விட்டால்,அது உங்கள் உடலோடும் உள்ளத்தோடும் கலந்து விட்டால் உங்களிடம் புதுமையான ஒரு கதவு திறக்கும்.அதன் வழியாக நீங்கள் ஒரு புதிய பயணத்தை தொடங்குவீர்கள்.

நீங்கள் எப்போது அந்த வலியை பரிபூரணமாக ஏற்றுக் கொண்டு விட்டீர்களோ,அதனுடன் கலந்து விட்டீர்களோ,அதன்பிறகு அது உங்களுக்கு ஒரு வலியாகவோ, துன்பமாகவோ தெரியாது.ஒரு பெரிய ரசாயன மாறுதல் உங்களுக்குள் இப்போது நடந்திருக்கிறது.இப்போது உங்கள் வலி, துயரம், கவலை, இறுக்கம் அனைத்தும் மகிழ்ச்சி, ஆனந்தம், புத்துணர்ச்சி, பூரிப்பாக மாறி இருக்கும்.
இதை நீங்கள் அனுபவத்தில்தான் உணர முடியும்
                                                                                                                                                                                                - ஓஷோ

தீட்சை

சீடன் குருவின் காலடியில் அமர்ந்திருந்தார்..
குருவானவர்,

தீடீரென்று சீடனடம் ஜன்னலில் இருக்கும் அந்த ஏட்டுச்சுவடியை எடுத்துவந்து என்னிடம் கொடு என்றார் குரு

ஜன்னலா?.. 
எந்த ஜன்னல்?... என்று
சீடன் கேட்டான்..

உனக்கு தெரியாதா???
இவ்வளவு நாளாக இங்கு வந்துபோகும் உனக்கு ஜன்னல் எங்கு இறுக்கிறது என்று தெரியாதா? என்றார் குரு..

இல்லை ஜன்னலை தெரிந்து எனக்கென்ன ஆகப்போகிறது!!! நான் தங்களின் முன்பாக அமர்ந்திருக்கும் போது...

வேரெதுவும் என் கண்ணில் படுவதில்லை... நான் எதையும் வேடிக்கை பார்பதற்காக வரவில்லை..
என்று பதிலளித்தான் சீடன்!!!

ஓ அப்படியா!!!
இனி,, நீ இங்கு வரத் தேவையில்லை... உனக்கு தீட்சை கிடைத்தாகி விட்டது"" போய் வா...

என்று வழியனுப்பி வைத்தார் குரு"""

Wednesday, 26 February 2020

நன்றியுணர்வு

அனைவருக்கும் அன்பு வணக்கம்🙏🙏🙏🙏

 இது ஒரு புதிய முறை இந்த முறையை நீங்கள்  ஏற்கனவே உங்கள் வாழ்க்கையில்  பல  பேர்  பண்ணியிருந்தாலும் மிகவும் மகிழ்ச்சி மேலும் இதை பண்ணினால் மிகவும் ரொம்ப மகிழ்ச்சி. 

இவ்வளவு பிரபஞ்சம் சம்பந்தமாக  புத்தகங்கள்  படிக்கிறீர்கள் அதிகமாக, ஆனால் புத்தகத்தை தேடி தயவுசெய்து  அதிகமாக செல்லாதீர்கள்.
 புத்தகம் வேண்டும் ஆனால் புத்தகம் மட்டுமே வாழ்க்கை இல்லை. நீங்கள் இதை நேரடியாக இறை சக்தியுடன் தொடர்பு  கொள்ளுங்கள் இறை சக்தியை உள் வாங்குங்கள்.
  
இந்த முறையை செய்து விட்டால்  பிரபஞ்சத்தின் ஒரு ஏணியை ஏறி விடுவீர்கள் என்று என்னால் உறுதியாக கூற முடியும். உங்களது ஈகோ   சுக்குநூறாக உடையும்.  மனசு லேசாகும். 
 
  உங்கள் வீட்டிலில்   உள்ள  மரம், பக்கத்தில் எங்கேயாவது உள்ள மரம், எங்க வேண்டுமானாலும் சரி ஒரு மிகப்பெரிய மரம்  அதற்கு முதலில் குறைந்தபட்சம் ஒரு லிட்டர் தண்ணீராவது ஊற்றிவிட வேண்டும் தண்ணீர் ஊற்றும் பொழுது அதில் உங்கள் அன்பு மட்டுமே இருக்க வேண்டும் தண்ணீரை நீங்கள் குடிப்பது போல் இருக்கும் தண்ணீரை மரத்திற்கு கொடுக்க வேண்டும் (நோ கேன் வாட்டர்.)

 பிறகு  உங்களது   இதயப் பகுதி மற்றும் உங்களது நெற்றிப்  பகுதி மரத்தோடு  ஒட்டியிருக்க வேண்டும்.   கட்டிப்பிடித்து உங்களுடைய கஷ்டங்களை  அப்படியே கொட்டி விடாதீர்கள் அந்த மரம்  பாவம்  முதலில் அன்பை செலுத்துங்கள் நீ கொடுக்கின்ற  ஆக்சிஜன்   தான் இதுவரை  நாங்கள் வாழ்ந்த நாட்களுக்காக உனக்கு நன்றி கூறுகிறேன்.
 அந்த நன்றி  இதுவரை கூறியதில் இருக்கக்கூடாது அப்படி ஒரு உணர்வு பூர்வமாக நீங்கள் கூற வேண்டும் அப்படி ஒரு பாசம் இருக்க வேண்டும் உங்கள் குழந்தையை முதன்முதலில் எப்படி கையில் வாங்கும் போது எந்த அளவுக்கு   அன்பு வைத்தீர்கள்  அதைவிட  பலகோடி மகிழ்ச்சியோடு  அன்பை செலுத்த வேண்டும்.  

 பிறகு  உங்களுடைய கஷ்டங்களை   நீக்கியதற்கு நன்றி கூறுங்கள்.  கூறிவிட்டு உங்களுடைய அனைத்து கஷ்டங்களும் வலிகளும் எல்லாமே   அழிந்துவிட்டது  போல் இமேஜின் பண்ணுங்க அந்த மரத்திற்கு நன்றி கூறிக்கொண்டே. 
 
 ஒரு சில பேருக்கு மிகவும் அழுகை வரும்  மனசு ரொம்ப லேசாகி   சந்தோசத்தை  உணர்வீர்கள். 

 உங்களுடைய கைகள் உடம்பின் வழியாக அந்தக் கெட்ட எனர்ஜி உங்களை விட்டு செல்வதை நீங்கள் உணர முடியும்.  பிறகு அன்பு என்னும்   சக்தியால் நீங்கள் சூலப் படுவீர்கள்.

 இணைபிரியாது மகிழ்ச்சி பல ஆண்டுகளுக்கு முன்னர் போல்.  இப்படி தான் நாம் வாழ்ந்து  கொண்டிருந்தோம்  நண்பர்களே.

 உங்களுக்கு என்ன வேண்டுமோ நீங்கள் அந்த மரத்திடம் கேளுங்கள் அந்த மரம் உங்களுடைய உண்மையான தாய் தான் இதை பல விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள் ஒரு குழந்தை தாய் கிட்ட எப்படி கேட்குமோ உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள் கண்டிப்பாக கொடுக்கும் அன்பு பாசம்  செல்வ செழிப்பு மற்றும் அனைத்து வளமும் கண்டிப்பாக கிடைக்கும்

 உங்களுடைய   ஈகோ சுக்கு நூறாக உடைந்து விடும் என்று என்னால் தைரியமாக கூற முடியும் இது ஒரு அற்புதமான விஞ்ஞானம் விஞ்ஞானம் என்று சொன்னால் மட்டுமே தான்  பலர் ஒத்துக் கொள்கிறீர்கள்.

அப்பொழுதே நீங்கள் இறை சக்தி  உடன் அப்போது  இணைந்து விடுவீர்கள் இதுவரை நீங்கள் கண்டிராத இந்த ஒரு அற்புதமான ஒரு மகிழ்ச்சி நீங்கள் அடைவீர்கள்.

  உங்களது உள்ளுணர்வு உங்களிடம் பேச ஆரம்பித்துவிடும். அதை நீங்கள் கவனிக்கத் தொடங்கினால் மட்டுமே போதும்.

 இறுதியாக உங்கள்  வீட்டிலுள்ள அரிசி குறைந்தபட்சம் ஒரு கைப்பிடி   அவற்றை கழுவி காயவைத்து மிக லேசாக உங்கள் வீட்டிலுள்ள மிக்ஸியில்  அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும் ஒரு எறும்பு தூக்கிக்கொண்டு செல்லும் அளவிற்கு.  இறுதியாக அந்த அரிசிமாவை மரத்தை சுற்றி பல இடங்களில் தூவி விட வேண்டும் அந்த அரசி  மாவு பல  உயிர்களுக்கு
 உணவாகும். 


. வாருங்கள் பிரபஞ்சத்தின் குழந்தையாக இணைவோம்.🙏🙏🙏🙏

நன்றி.

மன்னிப்பு

"அன்பும், மன்னிப்பும், கருணையும் தான் இந்தப் பூமியை வாழ்விக்க வல்ல
சக்திகள்!,"
உலகின் தீமைகள் ஒரு எதிர்மறை எண்ணத்தில் தான் தோன்றுகின்றன. அதற்கு நியாயமான காரணங்கள் கூட இருக்கலாம். ஆனால் தீமைகள் கண்டிப்பாக ஒரு ஆரோக்கியமற்ற சிந்தனையில் தான் உருவாகின்றன. ஒரு மனதில் வரும் ஒரே எண்ணம்தான் விதை. அது வெளியில் சொல்லாய்ச் செயலாய் மாறுகையில் பலரைப் பாதிக்கிறது. பின் அது சங்கிலித் தொடராகிச் சரித்திரமாய் மாறுகிறது. ஆரம்ப எண்ணம் மட்டும் மட்டுப்பட்டிருந்தால் பல எதிர்வினைகள் நிகழாமல் மட்டுப்பட்டிருக்கும்.

உறவுச் சிக்கல்கள்

வெறுப்பு, நிராகரிப்பு, அச்சம், சந்தேகம், ஆத்திரம், பொறாமை என ஏதோ ஒரு எதிர்மறை உணர்வுடன் தான் முதல் எண்ணம் பிறக்கிறது. உங்கள் உணர்வு எதிர்மறையாக இருந்தால் எண்ணம் நிச்சயம் எதிர்மறையாகத்தான் இருக்கும். கடுங்கோபத்திலோ அல்லது துக்கத்திலோ நேர்மறை எண்ணங்கள் வர முடியுமா என்ன?

ஒருவர் உணர்வும் சிந்தனையும் இன்னொருவரைத் தீவிரமாகப் பாதிக்கிறது. இதனால்தான் நம் உறவுகள் நம் உணர்வுகளைப் பல சமயம் தீர்மானிக்கின்றன. உறவுகளில் காயங்களும் விரிசல்களும் பிளவுகளும் நிகழ்வதற்கும் ஆயிரம் நிகழ்ச்சிகளைக் காரணமாகச் சொல்லலாம். ஆனால், அத்தனைக்கும் மூலக் காரணம் சில ஆதார எதிர்மறை உணர்வுகளும் எண்ணங்களும்தான்.

இன்றைய சந்ததியினரிடம் உறவுச் சிக்கல்கள் ஏராளமாக உள்ளன. பெற்றோர்கள், வாழ்க்கைத் துணை, பிள்ளைகள், அண்ணன், தம்பி அக்கா ,தங்கை பணியிடத் தோழர்கள் என அனைவரிடமும் கருத்து வேறுபாடுகளும் ஒவ்வாமைகளும் பெருகி வருகின்றன.

குடும்ப வாழ்க்கை பெரிதும் மாறிவிட்டது. மனிதர்களின் எண்ணிக்கையை விட அறைகளின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. நாமே சுவர்களை எழுப்பிக்கொண்டு நாமே தனிமையில் வாடுவதாகப் புலம்புகிறோம். எல்லா மனிதர்களின் மேலும் புகார் பட்டியல் இருக்கிறது. நீங்கள் யாருடனும் நிம்மதியாய், அமைதியாய் இல்லை என்பது உண்மை என்றால் ஒன்று தான் நிஜம். நீங்கள் உங்களிடம் மனதளவில் நிம்மதியாய், அமைதியாய் இல்லை!

உறவுகள் யாரையும் தனியாகக் குற்றம் சொல்ல முடியாது. உங்களைப் போலவே உங்கள் எதிராளியும் அமைதி கெட்டுப்போய்ப் புகார் பட்டியலோடு சுற்றிக்கொண்டிருக்கிறார் என்பதுதான் பல நேரங்களில் நிஜம். யாரோடு பிரச்சினையோ அவரிடம் பேசினால் அவர் தரப்பு நியாயங்களைப் புட்டு புட்டு வைப்பார். யாராவது அதை முதலில் தனியாகக் கேட்டிருந்தால் உங்களைத் தான் குற்றவாளியாகப் பார்ப்பார்கள்.

உறவுகளைப் புரிந்து கொள்ளப் பிறர் நிலையில் தன்னை வைத்துப் பார்க்கும் திறன் வேண்டும். இதை ஆங்கிலத்தில் எம்பதி என்பார்கள். அலோபதி, ஹோமியோபதியை விட உங்கள் உறவைக் காப்பது இந்த எம்பதியாகத் தான் இருக்கும்!

உறவுச் சிக்கல் வரும் நேரத்தில் அடுத்தவர் நிலையில் நம்மை நிறுத்திப் பார்ப்பது தான் புரிதலை ஏற்படுத்தும். இது சுலபமல்ல. ஆனால் சற்று முயன்றால் சாத்தியப்படும்.

அதற்கு முதலில் சில பாலபாடங்கள் அவசியம்.

பார்வைக் கோணம்

எந்த விஷயத்திலும் ஒருவர் மட்டும் சரி, மற்றொருவர் தான் தவறு என்ற நிலையிலிருந்து விலகி வர வேண்டும். இருவரும் சரியாகவோ அல்லது இருவரும் தவறாகவோ கூட இருக்கலாம். அதனால் குற்றத்தை யார் மீது திணிக்கலாம் என்ற பார்வையை விடுத்து நடுநிலைக்கு வாருங்கள்.

எங்கிருந்து பார்க்கிறோமோ அங்கிருந்து உண்மைகள் மாறும். நமக்குப் பகத் சிங் விடுதலை வீரர். பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு தீவிரவாதி. அதே போல நாம் தீவிரவாதி என்று கருதுபவர்களை வேறுபலர் விடுதலை வீரர்களாகக் கொண்டாடுவார்கள். இது பார்வைக் கோணம் சம்பந்தப்பட்ட பிரச்சினை.

பிறரைக் குற்றம் சொல்லுமுன் அந்த நிலையில் நாம் இருந்தால் என்ன செய்வோம் என்று கற்பனை செய்து பார்ப்பது இந்த எம்பதியை வளர்க்கும்.

அரசு இலவசங்கள் பற்றிக் குறை சொல்பவர்கள், ‘ உங்கள் ரேஷன் கார்டில் இலவசமாகக் கார் கிடைத்தால் என்ன செய்வீர்கள்’ என்று யோசியுங்கள். ‘அந்த ஆள் கேரக்டர் சரியில்லை’ என்று குற்றம் சொல்லுமுன் அந்த வாய்ப்பும் வசதியும் வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று யோசியுங்கள்.

இது பிறர் குற்றங்களை நியாயப்படுத்தும் செயலில்லை. பிறர் சூழலைப் புரிந்து கொள்ளும் முயற்சி. அவ்வளவு தான்.

எல்லா மனிதர்களும் தங்களுக்கு அந்த நேரத்தில் சரி என்று படும் விஷயங்களைச் செய்கிறார்கள். அந்த நேர அறிவுக்குத் தக்க முடிவுகள் எடுக்கிறார்கள்.

மன்னிப்பு

பிறர் செய்த தீங்கால் மனதில் வரும் வன்ம எண்ணம் கூட மிகவும் தீமையானது என்று சொல்கிறார் புத்த மகான்.

வெறுப்பு அன்பை வளர்க்காது. பழி உறவைச் சரி செய்யாது. ஒன்று மட்டும் தான் உறவைச் சுகப்படுத்தும் வழி. அது மன்னிப்பு.

மன்னிப்பவர்கள் திடமானவர்கள். அன்பு மயமானவர்கள். அறிவாளிகள். வெறுப்பும் கோபமும் எதிராளியைவிட தன்னை அதிகமாக அழிக்கும் என்று உணர்ந்தவர்கள். சிக்கல் சங்கிலியைத் தங்கள் பக்கத்திலிருந்து அறுக்கத் தெரிந்தவர்கள்.

மன்னிப்பவர்கள் தாழ்ந்து போவதில்லை. மாறாகப் பெரும் ஆன்மப் பலம் பெறுகிறார்கள். உறவுகளில் குற்றம் பார்த்தால் நீங்கள் தனிமைப்பட்டுப் போவீர்கள். எதிராளியின் பலவீனத்தை உணர்ந்து, அந்த நிலையில் தன்னை வைத்துப் பார்த்து, மன்னித்து விடும்போது மீண்டும் உறவு பலப்படும்.

மன்னிக்க முடியாத தவறு என்று ஒன்று இல்லை. அதை உங்கள் எதிராளி மட்டும் செய்யவில்லை. அதே போல நீங்களும் தவறே செய்யாத பிறவி அல்ல. பிறர் தவறை மன்னிக்கையில் நீங்கள் உங்கள் தவறுகளுக்கு உங்களை மன்னிக்கிறீர்கள். அன்பும், மன்னிப்பும், கருணையும் தான் இந்தப் பூமியை வாழ்விக்க வல்ல சக்திகள்.

‘என் வாழ்க்கையில் என்னைக் காயப்படுத்திய அனைவரையும் மனமாற மன்னிக்கிறேன்!’ என்ற தொடர் எண்ணம் உங்களுக்கு மனஅமைதி தரும். பல உடல் உபாதைகளிலிருந்தும் காப்பாற்றும். நோய்களின்றி வாழ வழிவகை செய்யும். 

மனதார மன்னிக்கும் மனப்பான்மை உள்ளவர்களை என்றும் துன்பங்கள் நெருங்குவதில்லை. 

நன்றி...🙏🏻 
✨ *வாழ்க வளமுடன்*✨

Tuesday, 25 February 2020

உளவியல் நெருக்கடி

மிட்லைஃப் நெருக்கடி ஒரு பேரழிவு.


மிட்லைஃப் நெருக்கடி ஏற்படுவது, உளவியல் நெருக்கடி என்றும் அழைக்கப்படுகிறது, இதில் அடையாளம் மற்றும் தன்னம்பிக்கை மாற்றம் நிகழ்கிறது. ஒரு நபர் அவர்களின் தற்போதைய வாழ்க்கை முறையில் பல்வேறு கடுமையான மாற்றங்களை எதிர் கொள்ளும்போது, ​​வாழ்க்கையில் சில அத்தியாயங்களால் கொண்டு வரப்படுகிறது.


இந்த தற்செயலான நிகழ்வு பெரும்பாலும் 30 முதல் 50 வயதிற்குட்பட்ட மனித ஆயுட்காலத்தின் நடுப்பகுதியில் நிகழ்கிறது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி, ஆண்களும் பெண்களும் தங்கள் மிட் லைஃப் காலத்தில் மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவங்களுக்கு ஆளாகின்றனர். வாழ்க்கையில் ஏமாற்றத்திற்கு பல காரணங்கள் உள்ளன, அது மிட் லைப்பில் ஏற்பட்டால், நீங்கள் “மிட்லைஃப் நெருக்கடியை” எதிர்கொள்கிறீர்கள்.

மிட்லைஃப் நெருக்கடி எடுத்துக்காட்டுகள் / அறிகுறிகள்:

மனநலத்தை சீர்குலைக்கும்:

சுய-நாசவேலை நடத்தைகள் தோல்வி காரணமாக பெரும் மனச்சோர்வு அல்லது பதட்டத்தை எதிர்கொள்ளச் செய்யலாம் அல்லது வாழ்க்கையில் தோல்விகளை எதிர்கொள்ளும் என்ற அச்சத்தைக் கொண்டிருக்கலாம். தோல்விகளின் சாத்தியக் கூறுகளைத் தவிர்ப்பதற்கான நமது சொந்த திறனை நாம் ஆழ்மனதில் குறை மதிப்பிற்கு உட்படுத்துகிறோம். இது மிட் லைப்பில் பெரிய ஏமாற்றங்களை எதிர்கொள்ள வழிவகுக்கும்.

உணர்ச்சி நெருக்கடிகள்:

உணர்ச்சி அல்லது நடத்தை கோளாறு அல்லது இளம் பருவத்தின் தொடக்கத்திலோ அல்லது சில உயிரியல் கோளாறு காரணமாகவோ ஏற்படும் மன உளைச்சல்.

ஆட்டோ பைலட் பயன்முறையில் வாழ்க்கை:

குறைந்த சுய மரியாதை மற்றும் குறைந்த தன்னம்பிக்கை காரணமாக உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களை ஒரு ஆட்டோ பைலட் பயன்முறையில் ஈடுபடுத்தும் நேரங்கள் உள்ளன.

Habits பழக்கவழக்கங்களில் கடுமையான மாற்றங்கள் மற்றும் திடீர் முடிவெடுப்பது.


Depression மனச்சோர்வு காரணமாக தூக்க பழக்கத்திற்கு மாறுதல்

•தற்கொலை எண்ணங்கள்

Any எந்தவொரு பணியையும் செய்ய நீங்கள் இடைவெளியைக் கண்டால்

• சலிப்பு

Produc குறைந்த உற்பத்தித்திறன்


பின்னடைவுக்குத் திரும்புவது கடினம்: 

ஏமாற்றங்களிலிருந்து பின்வாங்க சிரமங்களை எதிர்கொள்வது, மிட்லைஃப் முன் அதிர்ச்சிகரமான மற்றும் வேதனையான நிகழ்வுகள் நிகழ்ந்தன. 

Loved நேசிப்பவரின் மரணத்தை வெல்வது கடினம்

Div விவாகரத்து அல்லது முறிவு ஆகியவற்றைக் கையாள்வது

Loss நிதி இழப்பு காரணமாக உங்களுக்கு பிடித்த கார் அல்லது பிளாட் விற்கப்பட்டது.

Ex திருமணத்திற்கு புறம்பான விவகாரங்களைக் கொண்ட மனைவி / கணவர்கள்

• கருக்கலைப்பு

Child குழந்தையின் கல்வியில் நல்ல நிதி இல்லாமை

Job வேலை இழப்பு

மிட்லைஃப் நெருக்கடியை ஞானமாக மாற்றுவது எப்படி

நபர் எப்போதும் தங்கள் வாழ்க்கையை நெருக்கடிகளிலிருந்து வாய்ப்புகள் மற்றும் புத்திசாலித்தனமாக மாற்ற முடியும். நெருக்கடியை எவ்வாறு எதிர்ப்பது என்று பார்ப்போம்

Bit பிட்-பை பிட் தீர்க்க முயற்சிக்கவும் - உங்கள் பிரச்சினைகளை பட்டியலிட்டு கவனமாக பரிசீலிக்கவும் உறுதியுடனும் ஒவ்வொன்றாக உரையாற்றவும். 

Negative எதிர்மறை / தேவையற்ற எண்ணங்களை குறைத்தல் - தேவையற்ற எண்ணங்கள் நேரத்தை வீணடிப்பதாகும். வாழ்க்கையில் நேர்மறையான அணுகுமுறை மற்றும் அணுகுமுறையுடன் உங்களைத் தழுவுங்கள், தெளிவற்ற பயத்தில் வாழ்வதை நிறுத்தவும், உங்கள் பணியில் கவனம் செலுத்தவும் உதவுகிறது.

Positive நேர்மறையான உறுதிமொழியை வடிவமைப்பது ஒரு சக்திவாய்ந்த கருவி வெவ்வேறு வழிகளில் பயன்படுத்தப்படலாம். நீங்கள் ஒரு எதிர்மறையைப் பெற்றவுடன், நீங்கள் வலுவாக உணர ஒரு உறுதிமொழியைக் கூறலாம். உங்களைப் பார்த்து, கண்ணாடியின் முன் நின்று உறுதிமொழிகளையும் படிக்கலாம்.

It அதை எழுதி அழிக்கவும்: 

நீங்கள் எதிர்மறை எண்ணங்கள் என்றால் பயம், சோகம் போன்ற குறிப்பிட்ட வலுவான உணர்ச்சிகளுடன் இணைக்கப்பட்டிருந்தால். அதை ஒரு காகிதத்தில் எழுதி அதை எரிக்கவும்.

Life வாழ்க்கைக்கு முழுமையான அணுகுமுறை:

முழுமையான அணுகுமுறை உங்கள் உளவியல் சிக்கல்களை இயற்கை வைத்தியம் மூலம் குணப்படுத்துகிறது. தியானம் மற்றும் யோகா பயிற்சி செய்யுங்கள், இது உங்கள் உடலில் 7 சக்கரங்களை சமநிலைப்படுத்த உதவுகிறது.

• ஆறுதல் மண்டலம்: 

சாகசமாக மாற தைரியம்! ஆம் வாழ்க்கையில் புதிய விஷயங்களை ஆராயுங்கள், உங்கள் ஆறுதல் மட்டத்திலிருந்து வெளியேறுங்கள், புதிய இலக்குகளை உருவாக்குங்கள், புதிய செயல்பாடுகளை முயற்சிக்கவும், அறிவின் தளத்தை மேம்படுத்தவும். வாழ்க்கையில் புதிய படைப்பு விஷயங்களை பின்பற்ற இது ஒருபோதும் தாமதமாகாது.

Yourself உங்களைப் பேசவும் ஊக்குவிக்கவும்: 

மிட்லைஃப் பயிற்சியாளர் அல்லது வாழ்க்கை முறை பயிற்சியாளரால் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது எப்போதும் சிறந்தது.

புத்திசாலித்தனமாக சிந்தியுங்கள்:

திருமணங்கள், உறவுகள், விவாகரத்து, நிதி, முதலீட்டு திட்டமிடல், பெற்றோருக்குரியது, தொழில் திட்டமிடல் மற்றும் வாய்ப்புகளுக்கான வாழ்க்கையில் முக்கிய முடிவு மிகவும் கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டும்.