🌺💐🌺💐🌺💐🌺
# இது சாப்பாட்டு தத்துவம்#
🌺💐🌺💐🌺💐🌺
"தோல்வி என்பது பெருங்காயம் போல... தனியாகச் சாப்பிட்டால் கசக்கும்; வெற்றி என்னும் சாம்பாரில் கரைந்து விட்டால் மணக்கும !
🌺💐🌺💐🌺💐🌺
# ஒரு குக்கரைப் போல இருங்கள்.... பிரஷர் அதிகமாகும் போது விசிலடித்துக் கொண்டாடுங்கள்!
🌺💐🌺💐🌺💐🌺
# லட்சியமும் முட்டையும் ஒன்று .... தவற விட்டால் உடைந்து விடும்!!!
🌺💐🌺💐🌺💐🌺
# சோம்பேறித்தனம் என்பது மிளகாய்க் காம்பு போல.... கிள்ளி எறிந்து விட வேண்டும்!!!
🌺💐🌺💐🌺💐🌺
வாழ்க்கை சிக்கலான இடியாப்பம்தான். அதில் அன்பு என்னும் தேங்காய்ப்பாலைக் கலந்தால் சுவைக்கும்!
🌺💐🌺💐🌺💐🌺
# பொய், நூடுல்ஸ் போல் தற்காலிகமானது: உண்மை இட்லி போல நிரந்தரமானது!!
🌺💐🌺💐🌺💐🌺
# கோபத்தை உப்பைப் போல பயன்டுத்துங்கள் அதிகமானால் வாழ்க்கை சுவைக்காது!!!
🌺💐🌺💐🌺💐🌺
#தலைக்கனம் என்பது வெந்நீர் போன்றது...அதை அடுத்தவர் மீது கொட்டாதீர்கள் நம் மீதே சிந்திவிடும்.
🌺💐🌺💐🌺💐🌺
#தன்னம்பிக்கைச் சூத்திரங்கள் என்பவை சமையல் ரெசிப்பி போல ...சமைப்பது உங்கள் கையில்தான்!
🌺💐🌺💐🌺💐🌺
#வெற்றி என்பது இட்லியை போல வேகுவது தெரியாது...
வெந்தபின் தான் தெரியும்...
🌺💐🌺💐🌺💐🌺
# வெற்றி என்ற இட்லியை தனியே உண்ண முடியாது...
நட்பு என்ற சட்னி வேண்டும்..
🌺💐🌺💐🌺💐🌺
உண்மையை உங்களுக்கு என்னால் வழங்க முடியாது.ஆனால் நான் உங்களுக்கு நிலவை சுட்டி காட்டலாம்.தயவு செய்து நிலவை சுட்டி காட்டும் விரலை பற்றி கொள்ளாதீர்கள்.விரல் காணாமற் போய்விடும்.நிலவு அப்படியே இருக்கும்.
Thursday, 30 June 2016
இது சாப்பாட்டு தத்துவம்#
Wednesday, 22 June 2016
மனம்
மனமற்றிருக்கும் சக்தியை விட பெரிய சக்தி வேறு எதுவும் கிடையாது!
உங்கள் எண்ணங்களுடன் சம்பந்தம் இல்லாமல் விலகியே நில்லுங்கள்!
எண்ணங்கள் மறையும் கணங்களில் மனமற்ற
நிலையின் கண நேரக் காட்சியை நீங்கள் காணலாம்!
நீங்கள் தனித்திருக்கும் போது மனம் தேவைப் படாது!
தியானம் உங்களை மனமற்ற நிலைக்கு எடுத்துச் செல்லும்!
தியானத்தின் தொடக்கம் சாட்சி
பாவம்! தியானத்தின் முடிவு மனமற்ற நிலை!
மனமற்ற மனிதனின் வார்த்தைகளில் உண்மை இருக்கும்!
இந்த மனம் செயலற்று விடுகிற போது பிரபஞ்ச மனம் செயல்பட ஆரம்பிக்கும்!
ஓஷோ🌷🌷
💝💝💝💝💝💝💝
Sunday, 19 June 2016
சித்தார்த்தர்
இந்த உலகம் உய்வு பெற வேண்டுமானால் அதில் அன்பு செழிக்க வேண்டும். அப்படிப்பட்ட அன்பை உலகிற்க்கு போதித்த பல மகான்களின் பெயர்களை வரலாறு அன்போடும் மரியாதையோடும் இன்றும் சுமந்து நிற்கிறது. அந்த மகான்களில் ஒருவரை சந்திப்போம் அவர் வாழ்ந்த வாழ்க்கையை சிந்திப்போம்.
செல்வ செழிப்பில் பிறந்து உலக பற்றை துறந்து போதி மரத்தடியில் ஞானம் பெற்று அன்பை போதிக்கும் உலகின் மாபெரும் சமயங்களில் ஒன்றான பெளத்த சமயத்தை நிறுவிய கெளதம புத்தரின் பிறந்த தினம்தான் விசாக தினம். இன்றைய நேபாள எல்லைக்குள் இருக்கும் லும்பினி எனும் ஊரில் கி.மு 563 ஆம் ஆண்டு அதாவது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தார் சித்தார்த்தர். அவர் பிறந்தது மே மாதத்தின் பெளர்னமி தினம். அவரது தந்தை கபிலவஸ்து என்ற நகரின் மன்னனாக இருந்தவர். சித்தார்த்தர் பிறந்த ஏழாவது நாளில் அவரது தாயார் மகாமயா இறந்து போனார். மகாமயாவின் சகோதரியான மகா கஜபதி சித்தார்த்தரை வளர்த்தெடுத்தார்.
தன் மகன் உலகை ஆளும் மன்னனாக வேண்டும் என்று விரும்பினார் தந்தை. ஆனால் ஒரு நோயாளி, ஒரு முதியவர், மரணமுற்றவர், ஒரு துறவி ஆகியோரை பார்க்க நேர்ந்தால் சித்தார்த்தர் துறவறம் பூண்டுவிடுவார் என்று அரச சோதிடர்கள் கணித்து சொல்லவே சித்தார்த்தரை அரண்மனையை விட்டு வெளியேறா வண்ணம் வளர்க்கத் தொடங்கினார் தந்தை. பல ஆண்டுகள் வெளி உலகம் தெரியாமல் எல்லா சுகபோகங்களையும் அனுபவித்து அரண்மனையிலேயே மகிழ்ச்சியாக வளர்ந்தார் சித்தார்த்தர். உலகத்தின் துன்பங்கள் அவர் கண்ணில் படாதவாறு அவர் பாதுகாத்து வளர்க்கப்பட்டார். 16 வயதிலேயே உறவுப் பெண்ணான யசோதாராவுடன் சித்தார்த்தருக்கு திருமணம் நடந்தது. இல்லற வாழ்விலும் மகிழ்ச்சியாக ஈடுபட்ட அவருக்கு ராகுலன் என்ற குழந்தையும் பிறந்தது.
அதன்பின்னர் கணிக்கப்பட்டது போலவே ஒரு முதியவர், ஒரு நோயாளி, மரணமுற்றவ்ர், ஒரு துறவி ஆகியோரை பார்க்கும் நிலை சித்தார்த்தருக்கு ஏற்பட்டது. அவற்றை கண்டு மனம் வேதனைப்பட்ட சித்தார்த்தர் உலகின் பிணிகளுக்கும், பிரச்சினைகளுக்கும் என்ன காரணம் என்று ஆழ்ந்து சித்திக்கத் தொடங்கினார். துறவறம் பூண்டு உண்மையை உணர விரும்பிய அவர் தனது 29 ஆவது வயதில் ஒருநாள் இரவில் மனைவியும் மகனும் உறங்கிய பிறகு எவருக்கும் சொல்லாமல் அரண்மனையை விட்டு வெளியேறினார். காவி உடை அணிந்து காட்டில் அலைந்து திரிந்த அவர் சில முனிவர்களிடம் பாடம் கற்கச் சென்றார். தங்கள் உடலை வருத்தி கடுமையான தவம் புரிந்தால் மட்டுமே ஞானம் பெறலாம் என்று எல்லா முனிவர்களுமே கூறினர். அதனை கேட்டு பல ஆண்டுகள் தன் உடலை வருத்திக் கொண்டார் சித்தார்த்தர்.
உணவை படிப்படியாக குறைத்துக்கொண்டு கடைசியில் ஒரு நாளுக்கு ஒரு பருக்கை சோறு மட்டுமே உண்ணுமளவுக்கு வந்தார், உடல் எலும்பும் தோலுமானது. ஆனால் அதுபோன்ற கடுந்துறவால் உடல் சோர்ந்து மூளையும் சோர்வடைவதால் உண்மையை அறிய அதுவல்ல வழி என்று உணர்ந்தார். மீண்டும் உணவு உண்ணத் தொடங்கினார் அவர் வழக்கமாக உணவு உண்ணத் தொடங்கிதைப் பார்த்த அவரது ஐந்து சீடர்கள் அவர்மேல் நம்பிக்கை இழந்து அவரைவிட்டு விலகினர். ஆனால் தான் தேடிய உண்மைகளை கண்டறிய தனிமையில் கடும் சிந்தனையில் நீண்ட நேரங்களை செலவிடத் தொடங்கினார் சித்தார்த்தர்.
ஒருநாள் ஒரு பெரிய அத்தி மரத்தடியில் ஆழ்ந்த தியானத்தில் இருந்தபோது தான் தேடிய கேள்விகளுக்கு விடை கிடைத்து விட்டதாக உணர்ந்தார் சித்தார்த்தர். அவ்வாறு ஞானம் பெற்றபோது அவருக்கு வயது 35. அதற்கு பிறகுதான் அவர் 'புத்தர்' என்று அழைக்கப்பட்டார். அவர் ஞானம் பெற்ற இடம் பீஹாரில் போத்ஹையா என்று அழைக்கப்படுகிறது. அடுத்த 45 ஆண்டுகள் வட இந்தியா முழுவதும் பயணம் செய்து தான் உணர்ந்த உண்மைகளை போதித்தார் புத்தர். அவரது போதனைகளை நான்கு உயர் உண்மைகள் என்று அழைக்கின்றனர் பெளத்தர்கள்.
முதலாவது உண்மை மனித வாழ்க்கை இயல்பாகவே துன்பம் நிறைந்தது.
இரண்டாவது உண்மை அந்த துன்பத்திற்கு காரணம் தனனலமும், ஆசையும்.
மூன்றாவது உண்மை மனிதனால் தன்னலத்தையும் ஆசையையும் அடக்க முடியும்.
நான்காவது உண்மை மனிதன் தன்னலம், ஆசை ஆகியவற்றிலிருந்து தப்பிக்க எட்டு வகை பாதை உண்டு.
நேர்மையான கருத்து, நேர்மையான எண்ணம், நேர்மையான பேச்சு, நேர்மையான செயல், நேர்மையான வாழ்க்கை, நேர்மையான முயற்சி, நேர்மையான சித்தம், நேர்மையான தியானம் ஆகியவையே அந்த எட்டுப்பாதைகளாகும்.
புத்தர் தனது முதல் போதனையை வரனாசிக்கு அருகில் உள்ள சரனாத் என்ற பகுதியில் நிகழ்த்தினார். அவரது போதனைகள் அவர் வாழ்ந்த காலத்திலும் எழுதப்படவில்லை. அவர் மறைந்து பல நூற்றாண்டுகள் வரையும் எழுதப்படவில்லை. புத்த மதத்தில் சில கிளைகள் ஏற்பட்டதற்கு அது முக்கிய காரணம். தற்போது பெளத்த மதத்தில் இரண்டு முக்கிய பிரிவுகள் உண்டு ஒன்று தேரபதா பிரிவு அது தென்கிழக்கு ஆசியாவில் தழைத்தோங்கியது. மற்றொன்று மகாயானம் இந்த பிரிவு திபெத், சீனா, வடஆசியா ஆகியவற்றில் செழித்தோங்கியது.
ஆசையே துன்பத்திற்கு காரணம், அறியாமையும் சாதிப் பிரிவுகளுமே துன்பம் அனைத்திற்கும் காரணம் என்பதுதான் புத்தரின் அடிப்படை போதனை. பண்பால் ஒரு மனிதன் மதிப்பிடப்பட வேண்டுமே அன்றி பிறப்பால் அல்ல பிறக்கும் போதே எவரும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பிறப்பதில்லை அவனவன் செய்கையாலயே அது நிர்ணயிக்கப்பட வேண்டும் என புத்தர் வலியுறுத்தினார். கிட்டதட்ட 80 ஆண்டுகள் வாழ்ந்து பல அறிய போதனைகளை தந்த புத்தர் கி.மு 483 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தில் உள்ள குஸி நகர் என்ற இடத்தில் காலமானார்.
புத்தர் பிறந்தது, ஞானம் அடைந்தது, இவ்வுலக வாழ்வை நீத்தது அனைத்துமே ஒரே தினத்தில்தான். அதாவது மே மாதத்தின் பெளர்னமி தினத்தில்தான் என்று வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தான் விசாக தினத்தை பெளத்தர்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
எல்லா மதங்களும், சமயங்களும் புத்தம் சொன்ன அன்பைதான் போதிக்கின்றன. அன்பு என்பதே தெய்வமானது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன. இன்றைய அவசர உலகில் அன்பு செலுத்த மறவாதோருக்கும், அன்பை போற்றி வளர்ப்போருக்கும் வானம் வசப்படும் என்பதுதான் எல்லா மதங்களும் கூறும் அடிப்படை உண்மையாக இருக்கும்.எனவே நாமும் எல்லா உயிர்களிடமும் தொடர்ந்து அன்பு செலுத்துவோம் அதன்மூலம் நாம் விரும்பும் வானத்தையும் வசப்படுத்துவோம்.
நான் ரொம்ப
"நான் ரொம்ப பிஸி. நிறைய வேலைகளிருக்கிறது. பரவாயில்லை..நாம் சிறிது நேரம் பேசுவோம் எனக்கும் போரடிக்கிறது.."
"என்னது மனதுக்கே போர் அடிக்கிறதா..?"
"இதென்ன அண்ணாமலைக்கே பாலா என்கிற மாதிரி..? மனதுக்குதான் போர் அடிக்கும்ம்.."
"போரடித்தால் என்ன செய்வாய்,,,?"
"உடலை திமர வைப்பேன். மனித முகங்கள் தாக்க வருகிற கரடியாகத் தோணும். சில உதடுகளில் நிக்கோடின் அரிப்பைத் தூண்டுவேன். சில நுரையீரல்களுக்கு 'டாஸ்மாக்' வாசனை தேவைப்படும்.சிலருக்கு புத்தகம். சிலருக்கு டி.வி., சிலருக்கு ஹிஹி..ஹி..,சிலருக்கு தூக்க மாத்திரை..இப்படி நிறைய இருக்கிறது.."
"மனமே நீ ஒரு மாபெரும் ஆற்றல். மனிதனுக்கு வாய்த்த ஆறாவது அறிவு. ஒவ்வொரு அறிவும் தாம் செயல்பட ஒரு ஊடகம் வைத்திருப்பது போல். சிந்திக்கும் பகுத்தறிவான நீ, வலது மூளையும் இடது மூளையும் கட்டப்பட்ட கபாலத்தேரின் உச்சியில் சாரதியாய் உட்கார்ந்திருக்கிறாய். எல்லாம் சரி..அங்கு உட்கார்ந்து என்ன செய்கிறாய்..?"
"வியாபாரம் செய்கிறேன்"
"என்ன வியாபாரம்"
"எண்ண..வியாபாரம். என் கடை எண்ணக்கடை. உடல் செயல்வடிவமானது.உயிர் ஒளிவடிவமானது. மனமாகிய நானோ எண்ண வடிவமானவன். என் பணி கண்டதையும் எண்ணிக்கிடப்பதே."
"உன் வாடிக்கையாளர்கள் யார்..?"
"உயிருள்ள உடல் என்னுடைய main dealer. புலன்கள் sub-dealer. செல்கள் என் நுகர்வோர்.."
"எண்ணங்களை வாங்கி அவர்கள் என்ன செய்கிறார்கள்..?"
"உணர்ந்து அனுபவிக்கிறார்கள்.செயலுக்குள் ஈடுபடுத்திப் பொருளாய் மாற்றுகிறார்கள். புதிய கொள்கையையோ
கருத்தையோ உருவாக்குகிறார்கள், மொழியாகப் பேசுகிறார்கள்.."
"இதில் உனக்கென்ன லாபம்..?"
"எனக்கு கிடைக்கும் திருப்திதான் லாபம். திருப்தி கிடைக்காவிட்டால் நஷ்டம்.."
"லாபம் வந்தால் என்ன செய்வாய்..? நஷ்டம் வந்தால் என்ன செய்வாய்..?"
"அதையும் எண்ணங்களாகவே மாற்றிவிடுவேன். லாபம் எனில் ஆணவச்சாயம் பூசி அகங்காரமாயும், நட்டம் எனில் சோகச்சாயம் பூசி விரக்தியான எண்ணங்களாக்கிவிடுவேன்.நான தூண்டில் போட்டு அதில் நானே சிக்கிக்கொள்கிறேன். இதுதான் என் இயல்பு,,"
"மாற்றிக்கொள்ள முடியாதா..?"
"அதைப்பற்றி கவலைப்பட வேண்டியது நீங்கள்தான். காரணம்..என்னை எதுவாக நினைக்கிறீர்களோ..நான் அதுவாகவே மாறிவிடுவேன். நினைத்தவர்களையும் மாற்றிவிடுவேன்."
"நல்லதே விளைய நாங்கள் என்ன செய்ய வேண்டும்,..?"
"நல்லதை நினை ம்னமே,."
"நல்லதை நினைப்பது உன் வேலை இல்லையா.."
""நல்லைவைகள் மிக மிக உயரத்தில் இருக்கின்றன. அவ்விடத்திற்கு சென்று நான் கொள்முதல் செய்துவரும் வரை புலன்கள் பொறுப்பது இல்லை. அதனால்தான் தாழ்வான நிலையில் உள்ள தரமற்ற எண்ணக்களைத் தருகிறேன்."
"தரமற்ற எண்ணங்கள் என்றால்..?"
"உயரத்தில் உள்ளவை உன்னதங்கள்.என் கைக்கெட்டும் தூரத்தில் இருப்பவையோ..கோபம்,எரிச்சல்,சலிப்பு,சோம்பல், விரக்தி, தற்கொலை.."
"அய்யோ.."
"என்ன அய்யோ? தலைவர்களூக்காக தீ குளித்தவர்கள்,நாக்கை வெட்டி உண்டியலில் போட்டவர்கள், தீர்க்க முடியாத கடனை தண்டவாளத்தில் அடைத்தவர்கள், நினைத்த காதல் நிறைவேறாமல் மலையிலிருந்து குதித்தவர்கள்,இப்படி..இப்படி..என்னை உயரத்துக்கு எடுத்து செல்லாதவர்கள் ஏராளம்.."
"உன்னால் இதை எல்லாம் தடுக்க முடியாதா..?"
""முடியும். தவமிருந்தால்தானே வரம் கிடைக்கும்..இல்லையெனில் சாபம்தான். இயல்பாகவே நான் ஒரு குப்பைத் தொட்டி.முயற்சி செய்யாமலே என்னிடம் குப்பைகள் குவியும். முயற்சியின்றி சேர்ந்தால்தான் குப்பை. முயற்சி செய்தால் மட்டுமே தூய்மை.அம்முயற்சிக்கு எனக்கு தூண்டுதல் வேண்டும்.."
"எதை வைத்துத் தூண்ட..?"
"விழிப்புணர்வை வைத்து.."
"இதென்ன புது உணர்வு.."
"உம் போன்ற ஆட்களுக்கு இது புதிதாகத்தான் இருக்கும். சரி எனக்கு நேரமாகிறது நான் வருகிறேன்.."
"மனமே எங்கே போகிறாய்..?"
"ஊர் சுற்றத்தான்..தெரியாமல் விழிப்புணர்வு இல்லாத ஒருவனிடம் சிக்கிக்கொண்டேன். கண்டதையும் நினைக்க வேண்டும்..நான்..வருகிறேன்..பை.."
"எண்ணாத எண்ணமெல்லாம்
எண்ணி எண்ணி ஏழை நெஞ்சம்
புண்ணாக செய்தது இனிப்
போதும் பராபரமே.."
என்று விழிப்புணர்வை வேண்டினார் தாயுமானவர்.
"ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைஸ் சுட்டறுத்து
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்..?"
விழிப்பின் உச்சியில் கிட்டும் சுகத்திற்காக இப்படி ஏங்கினார் பத்திரகிரியார்.
விழிப்புணர்வு கூடக்கூட யாருடைய மனது படிபடிபயாக திருந்தி அமைகிறதோ , அம்மனிதனே மெய்வாழ்வு பெறுகிறான். மனோலயப்பட்டால் மனிதன். மனோ நாசம் உற்றால் ஞானி. மானுடப்பிறவி எடுத்ததன் நோக்கமே ஒருவன் தன்னை குணசீலனாக்கிக்கொள்ளவே.நல்லெண்ணமும் , நற்செயலும், நன்மொழியும் மனிதனை குணவானாக்கும்.
"நானேதும் அறியாமே என்னுள் வந்து
நல்லனவும் தீயனவும் காட்ட நின்றாய்.." என்று நெகிழ்ந்தார் அப்பர் பெருமான்.
சாதாரணமாக வாழும் வாழ்கை என்பது, உணர்தல், பார்த்தல், சுவைத்தல், மூச்சுவிடுதல், கேட்டல் எனலாம்.
விழித்துணர்ந்து வாழ்தல் என்பது..
உடலும் மனமும் ஒன்றி உற்றறிதல்,நாவும் மனமும் பின்னி உணவை சுவைத்தல்,நாசியின் காற்றோடே மனமும் ஏறி இறங்குதல்,கண்களோடு மனம் கலந்து காணல்,செவிகளில் ம்னம் இணையக் கேட்டல்,மனம் மனமாயிருந்து சிந்தித்தல்.
விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்.நாமும் பிழைத்துக்கொள்வோம். விழிப்பே உயர்வு. விழிப்புடன் மனதை சிக்கெனப் பிடித்துக்கொண்டால் மட்டுமே உயர்வு.
Friday, 17 June 2016
இளைஞர்கள் செய்யும் 8 தவறுகள்
Thursday, 16 June 2016
தற்பெருமை
வெற்றியின் சூத்திரம்
வெற்றியின் சூத்திரம் ================
எல்லோரும் தம் வாழ்க்கையில் வெற்றி பெற
வேண்டும் என்றே நினைக்கிறார்கள். ஆனால்
அவ்வாறு நடப்பதில்லையே. ஒரு சிலர் தான்
வெற்றிக் கனியைத் தட்டிப் பறிக்கிறார்கள்.
சாதனையாளர்களாகிறார்கள். வாழ்வில்
பெயரும், புகழும் பெறுகிறார்கள்.
பலர் வெற்றி பெற முடியாமல் தோல்வியில்
துவண்டு போகிறார்கள். நொந்து நூலாகி
விரக்தியின் காரணமாகத் தங்கள் வாழ்க்கையை
முடித்துக் கொள்கிறார்கள். ஏன் இந்த நிலை.
கருணையுடைய கடவுள் ஒருசிலருக்கு
மட்டும் வெற்றியைத் தந்துவிட்டு,
மற்றவர்களிடம் ஓர வஞ்சனையுடன் நடந்து
கொள்கிறானா? இல்லையே
வெற்றி பெற முடியாமல் போவதற்குப் பல
காரணங்கள் இருக்கலாம். ஆனால், வெற்றி
பெறுவதற்கு ஒரே ஒரு காரணம் தான் உண்டு.
அதுதான் உழைப்பு, மன உறுதி,
விடாமுயற்சி. இக்கட்டுரையில் வெற்றிக்கான
பல படிக்கட்டுகள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
கல்வி பயிலும் மாணவன், நன்றாகப் படித்து
நிறைய மதிப்பெண்கள் வாங்கினால்,
விரும்பிய கல்லூரியில் சேர்ந்து, விரும்பிய
பாடத்தை எடுத்துப் படிக்கலாம். யாரையும்
சிபாரிசுக்கென்று அணுகி அலையத்
தேவையில்லை. அப்படி மதிப்பெண்கள் பெற
முடியாதவர்கள் தான் கிடைத்த கல்லூரி,
கிடைத்த பாடம் என்று சேர்ந்து கொள்ள
வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு
ஆளாகிறார்கள்.
நாம் செல்ல வேண்டிய பாதையைத்
தேர்ந்தெடுப்பது நமது பொறுப்பு. அப்பாதை
இரண்டாகப் பிரிகிறது என்று
வைத்துக்கொள்வோம். வலப்புறம் திரும்பி
நடந்தால் சற்று சிரமமாக இருக்கலாம். ஆனால்
போகப்போக அந்தப் பாதையில் பயணிப்பது
உற்சாகமாவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்
இன்னொரு பாதை இடப்புறமாகப் பிரிகிறது.
இந்தப்பாதையில் சென்றால் ஆரம்பத்தில்
மகிழ்ச்சி தருவதாகத் தோன்றினாலும்,
பின்னால் போகப்போகத் துன்பத்தைத்
தருவதாக அமைகிறது. இதில் எந்தப்
பாதையை நாம் தேர்ந்தெடுத்துக்
கொள்கிறோம் என்பதைப் பொறுத்து நமது
வெற்றியும், தோல்வியும் அமைகிறது.
வலப்புறப் பாதையானது உழைப்பு. இடப்புறப்
பாதை என்பது சோம்பல், ஆர்வமின்மை
என்பதாய் வைத்துக்கொள்வோம். இப்படிச்
சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கே எது சரி
என்று புலப்படும். விடாமுயற்சிக்குத்
திடமான, உறுதியான மனம் தேவை. நாம்
மேற்கொள்ளும் பணிக்கு ஏற்படக்கூடிய
இடையூறுகளையும், சிரமங்களையும்,
சிக்கல்களையும் சலிப்பு, சிறுசிறு
பிரச்சனைகளையும் இவை எல்லாவற்றையும்
புறம் தள்ளிவிட்டு வெற்றி காண வேண்டும்
என்று ஒரே எண்ணத்துடன், முனைப்புடன்,
நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி
நிச்சயம்.
இடையில் ஏற்படக்கூடிய தடங்கல்களைக் கண்டு
தளராத மனம், சலிப்படையாத உள்ளம், எந்தப்
பிரச்சனைக்கும் தீர்வு உண்டு என்ற நம்பிக்கை,
தீராத பிரச்சனை எதுவுமே கிடையாது.
எல்லாமே நமது மனப்பான்மையைப்
பொறுத்தது என்பதைப் புரிந்து கொண்டு
வெற்றி கிட்டும் வரை தொடர்ந்து முயற்சிக்க
வேண்டும்.
எண்ணிய எண்ணியாங் கெய்துவர் எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்
என்று நமக்கு நம்பிக்கையை ஊட்டுகிறார்
வள்ளுவர். நம்பினோர் கெடுவதில்லை.
எண்ணம்போல வாழ்வு. முயற்சி தம்
மெய்வருத்தக் கூலி தரும் என்றெல்லாம்
ஆன்றோர் சொல்லி வைத்திருப்பது இதன்
அடிப்படையில் தான்.
ஒருமுறை, இருமுறை என்று
முயன்றுவிட்டு, வெற்றி கிட்டவில்லையே
என்று துவண்டு போவோரே பலர். வெற்றி
கிட்டும் வரை விடாது முயற்சிப்பவனே பலன்
பெறுகிறான்.
நான்கு இடங்களில் கிணறு
தோண்டுவதைவிட, ஒரு இடத்தில் ஆழமாகத்
தோண்டினால் தண்ணீர் கிடைக்குமன்றோ
அதுபோல நம் முயற்சியை ஒருமுகப்படுத்தித்
தொடர்ந்து முயன்றோமானால் வெற்றி
பெறுவது நிச்சயம்.
அதற்கான தாரக மந்திரம் இதுதான் – உழைப்பு,
விடாமுயற்சி, குறிக்கோள், தன்னம்பிக்கை.
செம்மையான திட்டம் வேண்டும். எதனை,
எப்போது, எப்படிச் செய்ய வேண்டும் என்பதை
நன்கு திட்டமிட்டுச் செயல்படும்போது, அந்தத்
திட்டத்தைச் செயல்படுத்துவதில் இடையே
ஏற்படக் கூடிய இடையூறுகளை எப்படிக்
களைவது என்று ஆராய்ந்து, தேவையானால்
வழிமுறைகளை மாற்றிக்கொண்டு,
தொடர்ந்து முயன்றால் வெற்றிதான்.
விளையாட்டுகளில் தடை ஓட்டம் என்ற ஒன்று
இருக்கிறது இடையிடையே உள்ள பல
தடைகளைத் தாண்டிக் குதித்துத் தான்
வெற்றிக்கம்பத்தை எட்ட வேண்டும். 10, 15 பேர்
பங்கு பெற்றாலும் ஓரிருவரே இறுதியில்
வெற்றி பெறுகிறார்கள். இடையே சோர்ந்து
போய் விலகுபவர்களும் உண்டு. கடைசியாக
வெற்றிக்கம்பத்தைத் தொடும்போது
தோல்வியுறுபவர்களும் உண்டு. தளரா
உறுதியுடன், கோப்பையைப் பெற்றே தீர்வது
என்ற உறுதியுடன் பெறுகிறவர்களும்
இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஏகலைவன் துரோணரிடம் சென்று வில்
வித்தையைக் கற்றுத் தருமாறு பணிவுடன்
கோரினார். ஆனால், அவர் மறுத்துவிட்டார்.
ஏகலைவன் மனம் சோரவில்லை. துரோணரைப்
போல ஒரு பதுமையைச் செய்து,
அச்சிலையையே தனது மானசீகக்
குருவாகக்கொண்டு வில் வித்தை
பயின்றான். கடைசியில் அவனது இடையறாத
முயற்சி, பயிற்சி அவனை அர்ஜுனனுக்கு
சமமான வில்லாற்றல் மிக்க வீரனாக ஆக்கியது
என்பது மகாபாரதக்கதை.
சரியான திட்டம் இல்லாவிட்டால் வாழ்க்கையில்
வெற்றி பெற முடியாது. நமது இலக்கை
முதலில் நிர்ணயம் செய்துகொண்டு, ஆழ்ந்த
ஈடுபாட்டுடன் செயல்படுத்துவோமானால் நம்
எண்ணம் இறுதியில் பயனைத்தரும் என்பதற்கு
மேற்சொன்ன இரண்டு புராணக்கதைகளுமே
தக்க சான்றாகும்.
இல்லாத ஒன்றைக் குறித்து வருந்துவதைவிட,
இருக்கின்ற ஒன்றை வைத்து, கிடைத்த
வாய்ப்பினைப் பயன்படுத்தி, செம்மையாகத்
திட்டமிட்டு, நிறைந்த வாழ்க்கை வாழலாமே.
முயன்றால் முடியாததொன்றில்லை.
பெருமைக்குரிய நமது முன்னால்
குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல்கலாம்
பிறந்தது சின்னஞ்சிறு ஊர். எளிமையான
குடும்பம். சாதாரண சூழலில் கிராமத்தில்
படிப்பு. செல்வச் செழிப்போ, வசதி வாய்ப்போ
இல்லை. ஆனால் அவரது கடின உழைப்பும்,
விடாமுயற்சியும், ஆர்வமும், தளராத மனமும்,
சாதிக்க வேண்டும் என்ற முனைப்பும் அவரைச்
சிகரத்தை எட்ட வைத்தது. அவரது உறுதிக்கும்,
உழைப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் கடவுளும்
துணையாக நின்றிருக்கிறார் என்பது
உண்மையல்லவா.
மதி இருந்தால்
விதி என்ன செய்யும்?
வெற்றி பெறாதவர்கள் தான் விதியின் மீது
பழியைப் போட்டுத் தப்பித்துக் கொள்ள
முயல்கிறார்கள். பிரச்சனையே இல்லாத
வாழ்க்கை இல்லை. ஆனால் பிரச்சனையே
வாழ்க்கையாவது சிலரது சோகம்.
பிரச்சனையைக் கண்டு துவளாமல், அதனை
எப்படிச் சமாளிப்பது என்று தைரியமாக
எதிர்கொள்ளும்போது, அமைதியாக
சிந்திக்கும் போது வழி பிறக்கிறது.
அமெரிக்க தத்துவஞானி திரு. பிராண்ட்
ரயஸியின் “எம்பவர் மீ ஆன் லைன்” என்ற நூலில்
வெற்றிக்கான பதினெட்டுப் படிக்கட்டுகளைக்
குறிப்பிட்டுள்ளார். அவற்றை நாமும்
பின்பற்றி வெற்றி பெறலாமே.
1. முதலில் பெரிதாகக் கனவு காணுங்கள்.
2. வழி நடத்தும் அறிவை வளர்த்துக்
கொள்ளுங்கள். எப்படிச் செய்ய விரும்புகிறீர்க
ள். அந்த லட்சியக் கனவு நிறைவேறுவதற்கான
வழிவகை என்ன? என்பதை நன்கு தீர்மானித்துச்
செயல்படுங்கள். ஒரு வருடத்தில் நீங்கள் அடைய
வேண்டிய பத்து லட்சியங்களைக் குறித்து
வைத்துக்கொண்டு, அதனை ஒவ்வொன்றாக
நிறைவேற்ற முயலுங்கள்.
3. நீங்கள் உங்களைச் சுயதொழில்
முனைவோராக நினைத்துக் கொள்ளுங்கள்.
4. நீங்கள் செய்யும் வேலையைப் பெரிதும்
நேசியுங்கள். உங்களுக்குப் பிடித்தமான
வேலை எது என்பதைத் தீர்மானித்து, அதில்
திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
5. எந்த வேலையையும் மிகவும் நேர்த்தியாக,
சிறப்பாகச் செய்ய முயலுங்கள். தொழில்நுட்பம்
பற்றிச் சிந்தித்தால் இன்னும் வளர்ச்சியைக்
காண்பீர்கள்.
6. கடின உழைப்பே உங்கள் உயிர்மூச்சாக
இருக்கட்டும். முன்னேறும் வரை சோர்வுக்குச்
சற்றேனும் இடம் தராதீர்கள்.
7. தொடர்ந்து முன்னேற்றத்தின்
ஏணிப்படிக்கட்டுகளில் ஏறிச்செல்லுங்கள்.
மேன்மேலும் அந்தத் தொழிலை எப்படித்
திறம்பட வளர்த்துக் கொள்வது என்பதை
அறிந்து செயல்படுங்கள். மேன்மேலும்
கற்றுக்கொள்பவராக, அதில் முழுமையாக
உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள்.
தினமும் ஒருமணி நேரமாவது உங்கள் துறை
சம்பந்தப்பட்டவரைப் பற்றி படியுங்கள்.
மேன்மேலும் அது சம்பந்தமான பலப்பல
விஷயங்களையும், யுக்திகளையும்
தெரிந்து கொள்ளுங்கள்.
8. உங்களது ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட
தொகையை ஒன்று முதல் இரண்டு சதவிகிதம்
சேமியுங்கள் ‘நஹஸ்ங் ரட்ண்ப்ங் வர்ன் நல்ங்ய்க்’
என்பதை உங்களது தாரக மந்திரமாகக்
கொள்ளவும். அதற்குமேல் மீதியுள்ள
சம்பளத்தில் செலவழியுங்கள்.
9. உங்களது தொழில் அல்லது வியாபாரத்தின்
முழுநுணுக்கங்களையும் நன்கு தெரிந்து
கொள்ளுங்கள். இதுபோட்டிகள் நிறைந்த
உலகம். போட்டியைச் சமாளிப்பதற்கேற்ப உங்கள்
தொழில் அல்லது வியாபார யுக்தியை
அவ்வப்போது அபிவிருத்தி செய்து
கொள்ளுங்கள்.
10. மற்றவர்களுக்குச் சேவை செய்ய
முயலுங்கள். (வாடிக்கையாளர்களது தேவை
பற்றிய கவனம்) என்பது மிகமிக அவசியம்.
வாடிக்கையாளர் திருப்தி தான் உங்களுக்கு
வரப்பிரசாதம். வாடிக்கையாளர்களைத்
திருப்திப்படுத்த இன்னும் ஏதேனும் செய்ய
முடியுமா என்பதைக் கவனித்துச்
செயல்படுங்கள். இதுவே உங்கள் வளர்ச்சியின்
தாரக மந்திரம்.
11. உங்களது தொழில் வளர்ச்சியில்
தூய்மையும், நேர்மையும், தனித்தன்மையும்
என்றும் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
12. உங்களைப் போல மற்றவர்களையும் உயர்வாக
எண்ணுங்கள். எல்லோரிடமும் அன்புடனும்,
மரியாதையுடனும் நடந்து கொள்ளுங்கள்.
12. உங்களைப்போல மற்றவர்களையும் உயர்வாக
எண்ணுங்கள். எல்லோரிடமும் அன்புடனும்
மரியாதையுடனும் நடந்து கொள்ளுங்கள்.
13. முக்கியமாக நிறைவேற்ற
வேண்டியவற்றை முன்னுரிமையுடன்
நிறைவேற்ற வேண்டியவை, அவசரமாக
செய்து முடிக்க வேண்டியவை என்பதை நன்கு
தீர்மானித்து, பட்டியலிட்டுக் கொண்டு
செயல்படுங்கள். என்பதைத் தெளிவாக
புரிந்துகொண்டு செயல்படுங்கள்.
14. ஒரு உயரத்திலிருந்து அடுத்த
உயரத்திற்குச் செல்ல உங்களைத் தயார்படுத்திக்
கொள்ளுங்கள். சுழற்சியையும்,
போக்கையும், மாற்றங்களையும் அடையாளம்
காணக் கற்றுக்கொள்ளுங்கள்.
15. உடன் பிறந்த கற்பனைத் திறனை
ஒருபோதும் பூட்டி வைக்காதீர்கள். எந்த ஒரு
பிரச்சனையையும் எப்படி சரி செய்வது,
இடையூறுகளை எப்படிச் சமாளிப்பது
என்பதைத் தீர்க்கமாக ஆராய்ந்து