Thursday 16 June 2016

சிந்தனை துளிகள்

சிந்தனை துளிகள்......
* தன்னை அடக்கப் பழகிக் கொண்டவன் வேறு எதற்கும் வசப்படமாட்டான். அவனே வாழத் தகுதியுள்ளவன்.
* நம்மை நாமே வெறுக்காமல் இருப்பது முதற்கடமை. முன்னேற்றமடைவதற்கு முதலில் சுயநம்பிக்கை அவசியம்.
* பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம். அது இல்லாத வனுக்குக் கவலை சிலர்
* பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஒழுக்கத்தை விற்று விடாதே.
* பழிக்குப்பழி வாங்கியாக வேண்டும் என்ற எண்ணத்துடன் தண்டனை தரும் அதிகாரம் மனிதர் யாருக்கும் கிடையாது.
* பிறர் குற்றங்களை மன்னிக்கும் உயர்ந்த குணம், குற்றமற்ற நல்லவர்களிடம் மட்டுமே இருக்கும்.

தயங்குபவன் கை தட்டுகிறான் ....
துணிந்தவன் கை தட்டல் பெறுகிறான்....
விடா முயற்சியே வெற்றியின் இரகசியம்.....

* நீங்கள் சூரியனைப் போலப் பிரகாசிக்க வேண்டுமானால், முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்.
* கடின உழைப்பு, நேர்மைக்கு மாற்று எதுவும் இல்லை; நிச்சயமாக எதுவும் இல்லை.
* கரைகளைக் கடக்கும் துணிவிருந்தால்தான் புதிய கடல்களை கண்டுபிடிக்க முடியும்.
* அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள். அதுதான் உண்மையான தலைமைப் பண்பு.
* ஒரு தேசம் ஊழலில்லாமலும், அறிவாளிகளின் தேசமாகவும் இருக்க மூன்று பேரால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தந்தை, தாய், ஆசிரியர்தான் அந்த மூன்று பேர்.
* எல்லாப் பறவைகளும் மழைக் காலங்களில் கூடுகளில் அடையும். ஆனால் கழுகு, மழையைத் தவிர்க்க மேகத்துக்கு மேலாகப் பறக்கும்.
* அறிவுதான் உங்களை சிறந்தவர்களாகவும், பலமுள்ளவர்களாகவும் மாற்றுகிறது.
* தேசம் என்பது எந்தவொரு தனிமனிதனுக்கும், நிறுவனத்துக்கும், கட்சிக்கும் அப்பாற்பட்டது.
* கருணையில்லாத அறிவியல் முழுமை பெறாது.