Saturday 2 June 2018

இன்றவன்

உலகம் ஒரு தோட்டம்!  அதற்கு முதலாளி                 இறைவன்!!
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

    ஒரு பணக்காரனுக்கு தோட்டம் இருந்தது.அதில் இரண்டு தோட்டக்காரர்கள் இருந்தார்கள்.ஒருவன் சோம்பேறி.ஆனால் எஜமானன் தோட்டத்திற்கு வந்தால் போதும்,உடனே எழுந்து போய் கூப்பிய கைகளுடன் அவரிடம்,"ஓ,என் எஜமானனின் முகம் எவ்வளவு அழகாக இருக்கிறது"என்று புகழ் பாடி நிற்பான்.மற்றவன் அதிகம் பேசுவதே இல்லை,ஆனால் கடினமாக உழைப்பான்.பல வகையான பழங்களையும்,காய்கறிகளையும் சாகுபடி செய்து தொலைவிலிருக்கும் தன் எஜமானனின் வீட்டிற்கு சுமந்து சென்று கொடுப்பான்.இந்த இரண்டு தோட்டக்காரர்களுள் யாரை அந்த எஜமானன் அதிகம் விரும்புவான்?.

இந்த உதாரணத்தைக்கூறி சுவாமி விவேகானந்தர் விளக்குகிறார்: "இறைவன்தான் அந்த எஜமானன்.இஇந்த உலகம்தான் அவரது தோட்டம்.இங்கே இரண்டு வகையான தோட்டக்காரர்கள்,அதாவது மக்கள் இருக்கிறார்கள்.ஒரு வகையினர் சோம்பேறிகள்,ஏமாற்றுக்காரர்கள்; இறைனின் அழகான கண்களையும்,மூக்கையும்,மற்ற குணநலன்களையும் பற்றி வெறுமனே பேசிக்கொண்டிருப்பார்கள்.மற்றொரு வகையினர்,ஏழை,பலவீனர்களான எல்லா மனிதர்களையும்,விலங்குககள் மற்றும் அவரது படைப்புகள் அனைத்தையும் மிகுந்த கவனத்தோடு பராமரிப்பவர்கள்.

   இவர்களுள் யார் இறைவனின் அன்பிற்கு உ ரியவர்கள்?நிச்சயமாக அவரது குழந்தைகளாகிய மக்களுக்கு சேவை செய்பவர்களே.

   இறைவனுக்கு சேவை செய்ய விரும்புபவர்கள் அவரது குழந்தைகளாகிய இந்த உலக உயிர்கள் அனைத்திற்கும் முதலில் சேவை செய்ய வேண்டும். இறைவனின் தொண்டர்களுக்கு சேவை செய்பவர்களே அவரது மிக சிறந்த தொதத்டர்கள் என சாஸ்திரங்களிலும் கூறப்பட்டுள்ளது.

   இக்கருத்தை மனதில் கொள்ளுங்கள். மீண்டும் சொல்கிறேன்.மனத்தூய்மையுடன் இருங்கள்.உங்களை நாடிவரும் ஏழைகளுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.இதுவே நற்கருமம்.இதன் பயனாக உங்ஙகள் இதயம் தூய்மை பெறும்.அப்போது இறைவன் வெளிப்பட்டு தோன்றுவார்.அவர் எல்லோரது இதயத்திலும் எப்போதும் இருக்கிறார்.

   அழுக்கும்,தூசியும் படிந்த கண்ணாடியில் நம் உருவத்தை பார்க்க முடியாது.அறியாமையும்,தீய குணங்களுமே நம் இதயக்கண்ணாடியில் படிந்துள்ள அழுக்கும்,தூசியும் ஆகும். நம் நன்மையை மட்டுமே நினைக்கின்ற சுயநலம்,பாவங்கள் அனைத்திலும் முதற்பாவமாகும்.சுயநலமற்ற தன்மையே மதத்திற்கான உரைகல்.சுயநலமில்லாதவனே மேலான ஆன்மீகவாதி.அவனே இறைவனுக்கு அருகில் இருக்கின்றான்.