Sunday 10 June 2018

மனதின் மாற்றம்

லேசாகனும் மனசு லேசானும், ஆமா நம்ம மனசு எந்த விதமான அழுத்தமும் இல்லாமல் லேசாகனும்.அப்படி லேசாக லேசாக உங்கள் எண்ணங்கள் வலிமை மிகுந்த ஒன்றாக உங்க விருப்பங்களை நிறைவேற்றும் தளமாக அமையும்.அப்படி மனசு லேசாக என்ன செய்ய வேண்டும் என்றால் மனதில் உள்ள குறைகள் அனைத்தையும் ஒரு காகித்த்தில் எழுதி அதை தீயிட்டு பொசுக்கி விடவும். இது உங்களை மனதளவில் ஒரு  சுமையை இறக்கி வைத்த உணர்வை முதலில் தரும்.இந்த உணர்வின் தொடராக உங்களுக்கு பிடித்தமான ஒரு செயலை செய்யுங்கள் அது உங்கள் மனதை மேலும் மகிழ்ச்சியான ஒரு சூழலுக்கு கொண்டு செல்லும்.தனிமையை தவிருங்கள் , கண் மூடி சில நிமிடங்கள் அமைதி காணுங்கள்  இதை திரும்ப திரும்ப செய்து வாருங்கள் மனம் லேசாக லேசாக உங்கள் குறைகளை பற்றி எந்த சிந்தனையும் வரவைக்காதீர்கள் அதற்கு பதில் " எனது நியாயமான ஆசைகள், நிறைவோடும்,பரிபூரணத்தோடும், நடத்தியும் கடத்தியும்,தந்து கொண்டு இருக்கும் பிரபஞ்ச பேராற்றலே,படைத்தலின்  மூலவனே,நன்றி நன்றி " என சொல்லி பிரார்த்தனை செய்யுங்கள்.
கடமைக்காக அல்ல , காலத்தின் கட்டாயத்தில் தன்னம்பிக்கையோடு ,முழுநேசத்தோடு,எந்த விதமான சந்தேகமும் இன்றி முழுஈடுபாடோடு செய்து வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய மாற்றத்தை விரைவில் காண்பீர்கள்..