Saturday 2 June 2018

செல்வம்

உள்ளே நீங்கள் அசிங்கமாகவும் அருவருப்பாகவும் உங்களை நீங்கள் உணர்வதால்தான் வெளியே ஒப்பனைகளும்,ஆடைகளும்,அணிகலன்களையும் அணிகிறீர்கள்.

உண்மையான செல்வந்தன் தன்னை பணக்காரனாக காட்டிக்கொள்ள தேவையில்லை.

ஹென்றி ஒரு மிகப்பெரிய பணக்காரர்.அவர் ஒரு ஊருக்கு சென்று இரவு தங்குவதற்கு வாடகை குறைவான அறை வேண்டுமென கேட்டார்.

விடுதி உரிமையாளர் கேட்டார் உங்கள் மகன் வரும்பொழுதெல்லாம் விலை உயர்ந்த அறை கேட்பார்.விலை உயர்ந்த உடைகள்தான் உடுத்துவார்.ஆனால் நீங்கள் மிக மோசமான சட்டை அணிந்து கானப்படுவது வினோதமாக உள்ளதே.

அதற்கு ஹென்றி சொன்னார்.என் மகன் பணக்காரன் கிடையாது.அவனை யாருக்கும் என்னுடைய மகன் என்று தெரியாததால் தான் ஒரு ஏழை அல்ல தான் ஒரு பணக்காரன் என்று நிரூபிக்கவேண்டியுள்ளது.ஆனால் எனக்கு அப்படி அல்ல நான் எப்படி இருந்தாலும் நான் பணக்காரந்தான்.

அழுக்கு சட்டை போட்டிருப்பதால் நான் ஏழை ஆகிவிடமுடியாது.எனக்கு தெரியும் நான் பணக்காரன் என்று.பிறகு ஏன் அதை அடுத்தவருக்கு நிரூபிக்க முயற்சி செய்யவேண்டும்.

இதுதான் உண்மையான பணக்கார தண்மை.நீங்கள் உள்ளே செல்வந்தர் ஆகிவிட்டால் வெளியில் யாருக்கும் உங்கள் உண்மை தண்மையை நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை.

அடுத்தவனுக்கு பயந்தவன் தான் தன்னை பார்த்தால் அடுத்தவன் பயம் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறான்.

உள்ளே நீங்கள் அசிங்கமாகவும் அருவருப்பாகவும் உங்களை நீங்கள் உணர்வதால்தான் வெளியே ஒப்பனைகளும்,ஆடைகளும்,அணிகலன்களையும் அணிகிறீர்கள்.

ஒரு உண்மையான மனிதன் செல்வத்தை தேடி ஓடுவதில்லை.அதே நேரம் தன்னுடைய வறுமையை உயர்வாகவும் நினைப்பதில்லை.

வறுமையை நேசித்தால் செல்வத்தை வெறுப்பதாக பொருள்.செல்வத்தை நேசித்தால் வறுமையை வெறுப்பதாக பொருள்.

ஆனால் உண்மையான மனிதன் எதையும் வெறுக்கவும் மாட்டான்,நேசிக்கவும் மாட்டான்.

ஒரு புதிய பணக்காரன் புதிதாக ஒரு வீடு கட்டியிருந்தான்.அதில் மூன்று நீச்சல் குளங்கள் இருந்தது.இரண்டில் நீர் இருந்தது.ஒன்று மட்டும் வெறுமையாக இருந்தது.

அவன் நன்பன் கேட்டான்.... எதற்கு மூன்று?

பணக்காரன் சொன்னான், முதலாவது வெண்ணீர் குளியலுக்கு.இரண்டாவது குளிர் நீருக்கு.மூன்றாவது நீச்சல் தெரியாதவர்களுக்கு.