Tuesday, 2 February 2021

நம்பிக்கை

உங்கள் விருப்பமானவருக்கு கொரியர் செய்துவிட்டு கொரியர் பின்னேயே அலைவதில்லை 
.
நம்பிக்கை இல்லை என்பதால் நீங்களே கொரியர் கம்பெனி வேலையை செய்வதில்லை 
.
ஹோட்டலுக்கு சென்று பிடித்த உணவை ஆர்டர் செய்து சாப்பிடுவீர்கள் 
.
நம்பிக்கை இல்லை என்பதால் ஹோட்டலில் சென்று சமைத்து சாப்பிட போவதில்லை
.
பஸ்சில் பயணம் செய்வீர்கள். நம்பிக்கை இல்லை என்பதால் நீங்கள் பேருந்தை நீங்கள் இயக்கபோவதில்லை
.
ஒவ்வொரு நாளும் பெரிய விசயங்களை நீங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் கடந்து விடுகிறீர்கள்.
.
சின்ன விசயங்களில் நம்பிக்கை இல்லை என்று உங்களுக்கு நீங்கள் சொல்லி கொள்கிறீர்கள் 
அவ்வளவு தான்
.
இந்த ஆழமான நம்பிக்கையில் தான் நீங்கள் ஒவ்வொரு நாளும் வாழ்ந்து கொண்டிருக்கிறேர்கள்.
.
பெரிய விசயங்களில் வெளிபடுத்தும் நம்பிக்கையை உங்கள் விருப்பங்களை அடைவதையும், உங்கள் பிரச்சனைகளை தீர்க்க வெளிபடுத்தினாலே போதும்
.
நீங்கள் நம்பிக்கை இல்லை என்று புலம்ப காரணம். .
அதை உங்களால் பார்க்க முடியாததால் தான். 
கண்ணுக்கு புலப்படாத நம்பிக்கையை உணர தான் முடியும். அது கண்ணுக்கு புலப்படாத அன்பின் ஆற்றலால் வழிநடத்தப்படுகிறது 
.
ஆழ்மனம் உங்கள் விருப்பங்களை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் தான் உங்களிடம் சேர்க்கிறது.

Monday, 1 February 2021

சூழ்நிலை

ஒரு ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரங்கள் இருந்தன.

அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி முதல் மரத்திடம் மழை காலம் தொடங்க இருப்பதால்  நானும் என் குஞ்சுகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா என்றது.
முதலில் இருந்த மரம் 
முடியாது என்றது.

அடுத்த மரத்திடம் சென்று கேட்டபோது அது அனுமதித்தது. 

குருவி அந்த இரண்டாவது மரத்தில் கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த நேரம், 
அன்று பலத்த மழை, ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்துச் சென்றது .

தண்ணீரில் இழுத்து செல்லும் மரத்தைப்பார்த்து  குருவி சிரித்து கொண்டே சென்னது, 
எனக்கு வசிக்க கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லபடுகிறாய் என்று.

அதற்கு அந்த மரம் கூறிய பதில்,
எனக்குத் தெரியும், 
நான் வலு இழந்து விட்டேன், எப்படியும் இந்த மழைக்குத்  தாங்க மாட்டேன், தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவேன் என்று. 

நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் 
உனக்கு இடம் இல்லை என்றேன்.
என்னை மன்னித்து விடு என்றது. 

கருத்து :--  
உங்களுக்கு யாரும் உதவி செய்யவில்லை என்றால் தவறாக நினைக்காதீர்கள். 

அவரவர்  சூழ்நிலை அவரவருக்கு மட்டும் தான் தெரியும்.

பொறுமை தான் உறவுகள் நீடிக்கக் காரணம்..

படித்ததில் பிடித்தது, 
நன்றி 

கதை

 ஒரு கதை .. படித்ததில் ரகசியத்தை உணர்ந்தேன்.........

குஞ்சுப் பறவை ஒன்று சோகமாய் இருந்தது. அதன் தாய்ப் பறவை, ‘‘ஏன் சோகமாய் இருக்கிறாய்’’ என்று கேட்டது. 

குஞ்சுப் பறவை, ‘‘எனக்கு பிறரிடம் எதையும் கேட்பதற்கே கூச்சமாக இருக்கிறது’’ என்றது. 

‘‘தேவையில்லாத வெட்கம் உன் வாழ்க்கையை சிறப்பில்லாததாக ஆக்கிவிடும்’ என்று தாய் எச்சரித்தது. 

குஞ்சு அதைக் கேட்டு, ‘‘சும்மா பொன்மொழியாக சொல்வது எளிது. செய்து காட்டுவது கடினம்’’ என்றது. 

இதைக் கேட்ட தாய்ப்பறவை, தன் குஞ்சுப் பறவையை அழைத்துக் கொண்டு பறந்தது. 

ஏரிக்கரையோரம் சென்று பறந்தபடி, நீரின் அருகே எச்சமிட்டது. ஏரியில் ததும்பிய சிற்றலை, எச்சத்தை நீரில் கரைத்தது. 

தாய்ப்பறவை ஏரியை அழைத்து, ‘‘எனக்கு என் எச்சம் வேண்டும். கொடுத்து விடு’’ என்றது.

 ‘‘அது என்னுள் கரைந்து போய்விட்டது. 

அதைத் திருப்பிக் கொடுக்க முடியாது. 

அதற்கு பதிலாக ஏரிக்குள் இருக்கும் மீன் ஒன்றைத் தருகிறேன்’’ என்றது ஏரி.
 
தாய்ப்பறவை அந்த மீனை எடுத்துக்கொண்டு பறந்தது. ஒரு வீட்டின் முன்னால் வைத்துவிட்டு கொஞ்ச நேரம் மறைந்திருந்தது. 

வீட்டில் இருந்தவர்கள் மீனை எடுத்துச் சென்ற சிறிது நேரம் கழித்து கதவைத் தட்டி, ‘‘என் மீன் எங்கே? எனக்கு அது வேண்டும்’’ என்றது

. ‘‘அதைக் குழம்பு வைத்து சாப்பிட்டுவிட்டோம். அதற்கு பதிலாக நாங்களே தயாரித்த தரமான கயிறு தருகிறோம்’’ என்று கொடுத்தார்கள். 

தாயும் குஞ்சும் கயிறை எடுத்துக் கொண்டு பறந்தன. 

வழியில் ஒருவர் கிணற்றருகே கவலையுடன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தன. 

அவருடைய கிணற்றில் கயிறு இற்றுப் போய்விட்டதாம். ‘‘கயிறில்லாமல் நீர் இறைக்க முடியாது. நீர் இல்லாமல் போனால் என் வீட்டில் நடக்க இருக்கும் விழா நடக்காது’’ என்று புலம்பினார். 

‘‘நான் கயிறைக் கொடுத்தால் நீங்கள் என்ன தருவீர்கள்?’’ என்று தாய் கேட்டது.

‘‘என்னிடம் இருக்கும் அரிய வகை விதை நெல் ஒரு படி தருகிறேன். 

அது அழிந்து விட்டதாக மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் அது அழியவில்லை. என்னிடம் விதையாக கொஞ்சம் இருக்கிறது’’ என்றார் அவர்.

தாயும் குஞ்சும் விதைநெல்லை சுமந்துகொண்டு வயலுக்கு வந்தன. 

அங்கே அந்நாட்டின் ராஜா விவசாயத்தை கண்காணித்துக் கொண்டிருந்தார். 

அவருக்கு விவசாயத்தில் அதிக ஆர்வம். 

அவர் அருகே விதை நெல்லைப் போட்டுவிட்டு தாயும் குஞ்சும் மறைந்தன. திரும்பி வந்தால் நெல் இல்லை. 

ராஜாவிடம் தாய் கேட்டது, ‘‘என் அரிய வகை விதை நெல் எங்கே?’’

ராஜா திடுக்கிட்டு, ‘‘அந்த அரிய வகை விதை நெல் யாருடையது என தெரியாது. 

நான் அதைப் பயிரிடச் சொல்லிவிட்டேன். அது உன்னுடையதா? அதற்கு பதிலாக நீ என்ன கேட்டாலும் செய்கிறேன்’’ என்றார்.

ராஜாவின் அரியணையில் ஒரு மணி நேரம் அமர்ந்து அரசாட்சி புரியும் உரிமையை தாய்ப்பறவை கேட்டது. 

ராஜாவும் ஒரு மணி நேரம் அதை ஆட்சி செய்ய வைத்தார். 

அதிகாரத்தைப் பெற்றதும் தாய்ப்பறவை, ‘‘எங்கள் பறவை இனங்களுக்கு தேவையான உணவை இனிமேல் ராஜாவே கொடுக்க வேண்டும்’’ என்றொரு ராஜ கட்டளை பிறப்பித்தது. 

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த குஞ்சுப் பறவை அசந்துவிட்டது. 

ஒன்றுக்குமே உதவாத எச்சத்தில் ஆரம்பித்து நாட்டை ஆளும் அதிகாரத்தைப் கைப்பற்றி, தங்களுக்கான உணவுக்கும் வழி செய்த அம்மாவின் செயல்திறன் பற்றி பெருமைப்பட்டு புகழ்ந்து சொன்னது. 

அதற்கு தாய்ப்பறவை, ‘‘நமக்கு இந்த உணவு வேண்டாம். 

ராஜாவிடம் சொல்லிவிடுவேன்.

 நான் இதைச் செய்து காட்டியது உனக்கு புரிய வைக்கத்தான். 

ஒன்றுமே இல்லாத ஒன்றில் இருந்துகூட, கூச்சப்படாமல் கேட்கும் திறனால் பலவற்றை உருவாக்கிவிட முடியும். 

வெட்கப்படும் உயிரினங்களால் இவ்வுலகில் சிறப்பாக வாழ முடியாது. 

உனக்குத் தேவையானவற்றை கூச்சப்படாமல் உலகத்திடம் வாய்விட்டுக் கேள். 

கொடுப்பதும் கொடுக்காததும் அவர்கள் இஷ்டம். கேட்காமலேயே, ‘கொடுக்க மாட்டார்கள்’ என்று யூகம் செய்யாதே’’ என்றது.

உழைப்போம் !! உயா்வோம்!!

சுமைகளை_சுமக்காதீர்


சுமைகளை_சுமக்காதீர்

வாழ்கையின் அடித்தளத்தை உறுதியாக போடுவதற்கான வழிமுறைகள் என்ன? எந்த அர்த்தமும் இல்லாமல் வாழ்க்கை அடித்து செல்லும் வழியில் செல்லாமல் எதிர்நீச்சலடித்து வெற்றி பெறுவது எப்படி? 

எந்த விடயமும் உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

முக்கியமாக உங்கள் கடந்த காலத்தில் வலிகளை தாங்கி செல்வீர்களானால் உங்கள் எதிர்காலமும் அதே அளவுக்கு வலி மிகுந்ததாக இருக்கும். இருள் படிந்த கடந்த காலம் வெளிச்சமான எதிர்காலத்திற்கு எதிரானதாகும்.

கடந்தகாலத்தில் அவமானப்-படுத்தப்பட்டிருக்கலாம். நம்பிக்கை துரோகம், ஏமாற்றம், தோல்வி எதுவாக இருந்தாலும் முடிந்தது, முடிந்தது என எதிர்காலத்தை குறித்தான எண்ணத்தை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு யாராவது செய்த துரோகத்தை மனதில் வைத்து அவர்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களை பின்னுக்கு தள்ளும். கசப்பான கடந்தகால சுவடுகளை மனதிலிருந்து அழித்துவிடுங்கள்.

உங்களை யாராவது ஏமாற்றி இருக்கலாம். ஆனால் அது உங்கள் தவறல்ல. ஆனால் அதிலிருந்து வெளியேறாமல் கடந்த காலத்தை நினைத்து வெம்பி கொண்டிருப்பது நீங்கள் செய்யும் தவறு தான்.

எடுக்கும் முடிவுகள் உங்களுக்கானதாக இருக்கிறதா இல்லை வேறு யாரையாவது திருப்திப்படுத்தவோ அல்லது சூழ்நிலைக்கு அடிபணிந்து முடிவெடுக்கிறார்களா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள்.

வாழ்க்கையின் தேவை என்ன என்பதை புரிந்து கொண்டு வாழ வேண்டும். பிறரின் வாழ்க்கைக்குள் நீங்கள் சோளக்காட்டு பொம்மை போல் கோமாளி ஆகிவிடாதீர்கள். சூழ்நிலை உங்களை பின்னுக்கு இழுத்தால் நீங்களும் அதற்கு கட்டுப்பட்டு அடித்துச் செல்லப்படாதீர்கள்.

உங்கள் எல்லை இதுதான் என வரையறுத்துக் கொள்ளாதீர்கள். இயலாதது என்று எதுவுமே இல்லை. சாதிக்க முடியாதது என்று எதுவுமே இல்லை. உங்கள் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கை தான் முக்கியமானது.

உங்களை உங்கள் மனதும்,  கடந்தகால கசப்பான அனுபவங்களும் வேட்டையாடாமல் இருந்தால், பிறரால் உங்கள் முன்னேற்றத்தை தடுக்க இயலாது.

வாழ்க்கையின் உறுதியான அடித்தளத்திற்கு அதிகமான பணம் தேவை என பலரும் நினைக்கிறார்கள். பணத்தை மட்டும் கணக்கிட்டு  எடுக்கும் முடிவுகள் மடமையானதாகவே முடியும். அது தவறான பழக்கங்களையும் பிரச்சனையிலும் கொண்டு சேர்க்கும். 

முழுமனதோடு அர்ப்பணிப்பு உணர்வோடு  பிடித்த வேலையை செய்யும்போது பணமும் பொருளும் தானாக வந்து சேரும். பணத்தை மட்டும் கணக்கிட்டு குறுக்கு வழியை தேர்ந்தெடுத்தால் தோல்வியே மிஞ்சும்.


Sunday, 24 January 2021

புரிதல்

துக்கத்தைப் புரிந்து கொள்ள, நிச்சயமாக நீங்கள் அதை நேசிக்க வேண்டும், இல்லையா? அதாவது, நீங்கள் அதனுடன் நேரடி தொடர்பில் இருக்க வேண்டும்.

நீங்கள் எதையாவது புரிந்து கொள்ள வேண்டும் என்றால் - உங்கள் நண்பர், உங்கள் மனைவி, உங்கள் மேலதிகாரி -  நீங்கள் அதற்கு அருகில் இருக்க வேண்டும். எந்தவொரு ஆட்சேபனையும், தப்பெண்ணமும், கண்டனமும், கணிப்பும் இல்லாமல் நீங்கள் அதைப் பார்க்க வேண்டும், இல்லையா?

நான் உங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், உங்களைப் பற்றி எனக்கு எந்தவிதமான கருத்துகளும்  இருக்கக்கூடாது. நான் உங்களை நேரடியாக பார்க்கும் திறன் கொண்டவனாக இருக்க வேண்டும், தடைகள், என் தப்பெண்ணங்கள் மற்றும் நிபந்தனைகளின் திரைகள் வழியாக அல்ல. நான் உங்களுடன் இணக்கமாக இருக்க வேண்டும். அதாவது நான் உங்களை நேசிக்க வேண்டும்.

இதேபோல், நான் துக்கத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்றால், நான் அதை நேசிக்க வேண்டும். நான் அதனுடன் தொடர்பு கொள்ள வேண்டும். ஆனால், என்னால் அவ்வாறு செய்ய முடியாது. ஏனென்றால் நான் விளக்கங்கள் மூலமாகவும், கோட்பாடுகள் மூலமாகவும், ஒத்திவைப்புகள் மூலமாகவும் துக்கத்திலிருந்து விலகி ஓடுகிறேன்.

இவை அனைத்தும் வாய்மொழியின் செயல்முறை. எனவே சொற்கள் - விளக்கங்கள், கோட்பாடுகள் - என்னை துக்கத்துடன் நேரடியாக தொடர்பு கொள்வதைத் தடுக்கின்றன.

நான் துக்கத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ளும்போதுதான், அதை என்னால் புரிந்து கொள்ள முடியும்.

~ ஜே. கிருஷ்ணமூர்த்தி
வாழ்க்கையெனும் புத்தகம்.


பிராத்தனை

🤲🏽 *பிரார்த்தனைகள் நிறைவை தருமா...?* 🤲🏽

இதை யார் நம்புகிறார்களோ இல்லையோ என்பதை பற்றிய கவலையோ, தேவையோ இறைவனுக்கு ஒரு போதும் கிடையாது. அவனின் கட்டளைகள் படி இங்கே எல்லாமுமே நடந்து அடித்துக் கடந்து,
போய்க் கொண்டே தான் இருக்கும். 

இவ்வாழ்வும் எம்மை அதன் போக்கில் தான், இல்லை அதன் போக்கில் மட்டும் தான் இழுத்துக் கொண்டு போகும். நாமும் முட்டி மோதி நகர்ந்து கொண்டே தான் இருக்க வேண்டும். நான் இதன் பின்னால் வர மாட்டேன் இத்தோடு நின்று கொள்கிறேன், என்னால் இனி எந்த சங்கடத்தையும் வாழ்வில் ஏற்க வலிமை கிடையாது, போதும் வாழ்ந்தது, என்றெல்லாம் சொல்லி விட்டு ஓர் இடத்தில் அமர்ந்து கொண்டாலும், 

சூரியன் உதிக்கும், இரவும் பகலும் மாறுகின்ற சுழற்சி நடக்கும், கடல் இயங்கும், வானம் மழையை பொழியும், பூமியில் தாவரங்கள் வளரும், சந்திரன், நட்சத்திரம் என இப்பிரபஞ்சத்தின் எதுவும் நமக்காக காத்திருக்கப் போவதில்லை.

இப்படி மரணத்தின் பிடிக்குள் சிக்கும் வரை இவ்வாழ்வின் இன்ப துன்பங்களை எல்லாம் மாறி மாறி கடந்தே தீர வேண்டும் என்பதே அழுத்தமான நியதி.

அப்படி கடக்கையில் பிரச்சனைகள், சோகங்கள், கவலைகள், அரண்ட சூழ்நிலைகள், தாங்கிக் கொள்ள இயலாத ரணங்கள், வலியின் விளிம்புகளில் வாழ வேண்டிய கட்டாயங்கள் எல்லாம் மனிதனுக்கேற்ப மாறி மாறி இங்கே உண்டாகிக் கொண்டு தான் இருக்கும்.

அச்சூழலில் தான் பிரார்த்தனைக்கும் நமக்குமான தொடர்பாடலும், அதற்கான முக்கியத்துவமும் உள்ளத்தில் அதிகமாக உண்டாகும், ஏனெனில் மனிதனால் இயலாத எல்லாவற்றையும் இறைவனால் சாத்தியப்படுத்த இயலும் என்ற பூரண நம்பிக்கை தான் காரணம்.

அப்படியும் கூட பலர் சொல்வார்கள், என்ன பிரார்த்தித்து என்ன பயன்? நான் கேட்டவைகள் கிடைக்கவுமில்லை, எனது எதிர்ப்பார்ப்புக்கள் நிறைவேறவுமில்லை, எனது இத்துனை கால சோக வாழ்வு மாறவும் இல்லை, இப்படி பல காரணங்களை கூறி விரக்தியுற்று பேசுவதை காணலாம். 

சரி, அப்படியே பிரார்த்தனை செய்யாது இருந்திருந்தால் மட்டும் இந்நிகழ்வுகள் ஏதும் எம்மை விட்டு தூரமாக போயிருக்குமா? அல்லது அதை விட்டு நாம் தப்பியிருக்கலாம் என்ற உத்தரவாதம் ஏதும் நம் கையில் உண்டா? அரங்கேறுவதையும், நடந்தேற இருப்பதையும் ஒரு போதும் இயலாமை கொண்ட இந்த மனித இனத்தால் நிறுத்தி விட முடியாது. ஆதலால் நம்  சிந்தனைகளுக்குள் எட்டாத அளவுக்கான ஒரு சக்தி கொண்ட, படைத்தவனிடம் தான் நாம் சரணடைய வேண்டும்.

அத்தகைய இறை சக்தியில் நாம் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை பற்றிய கவலை எல்லாம் இறைவனுக்கு கிடையாது, அவன் கர்மாக்களின் நிகழ்வுகளுக்கான தீர்வை அறிந்தவன், அதை நாம் முறையிட்டு அவனிடம் கேட்க வேண்டும் என்பதையும் விரும்புபவன். 

எனவே நம்  முறைப்பாடுகளை அவன் முந்நிலையில் சமர்ப்பிப்பதே சாலச்சிறந்தது. அதில் மிகப்பெரிய மகிழ்ச்சி உண்டு. யாரிடமும் தலை குனிந்து நிற்க தேவையற்ற ஓர் மகிழ்ச்சி, உதவி பெற்றதற்காக யாருக்கும் நாசுக்காக நன்றி செலுத்த தேவையற்ற நிரப்பமான மகிழ்ச்சி. நேர்மறையான நம்பிக்கை சக்தி தரும் மகிழ்ச்சி... 

இந்த நேர்மறையான சக்தியின் நம்பிக்கையே நமது துயரங்களை தாங்கும், தாண்டும் வலிமையை தரும் என்பதை முழுமையாக புரிந்து கொண்டால் இறை சக்தியின் மேல் நம்பிக்கை மேற்கொள்ளும் பிரார்த்தனைகள் எப்போதும் நிறைவு தரும்.

நன்றி... 
✨வாழ்க வளமுடன், நலமுடன்✨ 

🚩சர்வம் கிருஷ்ணார்ப்பணம்🚩

கோபத்தை குறைக்க தியானம்

 கோபத்தைக்_குறைப்பதற்கான_எளிய_தியானமுறை...

முதலில் நமக்கு #கோபம் வருவதற்கும், அந்தக் கோபத்தை சரிசெய்ய #தியானம் செய்வதற்கும் என்ன தொடர்பு உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.

கோபம் என்பது நம் உள்ளே மலர்வது, அதேபோல தான் தியானம் என்பதும் நம் உள்ளே மலர்வது. நம் உள்ளே உருவாகக்கூடிய ஒன்றை சரிசெய்ய வேண்டுமெனில் நாம் உள்ளே சென்றால் தானே முடியும் அதற்கான சிறந்த பயிற்சி  முறை தான் தியானம்.

உதாரணமாக,

நமக்கு கோபம் வரும் வேளையில் நம் உள்ளே என்ன மாற்றம் நிகழ்கிறது என்பதை கவனித்துப் பாருங்கள். கோபம் என்கிற உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக நம்முள்ளே அதிகரித்துக் கொண்டிருக்கும் அது நம் வயிற்றுப் பகுதிக்கும் இதயத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் ஏற்படும் முயற்சி செய்தாள் அதை உங்களால் உணர முடியும்.

அப்படி அதை உணர முடிந்தால் உங்களால் கோபத்தை எளிமையாக சரி செய்யவும் முடியும் ஆனால், இதற்கு மிகவும் பொறுமையும் நிதானமும் அவசியம் ஏனென்றால் நீங்கள் செய்யப்போவது ஒரு சாகசம் ஏனென்றால் நீங்கள் கோபம் ஏற்படும் போது உணர்வு அதிகமாக உள்ள அந்த நேரத்தில் அதை கவனிக்க வேண்டும். 

அப்படி கவனிக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக அந்த உணர்வு உங்கள் கட்டுப்பாட்டில் வரும் அப்படி வந்ததும் உங்களுக்கு கோபம் ஏற்படும் போது அதை எளிமையாக சரிசெய்யவும் முடியும்.

இரண்டாவதாக,

நீங்கள் அமைதியாக அமர்ந்திருக்கும் நிலைகள் நிலையில் கோபம் ஏன் வருகிறது? எதற்காக வருகிறது? இதற்கு முன் எப்போதெல்லாம் என்ன காரணத்திற்காக கோபம் வந்தது? என்பதைப்பற்றிய சுய தேடல் செய்திட வேண்டும்.

இதை சில நாள் பயிற்சியில் புரிந்து கொள்ள முடியும். அப்படி புரிந்து கொண்டால் அதுபோன்ற காரணங்கள் ஏற்படும்போது தானாகவே சரிசெய்து விடும் ஏனென்றால் அப்படித்தான் நடக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் எனவே அது மீண்டும் நிகழாது.

மூன்றாவதாக, 

இயற்கையாய் நமக்கு ஏற்படும் கோபத்திற்கும், செயற்கையாய் மற்றவர்கள் வழியாக நம்முள் சேகரித்து வைத்துள்ள இப்படி இருந்தால் கோபம் வரவேண்டும், இப்படி நடந்தால் கோபம் வரவேண்டும் என்றெல்லாம் உங்களுக்குள் திணிக்கப்பட்டுள்ள குப்பைகளால் வரும் கோபத்திற்கும், 

அடுத்ததாக,

நான் இதற்காகவெல்லாம் கோபப்படுவேன் இப்படி எல்லாம் எனக்கு கோபம் வரும் என்னால் கோபத்தை அடக்க முடியாது இதுபோன்று உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொண்ட தேவையற்ற சுயபிரகடன கோபங்களுக்கும் வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும்.

இதைப் புரிந்து கொள்ளும்போது உங்களால் மட்டுமல்ல வேறு யாராலும் உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்த இயலாது.

இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் எந்த ஒரு செயலுக்கும் நகருக்கும் ஏதாவது ஒரு காரணம் இருந்தே தீரும்.

காரண இல்லாமல் காரியம் நிகழ்வதில்லை. முதலில் காரணம் அதன்பிறகே இதுபோன்ற நிகழ்வுகள்(காரியம்) நம் வாழ்வில் நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 

எந்த ஒரு நிகழ்வாக இருப்பினும் அதற்கு நாமே முதல் காரணம், நம் செயல்களே முதல் காரணம் எனவே நம்மை நாம் சரிசெய்து கொள்வதுதான் இதற்கு உண்மையான தீர்வாக இருக்கும்.

நம்மை நாம் புரிந்து கொள்வோம், நம்மை நாம் சரிசெய்து கொள்வோம் மகிழ்ச்சியாக வாழ்வோம்...

நன்றி நண்பர்களே...
[1/20, 10:27 PM] +91 90920 20809: #கோபத்தைக்_குறைப்பதற்கான_எளிய_தியானமுறை...

முதலில் நமக்கு #கோபம் வருவதற்கும், அந்தக் கோபத்தை சரிசெய்ய #தியானம் செய்வதற்கும் என்ன தொடர்பு உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.

கோபம் என்பது நம் உள்ளே மலர்வது, அதேபோல தான் தியானம் என்பதும் நம் உள்ளே மலர்வது. நம் உள்ளே உருவாகக்கூடிய ஒன்றை சரிசெய்ய வேண்டுமெனில் நாம் உள்ளே சென்றால் தானே முடியும் அதற்கான சிறந்த பயிற்சி  முறை தான் தியானம்.

உதாரணமாக,

நமக்கு கோபம் வரும் வேளையில் நம் உள்ளே என்ன மாற்றம் நிகழ்கிறது என்பதை கவனித்துப் பாருங்கள். கோபம் என்கிற உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக நம்முள்ளே அதிகரித்துக் கொண்டிருக்கும் அது நம் வயிற்றுப் பகுதிக்கும் இதயத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் ஏற்படும் முயற்சி செய்தாள் அதை உங்களால் உணர முடியும்.

அப்படி அதை உணர முடிந்தால் உங்களால் கோபத்தை எளிமையாக சரி செய்யவும் முடியும் ஆனால், இதற்கு மிகவும் பொறுமையும் நிதானமும் அவசியம் ஏனென்றால் நீங்கள் செய்யப்போவது ஒரு சாகசம் ஏனென்றால் நீங்கள் கோபம் ஏற்படும் போது உணர்வு அதிகமாக உள்ள அந்த நேரத்தில் அதை கவனிக்க வேண்டும். 

அப்படி கவனிக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக அந்த உணர்வு உங்கள் கட்டுப்பாட்டில் வரும் அப்படி வந்ததும் உங்களுக்கு கோபம் ஏற்படும் போது அதை எளிமையாக சரிசெய்யவும் முடியும்.

இரண்டாவதாக,

நீங்கள் அமைதியாக அமர்ந்திருக்கும் நிலைகள் நிலையில் கோபம் ஏன் வருகிறது? எதற்காக வருகிறது? இதற்கு முன் எப்போதெல்லாம் என்ன காரணத்திற்காக கோபம் வந்தது? என்பதைப்பற்றிய சுய தேடல் செய்திட வேண்டும்.

இதை சில நாள் பயிற்சியில் புரிந்து கொள்ள முடியும். அப்படி புரிந்து கொண்டால் அதுபோன்ற காரணங்கள் ஏற்படும்போது தானாகவே சரிசெய்து விடும் ஏனென்றால் அப்படித்தான் நடக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் எனவே அது மீண்டும் நிகழாது.

மூன்றாவதாக, 

இயற்கையாய் நமக்கு ஏற்படும் கோபத்திற்கும், செயற்கையாய் மற்றவர்கள் வழியாக நம்முள் சேகரித்து வைத்துள்ள இப்படி இருந்தால் கோபம் வரவேண்டும், இப்படி நடந்தால் கோபம் வரவேண்டும் என்றெல்லாம் உங்களுக்குள் திணிக்கப்பட்டுள்ள குப்பைகளால் வரும் கோபத்திற்கும், 

அடுத்ததாக,

நான் இதற்காகவெல்லாம் கோபப்படுவேன் இப்படி எல்லாம் எனக்கு கோபம் வரும் என்னால் கோபத்தை அடக்க முடியாது இதுபோன்று உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொண்ட தேவையற்ற சுயபிரகடன கோபங்களுக்கும் வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும்.

இதைப் புரிந்து கொள்ளும்போது உங்களால் மட்டுமல்ல வேறு யாராலும் உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்த இயலாது.

இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் எந்த ஒரு செயலுக்கும் நகருக்கும் ஏதாவது ஒரு காரணம் இருந்தே தீரும்.

காரண இல்லாமல் காரியம் நிகழ்வதில்லை. முதலில் காரணம் அதன்பிறகே இதுபோன்ற நிகழ்வுகள்(காரியம்) நம் வாழ்வில் நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 

எந்த ஒரு நிகழ்வாக இருப்பினும் அதற்கு நாமே முதல் காரணம், நம் செயல்களே முதல் காரணம் எனவே நம்மை நாம் சரிசெய்து கொள்வதுதான் இதற்கு உண்மையான தீர்வாக இருக்கும்.

நம்மை நாம் புரிந்து கொள்வோம், நம்மை நாம் சரிசெய்து கொள்வோம் மகிழ்ச்சியாக வாழ்வோம்...

நன்றி நண்பர்களே...