<3 எந்தவொரு பழக்கத்தையும் நிறுத்துவது எப்படி <3
நான் ரயில் பயணங்கள் செய்யும்போது மக்களை கவனித்திருக்கிறேன்.சிலர் ரயிலில் பயணம் செய்யும்போது ஒன்றும் செய்யாமல் இருக்க முடியாததால் எதையாவது மீண்டும் மீண்டும் திரும்பத்திரும்ப செய்துகொண்டே இருப்பார்கள்.படித்து முடித்துவிட்ட செய்தித்தாளையே சிலர் திரும்பத்திரும்ப படிப்பார்கள்.ஒருவரை நான் கவனித்தேன்.அவர் ஜன்னலைத் திறப்பார் : பிறகு அதை மூடிவிட்டு சிகரெட் பிடிப்பார்.பிறகு ஜன்னலை மூடுவார்,திறப்பார்...இப்படி திரும்பத்திரும்ப செய்வார்.
யாருமே ஓய்வாக இருப்பதில்லை.
நீங்கள் செய்வதையெல்லாம் கவனித்துப்பாருங்கள்.நீங்கள் செய்வதில் 90 சதவீதம் பொருத்தமற்றதாக இருக்கும்.இதனால் தேவையற்ற செயல்கள் உங்கள் சக்தியை விரயமாக்கிவிடுவதால் உங்களால் அர்த்தமுள்ள செயலாற்றல் தேவைப்படும் போது உங்களிடம் அதற்கேற்ற சக்தி இருக்காது.
ஓய்வாக,தளர்வான நிலையில் இருக்கும் ஒருவரிடம் சக்தி சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.செயலாற்றும் நேரம் வந்த அக்கணமே அவருடைய மொத்த மெய்யிருப்புமே செயலில் அதுவாக ஈடுபடும் : அப்போது அச்செய்கை முழுமையானதாக இருக்கும்.
ஓய்வாக இல்லாத ஒருவரின் செயல்புரிதல் அரைகுறையானதாக இருக்கும்.
இது உங்களுக்கே தெரியும்.இதைச் செய்வதற்கான காரணம் தெளிவற்ற துறுதுறுப்புதான் என்பதை அறிவீர்கள்.
நீங்கள் செய்யும் வேண்டாத வேலைகளை மாற்றினால் மட்டுமே போதாது.அவற்றை மாற்றி செயலாற்றலாக மேம்படுத்திவிட வேண்டும்.
மக்கள் என்னிடம் வந்து,"நான் புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட வேண்டும்" என்று கூறும்போது நான் அவர்களுக்கு,"ஏன்,புகைபிடித்தல் அழகான தியானமாக இருக்கலாமே,அதை ஏன் நிறுத்த வேண்டும்?
அப்படி நிறுத்திய பிறகு வேறு எதையாவது செய்யத்தானே தோன்றும்.உங்கள் பழக்கப்படி எதையாவது செய்யத்தானே போகிறீர்கள்?
புகைபிடிப்பதற்கு பதில் "பான்" "சூயிங்கம்" எதையாவது மெல்ல ஆரம்பிப்பீர்கள்.இப்படிச் செய்யவில்லை என்றால் வாய்சும்மா இருக்காமல் ஏதாவது வம்பு பேச்சில் ஈடுபடுவீர்கள்.இது அதிக ஆபத்தாகிவிடும்." என்று கூறுவேன்.
வீணே செயல்புரிந்தவாறு இருப்பதை நிறுத்த விழிப்புணர்வுடன் இருந்தாலே போதும்.செயல்புரிதல் உயிர்களை பேய்போல் அலையச்செய்கிறது.இதைத் தவிர்க்க அதை முழு விழிப்புணர்வுடன் கவனித்தாலே போதும்.
"செய்வதை முயற்சி செய்து நிறுத்தினால் அதுவும் செயல்புரிதலாகவே இருக்கும்.அதை தூக்கி எறிந்துவிட முடியாது.
அது தானாக நின்றுவிட வேண்டும்.அது தானாக மறைந்து போகவேண்டும்.இதை போக்கிவிட முயற்சி செய்வது நல்லதல்ல."
விழிப்புணர்வுடன் இருந்து முடிந்த வரை செயலாற்றுவதில் ஈடுபடுங்கள்.செயல்புரிதல் தானாக நின்றுவிடும்.இதற்கு போதிய காலம் தேவைப்படும்.
-- ஓஷோ --