Saturday 11 August 2018

அன்பு மன்னிக்கும்

"ஆழமனத்தின் அற்புத சக்தி" -டாக்டர் ஜோசப் மரபி

அத்தியாயம் 17 : ஆழ்மனத்தை உபயோகித்து மன்னிக்கும் மனநிலையைப் பெறுவது எப்படி ?

1. கடவுளும் சரி , வாழ்க்கையும் சரி , மனிதர்களிடம் வித்தியாசம் பார்ப்பதில்லை . வாழ்க்கை பாரபட்சமற்றது . இணக்கம் , ஆரோக்கியம், பேரானந்தம் , மற்றும் சமாதானத்தின் கொள்கைகளோடு நீங்கள் உங்கள் எண்ணங்களை ஒத்திசைவாக வைத்திருக்கும் போது  , வாழ்வின் ஆதரவும் கடவுளின் ஆதரவும் உங்கள் பக்கம்தான் இருக்கும்.

2. கடவுளோ அல்லது வாழ்க்கையோ நோயையும் , விபத்தையும் துன்பங்களையும் நமக்கு அனுப்பவதில்லை .வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற விதிக்கேற்ப , நம்முடைய எதிர்மறையான எண்ணங்கள் மூலமாக இவற்றை நாம் நம்மீதே சுமத்திக்கொள்கிறோம் .

3. கடவுள் குறித்த உங்கள் கொள்கைதான் உங்கள் வாழ்வின் மிக முக்கியமான விஷயம் .நீங்கள் ஓர் அன்பான கடவுள் மீது நம்பிக்கை கொண்டிருந்தால் , உங்கள் ஆழ்மனம் எண்ணற்ற ஆசீர்வாதங்களை உங்களிடத்தில் கொண்டு வருவதன் மூலம் செயல்விடை அளிக்கும் .அன்பே கடவுள் என்று நம்புங்கள்.

4. வாழ்வோ அல்லது கடவுளோ உங்கள் மீது பழியுணர்ச்சி கொண்டிருப்பதில்லை. வாழ்க்கை உங்களை ஒருபோதும் குற்றம் சாட்டாது . உங்கள் கையில் உள்ள வெட்டுக்காயத்தை வாழ்வு குணமாக்கும். நீங்கள் உங்கள் விரலைச் சுட்டுக்கொண்டால் , வாழ்வு உங்களை மன்னிக்கும் .அப்பகுதியை முழுமையாகவும்  கச்சிதமாகவும் குணமாக விரையும்.

5. உங்கள் குற்ற உணர்வு , கடவுளைப்பற்றியும் வாழ்க்கையை பற்றியும் நீங்கள் கொண்டுள்ள தவறான ஒரு கொள்கை . கடவுளோ வாழ்க்கையோ உங்களை தண்டிப்பதில்லை . எடைபோட்டு பார்ப்பதில்லை . உங்கள் தவறான நமபிக்கைகள் , எதிர்மறையான சிந்தனைகள் , சுய குற்றம் சுமத்துதல் ஆகியவை உங்கள் ஆழ்மனத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் மூலம் உங்களுக்கு நீங்களே இதை செய்து கொள்கிறீர்கள்.

6. கடவுளோ அல்லது வாழ்க்கையோ உங்களைக் கண்டிப்பதுமில்லை, தண்டிப்பதுமில்லை .இயற்க்கை ஆற்றல்கள் தீங்கு விளைவிப்பவை அல்ல. அவற்றின் பயன் , உங்களுக்குள் இருக்கும் சக்தியை நீங்கள் பயன்படுத்தும் விதத்தை சார்ந்துள்ளது. மின்சாரத்தை உபயோகித்து ஒருவரைக் கொலை செய்யலாம் அல்லது உங்கள் வீட்டைப் பிரகாசிக்க செய்யலாம். தண்ணீரில் ஒருவரை மூழ்கடிக்க  செய்யலாம் அல்லது அதை கொண்டு தாகத்தை தணிக்கலாம் , ஒருவரின் சொந்த மனதிலுள்ள எண்ணமும் நோக்கமும் நல்லது கேட்டதை தீர்மானிக்கின்றன.

7. கடவுளோ வாழ்க்கையோ ஒருபோதும் உங்களை தண்டிப்பதில்லை. கடவுள், வாழ்க்கை மற்றும் பிரபஞ்சம் ஆகியவற்றைப்பற்றி தாங்கள் கொண்டிருக்கும் தவறான கொள்கைகளால் மக்கள் தங்களை தாங்களே தண்டித்துக் கொள்கிறார்கள். அவர்களுடைய எண்ணங்கள் படைப்பாற்றல் வாய்ந்தவை .அவர்கள் தங்கள் துன்பங்களைத் தாங்களே உருவாக்கிக் கொள்கின்றனர்.

8. உங்களிடம் குறைகள் இருந்து, அவை குறித்து அடுத்தவர் உங்களை விமர்சித்தால் மகிழ்ச்சியுடன் அவருக்கு நன்றி கூறி அவரது விமர்சனங்களை பாராட்டுங்கள் . உங்களுடைய குறைகளை சரி செய்து கொள்ள இது உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.

9. உங்களுடைய எண்ணங்கள் , பதில் நடவடிக்கைகள் மற்றும் உணர்ச்சிகளுக்கு நீங்கள்தான் எஜமான் என்பதை அறிந்திருந்தால் , எவருடைய விமர்சனமும் உங்களை வருத்தமடைய செய்யாது. இது நீங்கள் அடுத்தவருக்காக பிரார்த்தனை செய்து, அவருக்கு ஆசீர்வாதம் வழங்குவதற்கு வாய்ப்பளிக்கறது . அப்படிச்ச் செய்வதன் மூலம் நீங்கள் உங்களையே ஆசீர்வாதித்துக்கொள்கிறீர்கள் .

10. நீங்கள் சரியான செயல் மற்றும் வழிகாட்டுதல் வேண்டிப் பிரார்த்தனை செய்தால் வருவதை ஏற்றுக்கொள்ளுங்கள். சுய பச்சாதாபம், விமர்சனம்,  பகை ஆகியவற்றுக்கு அங்கு இடமில்லை.

11. நல்லது என்றும் தீயது என்றும் எதுவும் இல்லை. ஆனால் அப்படிச் சிந்திப்பதுதான் , ஒன்றை நல்லதாகவோ அல்லது தீயதாகவோ ஆக்கும்.  உணவு, செல்வம் , உண்மையான வெளிப்பாடு ஆகியவற்றை விரும்புவதில் கேடு ஏதும் இல்லை. அது, நீங்கள் இத்தூண்டுதல்களை , ஆழ்ந்த விருப்பங்களை , அல்லது பேரார்வங்களை  எப்படி உபயோகிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது . ஒருவரை ஒரு துண்டு ரொட்டித்துண்டுக்காக துன்புறுத்தாமலேயே உங்கள் உணவு குறித்த விருப்பத்தை உங்களால் பூர்த்தி செய்ய முடியும்.

12. கடுங்கோபம் , பகைமை, தீய எண்ணம் , மற்றும்  வெறுப்பு ஆகியவை  பலவகை நோய்களுக்கு காரணம். அன்பையும் ,வாழ்வையும் , பேரானந்தத்தையும் , நல்லெண்ணத்தையும் உங்கள் காயப்படுத்தியவர்களிடம் தாராளமாக வெளிப்படுத்துவதன் மூலம் உங்களையும் அவர்களையும் மன்னியுங்கள். நீங்கள் அவர்களை நினைத்துப் பார்க்கும் போதுகூட , உங்கள் மனம்  சமாதானத்துடன்தான் இருக்கிறது என்பதை உறுதியாக அறிந்து கொள்ளும்வரை , தொடர்ந்து இதைச்செய்யுங்கள் .

13. மன்னித்தல் என்பது ஒருவருக்கு ஏதோ ஒன்றைக் கொடுப்பது. உங்கள் மனத்தில் எந்த உறுத்தலும் இல்லாத வரை , நீங்கள் அன்பையும் , சமாதானத்தையும் , பேரானந்தத்தையும் ஞானத்தையும் , வாழ்வின் அனைத்து ஆசீர்வாதங்களையும் அவர்களுக்கு வழங்குங்கள் .இதுதான் உண்மையான மன்னிப்பிற்கான திராவகப் பரிசோதனை.

14. ஒருவர் உங்களைக் காயப்படுத்தியிருந்தாலோ , உங்களிடம் பொய் சொல்லியிருந்தாலோ, உங்களை இழிவுபடுத்தி இருந்தாலோ , உங்களை பற்றி ஏதாவது ஒரு விதத்தில் பொல்லாங்கு பேசியிருந்தாலோ , அந்நபர் எதிர்மறையானவர் என்ற எண்ணம் உங்கள் மனத்தில் தோன்றுகிறதா ? அப்படியானால் நீங்கள் உண்மையிலேயே இன்னும் அவரை மன்னித்திருக்கவில்லை . பகைமையின் வேர்கள் இன்னும் உங்கள் ஆழ்மனத்தில் பதிந்திருந்து , உங்களையும் உங்களிடம் உள்ள நல்லவைகளை சூறையாடிக் கொண்டிருக்கின்றன, அவ்வேர்களைத் தகர்த்தெறிவதற்கான ஒரே வழி அன்புதான். அந்நபருக்கு வாழ்வின் அனைத்து ஆசீர்வாதங்களை கிடைக்க வாழ்த்துங்கள் ,,

The Power of Sub Conscious mind by Dr Joseph Murfy

நன்றி .நன்றி..நன்றி...