Tuesday 21 August 2018

டென்ஷனை தவிர்க்க

*டென்ஷனை தவிர்ப்போம்.*
*--------------------------*

*இதுவே நம் சிந்தனையாக இருக்கட்டும்;*

*ஒரு கப்பல் புயலில் மாட்டிக்கொண்டபோது, அதில் பயணித்த அனைவரும் இறைவனை வழிபட தொடங்கினர்.*

*ஒரு ஞானி மாத்திரம் ஏதும் செய்யாது இருந்தார்.*

*அவரை அனைவரும் பைத்தியம் என்று கேலி பேசினர்.*

*அந்த ஞானி சொன்னார், "'எனக்கு கடவுளிடம் எந்தவியாபாரமும் இல்லை. நம்மை காப்பாற்ற வேண்டுமா? மூழ்கடிக்க வேண்டுமா? என்பது இறைவன் கவலைப்பட வேண்டிய ஒன்று. அது என்னுடைய கவலை இல்லை. நான் பிறப்பதற்கு அவரிடம் கேட்கவில்லை. திடீரென இந்தபூமிக்கு நான்வந்தேன். ஆகவே, மரணத்தைப்பற்றியும் நான் கேட்கமுடியாது. எப்போது பிறப்பு என்கையில் இல்லையோ, மரணத்தைப்பற்றி மட்டும் எப்படி என் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும்?’ என்று.*

*இதுதான் வாழ்க்கை. நமது கையில் ஒன்றும் இல்லை. வேண்டும் என்றால் முயற்சித்து பார்க்கலாம். ஆனால் அதற்கு தகுந்தபலனை இறைவனிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அதாவது கடமையை செய்ய (கீதையின் சொற்படி) இறைவனிடம் பலனை ஒப்படைத்துவிட வேண்டும்.*

*அனைவரும் இதனைப்புரிந்து கொண்டால். வாழ்க்கை எப்போதுமே டென்ஷன் இல்லாமல் இருக்கும்.*