Thursday, 30 August 2018

தீதும் நன்றும்

கேள்வி:-*
            தீதும் நன்றும் பிறர் தர வாரா
இதில் பிறர் நமக்கு செய்யும் சூழ்ச்சியினால்  தீதும் நன்றும் ஏற்படுகிறதா? இல்லை
அதற்கு முழு காரணம் தாம் மட்டுமா?

*பதில் :-*
            நாம் மற்றவர்க்கு செய்யும் விளைவே நம்முடைய இன்பமும் துன்பமும்.

யாராலும் நமக்கு இன்பத்தை கொடுக்க முடியாது.

அதைப்போலவே துன்பமும்.

உங்களிடம் வந்து சேர்வதெல்லாம் எதிரொலிதான்.பிரதிபலிப்புதான்.

குரல் உங்களுடையதுதான்.
பிம்பம் உங்களுடையதுதான்.

உங்களுடைய உருவத்தை பிரதிபலிக்கும் கண்ணாடிதான் மற்றவர்கள்.

நம் உருவம் அழகாக இல்லை என்றால் கண்ணாடியை குற்றம் சொல்ல முடியுமா.?

அதைப்போல நமது கர்மாவை நமக்கு பிரதிபலிக்கும் கண்ணாடியான மற்றவர்களை எப்படி குறை சொல்ல முடியும்.?

நீங்கள் அழகாக இருந்தால் அதற்கு
கண்ணாடி பொறுப்பல்ல.

நீங்கள் அழகற்றவராக இருந்தால் அதற்கும் கண்ணாடி பொறுப்பல்ல.

அழகும் அவலட்சணமும் கண்ணாடி காட்ட தோன்றா.

*தீதும் நன்றும் பிறர் தர வாரா.*