Wednesday, 27 April 2022

பொருளாதாரம் முன்னேற்றம்



ஒரு செம்பு பாத்திரம் அல்லது கப். அதில் அரை cup தண்ணீர் அதில் ஏதேனும் பூக்கள் சிகப்பு நிறம் செவ்வரளி போன்றவை சிறப்பு.

எனினும் எந்த பூ என்றாலும் பரவாயில்லை.

அதையும் தண்ணீருடன் அந்த cup இல் போட்டு சூரியன் உதிக்கும் கிழக்கு திக்கு நோக்கி தரையில் ஏதாவது செடிக்கு ஊற்றி விட வேண்டும்

" ஓம் சூர்யாய நமஹ " மனதில் 3 முறை அல்லது அமைதியாக சொல்லலாம்.

காலை 5.30 to 6.00 நலம்.

எல்லா நாளும் செய்யலாம் அல்லது நடுவில் அவ்வப்பொழுது gap விட்டாலும் தவறில்லை.

செம்பு cup இல்லாதவர்கள் plastic, பீங்கான் அல்லது கண்ணாடி cup அல்லது டம்ளர் பயன்படுத்தலாம்.



விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது சொந்த அனுபவம் - 

Sunday, 27 March 2022

போர்ஸ் பயம்

*இந்த ஜாதகம் கட்டம் நல்ல நேரம் கெட்ட நேரம்  இதனால மனுசனுக்கு பயம் ஏன் வருது*

*அப்ப சாதரண பயத்திற்கும் அசாதரண பயத்திற்கும் என்ன விஷயம்*

*இப்ப மனிதர்கள் எல்லாரும் கிரக சேர்க்கை சனி நகர்வு பெயர்ச்சி இராகு கேது குரு பெயர்ச்சி ஜோசியம் வாஸ்து  இப்படி பார்த்துட்டு யாரோ சொன்ன ஒரு வார்த்தைக்கு அதிக அளவு முக்கியதுவம் கொடுக்குறதுனால தான் இந்த பய உணர்வு மனிதர்களுக்கு ஏற்படுகின்றது*

*சரி இதை பத்தி லாஜிக்கா சொல்ற என் மூளை கிட்ட கேட்டா*

*மனிதனின் தொடர்ச்சியான  எண்ணத்தை நிறுத்த மனிதனின் மூளைக்கு இருக்குற ஒரே வழி பயம் இந்த பயம் வந்த மனிதர்களால தன்னோட அடுத்த வேலையை செய்யறதுக்கு தேவையான புதிய யோசனையை மூளை நிறுத்துமாம்*

*அப்புறம் என்ன மனுசனுக்கு ஏற்பட்ட அந்த பயம் போக வரைக்கும் பசி எடுக்காத வகையில் மூளை வேலை செய்ய ஆரம்பிக்குமாம் அதனால மனிதனுக்கு பசிங்கிற உணர்வே இந்த பயம் போற வரைக்கும் ஏற்படாதவாறு பார்த்துகுமாம் மூளை*

*அப்புறம் என்ன ஆகும்னா நம்ம ஏற்கனவே நம்ம மூளைல படிச்சது கேட்டது பார்த்து வைச்சது எல்லாத்தையும் சேர்த்தி வச்சியிருப்போம் அதுல ஒன்றை நாம் தேர்ந்தெடுத்து சால்வ் பண்ணுற வரை இந்த பசிங்கிற உணர்வை நம் மூளை தள்ளி போடும்*

*அதனால் தான் பயம் வந்த மனுசங்க கிட்ட கேட்டிங்கனா வயிறு கும்முனு இருக்குது பசிக்கலை இப்பவேண்டாம்னு சொல்லுறது இல்லாட்டி கொஞ்சம் சப்பிட்டு போதும்னு சொல்லுறது*

*மனிதர்களுக்கு ஏற்பட்ட அந்த பயத்தை பத்தி மட்டுமே யோசிச்சு தெளிந்து ஒரு முடிவுக்கு வருவாங்க அப்புறம் இந்த பயம் போனதுக்கு அப்புறம் மூளை எப்பவும் போல வாப்பா நாம புதுசா யோசிச்போம்னு நம்மல வழிநடத்தும் எப்பவும் போல பசி உணர்வு ஏற்பட்டு நார்மலா சாப்பிடுவோம்*

*கதை சொல்லுறவுக்கும் ஒரு லிமிட் இருக்குனு என் மூளை கிட்ட கேட்டா*

*மனுசங்க பார்த்து பயந்துட்டு இருக்குற இந்த சனியை பத்தி ஒரு சூப்பர் குட் பிலிம் ஸ்டோரி மாதிரி சொல்லுறேனு சொன்ன தகவல் என்னனா*

*ஒட்டு மொத்த உலகத்தையும் ரூல் பண்ணுறது. சனி தான்*

*ஒவ்வொரு மாதமும் சந்திரன் மறைந்துவிடும்.  ஒவ்வொரு மாதமும் பூமி மறைந்து போக வேண்டும் இது தான் எழுதிய விதினு வெச்சுகலாம் எழுதப்படாத விதினு கூட வெச்சுகலாம்*

*எப்பவும் போல உதாரணம் கேட்டா உன்னோட செல்லுல இருக்குற இமோஸில இந்த சனிக்கு🪐 உள்ள முக்கியதுவத்தை பார்த்து தெரிச்சுக்க சொல்லுது*

*உலக டாப் பிராண்ட் செருப்பு லோகோ கணினி லோகோ கார் லோகோ ஏன் தினசரி பயன்படுத்துற எல்லா பொருள் லோகோவிலும் இந்த இந்த சனியின் சாராம்சம் இருக்குமாம்*🪐

*என்னோட எண்ணத்துக்கும் சனிக்கும் தொடர்பு இருக்கானு கேட்டா கண்டிப்பா இருக்குதாம் அது என்னன்னா பயமாம்*

*உதராணம் கேட்டா மனுசனோட அமைப்பு எப்படினா எதிலும் வேகம் அதுவும் இப்பவே முடியனும் இந்த நிமிசமே செய்யனும்னு நினைச்சு அந்த விஷயத்தில் எக்ஸ்பெர்ட் இல்லாம செஞ்சு சொதப்பும் போது இந்த கோள்களை கைகாட்டிட்டு  இதனால தான் இப்படினு சொல்லுவாங்களாம்*

*அப்ப சனி கிரகத்தை சாரி சாமியை நேருக்கு நேராக நின்னு கும்பிட கூடாதுனுங்குறதுக்கு காரணம் கேட்டா*

*அதெல்லாம் சும்மாங்கிறது மூளை*

*எல்லா விளைவுக்கும் ஓர் எதிர் விளைவு இருக்கும் அதே போல தான் மனித உடம்பு தாங்க கூடிய அளவுகளை விட போர்ஸ் அதிகபடுத்தினா(அதவாது ஆற்றல்)  எப்பவும் சமநிலையில் மூளை இருக்கும்*

*சிம்பிளா சொல்லனும்னா மனிசன் இந்த சனி கிரக ஜியோ போர்ஸை விட ஒன்னு அதிகப்படுத்தலாம் இல்லாட்டி சமநிலை படுத்தலாம் ஜோக்கா சொல்லனும்னா ஒன்னு சூப்பர் மேன் போல ஆகனும் இல்லாட்டி சின் சான் போல ஆகனும்*

*எப்படி இந்த போர்ஸ்ஸை மனிதன் அதிகப்படுத்தினானு பார்த்தா ஒன்று அவனுடைய மனநிலையில் மாற்றம் ஏற்படுத்துவது  இன்னொன்று கல் தங்கம் வைரம் இயற்கையா கிடைக்கிற பொருட்களை வைத்து*

*மேக்னட்டிக் போர்ஸ் போல பரவி இருக்குற இந்த ஜியோ போர்ஸ் ஒர் அளவுக்கு  தான் மனித உடம்பினால் தாக்கு பிடிக்க முடியும்*

*இந்த ஜியோ போர்ஸ் அதிகமா இருக்குற இடத்துல மனுசனுக்கு தடுமாற்றம் ஏற்படும் அதனால தான் சாலையில் ஒரே இடத்துல அடிக்கடி விபத்து ஒரே இடத்துல பூகம்பம் சுனாமி போன்றவை ஏற்படுறது*

*அதனால் தான் ரோட்டுல கவனம் விபத்து பகுதினு அங்க அங்க போட்டு வைக்கிறது*

*இதுக்கு ரெமிடி தான் என்ன எப்படி என்னோட (ஜியோ போர்ஸ்) பய உணர்வை போக்குறதுனு கேட்டா ஏற்கனவே எல்லாத்தையும் சொல்லிட்டேன் இருந்தாலும் சிம்பிள் ரெமிடி சொல்லுச்சு*

*நார்மலா நாம படுக்குற இடத்தை இந்த பய உணர்வு வரும் போது மாத்தி படுத்த வே போதுமாம் எல்லாம் மறந்து நமது எண்ணங்கள் மறுபடியும் சிறகடிக்க தொடங்கிடுமாம் பசியும் உடனே எடுக்குமாம்*

*அப்புறம் என்ன நமக்கு.எப்பவும் போல ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்*

*அப்ப இந்த ஜியோ போர்ஸ் வேற மேக்னடிக் போர்ஸ் வேற கிராவெட்டி போர்ஸ் வேறையானா*

*இந்த போர்ஸ் எல்லாத்துக்கும் ஒரே ஒரு விஷயம் மட்டும் எப்பவுமே ஒற்றுமையா இருக்கு நான் பார்த்த வரை அதன் துருவங்கள் 100% மேட்ச் ஆகுது ஆனா போர்ஸ் மட்டும் டிபர் ஆகுது*

*சரி எல்லாத்தையும் கலந்துவிட்டு பார்க்கலாம்னா ஒன்னு ஒரே அடியா நமக்கு பிடிச்ச மாதிரி இருக்குது இல்லை ஒரே அடியா சூப்பர் பாஸ்ட்டா மாறிடுது*

*சிம்பிளா சொல்லனும்னா நமக்கு காத்து எவ்வளவு வேனும்னு நம்ம வீட்டு பேன்   ஒன்னுலையா இல்லை ஐந்திலயானு ஒடுறதை பொறுத்து*

*தொடர்ந்து பயணிப்போம் இந்த போர்ஸ் பற்றியும்*🥰🥰🥰

Saturday, 26 March 2022

மாணவன்

சாக்ரடீஸிடம் ஒரு மாணவன் வந்தான்.

 ''ஐயா, மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?'' என்று கேட்டான்.

அதற்கு சாக்ரடீஸ்,
''மாணவன் என்பவன், 
கொக்கைப்போல இருக்க வேண்டும். கோழியைப் போல இருக்க வேண்டும். உப்பைப் போல இருக்க வேண்டும். உன்னைப்போல இருக்க வேண்டும்'' என்றார்.

மாணவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ''கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்'' என்றான்.

''கொக்கு, ஒற்றைக் காலில் நீண்டநேரம் பொறுமையாக நிற்கும். மீன்கள் வந்தவுடன் விரைந்து செயல்பட்டுப் பிடித்துவிடும். அதுபோல, ஒரு மாணவன் சரியான வாய்ப்புக் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி, அரிய செயல்களைச் செய்ய வேண்டும்'' என்றார்.

''கோழியைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே அதற்கு என்ன அர்த்தம்?'' என்று கேட்டான் மாணவன்.

''கோழி என்ன செய்யும்? குப்பையைக் கிளறும். ஆனால், அந்தக் குப்பைகளை விட்டுவிட்டு தனக்குத் தேவையான உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும். அதுபோல, மாணவர்கள் தாம் சந்திக்கும் தீமைகளைத்  தூரம் தள்ளி, நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்றார் சாக்ரடீஸ்.

''அடுத்தது, உப்பைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே...''

''ஆமாம். உப்பை எந்த உணவோடு கலக்கினாலும், அது இருக்கிறது என்று கூற முடியும். ஆனால், கலக்கிய உணவில் உப்பு கண்ணுக்குத் தெரியாது. அதன் சுவையை மட்டுமே உணர முடியும். அதுபோல, மாணவர்கள் எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் சிறப்பான தனித்தன்மையை வெளிப்படுத்தி, தனது மறைவுக்குப் பின்னும் அதை இவர்தான் செய்தார் என்று கூறும்படி விளங்க வேண்டும்'' என்றார்.

''எல்லாம் சரி, உன்னைப் போல இருக்க வேண்டும் என்றீர்களே... அதற்கு என்ன அர்த்தம்?'' என்று கேட்டான்.

''மாணவன் என்பவன் தனக்குள் எழக்கூடிய சந்தேகங்களை, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். அதற்காகத்தான் உன்னைப்போல இருக்க வேண்டும் எனச் சொன்னேன்'' என்று புன்னகைத்தார் சாக்ரடீஸ்.

அந்த மாணவன் மகிழ்ச்சியுடன் அவரை வணங்கினான்.

🙏🙏🙏

Friday, 28 January 2022

இரசவாதம்

ரசவாதம் என்பது ஓர்விஞ்ஞானம் அல்ல,
 அப்புறம் மாயாஜாலம்மா இல்ல, 
 தத்துவமா இல்ல.  

இது தெளிவற்றது ஆனால் முறையானது

அப்புறம் இது என்னதான் இரசவாதம்
இது எல்லாவற்றின் கலவையாகும்

இது குறியீடுகள் மற்றும் உருவகங்களால் நிறைந்துள்ளது, மேலும் அதன் குறியீடு சிக்கலானது ஆனா மிகப்பெரிய இரகசியத்தை உள்ளடக்கியது இந்த இரசவாதம்.

*பண்டைய ரசவாதிகளின் சின்னம் கடவுள் ஆண் மற்றும் பெண் சக்திகளின் கலவை மற்றும் சமநிலை, ஒளி மற்றும் இருள், ஈரப்பதம் மற்றும் வறட்சி*

இயற்கையானது சூரியனின் வெப்பத்தால் மனிதனை உருவாக்குகிறது என்று கூறுகிறது இரசவாதம்,

ரசவாதக் குறியீடானது மிகவும் குழப்பமானது  ஆனால் சரியான முறையில்  கையாண்ட முதல் இரசவாதிக்கு தான் தெரியும் அதன் உண்மை தன்மை

சரி தத்துவம் பேசுறவங்க என்ன சொல்லுறாங்க இந்த இரசவாதம் பத்தி
புத்தகத்தில் என்ன தான் சொல்லி இருக்காங்க

இந்த உலகத்தின் முடிவில், வானமும் பூமியும் சந்தித்து கொள்ள வேண்டும் இது உண்மையில் அவசியம் என கூறுவார்கள் - ஹெர்ம்ஸ் டிரிஸ்மெஜிஸ்டஸ்


சூரியனும் மனிதனும் ஒரு மனிதனை உருவாக்குகிறார்கள், ஏனென்றால் சூரியனின் சக்தியும் ஆவியும் உயிர் கொடுக்கின்றன சூரியனின் வெப்பத்தின் மூலம் இந்த செயல்முறை ஏழு முறை கடந்து செல்ல வேண்டும்.  - அரிஸ்டாட்டில்

வெப்பம் அவசியம், ஏனென்றால் அதன் சக்தியின் மூலம் பூமி இருளில் இருந்து விடுபட்டு அதற்கு பதிலாக ஒளியால் ஆசீர்வதிக்கப்படுகிறது.
 - டிரிஸ்மோசின்

 பூமியிலிருந்து எழுகிறது  வானத்திலிருந்து இறங்குகிறது;  அது மேலே உள்ளவற்றின் வலிமையையும் கீழே உள்ளவற்றின் வலிமையையும் தன்னகத்தே சேகரிக்கிறது.  - எமரால்டு டேபலட்

பூமியில் இவ்வாறு வெப்பத்துடன் கலந்துள்ள அனைத்தும் நிலவின் குளிர்ச்சியால் மாற்றியமைக்கப்படும்.  - டிரிஸ்மோசின்

 சரி இந்த  ரசவாதம் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது இந்த வெப்பத்துடன் நம் உலகில் 

இந்த வெப்பம் பூமியில் இருக்குற அனைத்து உயிர்களுடன் ஒட்டி உறவாடும் எப்போதும் ஒர் உயிர் முதல் பல்லுயிர் வரை

ஆனால இந்த வெப்பத்தை சரியா கையாளத் தெரியத உயிர்களுக்கு இந்த வெப்பம் எதிரியா தெரியும் கடைசில கருப்பாகி அழுகி தன்னை விடுவித்து வேறு பரிணாமத்தை நோக்கி நகர்திடும்
ஆனால்

இரசவாதிகள் மத்தியில் இந்த வெப்பத்தின் கலவை வேறுபட்டது

இந்த அளவு வெப்பம் இதுக்கு போதும் உதரணமா தங்கத்தை உருக்கிறது , சமையல் பண்ணுறது. காய்ச்சுறது. போன்றவற்றில் வெப்பத்தின் தன்மை மாறும்

ரசவாத செயல்முறையின் முடிவில் இரசவாதி என்ன பண்ணுவார்னா தான் கண்டுபிடித்த வெப்பத்தின் அளவை தத்துவமா கல்லில் குறியீடாக வரைவார் 

இப்படி தான் குறியிடுகள் கல்லில் சொல்லப்பட்டது இரசவாதிகள் மூலம் நமக்கு

சரி நம்ம உடம்ப பத்தி இரசவாதிகள் என்ன தான் சொல்லி வைச்சாங்க அந்த காலம் முதல் இந்த காலம் வரை

மனிச உடம்புல முக்கியமானது கண்ணும் காதும்

இது மனிதனின் உணர்வு உறுப்புகளாகும்

இந்த ரெண்டும் சரியா கையாளப்பட்டால் தனக்குள் மேன்படுவான்

 இதன் மூலம் மனிதனின் ஆன்மா மற்றும் ஆன்மீக உலகங்கள் அவனுக்கு திறக்கப்படுகின்றனவாம்

சரி இந்த கன்னும் காதும் இல்லாத  உடல் உயிர்களுக்கு உலகம் எப்போதும் இருண்டு மௌனமாக இருக்குமாம்

 இவ்வுலகங்கள் அவைகளுக்கு இருளாகவும் மௌனமாகவும்தான் எப்போதும் காட்சி அளித்து கொண்டு இருக்கின்றன இன்றளவும்

நாம் வாழும் உலகங்கள்  சாதாரண சூழ்நிலையில் நமக்கு எதுவும் தெரியாது
பார்த்து கொள்ளும்

நமக்கு அப்பாற்பட்ட உலகங்களை, நாம் அணுக முடியாத உலகங்களை நமக்கு அறிமுகப்படுத்த அவைகள்  விரும்பவில்லை

ஆனா இரசவாதி இந்த உலகத்தில் எப்படி தன்னை மேம்படுத்த என்னுனார்கள்னா மனித இயக்கத்தின் பணியானது, ஒவ்வொரு நாளும் மற்றும் ஒவ்வொரு மணிநேரமும் நம்மைச் சுற்றியுள்ள உலகங்களை நமக்குத் தெரியப்படுத்துவதாகும் அதை தெரிஞ்சுக்க முயற்சி பண்ணுனாங்க

சாதரண மனிதன் தன் உலகத்தில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தும் உலகங்களை அறிய விரும்பினான்.

ஆனா இரசவாதி இந்த உயர்ந்த உலகங்களை உணரும் உறுப்புகளைத் திறக்கும்செயல்களில் பங்கேற்க முயன்றான்

அதனால தான் உயர்ந்த உலகங்களை அவர்களே பார்த்து இரசிக்கும் திறனை  பெற முடிந்தது அவர்களால்.



























Friday, 27 August 2021

கத்திரிக்கோல்

*''கத்திரிக்கோல் வேண்டாமே...!*
......................................................... 

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு பற்றி கேள்வி பட்டு இருக்கிறோம். கற்றிருந்தாலும் கைவிடப்பட வேண்டிய கலை ஒன்று இருக்கிறது தெரியுமா...?
அதுதான் ''கத்தரிக்கோல் கலை.'' 

இயல்பாகவே சிலருக்கு இது கைவந்த கலையாக இருக்கும். இக்கலை வல்லுனர்களை எளிதில் இனம் காணலாம். 

அவர்கள் வேலை ஆகும்வரை வளைந்து நெளிந்து குழைந்து பேசுதல்;, அடிக்கடி தொலைப்பேசியில் அழைத்து நலம் விசாரித்தல், நம்மைப் பாராட்டி நம்மிடமே அளப்பு அரிப்பார்கள்... 

அவர்கள் வேலை முடிந்ததும் காணாமல் போய் விடுவார்கள்... 

நாம் வலியப்போய் பேசினாலும், 
"எனக்கு கொஞ்சம் அவசர வேலை இருக்கிறது, நாளைக்கு பேசலாமா..?"என்று நழுவி சென்று விடுவார்கள்.... 

இப்படிபட்ட கத்திரிக்கோல் கலைஞர்களை நாம்தான் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்... 

"ஏதோ!, ஒரு உதவி செய்து விட்டார் என்று, திரும்பத் திரும்ப நாமே அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என எப்படி இவர் எதிர்பார்க்கலாம்.?" 

அதற்காக இப்போது என்னுடைய மரியாதைக்கு இவரிடம் இப்போது நான் தொடர்பு வைத்து கொள்ள முடியுமா.? 

இப்படி எண்ணி எண்ணி அத்தகைய நட்பும், உறவும் இனி தேவையில்லை என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள்... 

நீங்களும் இந்த வகை கலைஞரில் ஒருவரா...? அப்படி என்றால் உங்களுக்கு சில வார்த்தைகள்: 

எவரையும் குறைத்து மதிப்பு இடாதீர்கள். இவரால் நமக்கு இனி ஆக வேண்டியது ஒன்றுமில்லை என யாரையும் எடை போட வேண்டாம்...
யார் உதவி!, எப்போது தேவைப்படும் என்பது இப்போது தெரியாது... 

சிறு உதவி செய்ததற்கே நீங்கள் நன்றி உள்ளவராக இருக்கும்போது மேலும் பெரிய உதவிகளை அவராக முன்வந்து செய்யக்கூடும்தானே...! 

அவருக்கு பெரிய மனம் இருந்ததால்தானே உங்கள் வேலையை வெற்றிகரமாக அவர் மூலம் சாதித்து இருக்கிறீர்கள்...! 

நீங்கள் கத்தரிக்க நினைப்பதை புரிந்து கொண்டால், அவர் முந்திக் கொள்வதுடன் நன்றி கெட்டவர் என்கிற பட்டத்தையும் உங்களுக்குத் தருவார்... 

பிறகு, நீங்கள் வலியப் போனாலும் அவர் மனதில் நீங்கள் செல்லாக்காசு ஆகிவிடுவீர்கள்தானே...! 

சின்னஞ்சிறு உதவி செய்தவரைக்கூட மறக்காதீர்கள். எதையும் சிறிது என மதிப்பு இடாதீர்கள். சில  நேரங்களில் சின்னச் சின்ன உதவிகள்தான் நமக்கு தேவையாக இருக்கும்... 

பணக்காரர் இல்லையே என ஏளனமாக நினைக்க வேண்டாம். ஆபத்து காலத்தில் உதவி செய்யாத செல்வந்தர்களைக் காட்டிலும் கையில் இருந்ததை அப்படியே கொடுத்து உதவிய ஏழை நண்பனே மேல்... 

*ஆம் நண்பர்களே...!* 

🟡 *கத்தரிக்கோல் கைவசம் வைத்திருப்பவர்களுக்கு அன்பான நண்பர்களோ!, உறவினர்களோ!, இருக்க மாட்டார்கள்...!* 

🔴 *"இவரைத் தெரியாதா...? இவர் தன் வேலையாகும்வரை காலைச் சுத்தி வருவார். வேலை ஆனதும் காலை வாருவார்" என்று நிச்சயம் உங்களைப் பற்றி அவர்கள் மத்தியில் ஒரு பேச்சிருக்கும்...!!* 

⚫ *உங்களால் கத்தரிக்கப்பட்டவர்கள் உங்களைப் பற்றி அவதூறாக தமக்குள் மட்டுமல்ல, உறவினர், நண்பர்களிடமும் பரப்புரை செய்வார்கள். மொத்தத்தில் அதனால் உங்கள் குடும்பத்தினரும் மரியாதை இழக்க நேரிடும்...!!!* 

🔘 _*எனவே!, எரையும் எந்த காலத்திலும், எக்காரணம் கொண்டும் கத்தரித்து விடாதீர்கள்.*_ 

*- வாழ்க வளமுடன்.*✒️

Monday, 14 June 2021

எஜமானர்

 
உங்கள் வாழ்க்கையின் எஜமானர் யார்❓❓

இந்த வாழ்கை எவ்வளவு வித்தியாசமானது. ஒவ்வொரு நாளும் எதாவது ஒரு விசயத்தை நமக்குச் சொல்லிக் கொடுத்துக்கிட்டே தான் இருக்கு. வாழ்க்கை என்பது எப்போதும் சந்தோசம் நெறஞ்சது இல்லை, இன்பமும், துன்பமும் கலந்து இருப்பது தான் வாழ்க்கை. 

ஒரு விசயத்தை நாம தெளிவா புரிஞ்சுக்கணும், நம்ம வாழ்க்கையில் நடக்கிறது எல்லாமே ஒரு நிகழ்வுகள் தான், அது சந்தோசமா இல்லை கஷ்டமானதா என்பது நம்மளும் நம்மளைச் சுற்றி இருக்கிறவங்களும் ஏற்படுத்துற ஒரு தோற்றம்.

உங்க வீட்டிலேயோ இல்லை பக்கத்து வீட்டிலேயோ சின்ன பையனோ பொண்ணோ இருந்தா ஒரு அரை மணி நேரம் அமைதியாக உட்கார்ந்து அந்த பையன் என்ன என்ன பண்ணிட்டு இருக்கான்னு பாருங்க. விளையாடுவான், கீழ விழுவான் அப்புறம் அவனே எழுந்திருச்சிடுவான், அடுத்த வேலையைப் பார்க்கப் போயிடுவான்.

எதாவது ஒரு நிகழ்ச்சியை நினைத்து அவனே சிரிச்சுக்குவான், எத்தனை முறை விழுந்தாலும் சாதாரணமா எழுந்து போயிடுவான். எந்த நேரமும் துறு துறுன்னு எதாவது ஒரு வேலையைப் பார்த்துக்கிட்டே இருப்பாங்க, ரொம்ப ஆச்சரியமான விசயமாக இருக்கும் . #மகரயாழ் எப்படி இந்த சின்ன பசங்களாலே ஏதாவது ஒரு வேலையை பண்ணிக்கிட்டே இருக்க முடியுது.

கீழே விழுவதும் பின்னர் எழுவதும் ஒரு சாதாரண நிகழ்வுதான், நீங்களும் நானும் ஒவ்வொரு மனிதரும் கீழே விழுந்து பின்னர் எழுந்திரிக்கிறோம் . ஆனால் , பெரியவர்கள் ஆன பின்பு பின்னர் ஒரு சின்ன தோல்வியை நம்மால் தாங்க முடியவில்லை .சின்ன தோல்வியிலே இருந்து எழுந்திருக்க முடியாம அழுது புலம்பிக்கிட்டு இருக்கோம்.

குழந்தைகளுக்குத் தோல்வியைப்பற்றி சொல்லி கொடுங்க, வாழ்க்கையிலே ஜெயிக்கிறது எப்படியோ, அப்படித்தான் தோல்வியை சந்திக்கிறதும். வெற்றியோ தோல்வியோ அது ஒரு சாதாரண நிகழ்வுகள் என்று சொல்லிக் கொடுங்க.

எந்த ஒரு தோல்வியிலே இருந்தும் உங்களால் மீண்டு வர முடியும், உங்க மனசுக்குச் சொல்லுங்க இது ஒரு சாதாரண நிகழ்வுதான் , என்னாலே மீண்டும் மீண்டும் எழுந்து வெற்றியை அடைய முடியும். நீங்க மனசு வச்சா உங்களாலே முடியும், 

ஏன்னா இது உங்க வாழ்க்கை, "நீங்க தான் உங்க வாழ்க்கையுடைய எஜமான்".*


 

Thursday, 10 June 2021

தூக்கம்

தூங்குவதும் ஒரு வகை தியானமே:

வீட்டில் மின் விசிறி ஓடுகிறது.
தொலைகாட்சி சத்தம் போடுகிறது.
ரேடியோ கத்துகிறது.

இந்த சத்தங்களை தவிர்த்து, வேறு பல வகையான சத்தங்களும் வெளியிலிருந்து கேட்கிறது.

இந்த சத்தங்களில், நாம் மிகவும் முக்கியமான ஒன்றை தொலைத்து விடுகிறோம்.

ஆம். நாம், நம்மை தொலைத்து விடுகிறோம்.

நாம் சத்தமான சூழலிலேயே வாழ்கிறோம் என்பதையே கவனிக்க தவறி விடுகிறோம்.

திடீரென, மின்சாரம் 'கட்' ஆகிவிடுகிறது.

மின்விசிறி ஓடவில்லை.
தொலைகாட்சி, ரேடியோ கத்தி உயிரை வாங்கவில்லை.

எல்லா வகை சத்தமும் நின்றுவிட்ட மாதிரி ஒரு சூழல்.

நன்கு கவனியுங்கள். இவ்வளவு நாள் நாம் கவானிக்காத ஒரு சத்தம், ஒரு புது வகை சத்தம் மெல்லிதாக கேட்கும்.

அந்த சத்தம் வெளிப் பொருளிலிருந்து வரவில்லை.

மாறாக, அது 'வெளியின்' சத்தம்.

நம் காதுக்கு ஒரு இரைச்சல் போல் கேட்கும்.

அந்த இறைச்சலையே கவனித்தால், அது பெருகும். 

அதில் ஒரு லயம் தோன்ற ஆரம்பிக்கும்.

மிகவும் இனிமையான இரைச்சல் அது.

இப்போதைக்கு அதை இரைச்சல் என்றே குறிப்பிடுகிறேன்.

இந்த இரைச்சலை பிடித்துக் கொள்ளுங்கள்.

தியானத்துக்கு இதுதான், பாதை.

தூக்கத்துக்கு இதுதான் தூக்க மருந்து.

ஒரு தடவை இந்த இரைச்சலை நன்கு அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

இரவில் தூங்கும் போது, மின் விசிறி ஓடினாலும் பரவாயில்லை. வேறு சின்ன - சின்ன சத்தங்கள் கேட்டாலும் பரவாயில்லை.

நன்கு கவனியுங்கள் இந்த இரைச்சலும் அங்கு இருக்கும்.

தெளிவாக கேட்கவில்லைஎன்றால், ஒரு பக்க காதை தலையணை மேல் மூடும்படி வையுங்கள். 

இரைச்சல் கேட்கும்.

இன்னும் தெளிவாக கேட்க வேண்டுமென்றால், இரண்டு காதுகளையும் மூடுங்கள்.

படுக்கையில் படுத்தபடி, அந்த இரைச்சலையே கவனியுங்கள்.

நன்கு தூங்கி விடுவீர்கள். 

எப்பொழுது தூக்கம் வந்தது என்றே தெரியாது.

நல்ல ஆழ்ந்த தூக்கம் வந்து விடும்.

சரி, இங்கு என்னத்தான் நடக்கிறது?

அந்த இரைச்சல் சத்தத்தை கேட்கும்பொழுது, கவனிக்கும்பொழுது மனத்திற்கு வேலை குறைகிறது.

வேலை குறைவதை மனம் ஏற்காது. 

மனத்திற்கு எந்நேரமும் வேலை செய்தாக வேண்டும். 

இல்லாவிட்டால் அது செத்துவிடும்; நீங்கள் ஞானியாகி விடுவீர்கள்.

மனம் விடாது. நாம் இரைச்சலை கவனிக்கும்போது , தியானம் செய்கிறோம்.

விழித்திருந்தால்தானே நாம் தியானம் செய்ய முடியும்!

நாம் விழிப்பை முடிவுக்கு கொண்டுவர மனம் நம்மை தூங்க விடுகிறது. 

நாம் தூங்கிவிட்டால், கனவில் அது ஆட்டம் போடலாமே!

எல்லாமே நாம் மனத்தின் தந்திரம்.

இப்போதைக்கு மனத்தின் இந்த இயல்பை நாம், நாம் தூக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதில் ஒரு சிக்கல் உண்டு.

நாம் தூங்கும்போது, இந்த இரைச்சலையே கேட்டபடி தூங்கினால், நாம் நம்மை அறியாமல் தியானம் செய்கிறோம்.

தியான நிலையிலேயே தூங்குகிறோம்.

இவ்வாறு தூங்குவதால், உடலுக்கு போதிய ஓய்வு கிடைத்தவுடன் நாம் விழித்துக் கொள்வோம்.

இந்த வகை தூக்கத்தில் வரும் கனவுகள் மிகவும் ஆழத்திலிருந்து வருகின்றன. 

ஆரம்பத்தில் சற்று பயமாக இருந்தாலும், போகப் போகப் பழகி விடலாம். 

அவை வெறும் கனவுகள்தான்.

ஆனால், நாம் தியானத்திற்குள் நுழைய உதவும் கனவுகள் அவை. நம்மை பற்றி நாமே அறியாத பல விசயங்கள் இப்படி ஆழ்ந்த கனவு மூலம் வெளிப்படுகின்றன.

தியானம் செய்வது பிறகு இருக்கட்டும்.

முதலில் நன்றாக தூங்குவோம்.

புற சத்தங்கள் குறைந்தபின், நம் காதில் கேட்கும் அந்த இரைச்சலையே கேட்போம்.

ஆழ்ந்து தூங்குவோம்...

நிம்மதியாக தூங்குவோம்...

தூங்குவதும் ஒரு வகை தியானமே!

Sunday, 25 April 2021

பயம்


............................................................
*"பயம்...! பயம்...! பயம்...!"*
..............................................
நம்மை கோழையாக்குவதும் பயம்தான். நம்மை குற்றச் செயல்களில் இருந்து தற்காப்பதும் பயம்தான்...!

இரண்டு விதத்தில் பயம் ஏற்படும். ஒன்று ஆழ்மனதில் பதிந்துவிட்ட நிரந்தர பயம். மற்றொன்று, அவ்வப்போது ஏற்படும் மறைந்து விடும் தற்காலிக பயம்...

எதற்கெடுத்தாலும் பயப்படுபவராக இருப்பவர்கள். அதுவே அவரை மனநலம் குன்றியவராக ஆக்கிவிடும்...

சிறுவயதில், நம்மை அடக்க அல்லது கீழ்ப்படிய வைக்க “பூச்சாண்டி’ காட்டுவது நடைமுறை வழக்கம் என்றாலும், அதுவும் ஒருவகையில் மனதளவில் நம்மை பாதிக்க வைக்கும் செயல்தான்...

பெரியவர்களான பிறகு சிலர் எதற்கெடுத்தாலும் பயப்படுவதற்கும் அச்சப்படுவதற்கும் அடிப்படைக் காரணமே அதுதான். இது வளர வளர பின்னாளில் மனோவியாதியாக மாறுவதற்கும் வாய்ப்புண்டு...

பயம் என்பது 'சுவற்றில் ஒட்டிய சுண்ணாம்பு போல', பலமாக தட்டினால் பட்டென்று விழுந்துவிடும் .அது போல துணிச்சலுடன் எதிர்கொண்டால் பயத்தையும் வெல்லலாம்...

மனதில் தோன்றும் பயத்தை தடுமாற்றமின்றி, தன்னம்பிக்கை துணை கொண்டு, மன உறுதியுடன் செயல்பட்டால் பயத்தை வெல்வது உறுதி...

பய உணர்வு ஏற்படும் நேரங்களில், பயம் நீங்கி தைரியம் பெறும் வகையில் மனத்தில் ஓடும் எண்ணத்தையும், சுற்றுப் புற சூழ்நிலைகளையும் சமயத்திற்குத் தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ள வேண்டும்...

*ஆம் நண்பர்களே...!*

*பயத்தை எப்படி வெற்றி கொள்வது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். வீணான அச்சத்திற்கு ஒருபோதும் இடம் தராதீர்கள்...!*

*கவலையும், அச்சமும்தான் ஒரு மனிதனை முன்னேறவிடாமல் கீழே பிடித்துத் தள்ளுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்...!!*

*மொத்தத்தில் எப்படியாவது பயம் உங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முன் பயத்தை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள். முடிவில் பயம் அர்த்தமற்றது என்பதை நீங்கள் கண்டிப்பாக உணர்வீர்கள்...!!!*

Thursday, 8 April 2021

பதவி

*பெற்றோர்களை நம்பியிருக்கும் வரை அவர்கள் மேல் அன்பாக இருக்கும் பிள்ளைகள் வளர்ந்தபின் அவர்களை கண்டுகொள்வது இல்லை.*

*பதவியில் இருந்து ஓய்வு பெற்ற கலெக்டர் தன் பழைய அலுவலகத்துக்கு வந்தால் அவருக்கு பழைய மதிப்பு, மரியாதை கிடைக்காது.*

*இளவரசர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு கனடா போனார் இளவரசர் ஹாரி...அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. அமெரிக்காவுக்கு போனார். "பாதுகாப்பு எல்லாம் கொடுக்கமுடியாது. காசு கொடுத்தால் கொடுக்கலாம்" என கைவிரித்தது அமெரிக்க அரசு. க்ரீன்கார்டுக்கு மனைவியின் குடியுரிமையை நம்பி இருக்கும் நிலை...*

*ஒரு பழமொழி உன்டு..'கலெக்டர் வீட்டு நாய் செத்தால் பெரும்கூட்டம் கூடும். எல்லாரும் வந்து துக்கம் விசாரிப்பார்கள். ஆனால் கலெக்டரே செத்துவிட்டால் அங்கே யாரும் வரமாட்டார்கள்" என. அவரே போயாச்சு. இனி அங்கே போய் யாருக்கு என்ன நன்மை?* 

*நாம் ஒரு பதவி அல்லது பொறுப்பில் இருக்கும்வரை நமக்கு வரும் மரியாதைகளை ரொம்ப பர்சனலாக எடுத்து மகிழ்ச்சி அடையக்கூடாது. அவை நமக்கானவை அல்ல என்பது தெரிந்தால் அவை நம்மை விட்டு போனபின்னர் வருத்தப்படமாட்டோம்.*

*#செவன்_சாமுராய்....அகிரா குரொசாவாவின் வரலாற்று காவியமான திரைப்படம்.*

*ஒரு விவசாய கிராமம்...அதை கொள்ளையர்கள் தாக்கி கொள்ளை அடிக்கிரார்கள். கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்ற ஏழு சாமுராய் வீரர்களை நாடுகிறார்கள் கிராம மக்கள். அவர்களும் வந்து அத்தனை கொள்ளையரையும் கொன்று மக்களை காப்பாற்றுகிறார்கள். அந்த போரில் நாலு சாமுராய்கள் உயிரிழக்கிறார்கள். மூவர் மட்டுமே மிஞ்சுகிறார்கள்.*

*போர் முடிகிறது. அடுத்த நாள் காலை மிச்சமிருக்கும் மூன்று சாமுராய்களும் காலையில் எழுந்து வெளியே வருகிறார்கள்...விவசாயிகள் மகிழ்ச்சியுடன் காலையில் உணவை கட்டிக்கொன்டு வயலுக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஒருவரும் ஒரு நன்றி கூட சொல்லவில்லை. சிரிக்கவில்லை. அவர்கள் பாட்டுக்கு தம் இயல்புவாழ்க்கைக்கு மீண்டும் சென்றுவிடுகிறார்கள்.*

*தம் தேவை அவர்களுக்கு முடிந்தது என தெரிந்துகொண்ட சாமுராய்கள் மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு பயணிக்கிறார்கள்....*

*#இதுதான்_உலகம்.*

*நாம் ஒரு பதவி அல்லது பொறுப்பில் இருக்கும்வரை நமக்கு வரும் மரியாதைகளை ரொம்ப பர்சனலாக எடுத்து மகிழ்ச்சி அடையக்கூடாது. அவை நமக்கானவை அல்ல என்பது தெரிந்தால் அவை நம்மை விட்டு போனபின்னர் வருத்தப்படமாட்டோம்.*

*இதனை உணந்தால் நமக்கு பின்னாளில் அதிர்ச்சிகள் என்பது இருக்காது.*

*#வாழ்த்துக்கள்.*

*#வாழ்க_வளமுடன்.*

Tuesday, 30 March 2021

ஒநாய்

நன்றி 🙏(  பகிரப்பட்டது)

🐺ஒரு பிரியாணி விருந்தில்கலந்து கொள்கின்றோம்.

🐺முதலில் அனைவருக்கும் சிக்கன் ப்ரை இரண்டு இரண்டு துண்டுகளை இலையில் வைக்கிறார்கள். 

🥺உங்கள் இலைக்கு வரும் போது வைப்பவர் ஏதோ நினைவில் வேகமாக மிகச்சிறிய துண்டுகளை வைத்து போகிறார். 

😦”நீங்கள் தம்பி இன்னொன்னு வை” என்று சொல்லும் போதே அவர் அவசரத்தில் அந்த இடத்தை விட்டு விலகி வேறு வேலைக்கு போகிறார். 

அதன் பிறகு வரும் பிரியாணியை நீங்கள். 

1. சுவைத்து சாப்பிடுவீர்களா ?
2. சுவைக்காமல் சாப்பிடுவீர்களா ? 

சுவைத்து சாப்பிட்டால் நீங்கள் வாழ்க்கையை ரசித்து வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். வாழ்க்கையை அர்த்தமாக வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். 

உங்களுக்குள் இருக்கும் சிகப்பு ஒநாயை புறக்கணித்து நீல ஒநாய்க்கு தீனி போட்டு வளர்க்கிறீர்கள் என்று அர்த்தம்.

சுவைக்காமல் ஏதோ அவமானம் நடந்து விட்டது மாதிரி சாப்பிட்டால் நீங்கள் வாழ்க்கையை வீணடித்து மற்றவர்களையும் கஷ்டப்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம். உங்களுக்குள் இருக்கும் சிகப்பு ஒநாய்க்கு தீனி போட்டு எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

ஒருவருடைய மிக மோசமான செயலால் இன்னொருவர் பாதிக்கப்பட்டிருப்பார். 

பாதிக்கப்பட்டவர் என்னிடம் பேசும் போது “அவன் புத்திக்கெல்லாம் நல்லா நாசமா போவான் பாரு” என்று சாபமிடுவது மாதிரி பேசினால் ஒருமாதிரி ஆகிவிடுவேன்.

“ச்சே ஏன் அப்படி சொல்றீங்க. விடுங்க. அப்படி சொல்லாதீங்க” என்பேன். இப்படி சொல்லாமல் என்னால் இருக்கவே முடியாது. 

இது அப்பாவிடம் இருந்து கற்றுக் கொண்டது என்று நினைப்பேன். 

அப்பா யாரையும் வெறுத்து பார்த்ததே கிடையாது. 

ஒருமுறை அவசரமான பணத்தேவைக்கு அப்பா அம்மாவின் 12 சவரன் நகையை ஒருவரிடம் அடமானம் வைத்தார். 

அவர் அவசரத்தை பயன்படுத்திக் கொண்டு கொஞ்சம் பணமே கொடுத்தார். பின்னர் அப்பா நகையை மீட்க போன போதெல்லாம் பார்ப்பதை தவிர்த்தார். 

ஆறுமாதங்கள் பிறகு அவருடைய அவசரத்தேவைக்கு இன்னொருவரிடம் அடமானம் வைத்து விட்டதாக சொன்னார். 

பல வருடங்கள் அலைந்தாலும் அப்பாவுக்கு அவர் நகையை கொடுக்கவே இல்லை. 

நினைத்திருந்தால் நாலு ஆட்களை திரட்டி சென்று கேட்டிருக்கலாம். ஆனால் அப்பா அதை நினைத்துக் கூட பார்க்கவில்லை. 

வீட்டில் அம்மா அழுத்தம் கொடுக்கும் போதும் ”பார்ப்போம் பார்ப்போம் தந்திருவாரு” என்றுதான் சொல்லி பார்த்திருக்கிறேனே தவிர அவன் நாசமாய் போவான். நல்லாயிருக்க மாட்டான். பாம்பு கொத்தும் ரீதியில் பேசி பார்த்ததே கிடையாது. 

நாங்கள் மித மிஞ்சிய பணக்கஷ்டத்தில் இருக்கும் போது கூட அப்பா தூங்குவதை கவனிப்பேன். 

மிக நிம்மதியாக தூங்கி எழுவார்.

அவ்வப்போது உடனுக்குடன் பிறரை மன்னிப்பவர்களால் மட்டுமே அப்படி தூங்கமுடியும்.

இது அமெரிக்க பழங்குடியின கதையின்படி

ஒவ்வொரு மனதிலும் இரண்டு ஒநாய்கள் இருக்கிறதாம். இரண்டுக்கும் சண்டை நடக்கும். எப்போதும் ஒரு மோதல் இருந்து கொண்டே இருக்குமாம். 

சிகப்பு ஒநாய் பொறாமை, கோபம். வெறுப்பு, ஆதிக்கம் என்று இருக்கிறது. 

நீல ஒநாயோ அன்பு, அருள், சகோதரத்துவம், மன்னித்தல் என்று இருக்கிறது. இந்த இரண்டு ஒநாய்களும் ஒன்றுக்கொன்று நம் மனதில் மோதிக் கொண்டே இருக்கின்றன.

இவை இரண்டில் எந்த ஒநாய் வெல்லும் ? நாம் எந்த ஒநாய்க்கு தீனி போடுகிறோமோ அதுவே வெல்லும். 

தப்பு சரி, நியாயம் அநியாயம் தாண்டி ஏதோ ஒருவிதத்தில் அதிக வெறுப்பு, பொறாமை, எரிச்சல் கொண்டிருக்கும் போது நாமும் அந்த சிகப்பு ஒநாயாகவே மாறிவிடுவோம். 

அப்படி மாறும் போது வாழ்க்கையில் நிம்மதியே இல்லாமல் போய்விடும். 

ஒன்றுமில்லை ஒரு விழாவுக்கு போகும் போது உங்கள் மனநிலையை கவனித்துப் பாருங்கள். 

நீங்கள் சிகப்பு ஒநாய்க்கு தீனி போடுகிறீர்களா? 
அல்லது நீல ஒநாய்க்கு தீனி போடுகிறீர்களா? என்பதை கண்டுகொள்ள முடியும்.

- என்னை கண்டுகொள்ளவில்லை

- சாப்பாடு நல்லாயில்லை

- ரொம்பத்தான் ஒவரா ஸீன் போடுறாங்க

- நான் விழா எடுக்கும் போது இத விட நல்லா செய்து காட்டுறேன் பாரு.

- நீயா வந்து பேசினா நா பேசுவேன். இல்லன்னா பேச மாட்டேன்.

இப்படி எல்லாம் சிகப்பு ஒநாய்க்கு தீனி போடுபவர்களும் உண்டு.

- எல்லாரும் எவ்ளோ மகிழ்ச்சியா இருக்கங்க ( ரசனை)

- சாப்பாடு அருமை

- விழா கொண்டாட்டம் அருமை

- நாம விழா எடுக்கும் போதும் இப்படி எல்லாரையும் ஹேப்பியா வைச்சிக்கனும்

- அவுங்க தெரியாம இருக்காங்க போல இருக்கு. நாம போய் பேசுவோம்.

இப்படி எல்லாம் நீல நிற ஒநாய்க்கு தீனி போடுபவர்களும் உண்டு.

சிகப்பு ஒநாய்க்கு தீனி போடுபவர்களுக்கு எவ்வளவு புகழ், பணம், பதவி வந்தாலும் வாழ்க்கை துன்பமாகவே இருக்கும்.

நீல நிற ஒநாய்க்கு தீனி போடுபவர்கள் எந்த சூழலிலும் மகிழ்ச்சியாக மன நிம்மதியாக இருப்பார்கள்.

வீட்டில் வளரும் சிறார்களிடம் இந்த இரண்டு ஒநாய்கள் பற்றியும் அடிக்கடி பேசிக் கொண்டிருங்கள்.

ஒருவேளை மாற்றங்கள் நிகழலாம். அவர்கள் மன ஆரோக்கியத்தோடு வளர வாய்ப்பு அதிகமுண்டு.

உங்களுக்குள் இருக்கும் சிகப்பு ஒநாயையும் நீல ஒநாயையும் கண்காணித்து கொண்டே இருங்கள்.

Sunday, 14 February 2021

இந்த நொடி

 ஜென் கதை 

நான் நல்லா வாழ்ந்தேன்னு ஒருத்தன் சொல்றான்னா 

அவனோட வயசு என்ன?’ என்று கேட்டார் புத்தர்

அவரது சீடர்கள் யோசித்தார்கள்

‘என்ன கேட்கறீங்க...??? 

சரியாப் புரியலையே'

‘ஒரு நல்ல வாழ்க்கையோட ஆயுள் காலம் என்ன...???

நூறு வயசு..???’ என்றார் ஒரு சிஷ்யர்

ம்ஹூம். இல்லை!’ என்று உடனே மறுத்துவிட்டார் புத்தர்

அப்படீன்னா...??? 90 வயசு...???

அதுவும் இல்லை

80..??? 70..??? 60..??? இப்படிச் சீடர்கள் வரிசையாகப் பல விடைகளைச் சொல்ல

புத்தர் எதையும் ஏற்கவில்லை 

கடைசியாகப் பொறுமையிழந்த அவர்கள் ‘நீங்களே சொல்லுங்க’ என்று அவரிடம் வேண்டிக்கொண்டார்கள்

"ஒரு நல்ல வாழ்க்கை-ங்கறது ஒரு விநாடிப் பொழுதுதான்" என்றார் புத்தர்

‘என்ன சொல்றீங்க குருவே..??? 

ஒரு விநாடியில என்ன பெரிசாச் செஞ்சுடமுடியும்...??? 

குறைந்தபட்சம் முப்பது, நாற்பது வருஷமாவது வாழ்ந்தால்தானே மனுஷ வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் இருக்கும்..???’

அப்படியில்லை

ஒவ்வொரு விநாடியையும், அதுதான் உங்களுடைய வாழ்க்கையின் தொடக்கம் என்று நினைத்து அனுபவிக்கவேண்டும்

பழையதை நினைத்துக் கவலைப்படக்கூடாது 

கடந்தகாலத்தில் வாழக்கூடாது

அதேநேரம், அந்த ஒரே விநாடியை உங்களுடைய வாழ்க்கையின் முடிவு என்றும் நினைத்துக்கொள்ளவேண்டும்

எதிர்காலக் கற்பனைகளில், 
எதிர்பார்ப்புகளில் அந்த விநாடியை வீணடிக்கக்கூடாது

சுருக்கமாகச் சொன்னால்

நாம் ஒவ்வொரு விநாடியும் புதுசாகப் பிறக்கிறோம்

அதை முழுமையாக அனுபவிக்கிறோம்

அதுதான் நல்ல வாழ்க்கை.

Friday, 5 February 2021

அகம்

_*ஒரு ஜாடி முழுவதும் தானியம் நிரப்பி, அதன் மேல் ஒரு எலியை விட்டார்கள்.*_
 
_எலிக்கு தன்னை சுற்றி இவ்வளவு உணவு இருக்கிறது என்று பயங்கர குஷி._

_இனி உணவை தேடி ஓடாமல் சந்தோஷமாய் வாழ்க்கையை கழிக்கலாம் என்று எண்ணி தினமும் தன்னை சுற்றியிருந்த தானியத்தை உண்டது._

_நாளாக நாளாக ஜாடியில் உள்ள தானியம் குறைந்து கொண்டே போய் ஒரு நாள் தீர்ந்தே விட்டது._

_எலி இப்பொழுது ஜாடிக்குள் நிரந்தரமாய் மாட்டிக்கொண்டு விட்டது. அதனால் வெளியேறவே முடியவில்லை._

_இனி தினம் யாராவது  தானியம் போட்டால் மட்டுமே அதற்க்கு உணவு. யாரும் போடவில்லை என்றால் பட்டினியால் சாக வேண்டியதுதான்._

_அப்படியே யாரவது போட்டாலும் போடுவதை மட்டுமே சாப்பிட முடியும். விரும்பியளவு சாப்பிட முடியாது._

_*இந்த கதையில் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய பாடங்கள்..*_

_(1) குறுகிய கால இன்பங்கள் என்றும் நிரந்தரம் அல்ல. அவை நம்மை அழிவுப் பாதைக்கே கொண்டு செல்லும். அவை நீண்ட கால பொறிகளுக்கு வழிவகுத்து நம்மை நிரந்தரமாக சிக்க வைத்து விடும்._

_(2) சுலபமாக கிடைக்கும் எதுவும் நம்மை அதற்கு அடிமை ஆக்கி, அதற்கு சொகுசாய் நம்மை வாழ பழக்கி, நம் முன்னேற்றத்தை தடுத்து நம் வாழ்வை நாசமாக்கி விடும்._

_(3) நமக்கு தெரிந்த ஒரு கலையை நாம் உபயோகிக்காமல் சோம்பேறியானால், அந்த கலையை நாம் இழக்க நேரிடும்._

_(4) சரியான நேரத்தில் சரியான செயல்களை செய்யாமல் விட்டால், நம் வாழ்க்கையையே இழக்க நேரிடும். நாம் நம் மனதுக்கு பிடித்ததை தேர்ந்தெடுக்க முடியாத நிலைக்கு கட்டாயமாக தள்ளப்படுவோம்...!!_

Thursday, 4 February 2021

கொண்றங்கி மலை - திண்டுக்கல் மாவட்டம்:

மகத்துவம் பொருந்திய கொண்றங்கி மலை - #திண்டுக்கல் மாவட்டம்: 

அழகிய தோற்றம் கொண்ட  மலையின்  உச்சியில்  மேகங்கள் (கொண்டல்) இறங்கி தவழ்ந்து செல்வதால்  கொண்டல்+இறங்கி = கொண்டலிறங்கி என்பது நாளடைவில் கொண்றங்கி ஆகியது.  இம்மலைக்கு காரணப் பெயராகக்  கொண்றங்கி என்பது பொருத்தமாய் உள்ளது ... இதனால் கிராமத்தின் பெயரான கீரனூர் என்பது கொண்றங்கி கீரனூர் என்று அழைக்கப்படுகிறது. இந்த மலையின் உச்சியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 748 மீட்டர் உயரமாகும் ..

மலையின் உச்சியில் ஒரு  அற்புதமான குடைவரை கோவிலில்  (குகையில்)  அருள்மிகு மல்லீஸ்வரர்  என்ற  நாமத்தில் இறைவன் சுயம்பு   லிங்கமாக அருள் புரிகிறார் . இங்கு  அமர்ந்து ஜெபம், தியானம் செய்ய அற்புதமான  அனுபங்களை பெறலாம் ..இம்மலையே லிங்கம் போல இருப்பது  அற்புத  திருக்காட்சியாகும்.

  இம்மலையானது  வேறு எந்த மலையிலும் காண இயலாத  ஒரு தோற்றத்தை உணரலாம் .மலையின் சுற்றளவு மேலே செல்லச் செல்ல குறுகி கூர்மையான கோபுரம் போல காட்சி தருகிறது . மலையில் பாறைகளையே செதுக்கி படிகளாக்கி உள்ளனர் . 

 இம்மலையில் தவசிகள் தவம் புரிந்த அற்புதமான குகை ஒன்றுள்ளது. சித்தர்களும், முனிவர்களும் தவம் செய்து பேறு பெற்ற மலையாகும்.  பாண்டவர்கள் தவம் செய்த மலையாக சொல்லப் படுகிறது. குறிப்பாக அர்ச்சுனன் தவம் செய்து இறையருள் பெற்றதாய் சொல்லப்படுகிறது .சித்தர்களின் இருப்பினைக் கொண்ட இடம் என்பதை இங்கு  அமர்ந்து   தவம்  செய்வதன்  மூலம் உணரலாம்.
  
பழனி மலையேறும் போது இம்மலை நன்றாக  தெரியும் . இமலையில் இருந்து பழனி முருகப்   பெருமானையும் தரிசிக்கலாம். இறைவன் இங்கிருந்து முருகரை கடைகண்ணில் பார்த்து கவனித்து கொண்டு தான் உள்ளார்.. போகருக்கும் கொண்ட்றங்கி மலைக்கும் தொடர்பு உண்டு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன .அமாவாசை - பௌர்ணமி தினங்களில் இம்மலையுச்சியில் அமர்ந்து தவம் செய்ய  மூதாதையர் தொடர்பு கிடைப்பதாக ஓர் செய்தி..

 அடிவாரத்தில் கெட்டி மல்லிஸ்வரர் உடனமர் பிரம்மராம்பா ஆலயம் உள்ளது . மலை ஏற இரண்டு மணிநேரம் ஆகும் .வெயில் மற்றும் காற்று அதிகமாய் இருக்கும் போது சற்று  சிரமமாய் இருக்கும். இரவில் ஏற-இறங்க  இயலாது..ஒருமுறை சென்று  வாருங்கள். ..அற்புதமான அனுபவங்களை பெறுவீர்கள் .. 

 அமைவிடம் : திண்டுக்கல்  மாவட்டம், #ஒட்டன்சத்திரம் வட்டம், ஒட்டன்சத்திரம்  to  தாராபுரம் - வழித்தடம்  மூலனூர் செல்லும் வழியில்  சுமார் 20  கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 461 மீட்டர் உயரத்தில் உள்ளது.


Wednesday, 3 February 2021

எண்ணங்கள்

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



*பூதக்கண்ணாடி எண்ணங்கள் எதற்கு..??*

எந்தப் பிரச்சினையையும் 'எக்கார்ட் டாலே' சொன்னது போல, மூன்று வழிகளில் கையாளலாம். பிரச்சினையிலிருந்து விலகலாம். பிரச்சினையை அப்படியே ஏற்றுக் கொள்ளலாம். பிரச்சினையை மாற்றலாம், சரி செய்யலாம். இவற்றைத் தவிர எதைச் செய்தாலும் பலன் இல்லை. நீங்கள் அதிகம் கவலைப்படும் ஒரு விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். 

கவலையைத் தவிர கோபம், பயம், சுயப் பரிதாபம், வெறுப்பு, பொறாமை, பதற்றம், சந்தேகம் என்று எந்த விதமான எதிர்மறை உணர்வுகள் வந்தாலும் அவை பிரச்சினையை இம்மி அளவு கூட மாற்றப் போவதில்லை. மாறாகப் பிரச்சினை பற்றிய பிம்பம் தான் பெரிதாகிக் கொண்டே இருக்கும்.

*தொலைக்காட்சி..*

தொலைக்காட்சி பார்ப்பது பற்றி நான் எழுதியிருந்த கருத்தைப் பலமாக ஆமோதித்த வாசகர் ஒருவர் 'எக்கார்ட் டாலே' சொன்ன வழிகளைப் பின் பற்றியதாய் கூறினார்.

“ டி.வி பார்ப்பதை முழுவதுமாக கைவிடுவது சாத்தியமில்லை. அதனால், ‘அதிகம் டி.வி பார்ப்பது’ என்பது நம் வீட்டில் இருக்கும் பிரச்சினை என்பதை முதலில் ஏற்றுக் கொண்டு விட்டேன். தொலைக்காட்சியில் வருகிற நெடுந் தொடர்களை அதிகம் பார்க்க வேண்டாம் என்று குடும்பத்தினர் எல்லோரும் பேசி இரண்டு சீரியல்கள் மட்டும் தான் பார்க்கலாம் என்று முடிவு செய்துள்ளோம்.

அதிகாலை நேரம் என்றால் பக்திப் பாடல்கள், இரவு என்றால் மெல்லிசை என வீடு முழுதும் இசையை ஒலிக்கத் திட்டமிட்டுள்ளோம். இது டி.வியிலிருந்து மெல்ல விலகச் செய்து எங்களை மற்ற காரியங்களைச் செய்ய வைக்கும்” எனச் அபாரமாய் சொன்னார் அந்த வாசகர்.

*நிஜமான பக்குவம்..*

இன்னொரு நண்பர் கேட்டார், “சுயக் கட்டுப்பாடு இல்லாமல் பிரச்சினையிலிருந்து தப்பித்தல் நிரந்தரமான தீர்வாகுமா? எது நடந்தாலும் எதிர்மறை எண்ணங்கள் வராமல் இருக்க வழி கிடையாதா?”

சுயக் கட்டுப்பாடு தான் தீர்வு. சந்தேகமில்லை. நமக்கு வெளியில் என்ன நடந்தாலும் ஒரே மாதிரியான மனநிலையில் இருப்பது தான் நிஜமான பக்குவம். ஆன்மிகம் கற்றுத் தருவதும் இதைத் தான். ஆனால், எடுத்தவுடனே அந்த நிலையை அடைவது கடினம். அதனால் தான் ஆரம்பத்திலேயே முக்தி நிலை என்று எந்த மார்க்கமும் சொல்வதில்லை. படிப் படியாகத் தான் பழக்குவார்கள். அது போலத்தான் இதுவும்.

*சூழலைத் தேர்வு செய்தல்..*

மது குடிப்பதை விட்டு விட நினைப்பவர்கள் முதலில் அதைக் குடிக்கும் நண்பர்களிடமிருந்து சற்று விலகியிருப்பது புத்திசாலித்தனம். சூழலைத் தேர்வு செய்தல் ஆரம்ப நிலைக் கட்டுப்பாடு. முடிந்தவரை இதைச் செய்வதில் தவறில்லை. பல கேடுகளுக்கு நம்மைச் சுற்றியிருப்பவர்களின் பண்புகளும் காரணமாகின்றன. ஒரு பிரச்சினையிலிருந்து மீள அந்தச் சூழலை விட்டு விலக நினைப்பது விவேகம்.

ஆனால், பல சமயங்களில் இது இயலாததாய் இருக்கலாம். உங்கள் குடும்ப மனிதர்களை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியாது. திருமணத்திலிருந்து விலகுவது அவ்வளவு எளிதானதல்ல. உங்கள் படிப்பு, தொழில் போன்றவை தரும் சூழல்களைத் தேர்வு செய்வதும் அல்லது விலகிச் செல்லுதலும் கடினமானவை தான்.

*கிடைத்ததை விரும்பு..*

பிரச்சினையாக இருப்பதைச் சீர்படுத்துவதும், மாற்றம் செய்வதும் அடுத்த வழி முறை.

எக்ஸ்னோரா அமைப்பை நிறுவியவர் எம்.பி. நிர்மல். தன் புது வீட்டுக்குக் குடியேறிய போது சுற்றுப்புறம் மிகவும் தூய்மைக் கேடாய் இருப்பது கண்டு மனம் பதறினார். “நல்ல சுற்றுப் புறத்தில் என்னால் வீடு வாங்க முடியவில்லை. ஆனால், கிடைத்த வீட்டின் சுற்றுப்புறத்தை நல்ல விதமாக மாற்ற முடியும்” என்று அப்போது நினைத்துக் கொண்டாராம். அந்தச் சிந்தனை விதையில் துளிர்த்தது தான் எக்ஸ்னோரா அமைப்பு.

“விரும்பியது கிடைக்காத போது கிடைத்ததை விரும்பு” என்பது ஒரு பிரபலமான வாசகம். காதலித்தவர் வாழ்க்கைத் துணையாகக் கிடைக்கவில்லை. ஆனால், மணந்தவரைக் காதலிப்பதில் என்ன தடை?

*ஏற்றால் தான் மாற்றம்..*

துல்லியமாகப் பார்த்தால் ‘ஏற்றுக் கொள்ளுதல்’ ஏற்பட்டால் தான் ‘மாற்றம்’ பிறக்கும். பிரச்சினையை ஏற்றுக் கொள்ளுதல் தான் அதை மாற்றுவதற்கான மன வலிமையையும் தரும்.

“ஆங்கிலம் பேசத் தெரியவில்லையே” என்று தாழ்வு மனப்பான்மை கொள்வதற்குப் பதில் முதலில் அந்த உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள். நமக்குக் கிடைத்த சூழலுக்கும் வாய்ப்புக்கும் ஆங்கிலம் வசப்படவில்லை. அவ்வளவு தான். அதனால், நாம் நம்மைக் குறைவாக எண்ணத் தேவையில்லை. இப்படி ஏற்றுக் கொண்டால் ‘எப்படி ஆங்கிலம் பேசக் கற்கலாம்?’ என்று நம்பிக்கையோடு யோசிக்க முடியும்.

ஆக, சூட்சுமம் இது தான். முதலில் தேவை இல்லாத எதிர்மறை எண்ணங்களையும் உணர்வுகளையும் விலக்குங்கள். பிரச்சினையின் நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். மாற்ற முயற்சி செய்யுங்கள். மாறுதல் வெற்றி பெற்றால் மகிழ்ச்சி. வெற்றி பெறாவிட்டாலும் அதையும் ஏற்று மீண்டும் மாறுதலுக்கு உட்படுத்துங்கள். இந்தத் தொடர் முயற்சி தான் வாழ்க்கை. இதை விருப்பு, வெறுப்பு இல்லாமல் செய்வது தான் பக்குவம்.

*பூதக்கண்ணாடி எண்ணங்கள்..*

ஒரு செய்கையை விட அந்தச் செய்கை தொடர்பான எண்ணம் தான் உங்களின் உணர்வுகளைத் தீர்மானிக்கிறது.

காதலிக்குக் காத்திருக்கையில் கால் வலிக்கவில்லை. அவளே மனைவியான பின் காத்திருந்தால் கால் வலிக்கிறது. யாருக்குச் சமைக்கிறோம் என்பதைப் பொறுத்து ருசியே மாறுகிறது. பொய் சொல்லி வாங்கிப்போனார் என்று தெரிந்ததும் கொடுத்த நூறு ரூபாய் பெரிய நஷ்டமாகத் தெரிகிறது.

நம்பிக்கையுடன் பூஜைக்குப் பணம் தருகையில் பெருமைப் படுகிறோம். பெரிய மருத்துவமனையில் இதய நோய்க்கு சிகிச்சை செய்தால் பெருமையாக உறவினர்கள் அனைவரிடமும் சொல்வோம். மனச்சிதைவு வந்தால் மூன்றாம் மனிதருக்கு அறியாமல் சிகிச்சை தருவோம்.

பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு முன் அவற்றைப் பற்றிய எண்ணங்களைச் சமாளிப்போம். பிரச்சினைகளைப் பார்க்கும் சில பூதக்கண்ணாடி எண்ணங்கள் நம்மிடம் உள்ளன. அவற்றைக் கையாண்டால் நம் பிரச்சினைகள் பாதிக்கு மேல் காணாமல் போயிருக்கும்..!!

*💗வாழ்க வளமுடன்💗*

*பகிர்வு*

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

Tuesday, 2 February 2021

நம்பிக்கை

உங்கள் விருப்பமானவருக்கு கொரியர் செய்துவிட்டு கொரியர் பின்னேயே அலைவதில்லை 
.
நம்பிக்கை இல்லை என்பதால் நீங்களே கொரியர் கம்பெனி வேலையை செய்வதில்லை 
.
ஹோட்டலுக்கு சென்று பிடித்த உணவை ஆர்டர் செய்து சாப்பிடுவீர்கள் 
.
நம்பிக்கை இல்லை என்பதால் ஹோட்டலில் சென்று சமைத்து சாப்பிட போவதில்லை
.
பஸ்சில் பயணம் செய்வீர்கள். நம்பிக்கை இல்லை என்பதால் நீங்கள் பேருந்தை நீங்கள் இயக்கபோவதில்லை
.
ஒவ்வொரு நாளும் பெரிய விசயங்களை நீங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் கடந்து விடுகிறீர்கள்.
.
சின்ன விசயங்களில் நம்பிக்கை இல்லை என்று உங்களுக்கு நீங்கள் சொல்லி கொள்கிறீர்கள் 
அவ்வளவு தான்
.
இந்த ஆழமான நம்பிக்கையில் தான் நீங்கள் ஒவ்வொரு நாளும் வாழ்ந்து கொண்டிருக்கிறேர்கள்.
.
பெரிய விசயங்களில் வெளிபடுத்தும் நம்பிக்கையை உங்கள் விருப்பங்களை அடைவதையும், உங்கள் பிரச்சனைகளை தீர்க்க வெளிபடுத்தினாலே போதும்
.
நீங்கள் நம்பிக்கை இல்லை என்று புலம்ப காரணம். .
அதை உங்களால் பார்க்க முடியாததால் தான். 
கண்ணுக்கு புலப்படாத நம்பிக்கையை உணர தான் முடியும். அது கண்ணுக்கு புலப்படாத அன்பின் ஆற்றலால் வழிநடத்தப்படுகிறது 
.
ஆழ்மனம் உங்கள் விருப்பங்களை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் தான் உங்களிடம் சேர்க்கிறது.

Monday, 1 February 2021

சூழ்நிலை

ஒரு ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரங்கள் இருந்தன.

அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி முதல் மரத்திடம் மழை காலம் தொடங்க இருப்பதால்  நானும் என் குஞ்சுகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா என்றது.
முதலில் இருந்த மரம் 
முடியாது என்றது.

அடுத்த மரத்திடம் சென்று கேட்டபோது அது அனுமதித்தது. 

குருவி அந்த இரண்டாவது மரத்தில் கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த நேரம், 
அன்று பலத்த மழை, ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்துச் சென்றது .

தண்ணீரில் இழுத்து செல்லும் மரத்தைப்பார்த்து  குருவி சிரித்து கொண்டே சென்னது, 
எனக்கு வசிக்க கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லபடுகிறாய் என்று.

அதற்கு அந்த மரம் கூறிய பதில்,
எனக்குத் தெரியும், 
நான் வலு இழந்து விட்டேன், எப்படியும் இந்த மழைக்குத்  தாங்க மாட்டேன், தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவேன் என்று. 

நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் 
உனக்கு இடம் இல்லை என்றேன்.
என்னை மன்னித்து விடு என்றது. 

கருத்து :--  
உங்களுக்கு யாரும் உதவி செய்யவில்லை என்றால் தவறாக நினைக்காதீர்கள். 

அவரவர்  சூழ்நிலை அவரவருக்கு மட்டும் தான் தெரியும்.

பொறுமை தான் உறவுகள் நீடிக்கக் காரணம்..

படித்ததில் பிடித்தது, 
நன்றி 

கதை

 ஒரு கதை .. படித்ததில் ரகசியத்தை உணர்ந்தேன்.........

குஞ்சுப் பறவை ஒன்று சோகமாய் இருந்தது. அதன் தாய்ப் பறவை, ‘‘ஏன் சோகமாய் இருக்கிறாய்’’ என்று கேட்டது. 

குஞ்சுப் பறவை, ‘‘எனக்கு பிறரிடம் எதையும் கேட்பதற்கே கூச்சமாக இருக்கிறது’’ என்றது. 

‘‘தேவையில்லாத வெட்கம் உன் வாழ்க்கையை சிறப்பில்லாததாக ஆக்கிவிடும்’ என்று தாய் எச்சரித்தது. 

குஞ்சு அதைக் கேட்டு, ‘‘சும்மா பொன்மொழியாக சொல்வது எளிது. செய்து காட்டுவது கடினம்’’ என்றது. 

இதைக் கேட்ட தாய்ப்பறவை, தன் குஞ்சுப் பறவையை அழைத்துக் கொண்டு பறந்தது. 

ஏரிக்கரையோரம் சென்று பறந்தபடி, நீரின் அருகே எச்சமிட்டது. ஏரியில் ததும்பிய சிற்றலை, எச்சத்தை நீரில் கரைத்தது. 

தாய்ப்பறவை ஏரியை அழைத்து, ‘‘எனக்கு என் எச்சம் வேண்டும். கொடுத்து விடு’’ என்றது.

 ‘‘அது என்னுள் கரைந்து போய்விட்டது. 

அதைத் திருப்பிக் கொடுக்க முடியாது. 

அதற்கு பதிலாக ஏரிக்குள் இருக்கும் மீன் ஒன்றைத் தருகிறேன்’’ என்றது ஏரி.
 
தாய்ப்பறவை அந்த மீனை எடுத்துக்கொண்டு பறந்தது. ஒரு வீட்டின் முன்னால் வைத்துவிட்டு கொஞ்ச நேரம் மறைந்திருந்தது. 

வீட்டில் இருந்தவர்கள் மீனை எடுத்துச் சென்ற சிறிது நேரம் கழித்து கதவைத் தட்டி, ‘‘என் மீன் எங்கே? எனக்கு அது வேண்டும்’’ என்றது

. ‘‘அதைக் குழம்பு வைத்து சாப்பிட்டுவிட்டோம். அதற்கு பதிலாக நாங்களே தயாரித்த தரமான கயிறு தருகிறோம்’’ என்று கொடுத்தார்கள். 

தாயும் குஞ்சும் கயிறை எடுத்துக் கொண்டு பறந்தன. 

வழியில் ஒருவர் கிணற்றருகே கவலையுடன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தன. 

அவருடைய கிணற்றில் கயிறு இற்றுப் போய்விட்டதாம். ‘‘கயிறில்லாமல் நீர் இறைக்க முடியாது. நீர் இல்லாமல் போனால் என் வீட்டில் நடக்க இருக்கும் விழா நடக்காது’’ என்று புலம்பினார். 

‘‘நான் கயிறைக் கொடுத்தால் நீங்கள் என்ன தருவீர்கள்?’’ என்று தாய் கேட்டது.

‘‘என்னிடம் இருக்கும் அரிய வகை விதை நெல் ஒரு படி தருகிறேன். 

அது அழிந்து விட்டதாக மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் அது அழியவில்லை. என்னிடம் விதையாக கொஞ்சம் இருக்கிறது’’ என்றார் அவர்.

தாயும் குஞ்சும் விதைநெல்லை சுமந்துகொண்டு வயலுக்கு வந்தன. 

அங்கே அந்நாட்டின் ராஜா விவசாயத்தை கண்காணித்துக் கொண்டிருந்தார். 

அவருக்கு விவசாயத்தில் அதிக ஆர்வம். 

அவர் அருகே விதை நெல்லைப் போட்டுவிட்டு தாயும் குஞ்சும் மறைந்தன. திரும்பி வந்தால் நெல் இல்லை. 

ராஜாவிடம் தாய் கேட்டது, ‘‘என் அரிய வகை விதை நெல் எங்கே?’’

ராஜா திடுக்கிட்டு, ‘‘அந்த அரிய வகை விதை நெல் யாருடையது என தெரியாது. 

நான் அதைப் பயிரிடச் சொல்லிவிட்டேன். அது உன்னுடையதா? அதற்கு பதிலாக நீ என்ன கேட்டாலும் செய்கிறேன்’’ என்றார்.

ராஜாவின் அரியணையில் ஒரு மணி நேரம் அமர்ந்து அரசாட்சி புரியும் உரிமையை தாய்ப்பறவை கேட்டது. 

ராஜாவும் ஒரு மணி நேரம் அதை ஆட்சி செய்ய வைத்தார். 

அதிகாரத்தைப் பெற்றதும் தாய்ப்பறவை, ‘‘எங்கள் பறவை இனங்களுக்கு தேவையான உணவை இனிமேல் ராஜாவே கொடுக்க வேண்டும்’’ என்றொரு ராஜ கட்டளை பிறப்பித்தது. 

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த குஞ்சுப் பறவை அசந்துவிட்டது. 

ஒன்றுக்குமே உதவாத எச்சத்தில் ஆரம்பித்து நாட்டை ஆளும் அதிகாரத்தைப் கைப்பற்றி, தங்களுக்கான உணவுக்கும் வழி செய்த அம்மாவின் செயல்திறன் பற்றி பெருமைப்பட்டு புகழ்ந்து சொன்னது. 

அதற்கு தாய்ப்பறவை, ‘‘நமக்கு இந்த உணவு வேண்டாம். 

ராஜாவிடம் சொல்லிவிடுவேன்.

 நான் இதைச் செய்து காட்டியது உனக்கு புரிய வைக்கத்தான். 

ஒன்றுமே இல்லாத ஒன்றில் இருந்துகூட, கூச்சப்படாமல் கேட்கும் திறனால் பலவற்றை உருவாக்கிவிட முடியும். 

வெட்கப்படும் உயிரினங்களால் இவ்வுலகில் சிறப்பாக வாழ முடியாது. 

உனக்குத் தேவையானவற்றை கூச்சப்படாமல் உலகத்திடம் வாய்விட்டுக் கேள். 

கொடுப்பதும் கொடுக்காததும் அவர்கள் இஷ்டம். கேட்காமலேயே, ‘கொடுக்க மாட்டார்கள்’ என்று யூகம் செய்யாதே’’ என்றது.

உழைப்போம் !! உயா்வோம்!!

சுமைகளை_சுமக்காதீர்


சுமைகளை_சுமக்காதீர்

வாழ்கையின் அடித்தளத்தை உறுதியாக போடுவதற்கான வழிமுறைகள் என்ன? எந்த அர்த்தமும் இல்லாமல் வாழ்க்கை அடித்து செல்லும் வழியில் செல்லாமல் எதிர்நீச்சலடித்து வெற்றி பெறுவது எப்படி? 

எந்த விடயமும் உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

முக்கியமாக உங்கள் கடந்த காலத்தில் வலிகளை தாங்கி செல்வீர்களானால் உங்கள் எதிர்காலமும் அதே அளவுக்கு வலி மிகுந்ததாக இருக்கும். இருள் படிந்த கடந்த காலம் வெளிச்சமான எதிர்காலத்திற்கு எதிரானதாகும்.

கடந்தகாலத்தில் அவமானப்-படுத்தப்பட்டிருக்கலாம். நம்பிக்கை துரோகம், ஏமாற்றம், தோல்வி எதுவாக இருந்தாலும் முடிந்தது, முடிந்தது என எதிர்காலத்தை குறித்தான எண்ணத்தை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு யாராவது செய்த துரோகத்தை மனதில் வைத்து அவர்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களை பின்னுக்கு தள்ளும். கசப்பான கடந்தகால சுவடுகளை மனதிலிருந்து அழித்துவிடுங்கள்.

உங்களை யாராவது ஏமாற்றி இருக்கலாம். ஆனால் அது உங்கள் தவறல்ல. ஆனால் அதிலிருந்து வெளியேறாமல் கடந்த காலத்தை நினைத்து வெம்பி கொண்டிருப்பது நீங்கள் செய்யும் தவறு தான்.

எடுக்கும் முடிவுகள் உங்களுக்கானதாக இருக்கிறதா இல்லை வேறு யாரையாவது திருப்திப்படுத்தவோ அல்லது சூழ்நிலைக்கு அடிபணிந்து முடிவெடுக்கிறார்களா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள்.

வாழ்க்கையின் தேவை என்ன என்பதை புரிந்து கொண்டு வாழ வேண்டும். பிறரின் வாழ்க்கைக்குள் நீங்கள் சோளக்காட்டு பொம்மை போல் கோமாளி ஆகிவிடாதீர்கள். சூழ்நிலை உங்களை பின்னுக்கு இழுத்தால் நீங்களும் அதற்கு கட்டுப்பட்டு அடித்துச் செல்லப்படாதீர்கள்.

உங்கள் எல்லை இதுதான் என வரையறுத்துக் கொள்ளாதீர்கள். இயலாதது என்று எதுவுமே இல்லை. சாதிக்க முடியாதது என்று எதுவுமே இல்லை. உங்கள் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கை தான் முக்கியமானது.

உங்களை உங்கள் மனதும்,  கடந்தகால கசப்பான அனுபவங்களும் வேட்டையாடாமல் இருந்தால், பிறரால் உங்கள் முன்னேற்றத்தை தடுக்க இயலாது.

வாழ்க்கையின் உறுதியான அடித்தளத்திற்கு அதிகமான பணம் தேவை என பலரும் நினைக்கிறார்கள். பணத்தை மட்டும் கணக்கிட்டு  எடுக்கும் முடிவுகள் மடமையானதாகவே முடியும். அது தவறான பழக்கங்களையும் பிரச்சனையிலும் கொண்டு சேர்க்கும். 

முழுமனதோடு அர்ப்பணிப்பு உணர்வோடு  பிடித்த வேலையை செய்யும்போது பணமும் பொருளும் தானாக வந்து சேரும். பணத்தை மட்டும் கணக்கிட்டு குறுக்கு வழியை தேர்ந்தெடுத்தால் தோல்வியே மிஞ்சும்.


Sunday, 24 January 2021

புரிதல்

துக்கத்தைப் புரிந்து கொள்ள, நிச்சயமாக நீங்கள் அதை நேசிக்க வேண்டும், இல்லையா? அதாவது, நீங்கள் அதனுடன் நேரடி தொடர்பில் இருக்க வேண்டும்.

நீங்கள் எதையாவது புரிந்து கொள்ள வேண்டும் என்றால் - உங்கள் நண்பர், உங்கள் மனைவி, உங்கள் மேலதிகாரி -  நீங்கள் அதற்கு அருகில் இருக்க வேண்டும். எந்தவொரு ஆட்சேபனையும், தப்பெண்ணமும், கண்டனமும், கணிப்பும் இல்லாமல் நீங்கள் அதைப் பார்க்க வேண்டும், இல்லையா?

நான் உங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், உங்களைப் பற்றி எனக்கு எந்தவிதமான கருத்துகளும்  இருக்கக்கூடாது. நான் உங்களை நேரடியாக பார்க்கும் திறன் கொண்டவனாக இருக்க வேண்டும், தடைகள், என் தப்பெண்ணங்கள் மற்றும் நிபந்தனைகளின் திரைகள் வழியாக அல்ல. நான் உங்களுடன் இணக்கமாக இருக்க வேண்டும். அதாவது நான் உங்களை நேசிக்க வேண்டும்.

இதேபோல், நான் துக்கத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்றால், நான் அதை நேசிக்க வேண்டும். நான் அதனுடன் தொடர்பு கொள்ள வேண்டும். ஆனால், என்னால் அவ்வாறு செய்ய முடியாது. ஏனென்றால் நான் விளக்கங்கள் மூலமாகவும், கோட்பாடுகள் மூலமாகவும், ஒத்திவைப்புகள் மூலமாகவும் துக்கத்திலிருந்து விலகி ஓடுகிறேன்.

இவை அனைத்தும் வாய்மொழியின் செயல்முறை. எனவே சொற்கள் - விளக்கங்கள், கோட்பாடுகள் - என்னை துக்கத்துடன் நேரடியாக தொடர்பு கொள்வதைத் தடுக்கின்றன.

நான் துக்கத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ளும்போதுதான், அதை என்னால் புரிந்து கொள்ள முடியும்.

~ ஜே. கிருஷ்ணமூர்த்தி
வாழ்க்கையெனும் புத்தகம்.


பிராத்தனை

🤲🏽 *பிரார்த்தனைகள் நிறைவை தருமா...?* 🤲🏽

இதை யார் நம்புகிறார்களோ இல்லையோ என்பதை பற்றிய கவலையோ, தேவையோ இறைவனுக்கு ஒரு போதும் கிடையாது. அவனின் கட்டளைகள் படி இங்கே எல்லாமுமே நடந்து அடித்துக் கடந்து,
போய்க் கொண்டே தான் இருக்கும். 

இவ்வாழ்வும் எம்மை அதன் போக்கில் தான், இல்லை அதன் போக்கில் மட்டும் தான் இழுத்துக் கொண்டு போகும். நாமும் முட்டி மோதி நகர்ந்து கொண்டே தான் இருக்க வேண்டும். நான் இதன் பின்னால் வர மாட்டேன் இத்தோடு நின்று கொள்கிறேன், என்னால் இனி எந்த சங்கடத்தையும் வாழ்வில் ஏற்க வலிமை கிடையாது, போதும் வாழ்ந்தது, என்றெல்லாம் சொல்லி விட்டு ஓர் இடத்தில் அமர்ந்து கொண்டாலும், 

சூரியன் உதிக்கும், இரவும் பகலும் மாறுகின்ற சுழற்சி நடக்கும், கடல் இயங்கும், வானம் மழையை பொழியும், பூமியில் தாவரங்கள் வளரும், சந்திரன், நட்சத்திரம் என இப்பிரபஞ்சத்தின் எதுவும் நமக்காக காத்திருக்கப் போவதில்லை.

இப்படி மரணத்தின் பிடிக்குள் சிக்கும் வரை இவ்வாழ்வின் இன்ப துன்பங்களை எல்லாம் மாறி மாறி கடந்தே தீர வேண்டும் என்பதே அழுத்தமான நியதி.

அப்படி கடக்கையில் பிரச்சனைகள், சோகங்கள், கவலைகள், அரண்ட சூழ்நிலைகள், தாங்கிக் கொள்ள இயலாத ரணங்கள், வலியின் விளிம்புகளில் வாழ வேண்டிய கட்டாயங்கள் எல்லாம் மனிதனுக்கேற்ப மாறி மாறி இங்கே உண்டாகிக் கொண்டு தான் இருக்கும்.

அச்சூழலில் தான் பிரார்த்தனைக்கும் நமக்குமான தொடர்பாடலும், அதற்கான முக்கியத்துவமும் உள்ளத்தில் அதிகமாக உண்டாகும், ஏனெனில் மனிதனால் இயலாத எல்லாவற்றையும் இறைவனால் சாத்தியப்படுத்த இயலும் என்ற பூரண நம்பிக்கை தான் காரணம்.

அப்படியும் கூட பலர் சொல்வார்கள், என்ன பிரார்த்தித்து என்ன பயன்? நான் கேட்டவைகள் கிடைக்கவுமில்லை, எனது எதிர்ப்பார்ப்புக்கள் நிறைவேறவுமில்லை, எனது இத்துனை கால சோக வாழ்வு மாறவும் இல்லை, இப்படி பல காரணங்களை கூறி விரக்தியுற்று பேசுவதை காணலாம். 

சரி, அப்படியே பிரார்த்தனை செய்யாது இருந்திருந்தால் மட்டும் இந்நிகழ்வுகள் ஏதும் எம்மை விட்டு தூரமாக போயிருக்குமா? அல்லது அதை விட்டு நாம் தப்பியிருக்கலாம் என்ற உத்தரவாதம் ஏதும் நம் கையில் உண்டா? அரங்கேறுவதையும், நடந்தேற இருப்பதையும் ஒரு போதும் இயலாமை கொண்ட இந்த மனித இனத்தால் நிறுத்தி விட முடியாது. ஆதலால் நம்  சிந்தனைகளுக்குள் எட்டாத அளவுக்கான ஒரு சக்தி கொண்ட, படைத்தவனிடம் தான் நாம் சரணடைய வேண்டும்.

அத்தகைய இறை சக்தியில் நாம் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை பற்றிய கவலை எல்லாம் இறைவனுக்கு கிடையாது, அவன் கர்மாக்களின் நிகழ்வுகளுக்கான தீர்வை அறிந்தவன், அதை நாம் முறையிட்டு அவனிடம் கேட்க வேண்டும் என்பதையும் விரும்புபவன். 

எனவே நம்  முறைப்பாடுகளை அவன் முந்நிலையில் சமர்ப்பிப்பதே சாலச்சிறந்தது. அதில் மிகப்பெரிய மகிழ்ச்சி உண்டு. யாரிடமும் தலை குனிந்து நிற்க தேவையற்ற ஓர் மகிழ்ச்சி, உதவி பெற்றதற்காக யாருக்கும் நாசுக்காக நன்றி செலுத்த தேவையற்ற நிரப்பமான மகிழ்ச்சி. நேர்மறையான நம்பிக்கை சக்தி தரும் மகிழ்ச்சி... 

இந்த நேர்மறையான சக்தியின் நம்பிக்கையே நமது துயரங்களை தாங்கும், தாண்டும் வலிமையை தரும் என்பதை முழுமையாக புரிந்து கொண்டால் இறை சக்தியின் மேல் நம்பிக்கை மேற்கொள்ளும் பிரார்த்தனைகள் எப்போதும் நிறைவு தரும்.

நன்றி... 
✨வாழ்க வளமுடன், நலமுடன்✨ 

🚩சர்வம் கிருஷ்ணார்ப்பணம்🚩