Wednesday 29 March 2017

இறை நிலை

சூஃபி மகான்
இறை நிலை
விளக்கம்,,,,

சூஃபி மகான் ஒருவர் தனக்காக ஓர் அடிமையை விலைக்கு வாங்கினார்.

அன்றாட தேவைகளை அவன் கவனித்துக் கொண்டால் தாம் இறைவழிபாட்டில் மூழ்கி இருக்கலாமே என்ற எண்ணத்தால்.

அடிமையை வாங்கிக் கொண்டு அவர் வீட்டிற்கு வந்தார்.

அந்த அடிமையின் பணிவும் மாரியாதையும் அவருக்கு மிகவும் பிடித்து போயிற்று.

மெல்ல அவனிடம் பேச்சு கொடுத்தார்.

உன்னுடைய பெயரென்ன?

நீங்கள் என்னை எந்தப் பெயரைக் கொண்டும் அழைக்கலாம். அது உங்கள் விருப்பத்தை பொறுத்தது " என்றான் அடிமை.

நீ என்ன வேலை செய்வாய்?

தாங்கள் என்ன உத்தரவு அளிக்கின்றீரோ அதை செவ்வனே செய்து முடிப்பதே என்னுடைய கடமை" என்றான் அவன்.

நீ என்ன சாப்பிடுவாய்?

தாங்கள் என்ன தருகின்றீரோ அதை சாப்பிடுவேன்"

உனக்கு ஏதேனும் ஆசை இருக்கின்றதா?

எஜமானர் இருக்கும் போது அடிமைக்கு என்று ஒத ஆசை தனியாக இருக்க முடியுமா? தங்களுடைய நாட்டமே என் விருப்பம்" என்றான் அடிமை.

அவனுடைய அந்த தன்னடக்கமான பேச்சைக் கேட்டதும் சூஃபி மகானுக்கு அழுகையே வந்து விட்டது.

தனக்கும் இறைவனுக்கும் இருக்க வேண்டிய தொடர்பை எந்த அளவுக்கு மேன்மையாக விளக்கி விட்டான் இந்த அடிமை.

அன்பரே,, இறைவனுடன் நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் எனக்கு கற்று கொடுத்து விட்டீர்கள்

இனி நீங்கள் அடிமை இல்லை. உங்கனை நான் விடுதலை செய்து விட்டேன்." என்று கூறி அடிமையை அனுப்பி வைத்துவிட்டார் சூஃபி அவர்கள்.